கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -23

Akila vaikundam

Moderator
Staff member
23.


எங்க குடும்பத்தை பத்தி ஏற்கனவே பூபதி சொல்லிருப்பான் ஆனாலும் எந்த அளவுக்குனு தெரியல...அதனால நானும் குடும்ப கதைல இருந்தே என் லவ் ஸ்டோரி சொல்லறேன்...என்றார்.




ஆர்வமாக இருவருமே... கவனிக்க தொடங்கினர்.




என் குடும்பத்தை பத்தி நானே குறை சொல்ல கூடாது... ஆனாலும் நியாயமா சொல்லனும்னா‌ பரம்பரை பரம்பரையாவே பணத்துக்காக எதுவேண்டுமானாலும் செய்யறவங்க... மன்னர்கள் ஆண்ட காலத்துல அவங்களுக்கு ஜால்ரா... வெள்ளைக்காரன் நம்மளை அடிமை செஞ்சப்போ... அவங்களுக்கு வேணுங்கறதை செஞ்சிட்டு...அவங்களை பகைச்சிக்காம சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவங்க... அவர்களைப் பொறுத்த வரைக்கும் யார் நாட்டை ஆண்டாளும் பிரச்சினை கிடையாது... வர்றவங்களோட சுமுகமா போறது…



வெள்ளைக்காரன் நம்ம மக்களை அடிமையா வச்சிருந்த சமயத்துல நம்ம நாட்டோட குளிர்பிரசேதங்கள்ல தேயிலை பயிரிட்டான்...அப்போ என் தாத்தா அவங்களை தாஜா செஞ்சி மணிமுத்தாருக்கு மேல மாஞ்சோலைங்கற மலைகிராமத்துல தேயிலை பயிரிட வச்சாரு...எல்லாமே வெள்ளைகாரனோட கண்ட்ரோல்...ஆனா மேற்பார்வை மட்டும் தாத்தாவோடது…



ஆரம்பத்துல பல ஊர்ல இருந்து அடிமைகளை விலைக்கு வாங்கிட்டு வந்து வேலை வாங்கினாங்க...நாள் போக்கில அளவுக்கதிகமாக கடன் கொடுத்து அந்த கடனை கட்ட முடியாத ஏழை விவசாயிகளை வைத்து வேலை வாங்க ஆரம்பிச்சாங்க...




இந்த சமயத்தில தான் நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது…. ஆனா அதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடியே சில வெள்ளைக்காரர்கள் எல்லாம் அவங்க அவங்களோட ஊர் பார்த்து கிளம்ப ஆரம்பிச்சுட்டாங்க...




நாமல்லாம் அவங்களை துறத்தறதுக்கு முன்னாடி கிளம்பினவங்க என்ன செஞ்சாங்கன்னா அவங்களுக்கு விசுவாசமாக இருந்த ஒரு சில ஆளுங்க கிட்ட சொத்துக்களை அப்படி அப்படியே கொடுத்துட்டுப் போயிட்டாங்க...அப்படி பலன் அடைஞ்சதுல என்னோட தாத்தாவும் ஒருத்தர்…மலையில இருந்த பல எஸ்டேட்கள் வெள்ளைகாரனுக்கு விசுவாசமா இருந்தவங்களுக்கு பிரிச்சி கொடுக்க பட்டது...பல ஜமீன்தார்கள் தற்காலிகமா உருவானாங்க….




என் தாத்தாகிட்ட சொத்துக்களை கொடுத்த வெள்ளைகாரன் ஒருத்தன் எஸ்டேட் மட்டும் இல்லாம டீ இலைகளை பக்குவப்படுத்தி எக்ஸ்போர்ட் பண்ணுவதற்கான ஆர்டரையும் கையோட குடுத்துட்டு போயிட்டான்...தாத்தாவோட புத்திசாலி தனத்தால அவருக்கு தோதான சில ஆளுகளை வச்சி நிறையா ஏற்றுமதி பண்ண ஆரம்பிச்சாரு...பணம் டாலர்ல கொட்ட ஆரம்பிச்சது...



அதோட இல்லாம சுதந்திரம் கிடைத்ததும் பல நிறுவனங்களை சொந்தமா தொடங்கி பரம்பரை ஜமீன்ங்கற அந்தஸ்தோட வாழ்ந்தாரு...




சில வருடத்திலேயே குடியரசு நாடா அறிவிக்க..ஜமீன் வம்சத்தை கலைச்சாங்க…அளவான சொத்துக்களை மட்டுமே வச்சிகனும்னு சட்டம் இயற்றி அதிகபடியாதை அரசாங்கம் கையகபடுத்திச்சி…




உஷாரான என் தாத்தா சொத்துகளை வேலைசெய்யற எல்லா கூலித் தொழிலாளர்கள் பேரிலேயும் எழுதி வச்சாரு….அதோட எல்லார்கிட்ட இருந்தும் கைநாட்டும் வாங்கி வச்சிகிட்டாரு...




தொழிலாளர்களுக்கு ரொம்ப சந்தோஷம்...நாம வேலை செய்யது நம்மளோட இடம்முன்னு நினைச்சி கடுமையா உழைக்க ஆரம்பிச்சாங்க..



வருடம் முழுவதும் உழைத்தும் அவர்களுக்கு முறையான கூலி வரலனு அத்தனை பேரும் சேர்ந்து கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க...




அவங்களை அடக்க வழி தெரியாம கேள்வி கேட்டவங்களை எல்லாம் கொத்து கொத்தா கொன்னு போட்டிருக்காரு….இதனால மக்கள் கொந்தளிக்க ஆரம்பிச்சி பல போராட்டம் செய்ய ஆரம்பிச்சாங்க…அவங்களோட போராட்டம் கொஞ்சம் கொஞ்சமா கீழே வாழும் மக்களுக்கும் தெரிய ஆரம்பிச்சது.




