கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!...அத்தியாயம் 1

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
DEAR READERS,



வணக்கம்…



ரொம்ப நாளா…. இல்லை…. மாதம்….. அதுவும் இல்லை.. வருடமாக… காக்க வைத்ததற்கும் மன்னிக்கவும்…



“யாதுமாய் என்னுள் நிறைந்தவனே” மூலமாக உங்களை மீண்டும் சந்திப்பதில் பேருவகை கொள்கிறேன் என்று சொன்னால் உங்களால் புரிந்துகொள்ள முடியுமா என்று தெரியவில்லை… வெகுநாட்கள் கழித்து சந்திக்கப் போகும் நண்பர்களைக் காண ஆவல் பொங்க பரபரப்பாக காத்துக்கொண்டு இருப்போமே அது போல் இந்த தருணத்தை உணர்கிறேன்!!!



உன் புராணம் போதும் இது என்ன கதை என்று நீங்க கேட்கும் கேள்வி என் செவிப்பறையில் அறையவே செய்கிறது…



சச்சிதேவ் கதையின் கடைசி கதையான கார்த்திக் மற்றும் நிரல்யாவின் கதை தான் இது!!!



வெகு நாளாக காத்திருந்தமைக்கு நன்றி.. காக்க வைத்தமைக்கு மன்னிக்கவும்..

சச்சிதேவ் கதையை முதல் முறையாக படிப்பவர்களுக்கும் இது புரியும் விதமாக தான் அமைத்திருக்கும் என்பதால், புதிதாக வாசிக்க வருபவர்கள் எந்த வகை குழப்பமும் இல்லாமல் வாசிக்கலாம்.

வெகு நாட்களாக உங்களை நேரடியாக சந்திக்க நினைத்து இப்பொழுதுதான் சங்கமம் மூலமாக நிகழ்வதற்கும் ஸ்ரீலட்சுமி சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

என்றும் அன்புடன்

கோதை நப்பின்னை




அத்தியாயம் - 1



“ஹனிமூனுக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கியா?? யாருக்கு??” என்று ஆப்பிளை மென்றப்படி தன் கையில் இருந்த போனில் எதையோ டைப் செய்துக்கொண்டே கேட்டான் கார்த்திக் சச்சிதேவ்.



பரம்பரையாக ஏற்காட்டில் டீ எஸ்டேட்டை வைத்து மிக வெற்றிகரமாகத் தொழில் நடத்திக்கொண்டு வரும் தேவ் குரூப்ஸ்சின் கடைசி ஆண் வாரிசு தான் இந்த கார்த்திக் சச்சிதேவ்.



அந்த குழுமத்தைத் தலைமை தாங்கி நடத்திக்கொண்டு இருக்கும் சிவ சச்சிதேவ் மற்றும் அவரின் அன்பு மனைவி மல்லிகா தம்பதியருக்கு மூன்று மகன்கள், இருமகள்கள் என்று மொத்தம் ஐந்து குழந்தைகள். வரிசையாக மூன்று மகன்கள் பிறக்க… பெண் குழந்தை வேண்டுமே என்று வேண்டி விரும்பிப் பிறந்த சங்கமித்ரா, மேகமித்ரா இருவரும் அச்சு அசல் ஓரே மாதிரி இருக்கும் இரட்டையர்கள்.



மும்பையில் வசிக்கும் மூத்தவன் ஆர்யா சச்சிதேவ். பாலிவூட்டை கலக்கிக்கொண்டு இருக்கும் பேஷன் டிசைனர். இரண்டாமவன் பத்ரி. தொழிலில் தந்தையின் பாரத்தைத் தன் தோளில் ஏற்று நிற்கும் தனையன் என்றால் இளையவன் கார்த்திக்கோ சின்ன அண்ணணின் படைத் தளபதிபாக தொழிலில் துணை நிற்பவன்!!!



தொழில் செய்பவன் ஆயிற்றே அதுவும் பரம்பரைத் தொழிலை வேறு செய்கிறானே, பார்ப்பதற்கு சினிமாவில் வருவது போல் “பிசினஸ் மேன்” என்றாலே சூட்டும், கழுத்தில் டைய்யுமாக விரைப்பாக பேசுவதற்கே காசு கேட்பவன் போல் இருப்பான் என்று யூகிப்பவர்களுக்கு, கார்த்திக்கை கோட் சூட்டில் சச்சிதேவ் குரூப்ஸ்சின் வெப் சைட்டை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது!!!



தன் எயிட் பேக் உடம்பையும்… முஷ்டியானத் தோள்களைப் படம் பிடித்துக் காட்டும்படியாக இறுக்கிப் பிடித்த அரைக்கை டிசைனர் டீஷர்டையும், லோ வெஸ்ட் டிசைனர் ஜுன்ஸும் உடுத்தி, கால்களில் லோஃபர்ஸ் அணிந்து பல ஆயிரம் கோடி தொழில் செய்பவன் என்று நம்ப முடியாதப்படி மிக சாதாரணமாக அமர்ந்திருந்தான்!!!



மிக முக்கியமான மீட்டிங் இல்லாத சமயத்தில் ஆபிஸ் செல்வது கூட இதே உடையில் தான் என்றால், அவனைப் பற்றி வேறு என்ன சொல்வதற்கு இருக்கிறது?!?



உடுத்தி இருந்த உடை தான் இப்படி என்றால்… நீட்டினால் இரண்டு அடிக்கும் மேல் விரியும் தன் சுருட்டை முடி சாப்பிடும் போதும் முகத்தில் விழாமல் இருக்க மூத்த அண்ணன் ஆர்யாவின் மகள் விட்டுச் சென்ற நெளிநெளியான கம்பி ஹேர் பேண்ட்டைத் தலையில் சொருகி… கன்னத்தில் ஒரு மாதம் ஷேவ் செய்யாது போல் காட்சி தந்த தாடி, மீசையைப் பார்ப்பதற்கு, பெரிய ப்யூட்டி சலூனின் கண்ணாடிக் கதவில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் கலைந்த தலை முடியும் முகம் நிறைய தாடியும் மீசையும் வைத்து படு ஸ்டலாக இருக்கும் ஆண் மாடலைப் போலத்தான் கார்த்திக் சச்சிதேவ் காட்சி அளித்தான்!!!



அவனின் சற்றே நீண்ட முகத்தை எடுத்து நிறுத்தும் கூர்மையாக மூக்கும், உணர்வுகளை மறைக்காமல் பிரதிபலிக்கும் விழிகள் என்று முதல் முறையாகப் பார்ப்பவர்களுக்குத் தோன்றுவது இவன் ஒரு விளையாட்டு வீரன் என்பது தான்!!!



அது வெறும் அவனின் எயிட் பேக் பாடி, நடை, உடை காரணம் அல்ல. அவனிடம் இருந்து வெளிப்படும் உத்வேகமும், அபரிமிதமான துடிதுடிப்பும் தான் அதற்குப் பிரதான காரணம்!!!



சுழன்று அடித்து ஓடும் ஆற்றின் வேகத்தை, தூரத்தில் இருந்து பார்த்தாலே அதன் வேகம் புரிந்து விடுவது போல் தான் அவனின் வேகமும் துடிப்பும் தூரத்தில் இருந்து பார்பவர்கள் உணர முடியும்.



அவனிடம் பொங்கி வழியும் துடிதுடிப்புக்கு வடிகால்தான் பங்கி ஜம்பில் ஆரம்பித்து பாரா கிளைடிங் வரை அனைத்து அட்வன்ச்சர் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சாகவிளையாட்டுகளை விரும்பி விளையாடுபவன்!!!



அப்படி விளையாடுவதற்காகத்தான் உடம்பை இத்தனைக் கட்டுக் கோப்பாக வைத்திருக்கிறான் என்பது வேறு விஷயம்!!!



வேகத்திற்கு மறுபெயர் கார்த்திக் என்றால், அது செயலில் மட்டும் இருக்காது பேச்சிலும் பிரதிபலிக்கும்.



தனக்குப் பிடித்ததை வெளிப்படையாக சொல்லுவானோ, அதேபோல் தனக்குப் பிடிக்காத விஷயத்தையும் முகத்திற்கு நேராக அதே வெளிப்படைத் தன்மையுடன் சொல்லக்கூடிய தைரியசாலி!!!



