21.
எந்த ரூம்ல இருக்கறா எனக்கேட்டபடி தென்பட்ட அறைகளில் தேடினார்.
பின்னால் வந்த காமாட்சி...அண்ணா...என் ரூம் பக்கத்துல என்று சொல்லவும்... எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் நேராக அறையை திறந்துகொண்டு உள்ளே சென்றார்.
கட்டிலில் ராகா நன்கு உறங்கிக் கொண்டிருக்க வாசல் பக்கமாக இருந்த கௌச்சில் காவலுக்கு பூபதி கண்மூடி படுத்திருந்தான் .
சட்டென கதவு திறந்து யாரோ உள்ளே வருகிறார்கள் என நினைத்த பூபதி... யாரது கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாம என்றபடி எழுந்து அமர வந்ததோ ராஜா ... அவரைக் கண்டதும் வாங்க மாமா என அவன் மட்டும் தான் பேசினான்.
ஆனால் ராஜா பூபதியை கண்டுகொள்ளவே இல்லை நேராக ராகாவின் படுக்கையின் பக்கம் வந்தவர் பதட்டத்துடன் ராகாவை ஆராய்ந்தார்...ஆடைமூடா பாகங்கள் எங்கிலும் காயத்துடன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ராகா..நெற்றியில் சிறு பாண்டேஜ்... கீழ் உதட்டில் பல் குத்தி சிறு காயத்தோடு படுத்திருந்தவளின் முக வெட்டு கலைவாணியை நியாபகப்படுத்தியது...
அந்த உதடுகள்...மனைவிக்கு அடுத்த படியாக ராகாவிற்கு தான் இருப்பது போல் தோன்றியது…
வேகமாக அவளின் கை,கால்களை தொட்டு ஆராய்ந்தார்…ம்மா மாமா என்ன பண்ணறாங்க.
அவ தூங்கறா தொடவேணாம்னு சொல்லுங்க என்று கோபத்தில் தாயின் காதுகளைக் கடித்தான் பூபதி.
ராஜாவிற்கு ராகாவை பார்க்கும் பொழுது ஏதோ புரிகிறது...மனம் காரணம் இல்லாமல் சந்தோஷப்படுகிறது... கண்களில் நீர் எட்டிப் பார்க்க அவள் காலின் அருகில் அமர்ந்து விட்டார்... ஏதோ அசைவு கேட்கவும் கண்விழித்த ராகா காலுக்கடியில் ராஜாவை பார்த்ததும் பயந்து கால்களை அவள் பக்கமாக இழுத்துக்கொண்டே பூபதி எனக்கத்தினாள்.
ராகா பயப்படாத... நான் சொன்ன கடைசி மாமா... உனக்கு அடிபட்டிருக்குனு தெரிஞ்சதும் பார்க்க வந்திருக்காங்க..
என்றவன்...ராஜாவை பார்த்து மாமா இப்படி சேர்ல வந்து உக்காந்துக்கோங்க...என்றான்.
ஓஓ...சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என எழுந்தவர்...பூபதியை பார்த்து என்ன இது இப்படி பொறுப்பில்லாமல் நடந்துட்டு இருந்திருக்க...நம்மளை நம்பி ஒரு பொண்ணு வர்றான்னா நாம அவளை எந்த அளவு பாதுகாப்பாக பார்த்திருக்கனும்…
வந்த அன்னைக்கு உடம்பெல்லாம் இத்தனை காயம்... ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலையா…?
இல்ல மாமா டாக்டரே இங்க வந்து பாத்துட்டு போயிட்டாங்க...பயம் எதும்மில்லனு சொல்லிட்டாங்க......
