கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 23

Chithu

Moderator
Staff member

வருவான் 23
கார்த்தியும் கீர்த்திக்கும் கல்யாணம் ஆகி ஒன்றை மாதம் ஆயிருந்தது. அந்த ஒன்றை மாதம் அவர்கள் இருவரும் செய்த கலாட்டாவிற்கு அளவே இல்ல.

அப்புறம் அடுத்த புத்தாண்டு வர எல்லாரும் கீர்த்தி வீட்டில் அந்த புது வருடத்தைக் கொண்டாடினார்கள்.


அங்கே கீர்த்தி,கார்த்திக், அர்ஜூன்,ஆர்த்தி,ப்ரதீப்,சனா,ஜீவா,சக்தி,வர்ஷா,அஜய்,தருண் இருந்தனர். பெரியவர்களும் எல்லாரும் இருக்க மணி பன்னிரெண்டைத் தொட எல்லாரும் ஹாப்பி நியூ இயர் சொல்லி மகிழ்ந்து கொண்டாடினார்கள். கொஞ்சம் நேரம் அரட்டை அடித்துவிட்டு உறங்கச் சென்றனர்.

காலையில வழக்கம் போல கீர்த்தியின் அன்னை கோவிலுக்கு அழைக்க அனைவரும் கிளம்ப, கார்த்திக் மட்டும் " நான் வரல நான் கிருஷ்ணன் மாமா கூட, இங்க இருக்கேன் " என்றதும் கிருஷ்ணனும் " உங்க இஷ்டம்
மாப்பிள்ளை " என்றார், கீர்த்தி தான்

" கார்த்திக் ஏன் கோயிலுக்கு வரமாட்டேங்கற?"

" எனக்கு கோயிலுக்குப் போறது சுத்தமா பிடிக்காது. உனக்கு தெரியும்ல அப்பறம் என் கேட்கிற? "

" அப்ப ஏன் போன வருசம் மட்டும் வந்த? "

" அது உன்னை கரெட்டு பண்ண வந்தேன். இப்ப தான் நீ என் பொண்டாட்டி ஆயிட்டேல. அப்ப எதுக்கு வரணும். நீ போய் கும்பிட்டுவா நான் வரலை" என்றவனின் காதைத் திருகினாள்.

" ஸ்ஸ்ஆஆஆஆஆ....... வலிக்குது விடுடி..... "

" ஏன்டா, கரெட் பண்ணவருவ. கல்யாணம் பண்ணிட்டா வரமாட்ட " இன்னும் திருக,

" வரேன் விடுடி " கார்த்திக் வலியில் கூறவே அவனை விட்டாள்.

" ராட்சஸி வலிக்குதுடி" அவள் பின்னே செல்ல, அவரோ சிரித்தார்.

எல்லாரும் சாமியைத் தரிசிக்க கார்த்திக் மட்டும் கீர்த்தியைப் பார்த்து கொண்டே நின்றான். ஐயர் குங்குமத்தை கொடுக்க. கீர்த்தி அதை அவன் நெற்றியில் பூசிவிட்டாள்.

எல்லாரும் பிரகாரத்தை சுத்திவிட்டு அமர்ந்தனர் " நாம எல்லாரும் ஓடி பிடிச்சு விளையாடுவோமா?" கார்த்திக் கேட்க,

" ஏன்டா சின்ன பிள்ளை மாதிரி ஓடி பிடிச்சு விளையாடுவோமானு கேட்குற?" ப்ரதீப்

" இதுல என்ன இருக்கு ? போன வருஷம் கூட , இதே கோயில்ல நாங்க
விளையாடினோம் ,அதுனால இப்ப
எல்லாரும் விளையாட போறோம். நீ வர்றீயா? "எனவும்

கார்த்திக்கிடம் அனைவரும் ஒ.கே சொல்ல எல்லாரும் விளையாடத தயாராக, கீர்த்தியும் செல்ல எத்தனிக்க கீர்த்தியின் அன்னை அவள் கையைப் பிடித்து தடுத்தார் .

