கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ-12

Akila vaikundam

Moderator
Staff member
12.



இல்ல நானே போய்க்கறேன்...உனக்கேன் சிரமம்.



எப்படி உன்னை நான் தனியா அனுப்பு முடியும்...கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் மயக்கம் போட்டு விழுந்திருக்க... அதுக்குள்ள தனியா போறேன்னு சொல்லற...உன் வீட்டிலேயே கொண்டு வந்து விடறேன்...உன் அப்பா என்னை யாருன்னு கேட்டா ஜஸ்ட் ஃப்ரண்ட்ஸ் சொல்லிக்கோ…




இன்னும் நாம ஜஸ்ட் ஃபிரண்ட் தான் என்று வாய்க்குள் முனுமுனுத்தாள்.



அவள் முனுமுனுத்ததுஅவனுக்கும் நன்றாகவே கேட்டது... ஆனால் அதற்கு பெரியதாக அலட்டிக் கொள்ளாமல்...வாகனத்தை சீரான வேகத்தில் ஒட்ட ஆரம்பித்தான்.




காருக்குள் அப்படி ஒரு அமைதி...ராகா கண்களை மூடியபடி சாய்ந்து கொள்ள அவளது முடிய இமைக்குள் விழிகள் அங்கும் இங்கும் அலைந்தது.




கவனித்த பூபதி வாகனத்தை ஓரமாக பார்க் செய்தான்.



வாகனம் நிற்கவும் விழி திறந்தவள் இடத்தை சுற்றி பார்த்து விட்டு ஏன் நிறுத்தினாய் என்பது போல பார்த்து வைத்தாள்.




எதுக்காக இவ்ளோ டென்சன் ராகா... நான் உன்னை என்ன செஞ்சிடப் போறேன்... உன்னை காதலிக்கிறேன்,கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்னு சொன்னேன் அவ்வளவுதான் அதுக்கு நீ இவ்ளோ நெர்வஸாக வேண்டிய அவசியம் கிடையாது உனக்குப் பிடிச்சிருந்தா ஓகே சொல்ல போற இல்லனா நாம ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்ஸா பிரிஞ்சிட போறோம்... அப்படி இருக்கறப்போ சாதாரணமாவே இருக்கலாமே...காலைல என்னோட வந்த ராகாவை இப்போ நான் மிஸ் செய்யறேன்... எனக்கு அந்த ராகா தான் வேணும்..

என்று சொல்லவும்…



நீ சொல்றது புரியுது ஆனா காலையில நான் உன்னோட வரும் பொழுது என் மனசுலயும் எதுவும் இல்ல உன் மனசுல ஒன்னும் இல்ல அதனால என்னால இயல்பா இருக்க முடிஞ்சது... இப்போ அப்படியில்ல…உன் மனசு மாறிடுச்சி...நீ எனக்கு ப்ரபோஸ் பண்ணிருக்க... நான் உனக்கு பதில் சொல்லல... அப்படி இருக்கும் பட்சத்தில் என்னால எப்படி உன்னோட இயல்பா இருக்க முடியும் நான் இப்போ ஏதாவது கோபமா நடந்து கிட்டாலும் அது உன்னை காயப்படுத்தும் சிரித்துப் பேசினாலும் நான் உனக்கு சம்மதம் சொல்றதா நீ தவறா நினைக்கலாம் ...இந்த மாதிரி சமயத்துல நான் எப்படி நடந்துக்கணும்னு நிஜமாகவே எனக்கு தெரியல என்று என் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கூறினாள்.



