[B][SIZE=6]13.[/SIZE][/B][/SIZE][/B]
[SIZE=6][B][SIZE=6][B]
மம்மி இன்னைக்கு நான் அம்மாவை நினைச்சேன் தான்...ஆனா அதுக்கும் இப்போ நடந்ததுக்கும் என்ன சம்மந்தம்…
ஏதாவது கற்பனையா இருக்கும் ராகா...சில சமயம் எனக்கே தோணும்…. நம்ம முன்னாடி யாரோ நிற்கிறது போல ஆனா பார்த்தா யாருமே இருக்க மாட்டாங்க... இது சரியா தூங்காததால வர்ற இமேஜின்...வேற எதுவும் இல்ல…
மம்மி நான் பாத்தது இமேஜின் கிடையாது...மங்கலா தான் தெரிஞ்சா...ஆனா தத்ரூபமா தெரிஞ்சா...சின்ன பொண்ணு... இதோ இப்படித்தான் என் கார் பக்கத்துல வந்தா அவ மேல நல்லாவே இடிச்சேன்... நான் இறங்கி வர்றதுக்குள்ள காணோமபோயிட்டா... என்று நடந்ததை செய்கை மூலம் விவரித்தாள்.
சரிமா...நான் நம்பறேன்...கொஞ்ச நாளா இந்த வீட்ல ஏதோ சரியில்லனு உன் அப்பா சொன்னப்போ கூட கொஞ்சம் சந்தேகம் இருந்தது... ஆனா காலையில நடந்த விஷயம் இப்போ நீ சொல்ற விஷயம் எல்லாத்தையும் சேர்த்து வைத்துப் பார்க்கும்போது எனக்கும் இந்த வீட்டுக்குள்ள ஏதோ தீய சக்தி இருக்கறது போல தான் தோணுது…
நம்ம வீட்டுக்குள்ள அத்து மீறி நுழைஞ்சதும் இல்லாம அப்பா பொண்ணுக்குள்ள பிரச்சனையை வேற தூண்டிவிடுது...அதோட நிறுத்திக்காம இப்போ
பொண்ணையே பயமுறுத்தி பாக்குது…
என்ன மம்மி சொல்லறீங்க...அப்போ நான் பாத்ததை பேய்னு சொல்ல வர்றீங்களா…?என்ற ராகாவில் குரலில் சற்று நக்கல் இருந்தது...
அது புரிந்தாலும் புரியாதது போல பிரியா பேசினார்.
அப்படி சரியா சொல்ல வரல...ஆனா அப்படியும் இருக்கலாம்னு சொல்ல வர்றேன்…
இப்போ என்ன செய்யறது மம்மி…என்று கேட்டவளிடம் குழப்பம் மட்டுமே இருந்தது.
தைரியம் சொல்லும் விதமாக பிரியா ராகாவிடம்…ராம் அண்ணா எதாவது செய்வாங்க...
அப்பாவா...என்று கேட்டவளுக்கு காலையில் அவர் பேசியது மீண்டும் நினைவுக்கு வர...ராமின் முகத்தை பார்ப்பதை தவிர்த்தாள்.
ராகாவிற்கு பயம் எங்காவது தந்தை வாயிலிருந்து நீ என்னுடைய மகள் இல்லை என்ற வார்த்தை வந்துவிடுமோ என்று அதைத் தாங்கும் இதயம் அவளிடத்தில் இல்லை அதனால் முடிந்த அளவு அவரிடம் பேசுவதை தவிர்த்தாள்.
ஆனால் அவர் பிரியாவின் முகத்தை பார்த்து ஜாடை செய்தார்...ஏதாவது செய்யேன் மகளை என்னிடத்தில் பேச வைய்யேன் என்பது போல…
நான் பார்த்து கொள்கிறேன் என்று அவரின் கண்களால் ஜாடை செய்தார்.
ஆமா உன் அப்பா தான்...அவருக்கும் உன்னை போலவே அனுபவம் ஆயிருக்கு...காலைல அவரா உன்கிட்ட அப்படி பேசல ராகா...ஏதோ ஒன்னு தான் அவரை பேச வச்சிருக்கு…
****
என்ன மம்மி இந்த காலத்தில போய் பேய் ஆது இதுன்னு பேசுறீங்களே அதுவும் என் அப்பா பேசுனதெல்லாம் அவரா பேசலன்னு சொல்றீங்க இதெல்லாம் நம்பற மாதிரி இருக்கா... நீங்க வேணா நம்புங்க நான் நம்ப மாட்டேன்னு தான நினைக்கற...
****
காலையில நீ உன்னோட அப்பா கிட்ட பேசிகிட்டு இருக்கும்பொழுது பிளவர் வாஷ், டேபிள்ள இருந்த பொருள் எல்லாம் எப்படி கீழே விழுந்து உடைந்தது என்று கேட்டார் .
பதில் சொல்லத் தெரியாமல் ….எப்படி என்று யோசித்தாள்...ராம் காவ்யாவின் போட்டோவை பார்த்து பேசிக்கொண்டிருந்தார்...இவள் பின்னால் நின்று கொண்டிருந்தாள்...பிறகு அவர் இவள் பக்கமாக திருப்பி கத்தினார்...இவள் அதே இடத்தில் தான் நின்றாள்... பொருட்கள் உடையவும் பயந்து வெளியே ஓடிவந்தாள்…தந்தையும் உடைக்க வில்லை...இவளும் எதையும் தட்டிவிட வில்லை... ப்ளவர்வாஷ் கூட சாதரணமாக கீழே விழுந்தது என நம்பலாம்...ஆனால் டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் யாரோ கை கொண்டு தட்டிவிட்டது போல் தானே இருந்தது... அது எப்படி
என்பது போல் அவரின் முகத்தைப் பார்த்தார்.
