கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 22

Chithu

Moderator
Staff member
வருவான் 22





காதலியைக் கரம்பிடித்த
சந்தோசத்தில் பறந்தான் கார்த்திக்.


கல்யாணம் முடிந்து பத்து நாள் ஆகிட, இந்தப் பத்து நாலும் மறு வீடு விருந்தென்று கார்த்திக்கும்
கீர்த்தியும் சந்தோசமாக இருந்தார்கள்..

ரகுநாத் கார்த்திக்கை அலுவலகம் போகச் சொல்ல கார்த்திக்கின் முகம் வாடியது. கீர்த்திக்கும் ரகுநாத்திற்கும் அவனை பார்க்கச் சிரிப்பு தான் வந்தது...


" கீர்த்தி ப்ளீஸ்டி இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஆபிஸ் போறேன். நீ போய் அப்பாகிட்ட சொல்லு டி"

" இங்க இருந்த நீ என்ன பண்ண போற? ஒழுங்க வேலைக்கு போ கார்த்தி"

" ஏன்டி என் பீலிங்க்ஸ்ஸா புருஞ்சுக்க மாட்டிங்கற. என்னால ஒரு நிமிசம் கூட உன் விட்டு இருக்க முடியாதுடி "

" அப்பிடியா அப்ப ஒ.கே நீ போக வேணா " என்றதும் கார்த்தியின் முகம் மலர. " சரி ஒரு வாரம் கழிச்சு போறேன் சொன்னியே அப்ப என்னை விட்டுட்டு எப்படி இருப்பா..."

" அடுத்த வாரமும் இதே மாறி ஆபிஸ்க்கு அடுத்த வாரம் போரேன்னு கெஞ்சுவேன் " என்றவன் கண்ணடித்தான்...

ம்ம்....முறைத்துகொண்டே " ஃபராடுடா நீ,ஒழுங்க ஆபிஸ்க்கு போ கார்த்தி. வேலைக்கு போறது புருஷலக்ஷணம்
சொல்லு வாங்க இப்ப நீ புருஷானாய்டா லக்ஷணமா வேலைக்கு போ...."

" போடி போக முடியாது என்னடி பண்ணுவ "

" மாமா..... " என கத்தினாள்,.அவள் வாயில் கை வைத்து " அமைதியா இருடி ஏன்டி கத்துற..."

" பின்னா என்ன பண்ணுவேன்னு கேட்டேல அதான் கத்துனே கிளம்புடா..."

அவனும் முகத்தைத் தூக்கி வச்சுட்டே கிளம்பினான் அவளுக்கு அவனைப் பார்த்துச் சிரிப்பு தான் வந்தது அவனும் நேரத்தைக் கடத்த அந்த சர்ட் நல்லா இல்ல, இந்த பெண்ட் ஸ்ஸூட்டாகல டை இதற்குச் சரியில்ல என்று கீர்த்தியைப் பாடாத பாடுப்படுத்தி எடுத்தான்,.. பள்ளிக்குப் போக மாட்டேன் அடம்பிடிக்கிற குழந்தையாய் தான் அவன் செய்கிறதெல்லாம், இருந்தது. அவனைக் கிளப்பி கீழே அழைத்துவரத்துக்குள்ளையும் கீர்த்திக்கு மயக்கமே வந்தது.. அவனைக் கிளப்பி கீழே கூட்டிவந்தாள் .அவனிடம் என்ன வேலை பென்டிங்கு இருக்கு என்ன
பண்ணனும் யாரு யாரு பார்க்கனும்
சொல்லிக் கொண்டு இருந்தார் ரகுநாத்.
அவனும் அதைக் கேட்டாலும்
கீர்த்தியிடம் கண்ணாலே கெஞ்சிக் கொண்டு தான் இருந்தான். அவளும் அவனை மாதிரி கண்ணால கெஞ்சி வேலைக்குப் போகச் சொல்ல அவன் அவளைப் பார்த்து முறைத்தான்.இதெல்லாம் பார்த்த ரகுநாத்திற்க்குச் சிரிப்பு தான் வந்தது, அடக்கிகொண்டு " நீ இன்னும் போல கார்த்தி" என்று " கேட்க அவன் " அப்பா நீங்க வரல.... "

" நான் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன்ப்பா... "

கார்த்தி ஆபீஸ்க்கு கிளம்பிச் சென்றான்..

