வருவான் 24
கீர்த்தீ கார்த்திக்காக காத்துகொண்டிருக்க அவள் முன்னே கார் வந்து நின்றது. அதில் வந்தவர்கள் அவளைக் கடத்திச்சென்றனர்.
அந்த கார், நேராக, அந்தக் காட்ஜேஜின் வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கியவர்கள் கீர்த்தியை விட்டு, எல்லா கட்டுகளையும் அவிழ்த்து விட்டுச் சென்றனர்.
கீர்த்தி, தன் கண்களை கசக்கி விட்டுப் பார்க்க, அங்கே யாருமில்லை. அவள் சுத்திப் பார்க்க, அது அழகான காட்டேஜ்.
அந்த காட்டேஜ்ஜில் பெரிய ஹால் அதில் மாடி இருந்தது அதிலும் ஒரு பெரிய ஹால் அதில் கட்டில் இருந்தது
கீழே ஹால்லை தான்டி கிச்சனும்.. எதிரில் அறைகளும் இருந்தது. மாடியேறி வந்தவள் அங்கே கண்ணாடி கதவினை திறந்து பால்கனிக்கு வர,
அவளிருக்கும் இடமதைத் தவிர மேகங்கள் சூழபட்டு மறைத்திருந்தது.
குளிர் பரவ, தன் கைகளை தேய்த்துவாறு புரியாமல் பார்த்தாள். குளிரில் அவள் தேகம் சிவந்தது, மூக்கின் நுனி கன்னங்கள் சிவந்து போயிருந்தது..
அவளைப் பின்னின்று யாரோ அணைக்க, திரும்பியவளுக்கு அவனைக் கண்டதும் உயிரே வந்தது. கார்த்திக்கை கட்டிக்கொண்டாள் .
" எப்படி கார்த்திக், நீ இங்க வந்த அதுமட்டுல ஏன் அவங்க என்ன இங்க கூட்டிட்டு வரணும்? "
" நான் தான், அவங்கிட்ட சொல்லி உன்னைய இங்கக் கூட்டிட்டு வர சொன்னேன்" சிறுமூரலோடு.
" எதுக்கு ? இது யாரோட வீடு? இங்க ஏன் என்னை கூட்டிட்டு வரச் சொன்ன ?அதுவும் அவங்க இரண்டு பேரும் கடத்திட்டு போறது மாதிரில கூட்டிட்டு வந்தாங்க" என்றாள் கண்களில் பயம் மின்ன,
" ஆமா நான் தான் உன்னைய கடத்த சொன்னேன்" என்றான் அமர்த்தலாக
" அடப்பாவி கட்டுன பொண்டாட்டியே கடத்த சொல்லிருக்க நீயேல்லாம் மனுஷனாடா?"
" கட்டின பொண்டாடியைத் தான் கடத்துவாங்க, ஊரான் வீட்டு பொண்டாட்டியவா கடத்துவாங்க? "
" எதுக்குடா என்ன கடத்திட்டு வந்த?"
" உன்னை வச்சு எங்கப்பாகிட்ட பணம் கேட்க?"
" டேய் விளையாடமா சொல்லுடா?"
" ஹேய் இது நம்ம ஹனிமூனு டி. உனக்கு சப்ரைஸ் பண்ண அப்படி கூட்டிட்டு வர சொன்னேன்"
" நான் எவ்வளவு பயந்துடேன் தெரியுமா இரு மாமாகிட்ட சொல்லிறேன் நீ என்ன கடத்திட்டேன்னு"
" கடத்த சொன்னதே அவர் தான்"
" அடப்பாவி குடும்பமாய்யா இது"
" நீ அங்க இருந்த அத செய்யனும் இத செய்யனும் சொல்லிட்டு ஹனிமூனு வரமாட்டேன்னு சொல்லிடுவியாம், அதான் உன்னை காலேஜ் வாசல்லே தூக்கச் சொல்லிட்டார்.. நான் வேற அப்பா சொல்லை தட்டாத பையனா, அதான் தூக்கிட்டு வந்துட்டேன்...."
