கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாதுமாகி என்னுள் நிறைந்தவனே!...அத்தியாயம் 3

Status
Not open for further replies.

siteadmin

Administrator
Staff member
அத்தியாயம் 3

அத்தியாயம்- 3

தன் மனைவியின் கையைப் பற்றி அழைத்துச் சென்ற கார்த்திக்கைப் பார்த்தப்படி எதுவும் பேசாது அனைவரும் அமைதியாக இருக்க.. அதை பற்றி எந்த கவலையுமின்றி நிரல்யாவை கிட்டதட்ட இழுத்துச்சென்று வெளியே தயாராக இருந்த தன் பி.எம்.டபுள்யூ ஸ்போட்ஸ் காரில் அவளை ஏற்றினான்.

எதுவுமே பேசாது சீட் பெல்ட்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த நிரல்யாவை பார்த்தவன் ஒரு அசட்டு சிரிப்புடன் “உன்னைப் பார்த்த முதல் சந்திப்பில் பையன் என்று எண்ணிக்கொண்டேன் என்பதற்காக இத்தனை நீளமாக முடியை வளர்ப்பது எல்லாம் டூ மச் டீ… இனி இரவு வந்ததும் வராததுமா பாபி என்னை ஆயிரம் கேள்வி கேட்டு துளைக்கப் போறாங்களே!!!” என்று புலம்பியப்படி காரை எடுத்தான்.

அன்று இரவு வீட்டில் வெடிக்க போகும் கலவரத்தில் இதை பற்றி யாருக்கும் நினைக்க கூட நேரம் இருக்க போவதில்லை என்பதை அப்பொழுது அவன் அறியான்!!!

“ஏழு வயதில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கா??” என்றாள் அவனை ஆர்வமாகப் பார்த்து.

சிரிப்பு பீறிட.. “உன்னைப் போல் தேதி, வருடமும், நேரம் வாரியாக ஞாபகம் இல்லை என்றாலும் கூட அந்த நிகழ்வை எப்படி மறக்க முடியும்??”

அதற்கு பதிலாக அவள் முகத்திலும் புன்னகைப் மட்டும் படர்ந்தது.

கார்த்திக்கை முதன் முறையாக பார்த்த சம்பவம் ஒரு மகா விசித்திரமாக நிகழ.. தன் வாழ்க்கையே புரட்டிப் போட்ட... அந்த நாளை எப்படி மறக்க முடியும்?!?

மாலை மயங்கும் அந்தி நேரத்தில்.. செங்கதிரோன் தவழ்கின்ற மேகங்களில் மறைந்து மறையாததுமாக கண்ணா மூச்சு விளையாட.. சுகந்தமாய் காற்றி வீச… எங்கோ குயில் இனிமையாக கூவ… என்று சினிமாவில் முதல் முறையாக தலைவனும் தலைவியும் சந்திக்கும் நேரத்தில் காட்டப்படும் எந்த காட்சியுமின்றி… சூரியன் சுட்டெரிக்க.. லேசாக காற்று வீசினாலும் கூட காய்ந்த சருக்கும் மணலும் முகத்தில் அப்ப.. தன் கர்ண கொடூரமான குரலால் காகம் கரைய.. மரக்கிளையில் தலை கீழா தொங்கிக்கொண்டு இருந்த நிலையில் தான் நிரல்யாவை கார்த்திக் சந்தித்தான்!!!

வெளியே விளையாட அனுமதிக்காத அன்னையும், அதிகம் பேசாத தந்தையும் மாதத்திற்கு இருமுறை நிரல்யாவை விளையாட அனுப்புவது என்றால் அது பக்கத்து எஸ்டேடில் இருக்கும் சங்கி மங்கியோட தான்!!!

அவர்கள் கல்லூரில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்காக அழைப்பு விடுக்க வந்த பாண்டியன், தன்னுடன் இளைய மகளையும் அழைத்து வந்து அங்கே விட்டுவிட்டு சென்று விட்டார்.

