கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ-11

Akila vaikundam

Moderator
Staff member
11.


அவளை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டவன்...ராகா...ராகா என கன்னத்தை தட்டி அவளை எழுப்பி விட முயற்சித்தான்…


அதற்குள் அவர்கள் அருகில் வந்திருந்த ரெஸ்டாரண்ட் மேனேஜர் என்ன சார் பிரச்சினை என்று ஆங்கிலத்தில் கேட்டபடி வந்திருந்தார்.
பார்த்தால் தமிழரைப்போல தெரிந்தாலும் அவரிடம் நேரடியாக எதையும் கேட்டுக் கொள்ளாமல்...


சார் ப்ளீஸ் இவங்க என் ஃப்ரண்ட் இன்னைக்கு அவங்களுக்கு உடம்பு சரியில்ல...அதனால தான் இதை தெரியாம தட்டிவிட்டுட்டாங்க...இவங்களை அப்படி உக்கார வெச்சிட்டு நானே உங்களுக்கு கீழ கொட்டினதை க்ளீன் பண்ணி தர்றேன்...சாப்பிட்டதுக்கான பில்லை மட்டும் கொஞ்சம் சீக்கிரமா தாங்க என்று ஆங்கிலத்தில் கூறினான்.


பிரச்சனை இல்ல சார்...எங்க ஆளுக க்ளீன் பண்ணிப்பாங்க…நீங்க இவங்களை பாருங்க என்றார்.




நன்றி கூறியவன் ராகாவை சாய்வாக அமர வைக்க கண்களால் இடத்தை தேடினான்…


அதை புரிந்து கொண்டவர்...சார் அந்த பக்கம் ரெஸ்ட்டிங் ரூம் இருக்கு...அங்க இவங்களை படுக்க வைங்க...நாங்க எங்க ரெஸ்டாரெண்ட் டாக்டரை வர சொல்லறேன் என்றவர் அவரின் ஃமொபைல் போனை கையில் எடுத்தார்.


மீண்டும் அவருக்கு நன்றி கூறியவன்..ராகாவை அவர் சொன்ன அறை பக்கம் தூக்கிச்சென்றான்…



உள்ளே சென்று ராகாவை படுக்க வைத்துவிட்டு அவளின் கன்னத்தை மீண்டும் மென்மையாக தட்டினான்...ராகா...என்னாச்சி..
எழுந்திரு.


அப்பொழுது உள்ளே வந்த மேனேஜர்
சார் டாக்டருக்கு ஃபோன் பண்ணிட்டேன்...இங்க ஃபஸ்ட் எய்ட் மட்டும் தான் கிடைக்கும்... ஆம்புலன்ஸ் தேவைப்பட்டா அதுக்கும் ஏற்பாடு செய்து தர்றோம் என்றவர் சற்று தயங்கியபடியே...


தம்பி நீங்க தமிழா என்று நேரடியாக கேட்டார்…



திடீரென அந்த இடத்தில் தமிழா என கேட்கவும் பூபதிக்கு நிம்மதியும் சந்தோஷமும் பிறந்தது…


புன்னைகையோடு ஆமா அண்ணா என்று தமிழில் கூறினான்.



அவரும் உடனே சந்தோஷமாக தமிழில் என் பேரு முருகன் மதுரை பக்கம் என் ஊரு...என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.


என் பேர் பூபதி அண்ணா... திருநெல்வேலி...என்றவன்...
அண்ணா டாக்டர் வர லேட் ஆகுமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றான்.


பயப்படாதீங்க தம்பி இந்த மாதிரி நேரத்துல தான் தைரியமா இருக்கணும்... டாக்டரும் நம்ம ஊர்க்காரர் தான் நல்லா பாப்பாரு பயப்படாதீங்க வந்ததும் பொண்ணுக்கு சரியா மருந்து கொடுத்து உடனே எழுந்து உட்கார வைச்சிடுவார்...பொண்ணை பார்க்கும்போது சாதாரணமா தூங்குவது போல தான் தெரியுது... ஏன் திடீர்னு மயக்கம் போட்டுச்சு..
அடிக்கடி இப்படித்தான் மயக்கம் போடுமா என்று கவலையாக கேட்டார்.


