கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 21

Chithu

Moderator
Staff member
வருவான் 21
கார்த்தி கீர்த்தீ கல்யாணத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏


மண்டபத்தில் இருந்து அனைவரும் கார்த்திக் வீட்டிற்கு வந்தனர். மணமக்களை ஆர்த்தி எடுத்து உள்ள அழைத்துச் சென்றனர் . வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள். கார்த்திக்கிற்கு, ஒரே மகிழ்ச்சி, அவன் வீட்டில இவ்வளவு பேர் இருந்தது இல்லை.

தன் தந்தையைப் பார்க்க வந்தாலும் இவ்வளவு பேர் வந்ததில்லை அப்பிடியே வந்தாலும் வேலை விசயமாகத்தான் இருக்குமே தவிற இப்படி கலகலப்பா இருந்தது இல்லை.

இன்றைக்கு வீடே நிறைந்திருக்க காரணம் கீர்த்தி தான். அவளால் தான் இத்தனைச் சொந்தம் கிடைத்தது அவனுக்கு. தன் மனைவியை நினைத்து மனதிற்குள் பெருமை பட்டுக் கொண்டான்.


கீர்த்தியின் அன்னை அனைவரையும் பூஜை அறைக்கு அழைக்க, கார்த்திக்கும் ரகுநாத்துக்கும் ஆச்சரியம் தான், ' நம்ம வீட்டுல எது பூஜை அறை?' என்றே எண்ணினார்கள்.


கார்த்திக்கின் அன்னை இருக்கும் வரை இருந்த அறை, அதன் பின் இல்லாமல் போனது.. ரகுநாத் சாமி பபடங்களை அகற்றச் சொல்லிருந்தார். கீர்த்தி வந்ததால் தேவியே பூஜை அறையை உருவாக்கினார். அனைவரும் அங்குக் கூடி சாமி கும்பிட்டனர்.. கீர்த்தி விளக்கேற்றினாள்...

சிறியவர்கள் எல்லாரும் ஹாலில் அமர்ந்திருக்க, பெரிய பட்டாளமே இருந்தது. கீர்த்தியும் கார்த்திகையும் நடுவில்
அமர வைத்து கலாய்த்துப் பேசி சிரித்தனர்.அஜய்யும் தருணும் எதோ யோசனையில இருக்க.

" டேய் இல்லாத மூளைய வச்சு என்ன யோசிக்கிறீங்க?"

" அதுவா இரு சொல்றேன் கீர்த்தி அக்கா, நீ எந்திருச்சு இங்க வந்து உட்காரு " அஜய் கூற, " ஏன்டா " என்றவள், கார்த்திக்கிடமிருந்து எழுந்து, அஜய் அருகே வந்தமர்ந்தாள்., கார்த்திக் மட்டும் தனியாக அமர்ந்திருக்க, மறுபடியும் அஜய் , அர்ஜூனைக் கார்த்திக்கின் அருகில் அமரச் சொன்னான்.. யாருக்கும் எதுவும் புரியவில்லை இருந்தாலும் அவன் சொல்லுவதையே செய்தனர். அர்ஜூனும் கார்த்திக் பக்கத்துல உட்கார்ந்தான்..

" என்னடா ஏதோ குறையிற மாதிரி இருக்கே"

" இருடா தருண்... " என்றவன் ப்ரதீப் மாமா நீங்களும் இங்க வந்து உட்காருங்க..." என்றான்.

ப்ரதீப்பும் வந்து அமர்ந்தான்.. அங்கே கார்த்திக் , அர்ஜூன் , பிரதீப் மூவரும் அமர்ந்திருக்க, உடனே அஜய் கீர்த்தீயிடம் கேட்டான் " இவங்களைப் பார்த்தா உனக்கு எப்படி தெரியுது? "

" எனக்கு எதுவும் தெரியல.மூணு பெரும் உட்கார்ந்து இருக்காங்க அவ்வளவு தான் .... "

" போக்கா..... ஏய் சக்தி, சனா அக்கா உங்களுக்கு எதாவது தெரியுதா? " இல்லை என்று அவர்களும் தலையாட்ட,
" சுத்தம்.... " என அஜய்யும் தருணும் தலையில அடித்துகொண்டனர்.