நிரல்யாவின் தந்தை பாண்டியனுக்கு ஏற்காட்டில் எஸ்டேட் இருந்த போதிலும் அதிக அளவில் ஏற்றுமதியில் ஈடுபடவில்லை. பெரிதாக தொழிலில் ஈடுபடவில்லை என்றாலும் அந்த பகுதியில் சச்சிதேவ்வின் செல்வாக்கிற்குச் சற்றும் சலைத்தவர்கள் இல்லை. அதற்கானக் காரணம் அவர்கள் நடத்தும் புகழ்பெற்ற கல்வி கூடம் தான்!!!

தொன்னூறுகளில் புற்றிசல் மாதிரி முளைத்த தனியார் கல்விக் கூடம் அல்ல அவர்களுடையது. சுமார் அறுபது வருடத்திற்கு முன்பு நிரல்யாவின் தாத்தா எஸ்.வி.எஸ் என்ற பள்ளியைத் தொடங்க.. தாயின் பெயரில் இருந்த பள்ளியை மேன் மேலும் உயர் தரமான கல்வி நிறுவனமாக தனையன் வளர்த்தார்.

சிறிய திண்ணைப் பள்ளியாக ஆரம்பித்து படிப்படியாக விரிப்படுத்தப்பட்டு இன்று பி.எச்.டி வரை படிக்க கூடிய அளவிலான கல்வி வளாகமாக உருவெடுப்பதற்கான காரணம் அங்கே வழங்கப்படும் தரமான கல்வியே ஆகும்!!!

கல்லூரி விழா என்று மட்டும் இல்லை ஏற்காட்டில் பாண்டியன் தலைமையில் எந்த பொது விழா நடந்ததாலும் பக்கத்து வீட்டுக்காரர் என்பதோடு அந்த ஊரின் பெயர் மனிதர் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுவது வாடிக்கை என்ற படியால் மாதத்திற்கு ஒரு முறை பாண்டியன் அங்கே வருவது வழமை தான்.

சச்சிதேவ் குடும்பத்தில் ஆர்யாவில் ஆரம்பித்து கடை குட்டிகள் சங்கி மங்கி வரை அந்த பள்ளியில் தான் படித்தனர். கார்த்திக்கும் மற்றும் பத்ரி கூட இளங்கலை பட்டத்தை அங்கே முடித்து விட்டு முதுகலைக்கு தான் வெளி நாடு மற்றும் வெளி மாநிலம் சென்று படித்தனர்.
இப்படி ஊரில் இருக்கும் எல்லா குழந்தைகளுக்கு எழுதறிவித்த பாண்டியனுக்கு திருமணமாகி மூன்று முறை கருகலைந்து கிட்ட தட்ட பத்து வருடம் கழித்து.. தவமாய்த் தவமாய் தவமிருந்து பிறந்தவள் தான் மூத்தவள் பாக்கியலட்சுமி!!!

ஐந்து தம்பிகளுடன் பிறந்த தேவகியின் தாய் வழியும் ஏற்காட்டில் வளமையான குடும்பம் என்பதால் வராது வந்த மாமணியாக பிறந்த பாக்கிய லட்சுமியை இரு குடும்பத்தினரும் காலை கீழே வைக்க விடாது தங்க தாம்பாளத்தில் வைத்து இளவரசியாகப் போற்றி வளர்க்க பட... யாருமே எதிர்பாராது உலக அதிகசமாக தேவகியின் நாற்பத்தி நான்காவது வயதில் பிறந்த அதிசய குழந்தை தான் நிரல்யா!!!
மூத்தவள் பாக்கியாவிற்கும் இளையவள் நிரல்யாவிற்கும் கிட்டத்திட்ட பதினைந்து வருட இடைவேளை!!!

ஏற்கனவே சற்று நோஞ்சானான தேவகியின் உடல் நிரல்யாவின் பிறப்பால் குழந்தையைக் கவனித்துக்கொள்ள முடியாதளவு உடல் நலன் பாதிக்க… அவளின் எண்பது வயது பாட்டிதான் வீடு நிறைய ஆட்களை வைத்து பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்ப்பட்டது!!!

நிரல்யாவின் பிறப்பிற்கு பின் தேவகிக்கு ரொம்பவே உடம்பு முடியாது போனதாலோ என்னவோ பாக்கிய லட்சுமியின் பிறப்பைத் தூக்கி தலையில் வைத்து கொண்டாடிய குடும்பத்தினர் நிரல்யாவை புறக்கணித்தது போல வெளி பார்வைக்குத் தெரியவில்லை என்றாலும் அங்கே வேலை செய்தவர்களுக்கு அப்பட்டமாகவே தெரிந்தது.