சங்கி, மங்கி என்று செல்லச் சுருக்கமாக அழைக்கப்படும் தங்கைகளை சென்ற மாதம்தான் ஹைதிராபாத்தை சேர்ந்த நிசாம் சகோதர்களுக்கு வெகு விமர்சையாகத் திருமணம் செய்து கொடுத்த கையோடு அங்கிருந்தபடியே தொழில் சம்பந்தமாக கிளம்பியவன், கிட்டத்திட்ட இரண்டு வாரம் நாடு நகரம் எல்லாம் சுற்றித் திரிந்துவிட்டு இன்று விடியற்காலை தான் வீட்டிற்கு வந்து இறங்கி இருக்கிறான்!!!



தன் தம்பியின் அசட்டையான கேள்வியைக் கேட்டுக் கடுப்பான பத்ரி சச்சிதேவ் வாயிற்கு கொண்டுப்போன இட்லியை அப்படியே தட்டில் வைத்து விட்டு “ம்ம்.. உனக்கு எனக்கும் தான்டா...” என்றான் மிகுந்த எரிச்சலாக.



“டேய்... அண்ணா நீயும் நானும் சேர்ந்து போனா அதுக்கு பேர் ஹனிமூன் டிரிப் இல்லடா பிசினஸ் டிரிப்…” என்று படுநக்கலாகப் பதில் அளித்த போதும் கார்த்திக்கின் முழு கவனமும் போனிலேயே தான் இருந்தது.



அந்த பதில் அண்ணன் பத்ரியைக் கொலை வெறிக்குத் தள்ளியது என்றால் அவனின் சக தர்ம பத்தினியான அலக்நந்தாவை குலுங்கி சிரிக்கத் தூண்ட… வாய் விட்டு கூட சிரிக்க முடியாது அவளின் உப்பிய வயிற்றில் இருந்த இரட்டையர்கள் இரண்டு குட்டி கரணம் அடித்தனர்!!!



பேசுத்திறனால் காரியத்தைச் சாதிக்க கூடியவனும், அவர்கள் குடும்பத்திலேயே பொறுமைசாலி என்று பெயர் வாங்கிய பத்ரியிடம், டைனிங் டேபிள் வந்ததில் இருந்து இப்படியே இடக்காகப் பேசி வன்முறையைத் தூண்டும் கார்த்திக்கை… எதை எடுத்து அவன் தலையில் கொட்டிக் கவிழ்க்கலாம் என்று அங்கே பரப்பி வைக்கப்பட்டு இருந்த பதார்த்தங்களைக் கண்களால் தேடினான் பாச மிகு அண்ணங்காரன்!!!



இதற்கே பத்ரி தம்பி கார்த்திக்கைப் போல் எடுத்த எடுப்பில் கை களப்பில் ஈடுபடும் பழக்கம் கொண்டவன் இல்லை என்பது நாடு அறிந்த உண்மை.



கார்த்திக்கின் “கை நீட்டல்” ஏற்காடு முழுவதும் பிரபலம். இவனால் மூக்கு உடைந்தவர்களுக்கு வைத்தியம் செய்தே இரட்டை சகோதரிகளில் கால் நடை மருத்தும் படித்த மேக மித்ரா எம்.பி.பி.எஸ்சிற்குப் படிக்காமலே பட்டம் பெற்றாள் என்றால் அது மிகை ஆகா!!!



கடந்த இருபது நிமிடமாக சகோதரர்கள் பேசிக்கொள்வதைக் கண்டுக்கொள்ளாது ஒரு நமுட்டு சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்தப்படி தன் தட்டைக் கபளிகரம் செய்துக்கொண்டு இருந்த மட்டுவார் குழலி பாட்டி, அதற்கு மேல் பொறுக்க முடியாது தான் களத்தில் இறங்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று வீர முழக்கம் இட்டப்படி...



“அந்த டிக்கெட் எனக்கு உன் தாத்தாவிற்கும் தான்டா” என்று நான் வந்துட்டேன்டா என்று முழக்கமிட்டப்படிக் களத்தில் குதித்தார்.



பாட்டியின் இயற்பெயர் தான் மட்டுவார் குழலியே தவிர அவரை வீட்டில் அழைப்பது “நாட் நாட் செவன்”.



வெறும் ஜெம்ஸ் பாண்ட் ரசிகை என்பதால் மட்டும் அல்ல அவரின் குணம் மற்றவர் வாழ்க்கையில் அதிதீதமாக மூக்கை நுழைப்பதால் வந்த காரணப்பெயர்.



பொதுவாக “பாட்டி” ஹனிமூன் போகிறேன் என்று கூறினால் ஏதோ காமெடி பண்ணுவதாக சிரிப்பார்கள்… ஆனால் இங்கே சச்சிதேவ் குடும்பத்தில் பாட்டி கூறுவதை எதையும் நகைக்குரிய விஷயமாக நினைக்கமாட்டார்கள்!!!



“கிருஷ்ணா, ராமா” என்று பாரயணம் பண்ண வேண்டிய வயதில் டேங்கோ டான்ஸ் கற்றுக்கொள்ள போகிறேன் என்று அறிவித்ததோடு மட்டும் அல்லாது வராத ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு… ஆடுகிறேன் என்று பெயரில் அந்த “காக்கா வலிப்பு” ஆட்டத்தைக் கிலி பிடித்துப் போய் “சிவனே” என்று சும்மா வேடிக்கைப் பார்த்த தாத்தாவைக் கீழே தள்ளிக் காலை உடைத்தவர் என்ற பெயரைத் தட்டி சென்றவர் என்பதினால், பாட்டி எதை சொன்னாலும் காமெடிக்காக இருக்குமோ என்று நினைக்கக் கூட மாட்டார்கள் வீட்டு அங்கத்தினர்!!!



பாட்டியின் பதிலைக் கேட்டு டைனிங் டேபிள் வந்ததில் இருந்து முதன் முறையாகத் தலையை உயரத்தி அவரைப் பார்த்தான் கார்த்திக்!!!



“ஓ!!! நீங்க ஹனிமூனுக்கு போவது இமாலயத்தின் அடிவாரம் என்பதால்… நொடிக்கு நொடி தட்ப வெட்பம் மாறும்” என்றபடி இழுத்த கார்த்திக் “அங்கே எடுத்துப் போக வேண்டிய பொருட்களில் செக் லிஸ்டை போனில் அனுப்புகிறேன்.. கூடவே எடுத்துச் செல்ல வேண்டிய மாத்திரைகளும் மறக்காது எடுத்துப் போங்க” என்று தனக்கு இரண்டு நாற்காலி தள்ளி அமர்ந்து இருந்து பாட்டியின் புறம் திரும்பி விரிவாக மொழிந்தவன்…….



“இது எல்லாத்தையும் விட மிக மிக முக்கியமாக அங்க போன பிறகு தாத்தாவோட டூயட் பாடுகிறேன் என்று அங்கே சுற்றிப் பார்க்க வந்து இருக்கும் மற்ற ஆட்களை அந்த மலையை விட்டே தூரத்தி அனுப்பிடாதிங்க என்ன?!?” என்று பாட்டிக்கு அறிவுரை வழங்கியப்படி அங்கிருந்த கப்பில் காபியை ஊற்றினான்.



ஊர் உலகத்தில் பெரியவர்கள் சின்னவர்களுக்குப் புத்திமதிச் சொல்லி ஊருக்கு அனுப்பினால் இங்கே.. பேரன் பாட்டிக்குப் புத்திமதிச் சொன்னான்.



“டேய்… ஆபிஸ்சிற்குக் கிளம்பும் போதே என்னைக் கொலை வெறி ஆக்காதடா… இமய மலையில் உன் சாப்பரை ஓட்ட ரொம்ப ஆசைப்படறயேன்னு கிட்டத்திட்ட மூன்று வாரம் சங்கி மங்கி கல்யாண வேலைக்கு மத்தியிலும் தலையால் தண்ணீர்க் குடித்து பர்மிஷன் வாங்கி கொடுத்தால்… பாட்டியை ஹனிமூனு அனுப்ப வழி பண்றியாடா?” என்று மிகக் கடுப்பாகக் கேட்டான் பத்ரி.



ஆர்யா, பத்ரி, கார்த்திக் இவர்களை மூவரையும் ஒன்றாகப் பார்த்தால் சகோதரர்கள் என்று சத்தியம் செய்து சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். அது தோற்றத்தில் மட்டும் அல்ல குணத்தில் கூட ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இருக்காது!!!



அழுத்தக்காரனான ஆர்யா வாயைத் திறந்து பேசினாலே அரிது என்றால் இரண்டாமவன் பத்ரி தன் பேச்சாலே காரியத்தைச் சாதிப்பவன். இவர்கள் இருவருக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாது மனதில் பட்டத்தை அப்படியே முகத்திற்கு நேராக பேசுபவன் கார்த்திக்.



