கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

யாரோ யாரோடி!...அத்தியாயம் 26

Latha S

Administrator
Staff member
அத்தியாயம் 26



அந்தக் கல்யாண மண்டபம் களை கட்டிக்கொண்டிருந்தது. வருவோரும், வாழ்த்துவோரும் எனக் கலகலத்துக் கொண்டிருந்தது.



'கெட்டிமேளம், கெட்டிமேளம்' என ஐயரின் குரல் ஓங்கி ஒலிக்க மூன்று முடிச்சைக் கெட்டியாகப் போட்டு தன் பந்தத்தை உறுதி

செய்து கொண்டான் ஜீவானந்தன்.



ஆம், ஜீவானந்தனக்கும், காவேரிக்கும் திருமணம் நடந்து கொண்டிருந்தது.





சபையைக் கண்டு கொள்ளாமல், தாலி கட்டி முடித்த கையோடு காவேரியை அணைத்துக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான் ஜீவானந்தன். முகமெல்லாம் பூரிக்க மீசையை முறுக்கிக் கொண்டு அவளைப் பார்த்து பெருமையாய்ச் சிரித்தான். எதையோ சாதித்து விட்ட பெருமை.



"தாங்க்ஸ் டி பெண்டாட்டி"



அருகில் அமைதியாக முகம் பூரிக்க அமர்ந்திருந்தாள் காவேரி. அவனின் செயலில் முகம் சிவந்தவள் லேசாய்ப் புன்னகைத்தாள்.



"ஈஸ்வர் அத்தானுக்குத்தான் நீங்க நன்றி சொல்லணும்"



"சொல்லிடலாம், நிச்சயம், தன் மக்கு மாமா பொண்ணு முடிவெடுக்கத் தெரியாமல் 'எனக்கு இதுவும் பிடிக்கும் அதுவும் பிடிக்கும்'னு காலத்தை ஓட்டினா, போதும்டா சாமின்னு உங்கள் ஈஸ்வர் சுவாமிகள் முடிவெடுத்து உன்னை எங்கிட்ட பிடிச்சித் தள்ளி விட்டாரு பாரு.. அதுக்கு நிச்சியமா நான் நன்றி சொல்லியே ஆகணும்.. இப்பத் தானே உன் சுவாமிஜிக்கு உண்மையான காதலுக்கு அர்த்தம் புரிஞ்சிருக்கு.."



"கிண்டல் பண்ணாதீங்க ஜீவா. பாவம் மணிமேகலை.. சீக்கிரம் குணமாகி அவங்களுக்கு ஈஸ்வர் அத்தானோடு திருமணம் நடக்கணும் ஜீவா.."



தூரத்தில் நின்று கொண்டு யாரோடு கை குலுக்கிக் கொண்டிருந்த ஈஸ்வரை நன்றியோடு நோக்கினாள் காவேரி.



அவள் பார்வையைத் தொடர்ந்தவனும், தலையசைத்து அவள் கூற்றிற்கு ஆமோதித்தவன்,



"எல்லாம் சரியாகிடும் காவேரி. சிறிது காலமானாலும் அவர் விருப்பப்படி நடக்கும்.. முதல்ல அந்த பொண்ணு மனசுல இவரும் இனி நல்லபடியா இடம் பிடிக்கணும். பட் ஈஸ்வர் லக்கி சாமியார் தான். தனக்குக் கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் அவருக்காக உசிரை விடத் துணிஞ்ச பொண்ணு அந்த மணிமேகலை. அந்த பொண்ணுக்காகவாவது எல்லாம் சரியாகட்டும். நானெல்லாம் எவ்வளவு காலம் காத்திருந்தேன். எல்லாம் சரிதான், ஆனால் காதலுக்காக உயிரை விடுவதெல்லாம் ஈஸி இல்லை.."



"அதுசரி நான் ஜீவா, ஈஸ்வர் அத்தானா? நமக்குக் கல்யாணமாகிடுச்சுமா.. இனிமேல் அத்தானெல்லாம் நான் மட்டும் தான்..", வம்புக்கிழுத்தான் ஜிவாவோ..



"அதெல்லாம் முடியாது, ஈஸ்வர் அத்தான் என்னிக்கும் எனக்கு அத்தான் தான், நீங்க என் ஜீவா தான்.. ஜீவா நீங்களும் கிரேட் தான். உங்க காதலையே என் சந்தோஷத்துக்காகத் தியாகம் செய்ய நினைக்கிறதும் கூட ஈஸி இல்ல..", என்று உதட்டைச் சுளித்த காவேரியைக் கண்டவனுக்கு ஆசை பெருக அவளோடு நெருங்கி அமர்ந்தான்.



"வாழ்த்துகள்", என அதற்குள் மேடையை நோக்கி வாழ்த்துவோர் ஒவ்வொருவராய் படையெடுக்கத் தொடங்க.. அதற்குப் பின் அவர்களுக்குப் பேச நேரமில்லை..