தாய் தான் உடம்பிற்கு முடியாது கிடக்கிறார் என்றால் மாதத்தில் பாதி நாள் வெளியூர் சென்று வரும் பாண்டியனோ பெட்டி பெட்டியாக பரிசு பொருட்களை மூத்த மகளுக்கு அடுக்கியவர், நிரல்யாவிற்கு ஒரு சின்ன மரபாச்சி பொம்மை வாங்கி தர கூட நேரம் இல்லாமல் போனது தான் ஆச்சரியம்!!!

சீம் பாலின் நிறத்தோடு தலை நிறைய முடியுடன் கோலிக்குண்டு கண்ணுடன் “அக்கா அக்கா” என்று வால் பிடித்துக்கொண்டு திரிந்தவளைப் பாக்கியாவிற்குப் பிடிக்கவே செய்தது என்றாலும் தாய் தந்தையைப் பின்பற்றி அவளிடம் விளையாடியதோ நின்று இரண்டு வார்த்தைப் பேசியது என்று எதுவும் இருந்தது இல்லை.

வீட்டில் பேசவோ வெளியே சென்று விளையாடவோ யாரும் இல்லாத தனிமை... அவளை பாசமாக வளர்த்த பாட்டியின் வயோதிகமோ அவர்களைத் தூரத்தி பிடிக்க தன் தனிமையை போக்க நிரல்யா தஞ்சம் புகுந்த இடம் அவர்கள் வீட்டில் இருந்த நூலகம்!!!

ஆடி ஓடி விளையாட வேண்டிய வயதில் எந்த நேரமும் புத்தகம் புழுவாக இருக்கு பேத்தியைக் கண்டு மனது வருந்திய நிரல்யாவின் பாட்டி ரொம்ப யோசித்து அடுத்த எஸ்டேட்டில் இருக்கும் இரட்டையர்களுடன் விளையாட ஏற்பாடு செய்தார்.

அதிகம் பேசாது, எதை பற்றி கேட்டாலும் சரியாக பதில் சொல்லி அசத்தும் நிரல்யாவை சங்கி, மங்கிக்கு ரொம்பவே பிடித்துப் போக... அவள் வந்தால் இருவருக்கும் கால் தரையிலே இருக்காது. இதற்கே அவர்களை விட சின்னவளாக இருந்தாலும் கூட அவர்களின் நட்பிற்கு அது குறுக்கே வரவில்லை!!!

பக்கத்து எஸ்டேட் என்பதாலும் ஒரே பள்ளியில் படிப்பதாலும் மட்டும் அந்த தோழமை வந்துவிடவில்லை என்று பின்னால் புரிந்தது போலும், சிறுவயதில் நிரல்யாவிற்கு அவர்கள் வீட்டிற்குச் சென்று விளையாட விரும்பியதின் முழு முதற் காரணம் அங்கே அவளை நடத்தும் விதம்.

சிறு வயதிலேயே அவளின் அபரிமிதமான ஐ.கியூவைக் கண்டு அறியப்பட்டதால் பள்ளிக்குக் கூட அனுப்பாது வீட்டில் இருந்தபடியே பள்ளி படிப்பைத் தொடர… நண்பர்கள் என்றால் அவள் அறிந்தது சங்கியும், மங்கியும் மட்டும் தான். சங்கி, மங்கியில் ஆரம்பித்து அவர்கள் பாட்டி வரை எல்லோரும் மிக சாதாரணமாக அவளையும் தங்கள் வீட்டு குழந்தைப் போல் இவளுக்குப் பிடித்த உணவில் இருந்து விளையாட்டு வரை எடுத்துக்கட்டி செய்யும் விதம் தான் மிகவும் கவர்ந்தது!!!

காலை முதல் மாலை வரை தோழிகளுடன் விளையாடும் நாட்களுக்காக ஆவலுடன் எதிர்பார்ப்பாள் நிரல்யா. நினைவு தெரிந்த நாளில் இருந்து நெருங்கிய தோழியாக கருதுவது சங்க மித்ராவும், மேக மித்ராவும் தான் பின்னாளில் அவர்களுடைய கூட்டணியில் சௌவியும் சேர அது நால்வர் அணி ஆனது!!!
பாட்டியின் ஏற்பாட்டை அவரின் மறைவிற்கும் பிறகும் அந்த வீட்டில் கடைபிடித்ததற்குப் பிரதான காரணம் சங்கி, மங்கி தான்.

