அத்தியாயம் 14
அந்தக் காலை நேர அவசரத்தில் கடமை தவறாமல் அவ்வீட்டுப் பணியாட்கள் தங்கள் வேலைகளை செய்து கொண்டிருக்க, கமல்நாத் தன் பூஜை முடிந்ததற்கு அடையாளமாய் பூஜை மணியை அடித்து முடித்தார்.
எப்பொழுதும் போல் அவ்வீட்டு எழுதப்படாச் சட்டத்தைப் பின்பற்றி காலை வேளை உணவுக்கு அனைவரும் வந்து கூடினர்.
காவேரியும் வழக்கம் போல் உணவருந்த அமர்ந்தாள். சமையலாள் எடுத்து வைத்துச் சென்ற உணவு வகைகளை அவரவர் விருப்பம் போல் பரிமாறி உண்ணத் தொடங்கினர்.
உணவு முடிந்த வேளையில் ஈஸ்வர் சரியாக காவேரியைப் பார்த்து கேட்டான். “காவேரி, திரும்பவும் அந்த ஜீவாவைச் சந்திக்கிறியா என்ன?..”
காவேரி மெல்லத் தலை நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அப்படியென்றால் இவன் நேற்று தன்னை நோட்டம் பார்த்து இருக்கிறான்.
மெல்லத் தலையாட்டினாள் ஆமாம் என்பது போல. எதற்கு மறைக்க வேண்டும். முதலில் அதில் மறைக்க என்ன இருக்கிறது?
“வேண்டாம்னு ஒதுங்கிப் போயாச்சு. பின்னே எதுக்குத் திரும்ப ஆரம்பிக்கணும் மா? எதற்கும் ஒரு முடிவு வேண்டும் காவேரி, தொடர்கதை எல்லாவற்றிற்கும் சரிவராது.”
நேரடியான கேள்வி தான். தொடருவது ஏன்? இதற்கான பதில் தன்னிடம் இருக்கிறதா காவேரி யோசிப்பதற்குள்..
“மாமா..”, என ஈஸ்வர் காவேரியின் பதிலுக்குக் காத்திராமல் தன் மாமனிடம் விளக்கம் கேட்டான்.
தங்களது குல தெய்வமாகக் கொண்டாடிய ஒரே மகள் இப்படியொரு சூழ்நிலையை தங்களுக்கு உருவாக்குவாள் என்பதை கமல்நாத் கனவிலும் எண்ணிப் பார்க்கவில்லை. எல்லாமே சரியாகச் சென்று கொண்டிருக்கிறது, தாங்கள் வகுத்து வைத்த திட்டம் முடிவடையும் நேரம் வந்து விட்டது என்று எண்ணியிருக்கும் போது, மீண்டும் தொடருகிறதா?
ஆனாலும், தன் முன்னே வைத்திருக்கும் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டுமே!!
"சொல்லுமா அந்தத் தம்பி திரும்பவும் உன்னை சந்திச்சாரா?..", அவரின் நெற்றிப் புருவம் சுருங்கியது.
"சந்திக்கலன்னா இவள் எப்படி அவன் வீடு வரை போயிருப்பா மாமா.. பதில் சொல்லட்டும்..”
ஈஸ்வரை திரும்பி தீப்பார்வை பார்த்த கமல்நாத்,
"பாப்பா, ஈஸ்வர் சொல்வது உண்மையா? நான் நம்பல. நீ சொல்லு.."
நிமிர்ந்து அமர்ந்தாள் காவேரி. அவளது நேர் பார்வையும், நிமிர்வுமே ஈஸ்வர் சொன்னது உண்மை தான் என்று கூறியது.
"உண்மைதான் பா. ஆனா அவர் என்னைப் பார்க்க வரல. நான் தான் அவங்க வீட்டுக்குப் போனேன். அவங்க அம்மாவை மாலில் சந்தித்தேன். வீட்டுக்கு அழைத்துப் போனார்கள். அவர் தங்கைக்கு மண்டலா ஆர்ட் பற்றி சொல்லச் சொன்னார்கள்பா.."
கமல்நாத்தின் முகம் இறுகியது.
"ஏன் காவேரி உன்னைக் கேக்கறதுக்கு ஆளில்லைன்னு நினைச்சிட்டியா?..", என்று சீறிய அத்தை ஹேமா.
"அண்ணா இதுக்குத் தான் பொம்பளை பிள்ளைங்களுக்கு ரொம்ப இடம் தர வேண்டாம்னு சொன்னேன்.."
"ஏனுங்க அம்மிணி, உங்க அண்ணனுக்கு அது தெரிஞ்சிருந்தா உன்னையெல்லாம் கல்யாணம் கட்டிக்கொடுத்தும் பிறந்த வீட்டோடு வைச்சிருப்பாங்களா?.."