" டேய் புரியற மாதிரி சொல்லுடா"

" இரு சொல்றேன்," என்றவன், அர்ஜூனிடம், மாமா, நீங்க உங்க கையை வாயில் வைங்க, அவனும் அதையே செய்ய, அடுத்து கார்த்திக்கிடம், மாமா நீங்க உங்கக் கண்ணை பொத்துங்க, அவனும் பொத்தினான்.., அடுத்து ப்ரதீப் மாமா, நீங்க உங்க காதைப் பொத்துங்க, அதை அவனும் செய்ய" இப்ப சொல்லுக்கா... "

" தீரி மங்கிஸ்.... " கீர்த்தி சொல்ல அஜய்யும் தருணும் வாயிவிட்டே சிரித்தனர்.

" அடப்பாவிகள உங்கள" ப்ரதீப், அவர்களை அடிக்க எழ, "இருங்கமாமா நாங்க ஏன் இப்ப உட்கார சொன்னோம் ரீசனை சொல்லிடுறோம்? அப்புறம் சேர்த்து அடிங்க " என்றான் சிரித்துகொண்டே.,


" அர்ஜூன்மாமா, உங்களை ஏன் தெரியுமா வாய் பொத்த சொன்னேன். எங்க அக்கா சீரியல் பார்க்கும் போது நீங்க இப்படி வாய் பொத்திட்டுதான் உட்காரணும். இல்லேன்னா அப்புறம் பத்திரகாலி டான்ஸ் தான். கார்த்திக் மாமா உங்கள ஏன் கண்ணை பொத்த சொன்னே தெரியுமா? அவ எது சமைச்சாலும் கண்ண மூடிக்கிட்டு சாப்பிடணும் இல்ல ஒரு கொலையே விழுகும். அப்புறம் ப்ரதீப் மாமா சனா உங்கள தீட்டியே கொன்னுடுவா அதுனால நீங்க காதைப் பொத்தியே இருக்கணும்
ஏன்டி திட்டுற கேள்வி கேட்டிங்க அப்புறம் உங்க பாடு...


மூணு பேரும் இப்படியே தான் இருக்கணும்,. இந்த ரூல்ஸை மீறி எதாவது செஞ்சீங்கன்னா, உங்கள காப்பாத நாங்கலாம் வரமாட்டோம்பா.... " என சொல்லிச் சிரித்தனர்.

கீர்த்தி,சக்தி,சனா இருவரை மொத்தினர்..., கார்த்திக், அர்ஜூன்,பிரதீப் தன்னுடைய நிலைமைய நினைக்க, அந்த மூன்று மங்கிஸ் தான் நினைவிற்கு வந்தது.

இப்படியே நேரம் போனதை அறியாமல் பேசினார்கள்.. இரவானது, இரவு உணவும் உண்டு முடித்து,
கீர்த்தியை சக்தி,சனா,கவிதா,பவித்ர எல்லாரும் சேர்ந்து அவளை அலங்கரித்துகொண்டே கலாய்க்கவும் செய்தனர்.. பதிலுக்கு கீர்த்தி கலாய்த்தாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருக்கத்தான் செய்தது.. அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

அங்க கார்த்திகக்கையும் கலாய்க்காமல் இல்ல அவனைக்கலாய்த்து எடுத்தனர் அவனும் சந்தோஷ்மாகவே தயாரானான்.
எல்லாரும்உறங்கச்சென்றனர்..,

மாலதியும் கீர்த்தியின் அன்னையும் அறிவுரை தான்.. அவளும் பும்பும் மாடாய் தலையாட்டினாள் சக்திக்கும் சனாவுக்கும் ஒரே சிரிப்பு தான் சக்தி,சனா, பவி மூவரும் அவளைக் கார்த்திக் அறைக்கு அழைத்து சென்றனர். அறையை நெருங்க கீர்த்திக்கு உதறல் ஆரம்பித்தது, .கார்த்திக் அவர்களின் சிரிப்பு சத்தத்தைக் கேட்டு கதவருகில் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டுகொண்டிருந்தான்..