தெரியல அண்ணா... நான் இன்னைக்கு தான் முதல் முறையா அவளை என்னோட வெளிய கூட்டிட்டு வந்தது…இவளும் நம்ம ஊரு
பொண்ணு தான்...ராகான்னு பேரு என்று கூறவும்..




பாத்தாலே தெரியுது தம்பி... எதுக்கும் ராகாவோட ஃபோன் எடுத்து அவ வீட்டுக்கு சொல்லிடுங்க... உடம்பு சரியில்லாததை அவ வீட்டுக்கு இவ்வளவு நேரம் சொல்லாம இருக்கறது ரொம்ப தப்பு…



அதுக்கில்ல அண்ணா... எங்கேயோ போக இருந்தவளை வலுக்கட்டாயமா நான் தான் இங்க கூட்டிட்டு வந்தேன் இப்போ உடம்பு சரியில்லனு அவ வீட்டுக்கு சொல்லும்போது...இவ என்னோட வெளிய வந்த விஷயமும் தெரிய வரும்...அப்படி தெரியும் போது ராகாவிற்கு ஏதாவது பிரச்சினை வந்திடுமோனு கொஞ்சம் பயமா இருக்கு…


என்ன தம்பி நீங்க புரியாம பேசிட்டு இருக்கீங்க இது என்ன தமிழ்நாடா பொண்ணு பாய் பிரண்டோட ஊர் சுத்த போயிட்டான்னு வீட்டுக்குள்ள கட்டி வைச்சி கண்டிக்க... இது லண்டன்... இங்க எல்லாருமே அப்படித்தான் இருப்பாங்கங்கறது கூடவா இந்த பொண்ணோட பெத்தவங்களுக்கு தெரியாம இருக்கும்...முதல்ல யோசிக்காம அவ வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லுங்க..


ம்ம்...சரி அண்ணா என்றவன்...யோசனையாக அவளையே பார்த்தான்…


முருகன் மற்ற வாடிக்கையாளரை கவனிப்பதற்காக சென்றுவிட பூபதி ராகாவின் கால்மாட்டில் கவலையாக அமர்ந்தான்... அவனுக்கு ராகாவை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருந்தது...தாயை எந்த அளவிற்கு தேடியிருக்கிறாள்…



இவன் விளையாட்டாக கூறிய ஒரு பொய்யை நம்பி நிஜமாகவே கண்களை மூடி தாயை தேடி இருக்கிறாள் தாய் வரவில்லை என்று தெரியவும் அதிர்ச்சியில் மயக்கமாகி இருக்கிறாள்... அவளது பிறந்த நாளான இன்றாவது முடிந்த அளவிற்கு அவளை காயப்படுத்த கூடாது என எண்ணி அவனுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது.


இது நாள் வரை அவன் ராகாவை காயப்படுத்தியதை விட இன்று தான் அதிகமாக காயப்படுத்தி விட்டதாக தோன்றியது... முதலில் அவளது தாயின் நினைவு நாள் என்று தெரியாமலே அவளை பிடிவாதமாக சாப்பிட வைத்தது... அது மட்டுமின்றி இல்லாத தாயின் ஸ்பரிசத்தை உணர்வாய் என இயற்கையின் சக்திக்கு மீறி அவளிடம் பொய் உரைத்தது என்று பல தவறுகளை இன்று செய்து விட்டான் இதையெல்லாம் எப்படி சரி செய்வது என யோசித்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது அறைக்குள் வந்த மருத்துவர் அவனிடம் ராகாவை பற்றி சில கேள்விகள் கேட்டார்... எதுவும் அவனுக்கு தெரியவில்லை... காலையிலிருந்து அவள் இன்னும் சாப்பிட வில்லை அது மட்டும் தான் தெரிந்திருந்தது... உடனே மருத்துவர் அவனை வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு ராகாவை பரிசோதிக்க ஆரம்பித்தார்.



