கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மறுக்கப்பட்ட புத்தகங்கள்

சுற்றி சுற்றி வந்தவனோ
சுயநினைவு பெறுகின்றான்

ரசித்திட்ட ஸ்பரிசத்தை
விரல்களால் தீண்டி
வீணை போல மீட்டி
விடை முடியாத பக்கங்களுடன்
வீடு செல்கின்றான்

பேசுகின்ற சாளரங்கள்
சிரித்தபடி சொல்கிறது

வருடத்தில் நான்கு முறை
வசிப்பிடம் மாற்றிவிடும்
மன்னவனே பதில் சொல

வாடகை வீட்டில்
வசித்திடும் உன்னிடம்
வாசித்த(க்கும்) புத்தகத்தை
அடுக்கி வைக்க இடமேது...

- சேதுபதி விசுவநாதன்
 
Top