கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வருவான் 4

Chithu

Moderator
Staff member
வருவான் 4


அங்கே அந்த மாலில், பொம்மைக் கடையில் வித விதமாக பொம்மை வகைகளையும் அடுக்கி வைக்கப் பட்டிருந்தனர். குழந்தைகளுக்குத் தேவையானஅத்தனை விளையாட்டு பொருட்களும் அங்கே இருக்க நிறைய குழந்தைகள், தாய், தந்தையோடு அதனை வாங்கிகொண்டு இருந்தனர்.


கீர்த்தி, அழகான ரோஸ் நிற டெடி ஒன்றை வாங்கி வைத்துவிட்டு வேற எதையோ அங்கே பார்க்கச் சென்றாள். அவள் தேர்ந்தெடுத்த, அந்த டெடியை ஒரு குழந்தை எடுத்துப் பார்த்து கையில் வைத்திருந்தது. அந்தக் குழந்தையின் தாய் அக்குழந்தையை அழைக்க, அதைக் கீழே போட்டுவிட்டு தன் அன்னையோடு சென்றது. அதைப் பார்க்காது, அங்கு வந்த ஒருவன் அதனை மிதித்து விட்டு, அவனது காலால் ஓரமாகத் தள்ளிவிட்டுச் சென்றான். கீர்த்தி அதைப் பார்த்துவிட்டாள்.

" யோவ் ! கண்ணு தெரியாத உனக்கு. கீழே என்னக் கிடந்தாலும் அது எடுத்து வைக்கணும் ஸ்சென்ஸ் வேணா, அப்படி ஏறி மிதிச்சுட்டுப் போயிட்டே இருப்பீயா? " அவன் முன் நின்று சன்னமாக கேட்டாள்.


" ஹாலோ ! மைன்ட் யூர் வோர்ட்ஸ். நான் அதைப் பார்க்கல தெரியாம மிதிச்சுட்டேன் அதுக்கு மரியாதை இல்லாம பேசுவீங்களா? "

" இங்கபாரு உன்னுடைய ஸ்ஸூவோட அச்சு, இது எப்படி போகும்? நான் இதை எப்படி கிஃப்ட்டா கொடுப்பேன். மிதிச்சுட்டு ஒரு சாரி கூட கேட்காம எவ்வளவு திமிரா பேசுற நீ?"

" ஹலோ ! மரியாதையா பேசுங்க. நானும் அப்பதலிருந்து பார்த்திட்டே இருக்கேன் மரியாதையில்லாம பேசுறீங்க. "


" உனக்கு என்னடா மரியாதை? மிதிச்சுட்டு எதுவும் நடக்காத மாதிரி போற "

" என்னது " டா " வா. நீ ரொம்ப பேசுற"

" அப்படி தான் பேசுவேன் என்ன பண்ணுவ நீ?" அவனை முறைத்து நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அங்கே அனைவரும் இவர்களின் சண்டையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்..

" டேய் எல்லாரும் பார்க்கிறாங்கடா வா போலாம் " தன் நண்பனைப் பிடித்து இழுத்தான்.


" இருடா, இவள ஒரு வழி பண்ணாம விடுமாட்டேன் டா. என்னையவே மரியாதை இல்லாம பேசுறா"

" என்னாடா, பண்ணுவ உன்னால என்ன பண்ணமுடியும் ?"


" உன்னை.... " அவளை அடிக்கச் செல்ல, அவனது நண்பன் அவனைப் பிடித்து இழுத்து, " சாரி சிஸ்டர், அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்" என்றவன், அவனை இழுத்துக்கொண்டு போனான்.


கீர்த்திக்கு, தனது அழகான டெடியில் அவனது கால்தடத்தைப் பார்க்க பார்க்க கோபமே வந்தது. சக்தி, அவள் அருகினில் வர, கார்த்திக்கோ, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள வில்லை. ' நம்மல பார்த்தா அமைதியா இருக்கா! ஆனா, இப்படி சண்ட போடுறாளே! நாள பின்ன கல்யாணம் ஆயிட்டா கார்த்திக் உன் கதி'

" இப்படியாடி எல்லாரும் முன்னாடி சண்டை போடுவ? அப்ப எவ்வளவு கோபம் வருது உனக்கு? "


" இல்ல சக்தி, மிதிச்சுட்டு ஒரு சாரி கூட கேட்கல அதான் கோவம் வந்துருச்சு... " என்றாள்..


" சரி நானும் பார்த்தேன் வா போலாம் " என்றவளை அழைத்தாள், கீர்த்தி, தன் பின்னே கார்த்திக் நிற்பதை அறியாதவள், அவள் திரும்ப, கார்த்திக்கின் மேல் மோதியவள், தடுமாறி விழ போகையில் அவளைப் பிடித்து நிறுத்தினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழிகள் கலந்திட, கார்த்திக்கே அவளை விட்டுத் தள்ளி நின்றான்.. இருவரையும் பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் சக்தி... மூவருமாக அங்கே ரெஸ்டாரண்ட்டிற்குச் சென்றனர்.

