6.[/SIZE][/B][/SIZE][/B]
[SIZE=6][B][SIZE=4][/B][/SIZE]
[SIZE=6]
[B][B]குழந்தையை இருவருமே எடுத்துக்கொண்டு மருத்துவமனையின் பக்கவாட்டு கேட்டை நெருங்கும் போது கலையின் தாயார் பயங்கரமாக தாக்கப்படும் சத்தம் இருவருக்கும் கேட்டது…
ராம் இப்பொழுது துணிந்து முன் செல்ல சுதா அவரின் கைப்பிடித்து தடுத்தார்.
சார் வேணாம்... இதெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி தான் அவங்க ரிஸ்க் எடுத்தாங்க இப்போ நீங்க போனா ஆபத்துல மாட்டிப்பீங்க…
என்ன சுதா பேசறீங்க இவ்ளோ நேரம் அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்காக அவ்வளவு தூரம் பேசிட்டு இப்போ அந்தம்மா தாக்கப்படுவதை பார்த்துட்டு போக வேணாம்னு தடுக்கறீங்க…
அப்போ எனக்கு இந்த குழந்தையோட வேல்யூ தெரியல ஆனா இப்போ தெரிஞ்சிடுச்சி…. இந்தக் குழந்தையை காப்பாற்ற தான் கமலாம்மா உயிரை விட்டாங்க…. இப்போ இந்த குழந்தையோட பாட்டி தெரிஞ்சே அவங்ககிட்ட மாட்டிகிட்டாங்க… இதெல்லாம் தெரிஞ்சும் நீங்க போனா கமலாம்மாவோட உயிர்த்தியாகமும் இப்போ அடி வாங்கற கலையோட அம்மாவோட தியாகத்துக்கும் அர்த்தமில்லாம போய்டும் அதான் தடுக்கறேன்…
இல்ல சுதா கண்ணு முன்னாடி ஒரு பொம்பளையை போட்டு அடிக்கறதை பாத்துட்டு சும்மா போனா நான் ஆம்பளையே கிடையாது...என்று அவர் கிளம்பும் போதே கலையின் தாயாரை கீழே தள்ளி தாக்கிக்கொண்டிருந்தவன் கோபத்தில் நீ சொல்ல வேணாம் நாங்களே அந்த குழந்தையை தேடிக்கறோம் என்று கூறியபடி...
கையிலிருந்த துப்பாக்கியை கொண்டு கண்மண் தெரியாமல் சுட ஆரம்பித்தான்…
மிகப்பெரிய சத்தத்தோடு கலையின் தாயார் உயிரை விட சுதாவோ சார் நீங்க அங்க போக வேணாம்…
அவங்க கைல துப்பாக்கி இருக்கு... இப்போ போனா நாம மூனுபேருமே உயிரை விடனும்…முதல்ல இந்த குழந்தையை எடுத்துகிட்டு இங்கிருந்து கிளம்புங்க…
என்ன சுதா சொல்றீங்க இந்த குழந்தையை நான் எடுத்துகிட்டு போகனுமா…?
ஆமா சார் இந்தக் குழந்தையை நீங்க தான் எடுத்துகிட்டு போகனும்…
புரியாம பேசாதீங்க சுதா பிறந்த குழந்தையை நான் எப்படி எடுத்துக்கிட்டு போக முடியும் அதுவும் இல்லாம நான் இந்த நாட்டை விட்டு இன்னும் கொஞ்ச நாள்ல போகப்போறேன் அப்படி இருக்கும்போது இந்த குழந்தையை நான் எடுத்துக் கொண்டு போய் என்ன செய்ய முடியும்... நீங்க அந்தக் குழந்தையோட சொந்தக்காரங்க யாருன்னு பார்த்து நாளைக்கு காலைல இந்த குழந்தையை அவங்க கைல ஓப்படச்சிடுங்க..
சார் இப்ப நீங்க தான் புரியாம பேசிட்டு இருக்கீங்க... கொஞ்சம் யோசிச்சு பாருங்க நிறைமாத கர்ப்பிணியின் தெரிஞ்சும் கூட இந்த குழந்தையோட அம்மாவுக்கு விஷம் கொடுத்து இருக்காங்க அது மட்டுமில்லாம இந்த குழந்தை பிறக்கவே கூடாதுனு ஹாஸ்பிடலுக்கு ரவுடிகளை அனுப்பி அராஜகம் பண்ணிக்கிட்டு இருக்காங்க …
எந்த நம்பிக்கையில் இந்த குழந்தையை அதோட சொந்தகாரங்க கிட்ட ஒப்படைக்க முடியும் சொல்லுங்க... அதுமட்டுமில்லாமல் இப்போ இந்த குழந்தை என் கையில இருந்தா இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க இருக்கிற ரவுடிக எப்படியாவது மோப்பம் பிடிச்சிட்டு வந்து என்னை கொன்னுடுவாங்க இந்த குழந்தையையும் கொன்னுடுவாங்க... உங்க கிட்ட இருந்தா அட்லீஸ்ட் இந்த குழந்தை மட்டுமாவது பிழைக்கும்..
அப்போ உங்களுக்கு ஆபத்துன்னு தெரிஞ்சே உங்களை இந்த இடத்துல விட்டுட்டு போகணும்னு சொல்ல வரீங்களா…?
