16
காஃபி ஷாப் வரசொல்லிட்டு டீ வாங்கி தர்றியா…என்று கேலி செய்தாள்.
ம்ம்...இது எங்க ஊர்காரங்க கடை.. இங்க வந்து காஃபி ஷாப் நடந்தறாங்க...அதும் எங்க ஊர்ல விளையற டீ இலை வச்சி தயாரிக்கறாங்க... டேஸ்ட் பண்ணி சொல்லு என்று கோப்பையை அவளின் பக்கம் நகர்த்தினான்.
நிதானமாக ஓரு மிடறு அருந்தியவள் அதன் சுவையில் லயித்து மிக பொறுமையாக ரசித்து குடித்து முடித்தாள்….அகைன் ஒன் கப் பூபதி...டீ ரொம்ப டேஸ்ட்... என்று மீண்டும் கேட்டு வாங்கி குடித்தாள்…
நான் ரொம்ப சுயநலமா பேசறது போல நினைச்ச தானே...நீ இப்படி ரசித்து டீ குடிக்கற அழகை பாக்கனும்னு நினைச்சேன்... அதான் இங்க வரவச்சேன்...என்று பூபதி சொல்லவும்…
அசடு வழிந்தபடி... நான் அப்படிதான் நினைச்சேன்னு எப்படி கண்டுபிடிச்ச...
உன் திருமுகம் தானா காட்டிகுடுத்துச்சி….
சரி ஏதோ கதை சொல்லறேன்னியே என்ன அது…
அதுவா...நீ குடிச்சல்ல இந்த தேனீர்ல எங்களோட பங்கும் இருக்கு…
ஒஒஒ...அப்போ இந்த ஷாப்க்கு நீயும் ஓரு பாட்னரா…
இல்ல... நான் அதை மீன் பண்ணி சொல்லல…இப்போ குடிச்ச டீ இருக்குல்ல...அதுல போட்ட தூள் எங்க ஊர்ல இருந்து வந்ததுன்னு சொன்னேன்ல... அங்க எங்களுக்கும் டீ எஸ்டேட் இருக்கு…இவங்க பொதுவா அங்க இருந்து தான் டீதூள் வாங்குவாங்க….சோ இந்த டீக்கும் எங்க குடும்பத்துக்கும் சம்மந்தம் இருக்குனு சொல்ல வந்தேன்...
ஓஓ...இப்போ புரிஞ்சது என்றவள் நீ பெரிய ஆள்தான் போல சொந்தமா டீ எஸ்டேட்லாம் வச்சிருக்க...அதும் ஃபாரினுக்கு எக்ஸ்போர்ட் பண்ற அளவுக்கு க்வாலிட்டியான டீ எஸ்டேட் கிரேட்...
ஆமா பிரிட்டிஷ்காரன் காலத்துல இருந்தே இருக்குது….அந்த ஊர்லயே முதன்முதலா எங்களைதான் வெள்ளைக்காரன் டீஇலை பயிரிட அனுமதிச்சதா தாத்தா சொல்லுவாங்க...சுதந்திரத்துக்கு முன்னாடி வெள்ளைக்காரனுக்கு எங்க எஸ்டேஸ்ட்ல இருந்து தான் டீ இலை போகும்னா பாத்துக்கோயேன்…பல தொழில் இருந்தாலும் டீ எஸ்டேட்டை கைபற்றுறதுல எங்க குடும்பத்துக்குள்ள ஒரு போட்டி இருக்கும்...அதை நிர்வகிக்கறவங்க தான் குடும்பத்தோட முக்கியமான ஆளுன்னு ஊர்ல மரியாதை கிடைக்கும்…எஸ்டேட்ல வேலை செய்யறவங்க கூட அவங்களுக்கு அடங்கி தான் போவாங்க…
ஆச்சர்யமா இருக்கு...நாங்க பாக்கற இந்தியாவுக்கும் நீ சொல்லற இந்தியாவுக்கும் நிறையா வித்தியாசம் இருக்கு...
நீ புத்தகத்தில படிச்சிருப்ப...நாங்க அங்க வாழறோம்…. அதான் வித்தியாசம் என்றவன்...சரி முக்கியமான விஷயம்னு சொன்னியே என்ன அது…?
முதல்ல நீ சொல்லு பூபதி…
லேடிஸ் ஃபஸ்ட்….
ம்ம்...ஒகே நானே முதல்ல சொல்லறேன் என்றவள் அப்பாகிட்ட நம்மளோட லவ்வை சொல்லிட்டேன்...ஒகே சொல்லிட்டாங்க…
நீஜமாவா...சூப்பர்... இன்னைக்கு காலையிலிருந்து கேட்கிற விஷயங்கள் எல்லாமே ரொம்ப நல்லவிதமா இருக்கு ஐ அம் சோ ஹாப்பி என்று குதுகலித்ததவன்…
என் வீட்டுலயும் உன்னோட போட்டோவ அனுப்பி வைச்சேன் எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சுப் போச்சு உன்னை ஒருமுறை நேர்ல பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க நீ எப்போ என்னோட ஊருக்கு வர்ற…
என் அப்பாவும் உன்னை நேர்ல பாக்கனும்னு சொன்னாங்க...நீ எப்போ அவரை மீட் பண்ண வர்ற…
என்னோட எக்ஸாம் முடிஞ்சதும் உன்னோட அப்பாவை மீட் பண்ண வரேன் அதுக்கு அப்புறமா நீ உன்னோட அப்பா ,உன் மம்மி பேமிலி, எல்லாருமே என்னோட ஊருக்கு வாங்க... என் வீட்ல இருக்கிற எல்லாரையும் பாருங்க ...அதுக்கு அப்புறமா அவங்க சொல்றபடி நாம கல்யாணம் செஞ்சிக்கலாம்...என்றவன் உன்னோட பாஸ்போர்ட் டீடெயில் தா... நான் டிக்கெட் எடுக்கனும்…
பூபதி... நான் இந்தியா வர்றது டவுட் தான் அப்பா ஓத்துக்க மாட்டாங்க….இப்போ கூட நீ லண்டன்வாசின்னு நினைச்சி தான் மீட் பண்ணறதா சொல்லிருக்காங்க...அப்புறம் நீ கூட சொன்ன...எனக்காக லண்டன்ல செட்டில் ஆகறேன்னு…
இல்லனு சொல்லலையே... கல்யாணத்துக்கு அப்புறமா உன் விருப்படி செய்யறேன்...முன்னாடியே நீ இந்தியா வர மாட்டேன்னு சொல்லறது இட்ஸ் நாட் ஃபேர்…என்றவன் கெஞ்சும் குரலில்...