சரி அதை விடு ராகா... காலைல நடந்ததை ஒரு ஆக்சிடென்ட்னு வைச்சிப்போம்...காத்தடிச்சி...இல்லனா டேபிள் ஷேக்ல விழுந்திடுச்சி….இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ கார் எடுத்துட்டு உள்ள வரும்போது ஏதோ ஒரு உருவத்தை பார்த்தேன்...அதுமேல இடிச்சேன்னு சொன்னல்ல...அது எங்க போச்சு..? காத்துல கரைஞ்சு போயிடுச்சா…?
இல்ல வானத்துல பறந்து போச்சா…?என்று கேட்டார்.
பதில் சொல்லத் தெரியாமல் தந்தையையும் பிரியாவையும் மாறிமாறி பார்த்தாள்.
இதையெல்லாம் நீ நம்பினா... நான் சொல்றதையும் நீ நம்பி தான் ஆகணும்... உன் அப்பா காலைல அவரா பேசல... உன்னையும் அப்பாவையும் பிரிக்கறதுக்கு ஒரு சக்தி முயற்சி செய்யுது... இந்த சமயத்தில நீ உன் அப்பாவுக்கு சப்போர்ட் பண்ணாம இருந்தா அது அதோட காரியத்தை சாதிச்சிட்டு போயிடும்…
நீ தைரியமான பெண்ணாக இருந்து உன் அப்பாவுக்குத் துணையா இருந்தா மட்டும் தான் நம்மளால அதை எதிர்த்து போராடி வெற்றியடைய முடியும் ஞாபகம் வச்சுக்கோ என்று கூறவும்…
தந்தையை பார்த்தபடியே நிற்க ராம் ராகவின் அருகில் வந்து...அம்மாடி ராகா ... பிரியா சொல்றது எல்லாமே உண்மை தான்.
இந்த வீட்டுல உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க ஒரு சக்தி ஆக்ரோஷமா இருக்கு... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ராகா... அப்பாவை விட்டே பேச வைக்குது...அதும் நீ நம்பறது போலவே….
நீ பிறந்ததும் உன் அம்மா இறந்துட்டாங்க… உன்னை பத்திரமா பாத்துக்கோங்கனு மத்தவங்க என்கிட்ட சொல்லும் போது பச்சைக் குழந்தையைப் என்னால எப்படி தனியா பாத்துக்க முடியும்னு ரொம்ப பயந்தேன்..
ஆனாலும் மனசுல ஒரு நம்பிக்கை இருந்தது...என் மகளை நல்ல விதமா பாத்துக்க முடியும்னு...
ஏன்னா என்னோட வாழ்க்கைக்கான ஆதாரம் நீ …
நீதான் என்னை பாத்துக்க போறேன்னு ஒரு தைரியத்துல உன்னை தனியாளா லண்டனுக்கு தூக்கிட்டு வந்து வளர்த்து ஆளாக்கிட்டேன்.
நீ குழந்தையா இருக்கும்போது உன்னை எப்படி வளர்த்த போறேனோன்னு நான் பயந்ததை விட ஆயிரம் மடங்கு இப்போ பயப்படறேன்…
எங்கே என் பொண்ணு என்ன விட்டுட்டு போயிடுவாளோன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயத்துல நெருப்பு மேல நிக்கறேன்…
ஒருவேளை அந்த கெட்ட சக்தி ஆசைபடறது போல என்னை நீ விட்டுட்டு போற மாதிரி இருந்தா போறதுக்கு முன்னாடி ஒரே ஒரு காரியம் மட்டும் செஞ்சுட்டு போ என்றார்.
கண்களில் கண்ணீருடன் என்ன என்பதுபோல் அவள் பார்க்கவும் ... கொஞ்சமா அப்பாக்கு விஷம் கொடுத்துட்டு போயிடுமா... நீ என்னோட இல்லாம இருக்குறதும் ஒன்னுதான்... நான் சாகுறதும் ஒன்னுதான்... உன் அம்மா இறந்தபோது கூட எனக்கு சாகணும்னு தோணினதில்ல... ஆனா நீ என்னை விட்டுட்டு போயிட்டா கண்டிப்பா இந்த அப்பா செத்துடுவேன்….
நீ என் உயிர் மா...என்னோட வாழ்க்கை…. என் அம்மா, அப்பா, காவ்யா ,என் வாழ்க்கையோட வெற்றிடம் எல்லாத்தையும் நிரப்ப வந்த தேவதை…
எனக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பதற்காக கடவுள் அனுப்பின லக்கி சார்ம்…. நீ மட்டும் இல்லாம இருந்திருந்தா உன்னோட அப்பா மதுவுக்கு அடிமையாகி குடிச்சி குடிச்சி என்னைக்கோ செத்துப் போயிருப்பேன்... இந்த மருத்துவத் தொழிலையும் விட்டிருப்பேன்…
நீ என் கையில வந்ததுக்கப்புறம் தான் உனக்காக வாழனும், உனக்காக மட்டுமே வாழனும்னு தோணிச்சி…
அதுமட்டுமில்லாம நான் இனிமே செய்யவே கூடாதுனு இருந்த மருத்துவ தொழிலையும் செய்ய வைச்சது...அப்படி இருக்கற அப்பா இந்த வாயால சொல்லிருப்பேனா... நீ என் மகள் இல்லைனு... நான் ஏன் அப்படிப் பேசினேனு இந்த நிமிஷம் வரைக்கும் எனக்கு தெரியல... நானா அப்படி பேசினேன்னு காலையில இருந்து என்னை நானே கேட்டு கிட்டிருக்கேன்...இதுக்கு மேல என்னால உனக்கு புரிய வைக்க முடியாது….
