கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -25

Akila vaikundam

Moderator
Staff member
25.வீட்டில் ஏதேதோ சத்தம் விடாமல் கேட்டுக்கொண்டிருக்க பூஜையறையில் இருந்த காமாட்சியின் தாயாருக்கு ஒரே மனநிலையில் இறைவனை வழிபட முடியவில்லை...ஏனோ காலையில் இருந்து இதயம் வேறு தாறுமாறாக துடித்துக்கொண்டிருக்கிறது…
மகளை பார்த்துவிட்டு வரலாம் என நினைத்தவர் காமாட்சியை தேடியபடி வெளியே வந்தார்.காமாட்சியை எங்கேயும் காணவில்லை…

எங்கிருப்பார் என தேடியபடி சமையலறைக்குள் வந்தார்.பணிப்பெண் சிவகாமி அங்கே இருக்க.. காமாட்சி எங்கே என விசாரித்தார்…


தெரியாது என சொன்னவர் வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.அப்பொழுது காமாட்சியின் தந்தை, பெரியம்மா, பெரியப்பா என அனைவருமே முன் அறையில் கூடி இருந்தனர்.காமாட்சியின் தந்தை தான் என்னன்னு தெரியல இன்னைக்கு சிதம்பரமும் வடிவும் இவ்வளவு வேகமா போறாங்க... வீட்டுக்குள்ள என்ன நடக்குது என்று அண்ணனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.அவர் கோபமாக எல்லாம் உன்னோட கெட்ட சகவாசத்தால் தான் வீட்டுக்குள்ள ஏதேதோ நடக்குது…
இன்னைக்கு மட்டுமா நடக்குது என்னைக்கு வடிவை நீ இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியோ அன்னையிலிருந்து வீட்ல எல்லாமே வித்தியாசமா தான் நடந்துகிட்டு இருக்கு .பலதடவை உன் கிட்ட படிச்சி படிச்சி சொன்னேன் ஒருதடவையாவது அண்ணனோட பேச்சை கேட்டியா என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.அவர்கள் சண்டையினை பொறுமையாகக் பார்த்துக்கொண்டிருந்த காமாட்சியின் தாயார் வள்ளியம்மை உங்க சண்டையை நீங்க அப்புறமா வெச்சுக்கோங்க ...கண்டிக்க வேண்டிய வயசுல தம்பியை கண்டுக்கல இப்போ அவரை கண்டித்து என்ன ஆயிடப் போகுது இப்ப என் பொண்ணை காணோம்...அவ எங்கன்னு பாருங்க காலைல இருந்து மனசே சரியில்லை என்றார்.


பெரியவர் உடனே அவரின் மனைவியிடம்...ஈஸ்வரி பசங்க எல்லாரும் வேலையை பாக்க கிளம்பியாச்சா…
ஆச்சிங்க...எல்லாருமே போகும் போது சொல்லிட்டு தான் போனாங்க...சரி மருமகள்களை ஒருத்தரையும் காணோமே எங்க...
மூத்தவ அவ அம்மா வீட்டுக்கு போறேன்னு இப்போ தான் என் கிட்ட சொல்லிட்டு போனா... இரண்டாவதுகாரி கடைக்கு போறேன்னு சொல்லிட்டு போனா …மிச்ச ரெண்டு பேரு வீட்டுக்குள்ள தான் எங்காவது இருப்பாங்க இருங்க கூப்பிடறேன்... என்றவர் மீதமிருந்த இரண்டு மருமகள்களின் பெயரைக் கூறி அழைத்தார்.
இளையவர் மருமகளான இருவருமே ஒன்று போல் அவர்களின் முன்பு வந்து நின்றனர்…காமாட்சியை எங்காவது பார்த்தீங்களா... ரொம்ப நேரமா ஆளையே காணோம் என்று கேட்க…காலைல சின்னத்தையும் அண்ணனும் மேல போனாங்க...அதை பாத்துட்டு காமாட்சியும் பின்னாடியே போனா…. அதுக்கப்புறம் கீழே வந்ததை நான் பாக்கலையே மாமா என்று கூறினார்.என்ன மேல போனவளை அதுக்கப்புறம் பாக்கலையா என்று யோசிக்க சமையலறையில் இருந்து சிவகாமி எட்டிப்பார்ப்பது தெரிந்தது.
உடனே சந்தேகமடைந்த வள்ளியம்மை சிவகாமி இப்படி வா என்று மிரட்டியபடி அழைத்தார்.
பயந்தபடியே வந்த சிவகாமி...சொல்லுங்கம்மா என்று கூறும் பொழுதே உடல் முழுவதும் வேர்த்து ஊற்றியது…எதுக்கு இப்படி பயப்படுற ஏதாவது என்கிட்ட மறக்கறியா... காமாட்சி எங்கன்னு உனக்கு தெரியும் தானே அப்புறம் ஏன் இல்லனு பொய் சொல்லற...இப்போ சொல்லபோறியா இல்லையா என்று மிரட்டிக் கேட்கவும் .
பயந்த சிவகாமி மேல சின்னய்யா ரூம்க்கு தான் போனாங்க ஆனா ரொம்ப நேரமா வெளியே வரவே இல்லை ... அம்மாவும் சின்னய்யாவும் வெளியே வரும் போது

