15.
மர நிழலில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தவனின் முன்பு நிழலாடவுமே வந்திருப்பது ராகா என்பதை புரிந்து கொண்டான்...அவளின் பிரத்யேக வாசனை திரவியம்...அவள் அவனிடம் வரும் முன்பே தூது வந்து விட்டது….
இப்போ என்னாச்சி...என்று கேட்டபடியே நிமிர்ந்தான்.
அழகிய அனார்கலி சுடிதார் அணிந்து கூந்தலை பின்னல் போட்டிருந்தவளின் தோற்றம் மீண்டும் திரும்பி பார்க்க வைப்பது போல இருந்தது…. கூந்தலில் சிறிய அளவில் மல்லிகை பூவும், நெற்றியில் திருநீறு கீற்றும் இட்டிருந்தாள்...
பூபதி ஒரு நிமிஷம் அவளை கண்டு மலைத்து விட்டான்...பிறகு நொடியில் சுதாரித்துக்கொண்டவன்... நான் லண்டன்ல இருக்கேனா...இல்ல தமிழ்நாட்டு கோவில்ல இருக்கேனா...என்று கேட்டபடி சிரித்தான்.
அவனருகில் அமர்ந்த படியே கிண்டல் செய்யாத பூபதி...
ஆமா க்ளாஸ் ரூம்ல இருக்காம இங்க சுத்திக்கிட்டு இருக்க…கட் அடிச்சிட்டியா…?
மதியம் வரைக்கும் பாடத்தைக் கவனிக்கலாம்னு தான் நினைச்சேன் ஆனா கிளாஸ் ரூம்ல இருக்கிற எல்லா பசங்களும் என்னையே பார்த்து கிசுகிசுப்பா பேசிக்கிறாங்க...டியூட்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு பார்த்தா அவரும் வாயை பொளந்துகிட்டு பாக்குறாரு அதான் கோபத்துல வெளியே வந்துட்டேன்…
பின்ன இந்த மாதிரி ஒரு தேவதையை கிளாஸ் ரூம்ல உட்கார வைச்சா எந்த பையன் பாடத்தை படிப்பான்... சொல்லு... அதான் பாடத்தைக் கவனிக்காம உன்னை கவனிச்சிருக்காங்க... அதை நீ தப்பா புரிஞ்சிகிட்ட போல...என்று கேலி பேசினான்…
போ...நான் போறேன்...நீயும் கேலி பேசறல்ல...என்ற படி கோபமாக எழுந்தாள்.
கை பிடித்து தடுத்தவன்...
கிண்டலும் இல்ல, கேலியும் இல்ல...நீ ரொம்ப அழகா இருக்கே...நம்ம ஊர் கோவில்கள்ல இதுபோல தரிசனத்தை பார்க்கலாம்...ஆனா நீ லண்டன்ல தர்ற..என்று கூறவும் வெட்கத்தில் அவளது கன்னங்கள் சிவக்க தொடங்கியது…
அதை ரசித்தவன்... ஆமா நீ இதுபோல எல்லாம் டிரஸ் பண்ண மாட்டியே... அதிசயமா இன்னைக்கு சுடிதார் போட்டு இருக்க தலைவாரிப் பூ வச்சி இருக்க நெத்தியில பொட்டு வச்சி இருக்க என்ன விசேஷம்...என்றான்.
விக்கியை மீட் பண்ண போறேன் என்றவள் எழுந்து நின்று அவனிடம் ஆடையை சுற்றி காண்பித்த படி டிரஸ் ஒகே தான….என்று அவனின் முகத்தை பார்த்து கேட்டவளிடம் ம்ம் என்று தலையசைத்தான்…
உடனே ராகா ஆர்வமாக
மம்மி லாஸ்ட் டைம் இந்தியா போனப்போ எனக்காக இதுபோல கொஞ்சம் டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க... இன்னைக்கி விக்கியை மீட் பண்ண போறேன்ல... அதான் மம்மி இந்த மாதிரி போ... அவருக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு சொல்லி பின்னல் போட்டு பூ வச்சு விட்டாங்க... ஆனா ஏன்டா இதை போட்டுக்கிட்டோம்னு ஃபீல் பண்ணற மாதிரி ரோட்ல ,காலேஜ்ல ,கிளாஸ் ரூம்ல எல்லாரும் என்னையே குறுகுறுனு பாக்குற மாதிரி அன்ஈஸியா இருக்கு... வேற டிரஸ் எடுத்துட்டு வரல எடுத்துட்டு வந்திருந்தா விட்டா போதும்னு டிரஸ் சேஞ்ச் பண்ணி இருப்பேன்…
டிரஸ் சேஞ்ச் எல்லாம் பண்ண வேணாம் இன்னைக்கு நீ ரொம்ப க்யூட்டா பார்பி டால் மாதிரி இருக்க...அதான் எல்லாரும் உன்னோட அழகை ரசித்து இருக்காங்க….நீஜமாவே விக்கி லக்கி பாய் தான் ... என்று சிரித்தவன்.
இவ்ளோ அழகான தரிசனம் ஏன் விக்கியை பாக்க போகாம இருக்கு…
அதுல தான் சின்ன சிக்கல்…
அது என்ன…?
தனியா போக ஒரு மாதிரியா இருக்கு…என்றபடி தலைகுனிந்தாள்...
அட பார்றா...என்று சிரித்தவன்...இதை ஒருமாதிரினு சொல்லகூடாது... வெட்கம்னு சொல்லனும்...என்று சிரித்தான்.