இனியும் நீ அப்பாவை நம்பலன்னா நான் இவ்ளோ நாள் ஒரு நல்ல அப்பாவா இல்லன்னு நினைச்சிக்க வேண்டியது தான்... என்று கூறவும்.
என்ன அப்பா நீங்க…. ஏதேதோ பேசாதீங்க...நான் உங்களை முழுசா நம்பறேன்…இனி ஒருமுறை என்கிட்ட இப்படி எல்லாம் பேசாதீங்க என்னால் தாங்க முடியல... அம்மா இல்லைங்கற வருத்தத்தை விட நீங்க இப்படி பேசறது ரொம்ப வருத்தமா இருக்கு என்று தந்தையை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள்…
அவளை அணைத்தபடி சமாதானப்படுத்த ஆரம்பித்தார் ராம்…
ஆனால் ராகாவோ அழுத படியே...
என்னை மன்னிச்சிடுங்க அப்பா...நான்தான் தப்பு…. கொஞ்சம் கூட உங்க சைடு இருந்து யோசிக்கவே இல்லை ….நான் கொஞ்சமாவது யோசித்து இருக்கனும்... ஏன் அப்பா கொஞ்ச நாளா இப்படி பேசறாருன்னு…. இன்னைக்கு கொஞ்சம் பொறுமையா உங்க கிட்ட காரணம் கேட்டு இருக்கணும்…. உங்களுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம ஓடிப்போயிட்டேன்...
உண்மையிலேயே மம்மி சொல்வதையும் நீங்க சொல்றதையும் சத்தியமா நம்பறேன்..
ஒருவேளை உங்களையும் என்னையும் பிரிப்பதற்காக ஒரு சக்தி முயற்சி செய்யுதுன்னு நேத்து நைட் சொல்லி இருந்தா கூட நம்பியிருக்க மாட்டேன்...
ஏன் காலைல சொல்லி இருந்தா கூட நம்பி இருக்க மாட்டேன் …
ஆனா இன்னைக்கு எனக்கு நடந்த விஷயங்களை யோசித்து பார்க்கும் போது மனுஷனையும் மீறின ஒரு சக்தி இருக்கறது புரியுது….என்று கண்களை அழுத்தி துடைத்துக் கொண்டவள்...
இப்போ நான் என்ன செய்யணும் ப்பா...சொல்லுங்க... உங்க மகளை இனி நீங்களே இந்த வீட்டை விட்டு வெளியே போன்னு கழுத்தைப் பிடிச்சி தள்ளி விட்டா கூட நான் உங்களை விட்டு போக மாட்டேன் இது அம்மா மேல சத்தியம் என்று அவரின் கையைப் பிடித்து சத்தியம் செய்தாள்.
சந்தோஷத்தில் ராகாவை கட்டி அணைத்தவர் இந்த ஒரு வார்த்தை போதும்... உன்னையும் என்னையும் பிரிக்க நினைக்கிற சக்தியை என்ன பண்றேன்னு மட்டும் பாரு என்றவர் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவரின் வீட்டில் பூஜை நடத்துவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் செய்தார்.
ஆனால் ராகாவின் மனதில் மிகப் பெரிய கேள்வி ஒன்று இருந்தது... எதற்காக இவளையும் தந்தையும் பிரிப்பதற்காக அந்த சக்தி முயற்சிக்க வேண்டும் இதனால் அதுக்கு என்ன லாபம் இதை உடனே பிரியாவிடம் கேட்கவும் செய்தாள்.
பிரியா பொறுமையாக அவளுக்கு புரியவும் வைத்தார் …
ராகா இதை நாம அறிவியல்படி ஆராய்ச்சி பண்ண போனா இதுக்கு என்னைக்குமே விடை கிடைக்காது…
இதே ஆன்மீகப் பாதையிலும்... நம்மளோட நம்பிக்கையோட பாதையிலேயும் பார்த்தோம்னா உடனே விடை கிடைச்சுடும் .
இப்போ ஒரு பொண்ணு அவ அப்பா வோட பாசத்துக்காக ரொம்ப ஏங்கி இருப்பா... ஆனா அவளுக்கு அப்படி ஒரு பாசம் கிடைக்காமலே போயிருக்கும்…
அப்பா பாசம் கிடைக்கும்னு நம்பிட்டு இருக்கற சமயத்துல திடீர்னு ஒரு நாள் அந்த பொண்ணு எதிர்பாராம செத்துப் போயிருப்பா... அவளோட ஆசை நிறைவேறாமலே போயிருக்கும்…
அதனால அவளோட சாந்தி அடையாது…
அது பேயா சுத்த ஆரம்பிக்கும்...ரொம்ப அன்பா,பாசமா இருக்கற அப்பா,பொண்ணை பார்க்கும் போது...நமக்கு இது போல ஒரு அப்பா அமையலையேனு ஆதங்கப்படும்...அதோட விளைவு நம்மள மாதிரி குடும்பத்துக்குள்ள வந்து பிரச்சினை பண்ண ஆரம்பிக்கும்... நமக்கே தெரியாம நம்மளோட மனசை அதோட கன்ட்ரோலுக்குள்ள வச்சிக்கும்... அதுக்கப்புறமா அது என்னென்ன பேச நினைக்கிதோ அதை எல்லாம் நம்மள வைத்தே பேச வைக்கும்...செய்ய வைக்கும்... இந்த பிரச்சனைல தான் உன் அப்பாவும் இருக்கலாம்….
