கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

மாம்பழ கேக் (Without Egg, Without Oven)

Rajasree Murali

Moderator
Staff member
தேவையான பொருட்கள்:

நன்றாக பழுத்த மாம்பழம் 1
ரவை 50கிராம்
சர்க்கரை150கிராம்
ஸ்வீட் அதிகம் தேவை பட்டால் 200கிராம் சேர்க்கவும்.
வாசனை இல்லாத ரீஃபைண்ட் ஆயில் 50 கிராம்
காய்ச்சி ஆறவைத்த பால் 150கிராம்,
baking பவுடர் 1-1/2 சிறிய ஸ்பூன் அளவு,
அலங்கரிக்க தேவையான நட்ஸ் முந்திரி பாதாம் பிஸ்தா விருப்பம் போல்.

செய்முறை:

முதலில் மாம்பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும் ரவையை மிக்சியில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து அதனுடன் பொடித்த ரவை ரீஃபைண்ட் ஆயில், பால் எல்லாவற்றையும் நன்கு கலந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும் பிறகு அதனுடன் baking பவுடர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். இட்லி மாவை விட கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும். பிறகு அகலமான அடி கனமான வாணலியில் சிறிய தட்டு (தட்டு படம் கீழே காண்க அல்லது குக்கர் கீழே வைக்கும் தட்டு) ஒன்றை வைத்து 5 நிமிடம் நன்கு சூடாக்கி பிறகு தீயை நன்கு குறைத்து கொண்டு அதனுள் வைக்கும் அளவுக்கு சாப்பிடும் தட்டு வாணலி தட்டில் படாத அளவு இருக்க வேண்டும். தட்டில் கொஞ்சமாக எல்லா இடங்களிலும் படும்படி எண்ணெய் தடவி அதன் மீது கொஞ்சமாக 1சின்ன ஸ்பூன் அளவு மைதா மாவை எல்லா பக்கமும் படுமாறு தூவி பிறகு தயார் செய்த கலவையை தட்டில் சரிசமமாக ஊற்றி நட்ஸ்களை தூவி வாணலியில் வைத்து அதற்கேற்ப ஒரு தட்டை போட்டு மூடி 40 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
பிறகு கீழே இறக்கி 5 நிமிடம் கழித்து ஒரு கத்தியால் வட்டமாக பெயர்த்து எடுக்கவும் சுவையான மாம்பழ கேக் தயார்.
 

Attachments

  • IMG-20200711-WA0000.jpg
    IMG-20200711-WA0000.jpg
    96.2 KB · Views: 1
Top