அவனை முறைத்தவள்" இது என்ன இடம் நம்ம எங்க வந்திருகோம்"
" நான் ராஜூவோட கல்யாணத்துக்கு இங்க வந்தப்ப ஒன்னு சொன்னேன் நியாபகம் இருக்கா?".
" என்ன சொன்ன? "
" நான் என் பொண்டாட்டிய இங்க தான் ஹனிமூனுக்கு கூட்டிட்டு வருவேன் சொன்னேல அதான் இந்த இடம்"
" இது ராஜூ மாமனார் ஊரா?"
" இல்ல இங்க இருந்து ஒரு ஏழு மீட்டர் போனா ஊர் வந்திடும்"
" அப்படியா அப்ப காடு....."
" அந்த ஊர சுத்தி காடு தான்மா நம்ம அதையும் தான்டி வந்துருக்கோம்....."
" இது யாரோட வீடு......"
" நம்ம வீடுதான்...."
" அப்பிடியா...."
" நான் அன்னைக்கு சொன்னதுபோல இந்த இடத்த வாங்கி இங்க காட்டேஜ் கட்டிருக்கேன் எல்லாம் உனக்காக...." அவனையே கண்கள விரிய ஆச்சரியமாகப் பார்த்தாள்.
" என்ன....."
" இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு கார்த்திக். நான் இந்த மாதிரி இடத்த பார்த்ததே இல்ல ரொம்ப சந்தோஷ்மா இருக்கு "
" இந்த இடத்த விட, நீ தான்டி அழகா இருக்க " அவளை அணைக்க,
" கார்த்திக், நாம அந்த அருவிக்கு போகலாமா...."
" போலாமே... ஆனால் இப்ப இல்ல நாளைக்கு தான்...."
" ஏன் கார்த்திக் " அவள் சிணுங்க,
' ஐய்யோ கொல்லாறாளே ' ப்ளீஸ் போலாம்....."
" ப்ளீஸ் என்னால இப்படி முடியாதுடி நாளைக்கு போலாம்.,.."
" ஏன் இப்ப என்ன பண்ண போற...."
" இப்ப என்ன பண்ண போற இல்ல பண்ண போறோம் " என்றவன் அவளை தூக்கி மஞ்சுத்தில் சேர்த்தவன் இல்லற வாழ்க்கையை அவளோடு தொடங்கினான்.
இரவு தொடங்க அங்கு குளிர் தன்
ஆதிக்கத்தைத் தொடர்ந்தது... கார்த்தி கீர்த்திக்காக சமைத்து மேலே கொண்டு வந்தான்.. கீர்த்தி குளித்துவிட்டு வந்தவள் கார்த்திக்கின் ஸ்ர்ட்டையும் ஸார்ட்ஸ் போட்டுருந்தாள்.. ஸ்ர்ட்டின் கைய்யை முட்டி வரைக்கும் மடக்கி விட்டிருந்தாள் அதைகண்டவனோ அவளை அழைக்க அருகில் சென்றாள்..
" ஹேய் கார்த்திக், இந்த ட்ரஸ் லூசா இருக்குடா என்னை கடத்திட்டு வந்த நீ ஏன்டா ட்ரஸ் எடுத்துட்டு வரல? நீ மட்டும் உன் ட்ரஸ் எடுத்துட்டு வந்துருக்க..."
" மறைந்துடேன் டி. இன்னைக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, நாளைக்கு ஊருக்குள்ள போய் ட்ரஸ் வாங்கி தரேன், வா இப்ப சாப்பிடலாம் "
" ஆமா பசிக்குது....."
இருவரும் சேர்ந்து சாப்பிட்டு அந்த இரவை சந்தோஷ்மா கழித்தனர்..அந்த இரவு மட்டுமல்ல அங்க இருந்த ஒவ்வோரு நாளையும் கீர்த்தி ஆசைப்பட்டது போலவே அந்த அருவியில் குளித்தனர், அப்புறம் அங்கே ஊருக்குள் சென்று சுத்திபார்த்தனர் . அடம்பிடித்து யானை சவாரி செய்தாள். அந்த ஊரிலிருக்கும் இருக்க குழந்தைகளோட விளையாடினாள்...
