கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 19

Chithu

Moderator
Staff member
வருவான் 19

ரகுநாத், கார்த்திக்கிற்கு தெரியாமல், நிச்சதார்த்த ஏற்பாடுகளை ஆரம்பித்திருந்தார்... அவர் கார்த்திக்கை வரவழைக்க, தனது மேனேஜர் மூலமாக ஆரம்பித்தார் தன் நாடகத்தை... மேனேஜரிடம் தனக்கு ஹார்ட் அட்டாக், உடல் சுகமில்லை, மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக அந்த டாக்டரை வைத்தும் சொல்லச் சொன்னார்...
அதன்படி அவனும் சொல்ல, தந்தைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை என்று எண்ணியவன் வர்றேன் என்று கூறினான்..

அவர்களின் திட்டத்தை போலவே நித்தசயதார்த்தன்று வந்தான்.. முதலில் விமானம் தாமதமானது. அதன் பின் வந்து இருக்கினான்.

அவனை அழைத்துசப்பி செல்ல அவனுக்காகக் காத்திருந்தான் ப்ரதீப்.., ப்ரதீப்பிற்கு இந்தத் திட்டம் தெரியும் என்பதால் அவனிடம் உண்மை கூறாது தனது நடிப்பைத் தொடர்ந்தான்.. ப்ரதீப்பை கண்டதும் அவனை நோக்கி கார்த்திக் வந்துதான். அவன் மேல் கோபம் இருந்தாலும் வேறுவழியின்றி அமைதியாக நின்றான்..

" ப்ரதீப் அப்பாக்கு இப்ப எப்படிடா இருக்கு?"

" ரொம்ப சீரியஸ்ஸா தான்டா இருக்கார் ( தன் பங்கு அக்டிங் போட) வா நம்ம போயிகிட்டே பேசலாம் " என இருவரும் ஏர்போர்டிலருந்து வெளிய வர,

அங்கு வந்த ஒருத்தர் கார்த்திக்கை அழைத்தார். இருவரும் திரும்பிப் பார்க்க தனது நண்பன் ஒருவனின் தந்தை தான். அங்க அவரைக் கண்டதும் பேச சென்றனர்.

" ஹாய் கார்த்திக், உனக்கு இன்னைக்கு நிச்சயதார்தம்ல, நீ இங்க என்ன பண்ற? ஒ... இப்ப தான் அமெரிக்கால இருந்து வர்றீயா. சன்தீப்கூட உன்னுடைய நிச்சியதார்ததுக்கு போயிருக்கான். எனிவேஸ் காங்கராட்ஸ் கார்த்திக் " என்றார்.

அவர் கூறவதைக் கேட்டு அதிர்ந்தவன் ப்ரதீப்பைக் காண தலைகுனிந்து நின்றான்.. அவனைக் கண்டதும் தான் விளங்கியது இதெல்லாம் தந்தையின் திட்டம் என்று. " தாங்கஸ் அங்கள்,.. " என்றவன் அவரிடம் விடைபெற்று ப்ரதீப்பை முறைத்து நின்றான்.

" ப்ரதீப், அவர் சொல்லுறதேல்லாம் உண்மையா எனக்கு நிச்சியதார்த்தமா? அப்பா ஹாஸ்பிட்டல் அட்மிட்டாயிருக்கிறதெல்லாம் பொய்யா, அப்ப என்னை பொய் சொல்லி வர்ற வைச்சிருக்கிங்களா ? "

பிரதீப் ஆமாமென்று தலையாட்ட, கார்த்திக் அடுத்து அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கேட்டகாமல் வேகமா நடந்தான். " நான் சொல்லறத கேளுடா கார்த்திக் " என கத்தியவாறே அவனைத் தொடர்ந்தான் ப்ரதீப் .

அவன் சொல்லறதை கேட்டகாமல், ப்ரதீப்பை விட்டுட்டு கேப்பில் சென்றுவிட்டான்.... ப்ரதீப் வந்த காரில் அவனைத் தொடர்ந்தவன்... அ
வனுக்கு அழைக்க கோபத்தில் எடுக்க மறுத்தான்....

