14.
வீட்டைச் சுற்றிலும் பயங்கர சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது அதுமட்டுமின்றி கலையில் அசிரீரி அந்த வீடு முழுவதும் கேட்கத் தொடங்கியது .
தப்பு செய்யாதிங்க..வேணாம் நிறுந்துங்க…. என்னை கோபப்படுத்தாதீங்க... அப்புறம் யாரையும் நான் உயிரோடு விடமாட்டேன்.. வேணாம் இதோட நிறுத்திடுங்க...என்னை கோபப்படாதீங்க….என்று மீண்டும் மீண்டும் கேட்க வயது முதிர்ந்த நம்பூதிரியும் அவரது பேரனும் கருமமே கண்ணாக பூஜைக்கான ஏற்பாடுகளை வேகவேகமாக செய்யத் தொடங்கினார்கள்.
ராம் முதியவர் சொன்னதுபோல பிரியா அவரின் குழந்தைகள் ராகா என நால்வரையும் பூஜை அறையில் அமர வைத்தவர் ...விளக்குகளை பற்ற வைத்தபடி கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பூஜை நடக்கும் இடத்திற்கு வேகமாக ஓடி வந்தார்.
கேசவ்விற்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாததால் வீட்டில் இருக்க பிடிக்காமல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
இப்பொழுது நம்பூதிரிகள் கிட்டத்தட்ட வீட்டில் யாகத்தை தொடங்கிவிட்டார்... அத்தோடு இல்லாமல் யாகத்தை சுற்றிலும் பல்வேறு தெய்வங்களின் புகைப்படங்கள் சிறிய அளவில் இருந்தது...அவருக்கு துணையாக அவரின் பேரன் பம்பரமாக உதவிக்கொண்டிருந்தார்.
யாகத்தில் சில ரகசிய பொருட்களை போட்டபடி மந்திரங்களை அவர் உச்சரிக்க, உச்சரிக்க கலையில் அசிரீரி மெல்ல மெல்ல அடங்குவது போல ராமிற்கு தோன்றியது.
கலையின் அசரீரி சத்தம் மகளுக்கு கேட்டு விடுமோ என்று அஞ்சிய ராம் மெதுவாக பேரனிடம் விசாரித்தார்.
நமக்கு கேட்கும் அசிரீரி சத்தம் பூஜை அறையில் இருக்கும் பெண்களுக்கும் கேட்குமா என்று கேட்டார் .
அதற்கு அவர் பூஜை அறையில் எப்பொழுதுமே கடவுளின் ஆதிக்கம் மட்டும் தான் இருக்கும்... அதனால் இதுபோல தீய சக்திகளின் அசிரீரி அங்கெல்லாம் கேட்காது பயம் வேண்டாம் என்று ஆறுதல் படுத்தினார்.
இப்பொழுது முதியவர் குங்குமத்தில் முக்க பட்டிருந்த ஒரு கயிற்றை எடுத்து அதில் மந்திரித்த தாயத்தை வைத்து கட்டினார்... பிறகு ராமை அழைத்து இதை உன்னுடைய மகளின் வலது கையில் கட்டி விடு எக்காரணம் கொண்டும் இதை அவள் கழட்டவே கூடாது என கூறி விடு…
இங்கு பூஜை முடியும் தருவாயில் கண்டிப்பாக ஆன்மா மிகவும் உக்கிரமாகும்...அப்பொழுது...அதை பாதுகாத்துக் கொள்ள உன் மகளின் உடலுக்குள் புகுந்து கொள்ள வாய்ப்பு அதிகம் இருக்கிறது அதனால் அப்படி நடக்காமல் இருக்க இதை உடனே கட்டி விடு என்று அனுப்பி வைக்க ராமும் அதே போல் ராகாவின் கையில் கட்டி விட்டார்.
ராகாவும் மிகவும் பயபக்தியுடன் அது கழன்று விடாதவாறு மேலும் இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.
இங்கு பூஜை முடியும் தருவாய் வரும்பொழுது அந்த இடத்திற்கு கலையின் ஆன்மா ஒளி வடிவில் இழுத்து வரப்பட்டது நெருப்போடு அவரின் ஆன்மா துடிக்க ஆரம்பித்தது...வலி தாங்க முடியல...நெருப்பில பொசுக்கி எடுக்கறது போல என் ஆன்மா முழுசா எரியுது ...என்னை விட்டிடுங்களேன் என்று கதறினார்.
அவரின் கதறலை கேட்கும் பொழுது ராமிற்கு பாவமாக இருந்தது...
