நாள் முழுவதும் ஒரு வித சோம்பேறித்தனமாக கழிந்தது. காலை இதையெல்லாம் யோசித்தபடியே புரண்டு கொண்டிருந்த காயத்ரி, காபி குடிக்காமல் இனிமேல் முடியாது என்று எழுந்தவள் டிகாக்ஷன் போட்டு பாலை அடுப்பில் வைத்தாள். அம்மா என்ற குரலை கேட்டு ‘என்னடி இவளவு சீக்கிரம் எழுந்துட்டே? என்றவள் நந்திதாவின் சந்தன நிற நைட் ட்ரஸ் நிறம் மாறியிருக்க, கடவுளே வயது பதிமூன்று தானே ஆகுது. இன்னும் ஒரு வருஷம் கழித்து நிகழ்ந்திருக்க கூடாதா? என்று நினைத்தவள் சட்டென்று அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ‘இங்கே வாடா நந்திதா குட்டி’ என்று பாத்ரூமிற்கு அழைத்துப்போய் எல்லாம் சொல்லிக்கொடுத்து சூடாக பூஸ்டை கலந்து கொடுத்து, நீ போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு பட்டு என்றவாறு காபி கூட குடிக்க தோன்றாமல் சோபாவில் உட்கார்ந்தாள்.
இந்த சமயத்தில் மாமியார் வீட்டில் இல்லாததை நினைத்து ஒன்றும் தெரியவில்லையே என்று யோசித்தபடியே நாத்தனார் கிருத்திகா வீட்டிற்கு போன் செய்தாள். மாமியாரின் குரல் கேட்டவுடன் முதலில் தயங்கியவள் பின்னர், ‘அம்மா நந்திதா பெரியவளாயிட்டா. எனக்கு சடங்கு சம்ப்ரதாயம் ஒன்றும் தெரியலை. என்னை தவறாக நினைக்காமல் இங்கே கிளம்பி வாரீங்களா’ என்று அவள் முடிக்கும் முன், ‘ரொம்ப சந்தோஷம் காயத்ரி, இதோ நான் கிளம்பிட்டேன். கிருத்திகா அத்தையாயிற்றே அவளையும் அழைச்சுண்டு வரேன்’ என்றாள். அதற்குள், இன்னைக்கு முதல் நாள் இல்லையா, துவரம் பருப்பு அரிசி சேர்த்து மஞ்ச பொங்கல், கத்திரிக்காய் கொத்சு, வடாம் பொரிச்சு குழந்தைக்கு போடு. மேற்கொண்டு நான் நேரே வந்து சொல்றேன்.
இதை கேட்டதும் காயத்ரிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. நேத்து தான் கொஞ்சம் மன கஷ்டத்துடன் போன மாமியார் எல்லாவற்றையும் மறந்து தனது சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துகிறார். இது தான் நம் வயதிற்கும் பெரியவங்க வயதிற்கும் உள்ள வித்தியாசமோ? சிறிது நேரம் கழித்து எழுந்து வந்த நந்திதாவிற்கு மாமியார் சொல்லியிருந்த முதல் நாள் அயிட்டங்களை செய்து சாப்பிட வைத்தாள். விஷயத்தை கேட்ட பிரசன்னா ஒரு சின்ன சிரிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்திவிட்டு அம்மாவுக்கு சொல்லிட்டியா என்று கேட்டபடியே லேப் டாப் முன் உட்கார்ந்து விட்டான்.சொன்னபடியே பாக்கியம் தன மகள் கிருத்திகா, இன்னொரு பேத்தி அஷ்மிதாவுடன் வந்து இறங்கியவுடன் வீடே களை காட்டியது. இப்போதுதான் காயத்ரிக்கு அப்பாடா என்று இருந்தது.
(தொடரும்)