இவளை அங்கே அனுப்பாவிட்டால் இரட்டையர்கள் இருவரும் இங்கே படை எடுப்பார்கள்.. இயல்பிலேயே துறுதுறுப்பும் சுட்டித்தனமும் அதிகம் கொண்ட சங்கி, மங்கியை சமாளிப்பது எளிது இல்லை. செல்வ செழிப்பில் இவர்களை ஒத்தவர்கள் என்பதால் வேறு வழியின்றி நிரல்யாவை அங்கே விளையாட அனுமதித்தார் என்று பின்னால் புரிந்துக்கொண்டாள் நிரல்யா!!!

இதை பற்றி எதுவுமே தெரியாது வயதில் தன் தந்தையுடன் மிக குஷியாக தோழிகள் வீட்டிற்கு கிளம்பியவளுக்கு வாழ்க்கையில் தலை கீழாக உயரத்தில் இருந்து கீழே விழுந்து தலை தெறித்து சாகப்போகிறோம்…. உயிர் உசலடாடுகிறது என்று வார்த்தையின் பொருளை முதல் முதலாக அவள் உணர்ந்த அறிவு ஜீவி நிரல்யாவிற்கு வயது ஏழு!!!

நிரல்யாவிற்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு கண்ணாமூச்சி என்பதாலேயே... இவள் வந்தாள் இரட்டையர்கள் அங்கே வேலை செய்யும் ஆட்களின் சிறுவர்களையும் சேர்த்து ஒரு மினி பெட்டாளியன் போல் கண்ணா மூச்சு ஆடுவது வழக்கம்!!!

அன்று விடுமுறை நாள் என்பதால் அழைத்தவுடன் சீரார்களில் கூட்டம் அலை மோத… வீட்டிற்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில் விளையாட இடம் பத்தாது என்று வீட்டின் பின் புறம் இருக்கும் பெரிய தோட்டத்தில் விளையாட முடிவு செய்யப்பட்டது.

முதல் இரண்டு ஆட்டத்தில் சீக்கிரமே அவுட் ஆகிவிட்டதால், நிரல்யா அடுத்த முறை சற்றே உள்ளே சென்று மறைவதற்குக் காடு போல் இருந்த அந்த தோட்டத்திற்குள்ளே நுழைந்து வேகமாக ஓடியப்படி நோட்டமிட்டவளுக்குத் தாழ்வான கிளைகளைக் கொண்ட மாமரம் கண்ணுக்குத் தென்பட அதில் ஏறினாள்.

வேகமாக மரக்கிளையில் காலைப் பதித்து சரசரவென்று நான்கு அடி ஏறி இருப்பாள். அதற்குள் அவள் அணிந்திருந்த ஷூ வழுக்கி விட… கண் இமைக்கும் நேரத்தில் சரசரரென்று சரிந்து வழுக்கிகொண்டு கீழே இறங்கியவளுக்கு தலை தேங்காயைப் போல் சிதற போகிறது என்று பயந்து போய் கண்களை இருக்க மூடிக்கொண்டாள்.

தலைக்குப் பதில் காலில் வலி விண் என்று ஏற்பட்ட… அதே சமயத்தில் ஏன் தன் தலை இன்னும் உடையவில்லை என்ற கேள்வியும் எழ… மெல்ல கண்களைத் திறந்தவளுக்குப் பூமியில் இருந்து ஆறு அடிக்கு மேலே அவள் தலை கீழாக தொங்கிக்கொண்டு இருப்பது புரிந்தது!!!

உயிருடன் தான் இன்னும் இருக்கிறோம் என்று புரியவே ஒரு ஐந்து நிமிடம் பிடிக்க…. மெல்ல தலையை மட்டும் உயர்த்திப் பார்த்தவளுக்கு உலகமே தலை கீழ் தெரிய… எங்கோ சிக்கி இருந்த காலை ஆட்டி எடுத்துவிட்டால் இனி கீழே விழுந்தாலும் கையைத் தாங்கி பிடித்து சமாளித்துக்கொள்ளலாம் என்று கணக்குப் பண்ணி லேசாக காலை அசைக்க..