போ வெட்கம்லாம் எனக்கு வராது என்று சொல்லியபடி மேலும் வெட்கப்பட்டாள்.
தாயே நீ மொதல்ல இங்கிருந்து கிளம்பு... நான் படிக்கனும் என விரட்டி விட்டான்.
என்ன பூபதி துணைக்கு உன்னை கூப்பிட வந்தா இப்படி விரட்டற…
என்ன துணைக்கு நான் வரவா...வாய்ப்பே இல்ல…
ப்ளீஸ் பூபதி...நீ தானே சொன்ன நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்னு... இப்போ ஃபிரண்டுக்காக வரமாட்டியா...என்று பாவமாக முகத்தை வைத்து கேட்டாள்.
வரலன்னா விடமாட்ட போல சரி எத்தனை மணிக்கு மீட் பண்ணனும்…
அதுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு…
சரி போகும் போது சொல்லு வரேன்...என்றபடி புக்கை கையில் தூக்கவும்...அவனது கையில் இருந்து பிடிங்கியவள்…
நீ படிக்க ஆரம்பிச்சா... நான் என்ன செய்யறதாம்…
ஏன் ராகா இப்படி படுத்தற…
வா இன்னைக்கு நாம எங்காவது போகலாம்…
ஊர் சுத்தற ஐடியால கிளம்பி வந்திருக்க...சரி இடத்தை சொல்லு போகலாம் என்ற படி எழுந்தான்.
அன்னைக்கு கூட்டிட்டு போனியே அந்த ரெஸ்டாரன்ட்…
எதுக்கு மறுபடியும் நீ மயக்கம் போட்டு விழவா…?
ம்கூம்...தோசை நல்லாயிருக்கும்னு சொன்னல்ல... சாப்பிட போகலாம்..என்று கூறவும் மறுபேச்சு பேசாமல் அழைத்துச்சென்றான்.
ராகா தோசையை பிய்த்து வாயில் வைத்து அன்றுபோலவே கண்களை மூடி தாயை தேடி பார்த்தாள். கலைவாணி வரவில்லை...மீண்டும் கண்களை மூட அதைப் பார்த்த பூபதி உடனடியாக அவளின் பின்புறம் வந்து அன்னைக்கு ஏதோ விளையாட்டா சொன்னேன் மன்னிச்சுக்கோ மறுபடியும் மறுபடியும் அதே போல செஞ்சுட்டு இருக்காத... உன்னை கெஞ்சி கேட்டுக்குறேன் என்று சற்று பதட்டமாகவே கூறவும் முயற்சியை கைவிட்டாள்.
அதன் பிறகு விக்கியை சந்திக்கும் நேரம் வரும் வரை அருகில் இருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்றார்கள்...சில மணிநேரம் மட்டுமே ராகா அவனுடன் இருந்தாள்...ஆனால் பல தடவை இதுபோல ஊர்சுற்றியதாக தோன்றியது.
இயல்பான அவனின் அக்கறை... கண்ணியமான பேச்சு... அவளிடமிருந்து இரண்டு அடிகள் தள்ளி நடப்பது...விளையாட்டாக கூட தொட்டு பேசாதது என பல விஷயங்கள் அவளை கவர்ந்தது…
ராகா விக்கியை சந்திக்கும் நேரம் வரவும் இருவரும் அங்கு சென்றனர்..
அது ஒரு பொழுதுபோக்கு அரங்கம் பல்வேறு தரப்பு மக்கள் கூடி இருந்தனர்...ஓரமாக இடம் தேடி அமர்ந்தவர்கள் விக்கிக்காக காத்திருக்க ஆரம்பித்தனர்.
உள்ளே வரும் பொழுதே ராகா ராம்மிற்க்கு மெசேஜ் செய்துவிட்டாள்... அவர் உடனே விக்கியின் புகைப்படத்தை இவளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியதோடு இல்லாமல் அவனது நம்பரையும் அனுப்பியிருந்தார் .
ஒருவேளை அவன் வர தாமதமானால் தொடர்பு கொண்டு பேசிக் கொள்... மருத்துவர் என்பதால் சற்று காலதாமதம் ஆகும் என்று முதலிலேயே கூறிவிட்டார்.
சிறுவயது முதலே மருத்துவரோடு வளர்ந்ததால்... காலதாமதத்தை நன்கு அறிவாள்... அதனால் அவளுக்கு அது பெரிய விஷயம் அல்ல …
விக்கியின் புகைப்படத்தை பூபதியிடம் காட்டி எப்படி இருக்கிறான் என அபிப்ராயம் கேட்டாள்.
அவனும் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு உனக்கு ஏத்த ஜோடி...என்னதான் லண்டனில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டின் கலை முகத்தில் தெரிகிறது நீ கொடுத்து வைத்தவள் என்று அவளை சந்தோஷப் படுத்தினான்.
அப்பொழுது வேகமாக விக்கி உள்ளே வந்து கொண்டிருந்தான்...ஆறடிக்கும் மேல் உயரம் இளஞ்சிவப்பு நிறம்...ஆனாலும் வட்டமுகமும் கருமையான சுருள்முடியும்,கூர்நாசியும் இந்தியன்..
அதுவும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லியது... ஃபுல் கை சட்டையும் பார்மல் பேண்ட்டும் அணிந்திருந்தவன்...முகத்தில் பிரெஞ்சு பியர்ட் வைத்திருந்தான்…
கையில் மொபைல் ஃபோனில் ராகாவை பார்த்து அதே அடையாளத்தில் யார் இருக்கிறார்கள் என தேடியபடி அவர்களை கடந்து சென்றான்.