ஆனால் அவர் இரக்கப்பட்டால் மகளை இழக்க நேரிடும் அதனால் வாய் மூடி வேடிக்கை பார்த்தார்.
தீடிரென கலை உக்கிரமாகி... மூவரையும் மிரட்டினார்...வேணா என்னை விட்டிடுங்க...என்னை அடைக்கனும்னு நினைச்சா யாரையும் உயிரோட விடமாட்டேன்...என்று கத்தவும்... தீடிரென முதியவர் ஒளியின் மீது குங்குமத்தை விசிறி அடிக்கவும்...வலியில் துடித்த கலை அழுதபடியே கெஞ்ச ஆரம்பித்தார்…
அய்யா... உங்க மேல நிறைய மரியாதை வெச்சுருக்கேன் என் பொண்ணை வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவர் நீங்க அந்த நன்றிக் கடனுக்காக இத்தனை வருஷமா உங்களுக்கு தொல்லை தராம தானே இருந்தேன்…
ஒரே ஒருமுறை என் மகள் கிட்ட உண்மைய சொல்லுங்க கண்டிப்பா அவ உங்களை விட்டுட்டு போக மாட்டா...அவ கடமையை முடிச்சிட்டு மறுபடியும் உங்ககிட்ட தான் திரும்பி வருவா…
பொண்ணும் நீங்களும் ஒருத்தர் மேல ஒருத்தர் எந்தளவு பாசம் வைச்சிருக்கீங்கன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்... இத்தனை வருஷம் கூட இருந்து அதை பார்த்துகிட்டு இருக்கேன் அந்த தைரியத்துல தான் சொல்றேன்…
உங்க பாசத்து மேல நம்பிக்கை வெச்சு என் பொண்ணு கிட்ட உண்மைய சொல்லுங்க ஒரே ஒரு முறை அவ அப்பாவை பாத்துட்டா அவ கடமை முடிஞ்சிடும்... நானும் போயிடுவேன்...அதுக்கப்புறம் உங்க விருப்பம் போல அவளை உங்களோட வெச்சுக்கோங்க... யாரும் உங்களை பிரிக்க வர மாட்டாங்க…
அதைக்கேட்ட ராம் நம்பூதிரியை பார்த்து ஐயா சீக்கிரமா முடிங்க...இவளோட கதறல் என்னை மனசுமாற வைக்கிது...என்றார்.
இதோ முடிந்தது என்றவர் அதுவரை யாகத்தில் எரிந்து கொண்டிருந்த ஒரு தகட்டை கை கொண்டு எடுத்தார்.
அதைப்பார்த்த ராமிற்கு உடல் சிலிர்த்து அடங்கியது எரியும் தகட்டை சாதாரண ஒரு மனிதனால் எப்படி வெறும் கைகொண்டு எடுக்க முடிகிறது என்று ஆச்சரியமாக பார்த்தார்.
நன்கு எரிந்து நெருப்பு பிழம்பாக காட்சியளிக்கும் தகட்டை பார்த்ததும் கலையின் ஆன்மா துடிக்க ஆரம்பித்தது…
வேணாம்... நான் இங்கிருந்து போயிடறேன்...என் பொண்ணு வேணாம்...அவ அப்பாவை பார்க்க வேணாம்...கடமை நிறைவேற வேணாம் விட்டிடுங்க...என் விதி பேயா சுத்திட்டு என் மகளுக்கு மட்டும் பாதுகாப்பா இருந்துக்கறேன்...என்று கதறினார்.
நம்பூதிரிகள் கடமையே கண்ணாக இருக்க...
கடைசியாக அய்யா வேணாம்... என்ற கலையின் குரல் தாயை தேடும் கன்றை ஒட்டி இருந்தது ஆனால் மனம் இரங்காத ராம் என் பெண்ணுக்காக யாரை வேணாலும் பலிகொடுக்க தயங்க மாட்டேன்..
இன்னும் உனக்கு என் மேல நன்றிக்கடன் இருந்தா எதுவும் பேசாம அந்த மந்திர தகட்டுக்குள்ள போ என்று உத்தரவு போட்டார்.
கலையின் ஆன்மாவோ தீர்க்கமான குரலில் ஓலமிட்டது விதியை மதியால வென்று விடலாம்னு நினைக்காதீங்க... அது என்னைக்கும் முடியாது ஏற்கனவே விதி வேலை செய்ய ஆரம்பிச்சாச்சி...
என்னை எந்த மந்திரத்தால கட்டுபடுத்தினாலும் கடலுக்கு அடியிலேயே குழி தோண்டி புதைச்சாலும் கூட என்னுடைய மக அவளோட அப்பாவை பாக்கறது நிச்சயம் அதை உங்களால எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறவும்.