மரத்தின் இரண்டு கிளையின் இடுக்கில் மாட்டிக்கொண்ட கால்கள் மேலும் இறுகியதே தவிர… விடுபடவில்லை.. அதை விட வலி வேறு விண்னென்று உடம்பு முழுவதும் பரவ… இங்கும் அங்குமாய் தலையைத் திருப்பிப் பார்த்தவளுக்கு ஆள் நடமாட்டத்திற்கான அறிகுறியே தெரியாது போக சோர்ந்தாள்.

அவளின் ஒரே ஆறுதல் தோட்டத்தின் உட்பகுதியாக இருந்தாலும் தன்னைக் காணாவிட்டால் சங்கியும், மங்கியும் எப்படியும் தேடிக்கொண்டு வருவார்கள் என்ற திடம் இருந்ததால், காலை ஆட்டி மேலும் அதை இறுக செய்யாது வலியைப் பொருத்துக்கொண்டு வொவ்வால் மாதிரி தொங்க தொடங்கினாள் அந்த புத்திசாலி சிறுமி!!!

உடம்பின் வலியும், அந்த தோட்டத்தின் தனிமையும், அடுத்து என்ன செய்வது என்று புரியாத திகிலும் நிரல்யாவைப் பயமுறுத்த சத்தம் போட்டு அழக்கூட பயந்து மௌனமாக வாய்பாடு சொல்ல தொடங்கினாள்!!!

அடுத்து பதினைந்து நிமிஷமும் அப்படியே தொங்கியவளுக்கு.. யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்க… நிம்மதி பெரு மூச்சுடன் வேகமாக கண்களைத் திறந்து... “சங்கி.. மங்கி” என்று அழுகையும் சிரிப்புமாக உரக்க அழைத்தாள் நிரல்யா!!!

பசங்களுடன் புட்பால் ஆடிக்கொண்டு இருந்த கார்த்திக்குக்கு நெற்றியில் அடிப்பட்டு இரத்தம் கசிய.. இவன் பிடிவாதமாக மறுத்த போதும் வீட்டிற்குச் சென்று மருந்து வைத்தால் தான் மீண்டும் விளையாட அனுமதி என்று அண்ணன்கள் கூறி விட, வேறு வழி இல்லாது வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தவன் நேர் வழியில் சென்றால் தாமதமாகும் என்று வீட்டின் பின் பக்கமாக குறுக்கு வழியே வந்த கார்த்திக்கின் கண்களில் அந்த மாமரத்தில் தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்த அந்த சிறுவனைக் கண்டான்.

பாய் கட் அடித்து, மஞ்சள் நிறத்தில் பவர் ரேஞ்ஜர் சுவட்டரும், நீல நிற முக்கால் பேண்டும் உடுத்தி தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்தவனைப் பார்த்ததும் அந்த சிறுவனின் தைரியம் கண்டு ஆச்சரியப்பட்டனின் காதில் சங்கி, மங்கி என்று சற்றே மழலையான குரல் கேட்க..

ஓ!! தன் தங்கைகளின் வேலை என்று புரிய சிரிப்பு வந்தது!!!

அவள் எதிர்பார்த்தப்படி பிங் நிற ஷூ தெரியாது… யாரோ ஸ்போட்ஸ் ஷூ அணிந்த பையனின் கால்கள் தென்பட மெல்ல தலையை உயர்த்தி முகத்தைப் பார்க்க முயன்ற நிரல்யாவின் கண்களுக்கு உயரமாக நின்று இருந்தவனின் தலைக்குப் பின்னால் மின்னிய செங்கதிரோனின் வீச்சு, விழிகளைக் கூச செய்ய…

படக்கென்று கண்களை இருக்கி மூடியவளுக்கு பயம் நெஞ்சை அடைக்க மூடிய இமைகளின் வழியே பீறிட்டு கண்ணீர் வெளியேற துடிக்க அவசரமாக அதை வெளியேற விடாமல் அடக்கினாள்.