" என்னாமா சொல்றான் உன் புருஷன்.... " ரகுநாத்

" பிள்ளையா பெத்து வச்சுருக்கிங்க என்னா பாடுபடுத்தறான்..ஸ்கூல் போகமாட்டேன் அடம்பிடிக்கிற பிள்ளையா, ஆபீஸ் போகமாட்டேன் அடம்பிடிக்கிறான். அவன கிளம்பிறத்துக்குள்ள கண்ணே கட்டிருச்சுமாமா... "அவரும் சிரித்துகொண்டே, " நீயும் ஆபீஸ் வாமா இங்க இருந்தா உனக்கு போர் அடிக்கும். நீயும் வா.."

" அய்யோ மாமா அப்புறம் உங்க புள்ள வேலை செய்யமாட்டான் மாமா.,.. " அதற்கும் அவர் சிரிக்க,

" மாமா நான் அங்கு வந்து என்ன பண்ணபோறேன்? அப்புறம் எனக்கு அங்க எதுவும் தெரியாது மாமா.,.."

" அங்க உனக்கு ஏத்த மாதிரி வேலை இருக்கும்மா நீ வா " என்றார்.. " சரி மாமா இதோ கிளம்பி வரேன் .. "

இருவரும் கிளம்பி அலுவலகத்திற்கு வந்தனர்.அங்க நுழைய, கீர்த்தியை ரகுநாத்துடன் பார்க்க எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. ரகுநாத்தை விஷ் பண்ணாலும் அவர்கள் கண்ணு எல்லாம் கீர்த்தியைப் பார்த்தது எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். நேராக, அவர் கேட்பினுக்குக் அழைத்துச் சென்றார்....

" மாமா உங்க ஆபீஸ் நல்லாருக்கு மாமா..."
" என்னமா இது என் ஆபீஸ்ங்கற. இந்த ஆபீஸ் உன்னுடையதுமா..." என்றிட, அவள் சிரித்துகொண்டே, " எனக்கு என்ன வேலைமாமா இங்க...."

" இங்க,ஆபீஸ்ல இன்டிரியர்டிசைன் பண்ணனும்... அப்புறம் அங்க இருக்க அந்த வால்ல, உன்னுடைய ஓவியத்தை வரையனும் இதான் உன்னுடைய வேலை..... "

" சூப்பர் மாமா... நான் உங்களுக்கு பெஸ்ட்டான இன்டிரியர் டிசைனும் அழகான ஓவியத்தை வரைந்துதரேன்.... "

" எனக்கு தெரியுமா நீ பெஸ்டா பண்ணிருவன்னு, சரிமா நீ போய் அவனை பாருமா, .. உனக்கு என்ன திங்கஸ் வேணுமோ அதேல்லாம் மேனேஜர் கிட்ட கேளுமா அவரு உனக்கு எல்லாம் பண்ணுவார்..."

" ஒ.கே மாமா நான் இன்னையிலிருந்தே ஸ்டார்ட் பண்றேன்.... " என்றவள், கார்த்தி கேபினுக்குச் சென்றாள், Karthik MBA Managing director, கதவைத் தட்டினாள்... "யஸ் கமின் "என்றிட, அவ உள்ளே நுழைந்தாள்.. யாரென்று பார்க்காமல் கோப்பை மேலே கண்ணாக இருந்தான்..அவளுக்கு கோபம் வந்தது....அவன் " என்ன வேணும் " அவளை பாராமல் கேட்டக அவள் எதுவும் சொல்லாமல் அமைதியா நின்றாள்...

வந்தவர்கள் பேசாது இருக்க, யாரென காண, அங்க கீர்த்தியைக் கண்டதும் ஆச்சரியம் தான்...