அப்படி சொல்ல வரல சார் நாளைக்கு இந்த குழந்தையோட அப்பா இங்கே தேடி வருவாரு…அப்போ அவர் கிட்ட உங்க மனைவி இறந்துட்டாங்க உங்க குழந்தை உயிரோடு தான் இருக்குன்னு சொல்லறதுக்காகவாவது இங்கே ஒருத்தர் இருக்கணும் இல்ல அந்த ஒருத்தரா நான் இருக்கிறேன் சார்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]வித்யா டாக்டர் இந்த வரப் போறது இல்ல கமலா அம்மாவும் நம்மளை விட்டுட்டு போய்ட்டாங்க இப்ப இந்த குழந்தையோட பாட்டியும் இறந்துட்டாங்க... அப்படி இருக்கும் போது இந்த குழந்தையை பத்தின தகவலை அவருக்கு யார் சொல்லறது...கலை கடைசியா பேசினதை கேட்டீங்க தானே... இது கொத்தடிமையாக வாழற மக்களுக்கு இந்தக் குழந்தைதான் விடிவுகாலம் அப்படிங்கிறது போல….[/B][/B][/B][/B]
[B][B][B][B]அப்படியிருக்கும்போது தெரிஞ்சே எப்படி சார் இந்த குழந்தையை நாம விடமுடியும்...இவ அம்மா, கமலா அம்மா, இவளோட பாட்டி இப்படி மூணு பேர் இவளுக்காக அவங்க உயிரை தியாகம் பண்ணி இருக்காங்க அவங்களோட உயிருக்கு மதிப்பு குடுக்கவாவது இவளை இந்த ரவுடிகள் கண்ணில படாத மாதிரி பாத்துக்கனும்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]நீங்க வந்ததை யாரும் பாக்கல அதே மாதிரி போறதையும் யாரும் பார்க்க போறதில்லை... ஆனால் நான் இங்கிருந்த விஷயம் எல்லாருக்கும் தெரியும் ...தீடிர்னு நான் இங்கிருந்து காணாம போயிட்டா குழந்தையை நான் தான் தூங்கிட்டு போயிட்டேன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடுவாங்க அதுக்கப்புறம் எல்லாமே வீணா போயிட்டு ப்ளீஸ் சார் குழந்தைகள் எடுத்துக்கிட்டுப் போங்க என்றார்
இப்பொழுது குழந்தை பசியில் சினுங்க ஆரம்பிக்கவும் மீண்டும் அதை நெஞ்சில் சாய்த்து தட்டிக் கொடுத்தவர் சொன்ன கேளுங்க சார் குழந்தை பசியால அழுதா நாமளே இருக்கிற இடத்தை சொல்லி கொடுத்தது போல ஆகிடும் என்று படபடப்புடன் கூறினார்.
இல்ல சுதா நான் தனியா எப்படி...அதும் பொறந்த குழந்தையை... கண்டிப்பா முடியாது...ஒன்னு நீங்க எடுத்துட்டு போங்க...இல்ல வேற யாருக்காவது தாங்க…
சார் இந்த குழந்தையை வேற யாருக்காவது குடுக்கனும்னா கூட அதுக்கு டைம் வேணும்... இப்போ அது நம்ம கிட்ட இல்ல…நிரந்தரமா உங்களோட வச்சிக்க சொல்லல...
இவ அப்பா இங்க தேடி வர்ற வரைக்கும் தான்...அவர் வந்துட்டா குடுத்துட்டு நீங்க உங்க வேலையை பாக்கலாம்... தற்சமயம் எடுத்துட்டு போங்க... நான் பின்னாடியே வந்து குழந்தையை வாங்கிக்கறேன்...ப்ளீஸ் சார் கிளம்புங்க... என்று போராடி அவரை அனுப்ப முயற்சித்தார்.
சுதாவை விட்டு செல்வதில் அவருக்கு மனமே இல்லை...
சரி சுதா நீங்களும் கூட வாங்க... யார் வந்தாலும் நான் பாத்துக்கறேன்…
இல்ல சார்... நான் வராம இருக்க ரெண்டு காரணம் இருக்கு...முதல் காரணம்..
இவ அப்பா...ரெண்டாவது காரணம்...இந்த ஹாஸ்பிடல்...நான் வந்துட்டா இங்க இருக்கிற உள் நோயாளிகளுக்கு யார் பாதுகாப்பு...ஏற்கனவே எல்லா ஸ்டஃப்ஸ்ஸூம் ரௌடிகளை பாத்ததும் விட்டுட்டு ஒடிடாங்க...
இப்போ நானும் அதே போல செய்ய முடியாது...உள் நோயாளிகள் எல்லாருமே பயந்து ரூம்க்குள்ள அடைஞ்சி கிடக்கறாங்க... அவங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா பஸ்ட் ஏய்டு பண்ண கூட யாரும் இல்ல...நம்மளை நம்பி வந்தவங்க...இவங்களை இனைக்கு விட்டுட்டா உங்க அம்மாவும்,அப்பாவும் இத்தனை வருஷம் சேர்த்து வைச்ச நல்ல பேரு நொடியில காணாம போயிடும்...நீங்க முதல்ல வீட்டுக்கு போயிட்டு குழந்தைக்கு ஆகாரம் குடுங்க... நான் ஒரு முறை எல்லா நோயாளிகளையும் பார்த்து தைரியம் சொல்லிட்டு எப்படியாவது இந்த குழந்தையை வாங்கிக்க வரேன் என்று தைரியம் கொடுத்தார்.
சற்று சமாதானம் அடைந்தவர்...
சீக்கிரமா வந்திடுங்க சுதா... நான் வீட்டுக்கு போய் எப்படியாவது இங்க இருக்கறவங்களை காப்பாத்த முயற்சி பண்ணறேன் கொஞ்ச நேரம் மட்டும் இங்க தாக்கு பிடிங்க... நான் போலீஸோட வர்றேன் என்று அங்கிருந்து குழந்தையை தூக்கியபடி ஓடினார்.
இப்பொழுது உடைந்ந காலும்,கையும் இயல்பாக மாறி இருந்தது... அவரின் நடையில் இருந்த வித்யாசம் சுதாவிற்கும் தெரிந்தது...ஆனால் ஆராயும் நேரம் அவரிடத்தில் இல்லை... ராம் தெருவை தாண்டும் வரை பார்த்தவர் பிறகு மீண்டும் மருத்துவமனைக்குள் சென்றார்.
