7.
அதுக்கென்னடா சூப்பரா பண்ணிடலாம்...அதும் ராகாவை பாத்துக்க ஈஸியா இருக்கும்னு சொல்லிட்ட விடுவேனா நான்…நீ அங்கிருந்து கிளம்பும் போதே ஹரி உனக்கும் ஒரு ஜாப் பாக்க சொல்லி ரெஸ்யூம் அனுப்பி வச்சிட்டான்... நான் அப்பவே ஸ்டெப் எடுத்தாச்சி... நம்ம ஊரு டாக்டர்களுக்கு இங்க செம்ம மரியாதை அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது அனுபவிச்சு பார்க்கும்போதுதான் புரியும்... என்று பேசிக்கொண்டே வந்தார்.
காதில் போட்டுக் கொள்ளாத ராம் டிராலியை எடுத்து அவரின் பெட்டிகள் எல்லாவற்றையும் ஒன்றன் மீது ஓன்றாக வைத்துக்கொண்டு முன்பக்கமாக குழந்தையை மாற்றியிருக்கும் பெல்ட் சரியாக இருக்கிறதா என்று சரி பார்த்தபடி டிராலியை உருட்ட ஆரம்பித்தார்.
அதை கண்ட ஹரி
ஏண்டா எல்லாத்தையும் நீயே வச்சிக்கற... அட்லீஸ்ட் குழந்தையை மட்டுமாவது குடுடா இப்படி என்று கை நீட்டினார்..
சற்று எரிச்சலுடன் கேசவ்வை பார்க்கவும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு எங்களுக்கு குழந்தை கிடையாதுடா...ரொம்ப ஆசைபட்டோம்...ஆனா இன்னைக்கு வர கிடைக்கல… எவ்வளவோ ட்ரீட்மென்ட் இருக்கு ஆனா அதுக்கெல்லாம் என் மனைவி ஒத்துக்க மாட்டேங்கறா...எதுவா இருந்தாலும் இயற்கையா வரட்டும்..
கடவுள் கொடுக்கும் போது வாங்கிக்கலாம் இப்படி செயற்கையா வர்றது வேணான்னு சொல்லிட்டா... அதனால நானும் அவளை குழந்தை விஷயத்துல போர்ஸ் பண்ணல..
ஆனா உன் குழந்தையைப் பார்க்கும்போது என்னால மனசை கட்டுப்படுத்தவே முடியல டா ப்ளீஸ் டா நீ என்னோட ஹாஸ்பிடல் வந்துட்டா குழந்தையை கவனிக்க ஆள் இல்லனு கவலை படாத குழந்தையை என் வைஃப் நல்லா பார்த்துப்பா…தனியா கேர் டேக்கர் எதும் போட்டுடாத...காவ்யா இருந்தா எப்படி பாத்துப்பாளோ அதே மாதிரி பாத்துப்பா...என்று மறுத்து விடுவாரோ என்ற பயத்தோடு கூறினார்.
பதிலேதும் பேசாத ராம் குழந்தையை மாட்டியிருக்கும் பெல்ட்டை முற்றிலும் கழட்டி அப்படியே கேசவ்விற்கு மாற்றிவிட்டார்.
இனிமேல் ராகா எனக்கு மட்டும் குழந்தை கிடையாது...உனக்கும் தான்...இவ எனக்கு மட்டும் தான் புது வாழ்க்கையை குடுத்தானு நினைச்சேன் இப்போ உனக்கும் தர்றா...நீஜமாவே இவ அதிஷ்ட குழந்தை தான்…என்றபடி டிராலியை வேகமாக தள்ளிக்கொண்டு நடந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை தாயிடம் இருந்து கோபித்துக் கொண்டு ஓடிவர அதன் மேல் இடித்து விடக்கூடாது என்று ராம் ட்ராலியை ஓரம்கட்ட அதற்குள் அக்குழந்தை டிராலி மீது மோதவர குழந்தைக்கு அடிபட்டு விடக்கூடாது என்ற பயத்தில் நிலைதடுமாறிய ராம் ட்ராலியை பிடித்தபடியே கீழே விழ ஆரம்பித்தார்.
