கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ரவா கேசரி (நாட்டு சர்க்கரை சேர்த்தது)

Rajasree Murali

Moderator
Staff member
IMG-20210831-WA0023.jpg

தேவையான பொருட்கள்:
ரவை 1கப்
நாட்டு சர்க்கரை 2 கப்
நெய் 1/4 கப்
தண்ணீர் 2 கப்
தேவையான அளவு முந்திரி, ஏலக்காய் தூள்.

செய்முறை: வாணலியில் பாதி அளவு நெய் சேர்த்து முந்திரியை சிவக்க வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். அதே வாணலியில் ரவை யை நன்றாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு வாணலியில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பிறகு ரவையை சேர்த்து கிளறி ரவை வெந்த பிறகு நாட்டு சர்க்கரை சேர்த்து மீதமுள்ள நெய் விட்டு நன்கு கிளறி அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து வறுத்த முந்திரியை சேர்த்து 5 நிமிடங்கள் கிளறி பிறகு இறக்கவும். சுவையான நாட்டு சர்க்கரை கேசரி தயார்.
 

Kothaisuresh

Well-known member
அருமை. நான் வியாழக்கிழமை தோறும் பாபாக்கு இதுதான் பண்றேன்.
 
Top