துப்பாக்கி சத்தம் கேட்கவுமே அருகில் இருந்த குடியிருப்புவாசிகள் மாற்றி மாற்றி காவல்நிலையத்திற்கு ஃபோன் செய்ய வேறு வழியின்றி அவர்களும் மருத்துவமனைக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மருத்துவ மனையில் இருந்த நோயாளி ஒருவரும் கமிஷனர் அலுவலகத்திற்கு போன் செய்ய அங்கிருந்த அதிகாரி...சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தார்.
அதை விசாரிப்பதற்காக தான் கிளம்பிக் கொண்டிருக்கோம் என்று ஆய்வாளர் கூற அங்கு சென்றதும் என்ன நடந்தது என்பதை தெள்ளத் தெளிவாக எங்களுக்கு ரிப்போர்ட் செய்யுங்கள் அதுமட்டுமின்றி அங்கு ஏதும் அசம்பாவிதம் நடக்காதவாறும் பார்த்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
இப்பொழுது கிளம்பி வரும் காவல்துறை அதிகாரிக்கு மருத்துவமனலயில் நடந்த விஷயத்தை சொல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது அதனால் காவல் நிலையத்தை விட்டு வரும் பொழுது கலையை கொலை செய்ய ஆள் அனுப்பியவரிடம் விஷயத்தை தெரிவித்து விட்டார்…
அவர் உடனே மருத்துவமனையில் இருப்பவர்களிடம் சென்ற காரியம் என்ன ஆயிற்று என்று அந்த காலத்தில் அதிக பயன்பாட்டில் இல்லாத நோக்கியா செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டார்.
அதற்கு கூலி ஆட்களின் தலைவன் வந்த வேலை முடிந்தது .
கலையையும் அவரது தாயாரையும் கொன்று விட்டோம் என்றான்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]சரி குழந்தை என்ன ஆனது என்று கேட்டார்….
வயிற்றிலேயே குழந்தை இறந்து விட்டது என்று பொய் உரைத்தான்...குழந்தை தப்பித்து விட்டது என்று கூறினால் அவனின் முதலாளி அத்தனை பேரையுமே கொன்று புதைத்து விடுவார் என தெரியாதா…எப்படியும் இன்னும் சற்று நேரத்தில் குழந்தையையும் கண்டுபிடித்து கொல்லத்தானே போகிறார்கள் அந்த நம்பிக்கையில் தைரியமாகவே கூறினான்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]உடனே சந்தோஷமடைந்தவர்... உடனடியாக அதை மறைத்துக்கொண்டு குரலில் கோபத்தை காட்டினார் காரியம் முடிந்ததுன்னா இன்னும் அங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க உடனே எல்லாரும் கிளம்பி வாங்க நீங்க அங்க போனதற்கோ...இல்ல அங்க நடந்த சம்பவத்திற்கோ சாட்சி எதுவும் இல்லாம மொத்தமா அழிச்சிட்டு கிளம்புங்க… உங்களைத் தேடி அங்க போலீஸ் வந்துகிட்டு இருக்கு அவங்க கையில யாரும் மாட்டவும் கூடாது எந்த சாட்சியும் கிடைக்கவும் கூடாது….என்றவர் அப்புறம் யாரும் என்னை பார்க்க வரவேண்டாம் அவங்கவங்க விரும்பின ஊர்களுக்குப் போய் சேருங்க பணம் உங்களை தேடி வரும் என்று கூறினார் .
தலைவனோ சந்தோஷமாக சரி என்று அவனுடைய மிகப்பெரிய நோக்கியா செல்போனை அணைத்து அவனது பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தி கொண்டான்.
பிறகு அவனது அடியார்கள் அனைவரையும் அழைத்த தலைவன் டேய் இங்க நம்மள பாத்து சாட்சி யாராவது இருக்காங்களா என்று கேட்கவும் ஒருவன் முன் வந்து வந்தவுடனே அத்தனை பேரையும் அடித்து விரட்டிட்டோம்... யாரும் நமக்கு எதிராக சாட்சி சொல்ல தயாராக இருக்க மாட்டாங்க…
சரி குழந்தை எங்க போயிருக்கும்னு யாருக்காவது ஐடியா இருக்கா…
குழந்தை கண்டிப்பா மருத்துவமனைக்கு உள்ளதான் இருக்கு அவளை ஒளிச்சு வச்ச மாதிரி தான் இந்த கிழவி எங்காவது ஒளிச்சு வச்சு இருப்பா...ஏன்னா இவ தான் அவ பொண்ணுக்கு பிரசவம் பாத்திருக்கா என்று கலையின் தாயாரை உதை விட்டான்.
பிறகு எவ்வளவு நேரம் ஒளிச்சு வச்சிருக்க முடியும்... இவ்வளவு நேரம் குழந்தையோட சத்தம் இல்லனா கண்டிப்பா அது மூச்சடைத்து செத்துப் போயிருக்கும் அப்படி இல்லன்னா போறதுக்குள்ள நாம அதை செய்யலாம் என்றான் கோபமாக...
அதுக்கெல்லாம் நேரம் இல்ல… குழந்தை போனா போகட்டும்...அது சாகலன்னு நமக்கு மட்டும் தான தெரியும்...இதை நம்ம மனசோட வச்சிக்கலாம்….போலீஸ் இங்க வந்திட்டு இருக்கு அவங்க வர்றதுக்குள்ள இருக்கிற எல்லா தடயங்களையும் அழிக்கனும் என்ன செய்யலாம் என்று பதட்டமாக கேட்டான்.
முக்கியமாக மூவரின் சடலம் மருத்துவமனைக்குள் கிடக்கிறது அவர்களை எப்படி மறைப்பது...[/B][/B][/B][/B]
[B][B][B][B]எப்படி தடயங்களை அழிப்பது...
என அனைவரும் சில வினாடிகள் குழம்பினர்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது காவல்துறையின் வாகனம் வந்துவிட்டால் அனைவரும் மாட்டிக்கொள்வோம் அதுமட்டுமின்றி அவர்களுக்கு வேலை கொடுத்த முதலாளியும் மாட்டிக்கொள்வார் என்ன செய்ய வேண்டும் என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... ஒருவன் வேகமாக சென்று கமலா அம்மாவின் சடலத்தை எடுத்து வந்தான் மற்றொருவனோ கலையின் தாயாரின் சடலத்தை தூக்கிக் கொண்டான்... இருவர் சடலங்களையும் கலையின் அருகே கொண்டு வந்து கிடத்தினார்கள்..