" சக்தி, உனக்கு என்ன வேணும்?"

" எனக்கு எதாவது ஜூஸ் சொல்லு கார்த்திக் " என்றவள், " கீர்த்தீ உனக்கு ? "

" எனக்கு எதுவும் வேண்டாம் " என்றாள்.

" சரி மூணு அப்பிள் ஜூஸ் கொண்டு வாங்க " என்றவன், அவளுக்கும் சேர்த்தே கூறினான்.

" எனக்கு எதுவும் வேண்டாம் சொன்னே எதுக்கு ஆடர் பண்ற ?"

" உனக்கு இல்ல அது, நீ தான் வேணாம் சொல்லிட்டீயே. அது எங்களுக்கு, நாங்க சேர் பண்ணிபோம். என்ன சக்தி உனக்கு ஓ.கே தானே?"

" ம்ம்.. கார்த்திக், வேண்டாம் சொல்லுறவங்கள எதுக்கும் கம்பெல் பண்ணிட்டு, நாம சேர் பண்ணிக்கலாம்" என்றாள்.

" நீ எனக்கு ப்ரண்டா, இல்ல அவனுக்கா?" கீர்த்தி, சக்தியைப் பார்த்துக் கேட்டாள்.. " இரண்டு பேருக்கும் தான்டி நான் ப்ரண்டு.

" இது, எப்பதலிருந்து?" என்றவளிடம்.." டுடே ஆன்வார்ட்ஸ், இல்ல கார்த்திக் "

" ம்ம்... யாயா.... நானும் சக்தியும் ப்ரண்ட்ஸ் " என்றான்." சக்தி, வா வீட்டுக்குப் போலாம்,... " என்றவள் கைப்பிடித்து இழுத்தாள். " கீர்த்தி, என்ன அதுக்குள்ள கிளம்பற? இப்ப தானே வந்தோம். கார்த்திக் வேற ஆடர் பண்ணிட்டான். இரு குடிச்சுட்டுப் போலாம் " என்றாள் சக்தி. அவர்களுக்கு ஜூஸும் வர. இருவரும் அதைப் பருக்கினர்.

' இவ ஒருத்தி, இவனைப் பார்க்கவே கூடாது நினைச்சா. இவன்கிட்ட ப்ரண்டானதும் இல்லாம சப்போர்ட் வேற, இவளாம் ஒரு ப்ரண்டு, இவன பார்த்ததுல இருந்து எனக்கு தூக்கம் போச்சு, இப்ப முன்னாடி வேற உட்கார்ந்து இருக்கான். அவன பார்த்தாளே, எல்லாதையும் சொல்லிருவேன் போலையே. போற வரைக்கும் அமைதியா இருக்கணும் கீர்த்தி.. ' தனக்குள்ளே கூறிக்கொண்டாள்.

" என்ன கீர்த்தி, அமையதியா இருக்க? ஏதாவது சொல்லிருவோமோன்னு பயமா ? " அவளை வம்பிழுத்தான்.

' ஆத்தி, சரியா சொல்றானே. எதாவது சொல்லி சமாளி கீர்த்தி ' என்றெண்ணிவள், " நான் என்ன சொல்லபோறேன்? எனக்கு என்ன பயம்? "

" இல்ல பேசுனா, எங்க, நீ என்னை லவ் பண்றது தெரிஞ்சிடுமோன்னு பயப்படுற அதானே "

" ஐய்யடா ! நான் உன்னை லவ் பண்றேனா சான்சே இல்ல "

" பொய் சொல்லாத உன்னுடைய கண்ணுலையே தெரிது"

" என்ன தெரிது ? "

" நீ, என்னை லவ் பண்றது "

" இந்த ஜென்மத்தல நான் உன்னை லவ் பண்ண மாட்டேன்.... " என்றாள் தீர்க்கமாக,


"ஒ... அதையும் பார்க்கலாம். நீ படிச்சு முடிக்கிறதக்குள்ள, என்னை, நீ லவ் பண்ணுவ, நான், உன்னை லவ் பண்ண வைப்பேன்"

" அப்படி நான் உன்னை லவ் பண்ணலைன்னா ? என்ன பண்ணுவ ? "

" நீ லவ் பண்ணலேனா, நான் உன்னை அதுக்கப்புறம் பார்க்க மாட்டேன். உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன்.
அப்படி நான் ஜெய்ச்சுட்டா, நீ லவ் சொல்ற அடுத்த நாளே என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும் உனக்கு ஒ,கேவா "

" ஒ.கே, நான் உன் லவ் பண்ணமாட்டேன். நான் தான் ஜெயிப்பேன்... " என்றாள்.

