வருவான் 11
அர்ஜூன், கீர்த்தியிடம் பூவைக் கொடுத்து "ஐ லவ் யூ" என்றான்.. அவளும் அந்தப் பூவை வாங்கிக்கொண்டு அவனிடம்" ஐ டூ லவ் யூ "என்றாள். கார்த்திக்கின் இதயம் உடைந்து தான் போனது. கண்கள் கலங்க, அடுத்து அவர்கள் பேசுவதை கேட்க, சக்தி இல்லாதவனாய் அவ்விடம் விட்டுச் சென்றான். அவன், அவர்கள் பேசுவதை முழுதாய் கேட்டிருந்தால், இந்நேரம் கதையே மாறிருக்கும், பொறுமையின்றி அவன் செல்ல, விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது.
" ஹேய கீர்த்தி உண்மையாவே என்னை லவ் பண்றீயா? "
" போடா ப்ராடே ! இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு ஃபூல் டேன்னு நல்லாவே தெரியும். நீ என்னை ஏப்ரல் ஃபூல் பண்ண தானே என்னை லவ் பண்றேன்னு சொன்ன? " என்றதும் அசடு வழிந்தான். " ஹிஹி ஹிஹி...... கண்டுபிடிச்சிட்டீயே, அப்ப ஏன் நீ, ஐ டூ லவ் யூ சொன்னடி? "
" நானும் உன்னை ஃபூல் பண்ணத் தான் அப்படிச் சொன்னேன் " தனது ஒற்றைப் புருவத்தை தூக்கிக் காட்டினாள்.
" அடிப்பாவி! நான் உன்னை ஏமாத்த வந்தா.நீ என்னை ஏமாத்திட்டீயே,சரி , எப்படி கண்டுபிடிச்ச நான் சொன்னது பொய்யின்னு? "
" ஹாஹாஹா...... அதுவா, நீ லவ் சொல்லும் போது உன் கண்ணுல காதலே இல்ல. வெறும் ஏமாத்திற எண்ணமும் கேலியும் சிரிப்புதான் இருந்தது. யோசிச்சேன் இன்னைக்கு வேற ஏப்ரல் ஃபூல் வேற, கெஸ் பண்ணது கரேட்டா போச்சு " என்றான் குதுகலத்தோடு
" ராட்சஷி! கெஸ் தான் பண்ணியா? நானா
தான் உளறிடேனா! சரி அப்ப நான் யாருகிட்டயாவது லவ் சொல்லும் போது என் கண்ணுல காதல் தெரியாதா? " எனக் கேட்டான்.
" லூசாடா நீ , ஏமாத்த நினைச்சா உன் கண்ணுல எப்படிடா காதல் தெரியும்? நீ உண்மையாவே லவ் பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிருந்தேனா அப்ப அந்தப் பொண்ணுக்கு உன்னோட காதல் உன் கண்ணுல தெரிந்திருக்கும். ஆமா இதையேன் நீ கேட்கிற? ஒருவேள நீ யாரையாவது லவ் பண்றீயா? " என்றவள் கேட்க, வெட்கம் கொண்டான்.
" நீ என்ன வேணும்னாலும் பண்ணு, தயவு செய்து வெட்கம் மட்டும்படாத பார்க்க சகிக்கல.. " என்றாள் முகத்தை அஷ்டகோணலாக வைத்து. அதைக் கண்டு முறைத்தான்.
" சரி, நீ யாரா லவ் பண்ற? " என்றதும் கொஞ்சம் தயங்கினான்
" அது வந்து..... அது வந்து..... " என்று இழுத்தான்.." டேய் இப்ப நீ சொல்லல, நான் எந்துருச்சு போயிருவேன் " என்றாள்.
" சரி சொல்லுறேன் , நான் உன்னுடைய ப்ரண்டைத் தான் லவ் பண்றேன்" என்றான். தனது தோழியென்றதும் ஆச்சரியம் கொண்டவள், " யாரு சனாவையா ? " என்றாள்." ப்ச்,...... அவ மட்டும் தான் உன் ப்ரண்டா ? "
" ஹேய் நீ சக்தியவா லவ் பண்ற? " என ஆச்சரியமாய் கேட்டவள், உடனே சிரிக்கவும் செய்தாள்.