பிறகு [/B][/B][/B][/B]
[B][B][B][B]அங்கிருந்த இருசக்கர வாகனத்திற்கு தீயை வைத்து அந்த வாகனத்தை மற்ற வாகனங்களோடு மோத விட்டனர்... இப்பொழுது வரிசையாக நின்ற வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி கீழே விழுந்து பெட்ரோல் சிதற அந்த இடமே நொடியில் தீப்பற்ற ஆரம்பித்தது அது நடுவினில் கலை, மற்றும் அவரின் தாயார்,கமலாம்மா மூவரும் இருக்க காவல்துறை வருவதற்குள் கண்டிப்பாக அவர்களின் சடலம் கண்டிப்பாக தீப்பற்றி கொள்ளும்….குழந்தை அருகில் இருந்தால் அதுவும் வெப்பம் தாளாமல் இறந்து விடும் என்ற நம்பிக்கையில் அங்கிருந்த அடியாட்கள் அனைவரும் வாகனத்தை இயக்கியபடி அங்கிருந்து வேகமாக சென்றனர்.
காவல்துறை மற்றும் ஊர் மக்களைப் பொருத்தவரை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் கலையும் அவரது தாயாரும் இறந்து விட்டார்கள் அவர்களின் முதலாளியை பொருத்தவரை அவர்களுடன் சேர்ந்து குழந்தையும் பொசுங்கிவிட்டது... குழந்தையை தவற விட்டுவிட்டோமே என்ற கவலை இருந்தாலும் அவர்களிடம் ஒரு ஒற்றுமை இருந்தது….
எந்த சமயத்திலும் குழந்தையை அவர்கள் கொல்ல வில்லை என்று முதலாளிக்கு தெரியப்படுத்தவே கூடாது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தையும் போட்டுக்கொண்டனர்…தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கூட கலையின் வயிற்றிலேயே குழந்தை இறந்துவிட்டது இவர்கள் கலையின் சடலத்திற்கு நெருப்பு வைத்துவிட்டார்கள் இதைத் தான் கூற வேண்டும் என்று அனைவரும் பேசிக் கொண்டனர்…
பிறகு இனி அடுத்த வேலை வரும்பொழுது சந்தித்துக் கொள்ளலாம் என பேசி முடிவெடுத்தவர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு பிரிந்து சென்றனர்.
வீட்டுக்கு வந்ததும் ராம் முதல் வேலையாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்…சார் எங்க மருத்துவமனையில் சம்பந்தமே இல்லாத சில பெரிய ஆட்கள் புகுந்து அங்கு இருக்கிற நோயாளிகளையும் பணியாளர்களையும் அடிக்கிறதா எனக்கு ஹாஸ்பிடல்ல இருந்து தகவல் வந்திருக்கு தயவு செஞ்சு கொஞ்சம் வந்து என்னன்னு பாருங்க ப்ளீஸ் என்று கூறியவர் அதன்பிறகு கமிஷ்னர் அலுவலகத்தில் அவருக்கு தெரிந்த காவல் துறை நண்பரிடமும் உதவியை நாடினார்…
அவரும் அதை பாக்கறதுக்காக ஏற்கனவே நாங்க ஆள் அனுப்பி விட்டோம் கவலை வேண்டாம் என்று கூறவும் நிம்மதிப் பெருமூச்சை விட்டவர்...அதன்பிறகு தான் குழந்தையை கவனித்தார்...
முதலில் குழந்தையை சுடுதண்ணீரில் குளிப்பாட்டி முதலுதவிகளை செய்தார் பிறகு அவரின் குழந்தைக்காக வாங்கிய பொருட்களை இந்தக் குழந்தைக்கு பயன்படுத்தினர்….காய்ச்சிய பாலை ஸ்பூனில் குழந்தைக்கு ஊட்டியவர் குழந்தை தூங்க ஆரம்பிக்கவும் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த தொட்டிலில் குழந்தையை கிடத்திவிட்டு உடனடியாக அவரது நண்பரை வீட்டிற்கு வரும் படி அழைத்தார்.
அப்போது சைரன் சத்தம் கேட்கவும் என்ன என்று வெளியில் வந்து எட்டிப்பார்க்க தீயணைப்பு வண்டி வேகமாக அவரின் வீட்டு வாசலை கடந்து சென்றது குழப்பமாக மருத்துவமனையை இருக்கும் இடத்தை பார்க்க புகைப்படலம் அந்த இரவு வேளையிலும் நன்றாக காட்சியளித்தது…
பதறியவர் என்னவாயிற்று என்று அருகிலிருந்த தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு அவரின் விலாசத்தை கூறியவர் பக்கத்துல பயர் சேர்விஸ் வண்டி போற சத்தம் கேட்டுச்சு எங்கே நீ பிடிச்சிருக்கு என்று கேட்டார்.
அவர்கள் இவரது மருத்துவமனையின் பெயரை கூறியபடி ஃபோனை வைக்கவும்..
அப்போ சுதா...என்று அவருக்குள் கேள்வி கேட்டவர் தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார்.
சுதா நேராக உள்ளே வந்தவர் யார் கண்ணிலும் படாத வாறு மூன்றாவது மாடிக்கு சென்றார்.