" அம்மா நானும் விளையாட போறேன்மா.."

"கீர்த்தி, உனக்கு கல்யாணம் ஆயிருச்சுமா. குழந்தை மாதிரி பண்ணாம அமைதி உட்காரு "

" ஏன் அத்தை எனக்கு தான் கல்யாணம் ஆயிருச்சு நானும் விளையாடக்கூடாத?"

" இல்ல மாப்பிள்ளை, கீர்த்தி விளையாட வேணாம். நீங்க போய் விளையாடுங்க " என்றார். சரி என்று கார்த்திக்கும் விளையாடச் சென்றான். எல்லாரும் விளையாட கீர்த்தி அவர்களே பார்த்துகொண்டு அமர்ந்திருந்தாள்.. கார்த்திக் விளையாடினாலும் கீர்த்தியின் மேல கண் இருந்தது.

" கீர்த்திமா உனக்கு கல்யாண ஆகி ஒன்றை மாதம் ஆயிருச்சு இப்படியெல்லாம் விளையாடக் கூடாது எப்ப வேணா என்னவேணா நடக்கலாம் கீர்த்தி. சின்ன பிள்ளை மாதிரி இருக்க கூடாது புரியதா... " அவர் கூற புரிந்தவள் அவ அன்னையைப் பார்க்க " என்னமா நீ மாப்பிள்ளையும் சந்தோஷ்மா இருக்கீங்கள?"
அவர் கேட்க

அம்மாகிட்ட எப்படி சொல்லறது படிக்கிறதுனால நாங்க தள்ளி போட்டிருக்கோம்,. இத சொன்னால், அம்மா எப்படி எடுத்துப்பாங்க எதாவது சொல்லுவாங்களா ? ' என உள்ளுக்குள்ளே பல கேள்விகளையோசித்து கொண்டிருந்தாள்.

" என்னமா நான் கேட்டதுக்கே பதில் சொல்லல?"

" ஆமாமா, நாங்க சந்தோஷ்மா தான் இருக்கோம்னு " பாதி உண்மையம் பாதி பொய்யையும் சொல்ல, அடுத்து அவர் கேட்பத்ற்குள் கார்த்திக்கும் அங்கேவர தேவி அமைதியானார்.

ஆனால் கீர்த்தியின் முகம் தான் வாடி இருந்தது. அங்கே அவர் இருந்ததானால் கேட்கவில்லை அவன். அதன் பின் வீட்டிற்கு வர, அங்கே கலகலப்பாக சென்றது... கீர்த்தியின் முகம் வாடி இருக்க, அவளிடம் கேட்டும் மறுத்துவிட்டாள். அதனால் கோபம்கொண்டான் கார்த்திக்.


இரவில் தங்கள் வீட்டிற்கு வந்தனர், அங்கே ரகுநாத் அமர்ந்திருந்தார் ஹாலில்..
" வாங்கப்பா எப்படி இருந்தது இந்த நியூ யேர்?"

" நல்லாருந்ததுப்பா " என்றவரின் அருகில் அமர்ந்தான்.

" மாமா, உங்களுக்கு டின்னர் என்ன பண்ண?. "

" நான் சாப்பிடேன்மா நீ போய் ரெஸ்டு எடுமா " என்றார். கீர்த்தியும் " சரி மாமா " என்று சொல்லிகொண்டு தன் அறைக்கு வந்தாள். கார்த்திக்கும் கொஞ்சம் நேரம் ரகுநாத்திடம் பேசியவன் தன்அறைக்கு வந்தான். அவளோ அவனுக்காகக் காத்திருக்க. அவனோ ஆடைமாற்றி சோபாவில் படுத்துகொள்ள அவனிடம் வந்தாள்.


" ஹேய் கார்த்தி ஏன் இங்க படுத்திருக்க?"

அவன் பதிலே சொல்லாமல் போனயே பார்த்துகொண்டிருந்தான்.

