அத்தியாயம் 5
அடுத்த சில நாட்கள் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பில் கழிந்தது காவேரிக்கு.
அன்றைக்கு சொல்லிவிட்டுப் போய்விட்டானே ஒழிய, தொடர்ந்த இரண்டு மூன்று நாட்கள் அதைப் பற்றி வீட்டிலும், வெளியிலும் பேச்சே எழவில்லை எனலாம்.
ஒரு முறை உணவுக் கூடத்தில் அவள் தாய் அமிர்தா ஏதோ கேட்டபோது கமல்நாத் மனைவியை ஒற்றைப் பார்வையிலேயே அடக்கிவிட்டார்.
அப்படியே ஒரு வாரம் கழியும் முன்னர், அவள் தம்பி அன்றைக்குக் காலையிலேயே அவள் அறைக்கு வந்துவிட்டான். தூங்கி விழித்திருந்தவள், பால்கனியியிலிருந்த கூடை ஊஞ்சலில் அமர்ந்து ஆடியபடி காஃபியை ரசித்துப் பருகியபடி இருந்தவள் அவன் வரவும் திரும்பிப் பார்த்து, "குட் மார்னிங்க்டா குட்டிப் பையா..", எனவும் எப்போதும் போல அவளை முறைத்த ஹரீஷ்,
"மானிங்க் கிழவி..”, என அவளை வாரவும், அவனை முறைத்தாள் அந்தப் பாசக்காரி.
"அக்கா, இன்னிக்கு நாம ரெண்டு பேரும் அத்தான் கம்பனிக்குப் போகணும்..", என்றான்.
“அத்தானா? யாருடா? ஈஸ்வரத்தான் கம்பனி ஆரம்பிச்சுட்டாரா என்ன தனியா? எல்லாம் நம்ம அப்பா ஆபீஸ் தானே போறாங்க, வருணும், தருணும். புதுசா என்னவோ சொல்லற?..", என்றாள் சந்தேகமாய்.
"மறந்துட்டியா, அதான் நம்ம ஜீவாத்தான் ஆபீசுக்குப் போகணும். ரெடியாகிடு. ஷார்ப்பா ஒன்பது மணிக்கு கார் தயாரா நிக்கும் சொல்லிட்டேன். லேட் செய்யாதே..”
“என்னது ஜீவா அத்தானா. டேய் இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன். அவன் ஏதோ பணம் இருக்குன்னு பினாத்திக்கிட்டுத் திரியறான். அப்பா வேற போதாததுக்கு அவன் கிட்டப் போய் ஏதோ ஹெல்ப் செய்னு சொல்லறார். எனக்கென்னவோ இதெல்லாம் சரியாத் தோணலை..”, என்று சொல்லிவிட்டு ஊஞ்சலில் இருந்து எழுந்து பாத்ரூமுக்குச் சென்று மறைந்தாள்.
அதன்பின்னர் நேரம் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது எனலாம். சில மணிநேரங்களில் அவன் அலுவலகத்தில் அவன் முன்னர் ஆலோசனை அறையில் அமர்ந்திருந்தாள்.
“ஹலோ மேடம், என்ன நான் சொல்லறது புரிஞ்சிச்சா? இல்லை சும்மாத் தலையை ஆட்டிகிட்டு இருக்கிங்களா?..”
என்றவன் குரலில் நினைவு கலைந்தவள், “எங்கே ஹரீஷ்?..”, என்றாள்.
“அவனை வேற ஒரு டிபார்ட்மென்டுக்கு அனுப்பி வெகு நேரமாச்சு. உன் எதிரில் தானே போனான்? சோ, அப்போ உன் கருத்தில் எதுவும் பதியலை. அதுதானே? உனக்கு நான் முதலும் கடைசியுமா ஒண்ணு சொல்ல விரும்பறேன். எனக்கு இந்த மாதிரி உதாசீனங்கள் பிடிக்காது. டைம் இஸ் மணி. என்னோட ஒவ்வொரு நிமிஷமும் கணக்கிடப்பட்டுக் கொண்டே இருக்கும். கிட்டத்தட்ட அரைமணிநேரமா நான் சொன்ன எதுவும் உன் மனதிலோ கருத்திலோ பதியலைன்னா.. நான் எப்படி உன்னை நம்பி அவ்வளவு பெரிய தொகையை உன்னோட அந்த தன்னார்வத் தொண்டுக் குழுவுக்குக் கொடுப்பேன்னு நீ நினைத்தாய்? மேலும் இதை விட உன்னை ஒரு விஷயம் பாதிக்கிறது என்றால். அது நிச்சயம் உன் வருங்காலம் சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். வருங்காலம்னா. அந்த ஒண்ணு நானாத்தான் இருக்கும்னு என் எதிர்பார்ப்பு. நீ எப்பவும் என் துணையாய் இருக்கணும்னு என் எதிர்பார்ப்பு. அதே மாதிரி நானும் இருப்பேன்..”, என்றான் நேரடியாய்.