சமயம் தெரியாமல் வாயை விட்டார் சாதுவான ஹேமாவின் புருஷராகப் பட்ட கோபால்.
"உங்களை யாரும் விட்டோடு மாப்பிள்ளையா என்னிக்கும் இங்க இருக்கச் சொல்லல. நீங்க தான் எங்க அண்ணன் கூட பிசினஸ் பண்ணறீங்க? அந்தச் சாக்கிட்டு வசதியா இங்க தங்கிடீங்க. இல்லைன்னாலும் உங்க பட்டிக்காட்டில் என்ன வச்சிருக்கு? மாட்டுச் சாணியும், ஆட்டு புழுக்கையையும் விட்டா?.."
"அந்த மாடு இல்லைன்னா நீ இப்படி கள்ளிச் சொட்டு பாலுல காப்பியைக் கலந்து குடிக்க முடியுமா? மாட்டுச் சாணியும், ஆட்டுப் புழுக்கையும் எப்படி எல்லாம் டன் கணக்குல ஏற்றுமதி ஆகுதுன்னு உனக்கு தெரியுமா? என் தங்கச்சி புருஷன் அதை வித்தே ஊரு மொத்தத்தையும் வளைச்சிப் போட்டு வைச்சிருக்கான். மேகா பால் பண்ணை, மேகா உரக்கடை, மேகா கோழிப்பண்ணை, மேகா ஆட்டு மந்தை, மேகா ஃபிஷ்ஷரீஸ். இப்படி அடுக்கிக்கிட்டுப் போகலாம்..”, என்று மிதப்பாய்ச் சொன்ன கோபால்,
“மறந்து போச்சா ஹேமா?, அந்த மாட்டுப்பண்ணையிலிருந்து வந்த எங்க வீட்டு என் பங்கு பணமும் தான் இன்னிக்கு எல்லா பிசினஸிலும் ஊடுருவியிருக்கு..”
"மொத்தத்துக்கு ஒரே வாடை. தூக்கலா இருக்கு.."
"இருந்துட்டுப் போகட்டும். நாய் வித்த காசு என்னிக்கும் குறைக்காது. என் தங்கச்சி பொண்ணு மணிமேகலைக்கு நம்ம ஈஸ்வரை இப்ப பொண்ணு கேக்குறாங்க. இந்தப் பொண்ணு காவேரி முடிவெடுக்க மாட்டேங்குது. ஈஸ்வருக்கு வயசு 30 தாண்டியாச்சு. இதுக்கு மேல நாம சும்மா நின்னா, அவன் சாமியாராகத் தான் போகணும். ஏற்கனவே காஷாடம் இல்லாச் சாமியார் கணக்காத் தான் இவன் அலைஞ்சிட்டு நிக்குறான். முதல்ல அதைப் பத்தி பேசு. இந்த வாரக் கடைசியில அவங்க இங்க வரதாச் சொல்லி விட்டிருக்காங்க..”
பேச்சு திசை மாறுவதை உணர்ந்தாரோ ஹரிசந்திரநாத், இப்பொழுது தான் முடிவெடுக்க வேண்டிய வேலை வந்துவிட்டதை உணர்ந்தார்.
தங்கள் வாரிசுளுடன் எல்லோரும் அன்பாய் அரவணைப்பாய் இந்த குடும்பம் இப்பொழுது நிறைவாய் இருப்பதில் அவரின் மாப்பிள்ளைகளின் பங்கும் தானே பெரும்பான்மையானது?
குடும்பத் தொழிலை தன் மூன்று மக்களுக்கும் சமமாகவே தான் பிரித்துக் கொடுத்தார். குடும்பத் தொழில், அதைச் சார்ந்த மற்ற பிற தொழில்களை எல்லாம் இரு மாப்பிள்ளைகளும் இந்நாள் வரை தன் மகனுடன் சேர்ந்து சமமாகத் தான் பார்த்து வருகின்றனர்.
மூத்த மருமகன் கோபால் தன் பங்காய் மூதலீட்டைப் போட்டது போல, இரண்டாவது மருமகன் ராஜேஷும் போட்டு இருக்க, இப்பொழுது தேவையில்லாச் சலசலப்பை விரும்பவில்லை அவர்.
தன் மூத்த மாப்பிள்ளையை சமாதானப்படுத்த விழைந்தார். சாதுர்யமானவர் அவர். எங்கே எதைப் போட்டால் விளையும் என்ற பக்குவத்தை நன்கு தெரிந்த சமர்த்தர்.