காமாட்சி அம்மா வரல…அதான் நானும் பயந்துகிட்டு இருக்கேன்…அறிவில்ல உனக்கு... உனக்கு சம்பளம் தர்றது நாங்கதான் வடிவு கிடையாது ...எப்பவுமே வடிவு பேச்சை கேட்டுக்கிட்டு நீ ரொம்ப ஆடிக்கிட்டு இருக்கற உன்னை மாத்திக்கோ இல்ல மாத்த வேண்டியது இருக்கும் என்று கடிந்து கொண்ட காமாட்சியின் தாயார் நேராக காமாட்சியை அடைத்து வைத்திருக்கும் அறை வாசலுக்கு சென்றார் .அங்கே பூட்டு தொங்க என்ன செய்வது என பெரியவரை பார்த்தார்..


ஏன் வள்ளியம்மை தயங்கி நிற்கற.. காமாட்சி உள்ள போனத ஒன்னுக்கு ரெண்டு பேர் பார்த்து இருக்காங்க இன்னும் வெளிய வரலன்னா சந்தேகம் வருதில்ல...இது இப்பவும் நம்மளோட வீடு தான் தைரியமா பூட்டை உடை... என்ன நடக்குதுன்னு நான் பாத்துக்குறேன்...என்று தைரியம் கொடுக்கவும் வேலை செய்யும் ஆட்களை அழைத்து பூட்டை உடைத்தார் .அறைக் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்கவும் அதிர்ச்சியில் அனைவருமே ஒன்று போல கத்தி விட்டனர்.உள்ளே ரத்தவெள்ளத்தில் குற்றுயிரும் குலையுயிருமாக காமாட்சி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் .அவரிடத்தில் வேகமாக ஓடிச் சென்றவர்கள் என்னாச்சு யார் உன்னை இப்படி செஞ்சது என்று கேட்கவும்...கடினப்பட்டு விழி திறந்து தந்தையை பார்த்தவர்... நீங்க செஞ்ச பாவத்தை இன்னைக்கு நான் அறுவடை செஞ்சு இருக்கேன்ப்பா... என்னை யாரு இப்படி செஞ்சு இருப்பான்னு உங்களுக்கே தெரியும் என்று திக்கித் திணறியபடி கூறினார்...ப்பா... அது மட்டும் கிடையாதப்பா இத்தனை நாள் நம்ம வீட்டில் நடந்த அத்தனை குழப்பத்துக்கும் அவங்க தான் காரணம்... நீங்க கணக்கு வழக்கு இல்லாம செஞ்ச பாவத்துக்கு...இப்போ அவங்க கணக்கு பார்த்துட்டு இருக்காங்க... எனக்கு அவங்க மேல துளி கூட கோபம் வரல...உங்க மேலதான் கோபம் வருது இப்போ நான் அனுபவிக்கற இந்த வலி,வேதனை எல்லாமே உங்களால தான் ... தயவுசெய்து இங்கிருந்து போங்க...என்னை அமைதியா சாக விடுங்க…என்ன காமாட்சி என்னென்னமோ பேசுற உன்ன வழியனுப்பவா இத்தனை பேர் இருக்கும் உன்ன அப்படி எல்லாம் விட மாட்டோம் என்ற வள்ளியம்மை ஆட்களை கூப்பிட வெளியே ஒடினார்.
கோபம் கொண்ட சின்னவர் அவங்களை என்ன செய்யறேன்னு பார் என்று வேகமாக எழுந்தார்.
அந்த நேரத்திலும் தந்தையின் செயலை கண்டு புன்னகை வந்தது காமாட்சிக்கு….ப்பா... எப்பவுமே தானம் தர்மமா இருந்தாலும் சரி... பழிபாவமா இருந்தாலும் சரி அளவா செய்யனும்...அளவுக்கு மீறும் பொழுது இப்படித்தான்பா நாம விரும்பாததெல்லாம் நடக்கும்…நீங்க செஞ்ச பாவம் இப்போ எங்க வந்து நிக்குது தெரியுமா ராஜா அண்ணாவையும் அவர் மகளையும் கொலை பண்றதுக்காக வந்து நிக்குது என்று கூறவும்…அனைவருமே சந்தோஷம் கலந்த அதிர்ச்சியில் என்ன ராஜாவுக்கு மகளா என்று கேட்டனர்.ஆமா பூபதியோட வந்திருக்கிற பொண்ணு வேற யாரும் கிடையாது நம்ம ராஜா அண்ணணோட பொண்ணு தான்…


எல்லாரும் அண்ணன் அவர் பொண்ணை கூட்டிகிட்டு எஸ்டேட் போயிருக்காங்க... அவங்களை கொலை செய்ய சித்தியும் என் வீட்டுக்காரரும் போயிருக்காங்க...எப்படியாவது அவர்களை காப்பாற்றுங்க என்னை பத்தி கவலை படாதிங்க என்று கூறியபடி மயங்கிச் சரிந்தார்.அதற்குள் வள்ளியம்மை வீட்டில் வேலை செய்யும் பணியாட்களை அழைத்துவர இப்போது காமாட்சியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்தது.உடனே பெரியவரும் சிறியவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவரவர் மனைவிகளை அழைத்தனர் .
நாங்களும் எஸ்டேட் வரைக்கும் போய்ட்டு வர்றோம்…


நீங்க ஹாஸ்பிட்டல் போறதுக்கு முன்னாடி அங்க நம்ம பிள்ளைக நின்னுகிட்டு இருப்பாங்க...அவங்க உங்களை பாத்துப்பாங்க…ரெண்டு பேரை மட்டும் உங்க கூட வச்சிட்டு மீதி ரெண்டு பேரை ஃபேக்டரில வேலை செய்யற ஆளுகளை கூப்பிட்டுகிட்டு எஸ்டேட்டுக்கு வர சொல்லு நாங்க முன்னாடி போறோம் என்று கூறியவர்கள் வேட்டைக்கு உபயோகப்படுத்தும் துப்பாக்கியை ஆளுக்கு ஒன்றாக தூக்கியபடி காரில் ஏறி எஸ்டேட்டை நோக்கி பயணித்தனர்.

மற்றொரு காரோ காமாட்சியை அழைத்துக்கொண்டு மருத்துவமனை விரைந்தது.இங்கே மாஞ்சோலையில் ….ஃபோனில் பேசி முடித்த ராஜா சற்று குதுகலத்துடன் கார் அருகே வந்தார்...இப்பொழுது ராகாவும் பூபதியும் காரை விட்டு இறங்கியிருதனர்...கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை போர்வையை போத்திவிட்ட மிக அழகாக தேயிலைத் தோட்டங்களும் காப்பித் தோட்டங்களும் நிறைந்திருக்க அதன் அழகை துளி அளவுகூட ராகாவா ரசிக்க முடியவில்லை... ராஜாவின் கதையின் தாக்கம் அது…
பூபதியின் முகத்தில் அப்படியொரு இறுக்கம்...தனது தாத்தாவும் பெரியப்பாக்களும் எத்தனை அநியாயங்களை செய்து இருக்கிறார்கள்...இந்த தேயிலை தோட்ட மக்களுக்குத் இனியாவது கொஞ்சமேனும் நல்லது செய்ய வேண்டும் என்றபடி அந்த மலை கிராமத்தை உணர்ச்சியற்ற பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.என்னாச்சு அங்கிள்...யார் கிட்ட இருந்து ஃபோன் திடீர்னு இவ்வளவு சந்தோஷமா ஆயிட்டீங்க என்று ராகா காரில் சாய்ந்தபடியே அவரிடம் கேட்டாள்.
உடனே அவர் அதை அப்புறம் சொல்கிறேன் நான் உன்கிட்ட கதை சொல்லிட்டு இருந்தேனே எதுல நிறுத்தினேன் என்று கேட்டபடி காரில் பானட்டில் ஏறி அமர்ந்தார்.ராகாவும் அவரின் அருகே வந்து நின்றபடி... உங்க குழந்தையை பற்றி சொல்லிட்டு இருந்தீங்க…யெஸ்...ரைட்... என்றவர் கதையை மீண்டும் தொடர ஆரம்பித்தார்…


சுதா என்கிட்ட குழந்தை உயிரோடு இருக்குன்னு சொன்னதும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் கிடைத்தது அதேசமயம் அந்த குழந்தை எங்கு இருக்கும் யார்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சுக்க முடியாமல் ரொம்பவே தவித்துப் போனேன்…
விஷயத்தை வெளிப்படையாக எல்லார்கிட்டயும் சொல்லவும் முடியல ஏன்னா சுதா என்கிட்ட சத்தியம் வாங்கிகிட்டா... அந்த தேவதைக்கு கொடுத்த சத்தியம் கொஞ்சமாவது உயிர்ப்போட இருக்கணும்னு நினைச்சேன்‌…நான் மவுனமாய் இருந்ததால பழையபடி சொத்துக்கள் எல்லாமே என்னோட அப்பா கிட்டேயும் சித்தப்பாகிட்டயும் போச்சு ….அஸ்யூஸ்வல் சித்தப்பா பார்க்க வேண்டிய வேலைகள் எல்லாத்தையுமே பழையபடி பூபதியோட பெரியப்பாக்கள் பார்க்க ஆரம்பிச்சாங்க…என்னோட மைன்ட் ஃபுல்லா என் குழந்தை எங்க இருக்கா... எப்படி இருக்கா ...யாருகிட்ட இருக்கா அவளை எப்படி என்கிட்ட மீட்டுக் கொண்டுவர்றது மட்டும் தான் இருந்தது …
அது மட்டும் கிடையாது எனக்கு அடிக்கடி ஒரு கனவு வர ஆரம்பிச்சது .அதுல ஒரு குட்டி பொண்ணு பனிப் பிரதேசத்தில ரொம்ப சந்தோஷமா விளையாடிக்கிட்டு இருப்பா... அந்த குழந்தைய பார்த்துட்டு நான் பக்கத்துல போகும்போது என்னோட மனைவி என் பக்கத்துல வந்து இது நம்ம குழந்தைங்க நீங்க எப்போ வந்து இவளை உங்களோட கூப்பிட்டுகிட்டு போக போறீங்கனு கேட்பா….அப்படி கனவு வர்ற ஒவ்வொரு முறையும் நான் என் பெண்ணை தேடி ஒவ்வொரு பனிப் பிரதேசமாக போக ஆரம்பிச்சேன்…சிலநாள் தேடினதுக்கு அப்புறமா யோசிக்க ஆரம்பிச்சேன்... குழந்தை நம்பிக்கையான ஒருத்தர்கிட்ட இருக்கிறதா சுதா சிஸ்டர் சொல்ல வந்தாங்க…அப்படின்னா என்ன அர்த்தம்... குழந்தை பிறந்ததுமே பக்கத்துல நம்பிக்கையான ஒருத்தர் இருக்காங்க …அவங்க யாருன்னு தெரிஞ்சிக்க மறுபடியும் ஆஸ்பத்திரி பக்கம் போனேன்...ஆனா மருத்துவமனையோட பேரை‌ மாத்தி... ஹாஸ்பிட்டலை அறக்கட்டளையா மாத்தியிருந்தாங்க…எந்த உபயோகமான தகவலும் கிடைக்கல... யாருக்குமே தீ விபத்து அன்னைக்கு எந்த சுதாவோட யார் இருந்ததுன்னு தெரியல….

ஆனாலும் என் பொண்ணு என்னை தேடி என்கிட்ட வருவாள்னு நம்பினேன்…கொஞ்ச நாள் கழிச்சி... தீ விபத்து ஏற்பட்ட அன்னைக்கு அந்த மருத்துவமனையில இருந்த இன் பேஷண்ட்களை தேடி போக ஆரம்பிச்சேன்... ரெண்டு மூணு பேரை உடனே கண்டுபிடிக்கவும் செஞ்சேன்... அவங்ககிட்ட மருத்துவமனையில பர்டிகுலர்ரா யார் இருந்தாங்கன்னு...விசாரிச்சேன்...


வித்யானு ஒரு லேடி டாக்டர் பற்றி தகவல் தெரிந்தது... அவங்களை தேடி போகும் பொழுது அவங்க நாட்டை விட்டு எங்கயோ போய்ட்டாங்க...அவங்களை பத்தின ரெக்கார்ட் ஹாஸ்பிட்டல்ல ஒருத்தர் மூலமா கிடைச்சது...அதை வச்சி உலகம் பூரா இருக்கிற எல்லா மருத்துவமனைகளையும் தேட ஆரம்பிச்சேன்….உங்க பொண்ணு கிடைச்சாங்களா...அங்கிள் என்று ஆர்வமாக கேட்டாள்…
இல்ல ராகா... கடந்த இருபது வருஷமா என் பொண்ணை தேடி தேடி களைத்துப் போய்ட்டேன்... இனிமே அவ‌ எனக்கு கிடைக்கவே மாட்டான்னு... என நம்பிக்கையை இழந்து ஓய்ஞ்சு போய் உட்கார்ந்த நேரம் தான் ஒருத்தி என் வீடு தேடி வந்தா தேவதை மாதிரி …அப்படியே எனக்கு கலைவாணியை ஞாபகப் படுத்தினா...அவளை போலவே பேச்சு குணம்... எல்லாமே... அவளைப் பார்த்ததுமே என் உள்மனசு விடாம சொல்ல ஆரம்பிச்சுருச்சு …
நீ இத்தனை வருஷமா தேடித் திரிந்த உன் பொண்ணு தான் உன்னை தேடி உன்கிட்ட வந்திருக்கா அப்படின்னு..அதனால நான் கொஞ்சம் கூட தாமதிக்காம அவ என் பொண்ணா இல்லையான்னு தெரிஞ்சுக்க ஆசைபட்டேன்….
இன்னைக்கு மருத்துவத்துறையில் எத்தனையோ தொழில்நுட்பம் வந்துருச்சு ….அது மூலமா அந்தப் பெண்ணுக்கே தெரியாம‌ அவளை டெஸ்ட் எடுக்க வச்சேன்... எடுத்த கொஞ்ச நேரத்திலேயே அவதான் என் பொண்ணுனு சொன்னாங்க...என்ன செய்யறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் ராகா…இப்போ இந்த அப்பா என்னம்மா செய்யனும் என்று அவளின் கைகளை பிடித்து கேட்கவும் அதிர்ச்சி அடைந்தவளாக அவரின் கைகளில் இருந்து வேகமாக அவளின் கைகளை உருவிக் கொண்டாள்.பூபதி உன் அங்கிள் ஏதேதோ பேசறாங்க... அவர்கிட்ட சொல்லு அவரோட மகளா நான் இருக்க மாட்டேன்னு…என்னோட அப்பா ராம்பிரசாத் அம்மா காவ்யா... அவங்கதான் என் பேரண்ட்...
தயவு செஞ்சு உங்க பொண்ணுன்னு என்னை கற்பனை பண்ணாதீங்க அங்கிள்…என்று கூறும் பொழுதே பின்புறம் இருந்து மிக வேகமாக வந்த ஒரு சிறிய ரக கண்டெய்னர் லாரி ஒன்று அவர்களின் காரில் மோதியது முன் புறமாக நின்று பேசிக்கொண்டிருந்த மூவருமே கார் இடிக்கவும் நிதானமிழந்து ஆளுக்கொருபக்கமாக விழுந்தார்கள்.
அதே நேரம் லண்டனில் ராமும் கேசவ்வும் வீடு வந்தனர்... அவர்களைக் கண்டதும் பிரியா அதிர்ச்சி அடைந்து... கணவரிடம் என்னங்க ஊருக்கு போய்ட்டு திரும்பி வர பத்து பதினைஞ்சு நாள் ஆகும்ன்னீங்க... ஆனா இப்படி ரெண்டு நாள் முடியும்போது வந்திருக்கீங்க...என்று கேட்டார்.அவர் பதில் பேசாமல் ராம்மை பார்க்க...அது ஒன்னும் இல்ல பிரியா இங்க இருந்து போகும் போது ராகாவை திட்டிட்டேன்... அதுமட்டுமில்லாம