“இப்படி வௌவால் மாதிரி தலை கீழ் தொங்கினால் ஸ்பைடர்மேனோ இல்லை சூப்பர் மேனோ வந்து காப்பாத்துவாங்க அப்ப நீ அவர்களை நேரா பார்க்கலாம் என்று சங்கி மங்கி கதை கட்டிவிட்டாங்கன்னா அதையும் நம்பி இப்படி தொங்குவாயா? உனக்கு அறிவு இல்லை…?!?” என்று உலகத்திலேயே பத்து சதவிகிதம் மட்டும் இருக்கக் கூடிய ஐ.கியூ உடையவளை அறிவு இருக்கா என்று அதட்டினான் கார்த்திக்.

கார்த்திக்கின் அதட்டலான குரலைக் கேட்ட மாத்திரத்தில் வேறு யாராக இருந்திருந்தாலும், பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்து இருப்பார்கள் ஆனால் அந்த சிறுவனோ கண்களை மூடியப்படி மிக அமைதியாக தொங்க…. சற்றே நெருங்கி சென்று சருகினால் இருந்த தரையில் முழங்காலிட்டு தரையில் அமர்ந்து மேலே தொங்கிக்கொண்டு இருந்த சிறுவனின் முகத்தை நேராக பார்த்தான் பதிமூன்று வயது பாலகன் கார்த்திக்.

கார்த்திக்கின் அருகாமையை உணர்ந்து மெல்ல திறந்தவளின் கண்கள் அவனின் முகத்தில் நிலைக்க… பயத்தில் அலறி அழுது ஊரை கூட்டப்போகிறான் என்று எண்ணியவனை ஆச்சரியப்படுத்தும் விதமாக நெற்றில் அடிப்பட்ட ரத்தம் கசியும் காயத்தைக் கண்கள் விரிய பார்த்து.. தான் வௌவ்வால் மாதிரி மரத்தில் தலை கீழாக தொங்கிக்கொண்டு இருப்பதை மறந்து...

“உங்களுக்கு என்னாச்சு??” என்று சற்றே மழலை குரலில் கேள்வி கேட்டான் அந்த ஸ்பைடர் மேன்.

“முதலில் கேட்டது நான்… ஏன் இப்படி தொங்குகிறாய்? சங்கி மங்கி சொல்லித்தானே?”

“ம்கூம்… கண்ணா மூச்சிக்காக மரத்தில் ஏறி மறைய நினைக்கும் போது…. கால் மாட்டிக்கொண்டது”

விழுந்து மண்டை இரண்டாக பிளக்குமோ என்ற நிலையிலா இவன் தன்னை நெற்றியில் வழிந்த ரத்தக்காயத்தைப் பற்றி விசாரித்தான்?? அந்த குழந்தைதனமாக முகத்தைக் கண்டவன்….

“இடியட்.. இதை ஏன் முன்னாடியே சொல்லவில்லை” என்று திட்டியப்படி வேகமாக எழுந்து மரத்தில் கால் மாட்டி இருக்கும் இடத்தை இரண்டு முறை சுற்றி ஆய்வு செய்துவிட்டு மீண்டும் அவனின் முகத்திற்கு அருகே மண்டியிட்ட கார்த்திக்...

“இரண்டு கிளைகளின் மத்தியில் கால்கள் மாட்டி இருக்கு… உன் காலை கீழிருந்து மேலே தள்ளி எடுக்க முயற்சிக்கிறேன்…” என்று சொன்னவன் பின் ஏதோ யோசித்து விட்டு “நீ இப்படி தொங்கும் போது மேலே தள்ளி எடுக்க முயன்றால் உன் கால் ரொம்ப வலிக்கும்… அப்படியே எடுத்தாலும் கீழே விழுந்து தலை அடிப்படும் அதனால்..” என்று இழுத்தவன்..

“உன்னை மேலே தூங்குகிறேன் நீ.. எம்பி அந்த மர கிளையைக் குரங்கு பிடித்துக்கொள்வது போல் இருக்கமாகப் பிடித்துக்கொள்” என்று கூறியதோடு நில்லாது அவனுக்குப் புரிகிறதா என்று ஒரு முறைக்கு இரண்டு கேட்டு தெளிப்படுத்துக்கொண்டு மெல்ல சிறுவனின் இடுப்பை பற்றியவன், தூக்கி தன் தோளில் அமர்த்தியவன் இரண்டு அடி நடந்து மரத்தின் அருகே சென்றான்.

“ஏய்… உயரம் எட்டவில்லை என்றால்.. கொஞ்சம் எம்பி கீழே இருக்கும் மரத்தில் கிளையை இருக்கமாக கட்டிப் பிடித்துக்கொள் நான் பின்புறம் போய் உன் காலை மேலே எடுக்கிறேன்” என்று சொல்லியவன், சிறுவன் மரத்தை இருக்கிப் பிடித்துக்கொண்டவுடன் பின்னால் ஓடிச் சென்று மாட்டி இருந்த காலைப் பற்றி பாதத்தில் அணிந்து இருந்த ஷூ, சாக்சை அவசரமாகக் கழட்டி எறிந்துவிட்டு சொன்னது போலவே மெல்ல காலை அசைத்து மேலே தள்ளினான்.

பத்து நிமிஷம் போராட்டத்திற்குப் பின் மெல்ல கால்கள் மேலே வர தொடங்க… இனி பிரச்சனை இல்லை என்று உணர்ந்த கார்த்திக் வலுவாக கால்களை மேலே தள்ளிவிட முழுவதுமாக வெளியே வந்தது.

கால்கள் இரண்டும் விடுபட்ட வேகத்தாலும், திடீர் வலியின் தாக்கத்தாலும் மரத்தைப் பிடித்திருந்த கைகள் தானாக துவள… அப்படியே மரத்தில் இருந்து கீழே “பொத்தென்று” மல்லாக்க மண் தரையில் விழுந்தாள் நிரல்யா!!!

கீழே விழுந்த வேகத்தில் தன்னையும் மீறி கண்களின் நீர் குபீரென்று பெருக்கெடுத்து… ஆறாக பெருகி ஓடியது!!

தன் பளுவைத் தாங்க முடியாது கீழே விழுவான் என்பதை சற்றும் எதிர்பாராத கார்த்திக் பதட்டத்துடன்…

“என்னாச்சு???” என்று ஓடி வந்து தூங்க முற்பட்டவன் பின் அந்த எண்ணத்தை கை விட்டு மண் மற்றும் காய்ந்த சருகுகின் மேல் படுத்து கிடந்தவனைப் பார்வையிட்டான்.

கண்களை மூடி அழுகையைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருந்த போதும் அதை மீறி கண்ணீர் கசிய… மெல்ல கண்களைத் திறந்து ஒன்றும் இல்லை என்பது போல் தலையை ஆட்டியப்படி தன்னையும் மீறி கசிந்த விழி நீரை துடைத்த சிறுவனை கண் கொட்டாது பார்த்தான் கார்த்திக்.

முணுக்கென்று சத்தமே வெளியே வராது அழுதுக்கொண்டே நன்றி சொல்லிய சிறுவனை பார்த்தவனுக்குப் பாவமாக இருக்க… தலையில் இருந்த சருகுகை எடுத்து எரிந்தவன்..

“எந்த இடத்தில் ரொம்ப வலிக்கிறது?”

பொங்கி வழிந்த கண்ணீரை துடைத்தவண்ணம் குதிக்காலை காட்டினான்!!!

கை காட்டி இடத்தை சுற்றி ஆழ்ந்த வெட்டு, சிராய்ப்பு, இரத்த கசிவு, வீக்கம் இருந்ததைக் கண்டவுடனே மரக்கிளையில் கால் மாட்டிய இடம் அதுதான்.. அதனால் தான் ரொம்பவே வலிக்கிறது என்று உணர்ந்து சிறுவன் உடுத்திருந்த ஸ்வெட்டரில் மேலே அழகிற்காக வைத்து தைக்கப்பட்டிருந்த பெரிய பவர் ரேஞ்சர் பாக்கெட்டைப் பிடித்து பலமாக இழுக்க… அது அப்படியே கையோடு வந்தது.

அதை எடுத்து காலில் ரத்தம் கசியும் பகுதியில் அழுத்தியப்படி கண்களை ஓடவிட்டவனுக்கு கீழே சருகில் கிடந்த விழுது ஒன்றை எட்டி எடுத்து அந்த துணியோடு இரண்டு சுற்று சுற்றி காலில் கட்டுப்போட்டான்.

