கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -1

Akila vaikundam

Moderator
Staff member
1.

ஆண்டு 2000 .



டிசம்பர் மாதம் குளிருடன் சேர்ந்த மழைநாள் அது...





நெல்லை மாவட்டம்...பாளையங்கோட்டை...



நள்ளிரவை நெருங்கும் நேரம்...அந்த பிரமாண்டமான பங்களாவின் வெளியே வானம் மெதுவாக தூறலை சிந்திக் கொண்டிருக்க...உள்ளே ஒரு இருட்டு அறையில் தரையில் அமர்ந்த படி ராம்பிரசாத் மது அருந்திக்கொண்டிருந்தார்.





ஒரு காலை நீட்டியபடியும் மற்றொரு காலை மடித்தபடியும் அமர்ந்திருந்தார்.





அவருக்கு வயது முப்பத்தி ஆறு...இளம் மருத்துவர்...சிவந்த நிறம்...மதுவின் தயவால் மேலும் சிவந்திருந்தது...கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் சொட்ட ஒரு கையால் துடைத்தபடியே மற்றொரு கை வாய்க்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தது.





தலையில் மிகப்பெரியதொரு கட்டும் காலில் ஒரு கட்டும் இருந்தது....முகம் முழுவதும் ஆங்காங்கே சிறு சிறு காயங்கள்.

உடலின் காயத்தை விட மனதின் காயம் மிகவும் வலித்தது.







பெற்றோருக்கு ஒரே பிள்ளை...அதனால் தான் இன்று ஆறுதல் சொல்ல கூட உறவு இல்லாமல் கஷ்டபடுவதாக எண்ணினார்.







ராம் பிரசாத்தின் தாய் பிரபல பேறுகால மருத்துவர்.பாளையங்கோட்டையில் தனியாக மருத்துவமனை நடத்தியவர்...தந்தையும் மருத்துவர் தான் ஆனால் பொது வைத்தியம் பார்த்தவர்...அதனால் ராமும் மருத்துவமே பயின்றார் .







ஆனால் தாய் தந்தை போல் இல்லாமல் ஆபரேஷனுக்கு முன்பு கொடுக்க படும் அனஷிஸியா மருந்தை நோயாளிகளின் உடம்பில் எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை படித்தார்...தாயாரின் வற்புறுத்தலால் பேறுகால மருத்துவமும் பயின்றார் ஆனால் அதை தாயாரின் துணையுடன் மட்டுமே செய்வது தனியாக இது வரை பிரசவம் பார்த்ததில்லை...தனியாக மருந்துவமனை நடத்துபவர் ஆனாலும் பல மருத்துவமனைக்கு சென்று சேவைபுரிகிறார்...





எப்பொழுதுமே பிஸியாக இருப்பவர்...கடந்த ஆண்டு தான் தீடிரென்று அவரின் தாயும் தந்தையும் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் இருவருமே பூவுலகை விட்டு சென்றனர்.





அந்த அதிர்ச்சி அவரை விட்டு அகலும் முன்பே கருவுற்றிருந்த அவரின் காதல் மனைவி கடந்த மாதத்தில் தான் அகால மரணம் அடைந்திருந்தாள் ... பிறந்த குழந்தையும் இறந்து விட்டது...அதுவும் அவரின் கண் முன்னே.... உதவிக்கு யாருமே வரவில்லை...





இன்னும் ஒரு மாதத்தில் தனக்கான வாரிசு வரப்போகிறது... விட்டுச்சென்ற பெற்றோர்கள் ஒர் உயிராக மீண்டும் வருகிறார்கள் என்று காத்திருந்த சமயத்தில் மனைவி காவ்யா குற்றாலம் செல்லும் வழியில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்க மனமே இல்லாமல் அவர்களது காரில் அழைத்துச் சென்றார்.





நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது...தீடிரென எதிர்புறம் வந்த இளைஞர்கள் மேல் மோதாமல் இருக்க ராம் ஸ்டிரீங்கை வளைக்க அது சாலையை விட்டு இறங்கி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழந்தது.





இவருக்கு சிறிய அளவில் தான் அடி ஆனால் சீட் பெல்ட்டினை அணியாத காவ்யா காரில் இறந்து கீழே விழுந்தவர் பல அடிகள் உருண்டு விட்டார்.