கேசவ் பதறியபடி அவரைக் பிடிப்பதற்காக முன்வர அப்பொழுது ட்ராலி ராமின் கட்டுபாட்டை இழந்து கேசவ்வின் கால் முட்டியில் மோதியது…
காலை மடித்தபடி அவர் கீழே விழப் போக அப்பொழுது யாரோ கேசவ்வை கீழே விழாதவாறு பின்னிருந்து கெட்டியாக பிடித்து வைத்தது போல் உணர்ந்தார்.
வினாடி நேரத்தில் சுதாரித்து நின்றவர் சுற்றிலும் பார்க்க அங்கு நடந்து சென்ற பயணிகளைத் தவிர வேறு யாருமே இல்லை.
யாரும் அவர் அருகிலும் வரவில்லை...
யோசனையாக குழந்தையை பார்க்க குழந்தை இப்போது சுகமாக அவரது நெஞ்சில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தது.
என்ன இது என்ன மாதிரியான உணர்வு இப்போது யாரோ என்னை கீழே விழாதவாறு காப்பாற்றினார்களே… குழந்தையையும் கூட நகர்ந்து விடாதவாறு நெஞ்சோடு வைத்து அழுத்திப் பிடித்தது போல் இருந்ததே...என்று யோசித்த படி அப்படியே நிற்க ஆரம்பித்தார் .
அதற்குள் சுதாரித்து எழுந்த ராம் டிராலியை கையில் பிடித்துக் கொண்டு கேசவ்விடம் வந்தார்…
கால்ல ரொம்ப அடிபட்டுடிச்சா...சாரிடா நான் வேணும்னு டிராலியை விடல…
அதவிடுடா... ட்ராலி என் கால்ல பட்டதும் நான் பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழ போனதை நீ பார்த்தியா…
ம்ம்...பாத்தேன் உனக்கு செம ஸ்டாமினா...சூப்பரா பேலன்ஸ் பண்ணின…நான் கூட பயந்துட்டேன்...ராகாவை கீழ போட்டுடுவியோன்னு...தேங்க் காட் அப்படி எதும் நடக்கல...
நான் பேலன்ஸ் பண்ணல...யாரோ என்னை கீழ விழாத மாதிரி கெட்டியா பிடிச்சிகிட்டாங்க…
விளையாடாத கேசவ்... உன் பக்கத்துல யாருமே கிடையாது சினிமால ஸ்டண்ட் செய்வாங்கல்ல அது மாதிரி அப்படியே கால்மடித்து பாதில உக்காந்து மேஜிக் மாதிரி எழுந்து நின்ன... சரி வா கிளம்பலாம்…
இல்லடா மச்சி... நான் விழ தான் போனேன் யாரோ….என்று இழுக்கவும்…
சரிடா நம்பறேன்...நீ விழ போனதும் உன்னை சுத்தி கண்ணுக்கு தெரியாத வொயிட் கவுன் போட்டிருக்கற ஏஜ்சல்ஸ் உன்னை அப்படியே தாங்கிட்டாங்க போதுமா...வா..
ஆமா உன் கார் கொண்டு வந்திருக்கியா இல்ல வாடகை காரா...என்று கேட்ட படி ஃப்ளாட் பாரத்தில் வந்து நின்றார்.
கார் கொண்டு வந்துருக்கேன் அந்த பக்கத்துல பார்க் பண்ணிருக்கேன் இரு எடுத்துட்டு வரேன் என்றபடி முன் சென்றார்..
குழந்தையை குடுத்துட்டு போ…
இல்லடா நல்லா தூங்கறா...கை மாத்த வேணாம் இவ என்னோடவே இருக்கட்டும்...நான் மேனேஜ் பண்ணிப்பேன்...என்றபடி சென்றார்.
சரி என்று தலையசைத்தவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார்...பிறகு அவரது வாலட்டை கையில் எடுத்து அதிலிருந்து குடும்ப படத்தை கண்சிமிட்டாமல் பார்த்தார் கண்களில் நீர் நிறைந்தது...உடல் தானாக குலுங்க ஆரம்பித்தது….அப்பொழுது மெல்லிய காற்று ஒன்று அவரை அரவணைத்து ஆறுதல் சொல்வது போல் தோன்றவும் பட்டென்று நிமிர்ந்து அமர்ந்தார்...அவரது அருகில் கலைவாணியின் உருவம் வெண் நீழலுருவாக தெரியவும் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தார்…எதுவும் இல்லை...கலையின் மரணம் அவரை மிகவும் பாதித்து விட்டது அதனால் தான் இதுபோல் மனப்பிரம்மை தோன்றுகிறது...என்று அவரை தேற்றிக்கொண்டார்.