பூபதி தான் ஹேய்...உன் பியான்ஸி உன்னை தேடிகிட்டே போறாரு பாரு... என்றவன். மிஸ்டர் விக்கி... ராகா இங்க இருக்கா என ஆங்கிலத்தில் கூப்பிட்டான்... அதற்குள்ளாக சில அடிக்கள் நடந்திருந்த விக்கி அங்கிருந்த டேபிள்களில் ராகா இருக்கிறாளா என தேடி விட்டு ஒர் இடத்தில் அமர்ந்து ராகாவிற்கு மெசேஜ் அனுப்பினான்.
பூபதி விடு நானே போய்கறேன்..
அனேகமா அவருக்கு கண்ணு சரியா தெரியலன்னு நினைக்கிறேன் இல்லன்னா முன்னாடியே உட்கார்ந்திருக்கிற என்னை அடையாளம் தெரியாம போகுமா…?என்று சற்று கோபத்துடன் சொன்னாள்.
மட்டி மாதிரி பேசாத... அவருக்கு கண்ணெல்லாம் நல்லாதான் தெரியுது... நீ தான் மாறுவேஷத்தில வந்த மாதிரி வந்திருக்க... அதனால தான் அவரால உன்னை அடையாளம் காண முடியல என்று விக்கிகாக பரிந்து பேசினான்…
நெற்றியை சுழித்தபடி பூபதியை முறைக்க... பின்ன என்ன ராகா…உன் அப்பா எந்த ஃபோட்டோவை அனுப்பிருப்பாரு... கொஞ்சம் யோசிச்சி பாரு…பொண்ணா,ஆணான்னு அடையாளம் தெரியாத மாதிரி வெஸ்டர்ன் அவுட் பிட்ல இருக்கற போட்டோவை அனுப்பி வச்சிருப்பாரு... அதுல கண்டிப்பா தலைய விரிச்சுப் போட்டுட்டு தான் போஸ் கொடுத்திருப்ப...
உன்னோட பிரான்சியும் அதை பார்த்துட்டு உன்னை அதே மாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு தேடிகிட்டு போயிருப்பாரு.. ஆனா இன்னைக்கு நீ பொண்ணு மாதிரி சுடிதார் போட்டு, தலை பின்னி ,பூ வச்சி ,பொட்டு வச்சிட்டு வந்திருக்க... எனக்கே உன்னை அடையாளம் தெரியல அப்படி இருக்கும் போது வெறும் ஃபோட்டோவை பார்த்தவருக்கு எப்படி அடையாளம் தெரியும்..
அதனால கோபப்படாம அவர்கிட்ட போய் பேசு என்று அவளை சமாதானப் படுத்தினான்.
அதற்குள் விக்கியிடமிருந்து ராகாவிற்கு மெசேஜ் வந்திருந்தது…
அவர்தான்...என ராகா பூபதியிடம் கூறவும்...இங்க தான் இருக்கேன்னு ரிப்ளே பண்ணு...டாக்டர் வேற... எந்த வேலையை போட்டுட்டு உனக்காக ஒடிவந்தாரோ...என்று விக்கிக்காக மீண்டும் பரிந்து பேசினான்.
ம்ம்...என்று பூபதி சொன்னது போல பதில் அனுப்பியவள் அவனை பார்த்து நீயும் வாயேன் என்றாள்.
என்ன விளையாடறியா…?
உங்க எதிர்காலத்தை பத்தி பேசிக்க போறீங்க நடுவுல நான் எதுக்கு...நீ போ…
இல்ல பூபதி பயமா இருக்கு…
பயமா... எதுக்கு... அவரும் மனுஷன் தான் பயமில்லாம போய் பேசு…
ப்ளிஸ் வாயேன்...என்னை அவர்ட்ட விட்டுட்டு நீ இங்க வந்துக்கோ…
நீ லண்டன்ல வளர்ந்த பொண்ணுன்னு வெளியே சொல்லாத...நம்ம ஊர் பொண்ணுகள்லாம் எவ்ளோ துணிச்சலா இருப்பாங்க தெரியுமா...ஆனா நீ கல்யாணம் பண்ணிக்க போறவரை பாத்து பயப்படற... பாரு அவரே உன்னை பாத்துட்டு கை ஆட்டறாரு கிளம்பு….என்றான்.
பூபதி எனக்காக…
கிளம்பறியா...இல்ல நான் இங்கிருந்து போகவா…என்று மிரட்டும் தொனியில் கேட்கவும்…
கத்தாத...என்று கோபத்தை காண்பித்தவள்... பிறகு தயக்கத்துடன் எல்லாம் ஓகேவா...என்று அவளின் தோற்றத்தை காண்பித்து கேட்டாள்…
ஓகேதான்…
முகம் ஃப்ரெஷ்ஸா இருக்கில்ல…
ம்ம்...ஆனா கொஞ்சமா சிரிச்சிக்கிட்டே போ... என்று அனுப்பி வைத்தான்.
ரொம்ப டென்ஷனா இருக்கு...கை எல்லாம் நடுங்குது...என்றவள் அவருக்கு என்னை பிடிக்கும்ல…
பிடிக்கும்... டென்ஷன் ஆகாம ரிலாக்ஸா போ...படபடன்னு பேசாத...என்ன கேட்டாலும் அதை உள்வாங்கிட்டு பொறுமையா பதில் சொல்லு...முதல்ல காக்க வச்சதுக்கு சாரின்னு சொல்லிட்டு பேச்சை ஆரம்பி...என்றான்.