" ஏன்டி சிரிக்கிற? "
" இல்ல... இல்ல... ஒண்ணுல்ல, அவகிட்ட லவ்வ சொல்லிட்டியா நீ.."
" ப்ச்..... இன்னும் இல்ல, அவ என்னை செயினை அக்க வந்தவன் மாதிரியே பார்க்கிறா , சரி அவகிட்ட பேசிப் பார்க்கலாம் பார்த்தால், என்னைப் பார்த்ததும் பத்தடி தூரத்துக்குத் தள்ளி நிக்கிறா, என்னைய என்ன தான் பண்ண சொல்லுற? "
" நீ ஏன்டா செயினை அக்க வந்தவன் மாதிரி பாக்கிற ? "
" அப்படியா டி என் பார்வை இருக்கு? "
" ஹாஹாஹா..... ஹேய் லூசு, அவ, அப்பா, தம்பி ப்ரண்ட்ஸைத் தவிர மத்த எல்லார்கிட்டையும் அவ அப்படி தான் நடந்துகுவா "
" போடி, நானே அவகிட்ட லவ் சொல்ல முடியாம தவிக்கிறேன்..."
" நீ ஆர்த்தி பிறந்த நாளைக்குத் தானே அவள பார்த்த, அப்ப இருந்துதான் அவள லவ் பண்ண ஆரம்பிச்சியா? " என்றவள் கேட்க,
" இல்லை டி அதுக்கு முன்னாடியே..." என்றவன் இழுத்தான்.
" முன்னாடியேவா, முன்னாடின்னா எப்பத்திலிருந்து?"
" ஒரு வருசமா அவள லவ்,பண்றேன்... "என்றதும் அதிர்ந்தவள், " என்ன சொல்லுற ஒரு வருசமாவா ?
அடப்பாவி என்கிட்ட சொல்லவே இல்ல , ஆர்த்தி கூட நாங்க பழகியே பத்துமாசம் தான் ஆகுது. எப்படிடா ஒரு வருஷம் ஆச்சு கணக்கு இடிக்குதே " என்றாள்.
" அதுவ ஆர்த்தி காலேஜ்ல சேரதுக்கு முன்னாடியே நான் அவள பார்த்துட்டேன். உங்க காலேஜ் பிரின்ஸிபால் எங்க அப்பாவோட ப்ரண்ட், அவரைப் பார்க்க உங்க காலேஜ்க்கு வந்தேன். அப்ப உங்க காலேஜ்ல பங்கசன் நடந்துச்சு, காலேஜ் என்டரன்ஸ்ல யாருமே இல்ல திரும்பி போயி வாட்ச்மேன் கிட்ட, கேட்கனும்ன்னா ரொம்ப தூரம் நடக்கனும் அப்படியே நடந்து போயிட்டே இருந்தேன். யாருமே என் கண்ணல படவே இல்ல, அப்ப தான் அவ மட்டும் தனியா நடந்து வந்தாள். அப்ப அவள பார்க்கும் போது தேவதையே வந்து பட்டுசேலைக் கட்டி நகையெல்லாம் போட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா கேட்கிற மாதிரி இருந்துச்சு பட்டு சேலைல நகையெல்லாம் போட்டு கல்யாணம் பொண்ணு மாதிரி இருந்தா, அப்படியே அவள தூக்கிட்டு போயிராலாமா இருந்துச்சு அவ கிட்ட வரவர என் இதயம் அதிகமா துடிக்க ஆரம்பிச்சு, அவ என்னை கடந்து போனப்ப தொபகடினு என் இதய எகிறி குதுச்சு அவ கிட்ட போயிருச்சு,அவபோயிட்ட, நானும் வந்த வேலைய முடிச்சுட்டு போயிட்டேன் , அதுக்கு அப்புறம் நான் அவள பார்க்கல... அப்புறம் ஆர்த்திய பிக்க பண்ண வரும்போது அவளும் வருவாளானு பாப்பேன்.
இரண்டு வாட்டிதான் பார்த்தேன், அப்புறம் ஆர்த்திமூலமா தான். அவள பத்தி தெரிஞ்சுகிட்டேன், அவ கிட்ட பேச கொஞ்சம் தயக்கமா தான் இருந்துச்சு அப்புறம் உன்கிட்ட நட்பு வச்சுக்கிட்டா. கொஞ்சம், உதவி கிடைக்கும்மேன்னு அன்னைக்கு டெடிபியர் சாப்ல பார்க்க உன்கிட்ட பேசி, அப்பிடியே சக்தியையும் பார்க்கலாம் தான் வந்தேன்.