" ஹேய் கீர்த்தி எப்ப வந்த நீ எப்படி ஆபீஸ்க்கு வந்த
வாட்ட சப்ரைஸ்" என எழுந்தவன் அவள் அருகில்சென்று கைப்பற்ற தட்டினாள் " என்னாச்சுடி ஏன் கோவாமா இருக்க? "

" யாரு கதவு தட்டினாங்க, யாரு உள்ள வராங்கன்னு கூட பார்க்க மாட்ட நீ என்ன வேணும் கேட்கிற வரைக்கும் அவங்க நிக்கனு அப்படிதானே... அப்ப நீங்க எம் டி நீங்க சொல்லுற வரைக்கும் நாங்க நின்னுகிட்டே இருக்கனும் என்ன எண்ணம்டா உனக்கு?"

கார்த்தி, அவ சொல்லுறத கேட்டு சிரித்துகொண்டே " ஹேய் முக்கியமான பைல் மா அதான் பார்த்துட்டு இருந்தேன்...
நீ வருவேன்னு சத்தியமா எதிர் பார்க்கலை டி. " என்றவளை நெருங்க,அவளோ அவனை தள்ளியவள் அவனது சேரில் அமர்ந்தாள்...
" என்ன பார்த்தா எப்படி தெரியுது கார்த்திக்?"

" ம்ம்.. இந்த கம்பேனி ஓனர் மாதிரி இருக்க..."

" அதென்ன ஓனர் மாதிரி ஓனர் தான் இது என்னோடா கம்பேனி, நீ என் கம்பேனியோட எம் டி அவ்வளவு தான், நீ எங்கிட்ட வேலைப்பார்க்கற எம்பாளாயி ஒ.கே வா.... " அவள் கூற ரசித்தவன், அவள் முன்னே கைகட்டிகொண்டு " இப்ப உங்களுக்கு என்ன வேணும் மேடம்.."

" ம்ம்.... ஒரு ஆரஞ்சு ஜூஸ் வேணும்.."

" ஏன்டி என்னை பார்த்த சர்வர் மாதிரி தெரியுதா உனக்கு? நான் இந்த கம்பெனியோட மேனேஜிங்கி டைரக்டர் டி ஆர்ஞ்சுஜூஸ் வேணும்னு அசால்டா கேட்குற..."

" நீ இந்த கம்பேனியோட எம் டியா இருக்கலாம். ஆனால் நான் இந்த கம்பெனியோட ஓனர் தெரியுமல... நான் நினைச்ச உன்னை வேலைய விட்டு தூக்கிருவேன் ஜாக்கிறதை. அதுமட்டும் இல்ல நீ என்னுடைய புருஷன் உன்கிட்ட தானே கேட்க முடியும்..."

" இவ்வளவு நேரம் வருதேடுத்துட்டு இப்பா தான் உனக்கு புருஷன்னு ஞாபகம் வருதா.. " அவள் அருகில் செல்ல. " ஹலோ இப்ப எதுக்கு கிட்ட வர நான் உன்னோட பாஸ்... நீ இப்படி எல்லாம் பண்ண அப்புறம் வேலையிலிருந்து நீக்கிருவேன்..."


" மேடம் அப்பிடியேல்லாம் பண்ணிடாதீங்க மேடம்.... இப்ப தான் எனக்கு கல்யாணமாகி பத்துநாள் ஆகுது, நீங்க என்ன வேலையிலிருந்து தூக்கிட்டா அப்புறம் என் பெமிலி எப்பிடி மேடம் ரன் பண்றது. என் ஒயிப்பை படிக்க வேற வைக்கனும் பிளீஸ் மேடம் வேலையில இருந்து எடுத்துடாதிங்க மேடம்.... நீங்க என் மேல கோவமா இருக்கிங்க நினைக்கிறேன். நான் வேணா என் ஒய்பைச் சமாதானம் செய்வது மாதிரி உங்களையும் சமாதானம் பண்றேன்...." இன்னும் கொஞ்சம் அருகினில் செல்ல அவ்விடத்திலிருந்து எழுந்துபின்னாடி சென்றாள்.

