கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

ரோசி கஜன்

siteadmin

Administrator
Staff member
வாசக நட்புகளுக்கு அன்பான வணக்கம்!

இலங்கை யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட நான் கணவர் மூன்று மகன்களோடு நெதர்லாந்தில் வசித்து வருகிறேன்.

நினைவு தெரிந்த நாட்களிலிருந்து வாசிப்புப் பிரியை. அழுத்தமான கதைகள், அவை இலக்கியமாக இருந்தாலும் சரி மிகவும் பிடிக்கும்; ஆழ்ந்து வாசித்துணரும் அந்தக் கணங்களில் அக்கம் பக்கம் மறந்து போவேன். அரச கதைகளின் காதலி, நான். அது மட்டுமன்றி மென் முறுவலோடு வாசிக்கக் கூடிய நாவல்கள், காத்திரமான சிறுகதைகள், உபயோகமான கட்டுரைகள் என்பவையும் என் வாசிப்பில் இருக்கும்.

2014 ல் மிகவும் தற்செயலாக சிறுகதைகள் எழுத ஆரம்பித்ததில் தொடங்கிய எனது எழுத்துப் பயணம் இன்றுவரை நிதானமாகவே தொடர்கின்றது, உங்கள் துணையோடு!

எம் வாழ்வியலை, நான் சந்திந்த, கேட்டுணர்ந்த, சம்பவங்கள், விடயங்களை கற்பனைப் பாத்திரங்கள் மூலம் கதைகளில் உலாவிடுவதில் மிகுந்த ஆர்வம் எனக்குண்டு. எனது கற்பனை கைக்கெட்டிய தூரம் வரை தான். சிறகடித்துத் தொலைதூரம் பறந்திட இதுவரை முயவில்லை. எதிர்காலத்தில் என்னவோ பார்க்கலாம். அதேபோல நான் இரசித்த இடங்கள், ஊர்களையும் என் எழுத்தில் வாசகர்களுக்குக் காட்டுவதிலும் ஆர்வம் அதிகம்.

பத்துக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன். அவற்றில் சிலதுகளை உள்ளடக்கி எழுத்தாளர் நிதனிபிரபுவின் சிறுகதைகளோடு சேர்த்து ‘உதிரிப்பூக்கள்’ என்ற சிறுகதை நூலை இலங்கையில் வெளியிட்டும் உள்ளேன். அவரோடு இணைந்தே, 'செந்தூரம்' என்னும் மின்னிதழை அமேசானில் வெளியிட்டு வருவதுடன் 'senthooramtamilnovels' என்ற தளத்தையும் எங்கள் ஆக்கங்களுக்குரிய முகவரியாக நடத்தி வருகின்றோம். அதுமட்டுமின்றி குறுநாவல்கள், நாவல்கள் என, பத்தொன்பது கதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் ஐந்து கதைகள் ஸ்ரீ பதிப்பகம் மூலம் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து பயணிப்போம்!
 

Sspriya

Well-known member
கிராமத்து காதல் நீங்க எழுதுனது தானே ji. 👌👌👌👏👏👏💞😍
 
Top