ராகா என் பேமிலி ரொம்ப பெருசு...வயசான தாத்தா பாட்டியெல்லாம் கூட இருக்காங்க...அவங்களால இவ்வளவு தூரம் வந்துட்டு போக முடியாது... அவங்களும் உன்னை பாக்கனும்னு ஆசைபடறது நியாயம் தானே…எப்படிப் பார்த்தாலும் நீ ரெண்டு முறையாவது இந்தியா வர வேண்டியது இருக்கும்…
முதல் தடவை என் குடும்பத்தில் இருக்கிறவங்க எல்லாருமே உன்ன பாக்கணும் இரண்டாவது நம்ம கல்யாணம் யார் தடுத்தாலும் இந்தியாவுல என் தாத்தா, பாட்டி ஆசிர்வாதத்தோட தான் நடக்கும்...இது ரெண்டுக்கும் உன் அப்பா சம்மதிச்சி தான் ஆகனும்…
என் அப்பா இதுக்கு எப்படி ரியாக்ட் பண்ண போறாருன்னு நினைக்கும் போது பயமாயிருக்கு பூபதி…
அவர்ட்ட நான் பேசறேன்...அவர் சொல்லிட்டா உனக்கு எந்த பிரச்சனையும் இல்லல்ல…
அப்பாக்கு பிரச்சனை இல்லனா நான் ரெடி…
ஒருவேளை உன் அப்பா இந்தியா அனுப்பலன்னா என்ன செய்வ…?
இல்ல நீ பேசும் போது ஒத்துக்க நிறையா சான்ஸ் இருக்கு...
ஒத்துக்கலன்னா என்ன செய்வ... அதுதான் என்னோட கேள்வி..
இல்ஷ பூபதி அப்பா ஒத்துப்பார்னு தான் எனக்குத் தோணுது அவருக்கு நான்னா உயிர் எனக்காக தான் அவர் செகண்ட் மேரேஜ் கூட பண்ணிக்காம வாழறாரு... ஆப்ட்ர் ஆல் இந்தியா வரவா யோசிக்க போறாரு... நான் கெஞ்சி கேட்டா ஒத்துப்பாரு….
இந்த மழுப்பல் பேச்சு வேணாம் ராகா…லாஸ்ட் மினிட்ஸ்ல லீவு கிடைக்கல …முக்கியமான சர்ஜரி இருக்குனு அவர் பக்கம் நிறைய காரணம் இருக்கும்.. எதையுமே நாம புறக்கணிக்க முடியாத காரணமா சொல்லுவாரு என்ன பண்ணுவ...
எனக்கு தெரியல பூபதி...நீ ஏதோ ஒரு பதிலை என்கிட்ட இருந்து எதிர்பாக்கற…அது என்னனு நீயே சொல்லிடு நான் தலையை மட்டும் ஆட்டி வைக்கிறேன்….என்று கோபமாக கூறினாள்.
கோபபடாத ராகா...எனக்கு இன்னுமே பயமாயிருக்கு...நம்ம காதல் நிறைவேறாம போயிடுமோன்னு...நீ இல்லாத வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியல... அத்தான் மறுபடியும் மறுபடியும் உன் வாயால நம்மளோட காதலோட உறுதியை பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுறேன்…
சரி என்னை இந்தளவு கேள்வி கேக்கறல்ல..
நான் இந்தியா வந்துட்டேன்... உன் வீட்ல எல்லாருமே பாக்குறாங்க.. கடைசி நேரத்துல அவர்களுக்கு என்னை பிடிக்காம போகுது... இந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க வேணாம்னு சொல்றாங்க அப்போ நீ என்ன செய்வ…?
கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது ராகா கூட மட்டும் தான் நீங்க எல்லாரும் சம்மதிச்சா உங்க ஆசீர்வாதத்தோட சந்தோஷமா இந்தியால கல்யாணம் பண்ணிப்பேன் அப்படி நீங்க சம்மதிக்கலனா உங்களை எதிர்த்து கிட்டு இவளை நான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு என் குடும்பத்தை தூக்கி போட்டுட்டு உன்னோட கிளம்பி வந்திடுவேன்... என்று யோசிக்காமல் பதில் கூறவும் அவனது பதிலில் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து அமர்ந்திருந்தாள்….
அவனின் காதல் எவ்வளவு ஆழமானதென நொடியில் புரிந்தது...கண்கள் கலங்க...குரல் கரகரக்க... ஒருவேளை என்னோட அப்பாவை நீ சந்தித்து அவருக்கு உன்னை பிடிக்காம போனாலும் நான் உன்னை விட்டிட மாட்டேன்…
நீ சொன்னது போல என் அப்பா கிட்ட சண்டை போட்டுட்டு உன்னோட நான் கிளம்பி வந்து விடுவேன் அவர் விருப்பப்பட்டா மறுபடியும் லண்டன் வருவேன் இல்லன்னா உன்னோட இந்தியாவிலேயே நிரந்தரமா தங்கிடுவேன்…
ராகா...நீஜமாவா சொல்லற…என்றவனுக்கு அவளின் வார்த்தையில் இருந்த உறுதி மிகவும் பிடித்திருந்தது...
ம்ம்...என்று கண்ணீருடன் தலையசைத்தாள்.