அப்போ தான் அரசாங்கத்துக்கே மணிமுத்தாறுக்கு மேல இருக்கற மலையில இத்தனை மக்கள் வாழற விஷயமே தெரிஞ்சிருக்கு…




ஒரு வழியா அரசாங்கம் அங்க போயி என்ன ஏதுன்னு விசாரிக்கும்போது என் தாத்தா சாதாரணமா தொழிலாளர்கள் கை நாட்டு வச்ச பத்திரங்களை எல்லாத்தையும் எடுத்துக் காண்பித்திருக்கிறார்...




அதுல எல்லா சொத்துக்களையுமே என் தாத்தாவுக்கே வித்துட்டதா எழுதிருக்காங்க...




அளவுக்கு அதிகமாக கடன் வாங்கினதால சொத்துக்கள் அனைத்துமே என் தாத்தா பெயரில் எழுதிக் கொடுத்ததாகவும் மீதி கடனை வேலை செஞ்சி கழிக்கறதாகவும் எழுதிக் கொடுத்திருந்திருக்காங்க …இதை பாத்ததும் அதிகாரிகள் தாத்தாக்கு சப்போர்ட் பண்ணிருக்காங்க...




அதை கேட்டு தொழிலாளர்கள் எல்லாருமே பயங்கரமா அதிர்ச்சி அடைச்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராடிருக்காங்க…




அரசாங்கம் வந்து பாத்தாச்சி...இனி நமக்கு விடிவு காலம் கிடைச்சிடும்னு நினைத்தவர்களுக்கு அதிகாரிகளோட பேச்சி பெருத்த ஏமாற்றம்…




அதிகாரிகளும் எல்லாரையும் அப்போதைக்கு சமாளிக்கிறது போல...நாங்க அரசாங்கத்துகிட்ட பேசி உங்களுக்கான இடங்களை வாங்கி தர்றோம்... இங்க ஹாஸ்பிடல் கட்டித்தர்றோம் மருத்துவமனை கட்டித்தர்றோம் எல்லாருக்கும் வீடு கட்டித்தர்றோம்னு பல வாக்குறுதிகளை அள்ளி வீசிட்டு தப்பிச்சா போதும்னு கீழ வந்துட்டாங்க...





தாத்தா அதிகாரிகளை சரிகட்டின விஷயம் தெரியாத தொழிலாளர்கள் நமக்கு ஒரு நல்ல வழி பிறக்கும்னு எதிர்பார்த்து….எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் அந்த மலை கிராமத்திலேயே வாழ ஆரம்பிச்சாங்க.





அவங்களுக்கு ஒரு நோய் வந்தாலோ பாம்பு கடித்தாலோ...எல்லாமே கை வைத்தியம் தான்... பலன் இல்லன்னா செத்துப்போயிட வேண்டியது தான்... வயசான தொழிலாளர்களை மனசாட்சி இல்லாம கொன்னு வீசியிருக்காங்க…




மலைக்கு கீழே வாழற கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருக்கிற பொண்ணுகளை பசங்களை நல்ல சம்பளம் கிடைக்கும்னு ஆசை வார்த்தை சொல்லி மலைக்கு மேல கூட்டிட்டு போய் வேலைக்கு வெச்சிகிட்டாங்க.




அவங்க சொல்றது எல்லாம் கேட்டு வேலை செய்றவங்க உயிரோடு இருக்கலாம்... திருமணம் செஞ்சுக்கலாம் ...குடும்பம் நடத்தலாம்...குழந்தை பெத்துக்கலாம் …




அவங்க பேச்சை கேக்காதவங்களை அங்கேயே கொன்னு காட்டு விலங்குகளுக்கு போட ஆரம்பிச்சாங்க….




இப்படியே யாருக்கும் தெரியாம மலைமேல இப்படியொரு ராஜாங்கம் நடந்திட்டு இருந்திருக்கு...இது எதுமே தெரியாம ஊருக்குள்ள என் அப்பாவும், சித்தப்பாவும் வளந்துட்டு இருக்காங்க...எங்க ரெண்டு அண்ணாவும் கூட அப்பாவுக்கு பிறந்தாச்சி...பணம் இது போல தான் வருது...அதை வச்சி தான் ஊருக்குள்ள நிறையா சொத்துக்கள் வாங்கறோம்... பிற தொழில்களில் முதலீடு செய்யறோம்... நாமும் சுகபோகமா வாழறோம்னு தெரியாமலே எங்க குடும்பம் வாழ ஆரம்பிச்சது...




இந்த சமயத்தில வீட்ல சித்தப்பாவால ஓரே பிரச்சனை... அவரை அடக்க வழி தெரியாம அதிர்ந்து பேசாத என் சித்தியை என் சித்தப்பாக்கு கல்யாணம் செஞ்சு வச்சு மலையில இருக்கிற பங்களாவில் தங்க வச்சிருக்காங்க…அவங்களும் ஜமீன் குடும்பம் சொத்து நிறையானு எதையும் யோசிக்காம பொண்ணு கொடுத்துட்டாங்க….




சித்தப்பா மலையில செட்டில் ஆகவும் தொழிலாளர்களுக்கு எல்லாம் அப்படி ஒரு சந்தோஷம் முதலாளி மாறிட்டாங்க... நமக்கு விடிவு கிடைக்கும்னு…



அங்க தான் தப்பு பண்ணிட்டாங்க அப்பன் குணம் பிள்ளைகளுக்கு இருக்கும்ங்கறதுக்கு என் சித்தப்பா சிறந்த உதாரணம்…



வெறி பிடிச்ச மாதிரி அவ்வளவு அட்டகாசம் பண்ணி இருக்காங்க... ஒரு பொண்ணை‌ கூட விட மாட்டாங்க போல ... பாவம் என் பாட்டி... பொதுவாவே ஜமீன் வம்சத்துல நிறைய இல்லீகல் வைஃபை வெச்சுக்கலாம்னு காலங்காலமா கேட்டு வளர்ந்ததால பாட்டி வருத்த பட்டாலும் தாத்தாவை கண்டிக்கல…





