வருவான் 13
கார்த்திக் கீர்த்தியிடம் எதுவும் கேட்காது தான் கேட்டதை வைத்து மட்டுமே அமெரிக்க செல்ல முடிவெடுத்தவன் யாரிடமும் கூறாது அங்கே சென்று விட்டான்... இதையறியாத கீர்த்தி.. மும்பை ஆர்ட் பெஸ்டிவளுக்கு அவனை எப்படி சக்தி மூலம் அழைக்க என்று யோசனையிலே இருந்தாள்.... முதல் வருட செம்மஸ்டர் முடிந்த நிலையில், சக்தியுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தாள்.. 'எப்படி சக்தியை விட்டு கார்த்திக்கை அழைக்க வைப்பதென்று யோசனையில் வந்தாள்.." ஹேய் கீர்த்திஎன்னடி அமைதியா வர, என்ன யோசிக்கிற? "
" பர்ஸ்ட் இயர் முடிச்சாச்சு.. செக்கெண்ட் இயர் இருந்து நெட் எக்ஜாம்க்கு எப்படி ப்ரிப்பேர் பண்ணலாமுன்னு யோசிக்கிறேன்டி...."
" எல்லாரும் எக்ஜாம், முடிஞ்சு லீவ் விட்டா, லீவ எப்படியேல்லாம் என்ஜாய் பண்ணலாமுன்னு யோசிப்பாங்க, ஆனால் நீ எத பத்தி யோசிக்கிற எருமை, இன்னும் Msc முடிக்கல அதுக்குல நெட் எக்ஜாம் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுட்ட, உன்னெல்லாம் என்ன பண்றது, கொய்யால இன்னொரு வாட்டி எக்ஜாம் பத்தி பேசுன கொன்னுடுவேன்.. "
" சரி விடுடி எக்ஜாம் பத்தி பேசல போதுமா, எப்படி லீவ என்ஜாய் பண்ணலாம்ன்னு சொல்லு "
" நாம தான் மும்பை போறோமே அங்கபோய் என்ஜாய் பண்ணலாம் கீர்த்தி "
" லூசா நீ, அங்க மேக்சிமம் மூணுநாள் தான்... அதுக்குமேல அப்பா பெர்மிசன் கொடுக்கல, அதுமட்டுமில்ல சனா. வரல நம்ம மூணுபேரு தான் போறோம் சனா இல்லாம நம்ம மட்டும் எப்படி என்ஜாய் பண்றது? அது நல்லா இருக்காது, ஆமா அவ ஏன் லீவு விட்ட பாட்டி வீட்டுக்கு போறா? ஏதாவது அங்க லவ் செட் ஆயிருச்சோ, நம்மகிட்ட அத மறைக்கிறாளோ "
" அவ என்ன உன்னை மாதிரி நினைச்சியா? லவ்
பண்ணி அதை மறைச்சு, ப்ர்ண்ட்ஸ் கிட்ட, சொல்லாம இருக்க.... அப்புறம் அவ லவ் பண்ணஎன்ன ? அவ என்ன உன்னை மாதிரி சாமியாராலவ் பண்ணாம இருக்க? "
" என்னடி உலற. என்னைச் சாமியாருன்ற லவ்வ மறைகிறேன்ற ஒண்ணும் புரியலடி " என்றவளை முறைத்தவள், நீ கார்த்திக் லவ் பண்றேல?"
' இவகிட்ட சொன்னோம், இந்த ஒட்டவாய், கார்த்திக் கிட்ட சொல்லிடுவா. அப்புறம் நம்ம பிளான் சுவாக தான்... ஜாக்கிறதை கீர்த்தி...' என்றவள்.. அவளிடம் இல்லையே என்று மறுத்தாள்...
"அப்ப நீ அவன லவ் பண்ணல..."
" இல்லை, நான் லவ் பண்ணல, " என்றாள்.."அப்ப நீ சாமியாருதான் டி..."
" கொஞ்சம் புரியிற மாதிரி பேசுடி "
" கீர்த்தி, நீ கார்த்திக்கை லவ் பண்ணி, எங்கிட்ட மறைக்கிறன்னு நினைச்சுதான் உன்கிட்ட கார்த்திக்கை, லவ் பண்றியான்னு கேட்டேன் நீ இல்லைன்னு சொல்லிட்ட, அப்ப நீ சாமியார் தான் "
" ஓ... லவ் பண்ணலைன்னா நான் சாமியாரா ?"
