கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

வாய்ப்பிருந்தால் வந்து போ -3

Akila vaikundam

Moderator
Staff member
3.



சார் தலைல வேற கட்டு போட்டிருக்கு தண்ணி பட்டா பிரச்சினை ஆகிடும் சார்…


ஆனா இப்போ என்ன சுதா ..
செத்து போய்டுவேன்னு பயப்படறீங்களா…?.அது நல்லதுதானே என் குடும்பத்துல ஒருத்தரும் இல்லை இனி நான் யாருக்காக வாழனும்... அப்படியே வாழ்ந்தாலும் மிச்ச காலத்துல பெருசா என்ன பண்ணிட போறேன் சொல்லுங்க‌..?


என்ன சார் இப்படி எல்லாம் பேசறீங்க... எத்தனையோ பேருக்கு தைரியம் சொல்லி வாழ்க்கையை கொடுக்கிறவர் நீங்க நீங்களே இப்படி பேசினா…


சுபா ப்ளீஸ் பழசு எதையும் என்கிட்ட பேசாதீங்க அப்படிப் பேசறதா இருந்தா நான் இப்படியே என் வீட்டுக்கு போயிடுவேன் எப்படி வசதி என்று அவரைப் பார்த்து கேட்கவும்…
எதுவும் பதில் பேசாமல் சுதா மருத்துவமனையை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தார்.


மருத்துவ மனையின் அருகே வரவும் ஏதோ வித்யாசம் இருவருக்கும் தெரிந்தது…



நெற்றியை சுருக்கி ராம் பார்க்கவுமே சுதா கண்டுபிடித்து விட்டார்…

என்ன இது ஹாஸ்பிடல் வாசல்ல இத்தனை வண்டிக நிக்குது...என்று ராமை பார்த்து கேட்கவும்…


ம்ம்...நானும் அதை தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்...ஏன் நம்ம ஹாஸ்பிடல் வாசல்ல இவ்வளோ வண்டி நிக்குது..
யாராவது விவிஐபி அட்மிட் ஆகிருக்காங்களா…?


இல்ல சார் நீங்க ஹாஸ்பிட்டலை சேல் பண்ணறதுக்காக பேச்சுவார்த்தை பண்றதால ரொம்ப செலக்டிவ்வான பேஷன்ட்டை மட்டும் தான் அட்மிட் பண்ணிட்டு இருக்கோம்...நியூ அட்மிஷன் போடறதில்லை அதும் விவிஐபி பேஷன்ட் சான்ஸ் இல்ல சார் என்று கூறி கொண்டிருக்கும் போதே அந்த நடுத்தர வயது பெண்மணி என் பொண்ண பாக்க தான் அவ புருஷன் வீட்டில இருந்து வந்து இருக்காங்கன்னு நினைக்கிறேன்...என்று வேகமாக உள்ளே சென்றார்.


என்ன சுதா இந்த அம்மாவ பாத்தா ரொம்ப ஏழ்மையா இருக்காங்க...பொண்ணை பாக்க இத்தனை கார்ல மனுஷங்களா...நீஜமாவே அந்த பொண்ணுக்கு உணவுல ஏதாவது கலந்து குடுத்தாங்களா...இல்ல சாப்பிட்டது எதும் ஒத்துக்காம இருக்கா…?
என்று கேள்வி எழுப்பினார்.




சாப்பிட்டது ஒத்துக்காம கூட இருக்கலாம் சார்…


அப்புறம் ஏன் அவங்க சொந்தக்காரங்க சாப்பாட்டில ஏதோ கலந்து கொடுத்துட்டாங்கனு அபாண்டமா பழி போடுறீங்க என்னை ஹாஸ்பிடல் வர வைக்கவா…?



அய்யோ சத்தியமா இல்ல சார் இந்த அம்மா தான் ... பொண்ணு வாந்தி பண்ணறதை பாத்துட்டு அவங்க சொந்தக்காரங்க சாப்பாட்ல ஏதோ கொடுத்துட்டாங்கனு சொன்னாங்க…என்று முகத்தில் பயத்தை வைத்தபடி சுதா கூறினார்.


அவரின் பயத்தை அசட்டை செய்த ராம் கோபமாக...என்னனு தீர விசாரிக்காம நீங்களா முடிவு பண்ணிட்டீங்க... என்னையும் வீட்டிலிருந்து ஹாஸ்பிடல் வரவச்சாச்சு...
சரி வாங்க பேஷன்டை பாக்கலாம் என்று பக்கவாட்டில் இருந்த கேட்டை நோக்கி சென்றார்.


ராமின் தாயார் நடத்திய மருத்துவமனை பிரசவத்திற்கு பெயர் பெற்றது... பிற்பாடு கணவருடன் சேர்ந்து பொது மருத்துவமும் பார்க்கப்பட்டது…

முன் பக்க வாயில் பெரியதாகவும்... மிகப்பிரமாண்டமாக இருக்கும்... அதனால் மருத்துவமனையின் முன்புறம் எப்போதுமே பரபரப்புடன் காணப்படும்... அடிக்கடி வந்து செல்லும் ஆம்புலன்ஸ்களும் நோயாளிகளின் வாகனங்களும் உள்ளே வருவதும் செல்வதுமாக இடைத்தை அடைத்தபடியே கடந்து செல்லும்...



போதாதற்கு பொது மருத்துவம் பார்க்க வருபவர்களோடு உடன் வருபவர்கள் வாயிலை அடைத்தபடி நிற்பதால் பிரசவம் பார்க்க வரும் மருத்துவர்கள் நேரடியாக உள்ளே செல்வது போல் பக்கவாட்டில் சிறிய ரக ஒரு வாயில் கதவை அமைத்திருந்தார்…


மருத்துவர்கள் மட்டுமே அதை பயன்படுத்தும் படி பார்த்துக் கொண்டார்... பிரசவ வலியில் துடிக்கும் பெண்ணை உடனடியாக மருத்துவர்கள் சந்திப்பதற்காக இந்த ஏற்பாடு... சில சமயங்களில் ராமின் தாயார் பிரசவம் பார்ப்பார்... பல சமயங்களில் உதவிக்கு வெளியிலிருந்து மருத்துவர்களும் வருவதுண்டு அதனால் மருத்துவர்கள் உதவிக்காக வரும் பொழுது பக்கவாட்டு சுவற்றோரத்தில் அவர்களின் வாகனத்தை நிறுத்தி விட்டு நேராக உள்ளே சென்று விடுவார்கள்...இம்முறை ராமும் பழக்க தோஷத்தில் பக்கவாட்டு வாயிலையே பயன்படுத்துவதற்காக செல்லவும்... முன் பக்கமே பெரியதாக கூட்டம் எதுவும் இல்லை.. உள் நோயாளிகளும் அதிக அளவில் இல்லை... ஆனாலும் ராம் செல்லதை தடுத்து நிறுத்த பயந்த சுதா அவரின் பின்னே செல்ல ஆரம்பித்தார்.



முன்பக்க வாயிற் கதவைத் தாண்டி மருத்துவமனையின் முன் பக்கம் வேகமாக சென்ற நடுத்தர வயதுப் பெண்மணி வந்து இருக்கும் ஆட்களை கண்டதுமே அதிர்ச்சியில் கண்களை விரித்தார்.



யாருமே அவரின் மகளை பார்க்க வந்த உறவினர்கள் போல் தெரியவில்லை ஏதோ கட்டப்பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை போல் தெரியவும் பயந்துபோய் வாயில் பக்கம் திரும்பிப்பார்க்க அங்கே ராமையும் சுதாவையும் காணவில்லை... பயந்தவர் வாயிலை நோக்கி திரும்ப ஆஜானுபாகுவான ஒரு மனிதர் அவரின் முன்பு வந்து நின்று எங்க போற...என்று மிரட்டினார்.



இல்ல பின்னாடி டாக்டர் வந்தாங்க...அவரை இப்போ காணோம் அதான் என்று பயத்தில் திக்கிய படி பேசினார்.


ஏண்டி உன் பொண்ணு பொழைக்க கூடாதுன்னு நாங்க போராடினா நீ அவளை காப்பாத்த ஆள் கூட்டிட்டு வர்றியா என்றபடி அவளின் பிடறிமுடியை வலிப்பது போல் பிடித்து கன்னத்தில் ஓங்கி ஒரு அறை வைத்தார்.


அந்த மனிதர் விட்ட அறையில் அவரின் ஒரு பக்க காது நொடியில் கேட்கும் திறனை இழந்தது...மறு கன்னத்தில் அறைய கையை ஓங்க பலங்கொண்ட மட்டும் அவரை தள்ளிவிட்டவர் மருத்துவமனைக்குள் வேகமாக ஒடினார்.


அடித்த மனிதர் ஒடும் பெண்மணியை துரத்துவதற்காக நகரவும் மற்றொருவர் அவரை தடுத்தார்…


விடு வேலு...உள்ள ஃபுல்லா நம்ம ஆளுக தான்..
எங்க போயிட போறா... நமக்கு இவ முக்கியம் இல்ல இவ பொண்ணு தான் முக்கியம்...அவ எங்கன்னு தேடலாம் என்றபடி மருத்துவ மனையில் உள்ளே சென்று ஒவ்வொரு அறையாக தேடத் தொடங்கினர்.


பக்கவாட்டில் வாயிற் கதவைத் திறந்த ராம் சைடாகவே நடந்து மருத்துவமனையில் பின்பக்க வாசல் வழியே உள்ளே நுழைந்தார்.



பின்னாலே கிட்டத்தட்ட ஒடிவந்த சுதா சார் நான் ஆபரேஷன் தியேட்டர் போயிட்டு எல்லாம் ரெடியான்னு பாத்துட்டு வர்றேன் என்றபடி வேகமாக உள்பக்கம் பார்த்து ஓடினார்.



ஏனோ ராமிற்கு தானாக கண்கள் கலங்கியது... தாய் இருக்கும் பொழுது இரவு பகல் பாராமல் எப்பொழுதுமே பரபரப்புடன் காணப்படும் மருத்துவமனை இது…


குறைந்தது ஒரு நாளைக்கு பத்திற்கும் மேலாகவே பிரசவம் பார்க்கபடும்...அதுமட்டுமின்றி முடிந்த அளவுக்கு சிசேரியன் என்னும் வார்த்தையை உபயோகப்படுத்தவே மாட்டார்‌.. மீறி அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மிகவும் மனக் கலக்கத்துடன் தான் கூறுவார்…அவரின் மறைவுக்குப் பிறகு இப்பொழுது அதிகப்படியாக சிசேரியன் மூலமாக குழந்தை பிறப்பதை ராமும் அறிவார் ஆனால் மருத்துவர்களிடம் அதைப்பற்றி பேச முடியாது...


தாயாரின் மறைவிற்குப் பிறகு சுதா தான் கிட்டத்தட்ட அனைத்தையும் பொறுப்புடன் பார்த்துக்கொள்வது கிட்டத்தட்ட ஹாஸ்பிடல்லை நிர்வகிப்பதிம் அவர் தான் ...மருத்துவம் பயிலா விட்டாலும் அதற்கென தனியாக ஒரு குழுவை அமைத்து மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவது அவசர காலத்தில் உதவிக்கு வெளியிலிருந்து மருத்துவர்களை வரவழைப்பதும் அவர்தான்... காவ்யா இறக்கும் வரை தாய் இருந்தபொழுது எப்படி நடந்ததோ அதே போல்தான் எல்லாம் ராமின் மேற்பார்வையில் நடந்தது... மனைவியின் மறைவிற்குப் பிறகு மருத்துவமனையில் மேற்பார்வை முற்றிலும் கைவிட்டுவிட்டார்.


இந்த அளவிற்கு இன்னும் மருத்துவமனை நடந்து கொண்டிருக்கிறது என்றால் அது சுதாவால் மட்டும் தான் அதை ராம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்... கண்கள் கலங்க மருத்துவமனையை கண்களால் சுற்றி பார்த்தவர் தாயின் அறையை நோக்கி சென்றார்.



ஆபரேஷன் தியேட்டருக்குள் வேகமாக நுழைந்த சுதா அந்தக் இடமே அலங்கோல பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்…


என்னாச்சு என்றபடியே சுற்றுமுற்றும் பார்க்க ஒரு பெட்டின் அடியில் தலையில் காயங்களுடன் பெண் மருத்துவர் அடிபட்டு கீழே கிடந்தார்.



அவரைக் கண்டதும் அருகில் சென்று அவரின் கைபிடித்து பார்த்தவர்...நிம்மதி பெருமூச்சி விட்ட படி அருகில் இருந்த குவளையில் இருந்த நீரை அவரின் முகத்தில் அடித்தார்…



டாக்டர் ... டாக்டர் கண்ணை திறங்க உங்களுக்கு ஒன்னும் ஆகலை... என்று கன்னத்தை தட்டி எழுப்பினார்.


மெதுவாகக் கண்களைத் திறந்த மருத்துவர் சுற்றிலும் பார்த்து பயந்த படியே சுதாவை கட்டிப் பிடித்தபடி அழ ஆரம்பித்தார் .



டாக்டர் பயப்படாதீங்க... என்ன ஆச்சு...ஏன் இந்த இடம் இப்படி இருக்கு... உங்களுக்கு எப்படி அடி பட்டது...பேஷன்ட் எங்க...அனஷீசியா குடுக்க ராம் சார் வந்துட்டாங்க...என்று கூறவும்..


அதுக்கு அவசியப்படாது சுதா அந்தப் பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வலி வந்துடுச்சு... இன்னும் கொஞ்ச நேரம் போனா நார்மல் டெலிவரி ஆய்டும் நினைச்சு ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண ஆரம்பிக்கும் போது ஒருத்தன் உள்ள வந்து என்னை அடிச்சி போட்டுட்டு அந்த பொண்ணை ஸ்டேச்சரோட தள்ளிட்டு போயிட்டான்…


என்னது பிரசவ வலில துடிக்கற பொண்ணை ஸ்டேச்சரோட தள்ளிப்போனாங்களா என்ன ஒரு மனிதாபிமானம் இல்லாத செயல் ..


ஆமா உங்க கூட துணைக்கு யாரும் இல்லையா என்று கேட்கவும்…


முனு பேர் இருந்தாங்க சுதா... ஆனா அவன் உள்ளே வந்ததுமே ரெண்டு பேர் அடிக்கு பயத்து ஓடி போயிட்டாங்க... நானும் கமலா அம்மாவும் கடைசி வரை போராடி பார்த்தோம் என்னை அடிச்சதும் நான் மயக்கம் போட்டுட்டேன் இப்போ கமலா அம்மாக்கும் அந்த பொண்ணுக்கு என்னாச்சுனு தெரியல சுதா... கொஞ்சம் சீக்கிரம் போய் தேடு என்று அந்த மருத்துவர் கூறினார்...



சரி டாக்டர் முதல்ல உங்களுக்கு பஸ்ட் எய்ட் தர்றேன்…


ப்ளீஸ் சுதா என்னை நான் பாத்துக்குறேன் முதல்ல பிரசவ வலியில துடிச்சிட்டு இருந்த அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு மட்டும் போய் பாரு என்று கெஞ்சவும்…


அவரை அங்கேயே விட்டு விட்டு ராமிடம் விஷயத்தை கூறுவதற்காக சுதா ஓடினார்.


பாதிவழியிலேயே எதன் மீதோ கால் பட்டு இடறி விட என்ன என்று பார்க்கவும் அதிர்ச்சியில் அவரின் வாய் தானாகவே அலற ஆரம்பித்தது…


ஆஆஆ...உடனே சுதாரித்தவருக்கு நொடியில் வேர்த்து கொட்ட வாயை கைக்கொண்டு பட்டென்று முடிக்கொண்டார்.


கால் இடறி விழுந்த இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி கமலாம்மா கிடந்தார் .



அவரின் அருகில் செல்லும் முன் அந்த இடமே ரத்தம் வழிந்தோட ஆரம்பித்திருந்தது.



சற்று முன் தான் அவரை யாரோ பயங்கரமான ஆயுதத்தால் உடல் முழுவதும் தாக்கப்பட்டு இருப்பது புரிந்தது.



கமலம்மா என்ன ஆச்சு என்று அருகில் செல்லவும் காலடித்தடங்கள் மருத்துவமனை எங்கிலும் கேட்பதுபோல் இருந்தது..

கமலாம்மா உங்களை யாரு இப்படி அடிச்சது...இருங்க நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணறேன் என்றபடி எழவும்
ஜீவன் இல்லாத அவரின் கை சுதாவை தடுத்தது.


வேணாம் என்பது போல் தலையசைத்தவர்...எல்லாமே அவங்களுக்கு தெரிஞ்சி தான் நடக்குது...என்று திக்கி திணறி கூறி முடித்தார்…



சரி வாங்க நாம வேற ஹாஸ்பிடல் போகலாம் ராம் சாரை கூப்பிடறேன் ‌என்று அவரின் பின்புறம் இருந்து அவரின் அக்குளுக்குள் கைவிட்டு தூக்க அவரின் உடல் தொய்ந்து விழ ஆரம்பித்தது…



கமலாம்மா உங்களுக்கு ஒன்னும் ஆகல நம்பிக்கையை விடாதீங்க நான் உங்களை காப்பாற்றுவேன் என்று பலம் கொண்ட மட்டும் அவரை இழுத்துச் செல்ல செல்லவே படிக்கட்டை நோக்கி கடினப்பட்டு கைதூக்கி காண்பித்தவரின் தலை முற்றிலும் தொங்கியது.



அப்படியே அமர்ந்த சுதா கமலா அம்மாவை மடியில் கிடத்தி அவரை உலுக்க ஆரம்பித்தார்... கமலாம்மா... கமலாம்மா என்வரின் மருத்துவ அறிவு புரிய வைத்தது...அவர் இறந்து விட்டார்…
இனி அடுத்து என்ன செய்வது... கர்ப்பிணிப் பெண் எங்கே…?தேவையில்லாமல் ராமை வேறு இங்கே அழைத்து வந்தாயிற்று... என்ன செய்வது என சுற்றி பார்க்கவும் காலடித் தடம் படிக்கட்டில் இருந்து இறங்கி வருவது தெரிந்தது... யார் என தெரியவில்லை... ஆனாலும் இந்த சமயத்தில் உயிரைப் பணயம் வைத்து இங்கேயே அமர்ந்திருப்பது முட்டாள்தனம் என புரியவும் அங்கிருந்து வேகமாக தவழ்ந்தபடி படிக்கட்டின் அடியில் சென்று ஒளிந்து கொண்டார்.



மூச்சை இழுத்து உள்ளே வைத்துக் கொண்டவர் மீறி வெளியே வந்துவிடக் கூடாது என்று கைக்கொண்டு மூக்கையும் வாயையும் அழுத்திப் பிடித்துக் கொண்டார்.



கண்கள் மட்டும் கமலாவை பார்க்க அவரின் கை விரல் படிக்கட்டை நோக்கியிருக்க..



தனக்குள்ளாகவே மனதிற்குள் பேசிக் கொண்டார்... படிக்கட்டு வழியா கீழ போனா அண்டர் கிரவுண்ட்...அது மருத்துவமனை பணியாளர்கள் வாகனம் நிறுத்தும் இடம்…
மேலே என்றால் நான்கு தளங்களுமே மருத்துவத்துறை சம்பந்தப்பட்டது... நோயாளிகள் தங்கும் அறை…



அதை விட்டால் மொட்டைமாடி அங்கே இரண்டு அறைகள் உண்டு அது விவிஐபி களுக்காக சிகிச்சை அளிக்கப்படும் அறை மிக பிரத்தியேகமானது…


எதை வைத்து படிக்கட்டை காண்பித்தார்... ஒன்று கீழேயோ அல்லது மேலேயோ போகச் சொல்கிறாரா இல்லை போகாதே என்று சொல்கிறாரா தெரியவில்லையே என்று குழம்பியபடியே பயத்துடன் படிக்கட்டின் அடியில் மேலும் ஒன்றினார் .


கீழிறங்கி வந்த உருவமோ கமலாம்மாவை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தது... அவரின் உடலில் இருந்து எந்த அசைவும் இல்லாமல் போக... செத்துட்டாளா...கிழவி என்று வாய்குள்ளாகவே ஒரு கெட்ட வார்த்தையை உதிர்த்தவன்.. எங்க கிழவி அவள ஓளிச்சி வைச்ச என்று மேலும் உதைத்தான்.

பிறகு அங்கிருந்து மருத்துவமனையின் வாயிலின் முன் பக்கமாகச் சென்றான்.


அவன் செல்லும் வரை பொறுமை காத்த சுதா அதன் பிறகு மூச்சை இழுத்து விட்டபடி வேகமாக ராமைத் தேடி ஓடினார்.
 
Top