" கார்த்திக், நான் உங்கிட்ட தான் பேசிறேன். நீப்பாட்டுக்கு போனேயே பார்த்துட்டு இருக்க..." அதற்கும் பதில் இல்லை அவனிடமிருந்து போனை பறித்தாள்.

" என்னடி வேணும் உனக்கு? "

" எனக்கு பதில் சொல்லு. இப்ப நீ ஏன் இப்படி நடந்துக்குற ? ஏன் எங்கிட்ட பேசமாடிக்கிற ?எதுக்கு இங்க வந்த படுத்திருக்க?"

" உன்கிட்ட எதுக்கு நான் பதில் சொல்லணும். நான் காலையிலருந்து நாய் மாதிரி உன் பின்னாடியே சுத்தி என்னாச்சு கீர்த்தினு கேட்டேன்ல சொன்னியாடி? இப்ப நீ கேட்டதும் நான் மட்டும் ஏன் சொல்லணும் நினைக்கிற?
சொல்ல முடியாது போய் படு " என்று கோபமாகத் திரும்பிக்கொண்டான், அவளோ அங்கே முட்டிப்போட்டு அமர்ந்தவள். அவனையே பார்த்துகொண்டிருந்தாள்,, அவன் திரும்பவே இல்லை. அவன் கழுத்தில் முகம்புதைத்து அழுதாள். அவள் கண்ணீர் சூட்டைக் கண்டு அவளை தன்மேல் போட்டுக்கொண்டான்

" கீர்த்திமா, நீ சொன்னா தான்மா தெரியும் என்னாச்சுனு அழமா சொல்லுமா?"

அவ காலையில நடந்ததைச் சொல்ல
" இதுக்கு தான் நீ இவ்வளவு பீல் பண்றியா? "

" இல்ல கார்த்திக், நம்ம தள்ளிப்போட்டிருக்கோம், அவங்கிட்ட அத மறைச்சுடேனே. கொஞ்ச நாள் கழித்து அவங்க குழந்தை எதிர்பார்த்து கேட்டா என்ன பண்றது? அது மட்டுமில்ல படிப்புக்குகாகத்தள்ளி போட்டுருக்கோமுன்னு தெரிஞ்சா வறுத்தபடுவாங்க கார்த்திக்"

" இது நம்ம வாழ்கை கீர்த்தி, நம்ம எடுக்குற முடிவு தான் இங்கே. பெரியவங்களோட அறிவுறைகள் வழிகாட்டல் இருக்கலாம் . அதுக்காக அவங்களோட முடிவுகள் நம்மகிட்ட திணிக்கிறது தப்பு... எங்க அப்பாவும்சரி உங்க அம்மாவும் சரி குழந்தை எதிர்பார்க்க தான் செய்வாங்க...

அதுக்காக, அவங்க, ஆசைக்காக நாம குழந்தைப் பெத்துக்க போறது இல்ல... நம்முடைய ஆசைக்காக, எப்ப நமக்கு இஷ்டமோ அப்ப பெத்துகலாம் புரியுதா.. அப்பிடியே எங்க அப்பாவோ உங்க அம்மாவோ கேட்டாளோ இப்பதைக்கு விரும்பம் இல்ல சொல்லிடு... " என்றான்.

" உனக்கு குழந்தை பெத்துக்கணும் ஆசை இல்லயா கார்த்தி? "

" நான் மட்டும் ஆசைப்பட்டா போதுமோ? நீயும் ஆசைப்படுனுமில்ல கீர்த்தி... "

" அப்ப, எனக்குகாக தான் உன் ஆசைய தள்ளி போட்டுருக்கியா கார்த்திக் " .

" இல்ல கீர்த்தி, உன்னுடைய லெக்சரர்ர கனவைநிறைவேத்திட்டு அப்புறம் என்ஆசைய கான்சிடெர்பண்ணிக்கலாம் விட்டுட்டேன். எனக்கு என் கீர்த்தி சந்தோஷ்ம் தான் முக்கியம்"

" அப்ப எனக்கு என் கார்த்தியோட, சந்தோஷ்ம் தான் முக்கியம்."