அவங்க அப்படித்தான் சொல்லுவாங்க...அதுக்காக நாம சரியாயிடுச்சுன்னு நினைச்சுக்க கூடாது நாளைக்கு நாம ஹாஸ்பிடல் போறோம்…
அதெல்லாம் ஒன்னும் வேணாம் மாமா அவ இன்னும் ரெண்டு நாள்ல லண்டன் போக போறா... அங்க போனதும் அவ அப்பாகிட்ட ட்ரீட்மென்ட் எடுத்துக்கட்டும்... அவ இங்கிருந்து போற வரைக்கும் எங்கயும் போகவேண்டாம் இந்த ரூமுக்குள்ள இருக்கட்டும்... பாவம் என்னை நம்பி வந்துட்டு ரொம்ப கஷ்டப்பட்டுட்டா... இப்ப எழுந்து நடக்க முடியாத அளவுக்கு அடிபட்டு இருக்கு என்று கவலையாக கூறினான்.
இந்த குடும்பத்திலேயே அதிகம் படிச்சவன் நீ.. நீயே இப்படி சொல்லலாமா சொல்லு... நடக்க முடியாத அளவுக்கு அடிப்பட்ட பொண்ணை எந்த தைரியத்துல லண்டன் அனுப்பி வைப்ப... சரி அவ கூட துணைக்கு நீ போறேன்னு வச்சுக்கலாம்... அங்க போனதுக்கே அப்புறம் அடி பலமா இருக்கு ஏன் இவ்வளவு நாள் ட்ரீட்மென்ட் எடுக்காம வெச்சுக்கிட்டு இருந்தீங்கன்னு டாக்டர் கேட்டா... என்ன சொல்லுவ....சரி டாக்டரை விடு...காயம் எப்படி ஆச்சினு அவ அப்பா விசாரிப்பாரு... இவ பொய் சொன்னா கூட இந்த மார்க்ஸ் எல்லாம் பார்த்தா ஈஸியா கண்டுபிடிப்பாரு...அப்போ இவ
பொய் சொன்னாலும் சரி உண்மையை சொன்னாலும் சரி அசிங்கம் உனக்கும் நம்ம குடும்பத்துக்கும் தான்…
கல்யாணத்துக்கு முன்னாடியே பொறுப்பில்லாம அடிபட்ட பொண்ணை காயத்தோடு கொண்டு வந்துவிட்டிருக்கானே இவனை நம்பி எப்படி பொண்ணு தர்றதுன்னு அவ அப்பா யோசிக்க மாட்டாரா..?
அதனாலதான் சொல்றேன் அவளை நாளைக்கு நாம பெரிய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறோம்...என்றவர் அப்பொழுதே மருத்துவமனைக்கு ஃகால் செய்து பேசினார்.
பிறகு ராகாவை பார்த்து நீ பயப்படாத..ஏதோ பெருசா வரவேண்டிய இப்படி சின்னதா போயிடுச்சினு நினைச்சிக்கோ...இனி எங்களை மீறி உன்கிட்ட எதும் வராது...என்றவர் பூபதியை பார்த்து இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் நாளைக்கு காலைல ஹாஸ்பிடல் போகலாம்...என்னை கேட்காம நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போகக்கூடாது புரியுதா என்று கண்டிப்புடன் கூறியவர் அவ பூரணமா குணமாகற வரைக்கும் நீ லண்டனுக்கு டிக்கெட் எடுக்கக்கூடாது என்றபடி வெளியே சென்றார் .
அவரின் பின்னாலே காமாட்சியும் சென்று விட்டார் இருவரும் வெளியே செல்லவும் யோசனையாக கதவை சாத்திய பூபதி ராகாவிடம் வந்து சாரி மாமா எப்பவும் இது மாதிரி மேனர்ஸ் இல்லாம நடந்துக்கற ஆள் கிடையாது ரொம்ப பர்ஃபெக்ட் பார்க்கிறவங்க இன்னைக்கு ஏன் இப்படி நேரே உள்ளே வந்தார்னு தெரியல நீ எதும் தப்பா நினைச்சுக்காத…
அப்புறம் மாமா குணம் ஆனதுக்கு அப்புறம் தான் லண்டன் போகணும்னு சொல்லறதை பார்த்து நீ பயப்படாத... நான் ஃப்ரண்ட் கிட்ட டிக்கெட் போட சொல்லி இருக்கேன்... முடிஞ்ச அளவு டைரக்ட் ஃப்ளைட் பார்க்க சொல்லி இருக்கேன் ..அப்படி இல்லன்னா கனெட்டிங் ஃப்ளைட்ல போய்க்கலாம்…என்றவன் ..