வயலில் இறங்கி நாத்து நட்டனர்.... அந்த ஊர் பொண்ணுங்களை போல் சேலை கட்டி கார்த்திக்கை கிறங்கடித்தாள்... இப்படி பலபல சந்தோஷ்மான நிகழ்வுகலை கார்த்திக் தன் மனதிலும் புகைப்படத்திலும் பதிந்து வைத்தான்.
இருவரும் திரும்பி ஊருக்கு வர அங்க சக்திக்கும் அர்ஜூனுக்கும் கல்யாணம் பேசி முடித்தனர்...
அந்த மண்டபமே விழாகோலம் கொண்டு இருந்தது... நிச்சயத்தட்டை சக்தியின் தந்தையும் அர்ஜூனின் தந்தையும் மாத்திக்கொண்டனர்..சக்தி தேவதையாக வந்து மணமேடையில நிற்க அர்ஜூன் அவளுக்கு மோதிரம் அணிவித்தான் அவளும் தான்.... அங்க ஒரே சந்தோஷ்ம் தான்.... அர்ஜூனின் மும்பை பிரண்ட்ஸ்ஸூம் அவர்களின் மனைவியோடே வந்திருந்தனர்.
அதில் ஒரு பெண் சக்தியிடம் பேச, அந்தப் பெண்ணுக்கு ஹிந்தி மட்டும் தான் தெரியும் அந்த பெண் ஹிந்தில சக்தியிடம் பேசினாள்.. சக்தியும் அவளுக்கு ஹிந்தில பதில் அளித்தாள்... அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்தவன்,' சக்திக்கு ஹிந்தி தெரியாதே உதவிபண்ணுவோம் ' என நினைத்தவன். அவர்களின் அருகில் செல்ல சக்தி ஹிந்தியில் அந்தப் பெண்ணோடு உரையாடுவதை கண்டவன் அதிர்ந்து நின்றான்...
" ஹேய் சக்தி உனக்கு எப்படி ஹிந்தி தெரியும் இவ்வளவு அழகா ஹிந்தி பேசுற. அப்ப எங்கிட்ட பொய் சொன்னியா ஹிந்தி தெரியாதுன்னு...."
" இல்ல உன்கிட்ட பொய்யெல்லாம் சொல்ல, எனக்கு ஹிந்தி தெரியாது தான். ஆனால் உனக்காக கத்துக்கிட்டேன்.
நீ அன்னைக்கு பீல் பண்ணதுனால, நான் உனக்காக கத்துக்கிட்டேன். அது மட்டுமில்ல உனக்காக சீரியல் பார்க்கிறதையும் கூட விட்டுடேன்....."
அர்ஜூன் அவளை ஆச்சரியம் பார்க்க, இது சின்ன விசயமாக இருந்தாலும் தனக்காக செய்திருக்கும் தன்னவளின் மேல், இன்னும் காதல் பெருக அவளை தூக்கி சுத்த வேண்டுமென்று ஆசை எழுந்து எல்லாரும் இருந்ததினால் கட்டுபடித்திக்கொண்டான்.. " சக்தி இந்த உலகத்திலே ஹாப்பிஸ்ட் மேன்னா நான் தான். எனக்காக இது எல்லாம் நீ செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷ்மா இருக்கு சக்தி.. எங்கிட்ட சீரியலைப் பத்தி கேள்வி கேட்க மாட்டேள...."
" மாட்டேன்... ஐ லவ் யூ அர்ஜூன்" என்றதும் அப்படியே பறத்தான்.... " ஐ டூ லவ் யூ சக்தி " என்றவன் கன்னத்தில் இதழ் பதித்தான்.
அந்த இரவு சந்தோஷ்மா இருக்க... மறுநாள் காலையில அர்ஜூன் மணமேடையில அமர்ந்து மந்திரங்கள் சொல்ல,சக்தி அவன் பக்கத்தில வந்து அமர..ஐயர் தாலி எடுத்துக்கொடுத்து மந்திரங்கள் சொல்லி அர்ஜூன் சக்தி கழுத்தில் கட்டி தன் பாதி ஆக்கிகொண்டான்... எல்லாருடைய ஆசிர்வாதம் பெற்று சக்தி அர்ஜூனின் கல்யாணம் முடிந்தது.