என்னோட மகளை எப்படி தடுத்து நிறுத்தனும்னு எனக்கு தெரியும் நீ ஒழுங்கா தகட்டுக்குள்ள போ என்றார்.
அய்யா என் மகளை என்னால மட்டும் தான் காப்பாற்ற முடியும்... அவள் எந்த நோக்கத்திற்காக இந்த பூமிக்கு வந்தாளோ அது நிறைவேறும் வரைக்கும் என்னோட ஆன்மா சாந்தியடையாது...யாரையும் தொல்லை செய்யாம என்னோட மகளுக்கு அரணா நான் இருக்கிறேன் தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க…
நீ பொய் சொல்ற கலை ...அவளோட அரண் அவ பிறந்ததில இருந்து நான் மட்டும் தான்...உன்னை நாங்க அடக்கிவைக்கற சமயத்துல இப்படி சொன்னா விட்டிடுவோம்னு நினைக்கிற விடமாட்டேன்…
நீ வெளியே இருந்தா கண்டிப்பா என் பொண்ணு என்கிட்ட இருந்து பிரிக்கறதுக்கான முயற்சிகளை செஞ்சுக்கிட்டே தான் இருப்ப... அதனால நான் அனுமதிக்கப் போறதில்லை நம்பூதிரி அய்யா அவளை பேச விடாதீங்க... என் மனசை மாத்த பாக்கறா... சீக்கிரம் அவளை அடைங்க என்று கூறவும் தாத்தாவும் பேரனும் மாறிமாறி மந்திரங்களைச் சொல்ல கலையின் ஆன்மா ஒளி வடிவத்தில் இருந்து மெல்ல கரைந்து தகட்டிற்குள் அடங்கியது….
தகடு சூட்டில் சில வினாடிகள் வரை தகடு குதிக்க ஆரம்பித்தது... அது அடங்கவும் மஞ்சள் துணி கொண்டு அதை சுற்றி கட்டிய நம்பூதிரி ராமை பார்த்து இது ரொம்ப ஆழமான இடத்தில் புதைத்து வைக்கணும் எக்காரணம் கொண்டும் வெளிய வரவே கூடாது…
மீறி வெளிய வந்தா அடுத்த நிமிஷம் உள்ள இருக்கிற ஆன்மா பயங்கரமான உக்கிரத்தோடு வெளிப்படும் அதோட முதல் குறி நீயா தான் இருப்ப... அதுக்கப்புறம் இந்த ஆன்மா சாந்தமான அமைதியான ஆன்மா கிடையாது...நெருப்புல பொசுங்கி...அதோட ஆன்மா மரத்துப்போய் உக்கிரமான உயிர்பலி வாங்கக்கூடிய ஒரு துர்சக்தியாக மாறி இருக்கும்...அதனால எக்காரணம் கொண்டும் வெளிய எடுக்க கூடாது….எங்க புதைக்கறது சொல்லு எனக்கேட்டார்.
வீட்டுக்கு பின்னாடி ஒரு மரம் இருக்கு அதுக்கு கீழே புதைகலாம்...அங்க தான் யாரும் போக மாட்டோம் என்றார்.
உடனே பேரனை அழைத்துக் கொண்டு அங்கே செல்ல பின்னாலே ராமும் சென்றார் கடைசியாக மிக ஆழமாக குழி தோண்டப்பட்டு அதற்குள் தகட்டை வைத்து மண் கொண்டு மூடினார்கள்.
மறுபடியும் சொல்றேன் மறந்திடாத எக்காரணம் கொண்டும் இந்த இடத்து பக்கம் யாரும் வரவும் கூடாது அந்த தகட்டை வெளியே எடுக்க முயற்சி செய்யவும் கூடாது ஞாபகம் வச்சுக்கோ...என்று உள்ளே வந்தவர்... மீண்டும் சாந்தி பூஜை ஒன்றை செய்தார்.
நிதானமாக செய்து முடித்தவர் இறுக்கமாகக் கண்களை மூடி சில வினாடிகள் தியானம் செய்துவிட்டு ராமை அழைத்து அவரது கையில் பிரசாதங்களை கொடுத்தவர் .
இங்க பாருப்பா உன் மகளுக்கு கூடிய சீக்கிரம் திருமணம் செஞ்சு வெச்சிடு... நீ அவளுக்கு பார்க்கிற மாப்பிள்ளை இந்த ஊர்க்காரனா இருக்கிறது போல பார்த்துக்கோ...அப்போ தான் அவ எக்காரணம் கொண்டும் அவளோட பிறந்த இடத்திற்கும் போக மாட்டா...