இவ்வாறாய் ஜீவானந்தன் காவேரி கல்யாணம் கோலாகலமாய் இனிதே நிறைவுற்றது.



********



ஜீவானந்தன், காவேரி திருமணம் அன்று தான் முடிந்திருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் வரை ஈஸ்வருக்கும் காவேரிக்கும் திருமணம் முடிவாகி அனைத்தும் பரபரப்பாய் தயாராகிக் கொண்டிருக்கையில், முதலில் தரணியின் நிலைக்குக் காரணமானவனை தண்டித்த ஈஸ்வர் சில முடிவுகளை எடுத்திருந்தான்.



பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டுமே..



அந்தப் பக்கம் ஜீவாவோ காதலி வேண்டும் என்று தவமாய்த் தவமிருந்து காத்திருந்தான், திடீரென்று தன் தங்கைக்கு நடந்த நிகழ்வில் தன் காதலை ஒதுக்கி வைத்து விட்டு, எந்த முடிவெடுக்காமல் 'ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால்', எனத் தடுமாறிக் கொண்டிருந்த தன் காதலி அவள் மனம் போல, அவள் குடும்பத்தவருக்காகவே சந்தோஷமாய் வாழட்டும் எனத் தன் காதலை துறக்க முடிவெடுத்தவன் எல்லாவற்றிலுமிருந்து ஒதுங்கித் தான் நின்றான்.



அவன் ஒரே குறிக்கோள் தன் தங்கை தரணிக்கு எவ்வகையிலாவது நியாயம் கிடைக்க வேண்டும், அவ்வளவே!



அதற்கும் அவன் தந்தை முட்டுக்கட்டையாய்த் தடை விதித்து அவனைத் தள்ளி நிறுத்த..



கடைசியில் ஈஸ்வரை விடாமல் தொடர்ந்ததில் குற்றவாளி அகப்பட்டு, எதிர்பாராமல் தண்டிக்கப்பட்டு இன்று அவனும் தன்னை மறந்து மருத்துவமனையில் காவலில் கிடக்கிறான்.



இனி என்ன என்று அங்கே ஜீவாவின் குடும்பத்தவர் இப்படியாய் ஒதுங்கி இருக்க, காவேரியின் வீட்டில் தான் திடீர் திருப்பம்.



அதற்குப்பிறகு நடந்தது தான் உச்சகட்டம். ஈஸ்வருக்கும் திடமான முடிவுகளை எடுக்க வைத்தது.



திருமணத்துக்காக மணிமேகலை குடும்பத்தவரை அழைத்து விட்டு வந்த காவேரியின் வீட்டவர்களுக்கு அடுத்த நாள் அதிர்ச்சி காத்திருந்தது. ஈஸ்வரின் அத்தை மகள் மணிமேகலை ஈஸ்வருக்குத் திருமணம் என்று அறிந்ததில் தன்னைத் தானே அழித்துக் கொள்ள எதையோ செய்யப் போக, இறுதியில் தன்னை மறந்து மனச் சோர்வுக்கு, டிப்பிரஷனுக்கு ஆளாக நேர்ந்தது.



அதற்கான காரணத்தை தேடத் தேட, ஈஸ்வருக்கான மணிமேகலையின் அளவுக்கதிகமான காதலும், அன்பும் வெளிவர ஈஸ்வருக்குத் தான் அதிர்ச்சி ஆனது. மணிமேகலையின் அன்பை அவனால் எளிதாய் எடுத்துக் கொள்ள முடியவில்லை.



சில நாட்களாகவே காவேரியின் போக்கில் தன் மேலான ஒதுக்கத்தை உணர்ந்து கொண்டவனுக்கு அவள் இத் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டு உள்ளுக்குள் மறுகுவது புரியத்தான் செய்தது.



'அன்பு செய், பிறர் மீது குற்றம் காணாதே' என்று போதிப்பவனுக்கு, மணிமேகலைக்கு இத்திடீர் மனச்சோர்வு நேர்ந்ததில், தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்து போனது.



சட்டென்று முடிவெடுத்து விட்டான். தான் மணிமேகலையை இனி பார்த்துக் கொள்ளப் போவதாய்.. தனக்கானவள் அவள் தான் என..



அன்பு செய்வது ஒரு வகை. அன்புக்குக் கட்டுப்படுத்துவது வேறு வகை.



தன் காதலியின் மகிழ்ச்சிக்காகத் தன் காதலை தியாகம் செய்யத் துணிந்தவன் ஒருவன், தன் குடும்பத்தவருக்காக ‘தனக்கு இருவரையும் பிடிக்கும்? யாரை விடுவது யாரை வருத்துவது’ என்று குழம்பிக் கடைசியில் தன் காதலை விடத் துணிந்தவள் ஒருத்தி..