அங்கிருந்த ஒரு அறைக்குள் புகுந்து கொண்டவர் அங்கிருந்தபடியே ரவுடிகள் என்ன செய்கிறார்கள் என்று ஆராய ஆரம்பித்தார் இரவு நேரம் என்பதால் நோயாளிகள் யாரும் வெளியே வரவில்லை...அதுவே அவருக்கு பெரிய தைரியத்தை வரவழைத்தது... ரவுடிகளும் நோயாளிகளின் அறையை வந்தவுடன் ஆராய்ந்து தான் அதன் பிறகு எந்தவொரு நோயாளியையும் தொந்தரவு செய்யவில்லை அந்த வகையில் சற்று மனிதாபிமானம் உள்ளவர்கள் தான் என்று நினைத்துக் கொண்டார்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]சற்று நேரத்திற்கெல்லாம் அனைவருமே கீழே கூடி பேசிக் கொள்வதை மேல் இருந்தபடியே மறைந்திருந்து பார்த்த சுதா சற்று நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பவும் தான்
மருத்துவமனை கட்டிடத்தில் தேவையில்லாத உஷ்ணத்தை உணர்ந்தார்...கூடவே வாகனங்கள் எரியும் வாசம் வரவுமே வேகமாக கீழே வந்தார் கிட்டத்தட்ட அண்டர்கிரவுண்ட்டில் இருந்த அனைத்து வாகனங்களும் எரிந்து முடித்திருந்தது…
எங்கள் பசிக்கு இது போதாது என கீழே கிடந்த பொருட்களுக்கெல்லாம் அணைத்துக்கொண்டு மெல்ல மெல்ல தரைத் தளத்திற்கு தீ பரவியிருந்தது... கடும் புகைமூட்டம் வேறு எதுவுமே கண்களுக்கு தெரியவில்லை…. தீ கொழுந்து விட்டு எரிந்தபடியே மெதுவாக அடுத்த தளத்தை எட்டிப்பார்க்க ஆரம்பித்தது….
கவனித்த சுதாவிற்கு சில வினாடிகள் கையும் ஓடவில்லை...காலும் ஒடவில்லை... அவரின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்குத் தோன்றவில்லை…. உள்ளிருக்கும் சில நோயாளிகளை காப்பாற்றும் பொருட்டு மேலே ஓடினார்... ஆனால் அவரை விட வேகமாக தீ மளமளவென்று அடுத்தடுத்த தளங்களுக்கு பரவ இப்பொழுது மருத்துவமனையே தீப்பிழம்பாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.
ராமின் வீட்டிற்கு அவரது நண்பன் வரும்பொழுது இடிந்துபோய் அமர்ந்திருந்தார்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]இப்பொழுது குழந்தை மீண்டும் சிணுங்க ஆரம்பித்து.
திரும்பிப் பார்த்தவருக்கு குழந்தையை தூக்கி அதற்கு பசியாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் தோன்றவில்லை மாறாக வெறுப்புதான் சூழ்ந்தது.[/B][/B][/B][/B]
[B][B][B][B]இந்த ஒரு குழந்தைக்காக எத்தனை உயிரிழப்புகள் ஒரு சாம்ராஜ்யமே அழிந்தது போல் அவரது மருத்துவமனையே இப்பொழுது தீக்கிரையாகி கொண்டிருக்கிறது…[/B][/B][/B][/B]
[B][B][B][B]அது மட்டுமின்றி அவரது தோழியும் ஆபத்தில் மாட்டிக்கொண்டார்.இனி அவர் பிழைத்து வந்தால் தான் நிஜம் என்று கவலையில் அமர்ந்து விட்டார்.
ஆனால் தொட்டிலை யாரோ ஆட்டுவது போல் சீராக ஆடிக்கொண்டிருந்தது...குழந்தையும் நன்கு பசியாறிய குழந்தைபோல மீண்டும் உறங்க ஆரம்பித்தது.
டேய் என்னாச்சி... ஹாஸ்பிடல்ல எப்படி ஃபயர் ஆக்சிடென்ட் ஆச்சி…
தெரியல...என்று கூறும் போழுது கண்கலங்கியது…
இன்சூரன்ஸ் பண்ணியிருக்கல்ல…
ம்ம்…
ஏண்டா ஃபோன் பண்ணும் போது ஹாஸ்பிடல் ஃபயர் ஆக்சிடெண்ட் ஆனது பத்தி சொல்லல இப்போ நான் அந்த வழியா வரும் பொது ஒரே கூட்டமாக இருந்ததால என்னனு பாத்துட்டு வரேன்...பெருசா பில்டிங்க்கு சேதம் எதும் இல்ல.. ஃபுல்லா டேமேஜ் ஆகுறதுக்கு முன்னாடி ஃபயர் சர்வீஸ் வந்து தீயை கட்டுப்படுத்திட்டாங்க..
ஆனா அங்க இருந்தவங்களுக்கு என்று கூற தொடங்கும் போதே…
டேய் ஹரி ப்ளீஸ்...அது பத்தி பேச வேணாம் கேக்கற சக்தி எனக்கில்ல... பில்டிங் ஃபுல்லா தீப்பிடிக்கும் போது அப்போ அங்கிருந்த என்று கண்கலங்கியவர் உடனடியாக கண்களைத் துடைத்துக்கொண்டு இனி அது பற்றி பேசி மறுபடியும் என் மனசை வேதனைப் படுத்திக்க விரும்பல..[/B][/B][/B][/B]
[B][B][B][B]எனக்கு ஒரு உதவி பண்றியா…?
சொல்லுடா செய்யறேன்…
பதில் பேசாத ராம் திரும்பி தொட்டிலை பார்க்க…
அங்கே ஹரியும் திரும்பிப் பார்த்து புருவத்தை உயர்த்தி அதிர்ச்சியை அப்பட்டமாக காண்பித்தார்.
பிறகு எழுந்து சென்று தொட்டிலை பார்த்தவர் டேய் இது யார் குழந்தை... இப்போ தான் பொறந்த மாதிரி தெரியுது ...உனக்கு ஏதுடா…
யார் கிட்ட இருந்தாவது விலைக்கு வாங்கி இருக்கியா ...இது சட்ட படி தப்புடா…என்று கூறவும் எதுவும் பேசாமல் ராம் ஹரியை பார்த்து முறைத்தார்.