சரி என்றவள் பூபதியை திரும்பி,திரும்பி பார்த்துக்கொண்டே
விக்கியை நோக்கி சென்றாள்.
நேராக சென்று விக்கியிடம் அவளை அறிமுகபடுத்தியவள் சம்பிரதாயமாக கட்டியணைத்து விட்டு அவனெதிரில் அமர்ந்து ஏதோ கூறினாள்.
விக்கி இமைக்க மறந்து இவளையே ரசனையாக பார்ப்பது தெரிந்தது... ராகாவை கண்டவுடன் விக்கி காதல் கொண்டது பூபதிக்கு நன்றாகவே புரிந்தது.
அவன் முன்னால் கைகளை ஆட்டி இவள் விக்கியை நினைவுலகிற்கு இழுத்து வர சிரித்த படியே எழுந்தவன் ராகாவின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
பிறகு அவளது கைகளை எடுத்து அவனது கைக்குள் வைத்து ஏதோ கூறவும் கூச்சத்தில் ராகா நெளியத்தொடங்கினாள்.
அதுவரை அவர்களை வேடிக்கை பார்த்த பூபதி இனி பார்ப்பது நாகரிகம் இல்லை எனத்தோன்ற... சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
மனதில் சிறு வலி ஒன்று எட்டிப்பார்க்க தான் செய்தது என்ன இருந்தாலும் அவனும் அவளை காதலித்தான் அல்லவா...இந்த நிமிடம் அவனிடத்தில் அப்படி ஒரு எண்ணம் இல்லை தான்.,ஆனாலும் அவனின் முன்பு ஒருவன் உரிமையாக தொட்டு பேசுவது சற்று வருத்தத்தை கொடுக்கதான் செய்தது...
மொபைல் போனில் விருப்பப் பாடலை ஒலிக்க விட்டவன் ஹெட்செட்டை மாட்டிக்கொண்டு தனியாக சென்று அமர்ந்தான்…
எவ்வளவு நேரமென தெரியவில்லை...எந்த பாடல் காதினில் ஒலித்தது எனவும் தெரியாது...குழந்தை ஒன்று அவனது காலில் வந்து இடிக்கவும் தான் கண் திறந்தான்..
நேரம் பார்க்க இங்கு வந்து சரியாக ஒரு அரை நேரத்தை கடந்திருந்தது...ராகாவை பார்க்க அவள் அங்கில்லை...எங்கு சென்றிருப்பாள் என சுற்றிலும் தேடிப்பார்க்க...செயற்கை நீர் வீழ்ச்சுக்கு அருகில் விக்கியுடன் பேசிக்கொண்டிருந்தாள.
அவள் வரும் வரை காத்திருக்கவும் பிடிக்கவில்லை அதற்காக விட்டுச் செல்லவும் மனம் இல்லை என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அப்படியே அந்த இடத்தை சுற்றி வர ஆரம்பித்தான்…
சில நிமிடங்களிலேயே ராகாவிடமிருந்து இவனுக்கு மெசேஜ் வந்திருந்தது... எங்கிருக்கிறாய் எனக்கேட்டு...அவன் இருக்கும் இடத்தை சொல்லி மெசேஜ் செய்து காத்திருக்க... விக்கிக்கு கையசைத்து வழியனுப்பி வைத்துவிட்டு சிரித்தபடியே இவனை நோக்கி உற்சாகமாக வந்து கொண்டிருந்தாள்.
அவளின் துள்ளலான நடையே சொல்லாமல் சொல்லியது...ராகா மனதளவில் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என்று ..
ஒரு நிமிடம் பூபதியின் மனம் சுணங்காமல் இல்லை என்னிடத்தில் என்ன இவளுக்கு பிடிக்காமல் போனது... ஒருவேளை லண்டன் வாழ் தமிழனைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாளோ... அதனால்தான் தன்னுடைய காதலை நிராகரித்து விட்டாளோ...என்று கூட சுய பச்சாதாபம் தோன்றியது.
வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக பேண்ட் பாக்கெட்டில் கை வைத்தபடி நிற்க அவன் அருகில் சந்தோஷத்துடன் வந்தவள்... ரொம்ப லேட் பண்ணிட்டேனா என்று கேட்டாள்.
உணர்ச்சியே இல்லாத குரலில் போறதுக்கு முன்னாடி ரொம்ப டென்ஷனா இருக்கு, கை நடுங்குது, பயமாயிருக்குன்னு அவ்ளோ சீன் போட்ட இப்போ என்னண்ணா இவ்ளோ ஜாலியா வர்ற… பையனுக்கு உன்னை பிடிச்சிருக்கா... என்று கேட்டான்.
நிறையா பிடிச்சதாம்... அவர் எந்த மாதிரி பெண்ணை எதிர்பார்த்து வந்தாரோ அப்படியே நான் இருக்கேனாம்... அவருக்கு இன்னிக்கு நான் போட்டிருந்த டிரஸ்... ஹேர்ஸ்டைல் எல்லாமே ரொம்ப பிடிச்சதாம்... என்கிட்ட ரொம்ப, ரொம்ப பிடிச்ச விஷயமே நான் பொட்டு வச்சி இருக்கிறதுதான்னு நிறையவே என்கிட்ட பேசினார்.