நெற்றியைத் தேய்த்துக் கொண்டு சிரித்தபடி வீட்ல எல்லாருமே மாமாக்கு கொஞ்சம் மனநிலை சரியில்லைனு சொல்லும்போது நான் நம்பல ஆனா இன்னைக்கு அவர் நடத்துகிறதை பார்க்கும்போது அப்படி இருக்கலாமோன்னு தோணுது…
எதை வெச்சு பூபதி அப்படி சொல்ற…
கதவைத் தட்டாம நேரா ரூம்குள்ள வந்தாரே அதை வைச்சா... இல்ல காயத்தை பார்த்ததும் பதறிப் போய் ஹாஸ்பிடலுக்கு போன் பண்ணி அப்பாயின்மென்ட் வாங்கினாரே அதைவச்சா... அப்படியும் இல்லைனா உடம்பு முழுசா சரியாகற வரைக்கும் லண்டன் போகக்கூடாதுன்னு சொன்னாரே அதை வச்சா... என்று கேள்வி மேல் கேள்வியாக அவனைப் பார்த்து கேட்டவள்... பதில் சொல்லு பூபதி என்றாள்.
எல்லாத்தையும் சேர்த்துதான் சொல்லறேன் ராகா…என்றான்.
எனக்கு எதுவுமே தப்பா தெரியல பூபதி எனக்கு அடிபட்டது தெரிஞ்சு பதறிப் போய் ஓடி வந்ததாதான் எனக்கு தோணுச்சு ...நீயா இருந்தாலும் சரி... நானா இருந்தாலும் சரி... நமக்கு நெருங்கின ஒருத்தருக்கு முடியலன்னா எப்படி துடிப்போமோ அதை தான் அவர் கண்ணுல பார்த்தேன்…
சரி விடு... உன்னோட மைண்ட் செட் அது என்னோட மைண்ட் செட் இது எதுக்கு அவருக்காக நமக்குள்ளே ஒரு ஆர்க்யூமெண்ட் வரனும்... சரி எப்போ லண்டன் கிளம்பலாம்…
அங்கிள் சொன்னது போல என் உடம்பு முழுசா குணமானதுக்கு அப்புறம்…
ஆச்சரியமா இருக்கு... நீதானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உடனே லண்டன் போகணும் டிக்கெட் போட்டுக்குடுன்னு சொன்ன இப்போ மாத்தி பேசுற…
ம்ம்... அப்போ ஒரு விஷயம் எனக்கு புரியல அங்கிள் வந்து சொல்லிட்டு போனதுக்கு அப்புறம் தான் ஒரு விஷயம் கிளிக் ஆச்சி... இத்தனை காயத்தோட நான் லண்டன் போனா என் அப்பா என்னை கேக்க மாட்டாரா அவருக்கு நான் என்ன பதில் சொல்றது…
அதான் உன் அப்பா வர்றதுக்கு பத்து பதினஞ்சு நாள் ஆகுமே அதுக்குள்ள உன் காயம் ஆயிடும் அப்புறம் எப்படி அவரு கேள்வி கேப்பாரு…
ம்ம்...நீ சொல்லறது சரிதான்... என் அப்பா கேள்வி கேட்க மாட்டாங்க ஆனா என் மம்மி கேள்வி கேப்பாங்கல்ல...
****
ஆமா பூபதி அப்பா கேக்கறாங்களோ இல்லையோ கண்டிப்பாக மம்மி கேப்பாங்க... மம்மி நான் உன்னோட அனுப்பியே வச்சாங்க….
இப்போ நான் காயத்தோடு ஊருக்கு போனா கண்டிப்பா என் அப்பா கிட்ட சொல்லிடுவாங்க…அது மட்டும் கிடையாது என்னிக்குமே உனக்கு என்னை கல்யாணம் பண்ணித்தர ஒத்துக்க மாட்டாங்க…
இந்த நிமிஷம் வரைக்கும் அவங்க தான் நம்மளோட காதலுக்கு சப்போர்ட் பண்றாங்க இப்போ நான் இப்படி போய் நின்னா அவங்க துடிச்சு போயிடுவாங்க…
அவங்ககூட இருந்த வரைக்கும் ஒரு சின்ன காயம் கூட எனக்கு ஆக விட்டதில்லை... உன்னோட அனுப்பின ஒரே நாள்ல எனக்கு இத்தனை பிரச்சனைனு தெரிஞ்சா காலம்பூரா எப்படி நீ என்னை நல்லா பாத்துப்பேன்னு உன்னை பார்த்து கேள்வி கேப்பாங்க என்ன பதில் சொல்லுவ சொல்லு…
இப்போ என் அப்பா லண்டன் திருப்பி…. நான் அங்க இல்லன்னா கூட ஏதாவது ஒரு பொய்யை சொல்லி சமாளிப்பாங்க... நம்ம காதலுக்காக போராடுவாங்க…இந்தக் கோலத்தில நான் போய் நின்னா நம்மளோட காதலுக்கு முத எதிரி அவங்களா தான் இருப்பாங்க... அப்புறம் உன் இஷ்டம்….
ம்ம்...புரியுது...ஆனா உனக்கு இங்கே சேஃப் இல்லையோன்னு தோணுது…
என் மனசு கூட அதைத்தான் சொல்லுது ஆனாலும் நீ என்பக்கத்துல இருக்கறதால எது வந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியத்தையும் கொடுக்குது…
நீ மட்டும் என்ன விட்டுட்டு எங்கேயும் போகாத எனக்கு அது மட்டும் போதும்…
சரி தூங்கு...நைட் டிஃபனுக்கு எழுப்பறேன்...என்றான்.
ம்ம்... எங்கேயும் போகாத என்றபடி மீண்டும் கண்மூடினாள்.
இங்கே அறைக்குள் ராஜா குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் தனது பாக்கெட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருக்கும் கலைவாணியின் புகைப்படத்தை எடுத்து கலை நீ அடிக்கடி கனவுல வந்து சொல்லுவல்ல... கவலைபடாதீங்க நம்ம பொண்ணு சீக்கிரமா உங்க கிட்ட வருவான்னு...அது உண்மையா…
எனக்கென்னவோ இப்போ வந்திருக்கிற பொண்ணு நம்ம பொண்ணா இருப்பாளோன்னு என் உள் மனசு சொல்லுது…எப்படி நான் தெரிஞ்சுகிறது... நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் ...எனக்கு ஏதாவது உதவி பண்ணு கலை. என்கிட்ட ஒரு திட்டம் இருக்கு அந்த திட்டம் மட்டும் சரியா இருந்தா நான் சுலபமாக கண்டுபிடித்து விடுவேன் அதுக்கு உதவி பண்ணு கலை...
என்றவர் கண்கலங்க
என் உலகமே இருட்டா இருக்கு...அங்க நம்ம மகள் வந்து தான் வெளிச்சம் கொடுக்கனும்... என்னவோ தெரியல இன்னைக்கு என் மனசு..
என் அறை எல்லாமே ரொம்ப பிரகாசமா தெரியுது... என கண்களை துடைத்துக்கொண்டார்.
அவர் போட்ட திட்டத்தை செயல் படுத்த விடியும்வரை காத்திருக்க வேண்டும்...
இன்னும் ராத்திரி கூட ஆகல எப்போ விடியும்..
என காத்திருக்க ஆரம்பித்தார்.
மறுநாள் காலை ஆறு மணி முன்பாகவே கிளம்பிய ராஜா ஹாலில் வந்து அமர்ந்துகொண்டார்.
வீட்டில் இருந்த அனைவருக்குமே பயங்கரமான ஆச்சரியம் மனைவியையும் மகளையும் பறிகொடுத்த பின்பு அவர் இதுபோல் வீட்டில் அமர்வதே கிடையாது அவரின் உணவு கூட அறைக்கு தான் செல்லும் …
மற்றவர்களோடு அவர் சாப்பிட்டு பல வருடங்கள் ஆகி விட்டது.
காலை எழுந்தால் உடற்பயிற்சி, யோகா அதன் பிறகு எப்போது வெளியே கிளம்புகிறார் எப்பொழுது வருகிறார் என்பது யாருக்குமே தெரியாது.
அவர் உபயோகப்படுத்தும் வாகனத்தை வைத்து தான் கண்டே பிடிப்பார்கள் அந்த அளவிற்கு வீட்டில் ஒருவர் இருப்பதே தெரியாதவாறு நடந்துகொள்வார்.
ஆனால் இன்றோ அதிகாலையிலேயே பூஜை அறைக்கு சென்று வழிப்பட்டவர் வீடு முழுவதிலும் பக்திப்பாடல்கள் ஒலிப்பது போல் செய்து விட்டு ஹாலில் வந்து அமர்ந்திருந்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது.
அவரின் தாய் தந்தைகள் கூட ஆச்சரியமாக வெளியே வந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு அப்படி ஒரு சந்தோஷம் தன்னுடைய கடைசி மகன் மட்டும் தனியாக கஷ்டப்படுகிறானே என்று தானே அவர்களும் கவலையில் அறைக்குள் அடைந்து கொண்டார்கள்.
அவரின் சித்தப்பா சித்தி சித்தப்பாவின் துணைவியார் என அனைவருமே வந்து அவரை வேடிக்கை பார்த்து விட்டு சென்று விட்டார்கள் .
யாரைப் பற்றியும் அவருக்கு கவலையில்லை மிகவும் கம்பீரமாக எதையோ சாதித்து விட்ட தோற்றத்தில் அமர்ந்திருந்தார்…
அவரின் செயல்களை காமாட்சியின் கணவரான சிதம்பரத்தின் கண்களிலும் சிக்கியது...உடனே தன்னுடைய அண்ணன்களுக்கு அழைத்து விட்டார்.
வீட்டில் ஏதோ ஒன்று சரியில்லை நடப்பது எல்லாம் புதுசா இருக்கு... கொஞ்சம் என்னனு பாருங்க...
ம்ம்... எங்களுக்கும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருக்கிறது ஏதோ ஒரு கணக்கை பாக்காம பாதிலேயே விட்டுட்டோம்... எங்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசம் கொடு அந்த கணக்கை சரி செஞ்சுட்டு உன்கிட்ட வரேன் என்றபடி மொபைல் போனை வைத்தார்கள்.
சற்று நேரத்திற்கெல்லாம் பூபதி குளிப்பதற்காக அவனது அறைக்கு செல்ல ராஜாவும் பட்டென்று எழுந்து நின்றார்.
யோசனையாக மாமாவை பார்த்தவன் என்ன மாமா காலைல எங்க கிளம்பிட்டீங்க என்று கேட்கவும்.
என்ன பூபதி மறந்துட்டியா நேத்தே சொன்னேன்ல ராகாவை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகணும்னு…
ம்ம்... ஞாபகம் இருக்கு ஆனா இவ்வளவு காலையிலேயேவா என்று ஆச்சரியமாக கேட்டான்.
காலைலயா இருந்தா என்ன..
?எவ்ளோ சீக்கிரமா ஹாஸ்பிடல்ல காமிக்கறமோ அவ்வளவு சீக்கிரமா குணமாவால்ல...
புரியுது மாமா ஆனா இவ்வளவு காலையில எந்த ஹாஸ்பிடல்ல டாக்டர் இருப்பாங்க…
அதெல்லாம் இருப்பாங்க முதல்ல மாதிரி எல்லாம் நம்ம ஊர் கிடையாது இப்ப எல்லாம் இருபத்திநாலு மணிநேரமும் பாக்கற ஹாஸ்பிடல் நிறைய வந்தாச்சு... எப்போ போனாலும் டாக்டர்ஸ் அவைலபிள் நீ போய் சீக்கிரம் கிளம்பிட்டு அந்த பொண்ணையும் கிளம்ப சொல்லு... அப்புறம் அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து கூட்டிட்டு வா…
என்ன மாமா என்னை விட அவ மேல ரொம்ப அக்கறை காட்டுறீங்க என்று சிரித்தபடியே கேட்கவும்.
நீ நம்ம வீட்டு பையன் ஆனா அந்த பொண்ணு அப்படி இல்லல்ல..
நம்மளை நம்பி அவ்வளவு தூரத்தில இருந்து வந்திருக்கறா...அவள தான முதல்ல கவனிக்கனும் என்றவர் பிறகு அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது நீ மொதல்ல சீக்கிரம் கிளம்பு என்று விரட்டிவிட்டார்.
காமாட்சிக்கு கூட வியப்பாக இருந்தது இத்தனை நாள் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்த அண்ணன் இன்று இப்படி தேனீர் போல சுறுசுறுப்பாக மாறிவிட்டாரே... எல்லாம் மருமகள் வந்த நேரம் என பெருமை பேசிக்கொண்டார்.
காலை ஒன்பது மணிக்கு முன்பாகவே ராகாவையும் பூபதியையும் அழைத்துக்கொண்டு ராஜா மருத்துவமனை கிளம்பிவிட்டார்.
நடக்க சற்று சிரமப்பட்ட ராகா பூபதியின் கைகளைப்பிடித்து தாங்கிய படி நடந்து செல்ல குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ராகாவை தான் பார்த்தார்கள்... அவர்கள் அனைவருக்குமே திடீரென ஒரு சந்தேகம் முளைத்திருந்தது... ஏன் இந்தப் பெண்ணின் மீது ராஜாவிற்கு ஒரேநாளில் அக்கறையும் பாசமும் வந்து ஒட்டிக் கொண்டது... ஏதோ ஒரு விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்கள்.
அதை பூபதியின் சின்ன பாட்டி நன்றாகவே உள்வாங்கிக் கொண்டார் சிதம்பரத்தை வா என்பது போல் ஜாடை செய்துவிட்டு உள்ளே சென்றவர் ...அவர் வந்ததும் கதவை அடைத்து என்னடா நடக்குது இங்க என்று கேட்டார்.
அதான் கா ஒன்னும் புரியல இத்தனை நாள் பெட்டிப்பாம்பா அடங்கி கிடந்தவன் இன்னைக்கு மான் மாதிரி துள்ளிக்கிட்டு ஓடுறான் புதுசா வந்த பொண்ணை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு விஷயத்தை பாக்கி வைத்து மாதிரி என் மனசு சொல்லுது.. என்னன்னு தெரியலையே அக்கா…
நான் சொல்லுறேன் டா அந்த லூசு பைய அடிக்கடி சொல்லிட்டு திரிவானே எனக்கு ஒரு பொண்ணு இருக்கா...அவளை தேடி போறேன்னு ஒருவேளை அந்த பொண்ணு தானா...இவ.
அப்படி இருக்க வாய்ப்பில்லை அக்கா அந்தக் குழந்தைதான் அன்னைக்கே நெருப்பில செத்துப் போச்சே…
நீ பார்த்தியா இல்லல்ல ..
அப்புறம் எதை வெச்சு இவ்வளவு உறுதியா சொல்ற... மொதல்ல அன்னைக்கு யார் யார் இறங்கி வேலை செஞ்சதுன்னு பார்த்து அத்தனைபேரையும் விசாரி…
ஒருவேளை இவ தான் அந்த குழந்தைனா நாம் அத்தனை பேரும் நடுரோட்டுக்கு வந்துருவோம் நீயாவது இந்த வீட்ல பொண்ணு எடுத்துட்ட அதுக்காக உனக்கு மூணு வேளை சாப்பாடு போடுவாங்க…
ஆனா நான் ஓட்டிகிட்டு வந்தவ... அதனால நானும் என் ரெண்டு தம்பிகளும் நடுத்தெருவுக்கு வருவோம் மறந்துடாத…
அத்தனை சொத்தும் பெரிய கிழவன் பேர்ல தான் இருக்கு... கிழவன் உயிரோட இருந்தாலும் வாரிசான அவளுக்கு தான் செத்துப்போகும் செத்தாலும் அவளுக்கு தான் போகும்.
நீ இந்த வீட்டு மாப்பிள்ளையா வர்றதுக்கு நான் எவ்வளவு போராடி இருப்பேன்னு உனக்கு ஞாபகம் இருக்குல்ல அந்த நன்றிக்கடன் கொஞ்சமாவது மனசுல இருந்தா ஒழுங்கா நானும் என் தம்பிகளும் இந்த வீட்டை விட்டு வெளிய போகாம இருக்கறதுக்கு என்ன செய்யனுமோ அதை செய் இல்ல உன் அக்காவோட இன்னொரு முகத்தை நீ பார்ப்ப…
ஏன் கா இவ்ளோ டென்ஷன் ஆகுற... ஒருவேளை அவ இந்த வீட்டோட வாரிசா இருந்தா கூட நம்ம பூபதி தான் அவளை கல்யாணம் பண்ணிக்க போறான் அப்போ எல்லா சொத்தும் நமக்கு தானே வரும்…
வாய மூடுடா அப்படி கற்பனை பண்ணிதான் காமாட்சியை கல்யாணம் செஞ்ச... இந்த நிமிஷம் வரைக்கும் ஏதாவது ஒரு அதிகாரம் உன்கிட்ட வந்து இருக்கா சொல்லு எல்லாத்துக்கும் பொண்டாட்டி முன்னாடி தானே போய் நிற்கற..
அதே மாதிரிதான் காலத்துக்கு உன் பையனும் அவ முன்னாடி தான் போய் நிப்பான்... அவனால் சுயமாக ஒருமுடிவை கூட எடுக்க முடியாது நீ தான் சிப்பாயா இருந்து இந்த குடும்பத்துக்கு சேவகம் பண்ணறனு பார்த்தா ... உன் பையனையும் அதே போல ஆக்க முயற்சி பண்ணற... அவனையாவது ராஜா இடத்துல வைச்சி அழகு பாரு உன்ன மாதிரி வேலைகாரனா வைச்சி அழகு பார்க்காதே…என்ன புரிஞ்சதா…
நல்லாவே புரியுதுகா இப்போ நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கற சொல்லு செய்யறேன் …
இப்போதைக்கு அவ எங்க போறா..
என்ன பண்றானுனு மட்டும் பாத்து சொல்லு... மத்ததை நான் போன்ல சொல்றேன் என்றவர் கதவை திறக்க வாசலில் கண்ணீருடன் காமாட்சி நின்று கொண்டிருந்தார்.
என்னங்க நடக்குது இங்க... ரெண்டு பேரும் என்னவெல்லாமோ பேசிகிட்டு இருக்கீங்க..
திடீர்னு சித்தி உங்களை கூப்பிடவும் நீங்க வேகவேகமா வந்ததால என்னவோ ஏதோன்னு பதறிப்போய் பின்னாடி வந்தா இப்படி என் தலையில் இடியை இருக்கீங்களே...என்று முகத்தை மூடி அழவும்.
சிதம்பரத்தின் முகம் குரூரமாக மாறத்தொடங்கியது ...அவரின் பின்னால் இருந்த சித்தியோ... காமாட்சி கவனிக்காதவாறு கையில் கனமான ஆயுதத்தை கையில் எடுத்தார்.