மனமே இல்லாமல் அறையை விட்டு வெளியில் வந்து நின்றான்.. கண்களில் நீர் குளம் கட்டியது... அவளின் இந்நிலைக்கு காரணம் நீதான் என குற்றம் சாட்டுவது போல அங்கிருக்கும் அனைவரின் பார்வையும் இவனையே மொய்ப்பது போல் ஒரு குற்ற உணர்ச்சியும் தோன்றியது.


நாசுக்காக கண்களைத் துடைத்துக் கொண்டவன் மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்தான்.


மருத்துவர் உள்ளே அழைக்கவும் வேகமாக சென்றான்.


சொல்லுங்க டாக்டர்…


பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்ல... சாதாரண மயக்கம் மாதிரிதான் தெரியுது...அநேகமா காலையில சாப்பிடாததால ஏற்பட்ட பசி மயக்கமா கூட இருக்கலாம் ...அவங்க எழறதுக்கு ஊசி போட்டிருக்கேன்...எழுந்ததும் ப்ரஸ் ஜூஸ் வாங்கிகுடுங்க...பயமா இருந்தா கம்ப்ளீட் பாடி செக்அப் பண்ணி பாத்துக்கோங்க என்றவர் கிளம்பி சென்றார்.


மருத்துவர் சென்ற சில நிமிடங்களிலேயே ராகா எழுந்து அமர்ந்தாள் எழுந்ததுமே அறையைச் சுற்றிப் பார்த்தவள்...எனக்கு என்ன ஆச்சி... இப்போ நாம எங்க இருக்கோம் என்று கேட்டாள்.


ம்ம் ‌... சாப்பிட்டு முடிச்சிட்டு அதே ரெஸ்டாரன்ட்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கோம்...என்றவன்...நீஜமாவே உனக்கு என்ன ஆச்சின்னு தெரியலையா…?


இல்ல... கொஞ்சம் நியாபகம் இருக்கு...நீ சொன்ன மாதிரி கண்முடினேனா...என் அம்மா வத்தாங்க...என்னை கட்டிபிடிச்சிகிட்டாங்க...இதோ இப்படி...என்று அவனுக்கு செய்கை மூலம் காண்பித்தாள்...அப்புறம் இப்படி முத்தம் வச்சாங்க...அப்புறம் அப்படியே என்றவள் கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.



மறுபடியும் வா நான் சாப்பிடறேன்...அம்மா வருவாங்கல்ல அப்போ நான் அவங்களை கட்டிபிடிச்சிக்கறேன்...அப்போ அவங்க என்னை விட்டு போக மாட்டாங்கல்ல…


ப்ளீஸ் ராகா... அப்படி எல்லாம் எதுவும் நடக்க வாய்ப்பில்லை இது உன்னோட அளவுக்கு அதிகமான கற்பனை... நீ சாப்பிடணும்னு நான் சொன்ன ஒரு பொய்…. ஏதோ விளையாட்டாக சொன்னதை நீ இந்த அளவிற்கு சீரியஸா எடுத்துப்பனு எனக்குத் தெரியாது தெரிந்திருந்தா இது மாதிரி நான் உன்கிட்ட விளையாடி இருக்க மாட்டேன்...


இல்ல அது கற்பனை இல்ல நீஜம்தான் நான் ஃபீல் பண்ணினேன்...அம்மா மறுபடியும் வரனும் எனக்காக வரனும்... என்று மேலும் அழ ஆரம்பித்தாள்.