கார்த்திக்கும் அர்ஜூனோட நண்பர்களும் அவனை கலாய்க்க அர்ஜூன் வழிந்துகொண்டே முதலிரவுக்கு தயாராகினான்..... இங்கு சக்தி நிலைமையோ பரிதாபம் கீர்த்தி அவளை கிண்டல் செய்து சக்தியை, அர்ஜூன் அறைக்கு அழைத்து செல்ல அவளை பார்த்து சிரித்துகொண்டே வந்தாள் கீர்த்தி. அங்கே தன் அறையின் வாசலில் அர்ஜூன் சக்திக்காக காத்துக்கொண்டிருப்பதை கண்டவர்களுக்கும் அதிர்ச்சி தான்..
" அட அல்ப, அதான் கூட்டிட்டு வரேன்ல அதுக்குள்ள வாசல்ல வந்து நிக்கிற..."
" எப்படி எப்படி நீங்க கூட்டி வருவிங்க. இவங்க எனக்கு பயமா இருக்குன்னு சொல்லி உள்ளையும் வரமா கீழயும் போகாம, இங்கே நிக்க நீயும் ஏதோ பேசி உள்ள அனுப்பி வைப்ப இதை தான் நான் ஒரு அப்டேட் முன்னாடியே பார்த்துடேன்னே.டைம் தான் வெஸ்ட்டு பண்ண நான் ஒன்னும் கார்த்திக் இல்லமா " என்றவன் சக்தியின் கை பிடித்து இழுத்தவன், " முடிந்தா பத்து நாள் கழிச்சு வா " என்றவன் அவளை அழைத்துகொண்டு கதவைத் தாழிட்டான்.
" அடப்பாவி....." என்றவள் கீழே இறங்க அங்க கார்த்திக் அவளது கையைப்பிடித்து அறைக்குள் இழுத்து சாத்திக்கொண்டான்.. அர்ஜூனின் அன்னை அவர்களை இங்கே தங்குமாறு கேட்டுக்கொண்டதால்.
இந்த இரண்டு ஜோடிகளும் தங்கள் காதல் வாழ்க்கையை இனிதே தொடங்கினர்..
எட்டு மாதங்களுக்கு பிறகு.........
அந்த மண்டபமே ஒரே பரப்பாக இருந்தது... எல்லோரும் தங்களுக்கு உரிய வேலையைச் செய்ய கார்த்திக்கும் அர்ஜூனும் கையில ஜூஸ்ஸோட அலைந்து கொண்டிருந்தார்கள்
" என்ன மாமா கல்யாண வேலையில எல்லோரும் பிஸியா இருக்காங்க, நீங்க இரண்டு பேரும் சர்வர் வேலை பார்த்திட்டு இருக்கீங்க..... " அஜய்
" ஏன் சொல்ல மாட்ட, உங்க அக்காவ கல்யாணம் பண்ணதுக்கு எங்களுக்கு இது வேணும் இன்னும் வேணும் " அர்ஜூன் சலித்துக்கொள்ள,
" ரொம்ப சலித்துகிறீங்களே இருங்க அக்காகிட்ட சொல்லித்தறேன்..." தருண் அவர்களை மிரட்டிடவே.
" டேய் குடும்பத்துல குழப்படி பண்ணிறாத உங்க அக்கா எங்கடா ? " கார்த்திக் தன்னவளைக் கேட்டு நிற்க,
" தெரியல மாமா போய் தேடுங்க...." என்றான் அஜய்.,
" ஏன்டா காதலிக்கும் போது கூட இவங்க பின்னாடி இப்படி சுத்தினது இல்லடா. ஆனால் இப்ப புருஷனா ஆனதும் என்னாமா அலைய விடுறாளுங்க " என நொந்தான் அர்ஜூன்.
" சரிவா நம்மலே கேட்டு வாங்கிக்கிட்டது அப்படி தான் இருக்கும்...." தங்களைச் சமாதானம் செய்துவிட்டு மீண்டும் தேடினார்கள் அவர்களின் மனைவிகளை..