அவரோட பேமிலி பேக்ரவுண்ட் பத்தி ஃபுல்லா சொன்னாரு...வொர்க்ல இருக்கற...சாதக,பாதக விஷயங்களை சொன்னாரு படிப்பு பத்தி சொன்னாங்க...இப்போ அவர் சைடு எல்லாமே ஓகே ...இப்போ நான் தலையை ஆட்டினா போதும் உடனே வந்து என்ன கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்காங்க என்று சிரித்தபடியே கூறினாள்.
அப்புறம் என்ன உடனே தலையாட்டிட்டு வர வேண்டியதுதானே... நான் லண்டனை விட்டு போறதுக்கு முன்னாடி உன்னோட கல்யாண சாப்பாட்டை சாப்பிட்டுட்டு போயிருவேன்ல்ல…
ம்ம்...இல்ல பூபதி அதில ஒரு சின்ன சிக்கல் இருக்கு…
என்னவாம்…
அவரோடு பேச ஆரம்பிக்கும் போது என் மனசுல எந்த ஒரு ஐடியாவும் இல்ல ஆனா அவர் கிட்ட பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரம் கழிச்சு தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது...அவர் எவ்ளோ நேரம் என்னோட பேசினாலும் அவரை என்னால கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு…
அப்போ அப்பாகிட்ட நோ சொல்லிட்டு வேற மாப்பிள்ளையை பாக்க சொல்லு...என்றவனின் குரலில் சற்று எரிச்சல் காணப்பட்டது.
ம்கூம் ..இவர் மட்டும் இல்ல...என் அப்பா பாக்கற எந்த மாப்பிள்ளையையும் என்னால கல்யாணம் செய்ய முடியும்னு தோணல…
ஏன்...தீடிர்னு ஏதாவது நோய் வந்துடிச்சா...என்று நக்கலாக கேட்டான்.
ஆமா... நோய்தான்... காதல் நோய்...என்று கூறியபடி வெட்கப்பட்டவள்... பூபதியின் முகத்தைப் பார்த்து ஐ திங்க் நான் உன்னை லவ் பண்றேன்னு நினைக்கிறேன்... நான் விக்கி கிட்ட பேசற வரைக்கும் உன் மேல எனக்கு இருந்த லவ்வை நான் உணரல…
எப்போ விக்கி என் பக்கத்தில் உட்கார்ந்து என் கையை பிடிச்சு பேச ஆரம்பிச்சாரோ அப்போ தான் எனக்கு புரிஞ்சது என் மனசுல நீ இருக்கிற விஷயம்…
அவர் பக்கத்தில் உட்காரும் போது ரொம்ப சங்கோஜமா இருந்தது... அவர் என்னைத் தொட்டுப் பேசும் போது ரொம்ப கூச்சமா இருந்தது..
ஒருமாதிரி இன்செக்யூர்ட் ஃபீல்...
ஆனா உன் பக்கத்தில இருக்கும்போதோ... உன் கிட்ட பேசும் போதோ... நீ என்னை இயல்பா தொடும் போதோ... எனக்கு அந்த மாதிரி எல்லாம் ஃபில் ஆனது இல்ல.
சாரி பூபதி அன்னைக்கு நீ உன்னோட காதலை என்கிட்ட சொன்னப்போ நான் பதிலே சொல்லாம போய்டேன்...இந்த நிமிஷம் வரைக்கும் நான் ஓகே சொல்லாம உன்னை ரொம்பவே தவிக்க விட்டுட்டேன்... அதுக்காக என்னோட காதலை ஏத்துக்க முடியாதுன்னு சொல்லி என்னை அழ வச்சிடாத…
என் மனசுக்குள்ள நீ இருக்கனு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே உன் கிட்ட ஓடி வந்துடனும்னு தோணுச்சு... உன்கிட்ட என்காதலை சொல்லனும்னு தோணுச்சு…
இதே மாதிரி தான நீயும் துடிச்சிருப்ப...அதுக்காக என்னை மன்னிச்சிடு பூபதி... என் காதலை அக்ஸெப்ட் பண்ணிக்கோ என்று கண்களில் கண்ணீருடன் பேசி முடித்தாள்.
கண்கள் கலங்க மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்ததான் பூபதி... கை கொண்டு அவனின் தலை முடியை மாறி மாறி கோதிவிட்டவனுக்கு .. ஏனோ அழ வேண்டும் போல் தோன்றியது .
மிகவும் நெகிழ்வாக உணர்ந்தான்... கிடைக்காது என்று தெரிந்தும் காத்திருந்த காதல்...இன்று அவன் முன்பு ஏற்றுக்கொள் என்று கண்ணீருடன் நிற்கிறது….
வாய் மூலமாக சுவாசித்து... அழுகையை கட்டுப்படுத்தயவன் ராகாவின் உச்சந்தலையில் கைவைத்து அவனின் பக்கமாக இழுத்து நெஞ்சோடு அணைத்தவன் தலையில் முத்தமிட்டு அவனின் அன்பையும் அவளுக்கு புரிய வைத்தான்….எவ்வளவு கட்டுபடுத்தியும் விழிநீர் அவனின் கன்னம் தொட்டது...நாசூக்காக துடைத்துக்கொண்டவன்... நொடியில் இயல்பிற்கு வந்தான்…
வா உன் வீட்ல ட்ராப் பண்ணறேன்...எதா இருந்தாலும் நாளைக்கு காலேஜ்ல பேசிக்கலாம் என்றான்.