தெற்றுப்பல்லும் கன்னக்குழியும் நன்கு தெரிவது போல் சிரித்தவன் இதுதான் உன் பிரச்சனையா…? உனக்கு என் மேல கோபம் வந்தா... தாரளமா கோபமா நடந்துக்கோ…. அப்படியெல்லாம் தோணல நார்மலா பேசணும்னு தோணினா அதே மாதிரி பேசு…. நீ நடந்துக்கறதை வெச்சு நான் உன்னை ஜட்ஜ்மெண்ட் பண்ண போறது கிடையாது…



நான் எப்படி வெளிப்படையா என்னோட காதலை உன் கிட்ட சொன்னேன்னோ...அதே மாதிரி நீயும் வாய் திறந்து வெளிப்படையா உன் காதலை சொல்லனும்னு எதிர்பார்க்கிறேன்.



அதனால இந்த பாடி லாங்குவேஜ் வச்சுக்கிட்டோ... உன்னோட பிகேவியரை பாத்தோ கண்டிப்பா நான் எந்த அர்த்தமும் எடுத்துக்க மாட்டேன்... ஜஸ்ட் கூல்...என்று கூறவும்…



அவனைப் பார்த்து சரி என்பதுபோல் புன்னகைத்தவள்...சாதாரணமாக அவனின் படிப்பை பற்றி கேட்டுக் கொண்டாள்.



ராகவும் கூட பூபதி எடுத்திருக்கும் அதே படிப்பைத்தான் ஜூனியராக படித்துக் கொண்டிருந்தாள்…

அவளுக்கும் பாடத்தில் நிறைய சந்தேகம் இருப்பதாக பூபதியிடம் கூற அவனும் என்னென்ன என்று குறிப்பெடுத்து வை நான் உன் சந்தேகத்தை தீர்த்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு யோசனையாக அவளைப் பார்த்து உன்னோட பாட்டி தாத்தா டாக்டர்னு சொல்லற..



உன்னோட அப்பாவும் டாக்டர்னு சொல்ற ஆனா நீ மெடிக்கல் லைன் எடுக்காம சம்பந்தமே இல்லாத மேனேஜ்மென்ட் கோர்ஸ் எடுத்திருக்க ஏன்…? என்று அவனது சந்தேகத்தைக் கேட்டான்.




நானும் உன்னை மாதிரி தான் ஆரம்பத்துல யோசிச்சிருக்கேன்..ஏன் மெடிக்கல் லைன் போகாம இப்படி வந்தேன்னு...ஆனா அதுக்கு முக்கிய காரணம் என் அப்பா தான்... அவருக்கு நான் மருத்துவத் துறைக்கு வர்றது சுத்தமா பிடிக்கல ...சின்ன வயசுல இருந்தே அவர் என்கிட்ட என்ன சொல்லுவார்னா... நம்ம குடும்பமே டாக்டருக்கு படிச்சு மத்தவங்களுக்காக தான் வாழ்ந்துட்டு இருக்கோமே தவிர நமக்கான வாழ்க்கையை யாருமே வாழல…



அதனால நீ மட்டுமாவது வேற ஏதாவது படிப்பை படிச்சி உன்னோட வாழ்க்கையை வாழுன்னு சொல்லி சொல்லி வளர்த்ததால எனக்கும் மெடிக்கல் படிக்கனும்ங்கற ஆசை காணாமப் போயிடுச்சி…




உன் அப்பா சொல்றதும் ஒருவகையில் சரி மாதிரி தான் தோணுது... அனேகமாக அவர் உன்னோட அதிகமா நேரத்தை ஸ்பென்ட் பண்ண முடியலன்னு நினைக்கிறேன்…

அதான் இப்படி சொல்லிருக்கறாரு...



இருக்கலாம்..

நானும் டாக்டராகி மருத்துவ சேவை செய்ய போயிட்டா அவர் வர நேரமும் நான் வர்ற நேரமும் வேற வேறயா இருக்கும் அதனால கூட என்னோட அப்பா இப்படி என் மனசை மாத்தி விட்டிருக்கலாம்...ஆனா அவர் என்னை மிஸ் செஞ்ச மாதிரி என்னைக்குமே வெளிய காட்டிகிட்டதில்ல…



அப்பானா அப்படிதான் பாசம் மனசுக்குள்ள இருக்கும் வெளிய சொல்ல மாட்டாங்க ராகா...என்றவன் சரி

வீட்டுக்கு எக்ஸாக்ட் லொக்கேஷன் சொல்லு உன்னைக் கொண்டுபோய் வீட்டுல விட்டுட்டு மறுபடியும் நான் என்னோட ரூம் போறதுக்கு லேட்டாயிடும்…




வீடு என்றதும் காலை ராம் பேசியது ராகாவிற்கு ஞாபகம் வந்தது... அவரை நேருக்கு நேராக சந்திக்கும் திராணி அவளிடத்தில் தற்சமயம் இல்லை.



இப்பொழுது அவரை பார்த்தால் முதல் கேள்வி நான் உங்கள் மகள் இல்லையா..

?அப்படி என்றால் என் தாய் தந்தையார் யார்…?நான் எப்படி உங்களிடம் வளர்கிறேன் என்று நிறைய கேள்விகள் கேட்பாள்…




தாயின் நினைவு நாளில் இது போல கேள்விகளை கேட்டு அவரை சங்கடப்படுத்த வேண்டாம் என்றும் நினைத்தாள்…



இத்தனை ஆண்டு காலம் இவர்தான் தந்தை இவர்தான் தாய் என்று நம்பி வளர்ந்து வந்தவளுக்கு இன்று எல்லாம் பொய் என்று தெரியவும் அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது... அதனால் வீட்டிற்குச் செல்லவும் பிடிக்கவில்லை...பூபதியோடு இருக்கவும் பிடிக்கவில்லை... என்ன செய்வது என யோசித்தவள்…




இல்ல பூபதி இனி நான் போய்க்கறேன்..



அப்போ காரை விட்டு இறங்கி போடான்னு இன்டைரக்டா சொல்லற...ஓகே உன் அப்பா நம்பர் தா…நான் கிளம்பறேன் என்றான்...



என்ன என்று அதிர்ச்சி காட்டியவள் எதுக்கு அவர் நம்பர்…



சும்மாதான்….சொல்லு என்றபடி அவனின் ஃமொபைல் போனை கையில் எடுத்தான்…



விளையாடாத.. என் அப்பா நம்பர் உனக்கு எதுக்கு…



கொஞ்சம் பேச வேண்டி இருக்குது ராகா... நம்பர் சொல்லு என்று நம்பர் வாங்குவதிலேயே குறியாக இருந்தான்.




என்ன பேச போறன்னு சொல்லு நம்பர் தரேன் என்று அவளும் வீம்பு செய்தாள்.



ஹான்...அது வருங்கால மாமனார் கிட்ட பேச இந்த மாப்பிள்ளைக்கு ஆயிரம் விஷயம் இருக்கும் அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது…



அப்போ நானும் நம்பர் தர முடியாது…



ஓகே தரவேணாம் நீயே வெச்சுக்கோ... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் உன்னோட அப்பா பேரு சொன்ன... அது மட்டும் கிடையாது அவங்க சர்வீஸ் பண்ணற ஹாஸ்பிடல் பேரையும் சொல்லிட்ட... அந்த ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி உன் அப்பா பேரு சொன்னா நம்பர் எடுத்து கொடுக்க போறாங்க சிம்பிள் என்று கூறியபடி அவன் ஃபோனை பாக்கெட்டில் வைக்கவும்…



தரலன்னா விடமாட்ட போல...ரொம்ப அடமென்ட் நீ...என்றவள் நம்பர் நோட் பண்ணிக்கோ என்று தந்தையின் நம்பரை கூறிவிட்டு..அவர்ட்ட அப்படி என்ன பேசபோற என்று கேட்டாள்.



பயப்படாத ராகா...உன் ஹெல்த் பத்திதான் பேசப்போறேன்‌.. காலைல நீ மயக்கம் போட்டு விழுந்த இல்லையா... அதை அவர் கிட்ட சொல்லணும் ...அது மட்டுமில்லாம டாக்டர் வேற உனக்கு ஃபுல் ஹெல்த் செக் அப் பண்ண சொல்லியிருக்காங்க அதையும் சொல்லணும்…ஒரு டாக்டராக இருந்துகிட்டு பெத்த பொண்ணோட ஹெல்த்ஸமேல ஏன் இவ்வளவு அக்கறை இல்லாம இருக்கறீங்கன்னு அவரை பார்த்து நாலு கேள்வி நறுக்குன்னு கேட்கணும்…



வேற வினையே வேணாம்...அப்புறம் என்னை வீட்டை விட்டு எங்கயும் அனுப்ப மாட்டாங்க... ஏற்கனவே என்னை பொத்தி பொத்தி வளர்த்தறேங்கற பேர்ல….இங்க போகாத... அங்க போகாத... நேரமா வீடு வந்து சேருன்னு ஏகப்பட்ட ரெஸ்ட்டிக்... இதுல நான் மயக்கம் போட்டதை சொன்னா ஆயுசுக்கும் என்னை வெளியே அனுப்ப மாட்டாங்க...



ஓஓ இப்படி ஒரு பிரச்சினை இருக்கா...நீ வெளிய வரலன்னா நான் எப்படி உன்னை பாக்கறதாம்... பேசறதாம்...அதனால உன்னோட ஃபோன் நம்பர் குடு..



ஒருவேளை உன்னோட அப்பா உன்னை வீட்டுக்குள்ள வைத்து அடைச்சு வெச்சா கூட உன்கிட்ட பேச எனக்கு வசதியா இருக்கும்‌ என்றவனை கோபமாக முறைத்தவள்…



என் போன் நம்பரை வாங்க தான் இவ்வளவு நேரமா டிராமா செஞ்சியா...நேராவே கேக்கலாமே...தந்திருப்பேன் என்றாள்.



ம்ம்...கேக்கலாம் தான் ஆனா நம்ம ஊர் வழக்கப்படி பொண்ணு கிட்ட நேரடியா நம்பர் கேக்கறது சாமி குத்தம்...அதான் கேக்கல... இப்போதான் கேட்டாச்சில்ல தாயேன் என்று கூறவும் உன் நம்பர் சொல்லு என்றாள்.




சற்றும் யோசிக்காமல் அவனது அலைபேசி என்னை அவளுக்கு கொடுத்தான்.உடனே அவளது அலைபேசியில் சேமித்துக்கொண்டவள் அவனுக்கு மிஸ்டுகால் கொடுத்தாள்... இதான் நம்பர்...என்று சொல்லவும் சிரித்தபடியே காரை விட்டு இறங்கியவன் சரி பாத்து போ...நான் ரூம்க்கு போனதும் டெக்ஸ்ட் பண்ணறேன் என்றபடி அவள் செல்ல வழி விட்டான்.



பிறகு அங்கிருந்து கால் டாக்ஸி புக் செய்து அவனது அறைக்குச் சென்றான்.




மாலை வரை காரை ஓட்டியபடியே நேரத்தை கடத்திய ராகா வேறு வழியின்றி வீட்டிற்க்கு சென்றாள்.



தந்தையை நேருக்குநேர் எதிர் கொள்ள அவ்வளவு தயக்கம்...அதே நிலையில் தான் உள்ளே ராமும் அமர்ந்து இருந்தார்.



ஆனால் அவர் தெளிவாக பிரியாவிடம் பேசிவிட்டார்...பிரியாவிற்கு சற்று கெட்ட சக்திகள் விஷயத்தில் நம்பிக்கை உண்டு...அதை விட அதிகமாக கடவுள் நம்பிக்கையும் உண்டு... சில விஷயங்களில் சென்டிமென்ட் பார்ப்பார்...எது செய்வதாக இருந்தாலும் நாள், கிழமை, நட்சத்திரம் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் பார்த்து தான் செய்வார்...இது வரை அவர் பார்த்து செய்த காரியங்கள் எதுவும் தோல்வி அடைந்ததும் கிடையாது….



அவரிடம் சென்று கலை வீட்டில இருக்கும் விஷயத்தை கூறிவிட்டார்...அதுவும் அவருக்கு ஏற்றார் போல….வீட்டில் ஏதோ துர் சக்தி இருப்பதாகவும் அது அவரையும் மகளையும் பிரிப்பதற்காக கடும் முயற்சி எடுப்பதாகவும் அதை எப்படியாவது தடுத்து நிறுத்தவேண்டும் என்று கூறினார்.



அதுதான் அடிக்கடி தன்னுடைய உடம்பில் புகுந்து தன்னை மகளிடத்தில் கோபமாகப் பேச வைக்கிறது இன்று காலையில் நடந்த பிரச்சனைக்கு கூட அது மட்டும்தான் காரணம் நீ வேண்டுமானால் ராகாவிடம் விசாரித்துப்பார் ….



ரூம்ல இருந்த பிளவர் வாஷ் டேபிள்ல இருந்த பொருட்கள் எல்லாமே கீழ விழுந்து நொறுங்கிச்சி... ஆனா நீ க்ளீன் பண்ண போகும் போது அது சுத்தமா இருந்தது தானே... அப்படின்னா என்ன அர்த்தம் என்று பிரியாவை திருப்பி கேள்வி கேட்டார்.




ம்ம்….உண்மை தான்... இன்னைக்கு காலைல கூட நீங்க பேசினதை பாக்கும் போது என்னால நம்பவே முடியல... பேசனது நீங்களான்னு என்னை நானே கேட்டுகிட்டேன்…அப்புறம் ரூம் அவ்ளோ க்ளீன்... கீழே விழுந்து உடைந்த சத்தம் எனக்கும் ரொம்ப நல்லாவே கேட்டது ஆனா நான் உள்ள போகும் போது எதுவுமே நடக்காத மாதிரி இருந்துது..



ஆனா உடைஞ்ச பொருள் எல்லாமே டஸ்ட் பின்ல கிடந்தது...யார் இவ்ளோ சீக்கிரமா க்ளீன் செஞ்சதுன்னு யோசிச்சிகிட்டே வெளிய வந்தேன்...




பாவம் ராகா...எப்படி தான் அந்த வார்த்தைகளை எல்லாம் தாங்கிகிட்டாளோ... ஏதோ ஒரு பேய் பேசினதுக்கு... தப்பே பண்ணாத உங்க மேல கோவபட்டுட்டு காலேஜ் போயிட்டா...சரி அண்ணா இந்த தொந்தரவுக்கு என்ன தான் தீர்வு…?




தீர்வு என்ன...கேரள நம்பூதிரிகள் இங்க அதிகம்...அவங்களை கூப்பிட்டு ஒரு பூஜை போடலாம்னு இருக்கேன்…அதுக்காக கேசவ் கிட்ட சொல்லியிருக்கேன்...நல்ல ஆளா கூட்டிட்டு வான்னு….



அவர் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் நம்பி இருக்க மாட்டாரே அண்ணா..

அவர் எப்படி கூட்டிட்டு வருவாரு.

என்று கவலையாக கேட்டாள்.



ஆமா அவன் சுத்தமா நம்பல... என்னை மனநல மருத்துவர் கிட்ட போய் ஆலோசனை கேட்க சொன்னான்... ஆனா இங்க நடக்கிற பிரச்சினைக‌ எனக்கு மட்டும்தான் தெரியும்...இப்போ எதை தின்னா பித்தம் தெளியும்னு இருக்கேன்... இதுக்கு மேலயும் நான் பொறுமையா இருந்தா இங்க இருக்கிற கெட்ட சக்தி என்னையும் என் பொண்ணையும் நிரந்தர பிரிச்சிடும்... அதுமட்டுமில்லாம ராகாவோட மனசையும் மாத்தி அவளே எங்காவது போறது போல செஞ்சிடும்...



ஊர் சைடுல ஒரு பழமொழி சொல்லுவாங்க... நோய்க்கும் பாக்கணும் பேய்க்கும் பாக்கணும்னு மொதல்ல பேய்க்கு பார்த்துக்கலாம் அதுக்கப்புறமா நோய்க்கு பார்க்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன் என்று கூறினார்.




ரொம்ப சரியான முடிவு அண்ணா சாயங்காலம் பூஜைக்கு நானும் வர்றேன்... அந்த கெட்ட சக்தியா இல்ல நாமளான்னு ஒரு கை பாத்திடலாம்... நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து உட்கார்ந்து கிட்டு நம்மளையே அதிகாரம் பண்ணுதா... வீட்டுக்குள்ள அத்து மீறி நுழைஞ்சதும் இல்லாம அப்பா பொண்ணுக்குள்ள பிரச்சனையை உண்டு பண்ண பாக்குது என்று கோபப்பட்டார்.



தேங்க் காட் பிரியா எங்கே நீயும் கேசவ் மாதிரி என்னை புரிஞ்சுக்காம சைகேடிஸ்ட் கிட்ட டிரீட்மெண்ட் எடுக்க சொல்லிடுவியோன்னு பயந்தேன் ஆனா நீ பிரச்சினையை சரியா புரிஞ்சிக்கிட்டதோட இல்லாம பூஜைல கலந்துக்கறேன்னு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றார்.



என்ன அண்ணா இது பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு... நம்மை காக்கறதுக்கு நல்ல சக்தி இருக்குதுன்னா.. நம்மளை கஷ்டத்துல வைக்க துர்சக்தியும் இருக்குதுன்னு நம்புறவ நான்..

உங்க நண்பருக்கு அதுல எல்லாம் அதிக நம்பிக்கை இல்லை ...ஆனால் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு..

என்று ராமிற்கு பக்கபலமாக பேசினார்.



அப்புறம் பிரியா..

என்று தயங்க…



என்ன விஷயம் தயங்காம சொல்லுங்க அண்ணா..



காலையில நான் என்ன பேசினேன்... எப்படி நடந்துக்கிட்டேன் என எதுவுமே எனக்கு ஞாபகத்துல இல்ல... நான் எதாவது தப்பா பேசிட்டேனா…. அப்படி ஏதாவது பேசியிருந்தா அதுக்கு ராகா என்ன சொன்னா... என்று எதுவுமே தெரியாத மாதிரி கேட்டார்.




உடனே ப்ரியா அண்ணா அதை எல்லாம் நான் பார்த்துக்குறேன் நீங்க பூஜைக்கான ஏற்பாடுகளை மட்டும் பாருங்க… ராகா புத்திசாலி பொண்ணு... சொல்லற மாதிரி சொன்னா அவ புரிஞ்சிப்பா...



ரொம்ப நன்றி பிரியா... நீ மட்டும் இல்லேன்னா நானும் ராகாவும் என்ன ஆகி இருப்போம்னு எனக்கு தெரியல ...அவ குழந்தையா இருக்கும் போதும் சரி...இப்போவும் சரி நீ எங்க ரெண்டு பேருக்கும் செய்யற உதவி மிகப் பெரிசு என்று கூறவும்..



என்னன்னா...இப்படியே பேசி என்னை தர்மசங்கட படுத்தறீங்க... குழந்தை வரமே எனக்கு கிடைக்காதுன்னு நினைச்சிகிட்டு இருக்கும் பொது ராகா அதிர்ஷ்ட குழந்தையா என் வீட்டுக்குள்ள வந்தா…



அவ வந்ததோடு இல்லாம எனக்கு லட்டு மாதிரி ரெண்டு பெண் குழந்தைகளை பிறக்கவும் வைச்சா... அந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டக்கார குழந்தைக்கு ஒரு பிரச்சனைனு வரும்போது நான் பாத்துட்டு சும்மா இருப்பேனா…?

சும்மா காலையில நடந்ததை பத்தியே யோசிச்சிட்டு இருக்கிறதை விட்டுட்டு..

ஆக வேண்டிய வேலையே பாருங்க...ராகா கிட்ட நான் பேசிக்கறேன்... என்றபடி அங்கிருந்து சென்றார்.



சென்ற அடுத்த நொடியிலேயே வாசலுக்கு வெளிப்பக்கமாக கண்ணீருடன் கலைவாணி நின்று கொண்டிருந்தாள்.




அவரைக் கண்டதுமே ராம்பிரசாத் கோபமாக...சொன்னது ஞாபகம் இருக்கட்டும் ...உன் பொண்ணு மேல சத்தியம்...இந்த வீட்டுக்குள்ள நீ காலடி எடுத்து வைக்கக் கூடாது என்று கூறவும்.




என் பொண்ணு மேல சத்தியம் பண்ணிட்டீங்க...இனி எப்படி நான் உள்ள வருவேன்... நான் இனிமே இந்த வீடு இருக்கற திசை பக்கமே வரமாட்டேன் …. என் பொண்ணு கிட்டயும் போக மாட்டேன் …பூஜை மட்டும் வேணாம் அய்யா...உங்களை கை எடுத்து கும்பிடறேன்…




நீங்க என் பொண்ணை அவ அப்பா கிட்ட அனுப்பலன்னா கூட பரவால்ல…அவ உங்களோடவே இருந்துட்டு போகட்டும்...விதி அவ்வளவுதான்னு என்னை தேத்திக்கறேன்…

ஆனா பூஜை வச்சி நீங்க ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க...என் மேல இருக்கற கோபத்துல தயவு செஞ்சு தப்பான முடிவெடுக்காதீங்க…



நான் இப்படி தள்ளி இருந்தே காலத்துக்கும் என் பொண்ணை பாத்துகிட்டு இருந்துக்கறேன்…. பார்க்கிற ஒரு சந்தோஷம்மாவது எனக்கு கிடைக்குது அதையும் என்கிட்ட இருந்து பறிச்சிடாதீங்க என்று கையெடுத்துக் கும்பிட …




போதும் உன் பிரசங்கம் முதல்ல இங்கிருந்து போ...என் பொண்ணு வர்ற நேரம்... உன்னால இன்னைக்கு என் மனைவிக்கு பண்ண வேண்டிய பூஜையை கூட என்னால பண்ண முடியல…



இறந்து போன மனைவிக்கு பூஜை பண்றதை விட உயிரோட இருக்கற என் மகளை என் கிட்ட தக்க வச்சிக்கறதுக்காக பூஜை பண்ண போறேன் என்றவர் படாரென்று கதவை சாத்திவிட்டு உள்ளே சென்றார்.



வாசலுக்கு வெளியே கார் நிறுத்தப்படும் இடத்தில் நின்ற படி மௌனமாகக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார் கலைவாணி.



காம்பவுண்டுக்குள் மெதுவாக காரை திருப்பிக்கொண்டு வந்த ராகாவிற்கு முதல்முறையாக கலைவாணியின் உருவம் மங்கலாக தென்பட்டது...



யாரோ ஒரு இந்திய பெண்மணி போர்ட்டிகோவில் நின்று கொண்டிருக்கிறார்கள் என நினைத்து ஹாரன் அடிக்க கலைவாணியோ எங்கும் நகராமல் வாசலையே பார்த்தபடி அழுது கொண்டிருந்தார்.