ஒரு பொண்ணு கன்னியா இருக்கிற வரைக்கும் தான் பெற்றவர்களோட கடமைக்குள்ள அடங்குவா...எப்போ அவ இன்னொருத்தனுக்கு மனைவியாகி குடும்பம் நடத்த தொடங்குவாளோ அப்பவே அவளுக்கான கடமைகள் வேறுபட ஆரம்பிக்கும்…
திருமணத்திற்கு பிறகு அவளுக்கு எல்லாமே கணவன், கணவனின் குடும்பம், அவளுடைய குழந்தைகள் அப்படின்னு போயிடும் அதனால உன் பொண்ணோட கடமைகளை உடனடியா மாற்ற வேண்டிய பொறுப்பு உன்னோடது...
அப்போ தான் எதிர்காலத்தில் எதிர்பாராதவிதமா அந்த ஆன்மா வெளியில வந்தா கூட செயலிழந்து போகும் என்று அறிவுறுத்தி விட்டு சென்றார் .
கிட்டத்தட்ட லன்டன் மாநகர் பனியில் உறைந்திருக்க ராமின் வீடு மட்டும் அனல் அடித்துக்கொண்டிருந்தது.
யோசனையாக காவ்யாவின் புகைப்படத்தருகே வந்தவர்... நான் தப்பு எதும் செய்யலையே... எனக்கேட்டார்.
பிறகு அவராகவே... தப்பாவே இருந்தாலும் என் மகளுக்காக நான் அதைத்தான் செய்வேன் நீ ரொம்ப சுயநலமா என்ன விட்டுட்டு போயிட்ட உன்னோடவே நான் கிளம்பி வந்து இருக்கணும் ஆனா பாலா போன இந்த மனசு சாகத் துணியல..
வாழவும் பிடிக்கல ஆனால் நம்ம பொண்ணு என்கிட்ட வந்ததுக்கு அப்புறம் தான் வாழனுங்கற ஆசையை எனக்கு கொடுத்தா.. அப்படி பட்டவளோட உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சி நான் எப்படி அவளை அனுப்ப முடியும் சொல்லு…?
வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு வேணும்னா தப்பா தெரியலாம்... அப்பாவா என் இடத்தில் இருந்து பார்த்தாதான் என்னோட பரிதவிப்பு புரியும் என் மகளுக்கு நான் இருக்கேன் நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் அவகிட்ட எதுவும் நெருங்காத மாதிரி பாத்துக்குவேன் இது உன் மேல சத்தியம் காவ்யா...என்று சூளுரைத்து விட்டு அங்கிருந்து சென்றார்.
பிறகு பூஜையறை வந்து எட்டிப் பார்க்க... நால்வரும் ஒருவர் மீது ஒருவராக சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
எரிந்து கொண்டிருந்த தீபத்தை குளிர வைத்தவர்... பிரியா கையிலிருந்த கந்தசஷ்டிகவச புத்தகத்தை மடித்து சாமி படத்தின் முன்பு வைத்தார்.
உள்ளிருந்து கனமான கம்பளிகளை தூக்கி வந்து அனைவருக்கும் தனித்தனியாக போர்த்திவிட்டவர்…அறையின் வெப்பத்தை கூட்டி வைத்தார்..பிறகு அவருக்கும் ஒரு கம்பளியை எடுத்துக் கொண்டு
பூஜை அறைக்கு வெளியே இருந்த சுவற்றில் சாய்ந்தபடி உறங்க ஆரம்பித்தார்…
நெடுநாளைக்கு பிறகு அப்படியொரு தூக்கம்...அவர் இழந்த குடும்பத்தோடு இருப்பது போல மிக இனிமையான கனவு வேறு...விடியவே கூடாது என்பது போல அவ்வளவு சந்தோஷமாக உறங்கினார்.
யாரோ அவரை கோபமாக தட்டி எழுப்புவது போல கனவில் தோண்ற.
மிக மெதுவாக கண்களை திறந்தார்.
கேசவ் தான் கோபமாக எழுப்பிக் கொண்டிருந்தார்… என்னாச்சி கேசவ் இவ்ளோ காலைல எழுப்பற...என்று ராம் கேட்கவும் பற்களை கடித்து கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டவர்...டேய் வாய்ல நல்லா வந்திடும்...இப்போ மணி மதியம் பன்னிரெண்டு...நைட் வீட்ல என்னடா கூத்து அடிச்ச...வீடு ஃபுல்லா ஒரே குப்பை...இவ்ளோ நேரம் எல்லாரும் சேர்ந்து க்ளீன் செஞ்சிருக்கோம்...நேத்து அந்த கிழவனும் கூட வந்தவனும் எவ்ளோ பணம் வாங்கினாங்க...கேட்டதை எல்லாம் குடுத்தியா... என்று கேள்வி மேல் கேள்வியாக அடுக்கினார்.