" அதையும் தான் பார்க்கலாம் யார் ஜெய்க்குறான்னு. we will see " என்றான்..

' அடப்பாவிகளா, இன்னும் இவனுங்க குழந்தையாவே இருக்கானுங்களே ' சக்தி தலையில் அடித்து கொள்ள, அவனைப் பார்த்து முறைத்துவிட்டு சக்தி அழைத்துகொண்டு திரும்பி பார்க்காமல் சென்றாள்.

அவள் செல்லும் திசையைப் பார்த்துகொண்டிடே, ' நான்தான் ஜெய்பேன்.
என்னைக் காதலிக்க வைச்சு, உன்னை கல்யாணமும் பண்ணுவேன் ' என்றான்.

பார்க்கலாம் யாரு ஜெயிப்பான்னு.....

மால்லிருந்து கார்த்திக், சந்தோசமாகவே
வீடு வந்து சேர்ந்தான். ஏதோ சாதித்த உணர்வைப் பெற்று முகமெல்லாம் சிரிப்பில் விரிந்திருக்க. மகிழ்ச்சியாக வரும் மகனைக் கண்டு அவர் முகமும் சந்தோசத்தில் விரிந்தது...

" என்ன கார்த்திக், ரொம்ப சந்தோசமா இருக்க. என்ன சொன்னான் கோகுல்? " என்றவரை நக்கலாகப் பார்த்தவன்,
இந்த மீட்டிங், எதுக்குன்னு உங்களுக்கு தெரியாதப்பா?"


" இல்லடா, அது வந்து உன்னோட விருப்பத்தை நீயே சொல்லன்னும் தான் இந்த மீட்டிங், நீ என்ன சொன்ன? "


" எனக்கு இன்டர்ஸ்ட் இல்லன்னு சொல்லிடேன்ப்பா " என்றான் அமர்த்தலாக,


" எப்ப தான்டா, உனக்கு இன்டரஸ்ட் வரும்? "

" ஐ டோன்ட் னோப்பா " என்றவன் தன்றைக்குச் சென்றான்.

' சாரிப்பா, உங்ககிட்ட இருந்து மறச்சதுக்கு. உங்களுக்கு நிச்சயமா கீர்த்திய பிடிக்கும்ப்பா. அவ லவ் சொன்னதும் உங்கிட்ட கூட்டிட்டு வருவேன். அது வரைக்கும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க ' என்றவன் தனக்குள்ளே அவருடன் பேசிக்கொண்டான். பாவம், அவனே அறிந்திருக்க மாட்டான். அவர் தான் இருவரையும் சேர்த்து வைப்பார் என்று.

வழக்கம் போலவே சக்தி வீட்டுல மீட்டிங், இவ்வளவு பெரிய பிரச்சினை மீட்டிங் போடாம இருக்க முடியுமா ?

" குட்டிமா, அவ்வளவு தைரியமா உனக்கு... நீ அவன லவ் பண்றேன் நினைச்சேன் ஆனால் நீ லவ் பண்ணலையா ?"

" நீ வேறம்மா, அவ எப்பையோ அவன லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா இதெல்லாம் சும்மா ப்ல்டப் நீ நம்பாத "

" அப்படியா கீர்த்தி சக்தி சொல்றது உண்மையா? நீ அவன லவ் பண்றீயா? அப்ப நீ தோற்கத்தான் போறீயா " எனவும்

" அம்மா அவன்கிட்ட எவ்வளவு கெத்தா சொல்லிட்டு வந்திருகேன். நீங்க என்னை எங்கரேஜ் பண்ணலேனாலும் டிஸ்கரேஜ் பண்ணாதீங்க, அப்பா நீங்க சொல்லுங்க நான் ஜெய்ப்பேன்னா, இல்ல அவன் ஜெய்ப்பானா ? "

" இதுல என்ன சந்தேகம் கீர்த்தி, அவன் தான் ஜெய்ப்பான்"

" அப்பா, இந்த சக்தி, அவனுக்குகே சப்போர்ட் பண்றா, நீங்க என்னான்னு கேளுங்க அவள"