மூத்தவனின் குணம் அவன் செய்யும் தொழிலால் வந்தது என்றால் பத்ரியின் சாதுரியம் அன்னையின் வளர்ப்பால் வந்தது. ஆனால் கார்த்தின் துணிவோ பிறப்பில் இருந்து உடன் வருவது!!!



ஏறுக்கு மாற குணம் கொண்ட சகோதர்கள் மூவரின் பிணைப்பும் சற்றே அலாதியானது!!!



எப்படி இருக்கிறாய்?? என்று தினமும் போன் செய்து பேசிக்கொள்ளும் பழக்கம் அவர்கள் மத்தியில் இல்லை.. சொல்லப் போனால் மூவரும் வாரக்கணக்கில் பேசிக்கொள்ளவோ மாதக்கணக்கில் பார்த்துக்கொள்ளவோ கூட மாட்டார்கள். இருந்தும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து என்ன செய்கிறார்கள் என்பது வரை வெற்றியிலையில் மையைத் தடவிப் பார்ப்பது போல் தெரிந்து வைத்திருப்பார்கள்!!!



இரு சகோதரர்களுக்கு மத்தியில் பிறந்தாலோ என்னவோ… இரண்டு வயது மூத்தவனான ஆர்யாவிடமும் சரி, இரண்டு வயது இளயவனான கார்த்திக்கிடமும் சரி, அவர்களின் சிறந்த நண்பனும் பத்ரி தான் பரம எதிரியும் பத்ரி தான்!!! எப்போ எந்த பாத்திரத்தை எடுத்திருக்கிறான் என்பது சமயம் சந்தரப்பம் தகுந்தார் போல் மாறுமே தவிர மற்றப்படி இந்த இரண்டில் எதுவோ ஒன்றாக தான் இருப்பான்!!!



ஆர்யாவிற்கும் கார்த்திக்கும் மத்தியில் இருக்கும் பந்தத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ராமனுக்கும் லட்சுமணக்குமானது என்று ஒரே வரியில் முடித்து விட முடியும்!!!



அண்ணன் ஆர்யா ஒன்று சொல்லி, தம்பி கார்த்திக் மீறயதாக சரித்திரம் இல்லை. என்ன படிக்கப் போகிறான் என்பதில் ஆரம்பித்து யாரை மணக்கப் போகிறான் என்பது வரை கார்த்திக் முதலில் கூறியது அண்ணன் ஆர்யாவிடம் தான்!!!



இதில் வேடிக்கை என்னவென்றால் மிக நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களைத் தவிர கார்த்திக், ஆர்யாவிற்கும் மத்தியில் இருக்கும் அந்த பந்தத்தை யாராலும் புரிந்துக்கொள்ள முடியாது. பத்ரியிடம் எப்படி கார்த்திக் மனதில் தோன்றுவதைப் பேசுவானோ அதே போல் தான் ஆர்யாவிடமும் பேசுவான் ஆனால் தனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட ஆர்யா சொன்னதை தான் செய்வான்!!



கார்த்திக்கின் பேச்சில் “அண்ணன்” என்று கூறுவது ஆர்யாவை மட்டும் தான் குறிக்கும் என்று வீட்டு ஆட்கள் அறிவர்!! பிறர் குழம்பி விட கூடாது என்பதற்காவே ஆரி அண்ணன் என்று அழைக்கும் பழக்கத்தைப் பின்னாளில் வளர்த்துக்கொண்டவன் கார்த்திக்!!!



கார்த்திக்திற்கு செய்ய பிடிக்காத ஆனால் செய்தே ஆக வேண்டும் என்றால் அது ஆர்யாவிடம் இருந்து கார்த்திக்கிற்கும் செய்தியாக வருமே தவிர வேறு யாரும் அவனிடம் வாயைக் கூட திறக்க மாட்டார்கள்!!!



தான் சொன்னதை வேத வாக்காக எடுத்துக்கொண்டு செய்யும் தம்பியின் அளப்பறிய வேகத்திற்கும், சுதந்திரத்திற்கும் தடையாக ஆர்யா ஒரு நாளும் நின்றது இல்லை. கேட்கப் போனால் தம்பிக்கு ஒன்று என்றால் உலகத்தை எதிர்த்து நிற்கவும் ஆர்யா தயங்கியது இல்லை!!!



ஆர்யாவின் முதல் பிராண்ட் அம்பாசிடர் கார்த்திக் தான். அவன் டிசைனராக மும்மையில் தடுமாறிய காலத்தில் இருந்து இன்று வரை அண்ணன் வடிவமைத்த உடை அல்லாது கார்த்திக் வேறு எதையும் உடுத்தியது இல்லை!!!



தம்பி உடையான் படைக்கு அஞ்ஞான் என்று யாருக்கும் புரியுமோ இல்லையோ அது ஆர்யாவிற்கு நன்றாகவே புரியும். தாய் மாமனின் மகளான சௌந்தர்யாவுடனான அவனின் திருமணத்தை வீட்டினருக்கே தெரியாது கார்த்திக்கிடம் சொல்லிதான் அனைத்து ஏற்பாடுகளும் செய்தான் என்றால் அவர்கள் பிணைப்பை பற்றி இதற்கு மேலே கூற என்ன இருக்கு??



இதில் வேடிக்கை என்னவென்றால் ஆர்யாவின் ரகசிய திருமணம் யாருக்கும் அதிர்ச்சி தரவில்லை ஆனால் அவனின் தாய் மாமன் மகளை மணந்தது தான் பேரதிர்ச்சியாக இருந்தது!!!



இது என்ன தலை கீழா இருக்கு?? திடீர் திருமணத்திற்கு அதிர்ச்சி ஆகாது சொந்த தாய் மாமனின் மகளை அதுவும் அவனைப் போலவே டிசைனரை கல்யாணம் செய்துக்கொள்வது எப்படி அதிர்ச்சி தரும் விஷயமாக இருக்க முடியும்?? என்று கேள்வி மனதில் எழுவது இயற்க்கையே..



அதற்கு காரணம் “சச்சிதேவ்”வின் ஜீன் அவர்கள் ரத்ததில் ஓடுவது தான்!!!



தொழில் முறையில் மட்டும் சச்சிதேவ்வின் பெயர் மிகப் பிரபலம் இல்லை அவர்கள் நடத்தும் “திடீர் திருமணம்” உலக பிரசித்தம்!!!



“திடீர் உப்புமா” தெரியும்… ஆனால் இது என்ன “திடீர் கல்யாணம்??” என்று முதல் முறையாக இந்த வழக்கத்தைக் கேட்பவர்கள் அதிர்ச்சியில் வாயைப் பிளப்பார்கள்!!!



சச்சிதேவ் குடும்பத்தில் பத்திரிக்கை அடித்து ஊர் கூட்டித் திருமணம் செய்ததாக சரித்திரமே கிடையாது!!!



ஏன் எதற்கு எப்படி என்று பெரிதாக ஆராயக் காரணம் எல்லாம் தேவை இல்லை.. உண்மை நிலவரம் என்னவென்றால் சச்சிதேவ் காதலில் விழுந்த அடுத்த நிமிஷம் நாள், நட்சத்திரம் பார்த்துப் பத்திரிக்கை அடித்துக் கல்யாணம் செய்துக்கொள்ளும் பொறுமையற்று அவசர கதியில் இரவோடு இரவாகி ஏற்பாடாகி அவர்களின் குலதெய்வமான காளி கோயிலில் திடீரென்று தான் நடக்கும்!!!



அவர்களின் கல்யாணமே விசித்திரம் என்றால் அந்த விசித்திரத்தின் உச்சம் என்னவென்றால் இதில் சம்பந்தப்பட்ட மணமகளுக்கோ இல்லை மணமகனுக்கோ ஏன் சிலசயமம் தம்பதி இருவருக்குமே கூட தங்களின் திருமண ஏற்பாடு மணமேடை ஏறும் வரை தெரியாது!!!



ஆக ஆர்யாவின் திருமணம் நடந்ததற்கு முழுமுதற் காரணம் கார்த்திக் என்றால் தம்பிக்காரன் பிசினஸ்சில் நுழைந்ததற்கான காரணம் அண்ணங்காரன் தான்!!!