" ஓய் அப்ப குழந்தை பெத்துகலாம் சொல்லுறியா..,."
" ஆமா நான் m.sc முடிச்சதும் பெத்துகலாம்...."

" அப்ப உன்னுடைய கனவு?"

" அதையும் நிறைவேத்தலாம் நீ என் கூட இருந்தால்...." என்று கண்சிமிட்ட,

" கீர்த்தி, நீ உங்க அம்மாகிட்ட மறைக்கிற அது உன் இஷ்டம். அத நான் எதுவும் சொல்ல மாட்டேன்..ஆனால், நீ என்கிட்ட எதையும் மறைக்க கூடாது. உன்னுடைய துக்கத்தையும் சந்தோஷ்த்தையும் சேர் பண்ணதான் நான் இருக்கேன். இன்னக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா நான் எவ்வளவு கேட்டும் நீ சொல்லாதது"

" சாரிடா புருஷா. உன்கிட்ட சொல்லணும் தான் இருந்தேன். அங்க எல்லாரும் இருந்தனால உங்கிட்ட சொல்ல முடியல"

" சரி விடுமா....."

" சரிடா போய் தூங்கலாம்"

" இங்கயே தூங்கலாமே...."

" ஓய் எனக்கு இடம்? நான் உன் மேல படுத்துருக்கேன்டா"

" பரவாயில்லை டி அங்க தூங்கின்னா கொஞ்சம் கேப் இருக்கும். இங்க கேப்பே இல்ல அதுனால இங்கயே தூங்குவோம் " என்றவனை அணைத்துக் கொண்டு உறங்கினாள்.

அப்பிடியே வாரங்கள் ஓட பொங்கல் பண்டிகை வந்தது, கீர்த்திக்கு இது தல பொங்கல் என்பதால் கண்டிப்பா "கீர்த்தி, நீ வீட்டுல பொங்கல் வச்சுட்டுதான் அம்மா வீட்டுக்கு வரனும் "என்று சொன்னார் தேவி... மறக்காமல் சேலைக் கட்ட சொல்ல. அவளுக்குச் சேலை கட்ட தெரியாது. கன்னத்தில் கைவைத்து அமர்த்திருந்தாள். அவளது நிலையை கண்டு சிரித்தான் அவன்,

" ஏன்டா சிரிக்க நானே எவ்வளவு பெரிய கஷ்டத்துல இருக்கேன்...."

" ஹேய் சேலை கட்ட கூட தெரியாத உனக்கு?"

"தெரியாமா தானே இப்படி உட்கார்ந்து இருக்கேன்"

" சரி விடு சுடிதார் போடுக்கோ"

" எதுக்கு எங்க அம்மா கிட்ட திட்டுவாங்க வா?"

" இப்ப என்ன பண்ணலாங்கிற?"

" எனக்கு கேல்ப் பண்ணு "

" ஹேய் எனக்குச் சேலை கட்ட தெரியாது...."

" ஆமா, எனக்கே தெரியில உனக்கு எப்பிடிடா தெரியும்.."

" அப்ப என்னாதான்டி பண்ண சொல்லற?"

" நான் என்ன சொல்றேனோ, அத மட்டும்
செய் கார்த்திக். ஒழுங்க சமத்தா நான் சொல்லுறத மட்டும் செய்யணும். எதாவது சில்மிசம் பண்ண கொன்னுடுவேன்.. "

" ஒ.கேமா தாயே....." என்றவனின் உதவியால் அழகாய் சேலையைக் கட்டிமுடித்தாள்.

கார்த்திக் அவளது இடையைப் பற்றி தன் பக்கம் இழுக்க, அவளோ என்ன என்று புருவத்தைத் தூக்கிக் காட்டினாள்...

" நான் சமத்தா உனக்கு உதவி பண்ணினேன்ல. அதுக்கு எதாவது தரலாமே,
" உதட்டை பார்த்து கேட்க.

" ஒ..... தரலாமே... "

" நிஜமாவா?"