" இதுல என்ன சந்தேகம் நீ சாமியாரு தான் , ஏன்னா நீ யாரையும் லவ் பண்ணமாட்ட, உன்னை ஒருத்தன் சுத்தாம சுத்தி வந்தானே அவனோட லவ்வையும் ஏத்துக்கமாட்ட, இப்படி பண்ற உன்னை சாமியாருன்னு சொல்லாம ஜூலியட்ன்னா சொல்லுவாங்க "
" ஐயடா.... நான் சாமியாரு தான்... அப்ப மேடம்
நீங்க லவ்ல மூழ்கி முத்து எடுத்துட்டீங்க இல்ல, ஏன்டி யாராவது உங்கிட்ட லவ்வ சொல்ல வந்தாலே, உனக்கு காய்ச்சலே வந்துரும், எவனாவது ஒருத்தன் பேச வந்தாலே, அவன் என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலே தெறிச்சு ஒடுற ஆள் நீ, நீ என்ன சொல்லுறீய,12th படிக்கபோது உனக்கு ஒருத்தன் ப்ரோபோஸ்
பண்ண வந்தானே, நீ கூட ஒரு வாரம் காயிச்சல்ல இருந்தியே ஞாபகம் இருக்கா மேடம் "
" ஏன்டி தெரியாமா ஒருத்தன் எனக்கு ப்ரோபோஸ் பண்ணிட்டான் எனக்கு காயிச்சல் வந்துருச்சு நான் என்ன பண்ணுவேன்? அப்ப, நான் சின்ன பொண்ணு மெச்சூர்டி இல்ல.... அதுனால பயந்து காய்ச்சல் வந்துருச்சு அதையே எத்தனை வாட்டி சொல்லி காட்டிவீங்க, இப்ப சொல்றேன் கேட்டுக்கோ இப்ப யாராவது வந்து எனக்கு ப்ரோபோஸ் பண்ணா, அவன எனக்குப் பிடிச்சுருந்தால் உன்னை மாதிரி அவன சுத்த விடாம அவன் ஏத்துகிட்டு அவனையே கல்யாணம் பண்ணிப்பேன் "
" ஓ....... மேடம்க்கு மெச்சூர்டி வந்திருச்சு, லவ் பண்ண தயாராயிட்டீங்க போல , ஐய்யோ இந்த நேரம் பார்த்து யாரும் ப்ரோபோஸ் பண்ண வர மாட்டிகிறாங்களே "
" ஹேய் என்ன கிண்டலா? நான் உண்மையைத் தான் சொல்லுறேன்"
" நம்பிட்டேன் சக்தி..." என்றவளை முறைத்தாள்...
" ஹேய் நம்ம கூட மும்பைக்கு அர்ஜூனும் வரான்... " என்றவள் ஓரக்கண்ணால் அவளை நோட்டம் விட்டாள், அவள் முகமோ பல உணர்வுகளைக் காட்டியது.
" ஹேய் நவரசமும் உன் முகத்துல ஒழுகுதே என்னாச்சு ஏன் இப்படி ரியாக்ட் பண்ற? "
" ஆமா அவன் ஏன் நம்ம கூட வரணும்? "
" அவனுக்கு என் ஓவியத்தைப் பார்க்கணுமா அதுனால என்கூட வரேன் சொன்னான் "
" அவன் வந்த அவனுக்கும் ப்ளைட் டிக்கெட் புக் பண்ணனும். காசு நிறைய செலவாகுமே "
" அதேல்லாம் ஒண்ணுமில்ல, அவன் எப்பையே புக் பண்ணிட்டான். அந்தப் பணத்தை, என்னோட சாலரியிலயிருத்து எடுத்துக்கோன்னு சொல்லிட்டேன் "
" அப்போ அவன் வந்தா நான் கார்த்திக்கை, கூப்பிடுவேன் ஓ.கே வா உனக்கு? "
" கீர்த்தியும் சிரித்துகொண்டே.. " ம்ம்... கூப்பிட்டுக்கோ யாருவேணா சொன்னா. ஆனா, அது உன்னுடைய செலவுல ஓ.கே வா ?"
" ஓ.கே டன் " அடுத்து வந்த நாட்கள்... மூவரும் மும்பை செல்லத் தயாராகினர். ஆயினும், கார்த்திக்கை அழைத்த சக்திக்கோ ஏமாற்றமே அவனது போன் ஸ்விட்சாப் என்றே வந்தது.. அந்த ஒருவாரமும் அவனது போன் அவ்வாறே இருக்க, கீர்த்திக்கு தான் கலக்கம் வந்தது....