ஆனால் அன்னைக்கு சண்டை போட வேண்டியதாயிருச்சு, புத்தக கண்காட்சி அப்படிதான்,அவள பார்க்க தான் வந்தேன்.. ஆனால் உங்கிட்ட சண்டை போட்டதுதான் மிச்சம், அதுக்கப்புறம் தான் உனக்கு எல்லாமே தெரியுமே " என்றான்...
" அடபாவி அவள லவ் பண்ண வைக்க தான் என்கிட்ட ப்ரண்டா பழகினீயா போடா... நான் கோபமா போறேன் " போவது போல் நடிப்பைக் காட்டினாள்...
" ஹேய்... ஹேய் இரு கீர்த்தி..,.... " அவள் கை பிடித்து உட்கார வைத்தவன் " கோச்சுகாதடி, முதல் அதான் இன்டன்சனா இருந்துச்சு, உன் கிட்ட பழகினுதுக்கு அப்புறம் தான் உன் ப்ரண்ட் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கனும் தோணுச்சு.. " என்றான்." அது அந்த பயம் இருக்கனும் " என்றாள்.
" அம்மா தாயே எவ்வளவு கோவம் வருது உனக்கு "
" சரிசரி... அவகிட்ட லவ்வ சொல்ல வேண்டியது தானேடா "
" அவள பத்தித் தெரிஞ்சுமா நீ அவகிட்ட லவ்வ சொல்ல சொல்ற, அவ தான் யாரோ ஒருத்தன் அவள லவ் பண்றேன் சொன்னதுக்கு ஒரு வாரம் காய்ச்சல கிடைந்தாளாமே, அவகிட்ட நான் லவ் சொன்னேன் வச்சுகோ அப்புறம் அவ என்னைத் திரும்பி பார்க்கவே மாட்டா, ஒரு வாரம் என்ன ஒருமாசம் காயிச்சல்ல தான் இருப்பா "
" சரி நான் அப்பாகிட்ட, உன்னைப் பத்தி சொல்லுறேன். அவர் என்ன சொல்லுறார் பார்த்திட்டு அதுபடி செய்வோம் " என்றாள்.
" யாரோட அப்பாகிட்ட சொல்ல போற " சந்தேகமாய் கேட்டான்.
" சக்தி, அப்பாகிட்ட தான் அர்ஜூன் " என்றாள்..
" லவ், சொல்லறதுக்கு முன்னாடி அடி வாங்க வச்சிடுவ போல "
" லூசு அவர் ரொம்ப நல்லவர், எங்களுக்கு, அவர் ஒரு நண்பனைப் போலத்தான்.. கார்த்திக் என்கிட்ட அவன் காதலைச் சொன்னப்ப கூட அவர்கிட்ட தான் சொன்னேன்.. அவர் ஒரு நல்ல கையிட் " என்றாள்.
" என்னாது கார்த்திக் உன்கிட்ட லவ் சொன்னானா?என்னடி அதிர்ச்சி மேல அதிர்ச்சியா கொடுக்கிற, எனக்கு தலையே சுத்துடி "
அவன் கேட்க நாக்கைக் கடித்து, தலையில் அடித்துக்கொண்டாள்.
" இருடா எல்லாதையும் சொல்லுறேன் " என்றவள், அனைத்தையும் சொன்னாள்.
" இவ்வளவு நடந்திருக்கு எங்கிட்ட சொல்லவே இல்ல நீ "
" அப்ப நான் அவனை லவ் பண்ணல அதுனால சொல்லல "
" அப்போ இப்போ ? " என்றவன் கேட்க, இந்த முறை வெட்கட்படுவது கீர்த்தியின் முறையாயிற்றே." ஹேய் அவன லவ் பண்றீயா? "
" ஆமா டா "
" எப்ப அவங்கிட்ட லவ் சொல்லபோற? "
" சொல்லனும் டா, என்னோட செம் முடிந்ததும். ராஜ் கல்யாணத்தில அவன்கிட்ட காதல் ஒரு வலி எனக்கு வேணாம் கார்த்திக்குன்ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆனா, அவன் தான் என் மனசு முழுக்க இருக்கான். அதுக்கு அப்புறம் உணர ஆரம்பிச்சேன். பக்கத்துல இருக்கும் போது தெரியாத அருமை தூரமா இருக்கும் போது தான் தெரியும் சொல்லுவாங்க, இப்ப தான் புரியுது. நான், என் காதலைச் சொன்னால், எங்க என்னை கேலிப் பண்ணுவனோன்னு பயம் வேற இருக்கு "
" உன்னை, அப்படி தான் கேலிப் பண்ணனும். லவ் பண்ணா, ஆமா உன்னை தான் லவ் பண்றேன் சொல்லுறீங்களா டி.. நீங்க லவ்வே பண்ணாலும் அத சொல்லாம பின்னாடியே அழைய விடுறது, ஏன்டி இப்படி இருக்கீங்க? " கடுப்பாகக் கூறினான்.