ப்ரதீப், ரகுநாத்திற்கு அழைத்து அனைத்தையும் கூற அவரோ நெஞ்சுவலியில் மயங்கி கீழே விழுந்தார்.

ப்ரதீப் அவனைத்தொடர்ந்தவன், நேராக அவன் செல்லும் ஹோட்டலில் அவனைப் பிடித்தவன்., உண்மையாக அப்பாவிற்கு நெஞ்சுவலி வந்ததைக் கூறினான்...

" டேய் உண்மையில அங்க அப்பா நெஞ்சுவலி வந்துருச்சுடா, நீ வந்த தான் ஹாஸ்பிட்டல் வருவேன் சொல்லிட்டு இருக்காறான்டா வாடா.இப்பையும் நீ வரலேன்னா அப்பாக்கு என்ன ஆகுமோ பயமா இருக்கு வாடா போலாம்"

அவனை அழைத்துக்கொண்டு, ப்ரதீப் வந்த காரிலே சென்றனர்.., கார்த்திக்கிற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள, தன் தந்தைக்கு ஏதும் நேர்ந்திட கூடாது என்று வேண்டிக்கொண்டே வந்தான்... மண்டபத்தில் வந்ததும் உள்ளே நுழைந்து அவர் அருகினில் அமர்ந்தான்..,

" அப்பா நான் வந்துடேன்ப்பா,வாங்க அப்பா ஹாஸ்பிட்டல் போலாம். நீங்க இல்லமா நான் இல்லப்பா நான் எதாவது தப்பு செய்திருந்தா, என்னை மன்னிச்சிருங்க, வாங்க அப்பா ஹாஸ்பிட்டல் போலாம்... " என்றே
கெஞ்சினான், " அப்பா நீங்க சொல்லற பொண்ணையே கல்யாணம் பண்ணிகிறேன். அதான் நான் வந்துடேலப்பா இந்தக் கல்யாணம் நடக்கும்.. தயவு செய்து வாங்க ஹாஸ்பிட்டல் போலாம். அப்பா எதாவது பேசுங்க, இப்பிடி இருக்காதீங்க,என்னை தனியா தவிக்க விட்டுட்டு போயிறாதீங்க அப்பா என்னால தாங்கமுடியாது " என்றே அழுதான் கார்த்திக்.

" அப்ப நீ மட்டும் என்ன தனியா தவிக்க விட்டுட்டுப் போன அப்ப எனக்கு எப்படிருக்கும்? " என்றவர் வேகமாக எழுந்து அமர்ந்தார்.. அனைவருக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.கிருஷ்ணனுக்கும் டாக்டர் சாருக்கும் தவிர,


அவர் கீழ விழுகும்பொழுதும் கிருஷ்ணனைப் பார்த்து கண்ணடித்து நடிப்பென தெரிய படுத்தினார். டாக்டர்ரும் அவரது திட்டத்தில் இணைந்தார். அவர்கள் இருவரைத் தவிற அங்கு எல்லாரும் புரியாமல் இருந்தனர்.

" அப்பா, இதேல்லாம் நாடகமா ஏன்பா நடிச்சிங்க ஏன் ஏமாத்துனிங்க?"

" நீ என்னை ஏமாத்திட்டு அமெரிக்காக்கு போல, பிரஜாட்ன்னு சொல்லி அங்க போய் இருந்துட்டு ஒரு போன் பண்ணாம, என்கிட்ட பேசாம,என்னைப் பார்க்காம, இந்தியாவுக்கு வரமா அங்கயே இருந்திடலாம்ன்னு தானே இருந்த. எனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரிஞ்சதுனால தானே இந்தியாவுக்கு வந்த இல்லைன்னா, அங்கயே தானே இருந்திருப்ப? அப்படி என்னடா பிரச்சினை உனக்கு. என்கிட்ட இதுவரைக்கும் எதையும் மறைச்சதே இல்லையேடா இது மட்டும் ஏன்டா மறைச்ச? அதுமட்டுமில்லாம இந்தியாவுக்கே வரமாட்டேன்னு தானே அங்கப் போயிருக்க. அப்ப உனக்கு அப்பா முக்கியமில்ல அப்படி தானே.... "

" அப்படியெல்லாம் இல்லப்பா நீங்க தான், எனக்கு முக்கியம். உங்கள விட்டா எனக்கு யாருப்பா இருக்கா ?"

" அப்படி நினைச்சிருந்தேனா. நீ அமெரிக்கா போயிருக்க மாட்ட. நான் உன்னை இங்க வர வைக்க நடிக்க வேண்டிய நிலைமைக்கு கொண்டு வந்திருக்க விட்டுருக்க மாட்டா நீ!..."

கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை, ரகுநாத்தின் நடிப்பும், கார்த்திக் அமெரிக்க சென்ற காரணமும் புரியாமல், அதை வாய் விட்டே கேட்டாள்,

" ஏன் மாமா, நீங்க நடிக்கணும்? ஏன் கார்த்திக்கு இந்தியா வர பிடிக்கல? அவன் பிராஜட்க்காக தானே அமெரிக்கா போயிருங்கானு சொன்னீங்க. ஆறுமாசத்துல வந்திருவான்னு சொன்னீங்க, ஆனால் நீங்க நடிச்சு தான் அவனை இந்தியாக்கு வர்ற வைத்ததா சொல்லிறீங்க இங்க என்ன நடக்குது எனக்கு ஒன்னுமே புரியல மாமா "

கீர்த்தீக்கு மட்டுமில்ல கிருஷ்ணனுக்கும்,ப்ரதீப்க்கும் தவிர மத்த எல்லாருக்கும் புரியாமல் தான் இருந்தது. கீர்த்தீ கேட்கும் போது தான் கார்த்தி அவள காண,மணப்பெண் கோலத்தில இருந்தாள் ' கீர்த்தீக்கும் எனக்கும் தான் நிச்சியதார்த்தமா இது எப்படி முடியும்? கீர்த்தி தான் அர்ஜூன லவ் பண்றாள அப்ப எப்படி என்ன, கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்ட "அவனும் புரியாமல் குழம்பி நின்றான்.

இந்த விசயம் தெரியவேண்டாம் என்று நினைத்து மறைத்தது வெளிய வர கிருஷ்ணனும் ரகுநாத்தும் முழித்தவாறே நின்றிருந்தனர்.., அவர்களின் அமைதி அவளுக்குக் கோபத்தை தர கார்த்திக் இடமே காட்டினாள்..

" உனக்கு தெரியாதா கார்த்திக், இன்னைக்கு நமக்கு நிச்சியதார்த்தம், ஆமா நீ ஏன் அமெரிக்கால இருக்கணும் நினைச்ச? பிராஜட்ன்னு,பொய் சொல்லி ஏன் நீ அமெரிக்கா போன? உனக்கு என்ன தான் பிரச்சனை? ஏன் நீ இவ்வளவு நாளால யார்கிட்டையும் பேசவே இல்ல. எப்படிடா என்னைப் பார்க்காம, உன்னால இருக்க முடிஞ்சது. ஏன்டா என்னை விட்டுப் போன. நான் ராஜ் கல்யாணத் தன்னைக்கு நைட்டு உங்கிட்ட சொன்னதை வச்சு என்னை விட்டுட்டுப் போயிட்டியா. நான் உங்கிட்ட சொன்னது எவ்வளவு பெரிய தப்பு நான் புரிஞ்சுகிட்டேன் அன்னைலருந்தது உன் கிட்ட லவ் சொல்லணும் துடிச்சிட்டு இருந்தேன். நீ என்னை விட்டுட்டுப் போவேன் நான் நினைக்கவே இல்ல.நானும் நீ பிராஜட் விசயமாதான் போயிருக்க ஆறுமாசம் கழிச்சு வருவேனு அதுக்கப்புறம் உங்கிட்ட நான் என்னோட லவ் சொல்லணும் உன்னை கல்யாணம் பண்ணி உன்கூடவே இருக்கனு ஆசைப்பட்டேன்.ஆனால் மாமா சொல்லறதே கேட்டு எனக்கு தலையே சுத்துது. உண்மைய சொல்லு கார்த்திக் நீ என்னை லவ் பண்ற தானே! அப்ப ஏன் என்னை விட்டு போன? "

' கீர்த்தி, என்னை லவ் பண்றாளா?? அப்ப அர்ஜூன்கிட்ட லவ்வ சொன்னது பொய்யா, எனக்கு ஒன
ண்ணுமே புரியல இவ என்ன லவ் பண்றான்னா, அப்பயேன் அர்ஜூனோட கிட்ட லவ் சொன்னா ' மனதில் நினைத்த அனைத்தையும் கீர்த்தியிடம் வாய்விட்டே கேட்டுவிட்டான்....

" கீர்த்தி, நீ அர்ஜூன தானே லவ் பண்ற? அப்பயேன் இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட, என்னை லவ் பண்றேன்னு வேற சொல்லற எனக்கு ஒண்ணும் புரியல " சொல்லி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் ப்ளாரென்று அடித்தாள்..

" யார்டா சொன்னா நான் அர்ஜூன லவ் பண்றேன்னு.. நான் உன்னைதான்டா லவ் பண்றேன்.அர்ஜூன் சக்திய லவ் பண்றான்,அவன் எனக்கு ஒரு நல்ல பிரண்ட். அப்ப நீ சந்தேகப்பட்டு தான் என்னை விட்டுப் போனீயா?."

" லூசு மாதிரி பேசாதடி, நான் உன்னை சந்தேகபடல நீ தானே அன்னைக்கு அர்ஜூன் உன்கிட்ட, ஐ லவ் யூ சொல்லும்போதும் நீயும் அவன் கிட்ட ஐ டூ லவ் யூ சொல்லி அக்செப்ட் பண்ல, அது கேட்டு என் நெஞ்சேல எவ்வளவு வலி தெரியுமா. என்னால தாங்கிக்க முடியல அதான் இனி உன்னை நான் டிஸ்டப் பண்ண கூடாதுனு. தான் நான் அமெரிக்க போனேன். இங்க இருந்தா உன்னை பார்க்கணும் போல தோணும் ... உன்னை மறக்க கஷ்டமா இருக்கும் தான் போனேனன்..

" அன்னைக்கு சொன்னது வச்சா நீ என்னை விட்டு போன. அவன் என்னை ஏப்ரல் ஃபுல் பண்றதுக்காக என்கிட்ட அப்படி சொன்னான் நானும் அவனை ஏமாத்த நான் அவன் கிட்ட அப்படி சொன்னேன்..., " அதை கேட்டு தலையில் கைவைத்து நின்றான்.

" அன்னைக்கு நாங்க பேசினத முழுசா கேட்டு இருந்தேனா இந்தப் பிரச்சினையே வந்திருக்காது, அன்னைக்கு தான் நான் உன்னை நான் லவ் பண்றேன்னு அவங்கிட்ட சொன்னேன். அவன் சக்திய லவ் பண்றாத எங்கிட்ட சொல்ல தான் அங்க வந்தான்.. என்னை லவ் பண்ற தானே.. உனக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கூட இதப் பத்தி கேட்க தோணலையா, நான் இன்னொருத்தன லவ் பண்றேன் நினைச்சு உனக்கு கோவம் வரலையா " , அவனிடம் கேட்டு நிற்க... மற்றவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.