மூனு குழந்தைகள் வரவும் மறுபடியும் சித்தப்பா பிரச்சனை பண்ணவும் சித்தப்பாவை வீட்டுக்கே கூப்பிட்டு கிட்டாங்க…

சித்தி இங்க நடக்கிற அநியாயங்களை எல்லாம் என் அப்பா அம்மா கிட்ட சொல்லும் பொழுது தான் அவங்களுக்கு இப்படித்தான் எங்களுக்கு வருமானம் வருது அப்படிங்கற விஷயமே தெரிஞ்சிருக்கு

.. சரி என் அப்பா பொறுப்பு எடுத்து நடத்தலாம்னு பாத்தாரு... அதுக்கு நிறையா சுறுசுறுப்பும் கொஞ்சம் புத்திசாலிதனமும் இருக்கணும் ஓரளவுக்கு வளர்ந்த என் அண்ணன்களுக்கு அது கிடையாது...





என்னோட அப்பா சிமெண்ட் ஃபேக்டரி... ரைஸ்மில் டிரான்ஸ்போர்ட் பத்தி தெரிஞ்ச அளவிற்கு தேயிலை பற்றி தெரியல… அதனால அப்பப்போ தேயிலை தோட்டத்தை எட்டிபாக்கறதோட சரி...

ஆனாலும் என் அப்பாவுக்கு கொஞ்சம் கருணை உண்டு….அதனால இந்த தொழிலாளர் படற கஷ்டத்தை பாக்க முடியாம இங்க வர்றதில்லை... இங்க நடக்குற அநியாயங்களை தட்டிக் கேட்கறதும் இல்லை…



ஆனால் என் சித்தப்பா அப்படி கிடையாது அவருக்கு அடுத்த முறை கஷ்டப்படுத்தி பார்க்கிறது ரொம்ப பிடிக்கும் அதுக்காகவே அடிக்கடி இங்கே வருவார்... அப்படி இங்கே வந்த இடத்தில ஏதோ பிரச்சனையில இன்னொரு சித்தியை கல்யாணம் பண்ற மாதிரி ஆயிடுச்சு... ஒரு கட்டத்துல சித்தியும் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க .



கூடவே இலவச இணைப்பாக மூன்று தம்பிகளும் வந்துட்டாங்க வந்தவங்க சும்மா இல்லாம என் தங்கச்சி அதாவது பூபதியோட அம்மாவை கடைசி சித்தப்பாக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்க... அப்போ நான் இங்கு இல்லை லண்டன்ல படிச்சுட்டு இருந்தேன்….


என்னோட சித்தப்பாவை தாஜா பண்ணின பூபதியோட பெரியப்பாக்கள் மலைல இருக்கற வேலைகளை பாத்துகிட்டாங்க….



என்னோட பெரிய தாத்தா என்னோட சித்தப்பா அடுத்து என் சித்தி கிட்ட இரண்டு தம்பிகள் இப்படி மாறி மாறி அந்த மலையில் இருக்கிற மக்களை கொடுமைதான் செஞ்சாங்களே தவிர யாருக்கும் விடிவுகாலம் கிடைக்கல .




இந்த சமயத்துலதான் அப்பா இல்லாத கலைவாணி பத்தாவது வரை படிப்பை முடிச்சுட்டு வீட்டிலேயே இருந்திருக்கறா….




அவளுக்கு அவங்க அம்மா திருமணம் செய்து வைக்கலாம்னு பார்க்கும்போது கலைவாணி கொஞ்ச நாளாவது வேலைக்கு போகணும் உங்களை நான் நல்லா பாத்துக்கணும் அவங்க அம்மாகிட்ட அழுது அடம் பிடிக்க வேற வழியில்லாம அவ கல்யாணத்தை தள்ளி வச்சாங்க…. அந்த சமயங்கள்ல பெண்களுக்கு சரியான வேலை வாய்ப்புகள் இந்த சுற்றுவட்டாரத்தில கிடையாது. வெளியூருக்குப் போய் துணி கடைகள்லயும் பஞ்சு மில்லுலையும் தான் வேலை செஞ்சாகனும்... கலைவாணிக்கு அப்படிப் போய் வேலை பார்க்க பிடிக்கல அவளுக்கு அவங்க அம்மானா உயிர்... அவ அம்மாவை தனியா விட்டுட்டு போக மனசு இல்லாததால உள்ளூரிலேயே வேலை தேடிக்கிட்டு இருந்திருக்கா.



அப்போ மாஞ்சோலை எஸ்டேட்க்கு வேலைக்கு ஆள் தேவைன்னு பேப்பர்ல விளம்பரம் பார்த்து அவ அம்மாவை அழைச்சிட்டு அங்க வேலை கேட்கறதுக்காக போயிருக்கா…




ஓரளவுக்கு படித்திருந்தாலே அவளுக்காக ஃபாக்டரில வேலை போட்டுக் கொடுத்திருக்கிறாங்க…. மகளை தனியா விட பயந்த அவங்க அம்மாவும் அங்கேயே தேயிலைத் தோட்ட தொழிலாளியா வேலைக்கு சேர்ந்துகிட்டாங்க….




ஆரம்பத்துல அங்கு இருந்த பிரச்சினைகள் எதுவுமே கலைவாணிக்கு தெரியல நாள் போகப்போக தான் அவ அம்மா மூலமாகவும் சுத்தி நடக்கிற விஷயங்கள் மூலமாகவும் அங்க நிர்வாகம் சரியில்லைனு கண்டுபிடிக்கறா…





ஓரளவுக்கு படித்திருந்தாலே கொஞ்சம் தைரியமா அவளுக்கு மேல வேலை செய்றவங்க கிட்ட துணிந்து கேள்வி கேட்டிருக்கா….