நான் கேட்டதற்கு எதுவுமே சொல்லலையே…. என்று விடாப்பிடியாக அவன் வாயிலிருந்து பதிலை பெறுவதற்கு முனைந்தாள்.
என்ன சொல்லணும் என்று இவன் பங்கிற்கு விளையாடினான்.
என்னோட லவ்வ நீங்க அக்ஸெப்ட் பண்றீங்களா இல்லையான்னு…?என்றவள் கண்களில் புது வித கலக்கத்துடன் என்னை நீங்க காதலிக்கிறீங்க தானே...அந்த காதல் அப்படியே தான இருக்கு...என கேட்டாள்.
நீ நிஜமாவே மட்டிதான்... எத்தனை முறை என் காதலை உனக்கு சொல்லறதாம்…
சொன்னியா...எப்போ…? நான் கவனிக்கலையே…என்று கூறி முடிக்கும் முன் மீண்டும் அவளை இழுத்து அணைத்திருந்தான்.
நெஞ்சினில் சுகமாக சாய்ந்திருந்தவளிடம்... இப்போ கேட்டுச்சா...எனக் கேட்டான்.
ம்ம்...என்று வெட்கப்பட்டு அவனோடு மேலும் ஒன்றினாள்.
அவளின் முகத்தை விரல்கொண்டு நிமிர்த்தியவன் துடிக்கும் இதழ் நோக்கி குனிந்தான்.
அவனின் நோக்கம் அறிந்தவள் அவன் நெஞ்சினில் கைவைத்து பின்பக்கமாக தள்ளிவிட்டபடி ஓடினாள்.
ஹேய் ராகா ஓடாத என்று இவனும் விரட்டிச்சென்றான்.
சரியாக இரண்டு நாள் கழித்து ராகாவிடம் வந்த ராம் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் என்று கூறினார்.
அவளுமே தந்தையிடம் பேசுவதற்காக தான் நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களாக தந்தையை சந்திக்கவே முடியவில்லை இன்று அவராகவே பேசவேண்டும் என்று சொல்லவும் பூபதியை பற்றி கூறிவிட வேண்டும் என்ற முடிவுடன் சரிப்பா பேசலாம் என்றாள்.
விக்கி உன்ன பாத்துட்டு போய் ரெண்டு நாளைக்கு மேல ஆச்சு அன்னைக்கு சாயங்காலமே அவனோட சம்மதத்தை சொல்லிட்டான் …
அவனோட பேரண்ட்ஸ்க்கும் நம்மளை ரொம்ப பிடிச்சு போச்சு... எப்போ வீட்டுக்கு வரட்டும்னு கேட்டுக்கிட்டு இருக்காங்க உன்னோட சம்மதத்தை சொன்னா நான் அவங்களை வரச்சொல்லிடுவேன்… என்று கூறவும் சற்றுத் தயங்கியவள் அப்பா நீங்க முதல்ல என்னை மன்னிக்கணும் நான் உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன்…
என்று திக்கித் திணறி அப்படி கூறி முடித்தாள்.
என்னது புதுசா என் பொண்ணு என்கிட்ட இந்தளவு தயங்கறா.. ஒவ்வொரு வார்த்தையும் யோசிச்சு பேசறா... என்ன விஷயம் என்று கேட்டார்
அது வந்து என் காலேஜ்ல என்னோட படிக்கிற ஒரு பையனை நான் காதலிக்கிறேன்பா என்று கூறுவும்..
வாட் ..என்று அதிர்ச்சி அடைந்தவர்…அப்புறம் எதுக்காக விக்கியை வரச்சொல்லி அவமானப்படுத்தின... எத்தனை வேலைகளுக்கு நடுவில உன்னை பாக்குறதுக்காக ஓடி வந்தான்னு தெரியுமா என்று கோபப்பட்டார்.
ப்பா... ப்ளீஸ் கோபப்படாதீங்க நான் விக்கியை சந்திக்கலன்னா... என் மனசுல பூபதி இருக்கிற விஷயமே தெரியாம போயிருக்கும் .
விக்கி கிட்டே பேச ஆரம்பிக்கும் போதுதான் பூபதியை நான் லவ் பண்ற விஷயமே எனக்கு தெரிய வந்தது ...ப்ளீஸ்பா ...தயவுசெஞ்சு எங்களை பிரிச்சிடாதீங்க.. என்று அவரின் முன்பு மண்டியிட்டு கையெடுத்துக் கும்பிட்டாள்.
அவளின் செயலைக் கண்டு
அடுத்த வினாடியே சிரித்துவிட்டார்.
அவளை தூக்கி நிறுத்தியவர்...அவளின் முகத்தை பார்த்து ஆச்சர்யமாக
என் பொண்ணுக்கு லவ் பண்ணலாம் தெரியுமா நான் ரொம்பவே பயந்து போயிட்டேன்....
இந்த ஊரு கலாச்சாரத்தில இருக்குற பொண்ணுங்களை எல்லாம் பார்த்துட்டு என் பொண்ணு நார்மலா இருக்கிறாளா..இல்லையானு ரொம்பவே கவலைப்பட்டுக்கிட்டு இருந்தேன் அவ வயசுக்கு உண்டான ரசாயன மாற்றம் எதுவும் வரலையே... ஹார்மோன் சரியா வேலை செய்யலையோன்னு…
நீ நார்மலான பொண்ணா தான் இருந்திருக்க நான்தான் உன்னை சரியாக கவனிக்காம விட்டிருக்கேன்... …என்றவர்...வாய்க்குள்ளாகவே...பூபதி என உச்சரித்தவர் பேரு நல்லாயிருக்கு... உன் செலக்ஷன்ங்கறதால கண்டிப்பா பையனும் பாக்க நல்லாதான் இருப்பான்…
சரி யார் அந்த பையன்... நம்ம நாட்டு பையனா... இல்ல இந்த ஊர் பையனா...