ஆறுதலாக அவளை அணைத்தவனுக்கும் அவளின் தேடல் புரிந்தது...என்ன செய்வது...உயிரில்லாத ஒருவரை எப்படி அவளது கையில் கொடுக்க முடியும்...ஆள் தான் நன்கு வளர்ந்திருக்கிறாள்...ஆனால் மனதளவில் தாயை தேடும் சிறு குழந்தை தான் என்று எண்ணிக்கொண்டான்.


சரி உனக்கு இது போல அடிக்கடி மயக்கம் வருமா..


இதுவரை வந்ததில்ல…


அப்போ உன் அம்மாவை பத்தி கற்பனை செஞ்சியே அது போல…



அது கற்பனை இல்ல பூபதி...நீஜமாவே அம்மாவை நான் ஃபீல் பண்ணினேன்... அவங்க பாடி ஹீட்டை கூட நான் அப்சர்வ் பண்ணினேன்…என்று கோபப்பட்டாள்.


ஒகே...அது நீஜம் தான்...அதுபோல இதுக்கு முன்னாடி ஃபீல் பண்ணி இருக்கியா உன் அம்மா வந்து இருக்காங்களா…?



நிறைய முறை என் பக்கத்துல யாரோ இருக்கிறது போல தோணும் என்னை யாரோ க்ளோசா வாட்ச் பண்ற மாதிரியும் தோணும்... ஆனா இன்னைக்கு நடந்தது போல இதுவரைக்கும் எனக்கு நடந்ததும் இல்ல தோன்றினதும் இல்ல…


ம்ம்...டாக்டர் உன்னை ஃபுல் பாடி செக்கப் பண்ண சொல்லியிருக்கறாங்க...ஒரு தடவை பண்ணிக்கறியா...நான் கூட வர்றேன் பயப்படாத... என்று கூறியவுடன் வாய்விட்டு கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.



அவளின் சிரிப்பை கண்டு குழம்பியவன்...எதுக்காக இப்படி சிரிக்கற…



பின்ன நீ சொன்ன ஜோக் கேட்டு சிரிக்காம என்னை என்ன பண்ண சொல்ற சொல்லு என்றவள் மீண்டும் சிரித்து விட்டு பிறகு அவளுக்கு அவளாகவே சமாதானப்படுத்திக் கொண்டாள்..


பிறகு நிதானமாக ஒரு டாக்டர் பொண்ணு கிட்டயே ஹாஸ்பிடலுக்கு போகலாம்... பயப்படாத நான் கூட வரேன்ன்னு சொன்னா என்ன பண்ணறதாம் அதான் கொஞ்சம் ஓவரா சிரிச்சிட்டேன்... என்று கூறவும் அவள் கூறிய தகவல் அவனுக்குப் புதிது .


அவளின் தந்தை மருத்துவர் என்பது அப்போது தான் தெரிந்தது…


என்ன உன்னோட அப்பா டாக்டரா என்று கேட்கவும்.



என் அப்பா மட்டும் கிடையாது என் பாட்டி தாத்தா அவங்க கூட டாக்டர் தான் அது மட்டும் கிடையாது... என்னை வளர்த்த பிரியா மம்மியோட ஹஸ்பண்ட் கேசவ் அங்கிள் கூட ஒரு டாக்டர் தான் டாக்டர் பேமிலில பிறந்து வளர்ந்த பொண்ணு என்று தந்தையும் கேசவனும் பணிபுரியும் மருத்துவமனையின் பெயரையும் கூறினாள்…


ம்ம்...அப்போ உன் அப்பாவை மீட் பண்ணறது ரொம்ப சுலபம் தான்…


நீ எதுக்காக அவரை சந்திக்கணும்…



எல்லாம் காரணமாத்தான் சரி மொதல்ல வெளியே வா எவ்வளவு நேரம் இங்கேயே உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கிறது...
என்று வெளியில் அழைத்து வந்தவன் போராடி அவளுக்கு பழரசம் வாங்கி பருக வைத்தவன் முருகனுக்கு மீண்டும் நன்றி கூறி விட்டு காருக்கு ராகாவை அழைத்து வந்தான்.