இத்தனை பேர் வசிக்கற இந்த மலை கிராமத்தில் இதுவரைக்கும் அடிப்படை வசதி கூட ஏன் இல்லை…. குழந்தைகள் படிக்க ஸ்கூல் இல்ல….அவசரத் தேவைக்கு ஏன் ஒரு மருத்துவமனை இல்லை…

இந்த காலத்துலயும் எல்லாரும் கை வைத்தியம் தான் பாக்கணும்னா அப்போ நம்ம நாடு சுதந்திரம் அடைந்ததுல என்ன பலன் இருக்குன்னு பல கேள்விகளைக் கேட்கவும் என் சித்தியோட தம்பிகளோட பார்வை முழுசா கலைவாணி பக்கம் திரும்பிச்சி….

உடனே அவளை எதும் செய்ய முடியாது... அவ அம்மா அங்க தான் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க இரண்டாவது என்னோட அப்பா அப்பப்போ போய் எஸ்டேட்டை பாக்குறாங்க... அப்பா காதுக்கு ஏதாவது அப்படி இப்படின்னு வந்தா அப்பாவை சமாளிக்க முடியாது…அதும் இல்லாம அப்போ நான் படிப்பை முடிச்சிட்டு ஊர் வந்துட்டேன்...என் காதுக்கு வந்தாலும் அவங்களுக்கு பிரச்சனை...





அதனால அவளை வேற மாதிரி ஏதாவது பண்ணனும்னு நாள் பார்த்து காத்துக்கிட்டு இருந்தாங்க ….அந்த சமயத்தில் ஒருநாள் அவங்க எதிர்பார்த்த மாதிரியே வேலை முடிச்சுட்டு வீட்டுக்கு திரும்பும்போது ஒரு மறைவிடத்துல வச்சி அவளை மடக்கிட்டாங்க...




அவங்ககிட்ட இருந்து அவளோட உயிரையும் மானத்தையும் காப்பாற்றுவதற்காக கண்ணு மண்ணு தெரியாம எஸ்டேட்க்குள்ள ஓடிவர ஆரம்பிச்சா…




அந்த சமயத்தில் எங்களோடு ஒவ்வொரு சொத்துக்களையும் நேர்ல போய்ப் பார்த்து கணக்கு வழக்குகளையும் சரி செஞ்சுகிட்டு இருந்த நான் கடைசியா மாஞ்சோலை டீ எஸ்டேட்டுக்கு வந்துட்டு இருந்தேன்...அப்போ கலைவாணி என்னோட ஜிப் மேல வந்து விழுந்தா…





ஒரு பொண்ணு வண்டி மேல வந்து விழவும் பயந்து நான் காரை விட்டு இறங்கும் பொழுது அவளை துரத்திட்டு வந்த ஆளுக எல்லாரும் என்னை பார்த்ததும் பயந்து அப்படியே ஓடி போயிட்டாங்க.




கார்ல அடிப்பட்ட கலைவாணி ரொம்ப பயந்து இருந்தா... யாரு அவங்க... ஏன் உன்னை துறத்தினாங்கனு ...கேட்டப்போ எதுக்குமே வாய் திறக்கல



முதலாளியோட பையனுக்கு தெரிஞ்சதும் சுத்தமாக என்கிட்ட பேச மறுத்துட்டா…முதலாளி வர்க்கம் எல்லாரும் ஒரே போலன்னு நினைச்சுட்டா …




ஏனோ அவளை பார்த்ததும் ரொம்ப பிடிச்சது அதனால அவளை பாக்குறதுக்காகவே நான் அடிக்கடி அங்க போக ஆரம்பிச்சேன்…




அங்க போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான் அங்கிருக்கிற நிலவரங்கள் கொஞ்சம் சரியில்லைனு எனக்கு தெரிய ஆரம்பிச்சது ….



எஸ்டேட்டோட நிர்வாகம் எதுக்காக சித்தியோட தம்பிக பாக்கணும் அதை நானே பார்க்கிறேன்னு அப்பா கிட்ட போய் கேட்டப்போ தான் என்னோட அப்பா அந்த எஸ்டேட்ல இருந்த வில்லங்கத்தை என்கிட்ட சொன்னாங்க .




அந்த எஸ்டேட் மட்டும் இல்லை பிற முக்கிய தொழில்கள் எல்லாமே என் அப்பாவுக்கு பிறக்கிற பேரன் பேத்திகளுக்கு தான் சேர்றது போல தாத்தா எழுதி வச்சிருக்காங்க….




இப்போ என்னோட அண்ணாக்கு ஒரு குழந்தை பிறந்தா அந்த சொத்துக்கள் எல்லாமே அண்ணா கிட்ட போய்டும்... குழந்தைக்கு பதினெட்டு வயது ஆகிற வரைக்கும் அவர் நிர்வாகம் பண்ணிக்கலாம்... அப்படி இல்லன்னா ரெண்டு அப்பாங்களும் தான் பாத்துக்கணும்.. இப்போ என்னோட ரெண்டு அண்ணாங்களுக்கும் குழந்தை கிடையாது... என் அப்பாக்கு எஸ்டேட் பத்தி பெருசா அக்கறையில்லை ..சித்தப்பா கடைசி சித்தி பேச்சை கேட்டுக்கிட்டு வீட்டோட இருந்தாச்சி…




அதனால சித்திகளோட தம்பிக அதை நிர்வகிக்கறாங்க... இப்போ என்னால எதுவுமே செய்ய முடியாது அந்த மக்களுக்காக என் பக்கம் இருந்த நான் எதாவது பேசனும்னா கூட அதிகாரம் என்கிட்ட கிடையாது…



ஒரு வேளை நான் துணிந்து கீழ கலெக்டர் ஆபீஸ்லயோ... இல்ல மேலிடத்துக்கு தகவல் சொன்னா கூட ரொம்ப சுலபமா அவங்களை சரி கட்டறாங்க... எந்த வகையிலுமே அந்த மக்களுக்கு உதவ முடியாத அளவுக்கு என் கைகள் கட்டப்பட்டு இருந்தது…. அப்படி இருந்தும் போராடி பெரிய பெரிய ஆளுகளை எல்லாம் பிடிச்சு….