" டேய் திட்டுனா என்னை மட்டும் திட்டுடா. ஏன் எல்லா பெண்களையும் திட்டுற "
" அப்ப உண்மைய சொன்னதும் கோவம் வருது. சரி சரி... சீக்கிரம் அவன் கிட்ட, உன் காதலைச் சொல்லுடி. இல்ல ஏதாவது தப்பா நடந்துற போகுது."
" ஏன்ட வாய் வைக்கிற, அதெல்லாம் நல்லதான் தான் நடக்கும்.." என்றாள்.
" சும்மா சொன்னேன் டி ஆமா அவன்கிட்ட, எப்படி, எப்ப சொல்ல போற? "
" மும்பைல art festival நடக்க போது. அங்க நிறைய ஆர்ட் காலெக்ஷன்ல என்னோட ஆர்ட் இருக்கும்.. அதனால நான் அங்க போகணும். இரண்டுநாள் நடக்கும் என்கூட சக்தியும், ஜீவாவும் வருவாங்க. அப்ப சக்தியை விட்டு, கார்த்திக்கை கூப்பிட வைப்பேன். அங்க மும்பையில் தான் என் காதலைச் சொல்லப் போறேன் " என்றாள்.
" வாவ் சூப்பர் டி, ஆமா அது ஏன் சக்திய விட்டு கூப்பிட, சொல்லுற? "
" அதுவா, நான் அவனைக் கூப்பிட்டா. அவன் கண்டுபிடிச்சிடுவான். அதான் சப்ரைஸ்ஸா இருக்கட்டுமேன்னு தான் சக்தியை விட்டு கூப்பிட சொல்லுறேன். "
" அப்ப நானும் வரேன்டி. அங்க வச்சு நானும் என் காதலைச் சொல்லுறேன் "
" சூப்பர் ஐடியா.. ஒ.கே. நம்ம இரண்டு பெரும் அவங்க கிட்ட நம்ம காதல சொல்லுறோம். எனக்கு லேட் ஆயிருச்சு நான் கிளம்புறேன் பாய் அர்ஜூன்."
" பாய்... கீர்த்தி " என்றவன், தன் பாரத்தை இறக்கிவைத்ததில் சந்தோசமாக இருந்தான். ஆனால் கார்த்திக்கோ, தன் இதயத்தில் ஏறின பாரத்தின் வலியில் துடித்தான்.
கார்த்திக், நேராக தனது தோழர்களைப் பார்க்கச் சென்றான். அவர்கள் அங்கே மது அருந்திக் கொண்டிருந்தனர். வலியால் துடித்தவன், வந்த வேகத்தில் முழுவதையும் குடித்து முடித்தான். அவன் செயலைக் கண்டவர்கள், ஏதோ தவறாக நடந்திருக்கிறது என யூகித்தனர்.
" டேய் மச்சி, என்னடா ஆச்சு ஏன் ஒருமாதிரி இருக்க? " என ப்ரதிப் கேட்க," மச்சி நான் வாழ்கையில தோத்துடேன் டா, அது மட்டுமில்ல லவ்லையும் தோத்துடேன்டா, இனி எனக்கு வாழ்கையே இல்லடா... " என்று கண்கலங்கிப் புலம்பினாள்.
" என்னடா, சொல்லுறான் இவன், எனக்கு ஒண்ணுமே புரியல? " என்றான் கணேஷ்.
கார்த்திக் கேட்டத்தை அவர்களிடம் கூற, மற்ற இருவரும் அதே நிலமையில்தான் இருந்தனர்.
வருவான்...,,