இல்ல ராம் நான் என்ன சொல்ல வர்றேன்னா ஒருவேளை நீ அந்தக் குழந்தையை சட்டப்படி தத்து எடுக்கிறதா இருந்தாக்கூட அதுக்கு ஒரு மூணு மாசமாவது தாய்ப்பால் கொடுக்க வைச்சி அதுக்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து வாங்கி இருக்கலாம்... இப்படி பிறந்த குழந்தையை வாங்கியிருக்க வேணாம்னு சொல்ல வந்தேன்..
பேசி முடிச்சிட்டியா ஹரி..
என்ன பேசறது...உனக்கு தெரியாததையா நான் பேசப்போறேன்…
புரிஞ்சா சரி…
என்றவர் பொறுமையாக இந்த குழந்தைக்கு உடனே ஒரு பர்த் சர்டிபிகேட் வேணும் கிடைக்குமா…
ம்ம் வாங்கிடலாம்...பேர் சூஸ் பண்ணு... அப்புறமா அம்மா அப்பா பேர் என்னனு சொல்லு…
அப்பாவா என்னோட பேரும் அம்மாவோட பேரா காவ்யா நேம்மை போட்டுக்கோ குழந்தைக்கு என்ன பெயர் வேணாலும் நீயே வச்சுக்கோ இந்தா இதை செலவுக்கு வச்சிக்கோ என்று கத்தை ரூபாய் நோட்டுகளை அவரின் கையில் திணித்தார்.
சரிடா மச்சி யார் இந்த குழந்தை...
தெரியாது…
என்னடா பதில் இது... யார் குழந்தைனு தெரியலன்னா போலீஸ் ஸ்டேஷன்ல ஒப்படைக்கறது தானே நியாயம்…
ம்ம்... அதுலயும் சிக்கல் இருக்கு…என்றவர் சற்று முன் நடந்த அனைத்தையும் ஒன்றும் விடாமல் கூறினார்…
பிறகு இந்தக் குழந்தை உயிரோடு இருக்கக் கூடாதுனு போலீஸ்காரங்க கூட ஆசைபடறாங்க... இப்போ இதோட அம்மா யாரு அப்பா யாரு எதுக்காக இவ அம்மா செத்தா...பாட்டி செத்தாங்க... இவ அப்பா எங்க போயிருக்கான் எப்போ இவளை தேடி வருவான் எதுவுமே தெரியாது...
இது எல்லாம் தெரிஞ்ச ஒருத்தியும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஹாஸ்பிடல் ஃபயர் ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டா... அவளோட கடைசி ஆசை இந்த குழந்தை பிழைச்சி கிடக்கனும்… இவளை அவ அப்பா கையில ஒப்படைக்கனும்... முன்னாடி போங்க பின்னாடியே வந்து குழந்தையை வாங்கிக்கறேன்னு சொன்னா... சொன்னவ அப்படியே போய்ட்டா…
இப்போ எனக்குன்னு யாரும் இல்ல இவளுக்கும் யாரும் இல்ல... அதான் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]எப்படிடா கைக்குழந்தை வைச்சி மேனேஜ் பண்ணிப்பியா…
ம்ம் கஷ்டம் தான் ஆனா இப்படி யோசிச்சி பாரு... ஒருவேளை அன்னைக்கு நடந்த ஆக்சிடென்ட்ல காவ்யா மட்டும் இறந்து என் குழந்தை உயிரோட இருந்திருந்தா நான் என் பொண்ணை பார்த்துட்டு தானே இருந்திருப்பேன்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]நீ பேசுற லாஜிக் கரெக்டுதான் ஆனா உன்னோட வொய்ப்பும் குழந்தையும் இருந்த விஷயம் எல்லாருக்குமே தெரியுமே...
ஆனா நான் போகப்போற நாட்டுல யாருக்கும் தெரியாது...ஒருவேளை பின்னாடி தெரிய வந்தா கூட என் மனைவியோட ஆக்சிடெண்ட் பத்தி யாருக்கும் தெரியாது... தினமும் வர பத்திரிக்கையில் கடைசி பக்கத்துல ஒரு ரெண்டு லைன் எழுதியிருந்தான் மருத்துவரும் அவரது மனைவியும் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் மருத்துவரின் கர்ப்பிணி பெண் மரணம் னு…[/B][/B][/B][/B]
[B][B][B][B]எந்த இடத்திலும் என் குழந்தையை பத்தி அவங்க எழுதல அதனால அந்த குழந்தை தான் இந்த குழந்தைனு எல்லாரையுமே நம்ப வச்சுடலாம்... கொஞ்ச நாள் தான் குழந்தையை வெளியே காமிக்க பயப்படனும் அதுக்கப்புறம் குழந்தையோட நாள் கணக்கு மாசக்கணக்கை யாரும் கவனிக்க மாட்டாங்க…அவங்க அவங்களுக்கு அவங்கவங்க பிரச்சினை இதுல என் குழந்தையை பத்தின நியாபகம் யாருக்கும் இருக்காது... என்ற ராம் பீரோவைத் திறந்து சில காகிதங்களை கொண்டுவந்து ஹரியின் கையில் திணித்தார் .
இது ஹாஸ்பிடலோட பேப்பர்ஸ்... என் அம்மா அப்பாவோட கனவு... தீக்கு இரையா போயிடுச்சு இதை ஏதாவது பண்ணி உபயோகப்படுத்த முடியும்னா தயவு செய்து ஏதாவது ஒரு நல்ல காரியத்துக்கு பயன்படுத்துக்கோ...இதுக்கு நீதான் பொறுப்பு…
என்னடா ராம் ஏதேதோ பேசற...நீ நினைக்கிற மாதிரி ஹாஸ்பிட்டல் ஃபுல்லா எல்லாம் எரிஞ்சு போயிடல... அதுக்குள்ள தீயணைப்புத் துறையினர் வந்து காப்பாத்திட்டாங்க... உயிர்சேதம் கூட பெருசா இல்லை இதுவரைக்கும் எப்படி நல்ல பேரோட இருந்ததோ இனியும் அதே மாதிரி நல்ல பேரோட தான் இருக்கும் நீ கண்டதை நினைத்து பீல் பண்ணிக்காத…
இதை விக்கனும்னு நினைச்சல்ல...அது போல வித்துட்டு பணத்தை எடுத்துட்டு போடா...