" நீங்க சமாதானம் பண்ண வேண்டாம் நான் சமாதானம் ஆயிட்டேன். உங்களை வேலைலிருந்து தூக்க மாட்டேன். நீங்க போய் உங்க வேலைய பாருங்கள்..."

" நீங்க இன்னும் கோவாமா தான் இருக்க மாதிரி தெரியுது மேடம். அதுனால, நான் கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்தா உங்க கோபம் போயிரு மேடம்... " இன்னும் அருகினில் வர,

" அதேல்லாம் உங்க ஒயிப் கிட்ட வைச்சுகோங்க இதேல்லாம் எங்கிட்ட வேணா " என்றவள் இன்னும் செல்ல.

" சரி நான் ஒயிப் கிட்டே வைச்சுகிறேன்" என்று இன்னும் முன்னேற,

" வாங்க மாமா " கதவைப் பார்த்து சொல்ல அவனும் திரும்ப அவளோ வேகமாக கார்த்தியைத் தள்ளியவள் கதவு அருகே சென்றவள், அவனிடம் பழிப்பு காட்டிவிட்டு வெளியே சென்றாள்


' இது கனவா இல்ல நினைவா அவனேயே கில்லி பார்க்க' " ஆ.....'" இது நினைவது தான்.

' இந்த ராட்சஸி வீட்டுல தான் இம்சை பண்றானா, ஆபீஸ்க்கும் வந்து இம்சை பண்றாளே! இவ எதுக்கு இங்க வந்தா? ' வெளியே சென்று பார்க்க, அவள் அந்தச் சுவரைக் காட்டி மேனேஜரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. 'இவ ஏன் மேனேஜர் கிட்ட பேசிட்டு இருக்கா? ' யோசித்தவாறே அங்கயே நின்றான்.

" என்ன கார்த்திக் இங்க நிக்கிற?"

" இல்லாப்பா கீர்த்தி... ஏன் மேனேஜர் கிட்ட பேசுறானு பார்க்குறேன்? "

" அதுவா வா உள்ளவா சொல்றேன் " சொல்லி ரகுநாத்தும் கார்த்திக்கும் உள்ள செல்ல

" கீர்த்திக்கு, வீட்டுல தனியா இருந்தா போர்ரடிக்கும் இன்னும் காலேஜ் திறக்க பத்து நாள் இருக்கு. அதுவரை ஆபீஸ்ல இன்டிரீயர் டிசைன் பண்ண வேண்டியது இருக்குல அதான் அவ அத பண்ணட்டும்னு அவள ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்தேன்.. "

" அப்ப கீர்த்தியும் ஆபீஸ்க்கு வருவாளா "

" டேய் வழியிது துடை, அவ ஆபீஸ் வரது இருக்கட்டும் நீ ஒழுங்க வேலையா பாரு ...." என்றார், கார்த்திக்கு குஷியானான்..

சாப்பிடும் நேரம் வர, அவளை அழைக்க வந்திருந்தான் கார்த்திக்.அவள் பாதி வரைந்துகொண்டிருந்தாள். அவளை வரைவதைப் பார்த்து நின்றிருந்தான்,. கண்ணசைவும் உதட்டைச் சுளிப்பதையும் ரசித்து அங்கே மறந்துநின்றான் தான்வந்த வேலையை...


" ஹலோ புருஷா ஏன் இப்படி நிக்கிற?"

" அதுவா ஓவியத்தை ரசிச்சுட்டு இருக்கேன்.... "

" இன்னும் வரைஞ்சே முடிக்கல, அதுக்குள்ள என்னடா ரசிக்கிற அங்க..."

" நான் அத சொல்லல இந்த ஓவியத்தை சொன்னேன் " என்று கீர்த்தீயை காட்ட, " ஸ்ஸாப்பா.... முடியல "

" என்ன மேடம் சாப்பிட வரலையா?"

" ஓ... டைம் ஆச்சா சரிவா சாப்பிட போலாம்...."
இருவரும் சாப்பிட போனார்கள். பி நேரம் செல்ல, தன் அலுவலகம் நேரம் முடிந்ததும் அனைவரும் கிளம்ப, கார்த்திக்கு கீர்த்தியை அழைக்கச் சென்றான். கொஞ்சம் பெயிடிங் முடிந்திருந்தாள்.