கேசவ் குழந்தையை பின்புற இருக்கையில் கீழே விழாதவாறு படுக்க வைத்தவர் ராகாவின் அருகில் மிகப்பெரிய பொம்மையை வைத்தார்...அதன் பிறகு காரை ராமிடம் எடுத்து வரும் பொழுது ராம் குழந்தையை தான் நினைத்துக்கொண்டு இருந்தார்.
யோசிக்காமல் குழந்தையை வேறு கேசவ்விடம் கொடுத்து விட்டோம் அவன் குழந்தையை வைத்துக்கொண்டு எப்படி காரை இயக்குவான் முட்டாள்தனம் செய்து விட்டேனே என்று நினைத்து முடிக்கும் பொழுது அவரின் கால் அருகே கார் வந்து நின்றது.
கேசவ்வை பார்த்த ராம் குழந்தை...என்று கேட்கவும்…
பின்னாடி பாரு...உன் பிரின்ஸஸ்...எப்படி தூங்கறானு...செம க்யூட் எப்படி படுக்க வச்சேனோ அப்படியே இருக்கறா..
என்றபடி முன்பக்க கதவை திறந்து விட்டார்.
பின்னால் மகளை எப்படி தனியாக விடுவது என யோசனையாக திரும்பி பார்க்க ராகாவோ நீளவாக்கில் சீட்டிற்கு சரியாக இருந்தாள்... அவளின் இடதுபக்கமும் வலதுபக்கமும் ஏராளமாக இடம் இருக்க பொம்மைகள் இடத்தை அடைத்து கிடந்தது…
டேய் பயமில்லாம ஏறு உன் கைல இருக்கறதை விட அவ சேஃப்பா இருப்பா என்று கேசவ் கூறவும் சரி என்று தலையசைத்தவர் முன்பக்கம் ஏறினார்.
கார் சற்று குலுக்கலுடன் இயங்க இப்பொழுது ராகாவின் பக்கம் கிடந்த பொம்மை ஒன்று நகர அவளிடத்தில் ஒரு ஆள் அமரும் அளவிற்கு இடம் காலியானது…வாகனம் சீரான வேகத்தில் நகர...... ராகாவின் மீது போடப்பட்டிருந்த துணி அவளின் கழுத்துவரை தானாகவே முடியது...தலையில் போடப்பட்டிருந்த குல்லா அதுவாகவே கழன்று மீண்டும் காதோடு போடப்பட்டது...குளிருக்கு இதமாக காருக்குள் இருந்த கதகதப்பில் ராகா சுகமாக உறங்கினாள்.
நேராக கேசவ்வின் வீட்டிற்கு செல்ல அங்கே அவரின் மனைவி இவர்களுக்காக வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்.
முகத்தில் அமைதி நிலவ...மஞ்சள் நிற சுடிதாரில் பாந்தமாக நின்று கொண்டிருந்தார்…
அவர்களைக் கண்டதுமே அழகிய புன்னகை சிந்தியவர் இருவரையும் வரவேற்றார்...பிறகு குழந்தை ராகாவை ராமிடம் இருந்து வாங்கியவர் அவளின் சிரிப்பில் மயங்கியபடி...அண்ணா குழந்தையை நான் பாத்துக்கறேன்... இவளைப் பற்றிய பயத்தை விட்டுவிட்டு நீங்க தைரியமா உங்க வேலையை பாக்கலாம் என்றார்.
புன்னகைத்த ராம்... நீயும் கேசவ்வும் இங்க இருக்கிற தைரியத்துல தான் நான் லண்டனுக்கு வந்ததே... ராகா இல்லன்னா ஏதாவது ஒரு நாட்டுக்குப் போய் இருப்பேன்...நானே உன்கிட்ட உதவி கேக்கலாம்னு வந்தா நீயும் கேசவ்வும் முந்திகிட்டீங்க ரொம்ப நன்றி என்றவர்... சில நாட்கள் அவர்களின் வீட்டில் தங்கினார் பிறகு அருகிலேயே ஒரு வீடு பார்த்து சென்று விட்டார்.
ஆனால் வேலைக்குச் செல்லும் பொழுது ராகவை அழைத்து வந்து கேசவ்வின் மனைவி பிரியாவிடம் ஒப்படைத்து விட்டுச் செல்வார்.