அன்றைய நாளும் வர கடைசி வர கார்த்திகை அழைக்க முடியாமல் போனதும். அவளது ப்ளான் சொதப்பியதை நினைத்து சோகமாக இருந்தாள்..,
" குட்டிமா ஏன் சோகமா இருக்க? "
" ஒண்ணும் இல்ல அப்பா "
" சக்தி நீ கார்த்திய கூப்பிடுறேன்னு சொன்ன அவன் வரலையா? " கீர்த்தியைப் பார்த்தவாறே கேட்டார்...
" அவன் போன் ஸ்ட்விச் ஆப்ன்னு வரதுப்பா. ஒரு வாரமா டரைப் பண்றே எடுக்கவே இல்ல "
கீர்த்தியின் முகம் வாடி போனது... ' எங்கடா இருக்க ஏன்டா போனை எடுக்க மாட்டிகிற? நான் உன்னை பார்க்கணும் , உங்கிட்ட என் காதலை சொல்லணும், எப்படா நான் உன்னைப் பார்ப்பேன்? எப்ப நீ எங்கிட்ட வருவ ? ' மனதில் இருக்கும் அவனோடு பேசிக்கொண்டாள்..
" கீர்த்தி மா அர்ஜூன் எப்ப வருவான் ?"
அவள் நினைவைக் கலைத்தார்.." அப்பா என்னப்பா என்ன கேட்டீங்க?"
" கீர்த்திமா எங்க இருக்க நீ? அர்ஜூன் எப்ப வருவான் கேட்டேன்? "
" அவன் ஏர்போர்ட்டுக்கே வந்துறேன் சொன்னாப்பா "
" பார்த்துபத்தரமா போயிட்டுவாங்க தைரிமா இருங்க மொழி தெரியாத ஊருன்னு பயப்படாதிங்க. எதையும் பேஸ் பண்ணனும் நல்ல சுத்திப் பாருங்க பட் மூணு நாள் தான் அதுக்குமேல நோ ஒ.கே வா " என்றார்.
" நல்ல சுத்திப் பார்க்கணுமா, ஆனால் மூணு நாள் தான் தருவாராம் festival இரண்டு நாள், மீதி இருக்க ஒரு நாள், அவ்வளவு பெரியசிட்டி எப்படி சுத்தி பார்க்கிறதாம்? ஆர்மி அபிசர் கடுப்பேத்துறார் மை லாடு"சக்தி கீர்த்தியின் காதைக் கடித்தாள்.
" ஏய் அங்க என்ன மூணுமூணுன்னு பேசறீங்க?"
" இல்லப்பா, கீர்த்திய நான் நல்லா பார்த்துப்பேன்னு சொன்னேப்பா "
" நீ அவள பார்த்துக்கப் போறீயா. கீர்த்திம்மா எந்தப் பையனையும் இவகிட்ட பேச விட்டுறாதமா. காய்ச்சல் வந்திட போது. அப்புறம் நீ, தான் சக்தி பாத்துக்குறமாதிரி ஆயிரும் " என்றதும் சக்தி முறைத்தாள்... மூவரும் அவர்களிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள். அர்ஜூன் அவர்களுக்காக காத்திருந்தான். மூவரும் ஏர்போட்டிற்கு வந்தனர்...
" ஹாய் அர்ஜூன் - "
" ஹாய் ஜீவா " என அர்ஜூன் வந்தான்.
அங்கே ப்ராமலிட்டிஸ் முடிந்து ப்ளைட்டில் அனைவரும் ஏறினர். கீர்த்தியும் ஜீவாவும் அமர்ந்து கொள்ள அர்ஜூனின் அருகில் இடம் காலியாக இருந்தது, சக்தி மூவரையும் பார்த்தவாறே நின்றாள்..
" கீர்த்தி நீ வந்து இங்க உட்காரு " என்றதும் அர்ஜூன் கீர்த்தியைக் கண்டு வேண்டாம் என்று தலையாட்டினான்.
" நான் வரலப்பா... " என்றவள் ஜீவாவின் கையைப் பிடித்து அவனைப் போகவிடாமல் தடுத்தாள்..
" ஜீவா நீயாவது இங்க வந்து உட்காறேன்.."என்று கெஞ்சினாள்.