" என் புருஷா சமத்தா கேல்ப் பண்ணிருக்கான். அவனுக்கு தரமா யாருக்கு தர போறேன்...."
என்று அவள் பரிசைக் கொடுக்க, தன் பரிசையும் பெற்றுகொண்டான் அவன்.

கீர்த்தி,தன் வீட்டில் பொங்கலை வைத்து, அங்க சாமி கும்பிட்டதும் தன் அன்னை வீட்டுக்குச் சென்றனர். அங்க அர்ஜூன் குடும்பமும் வந்திருந்தனர். அனைவரும் சேர்ந்தே அந்தப் பொங்கலைக் கொண்டாடினர்.

இப்பிடியே கார்த்திக் கீர்த்தியின் வாழ்கையும் சந்தோசமாகச் சென்றது. தமிழ் புத்தாண்டையும் கொண்டாடி முடிக்க, கீர்த்திக்கு பரீட்சை வந்தது கடைசி வருட, கடைசி பரீட்சை இது..

ஆகஸ்டு மாசம் வரவேண்டிய ஆடி அவனுக்கு ஏப்ரலில் வந்தது...

பராஜக்ட் எக்ஜாம் என்று வர. தன் அன்னை வீட்டுல இருந்து படிக்க போவதாக கூற ரகுநாத் ஒத்துக்கொண்டார்... ஆனால் கார்த்திக் தான் அவளிடம் கெஞ்சினான்..

" ஏன்டி இப்படி பண்ற? எக்ஜாமுக்கு இங்க இருந்து படிச்சா என்னடி? ஏன் உங்க அம்மா வீடுல போய் படிச்சு தான் நீ பாஸ்ஸாவியா? ஏன் இங்க படிச்சு எக்ஜாம் எழுதுன்னா எழுத வர்றதோ?

" கார்த்திக், ப்ளீஸ் நானும் சக்தி சனா டிஸ்கஸ் பண்ணிதான் படிப்போம். அது மட்டுமில்ல உன்னை வச்சுட்டு எப்பிடி படிக்க சொல்லுற? நான் கிளம்பிறேன்.. நீ சமத்தா இருக்கணும் எக்ஜாம் முடிஞ்சு கூப்பிடுறேன். நீ வந்து கூட்டிட்டு போ...." என்றாள்.

" நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்டி, ப்ளீஸ் டி இரு. இல்லேன நானும் அங்க வந்து தங்குறேன். உனக்கு எக்ஜாம் முடிந்ததும் நம்ம இங்க வந்திடலாம்...."

" உன்னை பார்த்தாலே படிக்க தோணாது. அதுனால தான் அங்க போறேன். அங்கையும் வந்து டிஸ்டர்ப் பண்ணாத ஒழுங்க இரு மாமாவ பாத்துக்கோ " என்றவள் அவன் நேத்தியில் இதழ்பதிக்க,


" இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல...." அவன் கெஞ்சினாலும் அவள் உறுதியாக இருந்து சென்றுவிட்டாள்.. அவனும் எக்ஜாம் தொடங்கும் வரை அங்கு சென்றவன், அதன் பின் செல்ல வில்லை. அவளைத் தொந்தரவு செய்யவில்லை போனில் விசாரிப்பதோடு இருக்க, அவனது ஞாபகம் வந்து அழ ஆரம்பித்தாள் கீர்த்தி,

" ஹேய் என்ன நீ தானே எக்ஜாமுனு இருக்குன்னு இங்க வந்த. இப்ப இப்பிடி அழுகிற?"

" இல்லடி அவனை மிஸ் பண்றேன் பார்க்கணும் போல இருக்கு"

" சரி அவனை வரச் சொல்லு...."

" இந்த நேரத்துலையா? எப்பிடி வர சொல்லுறது?அவன் தூங்கிட்டு இருப்பான் "

" அவன் தூங்குவான்னு நினைக்கிறீயா போன போடு பஸ்ட் ரிங்குலே எடுப்பான் பாரு " சக்தி சொல்வது போலவே கீர்த்தி போன் பண்ணின, முதல் ரிங்கிளே எடுத்தான்.