ஆபத்தான நிலையில் மனைவி உயிருக்கு போராட கடினப்பட்டு சாலைக்கு வந்தவர் வருவோர் போவோரிடம் கை நீட்டி உதவி கேட்க யாரும் வாகனத்தை நிறுத்தி என்ன ஏது என்ன என்று விசாரிக்க வில்லை..





வாகன ஒட்டிகளை மறித்து வழிப்பறி செய்யும் கும்பல் அந்த இடத்தில் அதிக அளவு இருந்தது தான் காரணம்...இவரையும் அது போல எண்ணி கடந்து சென்றனர்...





ஒருவழியாக ஒருவர் மனமிரங்கி அவருக்கு உதவிசெய்ய வர கீழே விழுந்த அடி மற்றும் பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி ஒரு அழகிய பெண் பிள்ளையை ஈன்றபடி காவ்யாவும் அவரின் செல்ல மகளும் ராம் பிரசாத்தை விட்டு நிரந்தரமாக பிரிந்து சென்றிருந்தனர்.



எத்தனையோ உயிர்களை அவர்களின் குடும்பமே காப்பாற்றி இருக்கிறது ஆனால் அவரின் குடும்பத்தை காப்பாற்ற யாருமே முன்வரவில்லை .





எத்தனையோ நள்ளிரவு நேரத்தில் மிக மோசமான நிலைமையில் இருக்கும் நோயாளிக்கு கூட இவர் சென்று மயக்க மருந்தினை கொடுத்தால்தான் மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறி அழைப்பார்கள்...எப்பொழுது என்றாலும் முகம் சுளிக்காமல் காவ்யா வழி அனுப்பி வைப்பார்...அவரின் உயிரைக் காக்க யாரும் வரவில்லை...அந்நிகழ்வு அவரை அடியோடு மாற்றிவிட்டது...அதுவரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு

பிறகு மதுவை துணைக்கு அழைத்துக் கொண்டார்.





அவருக்கு ஏற்பட்ட காயங்களை கூட ஆராயவில்லை...விபத்தின் போது அரசு மருத்துவமனையில் எடுத்துக் கொண்ட வைத்தியம் மட்டுமே... யாருக்கும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி வந்து விட்டார் அதன் பிறகு காயங்களுக்கு மருந்திட்டும் கொள்ளவில்லை... கடந்த வாரம் தான் அவனின் நண்பன் ஒருவன் வந்து ஆறுதலும் புத்தியும் கூறியபடி முதலுதவி அளித்து விட்டு சென்றார்.





அதன் பிறகு அவரின் சொந்த மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்தார்...தனக்கு உதவாத மனிதர்களுக்கு தான் ஏன் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று மருத்துவ தொழிலையே விட்டு விட்டார்.



இப்பொழுது இந்த நாடு...நாட்டு மக்கள் எல்லாரையும் வெகுவாக வெறுக்கிறார்... இன்னும் சில நாளில் நாட்டை விட்டு வெளியேற போகுறார்... வீடு மற்றும் அவரின் சொத்துகள் அனைத்தையும் விற்றாகி விட்டது இப்பொழுது மொத்த பணமும் பேங்கில் உறங்குகிறது... மருத்துவமனையையும் விற்க பேச்சுவார்த்தை நடக்கிறது...அதுவும் இன்னும் பத்து நாட்களில் முடிந்து விடும் அதன் பிறகு இந்த வீடு இந்த நாடு இப்படி எதுவுமே தனக்கு தேவைப்பட போவதில்லை...





மருத்துவர் என்பதால் ஏற்கனவே பல நாடுகளின் விசா வைத்திருக்கிறார்... அதனால் எந்த நாட்டில் குடியேற போகிறார் என்பதை இந்த நிமிடம் வரை அவர் முடிவெடுக்கவில்லை... அளவுக்கு அதிகமாக குடித்தவர் சிறு குழந்தையென மனைவியின் புகைப்படத்தை கையில் ஏந்தியபடி கத்தி அழ ஆரம்பித்தார்.

 

Mathykarthy

Member
So sad.. யாராவது உதவி இருந்தா காவ்யாவும் குழந்தையும் பிழைச்சு இருப்பாங்க.. ☹️
 

Akila vaikundam

Moderator
Staff member
So sad.. யாராவது உதவி இருந்தா காவ்யாவும் குழந்தையும் பிழைச்சு இருப்பாங்க.. ☹️
ஆமாங்க...ஆனா அவங்க விதி முடிஞ்சதுல்ல... ரொம்ப நன்றிங்க
 
Top