கீர்த்தியை உள்ள போகச் சொல்ல அவளோ " உள்ளே போகலை " என்று தலையாட்டினாள்... "அப்ப வா கீழ போலாம் " கை பிடிச்சு இழுக்க அதற்க்கும் அவள் வரவில்லை என்று சொல்லித் தலையை ஆட்ட " என்னடி கீழையும் வர மாட்டிக்கிற, உள்ளையும் போக மாட்டிக்கிற இங்கயே நிக்கபோறீயா?"


கீர்த்தி முகத்தைப் பாவாமா வைத்துகொள்ள எல்லோம் சிரித்தனர்., பவி கீர்த்தீயிடம், " நான் வேணும்னா உள்ள போவா? "

" ஏய் உள்ள இருக்கிறது உன்னுடைய கார்த்தி இல்ல கீர்த்தியோட கார்த்திக்.. "

" எந்த கார்த்திக்கா இருந்தா என்ன நான் போறேன்பா. " என்றவளை முறைத்தாள் கீர்த்தி...

" உள்ள போடி " என்றவளை உள்ளே தள்ளிவிட்டுச் சென்றனர். அறைமுழுதும் பூக்களால் அலங்கரிக்க பட்டிருந்தது. கீர்த்தி கார்த்தியைக் தேடவே, அவள் தேடுவதைக் கண்டவனுக்கு சிரிப்பே வந்தது. கதவைத் தாளிடும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள், அவனோ சிரித்துகொண்டே நின்றான்..

அவளை நெருங்க இதயத்தின் துடிப்பு ஏகிறியது... முகத்தில் வியர்வைப் பூக்க, ஏனோ கைகால்கள் நடுக்க அவளைக்காண, அவனுக்குச் சிரிப்பே வந்தது... அவளை அவன் நெருங்க. அவளோ பின் சென்று சுவரில் மோதிநின்றாள்.

இருகைகள் அவளுக்கு அணையாக்க, துடிக்கும் இதழைப் கடித்துகொண்டிருந்தாள்... அவள் இதழை நோக்கி குனிய கண்களை மூடிக்கொண்டாள் ஒருநிமிடம் அமைதி நிலவ கண்ணை திறக்க, அவளோ அவனது கைகளில் இருந்தாள். அவளைத் தூக்கியவன் பால்கனிக்கு விரைய அங்கே ஊஞ்சல் போடப்பட்டடிருந்தது, அதில் அமரவைத்து அவள் மடியில் படுத்துகொண்டான்,. சில்லேன்ற காற்று. ரோஜா செடிகளென ஒரு குட்டி தோட்டமாய் அங்கிருக்க... அந்த இடமும் நேரமும் இதமளித்தது அவர்களுக்கு.

" எனக்கு இந்த ரொம்ப பிடிக்கும். நான் சந்தோஷ்மா இருந்தாலும் சோகமா இருந்தாலும் இங்க தான் வருவேன்
இங்க நான் என்னையே மறந்து எவ்வளவு நேரம் உட்காருவேன் எனக்கே தெரியாது. சில நேரம் இங்கே தூங்கிருக்கேன்.நான் இங்க வந்தா தனிமையை பீல் பண்ண மாட்டேன்.உனக்கு இந்த இடம் பிடிச்சுருக்கா?"

" ம்ம்....பிடிச்சுருக்கு. அத விட இந்த இடத்த அழகா மாத்தினவரையும் ரொம்ப பிடிச்சுருக்கு"

" அப்ப ஏதாவது தரளாமே..."

" தராளாமே என்ன வேணும்?"

" எனக்கு உன்ன மாதிரியே அழகான பொண்ணு வேணும் தருவியா "

" ம்ம்... ஏன் பையன் வேணாமா?"