" எப்படி என்ன கேட்க, சொல்ற நான் உன்னை லவ்பண்றது உண்மைதான் ஆனால் நீ என்னை லவ் பண்ணாதப்போ. உனக்கு அர்ஜூன் பிடிச்சிருக்கு தெரியும் போது எப்படி என்னை கேட்க சொல்லுற, அப்படி நான் வந்து ஏன் நீ அர்ஜூன் லவ் பண்றேனு கேட்டா, நான் மனுஷனே இல்ல. நீ என்னை மட்டும் தான் லவ் பண்ணனும் சொல்ற ஆள் நான் கிடையாது. அதுமட்டும் இல்ல, நான் உங்கிட்ட வந்து கேட்க ஆமா நான் அர்ஜூன தான் லவ் பண்றேனு நீ சொல்லிட்டேன்னா என்னால அத கேட்டு உயிரோட இருக்க முடியாது. உன்னை நான் எந்த விதத்திலும் டிஸ்டாப் பண்ண கூடாதுனு நினைச்சேன். எனக்கு குடிச்சுட்டு வந்து திட்டுறது, உங்க வீட்டுக்கு வந்து மிரட்டுறது, உன்கிட்ட தப்ப நடந்துகிறது இதேல்லாம் எனக்கு தெரியாது.. நான் அப்படி பண்றவன் கிடையாது. எனக்குப் பிடிச்சவங்க எப்போமே சந்தோஷ்மா இருக்கணும் நினைக்கிறவன். நீ லவ் பண்றேனு நினைச்சு அவன் கூட இருந்தா நீ சந்தோஷ்மா இருப்பேன்னு நினைச்சு தான் நான் உன்னை விட்டுப் போனேன்..."

" நான் சந்தோசமாவா இருந்தேன். என் சந்தோசத்தை எல்லாம் தூக்கிட்டு போயிட்டியேடா .நான் உன்னை பார்க்கணும் உங்கிட்ட பேசனும் என் காதலை சொல்லனு நான் உங்கூட வாழணும் நினைச்சு, எத்தனை நாள் சாப்பிடாமா , தூங்காமா யார்கிட்டையும் பேசாமா கஷ்டமா இருந்துச்சு தெரியும்மாடா. எனக்கு இந்த காதல் வலி வேணான்னு சொன்னேனடா,.. ஆனால் நீ எனக்கு அந்த வலி தந்துடேல " கத்தி அழுதாள்.. அவள் அழுவதை அவனால் காண முடியவில்லை அவளை அணைக்க வந்த அவனது கைகளைத் தட்டிவிட்டு தான் கோபமாய் இருப்பதாய் காட்டி அழுதாள். அவளிடம் கெஞ்சினான்...

" சாரிடி என்னை மன்னிச்சிரு, நீ என்னை லவ் பண்றேனு தெரிஞ்சா நான் உன்னை விட்டு போயிருக்கவே மாட்டேன். உன்னுடைய சந்தோஷ்சம் முக்கியம் நான் நினைச்சு உன்னை விட்டு போயிட்டேன் டி . நீ இல்லமா எனக்கு வாழ்க்கையே இல்ல, நீ தான்டி எனக்கு எல்லாமே. தனியா வாழ்ந்த எனக்கு உன்னால தான் இவ்வளவு பெரிய குடும்பம் கிடைச்சுருக்கு உன்னால தான் எனக்கு ஒரு நல்ல குடும்பத்தையும் கொடுக்க முடியும் என் சந்தோஷ்ம் துக்கம் , சோகம் , கோபம் எல்லாமே நீ தான்... நீ என்னை லவ்பண்றேனு தெரிஞ்சதும் நான் எவ்வளவு சந்தோஷ்பட்டேன் தெரியுமா ஆனால் தப்பான நேரத்தில தெரிஞ்சது கஷ்டமா இருக்கு. உன்னை கெஞ்சி கேட்டுகிறேன் என்னை விட்டு போகாதடி நான் பண்ண தப்பையே நீயும் பண்ணாத,

எனக்கு என்ன தண்டனை வேணா கொடு. ஆனால் என்னை விட்டுப் போயிடாதடி எங்கிட்ட பேசாமா இருக்காத.. இந்த வேதனைக்கு முற்று புள்ளி வச்சுடலாம். நீ சொல்ல போற வார்த்தைல தான் நம்ம சந்தோசமே அடங்கிருக்கு. நான் இப்பையும் உன்னை வற்புறுத்த போறதில்லை.. உனக்கு இஷ்டம் இருந்ததால் தான் இந்த கல்யாணம்,

நீ ஒ.கே சொல்ற வரைக்கும் காத்துட்டு இருப்பேன்.என் வாழ்க்கையில ஒரு பெண் அது நீ மட்டும் வேற யார்க்கும் வாழ்க்கையில இடமில்லை " என்றவன் வெளியே செல்ல எத்தனிக்க அவனது கைப்பற்றி தடுத்தவள், அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்...