மலைக்கு மேல ஒரு கிராமம் இருக்கு... அங்க பல எஸ்டேட்ல‌ மக்கள் கொத்தடிமையாக வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க அவங்களுக்கு படிக்கிறதுக்கு ஸ்கூல் கிடையாது ஹாஸ்பிடல் கிடையாது எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது படிப்பறிவு இல்லாமல் வச்சிகிட்டு இருக்காங்கன்னு புகார் குறித்து மனு கொடுத்து ஒருவழியா அங்கிருக்கிற மக்களுக்கு எல்லாத்துக்கும் ஓட்டு போடறதுக்கான அதிகாரத்தை வாங்கிக் கொடுத்தோம்…




அங்கேயும் விதி விளையாடிடுச்சு... மத்த எஸ்டேட் முதலாளிகள் எல்லாரும் சேர்ந்து அவங்களுக்கு தோதான ஒரு ஆளை நிறுத்தி அவங்களே மறுபடியும் ராஜ்ஜியம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க…



மறுபடியும் மக்களுக்காக நான் பேச ஆரம்பித்தேன் ஒரு வழியா ஹாஸ்பிட்டல் ,ஸ்கூல்னு அடிக்கல் நாட்டினாங்க...நாட்டினதோட சரி அதுக்கப்புறம் எந்த ஒரு ஸ்டெப்ஸூம் எடுக்கல... தனிப்பட்ட முறையில் எங்கே எஸ்டேட்டுக்கு மட்டும் என்னால் எதுவும் செய்ய முடியாது அங்கு வேலை செய்றது எல்லா எஸ்டேட் மக்களுமே பரிதாபத்துக்குரியவங்கதான்…


அதனால எல்லாருக்கும் பொதுவா நானே ஹாஸ்பிட்டல் ஸ்கூல் கட்டலாம்னு முடிவு பண்ணினேன்... ஆனா என் சித்தி என் அண்ணன்க ரெண்டு பேரையும் தூண்டிவிட்டு தனிப்பட்ட முறையில் நான் எதுவுமே செய்ய கூடாதுன்னு வீட்டுக்குள்ள பிரச்சனையை கொண்டு வந்தாங்க‌..



ஒரு பொதுவான சொத்து .

ஆறு பேர் வாரிசுகளா இருக்கற சொத்து…. தனிப்பட்ட முறையில் நீ மட்டும் எப்படி பெரிய தொகைகளை எடுத்து செலவு செய்ய முடியும் அப்படிங்கறது போல...எனக்கு வேற வழிதெரியாம அமைதியாக வேண்டிய சூழ்நிலை ஆனாலும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பா அங்கேயே இருந்தேன்…




அந்த சமயத்துல வேலை செய்ற பெண் கிட்ட பூபதியோட பெரியப்பா ஏதோ சில்மிஷம் செய்ய அதை நேரில் பார்த்த கலைவாணி கொஞ்சம் கூட யோசிக்காம பெரியப்பாவை எல்லார் முன்னாடியும் அவமானப்படுத்திட்டா இதனால் கோபமடைந்த பெரியப்பா அத்தனை பேர் முன்னாடி அவளை அடிச்சிட்டாரு…




இதைக் கேள்விப்பட்ட நான் அங்க போகும்போது கலை எல்லார் முன்னாடியும் பூபதியோட பெரியப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கணும்னு டிமான்ட் வெச்சாங்க கலை ஒத்துக்கவே மாட்டேன்னிட்டா...




அப்படி நான் மன்னிப்புக் கேட்டா அவர் செஞ்சது சரியாயிடும் தட்டிக்கேட்ட நான் தப்பா ஆயிடுவேன் அதனால என் உயிரே போனாலும் மன்னிப்பு மட்டும் கேக்க மாட்டேன்னு உறுதியா இருந்தா…




எனக்கு அவளோட தைரியம் பிடிச்சது... அதுவரைக்கும் எனக்கு அவ மேல இருந்த காதல் ஒரு எதிர்பாலினமா மட்டும்தான் இருந்தது…. அந்த சம்பவத்துக்கு அப்புறம் கலை இல்லனா என்னால வாழவே முடியாது அப்படிங்கிற மாதிரியான ஒரு காதல் என் மனசுக்குள்ள வந்தது...





பிறகு தான் பொறுமையா யோசிச்சேன் இந்த மக்களுக்கு நல்லது நடக்கனும்னா கலை மாதிரி ஒரு தைரியமான பொண்ணும் என் வாழ்க்கைக்கு தேவை….




அதுக்காகவே அவளை கல்யாணம் செய்யனும்னு நினைச்சேன்... அதை நான் அவகிட்ட சொன்னபோது முதல்ல தயங்கினாலும் பிறகு ஒத்துகிட்டா….




இந்த மக்களுக்கு நல்லது செய்யணும்னா என் உயிரையும் கொடுப்பேன் உங்கள கல்யாணம் செஞ்சுக்கவா மாட்டேன்னு சொல்ல போறேன்னு பட்டுனு என்னை பார்த்து கேட்டா…




எனக்கு சின்ன வருத்தம் தான் அவ என் காதலை புரிஞ்சி திருமணம் செஞ்சுக்கணும் நினைச்சேன் ஆனா கடமைக்காக திருமணம் செய்ய அவ ஒத்துகிட்டா…





திருமணத்திற்கு பிறகு என்னோட காதலை புரியவைக்கலாம்னு நினைச்சுக்கிட்டு என் குடும்பத்தினர் கிட்ட அவளை பத்தி சொன்னப்போ யாருமே ஒத்துக்கொள்ளவில்லை…



நம்ம எஸ்டேட்ல கூலி வேலை செய்யற பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதான்னு பயங்கரமா எதிர்க்க ஆரம்பிச்சாங்க…





ஆனா நான் கலைவாணிக்கு கொடுத்த வாக்கை மீற முடியா எல்லாரையும் எதிர்த்துகிட்டு அந்த எஸ்டேட்ல வச்சி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்…




அங்கேயே அவங்களோட ஒருத்தனா வாழவும் ஆரம்பிச்சேன்…அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது கலைவாணிக்கும் என்னை ரொம்ப பிடிச்சிருக்கு... முதலாளி வர்க்கம் அப்படிங்கறதால தான் அவளோட காதலை மனசுக்குள்ளேயே வைச்சிட்டு இருந்திருக்கா…



திருமணத்துக்கு பிறகு தான் நாங்க ரெண்டு பேருமே பரஸ்பரம் எங்க காதலை பகிர்ந்துக்கவே செஞ்சோம்... அதுக்கப்புறமா எங்களோட கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா ஆரம்பிச்சது...