" பையனும் வேணும். ஆனா, பொண்ணு தான் பர்ஸ்ட்.அப்புறம் பையன்.நிறையா குழந்தைகள் பெத்துகணும், இந்த வீடு முழுக்க அவங்க தான் இருக்கணும்"

" அப்பிடியே ஸ்கூலையும் ஆரம்பிச்சிடு "

" என் பசங்களுக்கா இத கூட பண்ணமாட்டேனா"

" போடா ஆசையா பாரு. எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்.."

" அடிப்பாவி இன்னும் எவ்வளவோ இருக்கு தூங்க போறேங்கற.."

" அதேல்லாம் ஆறு மாசம் கழிச்சு தான்..."

" ஹலோ என்ன விளையாடுறீயா பையன்னைப் பத்தி பொண்னைப் பத்தி பேசிட்டு ஆறுமாசம் கழிச்சுங்கற.."

" அப்ப தானே என் செமஸ்டர் முடியும்,
. செம்மஸ்டர் முடியற வரைக்கும் இதெல்லாம் நோநோ...."

" அடிப்பாவி கல்யாணம் முடிச்சும் பேச்சுலரா இருக்கச் சொல்லுறீயே! நீ எல்லாம் நல்லா இருப்பியா ராட்சஸி..."

" நீ தானே சொன்ன, நான் நீ படி நான் உனக்கு எந்தவிதத்திலும் தடையா இருக்கமாட்டேனு சொன்ன இப்ப இப்படி சொல்லற? "

" அது அப்ப, கல்யாணம் அகல. அதுனால சொன்னேன். இப்ப தான் கல்யாணம் ஆயிருச்சு, என் பொண்டாட்டி, உன்னைப் பார்த்துட்டு என்னால எதுவும் செய்யாம இருக்க முடியாது..."

" போடா ஃபாராடு... " முகத்தைத் திருப்பிக்கொள்ள..

" நான் சும்மா தான் கேட்டேன். நீ mscமுடித்ததும், வைத்துகொள்ளலாம் நான் படிப்புக்குத் தடையா இருக்க மாட்டேன்...." என்றான்.

" தாங்கஸ்டா கார்த்தி " அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.

" சரிவா பொய் தூங்கலாம் நீ டயர்டா இருப்பா " என்றவன் எழுந்து நடந்திட, அவள் அங்கயே அமர்ந்திருந்தாள் " வரலையா " என்றவன் கேட்க,


" நான்னா நடந்து வந்து இங்க உட்கார்ந்தேன். நீ தானே தூக்கிட்டு வந்த நீ தான் தூக்கிட்டுப் போகணும் " என்றவள் சின்ன பிள்ளையாய் கை நீட்டி , அவனும் அவளைத் தூக்கிகொண்டு மெத்தையில படுக்க வைத்து தானும் பக்கத்தில படுத்துக்கொண்டான் கொஞ்சம் முத்தம் கொஞ்சம் பேச்சு கொஞ்சம் சிணுங்கல் கொஞ்சம் சண்டை கொஞ்சம் கெஞ்சல் கொஞ்சம் கொஞ்சமா காதலையும் அந்த இரவையும் செலவழித்தனர்.

மறுநாள் விடிய குளித்து கீழ் இறங்கியவள், ஹாலில் யாருமில்லாததால், சாமியறைக்குச் சென்று கும்பிட்டவள், சமையலறை நோக்க, அங்கே பெண்கள் இருக்க மீண்டும் திரும்புவதைச் சக்தி பார்த்துவிட்டாள்.

" மேடம் ரூமுக்கா போறீங்க விடிந்திருத்து உள்ள வரீங்களா? " என்றாள் சக்தி.

அசடு வழிய நின்றவளைக் கண்டு சிரித்தனர், வெட்கபட்டுக்கொண்டே நின்றாள்... பின் தேவி அவளிடம் காபியை கொடுத்தனுப்பினார்.
காலைக் கடன்களை முடித்த வந்தவனிடம் காஃபியைக் கொடுத்தவள் அவன் மடியில் படுத்துக் கொண்டாள்..

" என்ன மேடம் இன்னும் தூக்கம் போகலயா?"