கீர்த்திக்கு இது ஏழாவது மாசம் சக்திக்கு இது ஐந்தாவது மாசம்.. அதான் அவங்க பொண்டாட்டிகளுக்கு ஜூஸ் கொடுக்க அவங்களை தேடி அலைறாங்க.
அங்க கீர்த்தியும் சக்தியும் கல்லூரி தோழியிடம் பேசிக்கொண்டிருக்க, இருவரும் அங்கே வந்தனர்..
" கீர்த்திமா உன்னை ஒரு இடத்துல உட்கார தானே சொன்னேன்.நான் ஜூஸ் எடுத்துட்டு வரதுக்குள்ள எங்க போன நான் உன்னைய எங்க எல்லாம் தேடுறது, இந்த மாதிரி நேரத்துல ஏம்மா அலையிற ?..." கார்த்திக்
" ஐய்யோ ! வந்துட்டிங்கள இரண்டு பேரும்... " சக்தி மீண்டும் கவலையாய் கூற
" கீர்த்திமா இத குடி " அவன் கையில இருந்த ஜூஸ் கொடுக்க அதனை அவள் வாங்க மறுத்தாள்..
" கார்த்திக், இததோட பத்தாவது ஜூஸ் இது முடியல போதும்டா.... " என்றவள் கூற,,.
" ஒழுங்க குடி டி எப்ப ஜூஸ் கொண்டு வந்தாலும் இத தான் சொல்லற பேசாம குடி " என்றவன் திணிக்க அதை வாங்கி குடித்தாள்..... " போய் ஒழுங்க சனா ரூம்ல உட்காரு அலையாத டி ..." என்று கட்டளையிட்டான் .
" போ,கார்த்திக் வரவர நீ என்னை திட்டிட்டே இருக்க.. உனக்கு உன் பொண்ணுமேல தான் அக்கறை என் மேல் உனக்கு அக்கறையே இல்லடா..." செல்லமாக கீர்த்தி கோபித்தாள்.
" ஆமா, எனக்கு என் பொண்ணுதான் பஸ்ட் மத்தது எல்லாம் நெக்ஸ்ட் கார்த்திக் " கூறி அவள் முகம் காண, வாடிய அவள் வதனத்தை கொஞ்சி கொண்டே "அடியே லூசு பொண்டாட்டி , என் வாழ்க்கையில வந்த முதல் பெண் நீ தான். என் முதல் பொண்ணும் நீ தான் " அவள் நெற்றியில் இதழ் பதிக்க வாடிய வதனம் மலர்ந்தது. அவளை அழைத்துகொண்டு சென்றான்.
அர்ஜூனோ பூஜ்ஜிமா, அம்முமா ஏதோகூறி சக்தியைக் குடிக்க வைத்தவன்.. நால்வரும் சனா அறைக்குச் சென்றனர்.
" சனா, நீ இவங்க இரண்டு பேரையும் பார்த்துக்கோ இவங்க எந்திருச்சா எங்ககிட்ட சொல்லுன்னு சரியா ... "
" ஏன்டா நான் மணப்பொண்ணு அலங்காரம் பண்ணிக்கணுமா ?இல்ல உங்க பொண்டாட்டிகளை காவல் காக்கணுமா? "
" இரண்டையும் பண்ணு.,"
" ம்ம்... "முறைக்க அவளைப் பார்த்து சிரித்துகொண்டே இருவரும் சென்றனர்
மணமேடையில ப்ரதீப்பும் சனாவும் உட்கார்ந்திருக்க, ஐயர் மந்திரத்தை சொல்லித் தாலியைக் கொடுத்தார். இந்த எட்டு மாசம் படாதபாடு பட்டதுக்கு பலனாக ப்ரதீப் சனா கழுத்தில் தாலியைக் கட்டி தன் மனைவியாய் ஆக்கிகொண்டான்.