" போலாமா..." என்று கேட்டு அவளுக்கு உதவிச் செய்தவன், அவள் முகத்தில் மூக்கின் அடியில் மெல்லமாய் பெயின்டில் மீசை வரைந்தான்.

" அவ மூக்கைச் சுருகினாள். டேய் கார்த்தி ஏன்டா இப்படி பண்ற? "

" ஆங்... உனக்கு மீசை வரைந்தா எப்படி இருக்கும் பார்த்தேன், நல்லத்தான், இருக்கு " என்றதும் அவ மீசை முறுக்கி காட்டினாள்... இருவருமாகச் செல்பி எடுத்துகொண்டனர்.... வீட்டிற்கும் சேர்ந்தே வந்தனர்... அதன் பின் இரவு அவன் நெஞ்சிலே தலைவைத்தே உறங்கிபோனாள் அசதியில்.

இவ்வாறே அந்த பத்துநாட்களும் ஆபீஸ் சென்று, அங்கே கீர்த்தி தன்னுடைய வேலையைப் பார்த்தாலும் காரத்திக்கை வம்பிழுப்பதும் அவனை வேலைச் செய்யாமல் விடாமல் செய்து. ரகுநாத்திடம் திட்டு வாங்க வைப்பாள்.... கார்த்திக்கைப் பாடாய் படுத்தியெடுத்தாள். கார்த்திக்கிற்கு கோபம் வந்து திட்ட வந்தாலும் முத்தமிட்டு சாந்தமாகிடுவாள்.. பத்துநாளிலும் ரகுநாத் கொடுத்த வேலையும் செய்துமுடித்தாள் கல்லூரி திறக்க கல்லூரிக்குச் சென்றாள்.. அவன் ஆபீஸ்ல இருந்து வரவரைக்கும் வேலைச் செய்பவள், அவன் வந்ததும் அவனைக் கடுப்பேத்த கையில புக் எடுத்து கொண்டு அமர்வாள், அவனும் அவளைத் தொந்தரவு செய்யமாட்டான். ஆனால் இதெல்லாம் தன்னை கடுப்பேத்த என்றே அறிந்துகொண்டவன் அவளிடம் வம்புசெய்வான்... இவ்வாறு இருவரும் முட்டிகொண்டும் மோதிகொண்டு காதலும் செய்துகொண்டு தன் வாழ்நாட்கள் அழகாக்கினர்.

வெகுநாட்களுக்கு பின்
ரகுநாத் இரவில் தனியாய் அமர்ந்து மதுபானத்தோடு அமர்ந்திருந்தார்... அவரைத் தேடி வந்த கார்த்திக் அவரோடு இணைந்து கொண்டான்... இருவரையும் தேடி அவர்களைஅழைத்துகொண்டே கீர்த்தி வர அவள்,அரவம் கேட்டு மறைத்து வைக்கிறேன் என்று மாட்டிக்கொண்டனர்...

" மாமா அத எடுங்க " கீர்த்தி சொல்ல இருவரும் முழித்தவாறே, அத எடுத்து வைக்க முறைத்தாள்..

" மாமா நீங்க கார்த்திய கெடுக்கிருங்களா? இல்ல அவன் உங்கள கெடுக்குறான?"

" ஆமா அப்பிடியே அவரை கெடுத்துட்டாலும். அவர் தான் முதல்ல தொடங்கினார். நான் இடையில் தான் வந்தேன் " என்றதும் ரகுநாத் கார்த்திக்கை கண்டு முறைத்தார்...

" சரி விடு கீர்த்தி, இன்னிக்கு ஒரு நாள் ப்ளீஸ் " எனக் கெஞ்ச " ஒ.கே பட் கார்த்திக் நீ குடிக்க கூடாது " என்றதும் முகத்தைத் தொங்க போட்டான், " சரி கீர்த்தி, நான் குடிக்கல நீ போ, நான் அவருக்கு கம்பேனி கொடுக்கிறேன்..."