ஆர்யாவும், பத்ரியும் தத்தம் தொழிலை வளர்ப்பதில் முழு மூச்சாக ஈடுப்பட, இளையவன் கார்த்திக்கோ எம்.பி.ஏ படிக்கப் போகிறேன் வெளிநாடு சென்று இரண்டு வருடம் படிக்க வேண்டிய படிப்பை மூன்று வருடமாகியும் முடிக்காது தன் இஷ்டத்திற்கு ஊர் உலகத்தையே பறந்து பறந்து சுற்றிக்கொண்டு இருக்க.. இப்படியே விட்டால் இவன் சரிப்பட மாட்டான் என்று ஆர்யாதான் அவன் காதைப் பிடித்து இழுத்து வந்து தொழிலில் நுழைத்தான்!!!



தன் படிப்பைக் கூட முடிக்காது அவன் பறந்து பறந்து ஊர் சுற்றியக் காரணம் படிக்கப் பிடிக்காததால் அல்ல… படிப்பை விட பறப்பது மிகவும் பிடித்தது தான் முதல் காரணம்!!!



சிறு வயது முதலே மலை ஏறுவதில் இருந்து பங்கி ஜம்பி, ராப்ட்டிங், பாராகிலைடிங் என்று அணைத்து விதமாக சாகச விளையாட்டில் மிகுந்த விருப்பம் கொண்டு இருந்த கார்த்திக்கிற்கு, வெளிநாட்டில் எம்.பி.ஏ படிக்கச் சென்ற காலத்தில் நண்பர்களுடன் விளையாட்டுத்தனமாக சிறிய ரக விமானத்தை ஓட்ட பயில போனவனுக்கு அதன் மேல் அபரிமிதமான ஆர்வம் பொங்க… பிறகு அங்கே முறையாக பயின்று சிறிய ரக விமானங்களை ஓட்டும் பைலட் பட்டம் பெற்றான்!!!



சும்மாவே தாவிக்கொண்டு இருந்தவனுக்கு, பைலட் பட்டம் பெற்ற பின் சிறகு இல்லாத குறையாக வானைச் சுற்றிப் பறந்துக்கொண்டு இருக்க… கடைசியாக ஆர்யா தான் அதிரடியாக முடிவு எடுத்து அவனைத் தரை இறக்கியதோடு நில்லாது... சச்சிதேவ் குழுமதத்தில் “பிடி” என்று சுருக்கமாக அழைக்கப்படும் பிசினஸ் டிவலப்பண்ட்டின் பொறுப்பு என்னும் கல்லைக் கட்டி ஒரு இடத்தில் உட்கார வைத்தான்.



கைக்கு எட்டாத தூரத்தில் மேலே பறந்துக்கொண்டு இருந்தவனை, பிசினஸ் என்னும் கால்கட்டைப் போட்டுத் தரையில் இறங்கிய அண்ணனுக்காக என்று கார்த்திக் தொழில் செய்ய தொடங்கினாலும், ரத்தத்திலேயே பிசினஸ் ஓடுவதாலோ என்னவோ மிக எளிதாக அதில் பிரகாசித்தவன்.. தன் தனித் திறமையை வெளிப்படுத்து விதமாக “ஹய் ஃபளை” என்னும் சார்டட் ப்ளைட் கம்பெனியை பத்ரியின் நண்பனும், தற்போது தன் தங்கையின் கணவனுமான சித்துடன் கூட்டு சேர்ந்து “சார்ட்ட் ப்ளையிட் சர்விஸ்சை” தொழிலாகத் தொடங்க.. அது ஆரம்பித்த மூன்றரை ஆண்டிலேயே மிக பெரிய தொழிலாக வளரும் என்று யூகிக்கவே இல்லை!!



இப்படி மற்றவர்களைப் பறக்க வைக்கும் தொழிலை மிக சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கும் ஒருவன், மாதத்தில் பாதி நாட்கள் வெளியூர் மற்றும் வெளிநாடு சுற்றித் திரிந்துக்கொண்டு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!!!.



அண்ணன்காரன் சொன்னதை விட்டேத்தியாக காதில் வாங்கியப்படி கார்த்திக் காபியை வாயில் வைத்தவன்… அடுத்த நொடி அந்த திரவியம் தொண்டைக்குள் போகாது சண்டித்தனம் செய்ய.. அவசரமாக தன் கையில் வைத்திருந்த கப்பிலேயே உமிழ்ந்தான் கார்த்திக்.



“என்னடா….??” என்று பத்ரி கேட்க கேள்விக்கு பதிலே அளிக்காது வேகமாக எழுந்து அங்கே இருந்த வாஸ் பேசினில் தன் வாயைக் கொப்பளித்து விட்டு திரும்பியவன், அங்கே டைனிங் டேபிளில் இருந்த தண்ணீர் ஜக்கை எடுத்து அப்படியே வாயில் கவிழ்த்தான்.



ஒன்றும் புரியாத திகைப்புடன் டைனிங் டேபிளில் குழுமி இருந்தவர்கள் ஆளுக்கு ஒரு கேள்வியுடன் அவனைப் பார்க்க....



“மாசமாக இருக்கும் அலக்நந்தாவோ இல்ல.. போன மாசம் ஊர் அறிய கல்யாணம் ஆன உன் மனைவி நிரல்யாவோ வாந்தி எடுத்தால் அதில் ஒரு அர்த்தம் இருக்கு….. ஆனா லாஜிக்கே இல்லாது நீ ஏன்டா வாந்தி எடுக்கற??” என்று விஷமமாகக் கேள்வி கேட்டார் நாட் நாட் செவன்.



பாட்டியின் பேச்சைக் கேட்ட மாத்திரத்தில் தலையைப் பின்னால் சரித்து தண்ணீர்க் குடித்துக்கொண்டு இருந்தவனுக்குச் சட்டென்று புரை ஏற… மின்னல் வேகத்தில் அவன் வாயில் இருந்த தண்ணிர் ஜக் பறிக்கப்பட்டு… வாயில் இருந்த தண்ணீர் டைனிங் டேபிள் மேல் இருந்த உணவின் மேல் விழாத வண்ணம் வாயில் கிட்சன் டிஷூவை வைத்தாள் இத்தனை நேரம் இருந்த இடம் தெரியாத பாட்டியின் இடது புறமாக அமர்ந்திருந்த கார்த்திக்கின் மனைவி நிரல்யா!!!!



சுந்தரி.. மோகன சுந்தரி…. ரூப மோகன சுந்தரி.. அதி ரூப மோகன சுந்திரி என்று எந்த பெயரிட்டாலும் அவளின் அழகை அந்த வார்த்தைகள் பிரதிபலிக்கத் தவறி விட்டது போல் முழுமையற்றுத் தோன்றும்!!!



பேன் கேக்குகளும்… கண்சீலர்களும் தெரு முனையில் இருக்கும் பெட்டி கடைகளில் கூடக் கிடைக்கும் இந்த நாளில் யார் வேண்டுமாலும் பேரழகியாக ஜொலிக்கலாம் என்ற சூழலில், முகத்தில் துளி ஒப்பனைக் கூட இல்லாது இருந்த நிரல்யா போன்ற அழகியை வலை வீசித் தேடினாலும் கிடைக்காது என்று முன்னாள் நடிகையான அலக்நந்தாவே மனமார ஒப்புக்கொள்வாள்!!!



மீன் விழிகள், ஆப்பிள் போல் கன்னம், ஸ்ட்ராபெரி உதடு என்று உண்ணும் பதார்த்தங்களைத் தட்டில் நிரப்பி வைத்து அவளின் அங்கங்களின் அழகை ஒப்பிட முடியாதப்படி அனைத்திற்கும் அப்பாற்பட்டு தனித்து நிற்க… இல்லை… நிச்சயமாக ஒப்புமைப்படுத்தி அவளின் அழகை வர்ணித்துத்தான் ஆக வேண்டும் என்றால் “ஒப்பில்லா அழகி” என்னும் பதத்திற்கு ஈடாகி வேண்டுமானால் அவளை சொல்லலாம்!!!



ஏற்காட்டின் மலை சரிவில் பிறந்து வளர்ந்தாலோ என்னவோ இயற்கான வனப்புடன் ஒப்பில்லா அழகியான நிரல்யா, தக்காளி நிற குர்த்தியும், அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத ராமர் நீலத்தில் பேண்ட்டும் அணிந்து தன் கருத்த நீண்ட கூந்தலை அப்படியே தூக்கிச் சுருட்டி ஒரு பெரிய கிளிப்பில் அடக்கி வைத்த போதும் அந்த கிளிப்பிற்குள் அடங்காத அந்த கூந்தல் இழைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொங்கி ஒப்பில்லா அழகியை இன்னும் மெருகு ஏற்றிய பங்கில் செவ்வனே செய்தன.



நிரல்யாவிற்கும், கார்த்திற்குமான உறவு வெறும் திருமனம் பந்ததத்தால் புதிதாத பூத்த உறவில்லை… இன்னும் சொல்லப் போனால் அவளுக்கு அந்த மொத்த சச்சிதேவ் குடும்பத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு!!!



இந்த உறவு சச்சிதேவ்வின் பக்கத்து எஸ்டேட்டில் தான் அவளின் பிறந்த வீடு என்பதாலோ இல்லை... சச்சிதேவ் குடும்பத்திற்கு ஒருவகையில் தூரத்து சொந்தம் என்பதாலோ ஏற்பட்டதில்லை இந்த பந்தம்.. மிக சரியாக சொன்ன வேண்டும் என்றால் அது சங்கி மங்கியால் வந்தது!!!



ஆமாம் சிறு வயது முதல் சிங்கி, மங்கியின் மிக, மிக நெருங்கி தோழி தான் கார்த்திக்கின் மனைவி நிரல்யா!!!



ஒருவழியாக இரும்பிக்கொண்டு இருந்தவனின் புரை ஏற்றம் நிற்க… கார்த்திக்கின் விழிகள் அவன் கையில் இருந்து பிடுங்கப்பட்ட தண்ணீர் ஜங்குடன் நின்ற மனைவி நிரல்யாவின் விழியுடன் மோத, அடுத்த வினாடி அங்கே நின்றவர்கள் அனைவரும் அந்நியப்பட்டு போனார்கள்.



அதை அப்பட்டமாக அங்கே அமர்ந்திருந்தவர்கள் உணர முடிந்ததது தான் விசித்திரம்!!!



இன்று மட்டும் அல்ல அவர்களின் கண்கள் மோதிக்கொள்ளும் பிரதி சமயமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது அவர்கள் மத்தியில் நடக்கும் சம்பாஷனையைப் பத்து அடி தள்ளி நின்று இருப்பவர்கள் கூட மிக எளிதாக உணர முடிந்தது.



எல்லோரும் தங்களைக் கவனிக்கிறார்கள் என்று உணர்ந்த நிரல்யா தன் கையில் இருந்த ஜக்கை டேபிள் மேல் வைத்து விட்டு அமைதியாக பாட்டியின் புறம் சென்று அமர்ந்துக்கொண்டாள்!!!



“சங்கியைத்தான் ஒருவழியாக ஹைத்திராபாத்திற்குத் துரத்தி அனுப்பியாச்சே இனி தைரியமாக டைனிங் பேபிளில் இருந்ததை சாப்பிடலாம் என்று நினைத்தால்… இந்த கருமத்தைக் குடிப்பது என்ன முகர்ந்து பார்த்தாலே வாந்தி எடுக்கலாம் போல் இருக்கு… என்ன கண்றாவி பாட்டி இது?!?” என்று அந்த காபி ஜக்கை காட்டிக் கேட்டப்படி நாற்காலில் அமர்ந்தான் கார்த்திக்.



இரட்டைச் சகோதரிகளில் செஃப் சங்கியின் கை வண்ணத்தில் சமைத்த உணவைத் தெரியாமல் தின்றுவிட்டு நாக்கு வெளியே தள்ளி, கண்கள் சொருக குற்று உயிரும் கொலை உயிருமாக மருத்துவமனையில் இலவசமாக வைத்தியம் செய்யதுக்கொண்டவர்களின் பட்டியலுக்குக் கணக்கு வழக்கே கிடையாது!!!



“நம் தோட்டத்தில் விளையும் காபி கோட்டையும், டீ தூளையும் கண்டம் விட்டு கண்டம் விற்பனை செய்தவற்காக காலில் சக்கரம் கட்டிக்கொண்டுத் திரிப்பவன் கேட்கும் கேள்வியாடா இது??” என்று வியாக்கானம் பேசிய நாட் நாட் செவன்… “நம் எஸ்டேட்டில் விளைந்த காபி கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட காபி தான் ஏன்??”



“இதை தயவு செய்து வெளியே சொல்லாதிங்க.. பல தலைமுறையாக செய்யும் தொழிலை ஐந்தே நாளில் மூடிவிட வேண்டியது தான்….” என்றான் கடுப்பாக.



“ம்ம்.. உன் எயிட் பாக் பாடியை மெயின்டென் பண்ண “டயிட்” என்ற பெயரில் வெறும் டிக்காஷனை கப்பில் ஊற்றி சக்கரைக் கூடப் போடாமல் “ப்ளாக் காபி” குடித்தால் இப்படிதான் இருக்கும்” என்று நொடித்துக்கொண்ட பாட்டி… கார்த்திக்கின் முறைப்பைப் பார்த்துவிட்டு…



“இன்று காலையில் தோட்டத்தில் எலுமச்சைப் பறிக்க போன அம்பிகாவையும், செங்கமலத்தையும் தேனீ கொட்டி விட்டது” என்றார் பெருமூச்சு விட்டப்படி.



செங்கமலமும் அம்பிகாவும் அந்த வீட்டின் சமையல் ஆட்கள்.



“மறுபடியுமா??” என்று பத்ரியும், கார்த்திக்கும் கோரசாக கத்திய கத்தில் அங்கே இருந்த பீங்கான் சாமான்களில் லேசாக விரிசல் கூட விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.



“ம்ம்..” என்று தலையை பாட்டி ஆட்டினார்.



ஒரு வழியாக அதிர்ச்சியில் இருந்து மீண்ட அலக்நந்தா “இந்த தேனீ கூட்டத்தை எத்தனை தடவைதான் கலைக்கறது? மீண்டும் மீண்டும் இங்கேயே பிடிவாதமாக வருகிறதே” என்றாள் அழமாட்டாத குறையாக.



கர்பிணியாக இருக்கும் அலக்நந்தா தோட்டத்தில் இருக்கும் அந்த தேனீகளுக்குப் பயந்து கொண்டு மறந்தும் அந்த பக்கமே போவதில்லை!!!



எத்தனைத் தடவை ஆளை வைத்து கலைத்தாலும் அதே மரத்தில் பிடிதவாதமாக வந்து கூடு கட்டும் அந்த தேனீயை என்ன பண்ணுவது என்று யாருக்கும் புரியவில்லை.



“மும்பையில் இருந்து பசங்க வந்தாலும் தோட்டத்துப் பக்கம் விளையாட அனுப்ப முடியலை… மாசத்திற்கு இரண்டு முறை யாராவது கொட்டுபடுகிறார்கள்… அந்த மரம் ரொம்பவே உயரமாக இருப்பதால் ஒவ்வொரு முறையும் அந்த தேனீ கூட்டத்தைக் கலைப்பதற்கு கூட ஆட்கள் ரொம்பவே சிரமப்படுகிறார்கள்… எத்தனை நாள் தான் இப்படியே சமாளிப்பது?? இன்னும் குழந்தை பிறந்துவிட்டால் ஊரில் இருக்கும் சொந்த பந்தம் மொத்தம் வருவதும் போவதுமாக இருப்பார்கள். யாருக்கு எப்போ தேனீ கொட்டுமோ என்று பயந்து கொண்டே இருக்க முடியாதே… அந்த மரம் அத்தனை உயரத்தில் இருப்பதாலே தானே அந்த தேனீ அங்கேயே கூடு கட்டுகிறது?? பேசாமால் அந்த மரத்தை வெட்டிவிட்டால் என்ன??” என்று பத்ரி கேட்டான்.



கார்த்திக்கின் பக்கத்தில் அமர்ந்திருந்த இருந்த பாட்டியின் முதுகை லேசாக முன்னுக்கு தள்ளி.. மூன்று நாற்காலி தள்ளி அமர்ந்திருந்த நிரல்யாவிடம்...



“நீ என்ன சொல்ல வர நிரல்யா?” என்றான் கார்த்திக்.



அங்கே நடக்கும் பேச்சு வார்த்தைக்கும் தனக்கும் சம்பத்தம் இல்லை என்பது போல் குனிந்த தலை நிமிராது அமைதியாக, கல்கத்தாவில் இருந்து அவளுக்கு பிடிக்கும் என்பதற்காவே பிரத்தியேகமாக வாங்கி வரப்பட்டிருந்த சற்றே பெரிய அளவிளான ரசகுல்லாவை உண்டுக்கொண்டு இருந்த நிரல்யாவிடம் கேட்டான் கார்த்திக்.



கணவன் மனைவி விழியால் பேசுவதைப் பார்த்திருக்கிறாள்.. சைகைகளால் பேசிப் பார்த்திருக்கிறாள்… ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொண்டு அனுசரனையாக பேசுவதைப் பார்த்திருக்கிறாள் ஆனால் இந்த தம்பதியோ… முகத்தைப் கூட பார்க்காது… முன்று நாற்காலி தள்ளி அமர்ந்துகொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று தலையைக் கவிழ்த்து ரசகுல்லாவை சுவைத்துக்கொண்டும் இருக்கும் நிரல்யா எதையோ சொல்ல நினைக்கிறாள் கார்த்திக்கிற்கு எப்படி தெரிந்தது?!? என்று திகைத்தாள் அலக்நந்தா.



அவள் பேச விரும்புவதைப் பார்வையைக் கூடச் சந்திக்காது இவன் உணரவதும், அவள் அழைக்காமலே இவன் திரும்பிப் பார்ப்பதும் என்று அவர்கள் மத்தியில் நிகழும் அந்த ரோடார் சம்பாஷனையைக் கண்டு வியப்புடன் பார்த்தவளின் மனதில் பத்ரியின் சொன்ன “ஸ்டார் கிராஸ்ட் லவ்வர்ஸ்” என்ற பதம் தான் ஓடியது.



ஏன் அவளிடம் கேட்கிறான் புரியாத குடும்ப அங்கத்தினர் குழப்பத்துடன் நிரல்யாவைப் பார்க்க… தன் தலையை உயர்த்திய நிரல்யாவின் கண்களில் தயக்கமோ, குழப்பமோ இல்லாது ஒரு தெளிவான பாவத்துடன்..



“மலைத் தேனீ எளிதாக தன் இடத்தை விட்டுப் போகாது... அதை கலைப்பதற்குப் பதில் கொஞ்சம் உள்ளே தள்ளி ஒரு நான்கு தேனீ டப்பாக்கள் வைத்தால் அவை அங்கே போய் அடைந்து விடும்.. நமக்கும் பிரச்சனை இல்லை கூடவே நல்ல தேனும் கிடைக்கும்” என்றாள் மிக தெளிவாக.



அவள் சொன்ன பதிலைக் கேட்டு ஏன்? என்று கேள்வி கூட கேட்காது சம்மதம் தெரிவித்தான் பத்ரி.



உலகில் பத்து சதவிகித்திற்குக் குறைவான மக்களுக்கு மட்டுமே இருக்கக் கூடிய அதிக அளவிலான ஜ.கியூ பெற்றவள் நிரல்யா!!!



அப்படி இல்லா விட்டால் இருபத்தி மூன்று வயதில் பி.ஹச். டி பண்ண முடியுமா?!?



இன்னும் கேட்கப் போனால் அந்த வீட்டின் குகூள் அவள் தான்!!!



பார்த்ததை பார்த்தப்படி கூறும் “போட்டோ ஜினிக் மெம்மரி” உடையவள். அபரிமிதமான அழகும் அதை மிஞ்சும் அறிவும் கொண்ட நிரல்யா தன்னை அறிவாளி என்று பீத்திக்கொள்ளும் ரகமோ… மற்றவர்களை மட்டமாக பார்க்கும் குணமோ துளிக் கூட கிடையாது. அதிகம் பேசாதவள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள் என்பதற்காக பேச அஞ்சுபவள் இல்லை!!!



“இன்றே அந்த டப்பாவை வைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று அந்த தேனீ கூட்டத்திற்கு முடிவு வந்த திருப்தியில் அவசரமாக ஒப்புக்கொண்ட பத்ரி… “டெய்…. இத்தோடு மூன்று முறை உனக்காக ஹனிமூன் புக் பண்ணி கேன்சல் செய்தாகி விட்டது…” என்று விடாப்பிடியாக மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து நின்றான் பத்ரி.



“என்னது கேன்சல் பண்ணியா?? யார் கிட்ட இந்த கதை?? முதல் முறை சங்கி சித் ஜோடி போனாங்க... இரண்டாம் முறை மங்கி, ரஃபிக் ஜோடி.. இப்ப பாட்டி தாத்தா…” என்று மிகத் தெளிவாக அடுக்கினான் இளையவன்.



“நீ பேசுவதை யாராவது கேட்டால் கோடிக்கணக்கில் பிசினஸ் செய்துகொண்டு இருக்கும் பிசினஸ் மேன் என்று என்னைச் சொல்ல மாட்டார்கள் மூலைக் கடையில் துரு பிடித்த டிராவல் ஏஜென்சி பெயர் பலகையை மாட்டிக்கொண்டு ரோட்டில் போகும் அப்பிராணி சப்பிராணியை எல்லாம் கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி அவர்களுக்கு டிக்கெட் புக் செய்து என் வயிற்றை நிரப்பிக்கொள்கிற டிராவல் ஏஜெண்டு என்று நினைப்பார்கள்” என்றான் பத்ரி.



ஏற்ற இறக்கத்தோடு அவன் சொன்ன விதத்தை கேட்டு அங்கே இருந்தவர்களுக்கு

சிரிப்பு பீறிக்கொண்டு வர… இத்தனை நேரம் இங்கே நடப்பதற்கும் எனக்கு எந்த வித சம்பந்தம் இல்லை என்று அமர்ந்திருந்த நிரல்யாவின் முகத்தில் கூட சிரிப்பு வந்து போனது.



“எவ்வளவோ பண்ணிவிட்ட இதுவும் பண்ணிவிட்டேன்” என்று பீடிகையோடு ஆரம்பித்த கார்த்திக்..



“உன் டிராவல் ஏஜென்சில் மூலமாக அடுத்ததாக அண்ணா சௌவிக்கும் அப்புறம் அப்பா அம்மாவிற்கும் டிக்கெட் புக் பண்ணி” என்று விளக்கிக்கொண்டு இருக்கும் போதே பத்ரி அங்கே இருந்த சுடு சாம்பாரை கையில் எடுக்க… “நோ… டைனிங் டேபிள் வன்முறை கூடாது என்று அம்மா சொன்னது உனக்கு ஞாபகம் இல்லை??” என்று சீரியஸாக பேசியப்போதும் அவன் குரல் உடைந்து சிரிப்பு வெளியேறியது.



“கூல் டவுன் மேன்… உன் கோபம் புரியுது.. நான் என்ன பண்ண முடியும்?? பாபியோட டெலிவரி முடியும் வரை நீங்க இரண்டு பேரும் எங்கேயும் போக முடியாது இல்லையா அதனால் தான் உன்னை இந்த லீஸ்ட்டில் சேர்க்கவில்லை” என்று ஏனோ அவனின் கோபத்திற்குக் காரணம் அவனின் பெயரை சொல்லாதது தான் என்பது போல் கூறி ஏற்கனவே பற்றி எரிந்துக்கொண்டு இருந்தவனின் கோபத்தில் பெட்ரோலை கொட்டினான் கார்த்திக்!!!



அண்ணா என்றாலோ அது ஆர்யா என்று பேசும் கார்த்திக்கின் பேச்சில் அண்ணாவின் மனைவியான சௌந்தர்யாவை “சௌவி” என்று பெயர் சொல்லி அழைப்பதும்.. நண்பனை போல் வாடா போடா என்று பேசும் பத்ரியின் மனைவியை பாபி என்று ஹிந்தியில் அண்ணி என்று மரியாதையாக அழைப்பதும்… ஏறுக்கு மாற பேசுகிறான் என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு யோசிப்பவர்களாக…



மூத்த அண்ணினான சௌந்தர்யாவை “சௌவி” என்று சர்வ சாதாரணமாக பெயர் சொல்லி அழைப்பதற்கு அவள் தாய் மாமனின் மகள் என்ற ஒரு காரணம் மட்டும் அல்ல… நிரல்யாவை போல் சங்கி மங்கியின் நெருங்கி தோழி தான் இந்த சௌவி!!!



சங்கி, மங்கி, மூத்தவன் ஆர்யாவின் மனைவி சௌவியும், கார்த்திக்கின் மனைவி நிரல்யா எனப்படும் நிருவும் மிக நெருங்கிய தோழிகள்!!!



குறும்பு தனம் மிகுந்த சௌவி, சுட்டிதனமான சங்கி, வினையமான மங்கியுடன் அமைதியே வடிவான நிருவும் என்ற இந்த நால்வர் அணி ஒன்று கூடிவிட்டார்கள் என்ற தகவல் வந்தாலே வீட்டில் இருக்கும் மனிதர்கள் எட்டு திக்கும் தெறித்து ஓடி ஓளிவார்கள்!!!



காரணம் இந்த நால்வர் வலையில் சிக்கி சின்னா பின்னாமானவர்களின் பட்டியல் அனுமார் வால் மாதிரி நீண்டுக்கொண்டே போகும்!!!



பேஸ்டில் ஊசி மூலம் சோப் தண்ணீரை நிரப்பி தூக்க கலக்கத்தில் பல் துலக்குபவர்களுக்கு வாயை திறந்தாலே நுரைக்குப் பதில் பெரிய பெரிய முட்டை வந்து காலையில் எகிறும் இதய துடிப்பு. ஹாலில் இருக்கும் செயற்கை நீர் ஊற்றில் டிரை ஜஸ்சை நிரப்பிப் பெரும் புகை மண்டலத்தை கிளம்பிவிட்டு அந்த கால சாமி படத்தில் தேவலோகத்தில் இருப்பது போல ஹால் முழுவதும் குபு குபுவென்று புகை சூழ வைத்து, பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்து என்றால், இரவு தூங்கும் போது குடிக்கும் பால் கிளாசில் அடியில் செத்து கிடக்கும் ப்ளாஸ்டிக் பூரானைப் பார்த்து பயத்தில் வாந்தி மயக்கம் வந்து படுக்கையில் சரிவது வரை யாருக்காவது எதாவது ஆப்பு பூதாகரமாக காத்துக்கொண்டு தான் இருக்கும்!!!



அந்த வீட்டில் மூன்று ஆண் பிள்ளைகள் செய்யாத சேட்டைகளை இந்த நால்வர் அணி ஒன்று கூடி செய்து கலங்கடிப்பார்கள்.



இப்படி சிறு வயதில் தங்களுடன் சேர்ந்து விளையாடிய சௌவி மற்றும் நிரல்யாவை முறை வைத்து அழைக்க முடியாததால் சங்கி, மங்கி முதல் கார்த்திக் வரை பெயர் சொல்லியே அழைத்தனர்.



ஆனால் பத்ரியின் விஷயமே வேறு… பாலிவுட்டையே தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் மல்ஹோத்ரா குடும்பத்தை சேர்ந்தவளும்.. சிறு வயது முதல் நடிப்பால் கலை உலகை கட்டிப்போட்ட நடிகையுமான அலக்நந்தாவை எம்.பி.ஏ படிக்க சென்ற காலத்தில் காதல் கொள்ள… இந்த காதல் பறவைகள் இருவருமே அறியாது சச்சிதேவ் வீட்டு ஆட்களே திருமணத்தை முன்னின்று ஏற்பாடு செய்ய.. எப்பையும் போல் பத்ரியின் திருமணமும் திடீரென்று நடந்து முடிந்தது!!!



சச்சிதேவ்வின் கூட்டு குடும்பத்தில் வெளியே இருந்து வாழ்க்கைப்பட்ட ஒரே பெண் அலக்நந்தா மட்டுமே!!! அதனால் “பாபி” என்று மரியாதையாக முறை வைத்து அழைக்கத் தொடங்க… அந்த வீட்டின் வேலை ஆட்கள் கூட அவளை பாபிமா என்று அழைக்கப்பட... தற்போது அவளின் இயற்பெயர் கூட பலருக்கு தெரியாத நிலை!!!



கார்த்திக்கின் வியாக்யானமான பேச்சைக் கேட்டு சிரிப்பு வந்த போதும் ஏற்கனவே கொந்தளித்துக்கொண்டு இருந்த பத்ரி என்ன பதில் சொல்ல போகிறானோ என்ற பதட்டம் இருந்ததால் எல்லோரும் சங்கடத்துடனே பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு பத்ரியைப் பார்த்தனர்.



“இப்படியே பேசிக்கிட்டு இரு…” என்று அழுத்தமாக பத்ரி வாயை திறக்கும் போதே...



“எப்படி திடீரென்று அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டேனோ அதே போல் திடீரென்று ஹனி மூனுக்கு அழைத்து போவேன்..” என்று தெளிவாக கூறிய கார்த்திக்கை நம்பாது முறைத்த பத்ரியை கண்டு...



“நிஜமாகவே நேரம் இல்லைடா….”



“அடயேய்… உனக்கு முன்னாடியே எனக்குக் காது குத்தி கம்மல் போட்டாச்சுடா. உன் மொத்தம் டிரவால் ஷேடியூலை செக்கரட்ரியிடம் இருந்து வாங்கி அதைப் பார்த்து பின் தான் இந்த ஏற்பாட்டையே செய்தேன்”



“விபரமானவனே… என் ஷெடியூலை பார்த்தியே அவளுடையதை பார்த்தியா?? நான் நேரம் இல்லை என்று சொன்னதே அவளுக்காக தான்” என்றான் பொட்டில் அறைவது போல் கார்த்திக்.



“என்னது??” என்று எதிர் கேள்வி கேட்ட கார்த்திக் தன் அண்ணணின் நம்பாத பார்வையை கண்டு “நான் என்ன சொன்னாலும் நம்ம போவது இல்லை அதனால் இந்த வீட்டின் உண்மை விளம்பியான நிரல்யாவிடனே கேட்டு தெரிந்துக்கொள்” என்று அவள் புறம் கையை காட்டினான்.



சுவாரசியமாக ரசகுல்லாவை வாயில் வைக்க போனவளின் பக்கம் அனைவரின் பார்வையும் திரும்ப… அவசரமாக ஒரு ஏக்கத்துடன் தன் கையில் இருந்த ரசகுல்லாவை கீழே வைக்கும் போதே…….



“ஏய் ரசகுல்லாவை அப்புறம் சாப்பிடலாம் முதலில் உனக்கு பத்ரி குறிப்படும் தேதிகளில் செல்ல முடியுமா இல்லையான்னு உன் வாயாலே சொல்லு.. இல்லன்னா என்னை தொணதொணத்துக்கொண்டே இருப்பான்… உனக்கு ஹனிமூனுக்கு இப்ப போகணுமா?” என்று அத்தனை பேர் முன்னாலும் கேட்டு வைத்தான் உத்தம புத்திரன் கார்த்திக்.



“அட கடவுளே!!!” என்று அலக்நந்தா தொடங்கியது தான் அதை தொடர்ந்து “டெய் இதை இப்படியாடா கேட்பாங்க??” என்று பாட்டியும் “அறிவு கெட்டவனே” என்று பத்ரியும் மாறி மாறி கார்த்திக்கைத் திட்ட தொடங்க….



“கொஞ்சம் நேரம் அமைதியா இருக்க... நீங்க இரண்டு பேர் கத்தும் கத்தலில் நிரல்யா சொல்வது காதில் விழவில்லை” என்று மொழிந்து அவர்களை அடக்கினான்.



அந்த மயான அமைதியில் “இப்ப வேண்டாம்” என்று மறுப்பாக தலையை அசைத்தவள் “மாமா நீங்க சொல்லும் வாரம் நான் பி.ஹெச்.டி விஷயமாக வெளியூர் கேம்ப் போக வேண்டி இருக்கு..” என்றாள் நிரல்யா.





“அந்த கேம்பை இந்த வாரமே போய் முடியாதா?!?” என்றார் பாட்டி அவசரமாக.



“ஐந்து மாதம் முன்னாடி செய்த ஏற்பாடு பாட்டி.. நான் மட்டும் தனியாக போகவில்லை.. என்னுடன் ப்ரஃபசரில் ஆரம்பித்து உடன் படிக்கும் மாணவர்கள் கூட வருகிறார்கள் நினைத்த நேரத்தில் தேதியை மாற்ற முடியாது பாட்டி” என்று தெளிவாக மொழிந்தவள் “அப்புறம் பாட்டி மறந்து விட்டிங்களா நான் இன்று முதல் ரீசர்ச் அசிஸ்டென்டாக நம் கம்பெனியில் சேருகிறேன்!!!” என்று முடித்தாள்.



“அடடே… போன வராமே நீ சொன்ன நான் தான் மறந்தே போனேன்… இதை எல்லாம் முடித்துவிட்டு பிறகு வேலைக்கு சேர்ந்தால் வசதியாக இருக்காது..??” என்று மீண்டும் கேள்வி கணையை தொடுத்தார் பாட்டி.



“ஏற்கனவே அவளுக்காக அந்த பதவி கடந்த மூன்று வருடமாக காத்துக்கொண்டு இருக்கிறது பாட்டி. இனி பி.ஹெச்.டி விஷயமாக தேவைப்படும் போதும் மட்டும் சென்னை போனால் போதும்.. முன்பு போல் அங்கேயே தங்கி படிக்க வேண்டிய தேவை இல்லை என்று அறிந்ததால் தான் இப்பவே சேர சொன்னேன்” என்றான் பத்ரி.