முதலில் சனாவோட தந்தை கல்யாணத்தை மறுத்தார்... இந்த எட்டுமாசம் இருவரும் படாத பாடு பட்டும், கீர்த்தி, அவரை கெஞ்சியதாலும் அவர் காலில் ப்ரதீப் விழுந்து எப்பிடியோ கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கி கல்யாணத்தை முடிந்தனர்.
கல்யாணத்துக்கு வந்த, அனைவரும் சாப்பிட்டு கிளம்பிட, அங்கே சொந்தகாரர்களும் நம்ம குரூப்ஸ் மட்டுமே இருந்தனர்.
" அண்ணா..... அண்ணா....," அழைத்து கொண்டே கார்த்திக்கிடம் வந்தாள் ஆர்த்தி..
" ஆர்த்தி, என்னாச்சுடா என் டல்லாருக்க?"
" அண்ணா, என் மனசை ஒருத்தர் கஷ்ட படித்திட்டார் அண்ணா. நீங்க தான் கேட்கனும்? " கார்த்திக்கிடம் பஞ்சாயத்து வைத்தாள்... அர்ஜூனோ தனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை என்பது போல அவர்களை வேடிக்கைப் பார்த்து அமர்ந்திருந்தான்...
" என்னாச்சு ஆர்த்தி, யாரு அது உன் மனசை கஷ்ட படுத்தினது?"
" எல்லாம் உங்க பிரண்ட் தான் அண்ணி"
" யாரு ஜீவாவ, அவன் என்ன பண்ணினான்?"
" என் காதலை ஏத்துக்க மாட்டிகிறார்.. நான் காதலைச் சொன்னாலும் அவர் ஏதோ சொல்லி மழுப்புறார். ஆனால் அவர் என்னை தான் காதலிக்கிறார் அதை மறைக்கிறார்...." என்றாள்.
கீர்த்தி, ஜீவா பார்க்க அவனோ அமைதியாக தலை குனிந்து நின்றான். கீர்த்தி அவனை அழைத்துகொண்டு தனியாகச் சென்றாள்.
" சொல்லுடா ஜீவா ஆர்த்திய காதலிக்கிறீயா ? "
" இல்லடி அதுவந்து... "
" என்னடா வந்து போயினு என்ன பிரச்சனை உனக்கு வேற யாரைவது லவ் பண்றியா ?"
" இல்லடி அவளைத் தான் லவ் பண்றேன். ஆனால், அவ பணக்கார வீட்டு பொண்ணு நாம மீடில் கிளாஷ். அவ அங்க நல்ல வாழ்ந்துட்டு, என்னை கல்யாணம் பண்ணி அவ கஷ்ட படுத்த விரும்பல. அதான் வேணா சொல்லுறேன் "
" லூசாடா நீ, உன்னை எவ்வளவு லவ் பண்றான்னு தெரியும்ல நீ இல்லைனாதான் அவ கஷ்ட படுவ.
ஒழுங்க அவ கிட்ட லவ் சொல்லு போடா"
" இல்லடி "
" போடா போய் லவ் சொல்லு " என்றதும் தயங்கினான்.
கீர்த்தி, ஜீவாவிற்கு பல அறிவுரை எல்லாம் சொல்ல, அவனும் புரிந்துக் கொண்டு தலையாட்டினான். இருவரும் வெளிய வர எல்லாரும் அவங்களையே பார்த்தனர்.
கீர்த்தி, ஜீவா சொன்னதைச் சொல்ல ஆர்த்திக்கு கோபம் வந்தது. " நான் உங்க பிரண்டுகிட்ட கேட்டது லவ் மட்டும் தான் அதை மட்டும் தந்தால் போதும் நான் சந்தோஷ்மா இருப்பேன். எனக்கு வேற எதுவும் தேவையில்லை அவர்கிட்ட சொல்லிடுங்க " என்றவள் கோபமாக சென்று விட்டாள்.
" என்னாடா முழிக்கிற போய் சமாதானம் பண்ணு போடா." என்றதும் ஜீவா ஆர்த்தி சென்ற திசையை நோக்கி சென்றாள்.
அப்புறம் என்ன கல்யாணம் தான்..
இப்படியே தங்கள் காதலியைக் கரம்பிடித்து அனைவரின் வாழ்க்கையும் சந்தோஷ்மாக இருந்தது.