இவர்கள் இருவரை விட நான் குறைந்தவளில்லை என்பவள் செய்த செயல் தான் அவனின் மாறுதலுக்கும் காரணம்.. தன் அன்புக்காக, தன் காதலுக்காக தன்னைச் சிதைத்துக் கொண்டவள் அவனை பாதித்து விட்டாள்..



இதில் தான் எங்கே நிற்கிறோம்? அவனின் மனம் சரியாய் முடிவெடுத்து விட்டது.



அந்த அன்பை, காதலைத் தான் கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டவன், சட்டென அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் முடிவெடுத்துச் செயல்படுத்தத் தொடங்கினான். போதிப்பவன் தன் போதனையை தனக்காய் முதலில் செயல் படுத்தத் துணிந்தான்.



அவள் குணமடைய தங்கள் ஆசிரமம் தான் சிறந்த இடமென்றும் அவள் சரியானதும் தானே அவளை மணமுடித்து கொள்வதாய் அவளின் பெற்றோர்களுக்கு வாக்களித்தவன் அவர்களைக் குடும்பத்தோடு அழைத்தும் வந்து தங்கள் ஆசிரமத்தில் தங்கவும் வைத்து விட்டே, தன் முடிவை அவ்வீட்டுப் பெரியவர்களுக்குத் தெரிவித்தான்.



ஆனால் தன் மாமன் கமல்நாத்திடம் தன் முடிவைத் தெரிவித்தவனுக்கு, முதல் எதிரியாய் நின்றது அவன் தாய் ஹேமா தான். இருந்தும் தான் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் முடிவில் உறுதியாய் நின்றவன், எப்படியும் தந்தை, அன்னையை சமாதானம் செய்து விடுவார் என்று எண்ணி, ஜீவானந்தன் வீட்டிற்குத் தன் மாமனோடு சென்று நின்றான்.



‘திடீர் ஞானோதயம் பெற்ற ஈஸ்வரை ஜீவானந்தன் நம்பத் தயாராய் இல்லை. அவனை ஒருவழியாய் சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்து, அவனுடைய குடும்பத்தவரை காவேரிக்கும், ஜீவாவுக்குமான திருமணத்திற்கு ஒப்ப வைத்து இதோ திருமணமும் நல்லபடியாக முடிவுற..



இன்று ஜீவானந்தனும், காவேரியும் திருமணம் முடிந்து சந்தோஷமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.



சில சமயங்களில் வில்லனும் ஹீரோவாகி விடுகிறார்கள் என்று காவேரியின் தம்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தான். அன்று ஜீவாவும் இதைத்தான் ஈஸ்வரிடம் கேட்டு வைத்தான், காவேரியை அவன் மணமுடிக்க வேண்டும் என்று ஈஸ்வர் சொன்னதும்..



“வில்லன்கள் ஹீரோ ஆவது தற்போதைய டிரெண்டிங் ஜீவா..”, என்று சிரித்த ஈஸ்வர், “ ஜீவா, அன்புக்கும் காதலுக்கும் ஒரு சிறு கோடு தான். அந்த அன்பால் எதுவும் மாறலாம். அந்த அன்பைத் தான் நான் கண்டு கொண்டேன்..", என்று சிரித்தான்



அன்றைய மாலை வரவேற்பில் ஈஸ்வர் சுவாமிகளின் சொற்பொழிவும் நடந்தது.



"வாழக்கை வாழ்வதற்கே.. அந்த வாழ்க்கை வாழ அன்பு செய்வோம். அன்பைப் பெறுவோம், அன்பை விதைப்போம். அன்பை அறுவடை செய்வோம்.."



இனி எல்லாம் சுகமே!





நிறைவு.



*******


கதையோடு பயணித்த வாசக தோழமைகளுக்கு எங்கள் அன்பும், நன்றியும்..

அடுத்த மாதம் மீண்டும் ஒரு கதையோடு உங்களை சந்திப்போம் என்று வணக்கத்துடன் நிறைவாய் விடைபெறுகிறோம்.

ஸ்ரீலக்ஷ்மி சகோதரிகள்.

 

Mohanapriya M

Well-known member
Wowwwww😍😍😍😍
Eswar hero tan 😎 Kadaisivarai kaveritan own decision 🙄 edukala.. Epudiyo jeevaoda love success agiruchu🤩...

Nice Ending❤️ Rendu perum oruvaliya onnu sernthutanga👩‍❤️‍👨


Waiting For Next Story 💐💐💐
 

Kothaisuresh

Well-known member
ஈஸ்வர் நல்ல முடிவெடுத்தான். இந்த காவேரி கடைசி வரை சுயமா முடிவெடுக்கவில்லை.வேஸ்ட்.
வாழ்த்துகள் ஸ்ரீ சகோதரிகளே💐💐💐💐
 
Top