கம்பளியை கேசவ்வின் மீது தூக்கி வீசியவர்...ஓவ்வொரு கேள்வியா கேளு பதில் சொல்லறேன் என்ற படி சென்றார்.
ஏன்டா ராம் இப்படி முட்டாள் தனமான காரியத்தை செய்யற...
எதைடா சொல்லற….கம்பளியை உன் மேல வீசினதை சொல்லறியா என்று நக்கலாக கேட்டபடி சென்றார்.
விளையாடாத ராம்...நீ தான் பூஜை அது இதுன்னு மூட நம்பிக்கைல இருக்கறனு பார்த்தா...குழந்தைகளையும் உள்ள இழுத்து விட்டிருக்க...ராகா வயசு பொண்ணு அவ கையில என்ன அவ்ளோ பெரிய கையிறு... லண்டன் போலீஸ் அவளை புடிச்சா சைனைய்ட் குப்பிய வச்சிட்டு சுத்தறான்னு உள்ள தூக்கி வச்சிடுவாங்க...
நைட் புல்லா இந்த குளுர்ல எல்லாரையும் வெறும் தரைல தூங்க வச்சிருக்க...பத்தாததுக்கு நீ வேற அதே மாதிரி இவ்ளோ நேரம் தூங்கிருக்க...ஓரு டாக்டர் பண்ணற வேலையாடா இது... என்று பொரிந்து தள்ளினார்.
ஒரு விஷயம் நம்மளை பாதிக்காத வரை எல்லாமே மூட நம்பிக்கைதான் கேசவ்...பக்கத்து வீட்ல ஏதாவது பிரச்சனையா...வேடிக்கை பார்ப்போம்...அது தீர அவன் பூஜை புனஸ்காரம்னு,பண்ணினா அவனை பைத்தியக்காரன்னு கிண்டல் செய்வோம்...அதே பிரச்சனை நமக்கு வரும் போது எல்லாமே தலைகீழா மாறும்….கடவுள் சோதனைனு சொல்லுவோம்...யாரோ ஏதோ செஞ்சி வச்சிட்டாங்கன்னு புலம்புவோம்... நாம எதை எல்லாம் மூடநம்பிக்கைனு சொல்லி கிண்டலும் கேலியும் செய்வோமோ அதை எல்லாம் கர்ம சிரத்தையாய் நடைமுறை படுத்துவோம்...உனக்கு என் பிரச்சனையை சொன்னாலாம் புரியாது...என் இடத்தில இருந்து அனுபவிக்கனும்...அப்படி நீயும் அனுபவிச்சி இருந்தா இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்க மாட்ட என்றார்.
ஆமான்டா...எவ்ளோ பிரச்சனை வந்தாலும் உன்னை மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணமாட்டேன்...முதல்ல பிரியாவை டிவோர்ஸ் பண்ணி அவ அப்பா வீட்டுக்கு துரத்தி விட்டுட்டா எல்லாம் சரியா வந்திடும்...என் ரெண்டு பொண்ணுகளாவது இதுபோல மூடநம்பிக்கைல இருந்து வெளிய வருவாங்க…
இன்னொரு முறை பிரியாவை டிவோர்ஸ் பண்ணறேன்னு உன் வாயில இருந்து வார்த்தை வெளிய வந்தா உன்னை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் நியாபகத்துல வெச்சுக்கோ …
உன் ரெண்டு பொண்ணுங்களுக்கும் மூடநம்பிக்கை வரக்கூடாதுன்னு இத்தனை வருஷம் உனக்காகவே வாழற பிரியாவை பிரிய நீ துணியலாம்... ஆனா என் பொண்ணுக்காக நான் பூஜை செஞ்சா அது தப்பு இல்லையா…? நல்லா இருக்குடா உன் நியாயம்.