தன் கையில் இருந்த தூசியைத் தட்டி விட்டப்படி “எனக்கு தெரிந்த வரை ப்ராச்சர் ஆனா மாதிரி தெரியவில்லை.. இருந்தாலும் இந்த காலோடு உன்னால் நடந்து வீட்டிற்கு வர முடியாது.. அதனால் நீ இங்கே இரு நான் போய் யாரையாவது அழைத்து வருகிறேன்” என்றபடி எழப்போனவனை அவசரமாக அவனின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்த

“என்ன??” என்று கேள்வியுடன் சிறுவனைப் பார்த்தான் கார்த்திக்.

“வேண்டாம்… நான்... நான்.. நானே… உங்களோடு நொண்டியப்படியே நடந்து வந்து விடுவேன்… எனக்கு ஒன்றும் இல்லை” என்று திக்கி திணறும் போதே மிரட்சியுடன் சுற்றியும் முற்றியும் அந்த ஒற்றை அடி பாதையும், அடர்ந்த தோட்டத்தைப் பார்வையிட்ட கண்களின் அப்பட்டமாக பயம் தெரிந்தது.

இத்தனை நேரம் தனியாக மரத்தில் தொங்கிய போது இல்லாத பயம் இப்போ தனியாக இருக்க பயப்படுகிறான் என்பது தெளிவாக…

“அப்ப சரி வா போகலாம்” என்று இசைவாக கூறியப்படி பஞ்சு போல் மெத்தென்று இருந்த அவனின் கைகளைப் பற்றி எழுப்பினான்.

தன் பலத்தைக்கொண்டு நிற்க முயல… மொத்த பாரத்தைத் தாங்கும் சக்தியைக் கால்கள் முற்றிலும் இழந்து இருக்க.. அப்படியே சரிந்து முன்னால் விழுப்போனவனை அணிந்திருந்த ஸ்வட்டரைக் கொத்தாகப் பிடித்து பின்னால் இழுத்து மறுபடியும் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினான் கார்த்திக்.

“ம்ம்… உன்னால் நடக்க முடியும் என்று தோன்றவில்லை… அதனால் வா… உப்பு முட்டை ஏறு... நான் உன்னைத் தூக்கி போகிறேன்” என்று சொன்னவன் மறுத்து பேசும் முன் அவன் முன்னால் தன் முதுகைக் காட்டியப்படி மன்டியிட்டு அமர்ந்தான்.

வாழ்க்கையில் உப்பு முட்டையே ஏறி பழகாத நிரல்யாவிற்கு திருதிருத்து நின்றாள். கால்களை ஊன்றி நிற்க முடியா வலியோடு எங்கே எறவில்லை என்றால் தனியாக விட்டு விட்டு போய் விடுவானோ என்ற பயமே உந்து சக்தியாக திகழ.. எப்படியோ வலித்த காலைப் பொருட்படுத்தாது அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு முதுகில் சாய… அவளைச் சுமந்துக்கொண்டு சற்றே தடுமாற்றத்துடன் எழுந்தான் கார்த்திக்.

“பரவாயில்லை.. சங்கி அளவு நீ கனக்கவில்லை… அதை விட அழவுமில்லை” என்று கூறியப்படி காய்ந்த சருகின் மீது அழுத்தமாக காலை வைத்து மெல்ல நடந்தான் கார்த்திக்.

கார்த்தின் முதுகில் உப்பு மூட்டையாக சென்ற அந்த பயணம், தங்கள் பாதையே மாற்றும் பயணமாக அமைய போகிறது என்று இருவரும் அந்த வயதில் உணராது பேசியப்படி சென்றனர்!!

தொடரும்….

அடுத்த பதிவு - செவ்வாய் கிழமை.

DEAR READERS….

முக்கியமான கதாபாத்திரங்களின் அறிமுகம் முடிந்து... கதை FBயுடன் இனிதே தொடங்கி விட்டது…

கதை எப்படி இருக்கிறது?? நிறை குறை எதுவாக இருந்தாலும் உங்கள் கருத்தை
யாதுமாகி என்னுள் நினைந்தவனே கருத்து திரியில் தெரிவிக்கவும்.
 
Status
Not open for further replies.
Top