ஒரு முறை தனது இரண்டாவது மருமகன் ராஜேஷின் சின்னத் தவறால் கோடிக்கணக்கில் நட்டம் வந்த போதும், சாமர்த்தியமாக அதிலிருந்து மீண்டு வந்தவர். அந்த நஷ்டயீட்டை, அவரது பிற தொழில் வருமானம் மூலம் ஈடுகட்டி பிள்ளைகளுக்குள் சண்டை வராமல் பார்த்துக் கொண்டவர்.
இயற்கையாகவே தனக்கு அமைந்துவிட்ட நுண்ணறிவின் திறமையினால் இப்பொழுதும் எல்லாவற்றையும் சீர் செய்யப் பேசத் தொடங்கினார்.
"தப்பில்ல மாப்பிள்ளை. முறைப் பொண்ணு இருந்தாக் கேட்டுட்டு தான் வருவாங்க. வரட்டும், தாராளமாத் தங்கட்டும். மணிமேகலையும் நல்ல அழகான பொண்ணு. அறிவாளியும் கூட. விவசாயம் படிச்சிருக்கு. பண்ணையெல்லாம் கட்டி மேய்க்குது..”
"அப்பா, என்ன சொல்ல வர்றீங்க?.."
"இருப்பா" கையை உயர்த்தி கமல்நாத்தை அமைதிப்படுத்தியவர்,
"என் பேத்தி இன்னும் என்னவெல்லாம் சால்ஜாப்பு சொல்லுவாளோ தெரியாது. கடல் ஆழத்தைக் கூட எதாவது மெஷின் வச்சிக் கண்டுபிடிச்சிடலாம். இந்த பொண்ணுங்க மனசோட ஆழத்தைப் புரிஞ்சிக்க எத்தனை ஜென்மம் எடுத்துப் பொறந்து வந்தாலும் கண்டு பிடிக்க முடியாது..”
“மாமா"
"இரும்மா அமிர்தா, நான் பேசிடறேன்.."
"இதுக்கும் மேல காவேரிக்கு அவகாசம் கொடுக்க முடியாது. வர தையில நம்ம ஈஸ்வருக்கும் காவேரிக்கும் கல்யாணம் செஞ்சிடலாம். மாப்பிள்ளயோட தங்கச்சி பொண்ணு மேகலையும் இங்க வரட்டும். ஈஸ்வர் மட்டும் முறை மாப்பிள்ளை இல்லையே! அடுத்து ஷங்கரும் ரெடியா நிக்கறான். அவனோட அவளைச் சேர்த்து வைக்கலாம். அந்தப் பக்கம் சொந்தமும் விட்டுப்போகாது..”
"தாத்தா. நான். என் மனசு..”
"மாறுவது மனம். இந்த ஒரு வருஷமா உன் மனசு இன்னுமா முடிவெடுக்கல. எப்படியும் இந்த இரண்டு மாசத்துல நீ முடிவெடுக்கப் போறதில்ல. சரியான குழப்பவாதி நீ. சரி விடு. இந்த இரண்டு மாசமும் கூட உன் மனசை ஒருநிலைப் படுத்திக்கிறதுக்குத் தான். ரெடியாகிக்கோ.. இல்லை நாங்கள் முடிவெடுப்போம்.."
“என்னங்க, அந்தப் பொண்ணு மேகலை மனசுல என்ன இருக்கோ? ஒருவேளை அவங்க ஈஸ்வரைத்தான் மணமுடிக்கணும்னு தகராறு பண்ண வந்தா?..”
பாட்டி ரத்னா தன் சந்தேகத்தை முன் வைக்க.
“அதுவும் நல்லது தான் ரத்னா. இதோ நம்ம அருமைப் பேத்தி என் மனசு குழப்பமா இருக்குன்னு ஒரு வருஷமா நம்ம எல்லாரையும் பாடுபடுத்திட்டு இருக்கா. அந்தப் பொண்ணு வந்தா எல்லாத்துக்கும் ஒரு தீர்வு வரலாமே! மேகலை பொண்ணுக்கு ஈஸ்வர் மேல் விருப்பமிருந்தா தெரிஞ்சிடும். இல்லை ஷங்கர்னாலும் சரிதான். இதுல, காவேரியும் அவளைப் பார்த்து ஒரு முடிவெடுப்பா. ஈஸ்வர் தனக்கானவன்னு நினைச்சா, நிச்சயம் அவ விட்டுக் கொடுக்க மாட்டா. வரட்டும் அவங்க. எல்லாத்துக்கும் ஒரு தெளிவு பிறக்கட்டும்..”
அனைவரும் அவர் முடிவுக்கு சம்மதித்து ஒருமித்தமாய் தலையாட்ட, காவேரியோ பதட்டமானாள்.
"அதெப்படி தாத்தா. ஈஸ்வர் தன்னை சாமியார் ரேஞ்சுக்குக் காமிச்சுக்கிறாங்க. என்னையும் வர வர எல்லோரும் காவேரி மாதான்னு கூப்பிடறாங்க. எனக்குக் குழப்பமா இருக்கு. எங்கேயோ இடிக்குது. அப்ப நான் எப்படி இவரை கல்யாணம் பண்ண முடியும்.. கல்யாணம் சரி வருமா?..”
"எங்கேயும் இடிக்கல. எப்பவும் எதுக்காகவாது உனக்குக் குழப்பம் தான். முதல்ல நான் சாமியார் இல்ல. நீயும் சாமியாரிணியில்ல..", ஈஸ்வர் இடையிட்டான்.
"மனசைப் புரிஞ்சிக்க, ரிலாக்ஸ் பண்ண நான் மக்களுக்கு உதவறேன். அவ்வளவு தான். யாரையும் நான் சாமியாரா ஆகுங்கன்னு சொல்ல வரலையே? நம்ம தர்மப்படி ஒரு மனிதன் முழு மனிதனாக மாறுவது வெறும் சன்னியாசம் வாங்குவதால் மட்டும் வருவதில்லை. எதுவுமே படிப்படியாகத் தான் முன்னேறணும். எதுவும் புரியாமல் தான் நம் வாழ்க்கை தொடங்குகிறது. எல்லாம் புரியும் போதோ நம் வாழ்க்கை முடிகிறது..”
குழப்பமாய் அவனைப் பார்த்தாள் காவேரி.
“நான் அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து முடிக்கப் பார்க்கிறேன். இங்க பாரு காவேரி, எனக்கு எப்பவும் பேச்சு ஒண்ணு, செயல் ஒண்ணு இல்ல. இரண்டுமே ஒண்ணுதான். நான் சொல்லறதைத் தான் செய்வேன். செய்வதைத் தான் சொல்லுவேன். இது தான் என் பாலிசி. நீ நினைக்கிற மாதிரி சாமியாரா நான் வாழ ஆசைப்படல. கிரஹஸ்தனா இருக்கத் தான் விரும்பறேன். அதற்காகத்தான் கல்யாணமெல்லாம்.. நம்ம ஆஸ்ரமத்திலேயும் அதைத் தானே எல்லோருக்கும் சொல்லறேன். வாழ்க்கை வாழவே! வாருங்கள், வாழ்ந்து பார்க்கலாம்! இது தான் நம்ம பாலிசி..”
“தாத்தா சொல்லியாச்சு. கல்யாணம் செய்ய நம்ம வசதிக்கு இந்த ரெண்டு மாசமெல்லாம் அவசியமில்லை. ரெண்டு நாள் கூட போதும். ஆனாலும் நீயும் உன் மனசைத் தேத்திட்டு வர அவகாசமா இந்த டைமை எடுத்துக்கோ. நாமும் சந்தோஷமாக் கல்யாணம் பண்ணி, நாம் பெற்ற இன்பம் இந்த வையகத்துக்கும் பின்னர் பரப்புவோம்..”
“அதான் ஈஸ்வர் சொல்லிட்டானே பாப்பா. போய் அடுத்த வேலையைப் பாரும்மா. நீயும் குழம்பி எங்களையும் குழப்பாதே..”
அத்தோடு பேச்சு முடிந்தது போல தன் வேலையை கவனிக்கக் கிளம்பினார் கமல்நாத். அவரைத் தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து அகன்றனர்.
காவேரிக்கோ தன்னுடைய குழப்பம் தங்களது குடும்பத்தில் அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்தியிருப்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தங்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்தும் தான் அங்கே ஜீவா கம்பெனிக்குப் போயிருக்கக் கூடாதோ.
அப்போது கூட, ஜீவாவின் மனமறிந்தவுடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கடுமையாக்கிக் கொண்டிருந்தாள். அவனை மறக்க முயற்சித்து வெற்றியும் கண்டு நிமிர்ந்த போது மீண்டும் அவனைச் சந்தித்ததில் இப்பொழுது சலனம்.
குடும்ப ஒற்றுமையைப் பார்ப்பவர்கள் தங்கள் இருவருக்கும் இடையில் இருந்த வேற்றுமைகளைப் பார்க்கத் தவறினரோ. இனி கவனமாக இருக்க வேண்டும் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.
ஆனால், அடுத்த இரண்டாவது நாளே அவளது கவனத்தை சிதைக்க வந்து நின்றான் அவள் மன ஆட்டத்தின் நாயகன் ஜீவா.
**************