" கார்த்திக் நான் உன்னை பார்க்கணும் வீட்டுக்கு வாடா " என்றுகூட சொல்லி முடிக்கவில்லை போன் கட் ஆனது.

" போன் கட்டாயிருச்சு டி "

" அவன் வந்துட்டு இருக்கான் நினைக்கிறேன். நான் கிளம்புறேன் நீ என்ஜாய் பண்ணு " சக்தி செல்ல, அவள் சொன்னது போவவே அவனும் வந்தான், கார் ஆரவம் கேட்டு அவள் கதவை திறந்தாள்.

கார்த்திக்கை அறைக்குள், அழைத்து சென்றவள்.. அவனைக் கட்டி அணைத்து முத்தமழைதான். அவனும் தான் இருவரும் எல்லை மீற கார்த்திக் சட்டென அவளைவிட்டு விலகிப் படுத்தான்.


" கார்த்திக் உன்னை மிஸ் பண்றேன்டா. உன்னை பார்க்காம சண்டைபோடாமா, இருக்க முடியல நான் அங்க வந்திடவா? "

" கீர்த்திமா , கொஞ்ச நாள் தான் அப்புறம் நீயே அங்க வரலைன்னாலும் நான் உன்னை தூக்கிட்டுப் போயிருவேன். எக்ஜாம் முடிய நானே, உன்னை கூட்டிட்டு போறேன். நீ ஒழுங்க படி நான் கிளம்புறேன் " என்று சொல்லி எத்தனிக்க அவனைப் பிடித்து இழுக்க, அவள் மேல சரிய மீண்டும் போராட்டங்கள் ஆரம்பித்தது... காலையில இருவரும் வெளிய வர அங்க
யாருமில்லை தருண் ஸ்கூலுக்குச் செல்ல, தேவி கோவிலுக்கு சென்றார்.. அப்புறம் கார்த்தியும் அங்கிருந்து கிளம்பினான்.

அவளுக்கும் எக்ஜாம் முடிந்தது கீர்த்தியும் சக்தியும் வெளியே வர அங்கு அர்ஜூன் நின்றிருந்தான்... சக்தி அவனோடு செல்ல.

" ஹேய் கீர்த்தி நீயும் வா டிராப் பண்றேன்...."

" இல்ல கார்த்திக், வருவான் நீங்க போங்க...."

"கார்த்திக்கா, அவன் எதோ பொண்ணுக்கூட போறதை பார்த்தேனே " கீர்த்தியை வம்பிழுக்க கூற

" அப்பிடியா...."

" ஆமாப்பா... உன்னை விட்டு வேற பொண்ணுகூட சுத்துறான் பார்த்துகோ கீர்த்தி " கேலியாக எச்சரிக்கை செய்தான்.

" பரவாயில்லை அர்ஜூன் நீ சக்தி லவ் பண்ணிட்டு சுவீட்டினு ஓரு பொண்ணுகூட" என்று ஆரம்பிக்க அதற்குள் அர்ஜூன் சைகைக் காட்டிட அவனுக்கு பழிப்புக்காட்டினாள்.

" என்ன சுவீட்டி?"

" நமக்கு கல்யாணம் ஆக போதுல அதுக்கு அவளுக்கு சுவீட் வாங்கி தரனுமா" என்றவன் கீர்த்தியிடம் வந்தான்.

" குதுகலமா இருக்க வீட்டுல கும்மியடிச்சுட்டு போயிராதடி. உன் புருஷன் நல்லவன் தான் போதுமா " என்றவன் கிளம்பினான்.

கீர்த்தி, கார்த்திக்காக காத்திருந்தாள்... அவள், முன்னே கார் வந்து நின்றது. ஆனால் அது கார்த்திக்கின் கார் இல்லை. அந்தக் காரிலிருந்து இருவர் இறங்கி கீர்த்தியின் அருகில் வந்தனர். அவள் விலகுவதற்குள் அவளை இழுத்து காரினுள் போட்டுகொண்டு கிளம்பினார்கள்...

வருவான்...

 
Top