" அவ கிடக்குற கீர்த்தி, இங்க பாருமா திறமைய வச்சுன்னா கண்டிப்பாக யாரு ஜெய்ப்பானு சொல்லிடலாம். ஆனால் இது மனசு சம்பந்தப்பட்டது கீர்த்திம்மா, யாரு ஜெயிப்பான்னு சொல்லுறது ரொம்ப கஷ்டம்மா. ஏற்கெனவே நீ அவன பார்த்த எல்லாதையும் மறுக்குறேன்னு சொல்ற, ஏதோ பீல் இருக்குன்னு சொல்ற, நான் என்ன சொல்லறது, இது காதல்டா சின்ன புள்ளைங்க மாதிரி பெட் கட்டுறீங்க? கண்டிப்பா, உன்னால ஸ்டாராங் உன் மனச கன்டரோல் பண்ணமுடிந்தால் நீ தான்டா ஜெயிப்ப. அது மட்டும் இல்ல மத்த அப்பா மாதிரி நான் கிடையாது உனக்கே தெரியும். நீ எடுக்குற முடிவுக்கு, அப்பா எப்போதுமே உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்.
நீ ஜெய்ச்சா சந்தோசப் படுவேன், தோத்த அதவிட அதிகமாக சந்தோசம் படுவேன்டா.. " என்றார்.

" அப்பா என்ன இப்படி சொல்லுறீங்க?"

" இல்ல குட்டிமா, எனக்கு நீங்க சொல்றத பார்த்தா, கார்த்திக் ரொம்ப நல்லவன் மாதிரி தெரியிது. அவன் லவ் பண்ணு சொல்லி, உன் பின்னடி சுத்தல
அவன் அவனோட லவ் அழக எக்ஸ்ப்ரஸ் பண்றான்.
அவன் உன்னை லவ் பண்ண சொல்லி டார்சர் பண்ணல. அவன், உங்கிட்ட ஜெனுன்னா, நடந்துக்கிறான். அவன் நல்லவனாத்தான் இருக்கணும், அதான் அப்படி சொன்னேன் கீர்த்தி.. "

" அப்பா, நீங்க அவன பார்க்கவே இல்ல இப்படி புகழ்றீங்க இதெல்லாம் ஓவர்ப்பா"

" இல்லமா கீர்த்தி, நீங்க சொல்றத வச்சு சொன்னேன்ம்மா. நீ வேணும்ன்னா ஒரு வாட்டிக் கூட்டிட்டு வா பேசிப்பாப்போம் " என்றார் கிருஷ்ணன்.

" அவன பார்க்காமலே இவ்வளவு சப்போர்ட் பண்றீங்க, அவன பார்த்த நீங்க எல்லாரும் அவன் பக்கம் தான் போல" கேலியாக சொன்னாள் கீர்த்தி.

" ஏங்க, சக்தி யாரைவது லவ் பண்றேன்னு, அந்த பையனோட வந்தா என்னங்க பண்ணுவீங்க? " மாலதி.

" நானா, அந்த பையன்கிட்ட போய், ஏன்பா, உனக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்கிலையா? என் பொண்ணு தான் கிடைச்சாளா? என் பொண்ண போய் லவ் பண்றீயேன்னு கேட்பேன். முடிஞ்சா, அவனுக்கு, நல்ல பொண்ண பார்த்துக்கோப்பான்னு அட்வைஸ் பண்ணி அனுப்பிருவேன்" என்றதும்,

ஹஹஹ ஹஹா...... எல்லாரும் வாய்விட்டு சிரித்தனர்.. " அப்பா.... " என பல்லைக் கடித்தாள், சக்தி. அங்கே அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்..

" டேய் அர்ஜூன், இப்படியாடா சண்டை போடுவ? எதுக்காகப் போனியோ அதை மறந்து சண்ட போட்டு வந்துட்டியேடா இப்போ என்ன பண்ண போற? " First impression is the best impression" னு சொல்லுவாங்க நீ இப்படி வொர்ஸ்டா மாத்திட்டியே. அடுத்து அவ முன்னாடி போய் நின்னா அவ்வளவு தான் உன்னை கொலையே பண்ணிருவா" என்றான்.

"டேய் நான் என்ன வேணும்ன்னே அவகிட்ட சண்டை போட போனேன். அவ அப்படி பேசினதுனால கோவம் வந்திருச்சு சண்டை போடுறது மாதிரி ஆயிருச்சு "

" அவளைப் பத்தி தெரிஞ்சும் இப்படி பண்ணா என்ன சொல்லறது? அடுத்து எப்படிடா அவள மீட் பண்ணுவ?"

" நான் பார்த்துக்குறேன்டா, எப்படியாவது அவகிட்ட பேசி, நான் என்னோட லவ் சொல்லிருவேன்டா. " என்றான் அர்ஜூன்.


" டேய் டெடிபியருக்கே அந்தச் சண்டை போட்டா, இதுல இதையும் சொன்ன அவளோ தான்டா. என்னால, அவ என்ன பண்ணுவான்னு நினைச்சுக் கூட பார்க்க முடியலடா அர்ஜூன்"

" பயப்படாதடா, எல்லாம் நல்லபடியா முடியும் " என்றான், அர்ஜூன்.

வருவான்
 
Top