வெளியே வர வரவே ராகா பூபதியிடம் இன்று கல்லூரியிலும் ரெஸ்டாரண்டிலும் நடந்த எந்த ஒரு விஷயத்தையும் எக்காரணம் கொண்டும் நீ என் தந்தையிடம் கூறக்கூடாது என்ற வாக்கினை பெற்றுவிட்டாள்.



வயிறு கொஞ்சம் நிறையவுமே அவளுடைய புத்தி வேலை செய்ய ஆரம்பித்தது... தாய் வந்தது கட்டியணைத்தது... முத்தமிட்டது எல்லாம் கற்பனை என்று நம்பத் தொடங்கினாள்.



ட்ரீட் தருகிறேன் என்று அழைத்து வந்துவிட்டு பூபதியை தர்மசங்கட படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.


ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த பூபதி ராகா திடீரென மௌனமாகி தலைகுனிந்து அமர்ந்திருக்கவும் மீண்டும் இவளுக்கு என்னவாயிற்று என்ற கவலையுடன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


சற்று நேரம் பொறுமை காத்தவன் அவனாகவே அவளிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான்.


இப்போ என்னாச்சி... மறுபடியும் அம்மா நியாபகமா…


இல்ல…


பின்ன ஏன் இவ்ளோ சைலன்ட்…


உன்ன பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்…


என்னை பத்தியா...என்னனு…?


ட்ரீட் வைக்கிறேன்னு உன்னை கூப்பிட்டுட்டு வந்து ரொம்பவே கஷ்டப் படுத்திட்டேன்... பயமுறுத்திட்டேன்... சாரி நான் வேணும்னு அப்படி பண்ணல... என்னை மறந்து நான் செஞ்ச விஷயம்...மனசுல வச்சிக்காத... ஃப்ரண்ட்ஸ்னு கை கொடுத்த அடுத்த நிமிஷமே ரொம்ப சில்லியா பிஹேவ் பண்ணிட்டேன் அதுக்காக நம்மளோட பிரண்ட்ஷிப்பை கட் பண்ணிடாத...ப்ளீஸ்…


நிஜமாவே என்னை இன்னைக்கு ரொம்ப கஷ்டப் படுத்திட்ட... அதை ஒத்துகிட்டு தான் ஆகணும்... நீ பாட்டுக்கு தொப்புனு மயக்கம் போட்டு விழுந்துட்ட... உன்னை ரெஸ்ட்டிங் ரூம் வரைக்கும் தூக்கிட்டு போறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே...உன்னை அங்க படுக்கவச்சதும் அப்பாடினு இருந்திச்சி…



சாப்பிட்டு சாப்பிட்டு உடம்பை நல்லா வளர்த்து வச்சிருக்க... மொதல்ல டயட் ஃபாலோ பண்ணி இந்த பப்ளிமாஸ் உடம்பை கம்மி பண்ற விழியை பாரு என்று கூறவும் அவளுக்கு அது வரை இருந்த குற்றவுணர்ச்சி மறைந்து சட்டென்று கோபம் வர நன்கு நிமிர்ந்து அமர்ந்து அவனை முறைத்தாள்.



என்ன குண்டுன்னு சொல்லறீயா...கஷ்டப்படித்திட்டோமேன்னு உனக்காக பரிதாப பட்டேன் பாரு என்ன சொல்லனும்...என்று கத்த ஆரம்பித்தாள்.




உடனே சிரித்தவன்... உன்கிட்ட இருந்து இதை தான் எதிர்பாத்தேன்...இந்த ராகாவை தான் எனக்கு பிடிக்கும்…என்றவன் அவளது கைகளை எடுத்து அவனது கைகள் மென்மையாக வைத்துக் கொண்டவன்…அவளின் முகத்தை பார்த்து கூறினான்.