விடு ராம்... பிரச்சினை வேறு திசை நோக்கிப் போறது போல இருக்கு...நாம இந்த பேச்சை இத்தோட நிறுத்திகலாம்...உன் வீட்ல உன் இஷ்டம் போல என்ன வேணாலும் செய் எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல... இப்போ நான் சொல்ல வந்த விஷயத்தை தெளிவா சொல்லிடறேன்... உன் வீட்ல பூஜை பண்ணு... அகோரிகளை கூட்டிட்டு வந்து ஆட்டம் போடு…. இன்னும் இந்த ஊர்ல எத்தனை மந்திரவாதிகள் இருக்காங்களோ அத்தனை பேரையும் கூட்டிட்டு வந்து உன் வீட்டிலேயே தங்க வச்சிக்க அது உன் தனிப்பட்ட விஷயம்...அதுல நான் இனி தலையிட போறதில்ல.
நீ எது செஞ்சாலும் அதுல ப்ரியாவையும் என் இரண்டு குழந்தைகளையும் உள்ள இழுக்காத அது மட்டும் போதும் என்று கூறவும் அழுத்தமாக கேசவ்வின் முகத்தை பார்த்த ராம் இவ்வளவுதான...இனி எந்த பிரச்சனைக்கும் பிரியாவை தேட மாட்டேன் போ...என்றவர்...ஆனா உன்னை தேடலாம்ல...என்று கேட்டார்.
அவ்வளவு நேரம் கோபத்தில் கத்திக்கொண்டிருந்த கேசவ் அந்த கேள்வியில் பட்டென்று சிரித்து விட்டார்...நீ திருந்தவே மாட்டியா ராம்... நான் எவ்ளோ சீரியஸ்ஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீ ஈஸியா பேசிட்டு இருக்க...நாம சின்ன பிள்ளைங்க கிடையாது...கொஞ்சமாவது ஒரு பொண்ணுக்கு அப்பனா பொறுப்போட பேசு…
தேங்க்ஸ் டா.. நீயே பாயிண்ட் பிடிச்சிட்ட…. ஒரு பொண்ணுக்கு அப்பனா பொறுப்பாக உனக்கு ஒரு வேலை தர்றேன்...என் பொண்ணுக்கு இந்திய வம்சாவளியில இங்கே செட்டிலான ஒரு நல்ல பையனா சீக்கிரமா பாரு…
என்ன ராகாவுக்கு கல்யாணம் செய்யப் போறியா அவ சின்ன பொண்ணுடா படிச்சுக்கிட்டு இருக்கா டா…
நீயும் நானும் கல்யாணம் செய்யும் பொழுது கூட பிரியாவுக்கும் காவ்யாவும் கிட்டதட்ட இதே வயசுதான் அதனால தாரளமா கல்யாணம் செஞ்சு வைக்கலாம்..
கல்யாணத்திற்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை கல்யாணம் செஞ்சதுக்கு அப்புறம் கூட தாராளமாகப் படிக்கலாம்...இங்க அது நடைமுறை வழக்கம் தானே...
ராம் நம்ம காலம் வேற...இப்போ இருக்கறது வேற...நம்மளோட கல்யாணம் இருபத்தி ஐந்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை அதை எல்லாம் இப்போ பேச முடியுமா…முதல்ல ராகா சம்மதிக்கனுமே டா...அவ ஒத்துக்கலனா என்ன செய்வ கட்டாய கல்யாணம் செஞ்சி வைக்க போறியா..
நான் சொன்னா என் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிப்பா...அந்த கவலை உனக்கு வேணாம்... கல்யாணத்திற்கும் காலத்துக்கும் என்னைக்குமே சம்பந்தம் கிடையாது... சம்பந்தம் இல்லாம அந்த காலம் இந்த காலம்னு பேசாத...
எத்தனை வருஷம் கடந்தாலும் இன்னைக்கும் நாம ஆணுக்கும் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதை நடைமுறையில வச்சிருக்கோம் தானே...
பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னா அத மட்டும் செய் தேவையில்லாதது எல்லாம் பேசாத புரியுதா… என்று பிடிவாதமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
கேசவ்விற்க்கு தான் மனம் ஆறவில்லை நேராக பிரியாவிடம் சென்று புலம்பித் தீர்த்து விட்டார்.ராகா சிறு பெண் இப்பொழுதே அவளுக்கு ஏன் திருமணம் செய்ய வேண்டும்...அவள் படித்து முடித்து கொஞ்ச காலம் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகட்டுமே என்று அதற்குள் ஏன் இந்த ராமிற்கு இவ்வளவு அவசரம்…
அப்படி நாம எப்படி சொல்ல முடியும்...