எங்க காதல் வாழ்க்கைக்கு அடையாளமா அவ சீக்கிரமாவே தாய்மை அடைஞ்சா.




இந்த விஷயம் என் குடும்பத்திற்கு தெரியவும் அத்தனை பேருமே கலைவாணியை பாக்க வந்துட்டாங்க…



கிட்டத்தட்ட தலையில வைத்துக் கொண்டாடாத குறைதான்…



என்னோட அப்பாவிற்கு பல மடங்கு சந்தோஷம் எங்கே தன்னுடைய சொத்துக்கள் எல்லாமே தன்னோட தம்பி மகளுக்கே போயிடுமோன்னு மனசுக்குள்ள ஒரு சின்ன பயத்தோடு வலம் வந்தவர்... கலை மாசமா இருக்கறது தெரிஞ்சதுமே உடனே

எங்களை கையோடு எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போயிட்டாரு …




வீட்ல இருக்கிற எல்லாரையும் அழைத்து எனக்கு இப்போ நேரடியா வாரிசு வந்தாச்சு இனிமே எங்க அப்பா எழுதின உயில் பிரகாரம்... நானும் என் தம்பியும் முக்கிய சொத்துக்களை நிர்வகிக்க பொறுப்பிலிருந்து விலகிக்கறோம்…




அந்த பொறுப்புக்கு ராஜபூபதி வர போறான் ...குழந்தை மேஜர் ஆகுற வரைக்கும் குழந்தையோட கார்டியனா அவன் பார்ப்பான்... அதுக்கு அப்புறமா சொத்துக்கள் எல்லாமே அந்த குழந்தைக்கு போகும்…மீதி இருக்கிற எல்லா சொத்துக்களையும் மத்த பிள்ளைகளுக்கு இப்பவே திருப்பித் தர தயாராக இருக்கிறேன்னு

ஒரு பெரிய இடியை தூக்கி எல்லார் தலையிலேயும் போட்டாரு…




என் அண்ணிங்க நாலு பேருமே இதுக்கு பயங்கரமா ஆட்சேபனை தெரிவிச்சாங்க... எப்படி எங்களுக்கு இனிமே குழந்தையே பிறக்காதுனு நீங்க முடிவெடுக்கலாம் அப்படிங்கிறது போல…



அதுக்கு என்னோட அப்பா ரொம்ப கூலா...என் அப்பா எழுதின உயிலை கொஞ்சம் எடுத்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்... பொதுவா அவர் பேரப்பிள்ளைகள்ன்னு எழுதல...



ஆண் வாரிசுகல்ல முதல்ல பிறக்கிற குழந்தைக்கு தான் முதல் உரிமைனு எழுதி வைத்திருக்கிறாரு…. அப்படி பார்த்தா ராஜாவோட குழந்தை தான் முதல் பேரக்குழந்தை அதனால அவனுக்கு தான் உயில் செல்லும் அடிச்சு சொல்லிட்டாரு….




மத்தவங்க எல்லாருமே அமைதி ஆயிட்டாங்க... இப்போ எஸ்டேட்ல ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த சித்தியோட தம்பிகளை அங்கிருந்து வெளிய போக சொல்லிட்டேன்... இனிமே எஸ்டேட்ல உங்க கால் கூட படக் கூடாது அப்படின்னு சொன்னேன் ஆனா போகும்போது அவங்க என்கிட்ட என்ன சொன்னாங்கன்னா இன்னும் உனக்கு குழந்தையே பிறக்கல... குழந்தை பிறந்த பிறகு தான் இதுக்கெல்லாம் நீ ராஜா அதை மறந்துடாதன்னு சொல்லிட்டு போனாங்க...




நான் அப்போ அவங்க சொன்னதை பெருசா எடுத்துக்கல ஆனா அவங்க சொன்னதுக்கு அர்த்தம் கொஞ்ச நாளிலேயே தெரிய ஆரம்பிச்சது.




தம்பிக ரெண்டு பேரும் எங்க வீட்டுலேயே வந்து செட்டில் ஆனாங்க அதுக்கப்புறம்தான் கடைசியா அவன் சொல்லிட்டு போன விஷயம் என் மண்டையில உறைச்சது…




அதுக்கு அப்புறம் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப தீவிரமா கண்காணிக்க ஆரம்பிச்சேன்…



கலையும் அந்த வீட்டில் ஏதோ தப்பா நடக்கிற மாதிரி என் தங்கச்சி கிட்டயும் என்கிட்டயும் மாறி மாறி புலம்பிகிட்டு இருந்தா….




எனக்கு விஷயம் கொஞ்சம் புரியுது... இது என் சித்தியோட தம்பிகளோட சதின்னு... அதனால எஸ்டேட்ல இருந்த கலை அம்மாவை அவளுக்கு துணையாக எங்க வீட்டிலேயே தங்க வைச்சேன்..





கலை குழந்தை பிறக்கற நாளுக்காக காத்திருக்க ஆரம்பிச்சா...அந்த குழந்தை முழுசா கையில வந்தாதான் அவ ஆசைப்பட்ட மாதிரி கஷ்டப்பட்ட மக்களுக்கு ஹாஸ்பிடல் கட்ட முடியும்... ஸ்கூல் கட்ட முடியும் ….ரோடு போட்டுக் கொடுக்க முடியும் அடிப்படைத் தேவைகள் எல்லாத்தையுமே பூர்த்தி செய்ய முடியும்..



அவர்களுக்கு சம்பள உயர்வு,குழந்தைக எல்லாருக்கும் கட்டாய கல்வி...வீட்ல ஒருத்தர் வேலை செஞ்சா போதும்...வருஷத்துல லாபத்துல ஒரு பங்கு போனஸா கொடுக்கனும்னு நிறைய திட்டங்கள் வைத்திருந்தா‌..



அவளோட ஆசைகள் எல்லாத்துக்குமே அந்தக் குழந்தைதான் அவளோட நம்பிக்கையா இருந்தது அதனால எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை தனி மனுஷியா தாங்கிகிட்டு அந்த குழந்தையை பெற்றெடுப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினா….



டாக்டர் சொன்ன நாள் வர ஆரம்பிச்சதும் கலையை சுத்தி நிறையா சதிகள் நடக்க ஆரம்பிச்சது.




எனக்கும் புரிஞ்சது எதுக்காகன்னு… அப்போ தவிர்க்க முடியாத காரணத்துக்காக வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம்.




கலையை தனியா விட்டுட்டு போக பயந்துபோய் உன்னோட பாட்டி தாத்தாவோட ஹாஸ்பிடல்ல தான் அவளை அட்மிட் பண்ணினேன்.அங்க சுதான்னு ஒரு வெள்ளல தேவதை இருந்தாங்க…




மருத்துவமனையில் புதுசா எந்த நோயாளிகளையும் எடுத்துக்கறதில்லனு முதல்ல என்கிட்ட மறுத்துட்டாங்க…



அதுக்கு அப்புறமா நானும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்னோட குழந்தை இந்த மருத்துவமனையில‌ பிறக்கணும்னு ஆசைப்படறேன்னு அவங்ககிட்ட சொல்லவும் என்ன நினைச்சாங்களோ தெரியல உடனே அட்மிஷன் போட்டுடாங்க…புதுசா மனைவியை பார்க்கிறதுக்கு யாரையும் அனுமதிக்காதீங்க... நான் வர்ற வரைக்கும் அவளை பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொன்னேன்... குழந்தை பிறக்கற நாளும் நான் ஊர் திரும்பற நாளும் ஒரே நாளா தான் இருந்தது…அவங்களும் சரின்னு சொன்னவங்க…. நீங்க இங்க வரும்பொழுது உங்க மனைவியையும் உங்க குழந்தையும் பத்திரமா உங்க கைல ஒப்படைப்பேன் பயப்படாம போயிட்டு வாங்கன்னு எனக்கு நம்பிக்கை கொடுத்து அனுப்பி வச்சாங்க ஹாஸ்பிட்டல் மேல இருந்த நம்பிக்கையும் அவங்க கொடுத்த வாக்கும் பயமில்லாம என்னை ஊர் போக வச்சது…என்ற பொழுது கார் குற்றாலத்தை தாண்டி மேலே மணிமுத்தாறை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தது…




கதையின் சுவாரசியமும் தங்கள் குடும்பம் இவ்வளவு மோசமானதா என்று நினைத்த பூபதிக்கு காரை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே இல்லை... கைகள் பாட்டிற்கு தானாக மணிமுத்தாறு நோக்கி சென்று கொண்டிருந்தது…




அப்புறம் என்ன ஆச்சி அங்கிள் என்று ராகா பதட்டத்தோடு கேட்டாள்... நான் போன ஒரு வாரம் கழிச்சு பூபதியோட அம்மா கிட்ட இருந்து ஃபோன் வந்தது…




ஒரே அழுகை எப்படி அண்ணா மாசமா இருக்கிற பெண்ணுக்கு எங்களால ஆபத்து வரும்னு நீங்க சொல்லலாம் நாங்க அந்த அளவுக்கு இரக்கமில்லாத மனுஷங்களா எங்களை நீங்க இப்படி அவமானப் படுத்தி இருக்க வேண்டாம்னு ரொம்ப பேசினா…




கடைசியில் கலை இருக்கிற மருத்துவமனையோட பேரை சொல்லிவிட்டு அவளை போய் பார்த்துக்கோன்னு சொன்னேன்…



சரியா இருபத்திநாலு மணி நேரம் கூட ஆகல மறுபடியும் காமாட்சி கிட்ட இருந்து போன்…. மருத்துவமனையில் பயங்கரமா தீ பிடிச்சிருச்சு... கொஞ்ச பேர் இறந்துட்டாங்க... அதுல நம்ம அண்ணியும் பொண்ணுன்னு சொன்னா உயிரே போயிடுச்சு அடிச்சு புடிச்சு இங்கே வந்து பார்க்கும்போது கரிக்கட்டையான கலையோட உடம்பை தான் என்னால பாக்க முடிஞ்சது …



பிரபல மருத்துவமனையில் தீ விபத்து கர்ப்பிணி பெண் உள்பட ஐந்து பேர் மரணம்னு சின்ன நியூஸோட முடிச்சிகிட்டாங்க…



பைத்தியம் பிடிக்காத குறைதான்... எப்படி ஆச்சு ஏன் ஆச்சுனு அந்த ஹாஸ்பிட்டல்ல எல்லாம் போய் பார்த்தேன் பவர் சர்க்யூட் ஆகியிருக்கு... நல்லாவே தெரிஞ்சுது... இவ்ளோ தான் நாம கொடுத்து வச்சதுன்னு மனசை தேத்திக்க ஆரம்பிச்சேன்…




கலை இறந்து பதினாறாவது நாள் காரியம் செய்யறதுக்காக நான் தாமிரபரணி படித்துறைக்கு போயிருந்தப்போ தெரிந்த காவலர் மூலமா அரசு மருத்துவமனைக்கு வரச்சொல்லி எனக்கு ஒரு அழைப்பு வந்திருந்தது.




எதுக்காக இருக்கணும் யோசிச்சுக்கிட்டே போனப்போ நெருப்புக் காயம் ஆனவங்களை பாத்துக்கற வார்டுக்கு கூட்டிட்டு போனாங்க …



அங்க உடல் முழுவதுமே வெந்து கருகி போய் வாழை இலையில் படுக்க வெச்சு வாழை இலையால் மூடி வைத்திருந்தாங்க...கடைசி மூச்சை விடறதுக்காக போராடிட்டு இருந்தாங்க...



அவங்களை பார்த்ததுமே நான் பயந்துட்டேன் ...யாருன்னு கேட்கவும் தான் சொன்னாங்க …நர்ஸ் சுதான்னு... அளவுக்கு அதிகமா நெருப்பு காயம் ஆனதால உயிர் பிழைக்கறது கஷ்டம்னு ‌சொன்னாங்க...ஆனா வாயை திறக்கும் போதெல்லாம் ராம்பிரசாத் கிட்ட பேசனும்னு மட்டும் சொல்லிருக்காங்க…ஆனா நான் அவர்கிட்ட பேசனுங்கற விஷயத்தை யார்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு கேட்டிருக்காங்க…



அவங்களோட காவலுக்கு இருந்த காவலரும் அவங்களோட அந்த வார்த்தைக்கு மதிப்பு கொடுத்திருக்கிறாரு.



அவங்க கண் விழிக்கும் போதெல்லாம் என்னை பற்றிய விஷயங்களை கேட்டிருக்காங்க... கலை எஸ்டேட் பத்தி சொல்லவும் அதை வச்சி காவலர் ரகசியமா தேடவும் என்னை சுலபமாக கண்டு பிடிச்சிட்டாங்க... ஆனா கண்டுபிடிக்க முழுசா பதினாறு நாள் எடுத்திருக்காங்க….




நடந்த தீவிபத்தில் சில பேரை காப்பாற்ற முயற்சி செஞ்சு அவங்களுக்கு அது போல தீக்காயம் ஏற்பட்டதா டாக்டர்கள் சொன்னாங்க…



தீப்பிடிக்கும்னு தெரிஞ்சும் கூட மத்தவங்களோட உயிரைக் காப்பாற்றுவதற்காக தீ காயத்தை வாங்கிட்டு கிடந்த அந்த தேவதையை பார்க்கும் போது தானாவே என்கைகள் அவங்களை பார்த்து கும்பிட்டது….



சுதா சிஸ்டர் நான் ராம்பிரசாத் வந்திருக்கேன்னு சொன்னதுமே என்னோட குரலை கண்டுபிடிச்சவங்க... திக்கித்திணறி பேச ஆரம்பிச்சாங்க…




உங்களுக்கு நான் வாக்குக் கொடுத்த மாதிரி உங்க மனைவியையும் குழந்தையையும் உங்க கையில என்னால ஒப்படைக்க முடியல அதுக்காக என்ன மன்னிச்சிக்கோங்க…



ஆனா உங்களுக்கு இப்போ ஒரு சந்தோஷமான செய்தி சொல்ல போறேன் ... நான் சொல்லப்போற விஷயத்தை நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது என் மேல் சத்தியம் பண்ணுங்கன்னு எடுத்ததுமே சத்தியம் கேட்டாங்க... நானும் சரி என் ஆயுள் இருக்கிறவரைக்கும் நீங்க சொல்ல போற ரகசியத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு சத்யம் செஞ்சேன்... அப்புறம் மெதுவா பேச ஆரம்பிச்சாங்க... உங்களுக்கு ஒரு பெண் குழந்தை ஆரோக்கியமா பிறந்தது சார்…


கடவுளே ….அப்போ அந்த பிஞ்சும் தீயில கருகிடுச்சானு நான் அழ ஆரம்பிச்சேன்…



இல்ல சார்...

உங்க குழந்தை சாகல... என்னைக்குமே அதுக்கு சாவும் வராது….இப்போ உயிரோட தான் இருக்கு... அதை நம்பிக்கையான ஒருத்தர் கிட்டனு சொல்ல சொல்லவே அவங்க உயிர் போயிடுச்சு….


யார்கிட்ட கொடுத்தீங்க... யார்கிட்ட கொடுத்தீங்கன்னு நான் ‌கத்த ஆரம்பிச்சேன்…

டாக்டர்க வந்து என்னை வெளியே அனுப்பிட்டாங்க…. என்னோட குழந்தை சாகல..

உயிரோட தான் இருக்கு அந்த ஒரு சந்தோஷம் எனக்கு மிகப்பெரிய நிம்மதியை கொடுத்தது…. இந்த விஷயத்தை என் கிட்ட சொல்றதுக்காகவே கிட்டத்தட்ட பதினாறு நாள் அந்த வெள்ளை உடுப்பு போட்ட தேவதை எனக்காக உயிரை கையில பிடிச்சிகிட்டு வேதனையோட வாழ்ந்துட்டு இருந்திருக்கு…




அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவும் அந்த தேவதையோட ஆத்மாவுக்கு நிம்மதி கிடைச்சிருச்சு ஆனா அந்த நிமிஷத்தில் இருந்து என்னோட நிம்மதி காணாம போயிடுச்சு...என்ற பொழுது கார் மாஞ்சோலை கிராமத்தை தொட்டிருந்தது…




அப்புறம் என்ன ஆச்சு அங்கிள் என்று கேட்கவும் அவருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது.




காரை நிறுத்தச் சொன்னவர் சில அடிகள் சென்று பேச ஆரம்பித்தார்.




பேசப்பேசவே அவரது முகத்தில் புது வித சந்தோஷம் ஒன்று காணப்பட்டது அதை நன்றாகவே ராகாவால் உணர முடிந்தது…
 
Last edited:
Top