தொழில் விஷயமாக சகோதர்கள் முடிவு எடுத்தால் அதில் வேறு பல காரணம் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்த பாட்டி மேற்கொண்டு இதை பற்றி தூண்டி துருவாது ஒரு அர்த்தம் பொதிந்த பார்வையோடு கார்த்திக்கைப் பார்த்து வைத்தார்!!!



பத்ரி கூறிய பதிலுக்கு அவனைப் பார்க்காது கார்த்திகை ஏன் இப்படி பாட்டி பார்த்து வைக்கிறார்?? இந்த பார்வைப் பரிமாற்றத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்று குழம்பிப் போய் தன் கணவனின் புறம் அலக்கநந்தா பார்வையை திரும்ப… அவனோ நிரல்யாவை பார்த்தான்!!!



திருமணமாகி மூன்று வருடம் கழிந்த பின்னரும் கூட சச்சிதேவ்வின் குணாதிசயங்களை புரிந்துக்கொள்ள முடியாது தடுமாறும் அலக்நந்தா என்ன நடக்கிறது என்று மண்டைப் பிச்சிக்கொள்ளாத குறையாக அமர்ந்திருந்தவளின் காதில்...



ஒரு சந்தோஷமான குரல்.. “கார்த்திக் நீ எப்படா மும்பையில் இருந்து வந்த??” என்று தன் நடையை பயிற்சியை முடித்து விட்டு உள்ளே வந்த தாத்தா கேட்டார்.



“நேற்று இரவு ஒரு மணி இருக்கும் தாத்தா” என்றான் புன்னைகைத்தப்படி.



“சாப்பர் சவுண்ட் கேட்கவே இல்லையே இதற்கே நான் பன்னிரண்டு மணி வரை விழித்து தானே இருந்தேன்….” என்று ஆச்சரியமாக கேட்டப்படி கை கழுவிட்டு டைனிங் டேபிள் வந்து அவன் அருகில் இருந்த நாற்காலியை இழுத்து போட்டுக்கொண்டு அமர்ந்தார்.



“ம்கூம்.. நீங்க விடும் குறட்டை சத்ததில் நம் வீட்டு மொட்டை மாடியில் வந்து அவன் ஹெலிகாப்டரை இறக்கினாலும் கூடக் கேட்காது.. இந்த லட்சணத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் ஹெலிபேடில் வந்து நிறுத்தினால் உங்க காதுக்குக் கேட்கப் போகுதாக்கும்” என்று நொடித்தபடி நாட் நாட் செவன் பதில் சொல்ல…



அங்கே இருந்த அனைவரும் பொங்கி சிரித்தனர்.



“அப்பாவும் அம்மாவும் சேலத்தில் இருந்து எப்ப ஊர் திரும்பு வருவாங்க தாத்தா??” என்றான் கார்த்திக்.



தான் கட்டிய மனைவியில் இருந்து பாட்டி வரை அனைவரும் அமர்ந்திருக்க தாத்தாவிடம் இந்த கேள்வியை கேட்டதற்கான காரணம்… தாத்தா தான் அந்த வீட்டின் ஒற்றன்!!!



யார் எங்கே என்ன செய்கிறார்கள் என்று தாத்தாவைப் போல் யாராலும் அறிந்து வைத்திருக்க முடியாது. ஆனால் எப்ப எதை சொல்ல வேண்டும் என்று தெரியாது வாயை திறந்த மாட்டிக்கொள்வார் என்பது வேறு விஷயம்!!!



“நாளை வந்துவிடுவததாக சொன்னான்… ஏன்டா?”



“ஜெரிமனியில் இருந்து வாங்க திட்டம் போடப்பட்டு இருக்கும் புது மிஷினரி குறித்து அப்பாவிடம் பேச வேண்டி இருக்கு…” என்று கார்த்திக் யோசித்தப்படி இழுக்க…



“சங்கி மங்கி கல்யாணம் முடிந்து இன்றைக்கு தான் ஊருக்கே திரும்பி இருக்க அதற்குள் அடுத்த டிரிப்பிற்கு ஏற்பாடு பண்ணிவிட்டியா??” என்று எரிச்சலாக தாத்தா கேட்டுக்கொண்டு இருக்கும் போதே…



“தாத்தா… நீங்களுமா??” என்று அலுப்பாக இழுத்தவன் “நான் என்ன ஊர் சுத்திப் பார்க்கவா போகிறேன்?? சங்கி, மங்கி கல்யாண வேலையால் கிட்ட தட்ட ஒரு மாதம் என் வேலை எல்லாம் அப்படியே தேங்கி போச்சு…”



“என்ன இருந்தாலும் நீ நிரல்யாவை அக்கடான்னு விட்டு விட்டு இப்படி தனியாக ஊர் சுற்றுவது கொஞ்சம் கூட நல்லா இல்லை… உன் தங்கைகளுக்கு மட்டும் இல்லை உனக்கு அவர்கள் மேடையில்தான் கல்யாணம் ஆனது அதை மறக்காதே!!!” என்றார் தாத்தா சிரிப்பு வழிய.



பரம்பரையாக பின் பற்றி வந்த திடீர் கல்யாணத்தை வழக்கத்தை உடைக்கும் விதமாக… ஒரு மாதத்திற்கும் முன்பு தங்கை சங்க மித்ராவின் திருமணம் ஹைதிராபாத் ராஜ வம்சத்தை சேர்த்த சித் என்று அழைக்கப்படும் சித்திக்குடன் முடிவு செய்யப்பட, இவர்கள் முறைப்படி திடீர் திருமணம் செய்ய வழி இல்லாது ஊர் கூட்டிப் பத்திரிக்கை அடித்து காளி கோயிலில் ஏற்பாடாக… அங்கே அரங்கேறிய கூத்து வேறு வகை!!!



“என் நடை பயிற்சியை முடித்து விட்டு வரும் வழியில் நிரல்யாவின் மாமா சேது ராமனை பார்த்தேன்… நீ எப்ப ஊரில் இருந்து திரும்பினாலும் உடனே தெரிவிக்கச் சொன்னார்.. மாப்பிள்ளை விருந்திற்கு ஏற்பாடு செய்யணுமாம்… நீ எப்ப...” என்று சமயம் சந்தர்ப்பம் அறியாது எப்பையும் போல் கேட்கும் தகவல்களை, தன்னையும் அறியாது தாத்தா உளறி கொட்டி வைத்தார்!!!



சேதுராமன் என்று பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கார்த்திக்கின் முஷ்டி இருக.. முகம் கருக்க… அவனின் கட்டு அடங்காத கோபத்தை அமர்ந்திருந்த அனைவரும் மிக துள்ளியமாக உணர… அப்பொழுது தான் தான் ஊளறி கொட்டிய செய்தியின் தன்மைப் புரிந்து அவசரமாக தன் தப்பை உணர்ந்து பேச்சைப் பாதியில் நிறுத்தினார் தாத்தா!!!



மெல்ல தன் கோபத்தை கட்டு படுத்திய கார்த்திக்… “இனி ஒரு தரம் அவ….” என்று ஆரம்பிக்கும் போதே அவசரமாக குறுக்கிட்ட பத்ரி..



“டெய்.. மரியாதையாக பேசு வயதில் பெரியவர்” என்றான் அழுத்தமாக.



“ஓ!! பெரியவர் இல்லை” என்று எகதாளமாக தன் அண்ணனை பார்த்துக் கேட்டவன், பின் தன் தாடியைத் தடவியப்படி தாத்தாவிடம் திரும்பி..



“அவர் வயதானவர் இல்லையா தாத்தா… அதனால் ஞாபக மறதி வந்து விட்டது போல்” என்று எள்ளளுடன் மொழிந்தவன்



“அடுத்த முறை ‘மாப்பிள்ளை’ முறைக்காக என்னை விருந்திற்கு அழைப்பு விடுத்தால்… அந்த பெரியவரிடம் சொல்லுங்க.. விருந்து வைக்க நாங்க ஒன்றும் புதுசா கல்யாணம் ஆன தம்பதிகள் இல்லை… எங்களுக்கு மணமாகி ஐந்து வருடங்கள் முடிந்துவிட்டது என்று ஞாபகப்படுத்துங்கள்!!!” என்றான் நிறுத்தி நிதானமாக.


 
Status
Not open for further replies.
Top