" என்னோட சீட் இதான் சக்தி, நான் இங்க தான் உட்காருவேன் "
இருவரையும் பார்த்து முறைத்துவிட்டு அவன் பக்கத்துல ஜன்னல் அருகே உட்கார்ந்தாள்... கீர்த்தியும் அர்ஜூனும் இருவரும் சிரித்துகொண்டனர்... ப்ளைட் கிளம்ப, முதல் முறை என்பதால் மூவரும் பயந்தனர்.. கீர்த்தியும் ஜீவாவும் கையைக் கெட்டியாக பிடித்துகொண்டனர்... சக்தியும் பயத்தில் அர்ஜூனின் கையை பற்றிகொண்டுக் கண்களை மூடிக்கொண்டாள்.அதனை அவனோ ரசிக்கலானான். அவனும் அவளைக் கெட்டியாகப் பிடித்துகொண்டான்.
" என்ன சக்தி பயம் இன்னும் போலையா ? "
" பயமா எனக்கா இல்லையே. "
" அப்படியா. அப்ப ஏன் இன்னும் என் கையவே பிடிச்சுருக்க ? " அவன் கேட்க, அவள்து கையைக் கண்டு அவனிடமிருந்து கையெடுத்தவள், சாரி என்றாள்.
" பரவாயில்ல, பர்ஸ்டைமா சக்தி..." அவள் " ஆம் " என தலையாட்டினாள்..
" நானும் பர்ஸ்டைம் இப்படி தான் பயந்தேன் எங்க அம்மாவா கட்டிபிடுச்சுக்கிட்டேன் " என்றான். இருவரும் சிறுவயதில் நடந்ததைப் பற்றி பேசிக்கொண்டே வந்தனர்.. சக்தி, அவனுடன் சகஜமாகப் பேசவதைக் கண்டவனுக்கு ஆச்சரியம்.. நால்வரும் மும்பை வந்து சேர்ந்தனர்.. அர்ஜூனின் வீட்டில் தான் தங்கினார்கள்.
" ஈவ்னிங் தானே art festival நம்ம எங்கயாவது வெளிய போலாமா" சக்தி.
" நான் உங்களை முக்கியமான ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போறேன் அந்த இடம் ரொம்ப நல்லாருக்கும் "
" எங்க அர்ஜூன் ? "
" அங்க போகும்போது உங்களுக்கே தெரியும் "
அர்ஜூன் காரை நிறுத்த, அது குழந்தைகள் காப்பகமாக இருந்தது. உள்ளே அர்ஜூன் செல்ல, குழந்தைகள் அவனை வளைத்தது.
" அர்ஜூன் இவங்களுக்கு எப்படி உன்னை தெரியும் ?"
" அதுவ நாங்க மும்பையில இருக்கும்போது, அம்மா, ஆர்த்தி நான் மூணு பேரும் ஒவ்வொரு சண்டேவும் இங்க வந்துருவோம். எங்க பிறந்தநாளை இங்க வந்து தான் செலபிரேட் பண்ணுவோம்.. ஆர்த்தி ப்ரத்டேக்கு நான் மட்டும் வந்து கொஞ்சம் கிப்ட்ஸ் கொடுத்து இவங்ககூட இருந்துட்டுத் தான் போனேன்... இவங்க எல்லாத்துக்கும் என்னைய நல்லா தெரியும், நாம கொஞ்சம் நேரம் இங்க இருந்திட்டு போலாம்.."
" எனக்கும் சக்திக்கும் இப்படி காப்பகத்துக்கு வந்து ஏதாவது செய்யணும் ஆசை, எங்களால ஏதாவது செய்ய முடியலேனாலும் இவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணனும் தோணும் என்ன சக்தி? "
" ஆமா கீர்த்தி, அர்ஜூன் உங்களைப் பார்த்தா பொறாமையா இருக்க எவ்வளவு குழந்தைகள் உங்க மேல பாசமா இருக்காங்க. இவங்களுக்கு நீங்க, எவ்வளவு செய்றீங்க. எவ்வளவு பெரிய விசயம் இது, பொதுவா பணக்காரன் சிலர் அவங்க ப்ர்த்டேவ அவங்க ப்ரண்ட்ஸ் பார்ட்டின்னு செலபிரேட் பண்ணுவாங்க ஆனா, நீங்க கிரேட் அர்ஜூன்... " என்றாள்
வெறும் சிரிப்பை மட்டுமே தந்தான்.
அர்ஜூன், அங்கிருக்கும் குழந்தைக்காக ஸ்வீட்ஸ்ஸூம், பொம்மைகளையும் கொண்டு வந்துக் கொடுத்தான்... அந்தக் குழந்தைகளுக்கு நாலுவரும் கொடுக்க ஆரம்பித்தனர்... அங்கே அந்தக் காப்பகத்தில் இன்னொருவர் டோனேசன் கொடுக்கவும் வந்திருந்தார்... அந்தக் காப்பகத்தின் நிர்வாகி அவரை அழைத்துக் கொண்டு சுத்திக்காமித்தார்... அப்பொழுதுதான் அவர் கீர்த்தியைக் கண்டார்... ஒரு குழந்தை அவள் தந்த பொம்மை வாங்கி கீழே போட்டது.... திரும்ப அவள் எடுத்து கொடுக்க மீண்டும் அவ்வாறே விளையாட, கீர்த்தியும் முகம் சலிப்பின்றி அவளும் எடுத்துக்கொடுத்தாள்.. அதைப் பார்த்தவர் அவள் அருகில் வந்தார்.
" நீங்க தமிழா ம்மா... "
" ஆமா அங்கிள்....."
" அந்தக் குழந்தை தான் உங்கிட்ட விளையாடுதேம்மா, அடுத்த குழந்தைக்குக் கொடுக்க வேண்டியது தானே"
" சார் நீங்களே சொல்லிட்டிங்க அந்தக் குழந்தை விளையாட்டுதுன்னு, அப்ப நானும் அந்தக் குழந்தை கிட்ட விளையாட தானே செய்யணும்... நான் அந்தக் குழந்தை அவாய்ட் பண்ணா, அது மனசு கஷ்டபடும் அதான் நானும் விளையாடினேன் "
" இருந்தாலும் அந்தக் குழந்தை உன்னை ரொம்ப கஷ்ட படுத்திருச்சே மா "
" சார் அந்த குழந்தைக்கு இது விளையாட்டுன்னு தெரிஞ்சு தான் என்கூட விளையாடுது... அதுக்கு தெரியாது , நான் இதுல கஷ்டப்படுவேன்னு. அதுனால நானும் அதை என் கஷ்டமா நினைக்கல, அது மட்டுமில்ல அந்தக் குழந்தை அப்படி விளையாடும் போது எவ்வளவு சந்தோஷ்படுது. அந்தச் சந்தோசத்துக்காகவே அதுக்கூட இன்னும் விளையாடலாம் "
" நல்லபொண்ணுமா நீ " என்றவர் அங்கிருந்து கிளம்பினார். அவர்களும் அங்கிருந்து கிளம்பினார்கள்.
மாலையாகிட, நால்வரும் அந்த ஆர்ட் ஃபேஸ்டீவலுக்குச் செல்லத் தயாராகினர் ஜிவாவும் அர்ஜூனும் தயாராகி இருவருக்காக காத்திருந்தனர். கீர்த்தியும் சக்தியும் மேக்ஸி அணிந்து அழகாய் வர, அர்ஜூனின் நிலமைதான் பாவம் .அவனை இழுத்து கிளம்புவதற்குள் போதுமென்றானது கீர்த்திக்கு.
அனைவரும் அங்கிருகக்கும் ஓவியத்தைப் பார்க்கவும் வாங்கவுமாக இருந்தனர். இந்த ஆர்ட் பெஸ்டீவல், ஒரு அனாதை குழந்தைகளுக்காக நடத்தப்படுகிற விழா, அனேக ஓவியர்கள், தங்களின் திறமையை வெளிபடுத்திருந்தனர்
கீர்த்தி, இயற்கையின் அழகையும் அழிக்க நினைக்கிற மனிதனின் எண்ணத்தையும் வெளிப்படுத்துவது போல ஓவியமாக வரைந்து இருந்தாள்.கீர்த்தி, தன்னுடைய ஓவியத்தைத் தேட, அந்த ஓவியம் அங்கு இல்லை... அங்கிருந்த மேனேரிடம் விசாரிக்க, அவரோ அங்கிருக்கும் அறையை கைக்காட்டினார். அதில் வாங்கிய ஓவியங்களோடு அவளுடைய ஓவியமும் இருந்தது. அவளுடைய ஓவியத்தை யாரோ ஒருவர் வாங்கிருக்க. நால்வரும் யார் வாங்கியது என யோசித்த படியே நின்றிருந்தனர்.
வருவான்...