" நீ கம்பேனி கொடுக்கிறீயா, அப்ப நானும் கொடுக்கிறேன்.. " என்று அருகில் அமர்ந்தாள்.. ' ச்ச.. அந்த சாக்ல குடிக்கலாம் பார்த்தா, பட்டறையே போட்டுடாளே... '

ரகுநாத் குடிப்பதைக் கண்டவள், ' குடிக்கிறவங்களை காலை எழுந்த மறப்பாங்கன்னு சொல்லுவாங்க, இதையே சாக்கா வைச்சு மனசில இருக்கிற கேட்டிட வேண்டியது தான் ' என எண்ணியவள்,

" மாமா உன்கிட்ட கேட்கணும் இருந்தேன் கேட்கவா ? "

" கேளுமா... "

" நீங்க, ஏன் கார்த்திக் அம்மா இறந்ததுக்கப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ணல? கார்த்திக்கு பிறக்கும் போது உங்களுக்கு எத்தனை வயசுமாமா ?" அவனுக்கும் இந்த கேள்வி மனதில் இருந்ததுதான். ஆனால் கேட்டு கஷ்டபட கூடாதென்று அமைதியாக இருந்தான்...

" கார்த்திக் பிறக்கும் போது எனக்கு முப்பது வயசு மா...."

" அப்ப ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணல உங்களுக்கு யார் மேலயையும் கரஸ் வரலயா?"

" அதுவந்துமா கார்த்திக் மூனாவது படிக்கும் போது அவனோட டிச்சரை எனக்கு பிடிச்சதுமா. அவங்களுக்கும் என்னை பிடிச்சுருந்தது. கல்யாணம் பேச்சு எடுத்தோம், அப்ப தான் எனக்கு அவள பத்தி புருஞ்சது.
அந்த பொண்ணுக்கு பணத்து மேல தான் ஆசைன்னு, அப்புறம் கார்த்திக் தவிற
வேற எதுவும் முக்கியமில்லன்னு அத பத்தி
யோசிக்கவே இல்ல," என்றதும் இருவரும் முகம் வாடா.... அவரை கலாய்க்கவே,

" சரிமாமா, இப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?"

" எனக்கு யாருமா இந்த வயசுல பொண்ணு தருவா?"

" ஓ.,, அப்ப உங்களுக்கு இந்த வயசுல கல்யாணம் பண்ணிக்கணும் ஆசை வேற இருக்கா.." கீர்த்தி கேட்க, அவனோ தலையில அடித்துகொண்டான்.

" எனக்கு ஒரே ஒரு ஆசை தான் மா. நீ எனக்கு பேரனோ பேத்தியோ பெத்து கூடு அது போதுமா... "

" இல்ல மாமா நான் உங்களுக்கு பொண்ணு பார்க்கிறேன். எங்க லெக்கசர்ரர் ஒன்னு உங்க வயசு தான் இன்னும் கல்யாணம் பண்ணவே இல்ல அதை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா ? " என கேட்க ' அடிப்பாவி எங்கப்பா போதையில இருக்காருன்னு என்னெல்லாம் சொல்லுறா இவ... '

" ஆங்,......... வேணா வேணா அப்புறம் காலேஜ்ல என்னை வருத்து எடுக்கிற மாதிரி இங்கையும் மாமியாரா வந்து என்னை வருத்து எடுக்கும். அதுனால உங்களுக்கு வேற பொண்ண பார்க்கிறேன் மாமா.. " என்றதும் "விட்டா ஜாகதம் பார்க்கவே ஆரம்பிச்சிடுவ, நீ வா முதல்... " என இழுத்து அறைக்கு சென்றான்.. அவர் சிரித்துகொண்டே தொடர்ந்தார்.