கார்த்திக்கைப் பார்த்தவள், உனக்கு கஷ்டமா இருக்கா கார்த்திக்? "

" என்ன
கஷ்டம்? "

" இல்ல அது " என இழுக்க


அவனும் அதைப் புரிந்து கொண்டவன், " ஒரு கஷ்டமும் இல்லடி உன்னுடைய விருப்பத்தை நிறைவேத்த தான் நான் இருக்கேன். இது முக்கியம் தான் நான் இல்லைன்னு சொல்லல, அதையும் தான்டி நான் உங்கூட இருக்கணும் சண்ட போடணும், தப்புபண்ணி மாட்டிகணும், கைபிடிச்சு ஊர் சுத்தணும். உன் மடியில படுக்கணும் நிறையா பேசணும் நிறைய திட்டுவாங்கணும் லவ் பண்ணனும். இதை செய்தாலே நான் சந்தோஷ்மா தான் இருப்பேன். லூசு எதையும் போட்டு குழப்பிக்காத... "
என்றதும் அவன் கன்னத்தில் இதழைப் பதித்துவிட்டு எழ, அவளை இழுத்து இதழ்பதிக்க. அங்க கொஞ்சம் கூடலும் நிகழ்ந்தது...

" கீர்த்திமா ஒழுங்க நடந்துக்கணும். கோவப்படக்கூடாது. சேட்டையெல்லாம் பண்ணக்கூடாது அப்பா பெயரைக் காப்பத்தணு.." கிருஷ்ணன் கூற

"சம்மந்தி, அவ இந்து வீட்டுப் பொண்ணு. சேட்டையெல்லாம் பண்ணக் கூடாதுனு நீங்க சொல்ல கூடாது. அவ சேட்டைப் பண்ணனும் அத நாங்க என்ஜாய் பண்ணனும். அவளால தான் இந்த வீடு கலகலன்னு இருக்கும். இப்படி சேட்டை பண்ணகூடாதுனு சொல்லி, அமைதியாயிட்டானா, நாங்க என்ன பண்றது? அவ எப்பையும் போல இருக்கணும் அதான் எங்களுக்கு வேணும்...." என்றார் ரகுநாத்.

" சனா, சக்தி, ஜீவா" அவளை அணைத்து அழுதனர்.. இணைப் பிரியா தோழர்கள் இன்று பிரிவைக்காண கண்ணீர் வடித்தனர்.

" அடிக்கடி,வீட்டு வாங்கடி, ஜீவா நீயும் " என்றாள்.

" நீயும் வரனும் டி.."

அவள் அன்னையைக் கட்டிபிடித்து அழுதாள்... தருண் அன்னையிடம் " அம்மா இவ சீன் போடுறா நம்பாத அது எல்லாம் பொய்யான அழுகை " அவளை வம்பு இழுக்க " அவன அடிக்கத் துரத்திக் கொஞ்சம் நேரம் அழுகை மறந்து அவனுடன் சண்டைப் போட்டாள்..

அதன்பின், அஜய் அமைதியா இருப்பதை பார்த்தவள், " என்னடா அஜய் அமைதியா இருக்க " கீர்த்தியை அணைத்தவன், " அக்கா நீ இல்லாமா எப்படி இருப்பேன்? இந்த சக்தி என்ன கலாய்ச்சு எடுத்திடுவா. அப்புறம் மேத்ஸ் யாரு எனக்கு கொட்டி சொல்லிக் கொடுபா? நீ இல்லாமா போர் அடிக்கும் அக்கா " என்று அழுக தருணும் சேர்ந்து கட்டிகொண்டு அழுதான். பின் அனைவரும் கிளம்பினர்... ரகுநாத்தும் கீர்த்திக்கும் கார்த்திக்கும் தனிமை கொடுத்துச் செல்ல.. அவனை அணைத்துகொண்டு அழுதாள். கொஞ்சம் அழ விட்டவன். பின் அவளைத் தூக்கிக்கொண்டு தன்னறைக்குச் சென்றான்., அவர்களின் காதல் கதை தொடங்க,
 
Top