அவர் கடமையை முடிக்கலாம்னு நினைக்கலாம் நாம எப்படி தப்பு சொல்ல முடியும்…
இருந்தாலும் பிரியா…
இந்த பாருங்க பெற்றவர் அவரோட மகளுக்கு திருமணம் செஞ்சு வைக்கணும்னு ஆசைப் படறாரு அதுக்காக உங்களை மாப்பிள்ளை பார்க்க சொல்லி உதவி கேட்கறாரு... உங்களுக்கு முடிஞ்சா செய்யுங்க அப்படி இல்லன்னா விட்டுடுங்க அதை விட்டுட்டு இப்படி குறை சொல்லிக்கிட்டு இருக்காதீங்க நம்ம பொண்ணை நாம ரொம்ப நல்ல விதமா வளர்த்து இருக்கோம் அதனால் தான் இத்தனை வயசாகி கூட இன்னும் பெத்தவங்களோட இருக்கா இல்லன்னா இந்த ஊர் பொண்ணுங்க மாதிரி எப்பவோ அவளோட பாய் பிரண்டோட தனியா ரூம் எடுத்துட்டு லிவ்விங் ரிலேஷன்ஷிப்க்கு போயிருப்பா...
நம்ம பொண்ணு அந்த மாதிரி போறதுக்கு முன்னாடி நாமளே அவளுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு ராம் அண்ணா பிரிய படலாம் புரியுதா...என்று நடைமுறையை எடுத்துக் கூறி விட்டு நகர்ந்தார்.
அதன்பிறகு கேசவ்வும், ராம்மும் முழுமூச்சாக வரன் தேட ஆரம்பித்தார்கள்.
அவர்களின் அதிர்ஷ்டம் அவர்கள் வேலை செய்யும் மருத்துவமனையிலேயே சமீபத்தில் மருத்துவராக பணியில் சேர்ந்திருந்த இந்திய வம்சாவளி இளைஞன் கிடைத்தான்.
அவனுக்கும் அவருடைய குடும்பத்தினர் இந்திய பெண்ணை பார்ப்பது தெரிந்ததும் இவர்களாகவே அவரிடத்தில் சென்று பேசினார்கள்.
ஒரே தொழில் ஒரே இடத்தில் வேலை என்பதால் சுலபமாகவே அவர்களுக்கும் புரிந்துணர்வு ஏற்பட்டது.
ராகாவின் புகைப்படத்தை ஃமொபைல் போனில் பார்த்த விக்கிக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது…
ஒருமுறை ராகவே நேரில் சந்திப்பு பேசிப் பேசி விட்டு திருமணத்திற்கான முடிவை கூறுகிறேன் என்று விக்கி கூற இவர்களுக்கும் அது சரியென்றே பட்டது.
சந்தோஷமாக ராகாவிடம் வந்து கூறும் பொழுது அவளுக்கு இந்த திருமணத்தில் துளிகூட சந்தோஷம் இல்லை என்பதை முகத்தில் அப்பட்டமாக காண்பித்தாள்.
படிப்பு முடியவில்லை, வயது இன்னும் ஆகவில்லை என்று ஏதாவது ஒரு சாக்கினை கூறுவாள் நாம் பேசி சரிக்கட்டி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த ராமிற்கு அவள் திருமணத்திற்கு பிடி கொடுத்து பேசாதது கலக்கத்தை உண்டாக்கியது…
மகளை கட்டாயப் படுத்த விரும்பாமல் அவளுக்கு யோசிப்பதற்கு சில நாட்கள் அவகாசம் கொடுத்தவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
பூபதி அவளிடம் காதலை சொல்லி இரண்டு வார காலம் ஆகிவிட்டது இவளிடம் இருந்து எந்த ஒரு எதிர்வினையையும் அவனுக்கு காட்ட வில்லை ஆனாலும் அவன் இயல்பாகத்தான் அவளிடம் பேசுகிறான் பழகுகிறான் அதுவே இவளுக்கு குற்ற உணர்ச்சியை உண்டு பண்ணியது.
பூபதி விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த ராகாவிற்கு தந்தை மாப்பிள்ளை பார்த்துக் கொண்டு வர தந்தைக்கும் என்ன பதில் கூறுவது என்று பதில் சொல்ல தெரியாமல் திணறினாள்... இது இரண்டுக்கும் என்ன முடிவு எடுப்பது என்று பூபதியிடமே கேட்டுவிடலாம் என முடிவெடுத்து அவனின் முன்பு சென்று நின்றாள்.
என்னாச்சுடா இவ்வளவு காலையில காலேஜ் வந்ததும் இல்லாம என்னையும் தேடிக்கிட்டு வந்திருக்க அதும் முகத்தில் இவ்வளவு குழப்பத்தோட..
ஏதாவது பிரச்சினையா என்று மிக அக்கறையாக விசாரித்தான்.