மாலை அவர் வந்து சிறிது நேரம் கழித்து பிரியாவை கொண்டு வந்து ராகாவை கொடுத்து விடுவார்.. சில நாட்களிலே பிரியாவும் தாய்மை அடைந்து இரட்டை பெண் பிள்ளைகள் பெற்றெடுக்க அதற்கு காரணம் ராகாவின் அதிஷ்டம் என்று நம்பினார்...பெறாமலே அவருக்கு ராகா மூத்த பெண் பிள்ளையாக மாறினாள்.மெல்ல மெல்ல ராகா வளரத் தொடங்கினாள்…அவளை பற்றிய பயம் இல்லாமல் ராம் அவரின் வேலையை தொடர்ந்தார்...அவளின் குழந்தை பருவம் முதல் குமரியாகும் வரை எந்த ஒரு சிறு காயம் கூட அவளுக்கு ஏற்பட்டது இல்லை...அவளுடன் யார் வெளியே சென்றாலுமே அன்றைய நாள் அவர்களுக்கு அதிஷ்டத்தை மட்டுமே தரும் நாளாக இருந்தது...எல்லோருக்குமே அவள் அன்பு காட்டும் தேவதையாகவும்
அதிர்ஷ்டத்தின் பொன்மகளாவும் தெரிந்தாள்…. அனைவருமே அவளை பாராட்டி சீராட்டி தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஒருவனுக்கு மட்டும் அவள் அதிர்ஷ்டம் இல்லாதவளாக இருந்தாள்…
அவள் படிக்கும் அதே ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டியில் மேல் படிப்பிற்காக வந்திருந்தான்... தமிழகத்தின் தென்மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவன்... ராகா பிறந்த அதே ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து வந்திருந்தான்... பள்ளிப்படிப்பை பாளையங்கோட்டையிலும் கல்லூரிப்படிப்பை சென்னையிலும் முதுகலையை லண்டன் ஆக்ஸ்போர்டடில் தொடர வந்திருந்தான் ஏனோ ராகாவை முதன் முதலில் சந்தித்த நிமிடமே அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது... அவளின் தெற்கத்திய முகமா...இல்லை லண்டன் மாநகரின் நாகரீகமா என்று இந்த நிமிடம் வரை அவனுக்குத் தெரியவில்லை…
கல்லூரிக்கு வேகமாக கிளம்பிக்கொண்டிந்த ராகாவை தேடி காலையிலேயே பிரியாவும் அவரது பிள்ளைகளான சாரா,நேத்ரா மூவரும் வந்தனர்…
அக்கா என்றபடி ஒடி வரவும்…ஹாய் குட்டிஸ்...என்று வரவேற்றவள் பிரியாவை பார்த்து...
என்ன ஆச்சி மம்மி...காலையிலேயே தேடி வந்திருக்கீங்க…என்று கேட்டவளின் அழகை மெய்மறந்து ரசித்தார்.
தென்மாவட்டத்திற்கே உரிய வட்ட முகம்... லண்டன் நகரின் குளிரில் அவளது மாநிறம் கூட தங்கம் என மினுமினுத்தது... ஐந்தேகால் அடி உயரமும் சற்று பூசிய தேகமும் கொண்டவள்...அந்த உடல்வாகு கூட அவளை பேரழகியாக காட்டியது…
கருப்பு நிற முக்கால் பேன்ட் அணிந்தவள்...வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள்...அதன் மீது கருப்புகலரில் குளிருக்கு இதமாக ஜாக்கெட் அணிந்திருக்க குட்டையான முடியை விரித்து விட்டிருந்தாள்... அவளது பாண்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனும் காதில் மாட்டப்பட்டிருந்த ப்ளூடூத்தும் அவள் கல்லூரிக்கு தயாராகிவிட்டாள் என்பதை சொல்லாமல் சொல்லியது…
என்ன மம்மி...புதுசா பாக்கற மாதிரி பாக்கறீங்க…கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க காலையிலேயே என்னைத் தேடி வந்து இருக்கீங்க குட்டிஸ்ஸை ஸ்கூலுக்கு அனுப்பல ஏதாவது ஸ்பெஷலா...