கார்த்திக் இதான் சரியான நேரம் அவரு மனசில இருக்கிறத கேட்கலாம்,
விடு நான் மாமா கிட்ட பேசணும் "

" படு டி பேசாமா " என்றதும், கார்த்திக்கைப் பார்த்து," மாமா அவரு பாவம். கல்யாணம் பண்ணிவைக்கலாமா? " விளையாட்டாய் அவனைக் கடுப்பேத்த கேட்க,

" லூசாடி, அவருக்கு இப்ப போய் கல்யாணம் பண்ணலாம்மான்னு கேட்கிற? "

" அவருக்கு ஆசை இருக்கும்லடா "

அவர் ஆசை தானே, அவர்
ஆசை படுறது நாம அவருக்கு பேரன்பேத்திபெத்து கொடுக்கணுமா, அந்த ஆசைய வேண நிறைவேத்துவோமா " அவள் அருகே செல்ல, " ஆங்,., எனக்கு தூக்கம் வருது கார்த்திக் " அவன் மடியில படுத்துகொள்ள, ' ராட்சஸி, உனக்கு இப்ப மட்டும் உனக்கு தூக்கம் வருமே.... ' என்று சலித்து கொண்டாள்.

காலை அழகாய் விடிய அன்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் தாமதமாகவே எழுந்தாள் கீர்த்தி..

" குட்மார்னிங் கார்த்திக்.. " என்று இன்முகமாய் அவளிருக்க, அவளுக்கு நேர் எதிர்முகமாய் முறைத்துக் கொண்டிருந்தான்... " என்ன கார்த்திக் ஏன் கோபமா இருக்க ? "

" நீ பண்ண கூத்து இருக்கே எனக்கே கண்ணக்கட்டிருச்சு....
இந்தா இந்த வீடியோவ பாரு " அதை காட்ட, ' ஆத்தி இத வீடியோவே வேற எடுத்துவச்சிருக்கிறானே.. '


" ஏன் கார்த்திக் அவர் குடிச்சுதானே இருந்தார் அவருக்கு நான் பேசினதெல்லாம் நியாபகம் இருக்குமா ? " என அப்பாவியாய் அவள் கேட்க, " ம்ம்... கோபமா இருக்கார்.உனக்காக தான் காத்திட்டு இருக்கார்.., என்ன பண்ண போறாரோ?"

" கார்த்திக், மாமா வீட்டைவிட்டு அனுப்பிடுவாரா ? நான் உன் கூட வாழனணும் கார்த்திக் " என அழுக, அவனுக்குச் சிரிப்பு வர, அடக்கியவன், " சரி சரி கீழ வா சமாளிப்போம்.. " என்றான் அவளும் குளித்து கீழே வந்தாள்.. கார்த்திக் பின்னால் ஒளிந்தவாறே

அவள் வருவதைப் பார்த்து சிரித்தவர், " வாம்மா உன்னுடைய காபிக்காக தான் வெய்ட்டிங் " என்றதும் முகம் மலர்ந்தது, " மாமா உங்களுக்கு ஏன் மேல கோவம் இல்லையா?"

" உன் மேல எனக்கு ஏன்மா கோபம் வரபோகுது. நேத்து நீ என்னோட நல்லதுக்கு தானே கேட்ட, நீ பண்ற சின்ன சின்ன விசயம் எனக்கு உன் மேல் பாசம் கூட்டுது.. இந்த வீட்டுல ஒரு பொண்ணு இருந்தா இப்படி தான் துறுதுறுன்னு சேட்டைப் பண்ணிட்டே இருப்பா..நீ எனக்கு பொண்ணுமா, அதுனால எனக்கு உன் மேல கோபமே வராது" என்றார் கனிவாக,

கீர்த்தி, கார்த்தியைப் பார்க்க, அவன் வேற எங்கையோ பார்த்தான்... அவனை முறைத்துகொண்டே கிச்சனுக்குள் சென்று காபி கலந்தாள்.. அவனும் உடன் வந்தவன் அவளை அணைக்க அவனிடமிருந்து பிரிந்தாள்..

" ஹேய் உங்கிட்ட கொஞ்சம் விளையாடுலாமேனு அப்படி சொன்னேன் டி கோச்சுக்காதடி"

" போடா நான் எவ்வளவு பயந்தேன் தெரியுமா? "

" அப்பிடிங்களா... " அவளைத் திருப்பினான்.
அவளோ முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டாள்..." அம்மோ சரியான நடிப்புகாரிடி நீ...." என்றான்.