நாட்களோட கீர்த்திக்கு பிரசவலியும் வந்தது.. டாக்டரிடம் கெஞ்சி கார்த்திக்கும் அங்கே அவள் உடன் இருந்தான். அவள் வலியில் துடிப்பதைக் கண்டவனுக்கு தாங்கிக்கொள்ள முடியவில்லை. குழந்தைப் பிறக்க கீர்த்தி மயங்கினாள். கார்த்திக், அவன், ஆசைப்பட்டதைப் போலவே பெண் குழந்தை தான் பிறந்தது. எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
கார்த்திக் தன் மகளை கையில் ஏந்த அந்த சந்தோஷ்த்துக்கு அளவே இல்ல புதிதாகப் பிறந்தது குழந்தை மட்டும் இல்லை அவனும் தான்.... தன் குழந்தையோடு சேர்ந்து கீர்த்தியைப் பார்க்கச் சென்றான். அவள்அங்கே மயக்கம் தெளிந்து எழுந்தாள் அவளிடம் குழந்தையைக் காட்டவே அதன் நெற்றியில் முத்தம் தந்தாள்.
" கார்த்திக், உன்னோட பர்த்டே கிப்ட், நான் கொடுத்தது பிடிச்சுருக்கா? "
" நீ கொடுத்தது எனக்கு இன்னொரு உயிர் தாங்கஸ்டி "அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
மணி 12 கார்த்திக் பிறந்தாள் அன்று.
கீர்த்தி, கார்த்திக்கின் அருகில் படுத்திருந்தவள் அவன் நெற்றில் முத்தம் கொடுத்தாள்.. அவன் அவளைப் பார்த்தான்.
" ஹேய் நீ இன்னும் தூங்கலையா?"
" ஹாப்பி ப்ர்த்டே கார்த்திக்"
" அவன், அவளுக்கு முத்தங்கள் வழங்க அவளும் தான் "
" ஹேய் எங்க என் ஹிப்ட்? " அவளிடம் கேட்க, அவள் அவனையே பார்த்தவள " நீ காட்டுற இந்த அன்புக்கு உனக்கு விலைமதிப்பு இல்லா பரிசு தான் தரபோறேன்" என்றாள்.
" அப்படியா என்ன அது ? "
அவன் கேட்க, அவன் கையை தன் வயிற்றில் வைத்து இது தான் என்றாள். அவன் அவளைப் புரிந்து புரியாமல் பார்க்க. உனக்கு நான் தர விலைமதிப்பில்லா பரிசு நம்ம குழந்தை கார்த்திக் " என்றதும் குழந்தை போல் துள்ளிக் குதித்தான். தன் மனைவிக்கு முத்தங்களைப் பரிசாக வழங்கினான். சந்தோசம் மட்டும் தான் அங்க நிறைந்து இருந்தது இருந்தது.
.
இரண்டு வருடங்களுக்கு பிறகு........
" ஹாப்பி பேர்த்டே டூ ஜானுமா..... " ப்ர்த்டே சாங் சுற்றி அனைவரும் கைத் தட்டி பாட அந்தக் குழந்தை தன்அழகிய இதழால் மெழுவர்த்தீயை அனைத்து தன் பிஞ்சு விரலால் கத்தியை ஹாப்பி "ப்ர்த்டே டூ ஜனனி" என்ற பெயரிட்ட கேக்கை வெட்டியது.... அந்தக் குழந்தை சிறிய பீஸ் கேக்கை எடுத்து கார்த்திக்கும் கீர்த்திக்கும் ஊட்ட அவர்களும் தன் குழந்தை ஜனனிக்கு ஊட்டிவிட்டனர்.... அங்க ஒரே கொண்டாட்டம் தான்...... அங்கு கீர்த்தி யின் அம்மா,தம்பி.... சக்தி அர்ஜூன் பெமிலி,ப்ரதீப் பெமிலி,ஜீவா பெமிலி கிருஷ்ணன் பெமிலி எல்லோரும் அந்த பேர்த்டே பார்ட்டிக்கு வந்திருந்தனர்.