ஆமா ஸ்பெஷல் தான் மறந்து போச்சா...இன்னைக்கு உன் பொறந்த நாள்... நைட்டே வந்து உன்னை நான் விஷ் பண்ணி இருப்பேன் ஆனால் நல்லா தூங்குற பொண்ணை டிஸ்டர்ப் பண்ண கூடாது இல்லையா அதுனால தான் உன்னை டிஸ்டர்ப் பண்ணல...மெனி மோர் ஹேப்பி பர்த்டே பேபி என்று அவளை கட்டியணைத்து உச்சி முகர்ந்தார்.
உணர்ச்சியே இல்லாமல் அதை பெற்றுக்கொண்டவள்...அப்போ இன்னை என் அம்மாவோட டெத் டே இல்லையா மம்மி...என்று கேட்டவள்.
அப்பா..என்று அழைத்தபடி ராமை தேடி ஒடினாள்.
அங்கே. காவ்யாவின் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்த ராம் சத்தம் கேட்டு திரும்பினார்... ஐம்பத்தி ஆறு வயதானுலும் இளமையை தக்க வைத்திருந்தார் ஆனால் தலைமுடி சால்ட் அண்டு பெப்பராக மாறி இருந்தது... கண்களுக்கு மட்டும் கண்ணாடி போடப்பட்டிருந்தார்.
என்ன ராகா...காலேஜ் போகல…
இன்னைக்கு போகல...உங்க கூட இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்…
அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ காலேஜ்க்கு போ... இன்னைக்கு நான் தனியா இருக்கனும்...என்னை தொல்லை பண்ணாத…
இல்லப்பா...நானும் உங்களோடவே…என்று கூறி முடிக்கும் முன்னே...
போன்னு சொல்றேன்ல...போக மாட்ட...என்று சத்தமிடவும் மேஜை மீது அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூ ஜாடியை யாரோ தள்ளி விட்டது போல் இருவருக்கும் நடுவில் விழுந்து உடைந்தது.
அதிர்ச்சியில் இருவருமே மேஜையை பார்க்க இப்பொழுது அதன் மேல் இருந்த காலி டீ கப்... ஆஸ்ட்ரே...என எல்லாவற்றையும் யாரோ கைக்கொண்டு தள்ளி விடுவது போல் கீழே விழுந்தது…
பயந்த ராகா அங்கிருந்து வேகமாக வெளியே ஓடினாள்.
மனம் கேளாமல் ராமும் அவள் பின்னாலே சென்றார்...நேராக பிரியாவிடம் வந்த ராகா அவரை கட்டிபிடித்தபடி அழ ஆரம்பித்தாள்.
என்னாச்சு ராகா எதுக்காக இப்படி அழற..
அப்பா திட்டிட்டாரு மம்மி...என்று கேவிக்கேவி அழுதாள்.
ம்ச்...இதுக்கு யாராவது அழுவாங்களா... இன்னைக்கு உன் அம்மாவோட இறந்த நாள் அந்த கவலைல உன்னோட அப்பா இருக்கலாம் அந்த வருத்தத்தை கூட கோபமா உன்கிட்ட வெளிக்காட்டி இருக்கலாம்...இந்த சின்ன விஷயத்துக்காக யாராவது அழுவாங்களா…
இல்ல மம்மி இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட அப்பா எனக்கு பர்த்டே விஷ் பண்ணினது கிடையாது அம்மா இல்லாதது எனக்கும் வருத்தம்தான் ஆனா அவர் பொண்ணு என் பிறந்த நாளுக்கு ஒரு தடவையாவது வாழ்த்து சொல்லலாம்ல…. இந்த வருஷம் மட்டும் இல்ல எல்லா வருஷமும் இதே மாதிரி தான் பண்ணறாரு...எனக்கும் ஆசை இருக்காதா...என்று மேலும் அழ ஆரம்பித்தார்.