நம்ம ரெண்டு பேருக்குமே அது போல ஒரு நிலைமை வராது நீ கவலைப்படாத ரெண்டு பேரோட குடும்பமும் சந்தோஷமா நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்க... நம்மளோட கல்யாணத்துல எந்த பிரச்சினை இருக்காது …நான் உடனே உனக்கும் அப்பாவுக்கும் டிக்கெட் புக் பண்றேன்…
நாம ஊருக்கு போற நாள்ல உன்னோட அப்பாக்கு எந்த ஒரு கமிட்மென்ட்ஸூம் இருக்கக்கூடாதுன்னு அந்த கடவுளை மட்டும் வேண்டிக்கோ….என்றவன்.
பக்கத்துல தான் என் ரூம் வர்றியா...என கூப்பிட்டான்.
உடனே பிரியா சொன்னது ராகாவிற்கு நியாபகம் வர...எதுக்கு என்று சந்தேகமாக கேட்டாள்.
ரொம்ப கற்பனை பண்ணாத...சும்மா ரூம் பக்கத்துல இருக்குன்னு கூப்பிட்டேன் அவ்ளோ தான் விருப்பம் இருந்தா வா...இல்லனா போ…
அப்பா கூப்பிட்டாங்க நான் அவருக்காக அவ்ளோ தூரம் போனா பக்கத்துல இருக்கிற அவர் ரூம்க்கு கூட என்னை கூப்பிடலன்னு...பின்னாடி நம்ம பிள்ளைங்க கிட்ட என்னை கம்ப்ளைன்ட் செய்ய கூடாதுல்ல…அதுக்காக தான் என்று கூறவும்…
அதே பிரச்சினை தான்..
பக்கத்துல தானே இருக்கு...அப்படியே அப்பா ரூமை பாத்துட்டு வராலாம்னு போனேன்...ஆனா உன் அப்பான்னு…
எதிர்காலத்துல என் பிள்ளைக கிட்ட சொல்லும் போது நான் டென்ஷன் ஆககூடாதுல்ல…
ம்ம்...எதுல தெளிவோ இல்லையோ...இதுல ரொம்ப தெளிவா இருக்க...கிளம்பு நானே உன்னை டிராப் பண்ணிடறேன்…
இல்ல வேணாம் நானே போய்க்கறேன்...நீ எக்ஸாம் முடிஞ்சதும் கண்டிப்பா அப்பாவை வந்து பாப்பல்ல…
கண்டிப்பா...அதை தவிர வேற என்ன வேலை எனக்கு….அனா எங்களோட மீட்டிங்கை உன் அப்பா தானே
அப்பாதானே முடிவு பண்ணனும்...சாதாரணமா இருந்தா டைம்மை நான் ஈஸியா சொல்லிடுவேன் ...ஆனா அவர் டாக்டர் எப்போ ஃபீரின்னு பாத்து அவர்தான் சொல்லனும்…
சரி நான் கேட்டு சொல்லறேன்...பாய்...என்றபடி அங்கிருந்து கிளம்பினாள்.
நேராக வீடு வந்தவள் பிரியாவிடம் சென்று அவனை பற்றிய விவரங்களை கூறினாள்…
ம்ம்...திருநெல்வேலி சைடுல ஜமீன் பரம்பரைனா ஏகப்பட்ட குடும்பம் இருக்கு...ஆனா...கையில எல்லாருமே பச்சை குத்தறதுன்னா...சில குடும்பத்தோட வழக்கமா இருக்கும்….
டீ எஸ்டேட்னா.. என்று யோசித்தவர்...சில ஊர்களில் பெயரை சொல்லி...ம்கூம்... அதெல்லாம் இருக்க வாய்ப்பு கம்மி என்று அவராகவே பேசிக்கொண்டார்...பிறகு...சத்தமாக குற்றாலத்துக்கு மேல மணிமுத்தாறு தாண்டினா மாஞ்சோலை...அங்க தான் ஃபுல்லா டீ எஸ்டேட்...அதும் வெள்ளைகாரன் காலத்துல இருந்து ஒருத்தர் கைலயே இருக்குன்னா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்...விடு ரெண்டு நாள் போதும்...மதுரைல இருக்கற என் சொந்தகாரங்க கிட்ட விசாரிச்சா ஒரே நாள்ல அவன் ஜாதகத்தை கைல குடுத்திடுவாங்க...எதுக்கும் பையனோட போட்டோவை எனக்கு அனுப்பு அதை காண்பிச்சே விசாரிக்கறேன்…
என்றவர் மேலும் தொடர்ந்தார்.
அந்தப் பையன் பத்தின ஃபுல் விவரம் என் கைக்குக் கிடைத்த பிறகுதான் நீ உன் அப்பாகிட்ட அவனை அறிமுகப்படுத்தி வைக்கனும் அதுக்கு முன்னாடி முந்திரிக் கொட்டை மாதிரி எந்த வேலையும் செய்யக்கூடாது புரிஞ்சுதா என்று கண்டிப்புடன் கூறவும் சரி என தலையசைத்து ஒரு வாரம் வரை பொறுமை காக்க ஆரம்பித்தாள்.
பிரியாவும் அவரின் சொந்த ஊரான மதுரையில் இருக்கும் அவரின் நெருங்கிய உறவினர்களிடம் பூபதியின் புகைப்படத்தை அனுப்பி வைத்து ராகா சொன்ன விவரங்களையும் கூறி விசாரிக்க சொல்ல... இரண்டு நாளிலே அவனை பற்றிய முழு விவரங்களும் வந்தது…
ஊரிலே மிகவும் பெரிய குடும்பம் அவர்களுடையது தான்... காலம் காலமாக கூட்டுக் குடும்பமாக வசிப்பவர்கள்...அவர்களுக்குப் பல தொழில்கள் உண்டு சிமெண்ட் ஃபேக்டரி, இரும்பு உருக்காலை, அரிசி மில், ஏகப்பட்ட நிலபுலன்கள், கட்டுமான நிறுவனங்கள் டீ தூள் காஃபி தூள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி, முந்திரி தோப்பு... ஏகப்பட்ட விவசாய நில புலங்கள்...அதுமட்டுமின்றி மாஞ்சோலையில் இருக்கும் ஐம்பது சதவீத எஸ்டேட் அவர்களின் குடும்பச் சொத்து தான் அவர்கள் கால் பதிக்காத தொழிலே நெல்லை மாவட்டத்தில் கிடையாது…
நெல்லை மாவட்டம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அவர்களின் வியாபாரங்கள் பரந்து விரிந்து கிடக்கிறது இப்பொழுது உலக நாடுகளிலும் கூட சிலவற்றிற்கு கால் பதிக்கத் தொடங்கி விட்டார்கள் என்று எல்லாமும் நல்லவிதமாக கூற பிரியாவிற்கு அப்படி ஒரு சந்தோஷம் மகள் பிடித்தாலும் மிகப்பெரிய புளியங்கொம்பைத் தான் பிடித்திருக்கிறாள்...என்று உடனடியாக திருமணத்திற்கு சம்மதித்தார்…
அதுமட்டுமின்றி ராமிடம் கூடிய விரைவில் பையனை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்குங்கள் என்று தனிப்பட்ட முறையிலும் கேட்டுக்கொண்டார் .
அந்த நிமிடம் வரை பூபதி லண்டன் வாசி என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் ராம்... அவன் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவன் என்றும் அங்கு தான் அவனின் நிரந்தர வசிப்பிடம் இருக்கிறது என்பதும் ...மகள் அவனுடன் இந்தியா செல்ல போகிறாள் என்று எதுவுமே தெரியாது ஒருமுறை பையனை நேரில் சந்தித்து விட்டு அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும்…
அதன் பிறகு அவள் விருப்பப்படி அவரின் வீட்டில் இருந்தாலும் சரி...இல்லை அருகினில் எங்காவது குடியிருந்தாலும் சரி... எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும் என நினைத்திருந்தார்.
அவரின் வேலைப்பளு நாட்களை இழுத்துக்கொண்டே செல்ல...பூபதி இடையில் இரண்டு முறை பிரியாவிடம் பேசி விட்டான்...எல்லாருக்குமே பயண டிக்கெட் எடுப்பதற்க்கு தயாராகவும் இருந்தான்...ஆனால் பிரியா இம்முறை ராகாவையும் அவளின் தந்தையையும் மட்டும் அழைத்துச் செல்லுங்கள் திருமணத்திற்கு அனைவரும் வருகிறோம் என கூறிவிட்டார்.
இவனும் மேற்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு ராமின் அழைப்பிற்காக காத்திருந்தான்... இரண்டு முறை மூவரின் டிக்கெட்டுகளையும் கேன்சல் செய்தாகிவிட்டது…ஏகப்பட்ட பண விரயம் வேறு….ஆனாலும் அவனுக்கு அது கவலையளிக்க வில்லை….அவனை பொறுத்த வரை பணத்திற்கு என்றுமே முக்கியத்துவம் கிடையாது... மனிதர்கள் தான் வேண்டும்... அதுவும் ராகாவிற்காக எவ்வளவு வேண்டுமானாலும் இழக்க தயாராக இருக்கிறான்...
இப்பொழுது கடைசியாக ஒரு வார கால அவகாசத்தில் மூவருக்கும் மீண்டும் டிக்கெட் எடுத்து வைத்திருக்கிறான்... இம்முறையும் ராமை சந்திக்க முடியவில்லை என்றால் இவன் மட்டும் ஊர் சென்று அங்கு ஒரு மாத காலம் இருந்துவிட்டு ராமின் அழைப்பு கிடைத்தவுடன் மீண்டும் வரவேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறான் ஊரில் இருக்கும் அனைவருமே இவனை நச்சரிக்க தொடங்கிவிட்டார்கள் எப்போது வரப்போகிறாய் என்று ...அவனுக்கும் ஊரில் தலைக்கு மேல் நிறைய பணிச் சுமைகள் இருக்கிறது…ராகாவிற்காக பொறுமை காக்கிறான்...இதோ நாளை மறுநாள் ஊர் செல்ல வேண்டும்... இம்முறையாவது ராகவும் அவளது தந்தையும் உடன் வருவார்கள் என மிகவும் எதிர்பார்த்துக் காத்திருந்தான் ஆனால் அவனின் நம்பிக்கை பொய்ப்பது போல தோன்றியது…
காரணமே இல்லாமல் ராகவின் மீதும் அவளது தந்தையின் மீதும் அவ்வளவு கோபம் வந்தது இந்த நிமிடம்வரை ராமிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாதது அவனை மனதளவில் சோர்வடைய செய்தது... ஆனால் அதையெல்லாம் ஈடுகட்டும் விதமாக தினமுமே ராகா அவனை சந்திக்க வருகிறாள்... அவனுடன் பேசுகிறாள்.. சிரிக்கிறாள்... அவனை முடிந்த அளவு இயல்பாக வைக்க முயல்கிளாள்... ராமின் அழைப்பை பற்றி கேட்டால் மட்டும் கண்கலங்க அவரோட வேலை பற்றி உனக்கு தெரியாதா... பல உயிர்களை காக்கற வேலையில இருக்கறவர்...அவர் கிட்ட போய் அதையெல்லாம் விட்டுட்டு என்னோட பாய் ஃப்ரெண்ட் மீட் பண்ணுங்கன்னு எப்படி நான் சொல்ல முடியும் கொஞ்சம் பொறுமையா இரு அவரே கூப்பிடுவார் என்று ஆறுதல் வார்த்தை தான் அவளால் கூற முடிகிறது….