" சாரிடா கார்த்தி என் மேலையும் தப்பிருக்கு.. நான் உங்கிட்ட காதலை சொல்லாதது தப்புதான்.நான் சொல்லிருந்தா இவ்வளவு கஷ்டம் வந்திருக்காதுல.எனக்காவது இங்க எல்லாரும் இருந்தாங்க. ஆனா, உன்னை அங்க தனியா கஷ்டபட வச்சுடேன் என்னை மன்னிச்சிருடா கார்த்திக் என்னால உன்னை பிரிந்து இருக்க முடியாது எனக்கு நீ வேணும் " அவனை இறுக்க அணைத்தாள்..

அவன் அவ முகத்தை ஏந்தியவன்..." ஐ லவ் யூ டி " என்றவன் முகமெங்கும் முத்தமிழைக்க, பிரிவுகடந்து கிடைத்த காதல் பரிசாய் ஏற்றாள்... மெல்லமாய் அவளுதட்டை தீண்ட எண்ணிச் செல்ல... இருபிசாசுகளின் வந்து தடுத்தனர்..

" நாங்க எதுவும் பார்க்கலப்பா " அர்ஜூன் சக்தி வரவே கடுப்பானான்..

" ரொம்ப நாள் கழிச்சு சேர்ந்துருக்கோம் கொஞ்சம் கூட தனியா விட மாட்டிங்களாடா... "

" என்ன பண்றது ப்ரோ, உனக்கு டைம் சரியில, இப்பா நீங்க வரலைன்னா நிச்சியத்துக்கு வந்த எல்லாரும் போயிருவாங்க,
யாரு முன்னாடி மோதிரம் மாத்திவிங்க நீங்க லேட் பண்ணிட்டு இருந்தீங்கன்னா நானும் சக்தி எப்ப கல்யாணம் பண்ணிகிறது.... "
கார்த்திக் அவனை முறைக்க சக்தி, அர்ஜூனிடம்.. " உனக்கு தான் டைம் சரியில்ல, ஏற்கனவே அவன் காதல்ல பிரச்சனை வந்ததே உன்னால தான்.இத வேற சொல்லி உன் வாயால உனக்கே அப்பு வச்சுகிறாத...... "

" சாரி ப்ரோ நான் விளையாட்டு தனமா சொல்ல போய் உன் லவ்வுக்கு இவ்வளவு பிரச்சினை வரும் நினைக்கவே இல்ல ஐ யம் ரியலி சாரி ப்ரோ. "

" பரவாயில்ல அர்ஜூன் நான் தான் தப்பு பண்ணிடேன். நீங்க பேசுனத கேட்டுருக்க கூடாது... அத மட்டுமில்ல காதல்ல டக்ன்னு சேர்ந்துட்டா கிக்கே இருக்காது., இப்ப நாங்க இரண்டு பேரும் எவ்வளவு லவ் பண்றோம் தெரிஞ்கிட்டோம். உனக்கு தான் நன்றி சொல்லனும் ப்ரோ..."

" சரி சரி வாங்க டைம் ஆச்சு எல்லாரும் அங்க வெயிட் பண்றாங்க மாப்பிள்ளை சார் போய் டிரஸ் மாத்திட்டு வாங்க..."

கார்த்திக் டிரஸ் மாத்திட்டு வர அங்க மேடையில் இருவரும் மோதிரம் மாத்தி மாலையும் மாத்திக்கொண்டனர்.., அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். பெரியவர்கள் அனைவருக்கும் ஆனந்த கண்ணீர் தான்....

" அப்பா எங்களுக்கு இப்ப கல்யாணம் வேணாப்பா.... " கார்த்திச் சொல்லவே கீர்த்திலிருந்து எல்லாரும் அவனே பார்க்க, இல்ல முறைத்தனர்...

 
Top