அழுதுட்டு வேற இருந்தா... நானும் கோபத்துல சொல்லிக்காமலே கிளம்பிட்டேன்…
அங்க போனதும் கண்ணை முடினாலே ராகா தான் வந்தா...பாவம் பொண்ணுக்கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லலையே துடிப்பாளேன்னு எனக்கு ஒரே கவலை...வேலையே ஓடல... அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்...என்றார்.
கணவரை பார்த்தவள் கோபமாக...ஏங்க வர்றதுக்கு முன்னாடி ஒரு ஃபோன் பண்ணனும்னு தோணலையா...தீடிர்னு வந்து நிக்கறீங்க… கான்ப்ரன்ஸ்ஸை பாதியில் விட்டுட்டு வந்திருக்கீங்களே உங்களை கேள்விகேக்க மாட்டாங்களா என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே குறுக்கிட்ட ராம் நல்ல கேளுமா எனக்கு தான் மனசு சரியில்ல என் பொண்ணை பார்க்கணும் போல இருக்குன்னு கிளம்பினேன்….
இவனும் கூடவே கிளம்பறான்….எவ்வளவோ சொல்லி பார்த்தேன்...நம்ம ஹாஸ்பிடல் நஷ்ட ஈடு கேட்கும் அதனால நீ இரு நான் போறேன்...நீயும் வந்தா உனக்கும் பிரச்சனை வரும்னு…இவன் ரொம்ப கூலா நீயே போகும்போது நான் மட்டும் இருந்து என்ன சாதிக்க போறேன்... ஹாஸ்பிடல் எவ்வளவு பெனால்டி போட்டாலும் நான் பாத்துக்குறேன்...உனக்காகறது எனக்கும் ஆகட்டும்னு கிளம்பிட்டான் என்று கூறியவர்…

சரி இப்போ ராகா எங்கே என்று கேட்டார்.உடனே பிரியா என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழிக்க ஆரம்பித்தார் .அவரே பதில் சொல்லும் விதமாக காலேஜ் போயிட்டாளா என்று கேட்டார் ஆம் என்பது போல் தலையை அசைக்கவும் காலையிலிருந்து அவளுக்கு நான் கூப்பிட்டுகிட்டே இருக்கேன் அவ ஃபோன் அட்டென்ட் பண்ண மாட்டேங்கறா...கோபம் போல...அவ உனக்கு ஃகால் செஞ்சா நான் வந்திருக்கிற விஷயத்தை சொல்லு அப்படியே என்கிட்டயும் பேச சொல்லு ப்ளீஸ் என்று கெஞ்சியபடி கூறியவர் அவரின் அறைக்குள் சென்றார்.பிரியாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை இவரின் அனுமதி இல்லாமல் பெண்ணை இந்தியா அனுப்பியாகிவிட்டது ...இவர் திரும்பி வர எப்படியும் பத்துப் பதினைந்து நாட்கள் ஆகும் அதற்குள் மகள் வந்து விடுவாள் என்று பார்த்தால் இப்பொழுது திடுதிப்பென்று வந்து நிற்கிறார் என்ன செய்வது என்று யோசிக்க ராகாவின் மொபைல் ஃபோன் சன்னமாக அதிர ஆரம்பித்தது…
உடனே ஓடிச்சென்று ஃபோனை எடுக்க ராம் தான் அவரின் அறைக்குள் இருந்தபடி ராகாவிற்கு அழைத்துக் கொண்டு இருக்கிறார்... நல்லவேளை ஃபோனை சைலன்ட் மற்றும் வைப்ரேஷன் மோடில் போட்டிருந்ததால் தப்பித்தோம் இல்லையென்றால் கையோடு மாட்டியிருப்பேன் இப்பொழுது என்ன செய்வது என குழம்பி தவித்தார்…அறைக்குள் இருந்த ராம் மீண்டும் மீண்டும் மகளுக்கு முயற்சித்துப் பார்த்தவர் பதிலில்லை என்றதும் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார் சாரி ராகா ப்ளீஸ் பிக்கப் மை போன் அப்பா உன் கிட்ட உடனே பேசணும்…அதை பார்த்ததும் பிரியாவிற்கு மேலும் பயம் தொற்றிக் கொண்டது…உடனே பூபதிக்கு அழைக்க ஆரம்பித்தார்...அவன் அழைப்பை ஏற்காமல் போக மீண்டும் மீண்டும் முயற்சித்தார்... அவன் எடுக்காமல் போக...

கணவரிடம் விஷயத்தை கூறி ராமை சமாளிக்கலாம் என நினைத்தபடி கேசவ்வை தேடிச் சென்றார்...
 
Top