மமுறைத்தவள் அவனுக்கு இன்னும் கிட்ட நெருங்கி " அந்த வீடியோவ டெலிட் பண்ணுடா.. " மெதுவாய் கேட்க,அவன் அவளுக்கு பழிப்புக் காட்டிவிட்டு " போடி, என்னைய ஆபீஸ்ல அப்பாகிட்ட மாட்டிவிட்டேல, அதுனால இத வச்சு கொஞ்சம் நாள் ஆட்டம் ஆடலாம் நினைக்கிறேன்" என்றான் அமர்த்தலாக,

" அத டெலிட்பண்ணு, " என்று கெஞ்ச
அவள் முன் தொலைப்பேசியைக் காமித்து ஆட்டினான்அவள் அதைப் பிடுங்க முயல, அவன் இன்னும் மேலே தூக்கிக் காட்டுகினான் அவளும் அதைக் குதித்துப் பிடுங்க முயல, அவன் மேலே விழுந்தாள். அவளை இறுக்கி அணைத்து முத்தம் கொடுப்பதற்குள், ரகுநாத் " கீர்த்திமா காபி" என்றிட, அவனைத் தள்ளியவள் காபி எடுத்துகொண்டு வெளியே சென்றாள். அவனும் சிரித்துக்கொண்டே
வெளியேவந்தான்.

அதன் பின் தேவி, தருணும், கிருஷ்ணனும் ஜீவா வற்ர, அங்கே வீடே குதுகலமானது. சிறுவர்கள் அனைவரும் ஊர்சுத்தினர், பின் வீடு வர தேவியின் கையால் சமையல் கமகமக்க, அதனை உண்டனர். இதற்கிடையே கீர்த்தீடம் போனைக் காட்டி மிரட்ட, அவன் சொல்லுவதையெல்லாம் செய்தாள் கீர்த்தி. இதனைப் பார்த்த சக்தி, கார்த்திக் அசந்த நேரம் போனைப் பிடிங்க மாட்டிக்கொண்டாள்... "


பெரியவர்களிடம் இப்படி பேசக்கூடாதென்று திட்டி அறிவுரை சொல்ல கோபமாக தன்னறைக்கு சென்றாள்..

கோபத்தில் சோபாவில் படுத்துக்கொண்டாள். அவளைச் சமாதானம் செய்ய வருவான் என்று எண்ணியவளுக்கோ ஏமாற்றம். தன்னறைக்கு வந்தவனோ உறங்கச் சென்றான். அவளும் கோபமாக இருத்தவள் உறங்கிப்போக, இரவு பன்னிரெண்டை தோட, தன்னை ஏதோ அழுத்துவதாயிருக்க, விழிதிருந்தவள், அருகில் படுத்திருந்த கார்த்திக்கைக கண்டு முறைத்தாள்.


" என் குறும்பு பொண்டாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்ள்.ஹாப்பி ப்ர்த்டே மை லவ்வபில் சேட்டைகாரி... " என்றதும் எழுந்து ஆச்சர்யம் கொண்டாள். அவள் கழுத்தில் ப்ளாட்டினம் செயின் ஒன்றைப் போட்டுவிட்டான். அதில் kk என்றிருந்தது. அதில் ஒரு முத்தத்தைக் பதித்தவன். கன்னத்திலும் கொடுத்தான். இன்னும் ஆச்சரியம் மாறாது அவனையே பார்த்திருந்தாள். அவள் இதழை நோக்கி குனிந்தான். கதவை தட்டும் சத்தம் கேட்க இருவரும் சிரித்துக் கொண்டனர்.. குடும்பமே கட்டிக்கையுடன் நின்றனர். கீர்த்தியும் அதனை வெட்டி, அனைவருக்கும் ஊட்டிவிட்டாள். மறுநாள் குடும்பமாய் குழந்தைகள் காப்பகம் சென்று அங்கே குழந்தைகளோடு கொண்டாடினர்.

வருவான்..
 
Top