முதல் முறை டிக்கெட்டை கேன்சல் செய்யும்பொழுது இரண்டாம் முறை முடிந்தளவு தடுத்துப் பார்த்தாள் ஆனால் பூபதி தான் கேட்காமல் டிக்கெட் எடுத்தான்... அதுவும் கேன்சலாக மூன்றாம் முறை பிடிவாதமாக கூறிவிட்டாள்.. நீ மட்டும் ஊருக்கு போ...அப்பா ஃபீரி ஆகும்போது நான் அவரை உன் ஊருக்கு அழைத்துக்கொண்டு வருகிறேன் என..
ஆனால் பூபதியால் தான் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... லண்டனில் இருந்து கிளம்பும் பொழுது அவளையும் அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று ஊரில் இருக்கும் அனைவரிடமும் கூறி விட்டான்…
இப்போது எல்லோருமே ராகாவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் அவர்களை எப்படி ஏமாற்றுவது என நினைத்தவன் இந்தியா செல்லும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறான்…
இதோ இப்பொழுது கண்டிப்பாக ஊர் செல்ல வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது... அவனது உடமைகளை எல்லாம் எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டான்... உணர்ச்சியற்ற பார்வையில் ராகாவின் விமான டிக்கெட்டுகளை பார்த்தவன் பெட்டின் ஓரத்தில் வைத்தபடி முக்கியமானவற்றை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்...
அவனின் பரிதவிப்பு ராமிற்கு புரிந்தது போல தீடிரென அவனை அழைத்திருந்தார்…
மருத்துவ கருத்தரங்கிற்காக அவரும்,கேசவ்வும் பதினைந்து நாட்கள் வேறொரு நாட்டிற்கு செல்லவிருக்கிறார்கள்….இடையில் கிடைத்த சிலமணி நேரத்தில் பூபதியை சந்திப்பது என ஏற்பாடு…
ராகாவின் வீட்டில் வைத்து பூபதியை ராம் சந்திப்பது என ஏற்பாடு செய்யப்பட்டிருக்க சற்று தயக்கத்துடனேயே ராகாவின் வீடு வந்து சேர்ந்தான் பூபதி…
அவனை உற்சாகமாக வரவேற்ற ராகாவும் பிரியாவும் அவனை விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்... சற்று நேரத்திற்கெல்லாம் வேலை முடித்து கேசவ்வும் ராமும் உள்ளே வர வீட்டில் அனைவருமே பெட்டிப்பாம்பாக அடங்கி விட்டனர்...அவனை நேரில் பார்த்ததுமே ராம்,கேசவ் இருவருக்கும் பிடித்து விட்டது…
இருவருமே பூபதியை பார்த்ததும் சந்தோஷமாக கைகுலுக்கி கட்டி அணைத்து பாசத்தை வெளிப்படுத்தியவர்கள்... அவனெதிரில் அமர்ந்தனர்…பிரியா,ராகா, இரட்டை சகோதரிகள் என அனைவருமே பூபதியை சுற்றி அமர்ந்து அவர்கள் பேசப்போவதை கேட்க தயாராக இருந்தனர்.
ராமிற்கு பூபதியிடம் எப்படி ஆரம்பிப்பது எனத் தெரியவில்லை இவ்வளவு நாள் நல்ல தந்தையாக எவ்வளவோ கடமைகளை நிறைவேற்றி இருக்கிறார் இது முக்கியமான கடமை இதில் தவறாக ஏதும் பேசி மருமகனின் மனதை புண்படுத்தி விடக்கூடாது என்று வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்க கேசவ் தானாக முன் வந்து பூபதியிடம் பேசத் தொடங்கினார்.
ராகா எங்களுடைய செல்ல பொண்ணு..ராமிற்கு ஒரே பொண்ணு... அவன் வாழ்வதே அவளுக்காக தான் நாங்க பெருசா எல்லாம் எதுவுமே உன்கிட்ட கேட்க போறதில்லை கல்யாணத்துக்கப்புறம் பொண்ணை அப்பப்போ அவளோட அப்பா கண்ணுல காட்டணும் இதுதான் எங்களோட ஒரே டிமாண்ட் ...இனி உனக்கு ஏதாவது வேணும்னா கேளு…
பிசினஸ் ஏதாவது வச்சி தரணுமா...இல்ல ஜாப் ஆஃபர் வேணுமா..
எதுவா இருந்தாலும் தயங்காம கேளு என்று வெளிப்படையாகப் பேசினார்.
அவருக்கு பூபதியின் பின்னணி எதுவும் தெரியாது பிரியா இதுவரை சொல்லிக் கொள்ளவில்லை எதுவாக இருந்தாலும் திருமணம் பேசி முடிந்த பிறகு கூறிக் கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.
ஐயோ அங்கிள் அது மாதிரியெல்லாம் எனக்கு எதுவுமே வேணாம் கடவுள் புண்ணியத்துல பரம்பரை பரம்பரையா என்னோட குடும்பம் நிறையவே எனக்கு சேர்த்து வைத்திருக்கு…
அப்புறம் ராகாவை அப்பப்போ இல்ல எப்பவுமே அவங்க அப்பா பாத்துக்கிட்டு இருக்குற மாதிரி லண்டன்லேயே வீடு வாங்கிட்டு செட்டில் ஆயிடறேன்…. அப்பப்போ என்னை மட்டும் என் சொந்த ஊருக்கு அனுப்பி என்னோட அம்மா,அப்பாவை பார்த்துட்டு வர்ற மாதிரி பர்மிஷன் கொடுத்தா போதும் என்று தெற்று பற்களை காட்டி சிரிக்கவும்…யோசனையாக பூபதியையே பார்த்துக் கொண்டிருந்தார் ராம்.
என்ன சொன்ன சொந்த ஊரா .. அப்போ நீ லண்டன்ல செட்டிலான தமிழன் கிடையாதா என்று யோசனையாக கேட்டார் .
உடனே அனைவரையும் குழப்பமாக சுற்றிப்பார்த்த பூபதி நான் எப்போ லண்டன்வாசின்னு சொன்னேன்…. நான் மேல படிக்கத்தான் லண்டன் வந்தேன்….மத்தபடி எனக்கும் லண்டனுக்கும் இந்த நிமிஷம் வரை சம்பந்தமில்லை என்று கூறவும்…
பட்டென்று தொடையில் தட்டியபடி எழுந்த ராம்...நெனச்சேன்... இவன் மூஞ்சி, இவன் பேச்சு, ட்ரெஸ்சிங்சென்ஸ் எல்லாத்தையும் பார்க்கும் போது ஏதோ ஊர் நாட்டான்னு நினைச்சேன் இப்போ தெளிவா புரிஞ்சு போச்சு என்று அதிக அளவில் கோபம் கொண்டு கத்தினார்.
உடனே கோபம் அடைந்த பூபதியும் வார்த்தையை அளந்து பேசுங்க அங்கிள் .. ஊர் நாட்டானா இருந்தா இப்போ என்ன…. நீங்களும் அங்கிருந்து வந்தவர் தானே...லண்டன் வந்துட்டா சொந்த நாட்டையும் ஊரையும் மறந்திடுவீங்களா…?என்று இவனும் பதிலுக்கு கத்தினான்.
பிரியாவும்,ராகாவும் ராமை சமாதானப்படுத்த முயல...கேசவ் பூபதியை சமாதானப்படுத்தினார்.
ப்பா...ஏன்பா இப்படி கத்தறீங்க...கொஞ்சம் பொறுமையா பேசுங்க என்று ராகா கெஞ்சவும்…
அவளை தள்ளிவிட்ட ராம் தொலைச்சிடுவேன் உன்னை... காதலிக்கிறேன்னு சொன்னியே தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கான்னு சொன்னியா...அதும் இவன் பேச்சை பாத்தாலே தெரியுது...இவன் எந்த ஊர்ல இருந்து வந்திருக்கான்னு... அந்த ஊரோட காத்து கூட உன் மேல படக்கூடாதுன்னு தானே இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்திருக்கேன்... ஆனா நீ என்று அவளை அடிக்கப் பாய்ந்தார்..
இடையில் புகுந்து தடுத்த பூபதி ... அங்கிள் சத்தியமா நீங்க பேசுறதுக்கு எதுவுமே எனக்கு புரியல... என்ன பிரச்சினை உங்களுக்கு...
என்கிட்ட என்ன குறையிருக்கு..நல்லா படிச்சிருக்கேன்... உங்களை விட அதிகமான சொத்து பத்தோடு தான் நானும் இருக்கேன் ...நீங்களாவது அந்நிய நாட்டுல வந்து வெள்ளைக்காரனுக்கு வேலை பார்த்துகிட்டு கைநீட்டி சம்பளம் வாங்கிட்டு இருக்கீங்க….ஆனா நாங்க சொந்த ஊர்ல பல வியாபாரங்களை செய்யறோம்...உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி பண்ணறோம்...எது உங்களுக்கு பிடிக்காம போச்சி…
உன் ஊரு...உன் நாடு...எதுமே எனக்கு பிடிக்கல...சுயநலம் பிடிச்ச மனுஷங்க...என் பொண்ணை யாருக்கு வேணாலும் கல்யாணம் பண்ணி தருவேன்...இந்தியால வாழற ஒருத்தனுக்கு கட்டி தரமாட்டேன் என்று ஊறுதியாக கூறினார்.
கோபமாக ராகாவை முறைத்த பூபதி... அப்பாவும் பொண்ணும் நடத்துற டிராமா ரொம்ப நல்லா இருக்கு... உன் அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல தேவையே இல்லாம ரெண்டு மாசம் வரைக்கும் என்னை தங்க வைத்து அவமானப்படுத்தி இருக்க வேண்டாம் என்றான்.
பதில் சொல்லத் தெரியாமல் ராகா முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் .
அதை கவனித்து பிரியா ராமிடம் வந்து அண்ணா என்ன நீங்க இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க காவ்யா அண்ணி ரோட் ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டாங்க...ஒத்துக்கறேன் அவங்களுக்கு யாருமே ஹெல்ப் பண்ணல... அதுக்காக அதையே மனசுல வெச்சுட்டு ஒட்டுமொத்தமா எல்லாரையும் குறை சொல்றது தப்பில்லையா... தெரிஞ்சோ தெரியாமலோ அந்த பையனை நம்ம ராகா காதலிச்சிட்டா…
அந்த பையனும் ஒன்னும் சாதாரண வீட்டு பையன் இல்ல... நான் என் சொந்தகாரங்க கிட்டே முழுசா விசாரிச்சுட்டேன்... திருநெல்வேலிலேயே பெரிய குடும்பம்... வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தே அவங்களுக்கு எஸ்டேட் எல்லாம் இருக்கு என்று சொல்லவும் அதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த ராமிற்கு வந்ததே கோபம் …
கலை சாகும் போது கூட ஏதோ எஸ்டேட் பற்றி தானே கூறினாள்... அதுவும் இவன் சொந்த ஊர் திருநெல்வேலி…. வேறு வினையே வேண்டாம் மகள் மதுரையில் இறங்கிய அடுத்த நிமிடமே அவளை உப்புக்கண்டம் போட்டு விடுவார்கள் அங்கிருக்கும் ஆட்கள்... தெரிந்தே எப்படி அவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பது என்று நினைத்தவர் ப்ரியாவிடம் பொரியத் தொடங்கினார்.
அப்போ உனக்கு அந்தப் பையனை பத்தின எல்லா விவரமும் ஏற்கனவே தெரிஞ்சிருக்கு... தெரிஞ்சுகிட்டே என்கிட்ட எதுவும் சொல்லாம மாப்பிள்ளை பையன் ரொம்ப நல்ல பையன் சீக்கிரமா அவனை சந்திச்சி பேசுங்கன்னு நச்சிருக்க அப்படித்தானே…
உனக்கு தெரியும் இல்ல எனக்கு அந்த ஊரை சுத்தமா பிடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டே எப்படி பையன் அந்த ஊருன்னு தெரிஞ்சும் நீ இந்த கல்யாணத்துக்காக ஸ்டெப்ஸ் எடுக்கலாம்….
பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி புரிய வச்சு இருக்கணும்... இல்லையா உனக்கு அவனை பத்தி தெரிஞ்ச அடுத்த நிமிஷமே என்கிட்ட சொல்லியிருந்தா நான் ராகாவிற்கு புரிய வைத்திருப்பேன் இப்போ எல்லாம் முடிஞ்சு போற சமயத்துல வந்து என்கிட்ட சொல்ற இல்ல... அதான என்ன இருந்தாலும் நீ வளர்ப்பு தாய் தானே சொந்த அம்மா இல்லையே...பெத்த தாயா இருந்திருந்தா நல்லது கெட்டது சொல்லி இருப்ப என்று பட்டென்று வார்த்தைகளை விடவும் என்ன அண்ணா இப்படி சொல்லிட்டீங்க...ராகா நல்ல இடத்தில கல்யாணம் பண்ணிக்க போற சந்தோசத்துல தான் அடுத்த கட்ட முயற்சிகளை எடுத்தேன் ஆனா நீங்க இப்படி எடுத்துப்பீங்கன்னு கொஞ்சம் கூட எதிர் பார்க்கல அண்ணா என்று பேச்சை அத்தோடு நிறுத்தியபடி அங்கிருந்து நகர்ந்தார்.
டேய் ராம் ஏண்டா இப்படி நடந்துக்கற... மாப்பிள்ளை கோவிச்சிட்டு கிளம்பறாரு...ப்ளிஸ்டா கொஞ்சம் அவரை சமாதானப்படுத்து... நம்ம பொண்ணு அவர் மேல ஆசை வெச்சுட்டா …
அவர்ட்ட பேசலாம் எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு நீ கொஞ்சம் அமைதியாக இரு என்ற கேசவ் ராம்மை அமர வைத்துவிட்டு பூபதி இடம் ஓடிவந்தார்.
ப்ளீஸ் மாப்பிள்ளை நீங்க டென்ஷன் ஆக கூடாது அவனோட மனைவி இறந்ததில இருந்தே இப்படி தான் ஊரை பத்தி பேசினாலே டென்ஷன் ஆயிடுவான்... அதுவும் நீங்க அந்த ஊருன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் ஓவரா ஏமோஷனல் ஆயிட்டான் ... இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு நீ என்ன பேசினன்னு கேளுங்க…அவனுக்கே தெரியாது... அந்த அளவுக்கு எமோஷனல் பேர்வழி….அவன் பேசினது எதையும் மனதில வச்சிக்காதீங்க என்று பேசியவர் படாதபாடுபட்டு பூபதியை சமாதானப்படுத்த முயன்றார் .
எதற்குமே பூபதி அசைந்து கொடுப்பது போல் தெரியவில்லை கடைசியாக ராகாவை உள்ளே இழுத்துவிட்டார்…
நீங்க பாட்டுக்கு கிளம்பீட்டீங்க...அவன் பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி ஏதேதோ பேசிட்டான்... ஆனால் ரெண்டு பேருமே ராகாவை நெனச்சு பாத்தீங்களா…. அவங்க உங்க மேல உயிரையே வச்சிருக்கா…. அவளுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க…
அவளுக்கு அவங்க அப்பாவையும் பிடிக்கும் அதே அளவு உங்களையும் பிடிக்கும் நீங்க ரெண்டு பேரும் இப்படி எதிரும் புதிருமா நின்னா அவ எந்த பக்கம் போவா சொல்லுங்க…
உங்க ரெண்டு பேர் சண்டைல மனசு உடைஞ்சு அவ ஏதாவது செஞ்சுகிட்டா அந்தப் பாவம் நம்மளை தானே வந்து சேரும் என்று கூறவும் கண்களை மூடி கோபத்தை கட்டுபடுத்தியவன்...ராகாவை பார்க்க அழுதழுது முகம் முழுவதும் சிவந்திருந்தது….அவளுக்காக மீண்டும் ராமிடம் பேசிப்பார்க்கலாம் என முடிவெடுத்தான்.
ராகா சோபாவில் அமர்ந்திருந்த ராமின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவள் அவரின் கைகளைப் பிடித்தபடி கெஞ்ச ஆரம்பித்தாள்….
ப்ளீஸ்பா எனக்கு பூபதியை ரொம்ப பிடிச்சிருக்கு தயவு செஞ்சு எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைங்கப்பா ...எங்களை பிரிச்சிடாதீங்க... அவன் இல்லாம என்னால வாழவே முடியாது ப்ளீஸ்பா...என்று கெஞ்ச ஆரம்பித்தாள்.
கேசவ்வும் ராமிடம் வந்து டே பாருடா ராகா நம்ம குழந்தை எப்படி அழறான்னு பாரு அவ அழுகையை பார்த்துமா உனக்கு மனசு இரங்கல... அவ அம்மா உயிரோட இருந்திருந்தா இப்படி ராகாவை அழ விட்டிருப்பாளா…. என்ன இருந்தாலும் அப்பா என்னைக்குமே அம்மா ஆக முடியாதுன்னு நீ ப்ரூப் பண்ணிட்ட…
*****
அப்படி என்னடா உனக்கு பிடிவாதம் ராகாவோட கண்ணீரை விட உன்னோட பிடிவாதம் பெருசா டா…
இங்க பாரு நீ இப்போ இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னா நானே ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சு வைச்சிடுவேன்…இது ஒன்னும் இந்தியா கிடையாது லண்டன் ராகா நினைச்சா இப்பவே கூட தனியா போய் அந்தப் பையனோட சேர்ந்து வாழலாம் இந்த நாட்டு சட்டம் அவளை தடுத்து நிறுத்தாது…
தப்பு பண்ண எல்லா கதவுகளும் திறந்து இருந்தும்கூட இன்னைக்கு வரைக்கும் நம்மளோட கலாச்சாரம்,பாரம்பரியத்தை காப்பாத்தறது போல வளர்ந்து நிற்கற நம்ம பொண்ணுக்கு நீ குடுக்குற பரிசாடா இது…. நம்மள மாதிரி அப்பாக்களால தான் குழந்தைக குறிப்பிட்ட வயசு வரும்போது அவங்க வழியை பார்த்துட்டு கிளம்பிடறாங்க…. இந்த நிமிஷம் வரைக்கும் உன் காலை பிடித்து கெஞ்சி கேட்டு இருக்கிறவளுக்கு அது போல ஒரு நிலைமையை உருவாக்கி கொடுத்திடாத என்று கூறவும் அந்த இடமே அமைதியாய் சூழ்ந்துகொண்டது.