சட்டென்று தன்னுடைய தவறு அவளுக்கு உறைத்து அவளை மேலும் முகம் கன்ற வைத்தது. மனநலம் குறைந்த பிள்ளைகளுக்காக என்று வந்துவிட்டு இப்படி முட்டாள்தனமாய் இருந்தால் எவருக்காக இருந்தாலும் கூட கோபம் வரும் தான்.
“சாரி, ஏதோ நினைவில் விட்டுட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. சொன்னதில் பாதி சரி. நிச்சயம் வருங்காலம் சம்பந்தப்பட்டதுதான். ஆனால் அந்த நபர் நீங்க இல்லை. ஈஸ்வரை நினைத்தேன்..”, என்றாள்.
இப்போது அவன் முகத்தில் லேசாய் ஒரு சுளிப்பு. ஆனாலும் அதை சாமர்த்தியமாய் மறைத்தவன், “அவனுக்கென்ன, வாழ்க்கையில் அவன் செஞ்ச ஒரு நல்ல காரியம் உன்னை என் கண் முன்னே நிறுத்தியது தான். இப்பக் கூட அவன் இங்கே உன்ன அனுப்ப தடை சொல்லியிருக்க மாட்டானே?..”
வியப்புடன் அவனைப் பார்த்தவள், “எப்படிச் சொல்லறீங்க. நிஜமாப் பார்த்த மாதிரி பேசறீங்க?..”
“அவன் வேற மாதிரி யோசிச்சிருந்தாத் தான் விசித்திரம். அவனுக்கு வேண்டியது என் கிட்ட இருக்கு. என்ன விழிக்கிறே?. அதான் காசு, பணம், துட்டு.மணி மணி. இதெல்லாம் இங்கே கொட்டிக் கிடக்கும் போது சும்மா விடுவானா?..”, என்றான் நக்கலாக.
“நீங்க சொல்லறது என்னாலே ஏத்துக்க முடியாது. எங்க கிட்ட இல்லாத பணமா?இல்லை என் அப்பா தான் அவனை அப்படியே விட்டுடுவாரா? எல்லாருக்கும் தொழில்ல ஷேர் இருக்கு..”
“யெஸ் பேபீ. நீ சொன்னாச் சரியாத் தான் இருக்கும். ஆனால் இங்கே? நீ, அவன் நினைப்பதை விடக் கொஞ்சம் அதிகமாவே இருக்கே!. அவனுக்கு எப்படி அது பொறுக்கும்? அதையெல்லாம் கறக்க வேணாமா?..”
“ச்சீ. நீங்க சொல்லறது கேவலமா இருக்கு. மேலும் ஒரு நல்ல காரியத்துக்காகன்னு அத்தான் ஃபண்ட் ரைசிங்க் செய்யறார். நிதி சேமிக்க எவ்வளவு பாடுபடறார் தெரியுமா? எவ்ளோ மோடிவேஷனல் ஸ்பீச். மனகட்டுபாடுகள் பத்தி சொற்பொழிவுகள், மனசை ரிலாக்ஸ் செய்ய வைக்கிற பலவிதமான கோர்ஸ். வாழ்க்கையை அனுபவின்னு வாழ்வியல் முறையை போதிக்கத் தான் ஒரு பெரிய ஆசிரமம் கட்டறார். உங்களுக்கு அதெல்லாம் சீப்பாத் தெரியுதா?..”
கோபமாக பாப்கார்னாய்ப் பொரிந்தவளை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவன்,
“இங்கே பார் முதல் நாளிலேயே நமக்குள் கருத்து வேறுபாடு வேண்டாம். சோ. இப்போதைக்கு இதை ஒத்திப் போடுவோம். எனக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு. இங்கே என் கம்பனியில் சாஃப்ட்வேர் டிவிஷனில், எப்பவும் ஏதாவது பயிற்சி போயிக் கொண்டிருக்கும். நீ அங்கே ஊக்குவிப்பதற்காக, மனக்கட்டுபாடு, ஒருநிலைப்படுத்தல் என்று சொற்பொழிவுக்கு அரேஞ்ச் செய்யலாம். கூடவே. எல்லாருக்கும் இங்கே குடும்பமும் உண்டு. அதற்காக எதாவது ஒரு நிகழ்ச்சி. இந்த மாதிரி வித்தியாசமான மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்வுகள் என்று எதையாவது அரேஞ்ச் செய். அதுக்கு நாங்க ஸ்பான்சர் செய்யறோம். கூடவே உன்னோட தொண்டு நிறுவனத்துக்கும் அந்த பணம் போய் சேரும்.. கொஞ்சம் யோசி..”, என்றான்.
அவனின் அந்த யோசனை அவளுக்கும் பிடித்துப் போகவே, அடுத்து சில மணி நேரங்கள் தனியாக அமர்ந்து என்னவெல்லாம் செய்யலாம் என்று பட்டியலிட்டுக் கொண்டு, ப்ராஜெக்ட் ரிபோர்ட் தயாரிக்கத் தொடங்கினாள்.
மதியம் உணவுக்காக கேன்டீனுக்கு அழைத்துச் சென்றான் ஹரீஷ். அவனுக்குமே முகம் நன்கு மலர்ந்திருந்தது. சந்தோஷமாய் வளவளத்துக் கொண்டிருந்தான்.
“அக்கா ஜீவா சார் சூப்பர். என்ன ஒரு தெளிவான சிந்தனை! ஈஸ்வர் மாதிரி வழவழா கொழகொழா இல்லாமல், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பேசறார். இன்னிக்கு எங்க டிபார்ட்மெண்ட் பக்கம் கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தார். எல்லாம் எப்படி ஜாலியா அவரோட பேசறாங்க தெரியுமா.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு..”, என்று சொல்லிக் கொண்டே போனான்.
கேன்டீன் சாப்பாடும் நன்றாகவே சத்துள்ளதாக இருந்ததால் வழக்கத்தைவிட கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டோமோ என்கிற யோசனையில் இருந்தவள், பக்கவாட்டு நாற்காலி இழுக்கும் ஓசை கேட்கவும், திரும்பாமலேயே தெரிந்துவிட்டது அது யார் என்று.
“என்ன எங்க கேன்டீன் எப்படி? பிடிச்சிருக்கா?..”, என்றவனைப் பார்த்து வாயெல்லாம் புன்னகையாகிச் சிரித்தான் ஹரீஷ்.
“சூப்பர் சார். அக்கா மொத்த பிளேட்டையும் காலி செஞ்சதிலேயே தெரிஞ்சிடுச்சு..”, என்று குதூகலித்தான் ஹரீஷ்.
அவனையே யோசனையாய்ப் பார்த்தவன், “நல்லது ஹரீஷ். இன்னிக்கு ரெண்டுபேரும் ஒண்ணா இங்கே வந்தீங்க. ஆனால் நாளைக்கு இப்படி இருக்க முடியாது. நாளையிலேருந்து நான் வேற ப்ரான்ச் ஆஃபீஸ் போயிடுவேன். உன் அக்காவும் என் கூட வருவா. நீ தனியாத் தான் வரணும்..”, என்று முடித்தான்.
ஒரு கணம் என்ன சொல்லுவதென்று புரியவில்லை காவேரிக்கு. இவன் என்ன இப்படி செய்கிறான் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
“ஏன் சார்” அவள் கேட்குமுன் ஹரீஷ் முந்திக்கொண்டான்.
“அது கார்பரேட் ஆஃபீஸ். அங்கே இன்னமும் நிறைய க்ளையன்ட்ஸ் வருவாங்க. காவேரிக்கும் ஈசியா இருக்கும். நிறைய கான்டாக்ட்ஸ் கிடைக்கும்..”, என்று முடித்துவிட்டான். ஹரீஷும் ஒப்புதலாய் தலையாட்டினான்.
அவன் ஏனோ தன்னைத் தனிமைப்படுத்த விரும்புகிறான் என்று அவளுள் ஒரு பயம் மெல்ல எழுந்தது.
வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவள்,
“சரி சார். நான் போய்க் கொஞ்சம் வேலையைப் பார்க்கிறேன்..”, என்று எழுந்து கொண்டாள்.
ஒன்றும் சொல்லாமல், குழப்பத்தோடு செல்லும் அவளையே விசித்திர முறுவலோடு பார்த்துக்கொண்டிருந்தவன், அவனும், அதற்குப் பின் அங்கிருந்து அகன்றான்.