கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

முக்திநாத் யாத்திரை |An Unforgettable Road Trip To Muktinath Nepal | Gorakpur| Ep-1

sudarshangopalan

New member
நமஸ்காரம் . நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் . நடுவில் நிறைய பயணங்கள் மற்றும் என்னுடைய தேர்வு மற்றும் யூடியூபில் தொடர் பதிவுகள் . அதனால் என்னால் இங்கு பதிவிட முடியவில்லை .

இனி தொடர்ந்து இங்கும் என்னுடைய பயண அனுபவங்களை பதிவிடலாம் என்று இருக்கிறேன் .

பழைய தொடருடன் சேர்ந்து புதிய தொடர்களும் இனி தொடர்ந்து வரும் . உங்களுக்கு என்னுடைய பதிவுகள் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் . உங்களுடைய ஆதரவு இன்னும் என்னை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும் .

இன்றிலிருந்து முக்திநாத் பயண காணொளிகளை பதிவிடுகிறேன் .

எங்களுடைய பயணம் 21 பேர் கொண்ட சிறு குழு . டெல்லியிலிருந்து நாங்கள் கோரக்பூர் வரை ரயிலில் பயணிப்பது என்று முடிவு செய்தோம் . வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்களும் விமானம் மூலம் கோரக்பூர் வந்து எங்களோடு கலந்துகொண்டார்கள் .கோரக்பூரிலிருந்து நேபாளம் முழுவதும் சுற்றிக் காண்பிக்க ஏஜென்ட் நியமித்து இருந்தோம் . இவர் எங்களுக்கு கடந்து பத்து வருடத்திற்கும் மேல் சேவை தருகிறார்கள் .

அனைத்து விவரங்களும் காணொளியின் description பகுதியில் கொடுத்துள்ளேன் .

டெல்லியில் இருந்து இரவு எட்டு மணிக்கு கிளம்பிய ரயில் மறுநாள் பதினோரு மணி அளவில் கோரக்பூரை அடைந்தது . இரண்டு மணி நேர தாமதம் . இந்த ரயில் நிலையம் உலகின் நீளமான ரயில் நிலையம் . ரயில் நிலத்தில் இருந்து மூன்று கார்களில் நாங்கள் தங்க வேண்டிய இடமான கீதா வாடிகா வந்து சேர்ந்தோம் . குளித்து நாங்கள் தங்கியிருந்த இடத்திலேயே அமைந்துள்ள ராதாகிருஷ்ணர் கோவில் அருகில் சுதர்சன ஹோமம் இந்த பயண ஏற்பாட்டை செய்த சுதர்சன சத்சங்கத்தாரால் நடத்தப்பட்டது . மதிய உணவு உண்டுவிட்டு சிறிது ஓய்வுக்குப் பின் சுற்றிப்பார்க்க கிமபினோம் .

கோரக்பூரில் சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் மற்றும் கோவில்கள் உள்ளது . ஒவ்வொரு இடமாக காணொளி வாயிலாக பார்க்கலாம் .

நன்றி .
சுதர்ஷன்


 
Top