ராகா மட்டும் ப்ளீஸ் பா என்று கெஞ்சியபடி தந்தையின் கால்மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளின் அழுகை சத்தம் மூன்று ஆண்களுக்குமே இதயத்திலிருந்து ரத்தத்தை வரவழைத்தது…
பூபதிக்கு வந்த கோபத்திற்கு அப்பொழுதே ராகாவை அழைத்துச் சென்று விடலாம் என்ற எண்ணம் வந்தது... ஆனால் தந்தையின் கால்களை பிடித்து அமர்ந்து இருக்கும் பெண்ணை எப்படி அழைத்துச் செல்வது... கண்டிப்பாக இவன் அழைத்தாலும் தந்தை சம்மதிக்காமல்
வரமாட்டாள்…
அவளாக எழுந்து வந்தால் தான் உண்டு... சரி சற்று நேரம் பொறுமை காக்கலாம் என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்கலாம் என நினைத்தபடி அவனும் கண் மூடி அமர்ந்தான்
சற்று நேரம் அமைதியாக யோசித்த ராம்
சரி என் பொண்ணுக்காக என் முடிவை கொஞ்சம் மாத்திக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்கிறேன்...ஆனா ஒரு கண்டிஷன்.. என்று கூறவும் என்ன அது என்பது போல அனைவருமே அவரின் முகத்தை பார்த்தார்கள்.
என் பொண்ணை பூபதி திருமணம் செஞ்சுக்கணும்னா இந்தியாவில இருக்கற எல்லாத்தையும் உதறிட்டு இங்க லண்டன் வந்து செட்டில் ஆகணும்... எக்காரணம் கொண்டும் என் பொண்ணை இந்தியா கூட்டிட்டு போக மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணனும் இதை செஞ்சா நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குறேன் என்று கூறினார்.
பட்டென்று கோபமாக எழுந்த பூபதிக்கு எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனது கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை... இப்போ என்ன சொல்ல வரீங்க அங்கிள் இந்தியாவில் இருக்கிற எல்லாத்தையும் உதறிட்டு வரணும்னா எனக்கு புரியல…
அதாவது உன்னோட பிசினஸ் அப்புறம் உன் ஊரு...என்று இழுக்கவும்…
ம்ம்... மேல சொல்லுங்க உன்னோட அம்மா, அப்பா, சொந்த பந்தம், சொத்து சுகம் எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு வீட்டோட மாப்பிளையா என் காலுக்கு கீழே வந்து கிட ...உனக்கு என் பொண்ணை கல்யாணம் செஞ்சு வச்சு என் வீட்டு வீட்டு நாய் மாதிரி பத்திரமா பாத்துகறேன்னு சொல்ல வரீங்க அப்படித்தானே என்று பற்களைக் கடித்தபடி கேட்டான்.
*****
சொல்லுங்க அங்கிள்...ஏன் மவுனம் ஆயிட்டீங்க அதானே சொல்ல வந்தீங்க இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோங்க என்னோட நாடு, என் ஊரு, சொந்த பந்தம் எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு தான் உங்க பொண்ணை திருமணம் செய்துக்கனும்னா எனக்கு உங்க பொண்ணு வேணாம்…என்று கூறவும் இப்பொழுது தந்தையிடமிருந்து பூபதியிடம் வேகமாக தவழ்ந்து ஓடி வந்தாள் ராகா…
ப்ளீஸ் பூபதி நீ அப்படி சொல்லாத... நீ இல்லாம என்னால வாழ முடியாது பூபதி என்ன வேணான்னு சொல்லாத என்று அழ ஆரம்பித்தாள்..
ப்ளீஸ் ராகா நீ அழாத... என்னால பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல உன் அழுகையை பாக்கும் போது...ஏண்டா உனக்கு சொந்தமான ஒரு உயிரை ஏன் இப்படி துடிக்க விடறன்னு என் மனசாட்சி என்னை கேள்வி கேட்குது என்றவன் உனக்காக ஒரு வாய்ப்பு தர்றேன்... ஒரே ஒரு முறை என்னோடு ஊருக்கு வா...என் குடும்பத்துல இருக்கற எல்லாருமே உன்னை பாக்கட்டும்….
அதுக்கு அப்புறமா நீ அங்க ஒரு நிமிஷம் கூட இருக்க வேணாம்...உடனே லண்டன் வந்திடு... நானும் உன்னை இங்க வச்சே கல்யாணம் பண்ணிக்கிறேன் அதுக்கப்புறம் நீ என்னைக்குமே ஊருக்கு வர வேண்டும்…
ஊர்ல வயசான பாட்டி தாத்தா இருக்காங்க... அவங்களால இவ்வளவு தூரம் பிளைட்ல வரமுடியாது புரிஞ்சுக்கோ... அவங்க மட்டும் இல்லன்னா ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் என்னால இங்க கூட்டிட்டு வந்திட முடியும்….
அந்த வயசானவங்களும் உன்னை பாக்கனும்...அவங்க ஆசிர்வாதம் நமக்கு வேணும்…. புரிஞ்சுக்கோ என்று சொல்லவும் இப்பொழுது அனைவருமே ராம் என்ன சொல்ல போகிறார் என அவரைத்தான் பார்த்தார்கள்.
[/SIZE]
[/ICODE][/B]