அவனுக்கு பதில் கூறாமல் அருகில் அமர்ந்தவள் …. மெல்லிய குரலில் அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க கல்யாணம் பண்ணிக்க சொல்லி மறைமுகமாக போர்ஸ் பண்றாங்க என்ன பண்றதுன்னு தெரியல என்று கூறினாள்
பெரியதாக அலட்டிக் கொள்ளாதவன்.. மாப்பிள்ளையைப் பற்றி விசாரித்தான்... தந்தை கூறியவற்றை கூறவும்... பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவன் நீ சொல்றதை பார்த்தா மாப்பிள்ளை வெல் செட்டில் போல நல்லா படிச்சி இருக்கான்... உங்களை போலவே டாக்டர் ஃபேமிலி ... அப்புறம் என்ன சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க…
இல்ல நீயும் என்கிட்டே ப்ரொபோஸ் பண்ணி இருக்க... அதான் என்று இழுக்கவும்…
இங்க பாரு ராகா எனக்கு உன்னை பிடிச்சிருந்தது..
அதனால நான் உன்கிட்ட ப்ரபோஸ் செஞ்சேன் அதுக்காக நீ என்னை தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியம் கிடையாது...
உன் அப்பா பார்த்த மாப்பிள்ளையை நீ கல்யாணம் செஞ்சு கிட்டாலும் நான் ஏதாவது தப்பா நினைச்சிப்பேனோன்னு என்னோட நினைப்புக்கெல்லாம் நீ முக்கியத்துவம் தர வேண்டாம்... உனக்கு பிடிச்சா தாராளமா அந்த மாப்பிள்ளையை கல்யாணம் செஞ்சுக்கோ…
அதான் உன் அப்பா உனக்கு யோசிக்க நேரம் கொடுத்திருக்காரே... நல்லா யோசி அப்புறம் மாப்பிள்ளையோட தனியா பேசறதுக்கு எப்போ வேணாலும் அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணி தர்றதாவும் சொல்லறாரு... பிறகென்ன தயக்கம்...அந்த பையனை ஒருமுறை நேரில் சந்தித்து பேசு உனக்கே ஒரு கிளாரிடி கிடைக்கும்.
..அப்புறமா தெளிவா ஒரு முடிவெடு... இந்த சில்லி மேட்டருக்கெல்லாம் முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காத..
சரி நான் கிளம்பறேன்...எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்ணனும் என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.
ஏனோ இன்று பூபதி பட்டும் படாமல் பேசிவிட்டு செல்வது போல் ராகாவிற்கு தோண்றியது…
முதல் முறையாக அவளின் மனதை அவளே கேட்டுக்கொண்டாள். நான் பூபதியை காதலிக்கிறேனா…? அதனால் தான் அவனின் இந்த வெட்டுத்தெரித்தார் போன்ற பேச்சு என்னை காயப்படுத்துகிறதா என்று மேலும் குழப்பமானாள்.
வீட்டுக்கு வந்தால் ராம் இவளின் முகத்தை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரின் முகத்திற்காகவாவது விக்கியை ஒரு முறை சந்திக்கலாமே என்று தோன்றியது... தந்தையிடம் வந்து விக்கியை நேரில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறினாள்.
சந்தோஷமான ராம் விக்கியிடம் அதை தெரிவித்தார்... அவன் மருத்துவர் என்பதால் நேரத்தை முடிவு செய்யும் பொறுப்பை அவனிடமே கொடுக்கப்பட்டது அவன் எப்பொழுது ஃப்ரீயாக இருப்பான் என்பது அவனுக்கு தானே தெரியும்... கடைசியாக இருவருக்கும் பொதுவான ஒரு நேரமும், இடமும் முடிவு செய்யப்பட்டது.
ராகா கல்லூரி முடித்து வரும் வழியில் விக்கியை சந்திப்பது... விக்கி அவனின் முதல் ஷிப்ட் முடித்து விட்டு வரும் வழியில் அவளை சந்திப்பது என முடிவு.
இருவரும் பொதுவான இடத்தில் சந்திப்பதற்கு நேரத்தைக் குறித்துவிட்டு அந்ந நாளுக்காக காத்திருக்க... இருவரையும் அதிகம் காத்திருக்க வைக்காமல் அந்த நாளும் வந்து சேர்ந்தது... இன்று ராகா கல்லூரி முடிந்தவுடன் தந்தை கூறிய இடத்திற்கு விக்கியை சந்திக்கச் செல்ல வேண்டும்...ஆனால் கல்லூரியை புறக்கணித்தவள் பயத்துடன் மீண்டும் பூபதியின் முன் வந்து நின்றாள்.