இங்க பாரு ராகா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்தது ஒரு ஆக்சிடெண்ட் இதுக்காக நீ தர்மசங்கட பட வேண்டிய அவசியம் கிடையாது இது மாதிரி சாதாரண விஷயத்துக்காக எல்லாம் உன் நட்பை கட் பண்ண மாட்டேன்…



இன்னிக்கி காலைல உன்கிட்ட பேசும்போது என் மனசுல எந்த ஒரு எண்ணமும் கிடையாது…


இங்க ரெஸ்டாரண்டுக்கு வந்தப்போ உன்கிட்ட ஃப்ரெண்டா ஆகனும்னு தான் ஆசைப்பட்டேன்…

உன்னோட அம்மாவோட நினைவுநாள்னு தெரியாம...உன்னை சாப்பிட சொல்லி ஃபோர்ஸ் பண்ணும் போது கூட அதை வெளிய காட்டிக்காம என் மனசு காயப்பட கூடாதுன்னு எனக்காக சாப்பிட ஆரம்பிச்ச பாத்தியா…அப்போ தான் உன்னை ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சது…


கொஞ்ச நேரத்திலேயே...உன் அம்மாவோட நினைவு நாள் இன்னைக்கு...எனக்காக தான் நீ சாப்பிட ஆரம்பிச்சேனு
தெரிஞ்ச அந்த நிமிஷமே என் மனசுல வந்து கப்புன்னு ஒட்டிகிட்ட ..


நீ உன் அம்மாவ நினைச்சி அழும் போதுதான் முடிவெடுத்தேன்..
கண்டிப்பா உன்னோட வாழ்க்கைகுள்ள நான் வரணும்...இனிமே முடிஞ்சளவு உன்னை அழவே விடக்கூடாதுன்னு...



அப்புறமா...நான் விளையாட்டா சொன்னதை அப்படியே நம்பி செஞ்ச பாரு... அந்த செகண்ட் முடிவு பண்ணிட்டேன் இனி என் வாழ்க்கை பூரா உன்னோடு தான் இருக்கணும்னு... உனக்கு சம்மதமா ராகா….

என் வாழ்க்கை பூராவும் என்னோட கை பிடிச்சுகிட்டு பிரயாணம் பண்றதுக்கு நீ தயாரா இருக்கியா... நீ சொன்ன இல்ல உனக்கு இருட்டுன்னா... ரொம்ப பயம் ஆனா அந்த இருட்டுல தான் தினமும் தூங்கறேன்னு…இனிமே உன் வாழ்க்கையில இருட்டு என்கிற ஒரு அத்தியாயமே இல்லாம பண்ண போறேன்…



அது மட்டும் கிடையாது உன் அம்மாவோட மடியில் படுத்து தூங்கணும் ரொம்ப ஆசைப்படவல்ல...தாய் மடி மட்டும் உனக்கு நான் தரப்போறது இல்ல... சிறந்த நண்பனா என்னோட தோள்களையும் உனக்கு தர போறேன் என்னோட காதலை ஏத்துக்கோ ராகா...இவ்ளோ நான் நீ தாயன்புக்காக ஏங்கினது போதும்...எங்க வீட்ல நிறையா பேர் இருக்காங்க...எல்லாருமே நீ எதிர்பாக்கற அன்பை அள்ளி குடுப்பாங்க...இனி எப்பவும் நீ தனியா தூங்க வேண்டிய அவசியம் இல்ல... என்று சொல்லவும் அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்தாள்.


என்ன ராகா...என்னை பிடிக்கலையா...இல்ல முன் பின் தெரியாதவனை எப்படி நம்பறதுன்னு பயப்படறியா…?