ஜனனி என்கிற ஜானு கீர்த்தியின் கார்த்திக்கின் இரண்டு வயது மகள்.... விஷ்வா, சக்தி அர்ஜூன் மகன்.. தீப்தி, பீரதீப் சனா மகள். அஜீத். ஜீவா ஆர்த்தி மகன்.... அனைவரும் தங்களது பரிசை ஜனனிக்கு கொடுக்க, அவளுக்காக அஜய், ப்ராக் வாங்கிட்டு வந்தான். அதை பார்த்த ஜனனி அதை இப்பையே போடுவேன் என்று அடம்பிடிக்க, அதை கீர்த்தி போட்டு விட்டாள். அதை அஜயிடம் ஓடி வந்த ஜனனி, காட்டினாள்.
" மாமா.... "என்றவள் அவன் முன்னே குதிக்க அவளை அப்படியே தூக்கி முத்தத்தைப் பதிக்க, குழந்தையும் அவனுக்கு முத்தம் கொடுத்தது.
" ஜானுமா சொக்கிடேன்டி, மாமா உன்னை பார்த்து... மாமாவ கல்யாணம் பண்ணுக்கிறீயா? " அவன் கேட்க ஜானுவோ, என்னவென்று தெரியாமல் அவன் மேல் கொண்ட பாசத்தில் தன் தலையை ஆட்டினாள்...
அங்கே அனைவரும் சந்தோசமாக இருந்தனர்..பின் அவர்கள் கிளம்பிட, ரகுநாத் தன் அறைக்குச் செல்ல, கார்த்திக்
ஜனனியுடன் படுத்துகொண்டான். தன் தந்தையைப் பார்த்து கதை சொல்ல சொல்ல, கார்த்திக் இதைச் சொல்ல ஆரம்பித்தான். தந்தையின் கதையைக் கேட்டு தூங்கியது குழந்தை. அவள் தூங்கியதை உறுதிசெய்தவன், கீர்த்தியைப் பார்க்க சென்றான். அங்கே
அவள் சுத்தம் செய்துகொண்டிருக்க அவளை அணைத்தான்....
" என்ன லெக்சரர் மேடம் இன்னும் உங்க வேலை முடியலையா?"
"இதோ கார்த்திக், வந்துட்டேன் " என்றவள் சொல்லி அவனிடமிருந்து நகர, அவனோ அவளை விடாம அணைத்தான் " கார்த்திக் விடுடா "
" உன் பொண்ணு ஒன்னு கேட்டா, அதுக்கு நீ தான் பதில் சொல்லணும் அதான் உன்னை தேடி வந்துருக்கேன்"
" அப்பிடி என்ன என் பொண்ணு கேட்டா?"
" அதுவா, அவளுக்கு தம்பிபாப்பா வேணும்மா, அதை எங்கிட்ட கேட்டா. நான் அம்மாகிட்ட கேட்டு வரேன் இங்க வந்துட்டேன்.சொல்லுங்க மம்மி " என்றவளை கொஞ்சினான்.
" இது என் பொண்ணு கேட்டாளா ?இல்ல பொண்ணோட அப்பா கேட்டாரா?"
" இரண்டு பேரும் தான். சொல்லுடி"
" தர முடியாதுனுன்னா என்ன பண்ணுவீங்க?"
" அப்ப இன்னோரு வாட்டி கடத்திட வேண்டியது தான் " என்று சொல்லி கண்ணடித்தான்.
" போட ப்ராடு " என்றவளைத் தூக்கி தன் அறையை நோக்கிச் சென்றான்.
கீர்த்தி, இந்த இரண்டுவருடங்களில் m,phil முடித்து. தனியார் கல்லூரி லெக்சரராக பணியாற்றி கொண்டே ph.d பண்ணிக்கொண்டிருக்கிறாள்..
இவ்வாறு தன் கனவை நிறைவேற்றிய காதலனுக்குத்
தாயாய்,சேயாய், தோழியாய் ,மனைவியாய்,மாறி அவன் வாழ்வில் வசந்தமாக மாறி போனாள் அவள்.
முற்றும்......