இல்ல ஹரி... பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்குறவங்க பத்து நிமிஷம் கழிச்சு காணாம போகும் போது தான் இந்த பணம் ,சொத்து எல்லாம் பெருசு இல்லனு ஞானம் பிறக்குது...இதை விக்க எனக்கு மனசு வரல...இதை நீ பாத்துக்கோ…
சரிடா இதோட ஓனர் நீயாவே இருந்துட்டு போ நான் என் வேலைக்கு நடுவுல இதையும் பார்த்துக்கிறேன் நீ சொன்ன மாதிரி நல்ல காரியத்துக்கு உபயோகப்படுத்தறேன்... ஆனா எனக்கே எனக்குன்னா இது வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டார்.
என்னவோ பண்ணு... பர்த் சர்டிபிகேட் என் கையில் கிடைக்கும்போது எந்த நாட்டோட பிளைட்ல டிக்கெட் காலியா இருக்கோ அந்த நாட்டுக்கு நான் பறந்து போய்டுவேன் என்னைக்கும் இந்த குழந்தையை பத்தின விஷயம் வெளிய யார்கிட்டயும் சொல்லாத ஏன்னா நீ சாதாரணமா சொல்லற விஷயம் இந்த குழந்தையோட உயிருக்கே ஆபத்தாக முடியும்... மறந்திடாதே என்று கூறவும்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]என்னடா ராம்...இது உன் குழந்தை... இதைப்பற்றி நான் என்ன பேச போறேன்... எதுக்காக வாழனும்னு நேத்து வர புலம்பிட்டு இருந்த என்னோட ராமுக்கு வாழனும்னு ஆசை கொடுத்திருக்கிறது இந்த குழந்தை …
அப்படி இருக்கும்போது இந்த குழந்தையை பற்றிய ரகசியத்தை நான் எப்படி வெளியே சொல்வேன்... யார் கேட்டாலும் ஆக்சிடென்ட்ல காவ்யா மட்டும் தான் இறந்தாங்க அவங்க போகும் போது ஒரு பெண் குழந்தை உனக்கு கொடுத்துட்டு போறாங்க அதைத்தான் எல்லார்கிட்டயும் சொல்ல போறேன்...நீ கேட்டதை ரெடி பண்ணிட்டு உன்னை வந்து சந்திக்கறேன் என்ற படி ஹரி அங்கிருந்து கிளம்பினார்.
மறுநாள் காலையில் மருத்துவமனை தீயில் கருகியதற்காக பெயரளவில் விசாரணை ஒன்று ராமிடத்தில் வைக்கப்பட்டிருந்தது …
அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மிகப் பொறுமையாக பதில் கூறிய ராமிடம் அதிகாரி கடைசியாக கூறிய விஷயத்தை கேட்டு சற்று மன நிம்மதி பிறந்தது.
அங்கிருந்த எந்த நோயாளிகளுக்கும் உயிர்ச்சேதம் இல்லை என்றும் அவர்களை பத்திரமாக வேறு ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறினார் சந்தோஷத்துடன் அதை உள்வாங்கிக் கொண்டவர் சுதாவை பற்றி கேட்டதற்காக வாயைத் திறக்கும் முன்னே அந்த அதிகாரி அங்கு வேலை செய்யறவங்க சில பேர் தீயில கருகி இறந்துட்டாங்க... இன்னும் தீப்பிடித்த சமயத்துல மருத்துவமனையில் யார் யார் இருந்தாங்க என்கிற விசாரணையை ஆரம்பிக்கல...அப்படி ஆரம்பிக்கும் போது தான் யாரெல்லாம் இறந்தது அப்படிங்கிற விஷயத்தை நாங்கள் சொல்ல முடியும் அதுக்கு இன்னும் ரொம்ப நாளாகும் என்றும் கூற மனதளவில் நொறுங்கி விட்டார் ராம்.
பிறகு எப்படி தீ பிடிச்சது... அங்கே தீப்பிடிக்கிறது போல எதையுமே நாங்க கவனக்குறைவா வெச்சுகிட்டது இல்லையே என்று ஆதங்கத்தை மறைத்தபடி கேட்டார்.
ராம் என்ன பதிலை எதிர்பார்த்து கேள்வி கேட்பாரோ அதே பதிலைத்தான் அதிகாரியும் கூறினார் பவர் சர்க்யூட்டால தீ பிடிச்சிடுச்சிடுச்சி…அது மளமளனு பில்டிங் ஃபுல்லா ஏறிடுச்சி என்று கூறவும் தனக்குள்ளாக சிரித்துக்கொண்ட ராம் கையெடுத்துக் கும்பிட்டு அந்த அதிகாரியை வழியனுப்பினார்.