நம்ம நாட்டு பையன்தான்... அதும் தமிழ் பேசறவன்…எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு ப்பா...அவனையே எனக்கு கல்யாணம் செஞ்சி வைங்க என்று கெஞ்சுவது போல பேசினாள்.
ராகா அப்பா காதலுக்கு எதிரி கிடையாது அதனால நீ அப்பாகிட்ட இந்த அளவுக்கு இறங்கி பேசணும்னு அவசியம் கிடையாது... அந்த பையனை நான் சந்திக்க ஏற்பாடு பண்ணு... நான் ஒரு முறை பேசி பாக்குறேன் எனக்கு திருப்தியா இருந்தா அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும் அந்தப் பையனுக்கும் கல்யாணம் போதுமா...
ப்பா...அப்போ விக்கி…
அதை நான் பாத்துக்கிறேன்..
சொன்னா புரிஞ்சிப்பான்…
நான் சாரி சொன்னதா சொல்லிடுங்க... முன்னமே பூபதி மேல இருந்து லவ்வை ஃபீல் பண்ணி இருந்தா கண்டிப்பா விக்கியை மீட் பண்ண ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன் பா...
நோ ப்ராப்ளம்…தேவையில்லாதது எல்லாம் யோசிச்சு உன் மனசை போட்டு குழப்பிக்காத எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்... நீ அந்தப் பையனை மீட் பண்ண மட்டும் ஏற்பாடு செய் போதும் என்று ராகாவின் கன்னத்தை தட்டி கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
உடனே ப்ரியாவிடம் ஓடி வந்தவள் அவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டு பூபதியை காதலிப்பதையும் தந்தை சம்மதத்தையும் சொல்லி சந்தோஷப்பட்டாள்.
பிரியாவுக்கும் அப்படி ஒரு சந்தோஷம் ஒண்ணுமே தெரியாத பொண்ணு நெனைச்சுக்கிட்டு இருந்தா நீ எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்கற...என்று அவளை சற்று மிரட்டும் தோணியில் பேசியவர் மனப்பூர்வமாக ஆசிர்வதித்தார்... பிறகு பூபதியை பற்றிய விவரங்களை எல்லாம் கேட்டறிந்தார்.
ராகாவும் அவளுக்கு தெரிந்ததை மறைக்காமல் கூறினாள்.
அதன்பிறகு ராகா உடனடியாக பூபதிக்கு கால் செய்து...உன்கிட்ட முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லனும்...மீட் பண்ண முடியுமா எனக்கேட்டாள்…
நானும் தான் முக்கியமான விஷயம் சொல்லனும்னு இப்போதான் ஃபோனை கையில எடுத்தேன் அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட..
என்ன அது என்று ராகா ஆர்வமாக கேட்கவும்…
உன் முகத்தை பார்த்து தான் அதை சொல்லுவேன்….அப்போ உன்னோட ரியாக்ஷனை பார்க்கணும்…
சரி எங்க மீட் பண்ணலாம்…
நான் சொல்ற இடத்துக்கு வா என்று ஓரு காஃபி ஷாப்பின் பெயரை சொல்லி இடத்தையும் கூறினான்…
ஓகே இன்னும் ஒரு மணிநேரத்துல அங்க இருப்பேன் என்று ஃபோனை கட் செய்தவள்... பிரியாவிடம் சென்று விஷயத்தை கூறினாள்.
பார்த்து பத்திரமா போயிட்டு வா பையன் படிப்பு முடிஞ்சு இந்தியா போக போறதா சொல்ற அதனால கொஞ்சம் அவன்கிட்ட ஜாக்கிரதையாகவே பழகு தொட்டு பேச அலோவ் பண்ணாதே... அவனோட ஃபுல் டீடைலையும் வாங்கிட்டு வந்து என்கிட்ட கொடு ...என் ஊர் பக்கம் தான் அவனோட ஊர் வருது... நான் என்னோட ஊர்க்காரங்க கிட்ட சொல்லி அவனைபத்தி ஃபுல்லா விசாரிக்கறேன்...அதுக்கப்புறம் தான் கல்யாணம் புரியுதா என்றார்.
மம்மி அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீங்க நினைக்கிற மாதிரி பூபதி மோசமான பையன்னெல்லாம் கிடையாது... அவனைப் பார்த்தா நீங்களே புரிஞ்சிப்பீங்க...இப்போ நான் போய் அவன்கிட்ட அப்பா ஓகே சொன்னதை சொல்லிட்டு வந்திடறேன்...என்ற படி வெளியே ஓடினாள்.
ராகா காஃபி ஷாப் செல்லும் பொழுது அங்கு ஏற்கனவே பூபதி காத்திருந்தான்..
அலட்டிக்கொள்ளாத அரைக் கால் டவுசரும் கையில்லாத ஒரு பனியனையும் அணிந்திருக்க அவனது தோள்பட்டையில் போடப்பட்டிருந்த சிங்கமுக டாட்டூ முழுவதுமாக வெளியில் தெரிந்தது….மிகவும் கேஷுவலாக ஃமோபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தவனின் முன்பு சிறு குழந்தை போல ப்பூபூஊஊ... என பயமுறுத்தினாள்.
அவனும் கையிலிருந்த போனை தவறவிட்டு கைகளால் காதுகளை பொத்தி ஆஆவ்வ்...என பயந்தது போல போலியாக நடித்தான்.
நீஜம் என நம்பியவள்..ஹேய் சாரி...சும்மா ஃபன்னா செஞ்சேன் நீ இவ்ளோ பயப்படுவன்னு தெரியாது...என சமாதானப்படுத்த அவனால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை…சிரிப்பிற்கான காரணம் கேட்டதற்க்கும் கூற மறுத்துவிட்டான்…
கடைசியாக என்ன இது சம்மந்தமே இல்லாம என்னை இவ்ளோ தூரம் வரவச்சிருக்க...பக்கத்துல எங்காவது சொல்லிருக்கலாம்ல...என கேட்டாள்.
இது நான் தங்கியிருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கு...வாக்கிங் டிஸ்டென்ஸ்...எனக்கு வர ரொம்ப சுலபம் என்று அவளை ஓரக்கண்ணால் பார்த்த படி கூறினான்.
அவனின் சுயநலமான பேச்சில் சற்று ஏமாற்றமடைந்தவள்...உதட்டை பிதுங்கி அதை வெளிப்படையாக காண்பித்தாள்.. பூபதி அவளை கவனிக்கிறான் என தெரிந்ததும் பேச்சை மாற்றும் விதமாக அவனருகில் நெருங்கியமர்ந்து உன்னோட டாட்டூ ரொம்ப அழகா இருக்கு...இன்னைக்கு தான் முழுசா பாக்குறேன்... இவ்வளவு நாள் டீசர்ட் பாதி மறைச்சிக்கும்... பாதி தான் வெளியே தெரியும் என்ன போட்டு இருக்கனு பாக்க ஆசைப்படுவேன் ஆனா உன்கிட்ட சொன்னா நீ என்னை தப்பா ஜட்ஜ்மெண்ட் பண்ணிடுவியோன்னு பயந்துட்டு சொல்ல மாட்டேன் என்றபடி சிவந்த நிறத்தில் இருந்த அவனது ஆர்ம்ஸ்ஸில் பச்சை,சிவப்பு,கருப்பு என மூனு வண்ணமும் கலந்து பச்சை குத்தியிருந்ததை ஆர்வமுடன் பார்த்தாள்…
ஏன் சிங்க முகம்...ஏதாவது ஸ்பெஷலா என தத்ரூபமாக வரைந்திருந்த டாட்டூவை பார்த்தபடியே கேட்டாள்…
அவளின் குழந்தைத்தனம் ஏமாற்றும் ஆர்வம் என அனைத்தையும் உள்ளுக்குள் ரசித்துக் கொண்டிருந்தவன் வாய்க்குள் புன்னகைத்தபடியே இந்த டாட்டூக்கும் எனக்கும் ரொம்ப நெருங்கின சம்பந்தம் இருக்கு என்றவன் என்னோட முழு பெயர் சிங்கபூபதி... அதை சொல்லறதுக்காக சின்னவயசிலேயே இதை எனக்கு போட்டு விட்டுட்டாங்க…
பேர் ரொம்ப வித்யாசமா இருக்கே...என்று சிங்கபூபதி என்று வாய்க்குள் சொல்லிக்கொண்டவள்... அப்போ உன் ஃபேமிலில இருக்குற எல்லாருமே அவங்க பெயரை மீன் பண்ற மாதிரி டாட்டூ போட்டுபாங்களா என்று வேடிக்கையாக கேட்டாள்.
ஆமா எல்லாருமே ஏதாவது ஒரு டாட்டூ போட்டுப்போம்...இது எங்க ஜமீனோட அடையாளமா ஓருகாலத்துல பார்க்க பட்டதா என்னோட கொள்ளு தாத்தா சொல்லுவாங்க…
வாவ் இன்ரெஸ்ட்டிங்...நீ ஜமீன் பரம்பரையா...என் மம்மி அதுபற்றி நிறையா கதைகள் சொல்லிருக்காங்க…
ஆனா ஜமீன்வம்சம் எல்லாம் இன்டியால இப்பவும் இருக்கா என்ன…
நிறையா பேரு மனசாட்சிக்கு பயந்து அரசாங்கத்துக்கு கிட்ட கொடுத்துட்டு ஒன்னும் இல்லாம போயிட்டாங்க... என் கொள்ளுத் தாத்தா மாதிரி சில பேரு அவங்க சொத்துக்களை மக்களுக்கு பிரிச்சி குடுக்கறது போல குடுத்துட்டு மக்களையும் அடிமை படுத்துகிட்டு சொத்துக்களையும் மறுபடியும் அவங்க கைக்குள்ள வெச்சிகிட்டாங்க…
பொதுவா பார்த்தா சாதரணமா தெரிவாங்க...ஆனா இன்னமும் என் ஊர் பக்கம் பலபேர் ஜமீன்தாரோட வாழ்க்கையை தான் வாழறாங்க...அதெல்லாம் ஒரு வார்த்தையில் சொன்னா புரியாது…
சரி இந்த கடைல டீ ரொம்ப நல்லா இருக்கும்... இந்த டீக்கும் என் குடும்பத்துக்கும் கூட ஒரு சம்பந்தம் இருக்கு ….
டீ குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு டீக்கும் என் குடும்பத்துக்கும் இருக்கிற சம்பந்தத்தை நான் சொல்றேன்...