நான் உதாரணத்துக்காக தான் பாசத்துக்கு ஏங்கின பொண்ணுன்னு சொன்னேன்…
இதே பாசத்துக்கு ஏங்கின பையனா இருக்கலாம்... இல்லனா மகள் பாசம் கிடைக்காத அப்பாவா இருக்கலாம்…. கணவர் குழந்தைகளை விட்டுப் போன ஒரு மனைவியா இருக்கலாம், இப்படி பலவிதமான ஆத்மாக்கள் சாந்தி அடையாம சுத்தலாம்...அதுல ஏதோ ஒன்னு தான் நம்ம வீட்டுக்குள்ள பிரச்சனையை உண்டு பண்ணுது...நீ பயப்படாத...அப்பா அதுகளை அடக்க ஆள் ஏற்பாடு பண்ணிட்டாங்க... இன்னைக்கு நைட் நடக்கற பூஜைல அது எவ்ளோ பெரிய சக்தியா இருந்தாலும் அடக்கிடலாம் என்று தைரியமும் சொன்னார்.
சற்று நேரத்திற்கெல்லாம் கேசவ் அவருடன் இரண்டு நம்பூதிரிகளை அழைத்து வந்தார் மிகவும் சாந்தமான முகத்துடன் இருந்தனர்... ஒருவர் நல்ல முதியவர் முட்டிவரை ஷார்ட்ஸூம் லூசான பணியனும் அணிந்திருந்தார்...முதுகு வரை இருந்த கூந்தலை பின்புறம் சேர்த்து கட்டியிருந்தார்...சிவந்த நிற தோல்கள் சுருக்கத்துடன் காணப்பட்டது...நெற்றிலில் செந்தூரம் இட்டிருக்க பார்வையில் அவ்வளவு கூர்மை...மற்றொருவர் ஐம்பது வயது மதிக்கும் படியாக இருந்தார் சாதாரண பேண்ட் அரக்கை சட்டை அணிந்திருந்தார்…
இவரும் நல்ல சிவந்த நிறம் ஆனால் நல்ல ஒரு கம்பீரம் நெற்றியில் அதேபோல் ஒரு செந்தூரமும்...கண்களில் கூர்மையும் இருந்தது...கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருந்தார்... முதியவருக்கு சுத்தமா தமிழ் பேச வரவில்லை...ஆனால் இளையவர் தமிழை சரளமாக பேசினார்.
ராமிடம் இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்த கேசவ் நேராக பிரியாவும் ராகாமும் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தார்.
பிறகு ராகாவை பார்த்து படிச்ச பொண்ணு தானே நீயாவது உன் அப்பாவுக்கு புத்தி சொல்லலாமில்ல...
இந்த காலத்துல போய் பேய் அது இதுன்னு சொல்லிக்கிட்டு திரியறான்….நீயும் எதுவும் சொல்ல மாட்டேங்கற…
இப்போ பாரு பேய் ஓட்டற ஆட்களை வீட்டுக்கு கூட்டிட்டு வான்னு சொல்லறான் நானும் அவன் பேச்சை கேக்க வேண்டியதா போச்சி…உன் அப்பா தான் இப்படி சுத்திட்டு இருக்கறான்னு பார்த்தா ஊர்ல பாதிப் பேர் இப்படித்தான் சுத்துறாங்க போல …
நெட்ல பார்த்த எல்லா பேய் ஓட்டறவங்களும் பயங்கர பிஸி...இதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேற வாங்கனுமாம்….இந்த ரெண்டு பேர் மட்டும்தான் வெட்டியா கிடைச்சாங்க கேட்ட காசை கொடுத்து இழுத்துட்டு வந்திருக்கேன்..
என்னை கேட்டா
உன் அப்பாவை ஒரு நல்ல சைகாடிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகலாம்…
ரெண்டு நாள் கவுன்சிலிங் கொடுத்தா அவன் ரெடி ஆயிடுவான் அதை விட்டுட்டு இப்படி பணம் பிடுங்கறாங்கன்னு தெரிஞ்சே ஏன் பணத்தை இழக்கனும் என்று கேட்க…
பிரியா அவரின் பேச்சை ரசிக்காமல் முறைத்துக் கொண்டிருந்தார் .
அங்கிள் நான் கூட அப்பா பேசறதை பார்த்து குழம்பிருக்கேன்...ஆரம்பத்தில் இது ஏதோ மன சம்பந்தப்பட்ட பிரச்சனை தான்னு நினைச்சேன்…. கொஞ்சம் யோசிச்சி பாருங்க...ஒரே சமயத்தில் ஒரு வீட்டில அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஒரே மாதியான விஷன் எப்படி தெரியும்...அவர் சைகேடிஸ்ட் கிட்ட ட்ரீட்மென்ட்காக போனா... பின்னாடியே நானும் போகணும்….
அப்பாவோட காலைல பேசும் போது நானே ஃபீல் பண்ணினேன்... இந்த வீட்ல வேற ஏதோ ஒன்னு இருக்கு... நானும் முதல்ல இதெல்லாம் நம்பல தான்…
ஆனா இன்னைக்கு எனக்கு நடந்த விஷயங்களையும் மம்மி சொன்ன சில விஷயங்களையும் யோசித்துப் பார்க்கும்போது இப்படியும் இருக்கலாமோனு தோணுது …
அப்பா ஆசைப்பட்டபடி இன்னைக்கு இந்த பூஜை நடக்கட்டும் அதுக்கப்புறம் நீங்க ஆசைப்பட்டபடி நானும் அப்பாவும் ஒரு நாள் சைகேடிஸ்ட் கிட்ட கவுன்சிலிங் வர்றோம் என்று கூறவும்…
என்னவோ பண்ணுங்க...சொன்னா கேட்கவா போறீங்க...என்றவர் பிரியாவை பார்த்து... முதல்ல உன்னை ஒரு நல்ல சைகேடிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போகணும் நீ தெளிவானா ராம்,ராகா ரெண்டு பேருமே தெளிவயிடுவாங்க...என்றபடி அங்கிருந்து சென்றுவிட்டார்.
செல்லும் கணவரை முறைத்த பிரியா….அவர் கிடக்கறாரு ராகா...நாம் பூஜைக்கான ஏற்பாடை செய்யலாம் வா என்று ராகாவை அழைத்துச் சென்றார்.
நம்பூதிரிகள் இருவரையும் கையெடுத்துக் கும்பிட்டு உபசரித்த ராம் அவர்களிடம் அவரின் பிரச்சினைகளை கூற தொடங்குவதற்கு முன்பே வயது முதிர்ந்த நம்பூதிரி கைகளைத் தூக்கி அதை தடுத்து நிறுத்தினார்.
என்னோட வயசு என்ன இருக்குனு நினைக்கற… என்று மலையாளமும் ஆங்கிலமும் கலந்தபடி கேட்டார்.
ஒரு எழுபதிலிருந்து எண்பது வயசுக்குள்ள இருக்கும் என்று கூறவும் இல்லை என்பதுபோல் தலையசைத்து மறுத்த நம்பூதிரி எனக்கு வயசு நூற்றி நாலு வயசு ஆச்சு என்று கூறவும் ராமிற்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி உண்டாச்சு.
அவரை பார்த்தால் அவ்வளவு வயது என்று சொல்லவே முடியாது அந்த அளவிற்கான உடல்வாகு அவருக்கு இருந்தது…நான் எப்படி இத்தனை வருஷம் உயிரோடு இருக்கிறேன்...அதுவும் இவ்ளோ ஆரோக்கியமான்னு நீ யோசிக்கலாம்…
நான் கும்பிடற பத்ரகாளியின் அருளாலும் சரியான உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு பழக்கத்தாலும் இது வரைக்கும் நோய் நொடியின்றி வாழ்ந்திட்டு இருக்கேன்....
நாங்க இப்போ செஞ்சுக்கிட்டு இருக்கிறது எங்களோட பரம்பரை தொழில் வீட்டுக்குள்ள இருக்கிற துஷ்ட சக்திகளை அடக்கதற்காகவே நாங்க பிறப்பெடுத்தவர்கள்...
ஆனா என்னோட மகன் மட்டும் இந்த லைனுக்கு வரல எனக்கு அது கொஞ்சம் வருத்தம் தான் ஆனா அவனோட புள்ளை அப்படி இல்லை என்ற முதியவர் அருகிலிருந்த நடுத்தர வயது ஆணை காண்பித்து
இவன் என்னோட பேரன்...என்னை போலவே ஆன்மீகத்தில நம்பிக்கை உள்ளவன்... என்னை மாதிரி திருமணம் செஞ்சு இல்வாழ்க்கையில் இருந்துகிட்டே ஆன்மீகத்தை படிக்காம பிரம்மச்சாரியா இருந்து ஆன்மீகத்தை கத்துகிட்டான்.
நான் என்னோட நாற்பத்தி எட்டாவது வயசுல லண்டன் வந்தேன்...ஒரு வெள்ளைகார தம்பதியரோட வீட்ல கொட்டம் அடிக்கற பேயை அடக்க தெரியாம யாரோ ஒருத்தர் மூலமா இந்தியால இருந்த கேரளா கோழிக்கோடுக்கு வந்தாங்க…
அங்க ஒவ்வொருத்தர் கிட்டயும் விசாரிச்சு கடைசியா என் கிட்ட வந்து சேர்ந்தாங்க அவங்க பிரச்சனைகளை நான் கேட்டுகிட்டு அவங்களோட பிரச்சனையை சரி செய்கிறேன்னு வாக்கு கொடுத்தேன்... அவங்க மூலமா தான் இந்த லண்டனுக்குள்ள காலடியும் எடுத்து வைத்தேன்…
இங்க வந்ததுக்கு அப்புறம் அவங்க வீட்ல அட்டகாசம் செஞ்சுட்டு இருந்த அந்த பேயை அடக்கி வெளிக்கொண்டு வர முடியாம பண்ணினதும்...
அந்த வெள்ளைக்கார தம்பதிகள் சந்தோஷமடைந்து எனக்கு இங்க ஒரு வீட்டையும் வாங்கிக்கொடுத்து..
என் குடும்பத்தையும் வரவச்சி இங்கேயே நிரந்தரமா தங்க வைச்சு கிட்டாங்க... அதுமட்டுமில்லாம தீய சக்தியால சிரமப்படற நிறையா குடும்பங்களுக்கு என்னை சிபார்சு செய்து அவங்க வீட்டுப் பிரச்சினைகளையும் ஒண்ணுமில்லாம பண்ணினாங்க நிறைய காசு பணமெல்லாம் சம்பாதிச்சாச்சி…
இப்போ மன நிம்மதிக்காக மட்டும் தான் இதை செய்யறது...அதுவும் என் பேரனுக்கு இந்த தொழிலை முழுசா கத்துக்கொடுக்கனும் என்பதற்காக..என்றவர் ராமை பார்த்து என்னடா பேயை ஓட்ட வந்தவன் அவனோட சுய புராணத்தை பாடிக் கொண்டிருக்கிறானேனு நினைக்காதே ….இப்போ இதையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா...நான் செய்யற வேலை நேர்மையானதா இருக்கனும்…நீ யாருக்காவது அநியாயம் செஞ்சு அது உன்னை பலி வாங்க வந்திருந்தா... நான் உனக்கு உதவ மாட்டேன்…
அதே சமயம்
உன் மேல துளி தப்பு இல்லாம அது உன்னை ஆட்டிபடைச்சா அதையும் சும்மா விடமாட்டேன்…. உண்மைக்குப் புறம்பா என்னை இந்த வேலை செய்ய வைக்கணும்னு நீ பொய் சொன்னா அதையும் நான்
கண்டுபிடிச்சிடுவேன் அதுக்கப்புறம் தேவையே இல்லாம என்னோட சாபத்திற்கும் நீ ஆளாக வேண்டிவரும்...என்றவர்…. மேலும்
இந்த வீட்டுக்குள்ள மனுஷ சக்தியை மீறிய ஒரு விஷயம் இருக்கிறதை வீட்டுக்குள்ள காலடி எடுத்து வைக்கும்போது தெரிஞ்சிகிட்டேன்... அது என் கண்ணுக்கும் தெரிஞ்சிடுச்சி…
இதைப் பண்ணாதன்னு என் காலை பிடித்து கெஞ்சிச்சி...தட்டிவிட்டுட்டு உள்ள வந்துட்டேன்...ஏதோ சத்தியத்துக்கு கட்டு பட்டது போல வெளிய ஓரமா நிக்கிது…. என்னோட கேள்வி இவ்வளவு சாந்தமாய் இருக்கிற அந்த ஆத்மாவை ஏன் அடைச்சு வைக்கணும்னு நினைக்கற...?
எப்பவுமே ஆசை நிறைவேறாம இறந்துபோன ஆத்மாக்கள் உக்கிரமா இருக்கும்...ஆனா இந்த ஆத்மா ரொம்ப அமைதியாகவும் சாந்தமாகவும் இருக்கு... நீ உண்மையான காரணம் சொன்னா நான் உனக்கு உதவி செய்கிறேன் இல்லனா நான் இப்படியே கிளம்பிபறேன்.. நீ வேற யாரையாவது வெச்சு செஞ்சுக்கோ என்று கூறவும் ராம்... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு ஐயா நான் உங்க கிட்ட உண்மையை சொல்லறேன்... உங்களுக்கு நான் செய்யறது சரின்னு தோணினா எனக்கு உதவுங்க என்றவர் கலையை பற்றி அவருக்கு தெரிந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினார்.
எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்டவர்...பெத்தவளுக்கும்,வளர்ப்பு தந்தைக்கும் இருக்கற பாசம் போராட்டம் இல்லையா... உனக்கு இப்போ உன் பெண்ணை அனுப்ப மனசு வரல.. ஆனா பெத்தவ மகளை அவளோட உண்மையான அப்பாகிட்ட சேர்த்து வைக்கணும்னு நினைக்கறா…
உன்னோட பாசம் பெருசா அவளோட பாசம் பெருசானு பார்த்தா இரண்டுமே சரி சமமான பாசம்தான்... குழந்தை பெற்றதும் அது தானாகவே தந்தை கிட்ட போயிடும்னு நினைச்சு அவ போய் சேர்ந்துட்டா... உனக்கு ஏற்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமையல அதனால நீயும் குழந்தையை இங்க தூக்கிட்டு வந்து உன் சொந்த மகளா வளர்க்க ஆரம்பிச்சுட்ட... இப்போ மகளை அனுப்பிவைன்னு சொல்லும் போது ஒரு அப்பாவாக கண்டிப்பாக கொடுக்க முடியாதுதான்...உன் இடத்திலிருந்து என்னை வச்சு பார்த்தா நானும் இதை தான் செய்வேன்...
ஆனா உன்னால எத்தனை நாளைக்கு ஒரு வளர்ப்பு மகள் கிட்ட உண்மைய சொல்லாம இருக்க முடியும் என்னைக்காவது ஒரு நாள் அவளுக்கு இந்த உண்மை தெரியவரும் போது அவளோட சொந்த அப்பாவை தேடி போக போக மாட்டாளா என்று மூத்தவர் ராமை பார்த்து கேட்டார்.
பதட்டமடைந்த ராம் என்னைக்குமே அப்படி போயிடக் கூடாதுன்னு தான் இன்னைக்கு நான் உங்ககிட்ட உதவி கேட்கறேன் …
ராகா கருவில் இருக்கும்போதே அவளை அழிக்கனும்னு அவ சொந்தக்காரங்க நினைச்சாங்க... இப்போ அவ வளர்ந்து மேஜர் ஆயிட்டா இப்போ அவ அவங்களை தேடிப்போனா கண்டிப்பா அவளை உயிரோட விடமாட்டாங்க... அதுக்குப் பயந்து தான் நான் ராகா கிட்ட உண்மையை சொல்லாமல் மறைத்து வைத்து இருக்கேன் ...அவ அம்மாவையும் சொல்ல விடாமல் தடுத்து வைத்திருக்கேன்…
எனக்குத் தெரியும் என் பொண்ணுக்கிட்ட நான் உண்மையைச் சொன்னா கூட அவ என்னை விட்டுட்டு போக மாட்டா... அவளுக்கு என் மேல அவ்வளவு அன்பு …
ஆனா அவ மனசுல அவளோட ட சொந்த அப்பாவைப் பார்க்கணும்னு கொஞ்சமாவது ஆசைப்படுவா... அப்படி ஆசைப்படும் போது அவளை நீ போகக்கூடாது அவரை பாக்க கூடாதுன்னு நான் தடுத்து வைக்க முடியாது …அவ உயிருக்கு ஆபத்துன்னு சொன்னா கூட அவரை பாக்கறதுக்கு கிளம்பிப் போய்டுவா...
அங்க போன அடுத்த நிமிஷமே அவ உயிரை குடிக்கறதுக்காக காத்துகிட்டு இருக்கற கூட்டம் நொடியில அவ உயிரை எடுத்திடும்…
அதுக்கப்புறம் இத்தனை வருஷம் பாசம் காட்டி வளர்த்த எனக்கும் அவ இல்லாம போயிட்டு வா…
திடீர்னு பெத்த பொண்ணு வந்துட்டான்னு சந்தோஷத்துல இருக்கற அவ சொந்த அப்பாவும் ஏமாந்து போயிடுவாரு…
இரண்டு அப்பாக்களோ நிலமையை நினைச்சும் கலங்கறேன்...
ஒரு வளர்ப்பு தந்தையா அவளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு… கடைசியா நான் வர்ற வரைக்கும் இந்த குழந்தையை பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு போன என்னோட தோழி வர்ற வரைக்கும் என் பொண்ணை பத்திரமா பாத்துக்க வேண்டியது என்னோட கடமை தானே என்று கண்கலங்க கூறினார்..
சரி நான் வேணும்னா கடைசியா அந்த ஆத்மா கிட்ட ஒரு முறை பேசி பார்க்கவா... உன் மகளை நீ ஆசைப்பட்ட மாதிரி அவளோட அப்பா கிட்ட அனுப்பி வைக்கிறேன் நீ அவளை பத்திரமா பார்த்துக்கோனு...என்று முதியவர் கேட்கவும்.
அதுக்கு வாய்ப்பே இல்லைங்க அய்யா... எனக்கு என் பொண்ணு வேணும் கலை மட்டுமல்ல உலகத்தில் இருக்கிற அத்தனை கடவுள்களும் தேவதைகளும் என் பெண்ணுக்கு பாதுகாப்பா அவளோடு இருக்கேன்னு சொன்னா கூட நான் அவளை அவளோட சொந்த அப்பாகிட்ட அனுப்ப மாட்டேன்...அவ என்னோட பொண்ணு எனக்கு மட்டும்தான் பொண்ணு புரிஞ்சுக்கோங்க ...அனுப்புறதா இருந்தா கலை என்கிட்ட கேட்ட உடனேயே அனுப்பி இருப்பேனே உங்களை நான் ஏன் இவ்வளவு தூரம் வர வைக்கனும் என்று கூறவும் கோபமடைந்த முதியவர் பேரனை பார்த்து கிளம்பு என்று கூறியபடி எழுந்தார்.
தாத்தா ஒரு நிமிஷம் கோபப்படாம நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்று இளையவர் முதியவரின் கைகளைப்பிடித்து தடுக்கவும் மேலும் கோபமடைந்து முதியவர் அப்படினா இவன் சொல்றபடி நான் செய்யணும்னு சொல்றியா ...நான் இதை செய்யப்போறதில்லை நான் வீட்டுக்கு போறேன் நீ கூட வர்றதுன்னா வா அப்படி இல்லன்னா எப்படியோ போ...இல்ல என்னை மீறி பூஜை செய்யனும்னு விருப்பப்பட்டாலும் தாராளமா செஞ்சுக்கோ என்று கூறவும்…
தாத்தா ப்ளீஸ்...எனக்காக ஓத்துழைங்க...உங்க பேரன் உங்களை மீறி செய்வேனா... நான் என்ன சொல்ல வர்றேன்ங்கறதை கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்க
அதுக்கு அப்புறமா... தப்பு ஏதும் இருந்தா என்னை எப்படி வேணாலும் நீங்க தண்டிச்சிக்கோங்க…. என்று முடிந்தளவு தாத்தாவை சமாதானப்படுத்தினார்.
ம்ம்...சீக்கிரமா சொல்லு என்று விருப்பமே இல்லாமல் கேட்க ஆரம்பித்தார் தாத்தா.
ராமையும் தாத்தாவையும் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டே பேரன் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
தாத்தா இப்போ அந்த ஆன்மாவோட ஆசை என்ன …?எதனால அது சாந்தியடையாம சுத்திக்கிட்டு இருக்கு சொல்லுங்க என்று கேட்டார்.
யோசனையாக நெற்றியை சுருக்கியபடி தாத்தா பேரனை பார்க்கவும்…
இருங்க... நானே சொல்றேன் மகள் அவளோட சொந்த அப்பா கிட்ட போய் சேர்ந்திடுவா அப்படிங்கிற நம்பிக்கையில தாய் உயிரை விட்டா... ஆனா அவ நம்பிக்கை பொய்யாகும் போது மறுபடியும் குழந்தை பின்னாடியே வந்துட்டா…
இப்போ அப்பாகிட்ட அனுப்ப சொல்லி வந்திருக்கா….இப்போ அந்த குழந்தை அவ அப்பா கிட்ட போய் சேரும் போது ஆத்மாவுக்கு உடனே சாந்தி கிடைச்சிடும் தானே…
உயிரை விடும் பொழுது அந்த தாயோட கடைசி ஆசை அந்த குழந்தை அவ அப்பாவோட சேர்ந்து சில கடமைகளை செய்யணும் அப்படிங்கறது தான்... கடமை என்னனு நாம யாருக்கும் தெரியாது அது குழந்தையோட அப்பாவுக்கு மட்டும் தான் தெரியும்...
அப்போ குழந்தை அப்பா கிட்ட போய் சேர்ந்தாலே ஆன்மாவுக்கு சாந்தி கிடைச்சிடும்….அப்புறம் தானாவே கடவுளது திருவடிக்கு போய்விடும்.
அதுக்கப்புறம் குழந்தைக்கு யார் பாதுகாப்பு...அப்பாவை சந்தித்த அடுத்த நிமிஷமே எதிரிகள் அந்த குழந்தையை கொன்னுடுவாங்க ...இது ஒரு பாயிண்ட்.
இரண்டாவது பாயிண்ட் இப்போ நாம இந்த வேலை செய்ய மாட்டோம்னு இங்கிருந்து கிளம்பிட்டோம்னு வைங்க...இவர் என்ன செய்வாரு... வேற யாரையாவது கூப்பிட்டு இதே வேலையை செய்ய வைப்பார்…
வர்றவங்க சுத்தமா செஞ்சுட்டா ஓகே... பாதில அரைகுறையா விட்டுட்டுட்டா...ஆத்மா உக்கிரமா மாறிடும்…
அப்படி உக்கிரமா மாறிடுச்சின்னா இவரையே கொலை பண்றதுக்கு கூட அது தயங்காது... அப்போ இவரோட உயிரும் போய்விடும்... யோசிச்சு பாருங்க நாம இந்த வேலையை செஞ்சு கொடுக்காமல் போனால் இவரோட உயிருக்கு ஆபத்து... அந்தப் பொண்ணுகிட்ட உண்மையை சொல்லி அவ அப்பா கிட்ட அனுப்பி வைச்சா அந்த பொண்ணோட உயிருக்கும் ஆபத்து.
நம்மளால ரெண்டு உயிர் போகணுமா சொல்லுங்க தாத்தா என்று கூறவும்...சில வினாடிகள் யோசித்தவர் கண்களை மூடி தாத்தாவும் மந்திரம் சொல்லிப் பார்த்தார்.
பேரன் சொன்னது முழுக்க முழுக்க சரி என்றே பட்டது அதன் பிறகு கண்களைத் திறந்தவர் வயசான காலத்துல என்னோட மூளையும் கொஞ்சம் பழுதடைஞ்சிடுச்சி... அதனாலதான் யோசிக்காம பட்டுன்னு பேசிட்டேன்…
இப்போ என் பேரன் சொன்னதுக்கு அப்புறம்தான் முழுசா எதார்த்தம் புரிஞ்சது... நான் உனக்கு உதவி செய்கிறேன் ஆனால் இன்னைக்கு நாம அடக்க நினைக்கற ஆன்மா என்னைக்குமே வெளியே வரக்கூடாது ….அப்படி வந்துச்சுன்னா வெளிய வந்த அடுத்த நிமிஷம் அது உண்மைதான் பழிவாங்கும் .
அதுக்கு அப்புறமா அதை யாராலும் அடக்க முடியாது இந்த ரிஸ்க்கை நீ எடுக்க தயாரா…?என்று கேட்டார்.
என் மகளுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்க்னாலும் எடுக்க நான் தயாரா இருக்கேன் என்று உறுதியாகக் கூறினார்.
அப்படின்னா வீட்டில் இருக்கிற பெண்களை எல்லாம் பாதுகாப்பா பூஜை ரூம்ல கொண்டு போய் உட்கார வைத்து விளக்கு ஏற்றி இஷ்ட தெய்வங்களை வேண்டிக்க சொல்லு...ம்ம் சீக்கிரம் என்று விரட்டி விட்டார்.
பேரனை பார்த்து பதட்டமாக நாம இப்போ பேசிட்டு இருக்கும் போதே பூஜையை தடுத்து நிறுத்தறதுக்காக இவ்வளவுநாள் அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்த ஆத்மா கொஞ்சம் கொஞ்சமாக உக்கிரமா மாறி இந்த வீட்டை சுற்றி நெருப்பு வளையம் உண்டாக்க ஆரம்பிச்சுருச்சு…
அது முழுசா செயல்படறதுக்கு முன்னாடி நாம பூஜையில இறங்கி அதோட சக்தியை ஒன்றுமில்லாமல் பண்ணனும்... சீக்கிரம் பூஜைக்கான ஏற்பாடு பண்ணு...என்று பேரனை பார்த்து கட்டளையிட்டார்.
[/B][/SIZE]
[B][SIZE=6][/SIZE][/B][/SIZE]
[B][SIZE=6]
[/B]