அவர் வெளியில் கிளம்பும் பொழுது உங்க மனைவி இப்போ தான் சமீபத்தில் விபத்தில் இறந்தாங்க இல்லையா என்று கேட்க ஆமாம் என்று தலையசைத்தார்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]அப்பொழுது குழந்தையின் சிணுங்கல் ஒலி கேட்கவும் எட்டிப்பார்த்த அதிகாரி குழந்தை சத்தம் என்று இழுக்கவும்…[/B][/B][/B][/B]
[B][B][B][B]குழந்தைக்கு ஓன்னும் ஆகல...மனைவி மட்டும் தான் தவறினாங்க…
ஆனா பேப்பர் இறந்ததாக வந்ததே... என்று அவரின் சந்தேகத்தை கேட்க.[/B][/B][/B][/B]
[B][B][B][B]இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு ஏன் அப்படி எழுதினாங்கன்னு நீங்க பத்திரிகை ஆஃபிஸ்ல தான் போய் கேக்கனும்..[/B][/B][/B][/B]
[B][B][B][B]உயிரோடு இருக்கிற குழந்தை ஏன் இறந்ததா போட்டிங்கன்னு...அவங்களை விட்டுட்டு மனைவி இறந்த துக்கத்தில இருக்கற என் கிட்ட கேள்வி கேட்டா நான் என்ன பதில் சொல்லறது என்று கேட்டார்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]சாரி ...சாரி சார்... என்று கூறியபடி அவர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் குழந்தைக்கு தேவைப்படும் எல்லாவற்றையும் சட்டரீதியாக பெற்றுக் கொண்டவர்... இந்தியாவிலிருந்து லண்டனுக்கு பயணமானார்…
கைக்குழந்தையுடன் ராம் லண்டன் வந்து சேர்ந்த பொழுது அவருடன் கல்லூரியில் ஒன்றாக பயின்ற தோழன் கேசவ் ராமை வரவேற்பதற்காக ஏர்போர்ட்டில் காத்து இருந்தார்…
ராம் ஏர்போர்ட்டை விட்டு வெளியே வரும் பொழுது உற்சாகமாக எதிர்கொண்ட கேசவ்...டேய் ராம் எப்படி இருக்க...என்று சந்தோஷமாக கட்டி அணைத்தார்...பிறகு குழந்தைகளை சுமக்கும் பையிலிருந்த குழந்தையை கண்டவர் இதான் உன்னோட ஜூனியாரா... சூப்பர் அசப்புல உன்னை மாதிரியே இருக்கால்ல என்று சம்பிரதாயமாக நண்பன் கூறவும் ராமிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது.
ம்ம்...அப்படியா... இருக்கட்டும்.
சாரிடா உன்னோட வொய்ப் தவறினது எனக்கு தெரியல என்னால ஒரு போன் பண்ணி கூட உன்கிட்ட கேட்க முடியல ...இந்த விஷயத்தை ஹரி எனக்கு சொல்லலைன்னா தெரிந்து இருக்காது…
பரவால்ல முடிஞ்சதை ஏன் பேசனும் விடு என்றபடி நடக்க ஆரம்பித்தார்.
உடனே கேசவ் குழந்தையை குடுடா நான் கொஞ்ச நேரம் வச்சிக்கிறேன் என்று கையில் வாங்கியவர் ஆமா குழந்தைக்கு எத்தனை மாசம் ஆச்சு என்று கேட்டார்.[/B][/B][/B][/B]
[B][B][B][B]அவரைப் பார்த்த ராம் ரெண்டு மாசம் ஆச்சு என்று கூறியபடி நடக்க ஆரம்பித்தார்.
ம்ம்... டாக்டரா இருந்துட்டு உன் குழந்தையே சத்து இல்லாத குழந்தை மாதிரி இருக்கு... பார்த்தா ஒரு மாசம் வேணும்னா சொல்லலாம்...கொஞ்சம் கேர் எடு ராம்…
குழந்தை அழுதா பால் பவுடரை தான் கலக்கிக் கொடுக்க முடியும் அதோட அம்மாவை கொண்டு வந்து நிறுத்த முடியாது நீயும் ஒரு டாக்டர் தானே உனக்கு தெரியாதா... தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைக்கும் இருக்கற வித்தியாசம் என்று கோபமாக கேட்டவர் குழந்தையை அவரிடத்தில் வாங்கிக் கொண்டார் .
ஆனால் குழந்தை கேசவ்வை பார்த்து சிரிக்க ரொம்ப க்யூட்டா சிரிக்கிறா… ஆமா இவ பெயர் என்ன என்று கேட்கவும் திரும்பி நின்றவர் ராகா என்று கூறினார்.
ராகா அப்படின்னா என்ன மீனிங்…
மீனிங் பாத்து எல்லாம் ஹரி பேரு வைக்கல என்னோட பேரோட ஃபர்ஸ்ட் லெட்டரும் காவ்யாவோட ஃபர்ஸ்ட் லெட்டரையும் சேர்த்து ராகான்னு பேர் வைச்சதா சொன்னான் [/B][/B][/B][/B]
[B][B][B][B]என்ன உன் குழந்தைக்கு ஹரி பெயர் வச்சானா... என்று கேட்கவும் அதிர்ச்சியில் நின்ற ராம்... அறிவு இருக்கா கேசவ் உனக்கு…[/B][/B][/B][/B]
[B][B][B][B]ஊர்ல இருந்து இப்போ தான் வந்து இறங்கி இருக்கேன் அதுக்குள்ள இத்தனை கேள்வி கேட்டு என்னை பாடா படுத்துற…[/B][/B][/B][/B]
[B][B][B][B]காலேஜ் டேஸ்ல தான் தான் இப்படி பேசிக்கிட்டே இருந்தன்னு பாத்தா இன்னைக்கி இப்போ பெரிய கன்ட்ரில பேமஸ் டாக்டரா இருந்தும் கூட உன்னோட கேரக்டர் மாத்திக்கவே இல்லை …
ஹரி ஏன் பெயர் வைச்சான்னு தானே கேட்ட...இவ பிறந்ததுமே காவ்யா இறந்துட்டா அந்த கவலைல நான் என்னை பற்றியும் கவலை படல... குழந்தையை பற்றியும் கவலைப்படல... அதனால அவன் தான் பேர் வெச்சி ராகாவிற்கு லீகலா என்னென்ன வாங்கனுமோ எல்லாத்தையும் வாங்கி தந்தான் போதுமா... என்று கோபமாக முகத்தை வைத்தபடி கூறியவர் சரி உன்னோட ஹாஸ்பிடல் வேகன்ஸி இருக்கா எனக்கும் ஒரு அப்ளிகேஷன் போடு நானும் உன்னோட ஹாஸ்பிடல்லேயே ஜாயின் பண்ணிக்கறேன்...ராகாவை பாத்துக்க எனக்கு உதவியா இருக்கும் என்று கூறியபடி வேகமாக அவரின் பயணப்பைகளை சேகரிக்க சென்றார்.[/B][/B]
[/SIZE][/B][/SIZE]
[B][SIZE=6][B][SIZE=4]
Last edited: