[B][SIZE=6]4.[/SIZE][/B][/SIZE][/B]
[SIZE=6][B][SIZE=6][B]
தாயாரின் அறைக்குள் வந்த ராம் அவர் உபயோகப்படுத்திய பொருட்களை எல்லாம் வாஞ்சனையோடு தடவியபடியே அறையை சுற்றிலும் வந்தார்.. சுவற்றில் தாயும் தந்தையும் சேர்ந்து இருப்பது போல் புகைப்படம் ஒன்று மாட்டியிருக்க அதற்கு சந்தன மாலை ஒன்று அணிவிக்கப்பட்டு இருந்தது.
சிறிது நேரம் புகைப்படத்தின் முன்னே நின்றவர்
பிறகு தாய் அமரும் இருக்கைக்கு எதிர்புறமாக ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தார்... எதிரில் தாய் அமர்ந்து இருப்பது போல் கற்பனை செய்து கொண்டு என்னை மட்டும் ஏன் அம்மா விட்டு வச்சிருக்கீங்க... என்னையும் உங்களோடவே கூப்பிட்டுக்கோங்க அம்மா...தனியா என்னால இருக்க முடியல...என்று சொல்லும் பொழுது விழி தாண்டி கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது...
கண்ணீரை துடைக்க கூட சக்தியற்றவராக இருக்கையிலேயே கண்மூடி நன்கு சாய்ந்துகொண்டவருக்கு மருத்துவமனையின் உள்ளே தேவையில்லாத சத்தங்கள் கேட்பது போல் தோன்றியது…
ம்ச்...யாரு ஹாஸ்பிடல் உள்ள ஓடிபிடிச்சி விளையாடறது என்று கோபம் கொண்டவர் ரிசீவரை எடுத்து வரவேற்பரைக்கு அழைத்தார்.
ஏற்கனவே அங்கு இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால் ராமிற்கு எந்த ஓரு சத்தமும் கேட்கவில்லை.
உடனே ரிசீவரை கையில் வைத்துப் பார்த்தவர் முதல் தளத்தில் வைக்கப்பட்டிருக்கும் இன்டர்காம்விற்கு முயற்சி செய்தார் அங்கிருந்தும் எந்த ஒரு பதிலும் வராததைக் கண்டவர் இரண்டாம் தளம் மூன்றாம் தளம் நான்காம் தளம் என வருசையாக அழைத்து பார்த்தார்...யாருமே எடுக்கவில்லை என்றதும் இன்டர்காமின் நம்பரை ஒரு முறை சரிபார்த்தார்…
எந்த நம்பரும் மாத்தல எல்லாமே அதே நம்பர் தான் அப்புறம் ஏன் யாரும் எடுக்க மாட்டேங்குறாங்க..
ஹாஸ்பிடல் சுத்தி எதுக்கு இவ்வளவு சவுண்ட் என்று சலித்தவர்...ம்மா நீங்க போனீங்க...நம்ம ஹாஸ்பிடலோட டிசிப்ளினும் கூடவே போயிடுச்சி என்று பெற்றோர்களின் புகைபடத்தை பார்த்து கூறியவர்...பொறுப்பின்றி செயல்படும் ஊழியர்களை திட்டுவதற்காக வெளியே வந்தார்.
அப்பொழுது எதிர்புறமாக வேகமாக சுதா ஒடிவரவும்...ஏன் சுதா இப்படி ஒடி வர்றீங்க…
ஷ்ஷ்...சார் கத்தாதீங்க...முதல்ல உள்ள வாங்க என்று கை பிடித்து அறைக்குள் இழுத்தவர் கதவை வேகமாக சாத்தினார்
கைவிடுங்க சுதா… எதுக்காக கதவை சாத்தறீங்க முதல்ல கதவை திறங்க என்று மிரட்டும் தோணியில் சொன்னார்.
சார் ப்ளீஸ் கோபப்படாதீங்க... இங்கே நிலைமை சரியில்லை ... நாம இங்கிருக்கறது தெரிஞ்சா ரெண்டு பேருக்குமே ஆபத்து…
என்ன உளறிகிட்டு இருக்கீங்க சுதா நம்ம ஹாஸ்பிடல்ல நம்மளை யாரு என்ன செஞ்சிட முடியும்…
இல்ல சார் இது வேற…
ஏன் யாருக்காவது தப்பா ட்ரீட்மெண்ட் பண்ணி அவங்க சொந்தக்காரங்க பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்காங்களா என்று சந்தேகத்தோடு மேலும் கேள்விகளை கேட்டார்.
சார் அந்த மாதிரி எந்த தப்பும் நடக்கல…
அப்புறம் ஏன் இவ்ளோ பதட்டம்..முதல்ல நகருங்க நான் வீட்டுக்கு கிளம்பறேன் என்று கதவை திறக்க போனார்…
அப்பொழுது நடுத்தரவயது பெண்மணி வெளியில் இருந்து மகள் இருந்த அறைக்கு சென்றவர் அங்க அவர் இல்லாததை கண்டதும் பயந்து மகளைத் தேடியபடி இவர்கள் இருக்கும் அறைக்கு வெளியே ஒட உள்ளே அந்த சத்தத்தில் பயந்த சுதா ராமின் கையை கெட்டியாக பிடித்து தடுத்து நிறுத்தினார்.
கைய விடு...என்று குரலை உயர்த்தவும்…
ஷ்ஷ்...என்றவர் வாயின் மீது ஓற்றை விரலை வைத்து சத்தம் கொடுத்தவர் இப்போது கெஞ்சும் குரலில் கிசுகிசுப்பாக சார் உங்க கால்ல வேணா விழுறேன் தயவுசெஞ்சு கொஞ்ச நேரத்துக்கு கத்தாதீங்க சார் என்று கூறவும் இப்பொழுது கிசுகிசுப்பான குரலில் அவரும் எதுக்காக என்னை வெளியே போக வேணாம்னு சொல்லறீங்க..ஏன் கதவை திறக்க விட மாட்டேங்கறீங்க என்று பற்களைக் கடித்தபடி கேட்டார்.
அப்பொழுது பெண்ணை தேடி பார்த்து கண்டுபிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் மீண்டும் நடுத்தர வயது பெண்மணி அவர்களின் அறையை தாண்டி ஒட உள்ளே இருந்த சுதா வாயை பொத்தியபடி சுவற்றோடு ஒன்றினார்.
வேடிக்கை பார்த்த ராம் ம்கூம் இது வேலைக்கு ஆகாது…என்ன ஹாஸ்பிடல் வரவைக்கறதுக்காக மிகப் பெரிய பிளான் போட்டீங்க அதை சக்ஸஸ்ஃபுல்லா நடத்தியும் காமிச்சிட்டீங்க…
நீங்க சொன்ன மாதிரி இன்னைக்கு எந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் இங்க இல்ல ...அந்த பொண்ணுக்கு அனஷிசியா கொடுக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லனு புரிஞ்சு போச்சு என்றவர் கதவைத் திறந்தபடி பின் பக்க கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
ஓடிக்கொண்டிருந்த பெண்மணி கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க அறைக்குள் இருந்து ராம் வேகமாகவும் பின்னால் கெஞ்சியடியே சுதாவும் செல்ல நெஞ்சில் கைவைத்துப் பெருமாளே என்று கடவுளை வேண்டியபடி அவர்களின் பின்னால் ஓட வர ஆரம்பித்தார்.
சார் ப்ளீஸ் கொஞ்சம் நான் சொல்லறதை காது குடுத்து கேட்டுட்டு வெளியே போங்க சார் என்று கூறும் பொழுது ராம் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து நின்றார்.
சரி சொல்லுங்க என்று கேட்கவும் மருத்துவமனையின் வெளிபக்கமெங்கும் காலடி சத்தங்கள் கேட்டது...உடனே சுதா ராமை வெளிப்பக்கம் இருட்டு பக்கமாக இழுத்துச் செல்ல ஓடி வந்து கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியை கண்ணில்பட்ட அறைக்குள் புகுந்து கொண்டார்.
சுதா போதும் உங்களோட கண்ணாமூச்சி விளையாட்டை இத்தோட நிறுத்துக்கீங்க என்ன விஷயம்னு எனக்கு இப்போ முதல்ல இருந்து சொல்லுங்க…ஏன் ஹாஸ்பிடல் சுத்தி ஏதோ அசௌகரியமான சத்தம் கேக்குது...என்ன நடக்குது இங்க…
சார் நானும் அதைத்தான் சார் சொல்ல வர்றேன் நீங்கதான் இதுவரைக்கும் காது குடுத்து கேக்கறதில்ல…
இப்போ கேக்கறேன் மேலே சொல்லுங்க என்பது போல் முறைத்தபடியே சுதாவை பார்த்தார்.
சார் இப்போ நம்ம ஹாஸ்பிடல் நம்மளோட கட்டுபாட்டுல இல்ல...ஐமீன் இங்க வொர்க் பண்ணறவங்க, டாக்டர்ஸ் கைல இல்ல... அடையாளம் தெரியாத ரவுடிக கைக்கு போயிடுச்சி…அவங்க நம்ம கமலாம்மாவை அடிச்சி கொன்னுட்டாங்க...என்று கண்கலங்கினார்.
என்ன என்று அதிர்ச்சி அடைந்த ராமிடம்…
இன்னும் அவங்க நம்மளை பாக்கல...சொல்ல போனா நாம பேக் டோர் வழியா வந்ததால அவங்களால நம்மளை பாக்க முடியல…அதனால தான் நாம இப்போ உயிரோட இருக்கறோம்…
யார் அது...நம்மளோட ஹாஸ்பிட்டலுக்குள்ள வந்து நம்மளோட ஸ்டாப்பையே அடிச்சு கொன்னு இருக்காங்க இதுல நாம தப்பிச்சிட்டோம்னு பெருமையா வேற பேசிட்டு இருக்கீங்க... போலீசுக்கு ஃகால் பண்ணலையா…?.
இல்ல சார் இதெல்லாம் போலீசுக்கு தெரிஞ்சி தான் நடக்குது..
அப்போ இங்க இருந்த பேஷன்ட்டோட நிலமை…
சார் பெருசா நம்ம ஹாஸ்பிடல்ல பேஷன்ட் கிடையாது... ரொம்ப நாளாவே வெறும் வெளி நோயாளிகளை மட்டும் தான் பார்த்துகிட்டு இருக்கோம்...அப்புறமா கர்ப்பிணி பெண்கள் அவங்களும் அதிகமா இல்ல ஏதோ நல்ல நேரம்... கடந்த ஒரு வாரமா யாரும் அட்மிட் ஆகல... அட்மிட் ஆனவங்களையும் ஒவ்வொருத்தரா டிஸ்சார்ஜ் பண்ணிட்டு இருக்கறோம்... மூனாவது மாடியில மட்டும் ரொம்ப குறைஞ்ச பேஷன்ட் இருக்காங்க... ஆனா அவங்களும் இந்த நேரத்துல தூங்கிட்டு இருப்பாங்க…
சரி நம்மளோட ஸ்டேஃப்ஸ்…
சார் அவங்க எல்லாரையுமே ரவுடிக அடிச்சு விரட்டிட்டாங்க போல..
ஆபரேஷன் தியேட்டர்ல வித்யா டாக்டரை பார்த்தேன்... அவஙகளும் கமலா அம்மாவும் தான் ரவுடிகளோட சண்டை போட்டிருக்காங்க...டாக்டருக்கு தலைல அடிபட்டிருக்கு...அப்புறம் நம்மளோட கமலா அம்மா... என்று கூறும் பொழுதே மீண்டும் கண்கலங்கினார் .
ஏன் இதெல்லாம் நம்ம ஹாஸ்பிடல்ல நடக்குது...நாம யாரோடயும் வம்புக்கு போறதில்லையே... ஹாஸ்பிட்டலை வாங்கறதுக்காக வந்தவங்க கிட்ட கூட நான் பேரம் பேசலையே... அவங்க அடிமாட்டு விலைக்கு கேட்டப்ப கூட சரின்னு ஒத்துக்கிட்டேன் அப்புறம் எங்கிருந்து நமக்கு எதிரிக முளைத்தாங்க…
சார் இப்போ வந்திருக்கிற ரவுடிகளுக்கும் நமக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது அவங்களோட டார்கெட் நாம இல்ல …
நான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க கிட்ட உதவிகேட்டு வந்தேன்ல அந்த பொண்ணு அவங்களுக்கு தேவை…
சர்ஜரி பண்ணனும்னு சொன்னீங்களே அந்த பொண்ணா…
ஆமா சார் அந்த பொண்ணு தான்...அவங்களுக்காக தான் நம்மளோட கமலாம்மா உயிரை விட்டாங்க…
அவங்க ஒருத்தருக்காக ஹாஸ்பிட்டலையே ஒன்னும்மில்லாம ஆக்க போறீங்களா…?
அந்த பொண்ணை அவங்க கைல குடுத்துட்டா போயிட போறாங்க...எதுக்காக இவ்ளோ பிரச்சினை...ஆமா இப்போ அந்த பொண்ணு எங்க…?
தெரியல சார்...ஆனா கமலாம்மா கடைசியா படிக்கட்டை கை காட்டினாங்க…
ஒன்னு அண்டர்கிரவுண்ட்ல அந்த பொண்ண சேஃப்பா ஒளிச்சு வச்சு இருக்கணும் அப்படி இல்லன்னா மேல இருக்கிற நாலு ப்ளோர்ல ஏதாவது ஒரு ரூம்ல அந்த பொண்ணை பாதுகாப்பா வெச்சிருக்கணும் எனக்கு என்ன தோனுதுன்னா... அண்டர் கிரவுண்டுல பொண்ணு இருக்கும்னு மனசு சொல்லுது..
அப்போ என்ன பிரச்சினை அந்த பொண்ணு தேடி அவங்க கைல ஓப்படச்சிட்டா ரவுடிக இங்கிருந்து போக போறாங்க... நம்மளோட ஹாஸ்பிட்டல் நம்ம கைக்கு வந்திட போகுது…
அதெப்படி சார் நம்மளை நம்பி வந்துருக்காங்க... அவங்க உயிருக்கு ஆபத்துனு தெரிந்தும் ரவுடிக கையில ஒப்படைக்க முடியும்..
அப்ப ஒன்னு பண்ணுங்க சுதா அந்த பொண்ணுக்கு பாதுகாப்பா நீங்களும் இங்கேயே இருங்க நான் இங்கிருந்து கிளம்புறேன் …
அப்படி சொல்ல கூடாது சார் நீங்க ஒரு டாக்டர் உங்க கடமையிலிருந்து நீங்க தவறவே கூடாது…
அதெல்லாம் என் மனைவி சாகும் போதே எல்லாம் காணாம போயிடுச்சு...இப்போ எப்படா இந்த நாட்டை விட்டே போகலாம்னு எதிர்பார்க்கற சாதாரண ஒரு மனுஷன் அவ்ளோ தான்…
என்ன சார் இது உன்கிட்ட சொன்னா உதவுவீங்கன்னு உங்கள தேடி ஓடி வந்தா நீங்க இப்படி பேசுறீங்க…
நான் உங்களுக்கு உதவறேன்னு எப்போ வாக்கு தந்தேன்... நீங்களா என்ன கட்டாயப்படுத்தி வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் இழுத்துட்டு வந்தீங்க... அது மட்டுமில்லாம இப்போ தேவையே இல்லாம ரவுடிக கிட்ட என்னையும் சேர்த்து மாட்டி விட பாக்குறீங்க.. நான் கிளம்புறேன்...என்று அங்கிருந்து கிளம்பினார்.
ப்ளீஸ் சார் சொன்னா கேளுங்க... அவசரப்படாதீங்க...பத்து நாளைக்கு முன்னாடி அவங்க ஹஸ்பண்ட் கூட நம்பிக்கை இல்லாம தான் இங்க வந்து அட்மிட் பண்ணினாரு…
என் மனைவியை பத்திரமா பாத்துப்பீங்களா உங்களை நம்பித்தான் இங்க விட்டுட்டு போறேன்னு சொன்னாரு…
அவர் கிட்ட நீங்க வரும்போது மனைவியையும் குழந்தையையும் பத்திரமாக உங்க கையில் ஒப்படைக்க வேண்டியது எங்க ஹாஸ்பிட்டலோட கடமை அதை நான் முழுசா செய்வேன்னு வாக்கு கொடுத்து இருக்கேன்…
இப்போ அந்த பொண்ணுக்கும் குழந்தைக்கும் ஏதாவது ஆயிடுச்சின்னா அவருக்கு நான் கொடுத்த வாக்கு ஒன்றுமில்லாம ஆகிவிடும் அது மட்டும் இல்லாம நம்ம ஹாஸ்பிடல் பேரும் கெட்டுப் போயிடும் சார்…
வாக்கு குடுத்தது உங்களோட தப்பு சுதா அவர் மனைவிக்கு பாதுகாப்பு இல்லைனு தெரிஞ்சதால தானே டெலிவரி டேட்டுக்கு முன்னாடியே இங்க கொண்டு வந்து சேர்த்திருக்கிறாரு….நீங்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு அட்மிட்ஷன் போட்டீங்க …
இப்போ நீங்க அனுபவிக்கிறதோட இல்லாம நானும் சேர்ந்து அனுபவிக்கனுமா என்னால முடியாது.
ஏன் ராம் சார் மக்களோட உயிரை காப்பாத்தற படிப்பை படிச்சிட்டு இப்படி பொத்தாம் பொதுவாக பேசுறீங்க... அந்தப் பொண்ணு இங்க இருந்தா தான் பாதுகாப்பாக இருப்பான்னு நம்பி தான் நம்ம ஹாஸ்பிடல் தேடி வந்து இங்க சேர்த்துட்டு போயிருக்காங்க அந்த நம்பிக்கையை நாம உடைக்கணுமா சொல்லுங்க…
ம்ம்… நல்லாவே பேசுறீங்க சுதா நீங்க சொல்றத பாத்தா அந்த பொண்ணு பத்து நாளைக்கு முன்னாடி தான் முதல் தடவையா நம்ம ஆஸ்பிட்டலுக்கே வந்த மாதிரி தெரியுது... அந்த பொண்ணு ரெகுலரா நம்ம ஹாஸ்பிடல் வந்தது இல்லையா... என்று மிரட்டி கேட்கவும்…
ஆமா டாக்டர் அவங்க பத்துநாள் முன்னாடி தான் நம்ம ஹாஸ்பிடலுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்தாங்க…
உடனே நீங்க காசுக்கு ஆசைப்பட்டு அட்மிஷன் போட்டாச்சு எப்படியும் இந்த ராம் இந்த ஹாஸ்பிடல் விட்டுட்டு ஒரேடியா ஓடிப் போய்டுவான் அதுக்குள்ள இந்த ஹாஸ்பிடல் இருந்து எந்த அளவு பணத்தை அடிக்க முடியுமோ அந்த அளவு பணத்தை அடிச்சிட்டு செட்டில் ஆயிடலாம்னு நீங்களும் முடிவு பண்ணிட்டீங்க அப்படித்தானே…
சார் ப்ளீஸ் வாய்க்கு வந்த படியெல்லாம் பேசாதீங்க அந்த பொண்ணை இங்க கூட்டிட்டு வந்தபோ நான் ரொம்ப யோசிச்சேன்… நிறை மாசமா இருக்கிற பொண்ணுக்கு எப்படி அட்மிஷன் போடுறதுன்னு ஆனா அந்த பொண்ணோட கணவர் ஒரு விஷயத்தை சொன்னாரு... அது தான் என்னை மறுத்து பேச முடியாத அளவுக்கு அட்மிஷன் போட வைச்சது... அவரோட அம்மாவுக்கு உங்க அம்மா தான் பிரசவம் பார்த்து இருக்காங்க... அவரும் இதே ஹாஸ்பிடல்ல தான் பொறந்திருக்காரு...சொல்லப் போனா அவங்க அம்மாவோட பிரசவம் பயங்கரமான சிக்கல்ல இருந்ததாம்... உங்க அம்மாதான் தைரியம் சொல்லி சுகப்பிரசவமா அவரை வெளியே எடுத்தாங்களாம்...
அதனால அவரோட குழந்தையும் இந்த ஹாஸ்பிட்டல்லயே பிறக்கனும்னு அவர் விரும்பினார் அதை என்கிட்ட செல்லும் போது எப்படி சார் மறுக்க முடியும்…
முதல் தலைமுறையும் இரண்டாம் தலைமுறையும் நம்ம மருத்துவமனையில பிறக்கிறது நமக்கு தானே பெருமை... அதனாலதான் அட்மிஷன் போட்டேன் சார்…
நீங்க ஆயிரம் சொல்லுங்க சுதா...நீங்க சொல்லற எந்த காரணத்தையும் என்னால ஏத்துக்க முடியாது யாரோ ஒரு பொண்ணுக்காக நம்மளோட உயிரை பணயம் வைக்க நான் தயாரா இல்ல…
நான் போய் முன்னாடி இருக்கிற ரவுடிக கிட்ட அந்த பொண்ணு படிக்கட்டு பக்கத்துல தான் எங்கயோ இருக்கறான்னு சொல்லிட்டு கிளம்ப போறேன் இனிமே ஹாஸ்பிட்டல் சம்பந்தமாகவோ இல்ல வேற எது சம்மந்தமாகவும் நீங்க என்கிட்ட வந்து பேச வேண்டாம் என்று கூறியவர் வேகமாக ஹாஸ்பிட்டலுக்குள் நடக்க ஆரம்பித்தார்.
ப்ளீஸ் சார் சொன்னா கேளுங்க சார் என்று கெஞ்சியபடியே சுதா பின்னால் ஒடி வர இப்பொழுது அந்த நடுத்தர வயது பெண்மணியும் இவர்கள் இருவரையும் பார்த்து இவர்களை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்.
[/B][/SIZE]
[B][SIZE=6][/SIZE][/B][/SIZE]
[B][SIZE=6]
[/B]