தெரியல... இப்படி நீ கேப்பனு எதிர்பாக்கல…. அதான் எப்படி ரியாக்ட் பண்ணறதுன்னு தெரியாம முழிக்கறேன்... எந்த பதிலை சொன்னாலும் அது உன்னை ஹாட் பண்ணாத மாதிரி இருக்கனும்னு வார்த்தைகளை தேடறேன்…



அப்போ உனக்கும் என்னை பிடிச்சிருக்கு….உன் இதயத்தோட ஏதோ ஒரு மூலைல எனக்கும் ஒரு சின்ன இடம் கொடுத்து இருக்க...அதனாலதான் என்ன ஹர்ட் பண்ண கூடாதுன்னு வார்த்தைகளை தேடிட்டு இருக்க.
எனக்கு இது போதும்…


நீ தப்பா புரிஞ்சிகிட்ட பூபதி... எனக்கு பொதுவா எல்லாரையும் பிடிக்கும் யாரையும் பிடிக்காதுன்னு ஒதுக்கி வைக்க மாட்டேன்...உன் விஷயத்திலும் அப்படித்தான்... உனக்கு தான் என்னை பிடிக்காம இருந்ததே தவிர நான் எப்பவுமே உன்னை பிடிக்கலைன்னு உன்கிட்ட வந்து சண்டை போட்டது கிடையாது... என்னோட நேச்சரே இதுதான்... யாருடைய மனசையும் காயப்படுத்த கூடாதுன்னு நினைப்பேன்... அதனால தான் இப்போ என்ன பதில் சொல்லறதுன்னு தெரியாம திணற்றேன்…
உனக்கு இப்பேவே முடிவை சொல்லனுமா….



நீ உடனே பதில் சொல்லனும்னு அவசரம் இல்லை... நான் இந்தியா போறதுக்கு ஒரு நாள் முன்னாடி சொன்னா கூட போதும் மத்தது எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்...



உன் அப்பாகிட்ட சம்மதம் வாங்குவதாகவும் என் குடும்பத்துல உனக்காக பேசி அவங்களை சம்மதிக்க வைக்கிறது ஆகட்டும் எல்லாத்தையும் நான் பார்த்துப்பேன்…


உன் அப்பா கிட்ட இருந்து உன்னை பிரிச்சிட்டு போய்டுவேன்னு நீ பயப்படாத... உனக்காக என் குடும்பத்தில இருக்கற எல்லாரையும் விட்டுட்டு வர தயாரா இருக்கேன்.



இங்க இருக்கறதும் ஊர்ல இருக்கறதும் உன் விருப்பம் தான்…



நீ இங்கே இருக்கணும்னு ஆசை பட்டா ஊர்ல இருக்கிற ஏதாவது ஒரு பிசினஸ்ஸை இங்க கொண்டு வந்து ஸ்டார்ட் பண்ணுவேன்…




அப்படி இல்லையா நீ என்னோட வர சம்மதம்னாலும் உனக்கு ஊர்ல என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமோ எல்லாத்தையும் பண்ணி தர நான் தயாரா இருக்கேன் நல்லா யோசிச்சு சொல்லு முடிஞ்சா உன் அப்பா கிட்ட பேசு இல்லன்னா நான் வந்து உன் அப்பாவை சந்திக்கிறேன் எதுவா இருந்தாலும் உன்னோட விருப்பம் தான் உன் விருப்பம் தாண்டி எதையும் நான் செய்யப் போறது இல்ல….



என்னடா இவன் இன்னும் காதலையே ஏத்துக்கல... அதுக்குள்ள, கல்யாணம், செட்டில், பிசினஸ்னு... என்னென்னவோ பேசுறானேன்னு பயப்படாத…



எனக்கு எப்பவுமே பாசிட்டிவ் திங்ஸ் மட்டும்தான் இருக்கும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது…


நீயும் என்னை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னும் தோணுச்சு அதனாலதான் கொஞ்சம் அதிகப்படியாகவே பேசிட்டேன்னு நினைக்கிறேன்... சரி வா நான் உன்னை கூட்டிட்டு போறேன் என்று வாகனத்தை இயக்கினான்.





 
Top