மீண்டும் ஹாரன் கொடுக்க பொறுமையாக திரும்பிய கலைவாணி நேராக காரை நோக்கி வர..

பயந்த ராகா கத்தியபடியே சடன் ப்ரேக் போட்டாள்….அதற்குள் கலையின் உருவத்தின் மீது கார் மோதியிருந்தது… கலை கண்டுகொள்ளாமல் காரை கடந்து செல்ல….



ஏதோ ஒரு பெண்ணின் மீது காரை ஏற்றி விட்டோமே என்று பயந்த ராகா காரை விட்டு கீழே இறங்கி முன்புறமாக ஒடி வர காருக்கு முன்புறம் அப்படி யாருமே கிடையாது …




இல்லையே யாரோ ஒரு பெண் புடவை அணிந்தபடி காரின் முன்பு வந்தாளே...நானும் காரை வைத்து இடித்தேனே...எங்கே அவள்...என்ற படி காரை சுற்றி வந்தாள்.




அவள் கத்திய சத்தம் கேட்டு ப்ரியாவும் ராம் பிரசாத்தும் அவரவர் வீட்டிலிருந்து வெளியே வந்திருந்தனர்.




என்ன ஆச்சு என்று பிரியா வேகமாக ஓடி வந்து ராகாவிடம் கேட்க…



ராகாவும் மம்மி.. ஒரு பொண்ணை வாசல்ல பார்த்தேன்... புடவை கட்டி இருந்தா ...நாம கார் நிறுத்தற இடத்தில் தான் நின்னுக்கிட்டு இருந்தா ...நான் ஹாரன் அடித்தேன்... நகரவே இல்ல... திடீர்னு என் காரை பார்த்து நடந்து வர ஆரம்பிச்சுட்டா ….நான் அவசரமாக பிரேக் போறதுக்கு முன்னாடி அவ மேல ஏத்திட்டேன்.


ஆனா இப்போ அப்படி யாருமே இல்ல என்று சற்று பயந்தபடி கூறவும்.



சற்று முன் ராம் கூறிய கதைகள் ப்ரியாவின் ஞாபகத்திற்கு வர ஒன்னும்மில்ல... பயப்படாத...இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள் இல்லையா...அதனால காலைல இருந்து அம்மாவை பத்தியே யோசிச்சிட்டு இருந்திருப்ப... அவங்களும் புடவை தான கட்டுவாங்க... புடவை கட்டினா அம்மா எப்படி இருப்பாங்கன்னு உனக்கே தெரியாம இன்னைக்கு யோசிச்சுட்டு இருந்தப்ப….அதான் நம்ம வீட்டு முன்னாடி புடவை கட்டின பொண்ணு மாதிரி தெரிஞ்சிருக்கும்… என்றபடி நெஞ்சினில் அவளை சாய்த்துப் பிடித்தபடி ஆறுதல் படுத்தினார்.



கேட்டுக்கொண்டிருந்த ராம்பிரசாத்க்கு புரிந்துவிட்டது... காலையிலிருந்து உருவத்தை எனக்கு காண்பித்து பயமுறுத்திய கலைவாணி இப்பொழுது மகளின் முன்பும் உருவத்தை காட்டத் தொடங்கிவிட்டாள்…. இனி இவளை விட்டு வைத்தால் மகளின் மனதை கண்டிப்பாக மாற்றி தந்தையிடம் கொண்டு சேர்த்து விடுவாள்..அதற்கு ஒரு காலமும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று முடிவெடுத்தவர் உடனடியாகவே கேசவ்விற்கு ஃகால் செய்ய ஆரம்பித்தார் .



கேசவ் நான் காலையில கேட்டது போல ஆள் ஏற்பாடு செஞ்சியா...எனக்கு கேரள நம்பூதிரிகள் தான் வேணும் அவங்களை அழைச்சிட்டு வா என்று சொன்னவர் மகளை நோக்கி வேகமாக வந்தார்.

 
Top