பின்னாலே வந்த ராம் பிரியாவின் மீது சாய்ந்த படி அழுது கொண்டிருந்த ராகாவின் தலையை கோதியபடி சாரிம்மா...ஏனோ உன் அம்மாவை நினைக்கற அன்னைக்கு என்னால என் கோபத்தை கட்டுபடுத்த முடியல...முழுசா ஐஞ்சி வருஷம் ஒன்னுக்குள்ள ஒண்ணா வாழ்ந்தோம்…. எங்களுக்குள்ள குழந்தையே வேணாம்... கொஞ்ச வருஷம் வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் செஞ்சுட்டு அதுக்கப்புறமா ரெண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம்னு ஆசைப்பட்டோம்...அதே போல கொஞ்ச வருஷம் கழிஞ்சி தத்தெடுக்கலாம்னு எல்லா ஏற்பாடும் செஞ்ச சமயத்துல திடீர்னு என்னோட அம்மாவும் அப்பாவும் இறந்து போயிட்டாங்க …
அப்போ தான் உன் அம்மா சொன்னா நம்ம ரெண்டு குழந்தைக என்ன...நாலு குழந்தைகளை வேணாலும் தத்தெடுத்து வளர்த்தலாம்...ஆனா உங்க அம்மாவும் அப்பாவும் மறுபடியும் நம்ம வீட்டுக்கு வரனும்னா நமக்காக நாம் ஒரு குழந்தையை பெத்துக்கலாம்னு சொன்னா…
நானும் மனசை தேத்திகிட்டேன்..சொன்ன மாதிரியே தாய்மையும் அடைஞ்சா...அவ்ளோ சந்தோஷம்... என்னோட அம்மா அப்பாவை மறுபடியும் ஒரு உயிரா என் வீட்டுக்கு வரப் போறாங்கனு காத்துட்டு இருக்கற சமயத்துல ரோடு ஆக்சிடெண்ட்ல என்னை மொத்தமா விட்டுட்டு போயிட்டா…
அவ மேல எனக்கென்ன கோபம்னா ரொம்ப சுயநலமா நடந்துக்கிட்டா...அவ மட்டும் போகாம என் செல்வத்தையும் கூடவே கூட்டிட்டு போயிட்டா…
என்று உணர்ச்சி வேகத்தில் கூறவும்...அழுது கொண்டிருந்த ராகா அதிர்ச்சியில் அழுகையை நிறுத்தி விட்டு ராமை எட்டிப்பார்க்க பிரியாவும் அதிர்ச்சியில் அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிரியாவும் ராகாவும் ஒரேபோல் ராமை பார்க்க அப்பொழுது தான் அவருக்கும் உளறியது புரிந்தது.
சாரி...ராகா நான் என்ன சொல்ல வந்தேன்னா என்று கூறவும் கையைத் தூக்கி இடைமறித்த ராகா...நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க ஆனா எனக்குதான் எதுவும் புரியல …
அம்மா உங்க செல்லத்தையும் கூடவே கூட்டிட்டு போயிட்டாங்கன்னா என்ன அர்த்தம் …
ரோட் ஆக்சிடெண்ட்ல அம்மாவோட சேர்ந்து குழந்தையும் செத்துப்போச்சுனு தானே அர்த்தம்...அப்போ நான் யாருப்பா நான் உங்க பொண்ணு இல்லையா... நீங்க பேசும் போதெல்லாம் நான் நோட்டிஸ் பண்ணி இருக்கேன் பா…
என் லைஃப்ல ஏதோ இருக்கு...நீங்க அப்பப்போ அம்மாவோட போட்டோ கிட்ட பேசறதை கேட்டிருக்கேன்…
ஏன் என்னை தனியா விட்டுட்டு போனேன்னு கேப்பீங்க….நான் உங்க பொண்ணுன்னா எப்படி உங்களை தனியா விட்டுட்டு போனதா சொல்லுவீங்க...துணைக்கு தான் என்னை விட்டுட்டு போயிருக்காங்களே...அப்படி இருக்கும் போது ஏன் உங்க வாய்ல இருந்து அந்த வார்த்தை அடிக்கடி வரனும்...
என்னவோ இருக்கு பா அது உங்க வாயால நான் சொல்ல வைக்கறேன்... இதுக்கு மேல உங்க கிட்ட நான் ஏதும் பேசப்போறதில்லை... நான் காலேஜ் போறேன் பாய் மம்மி என்று கூறிய படி வெளியே சென்றாள்...
சற்று நேரத்திற்கெல்லாம் அவளின் நான்கு சக்கர வாகனம் வெளியேறும் சத்தம் கேட்கவும் தலையில் கைவைத்துக்கொண்டு ராம் அப்படியே அமர்ந்து விட்டார்.
சற்று நேரம் வரை அவரின் முன்பு நின்ற பிரியா எதுவும் பேசாமல் வீட்டை நோக்கி திரும்பிச்செல்ல பிரியா என்று ராம் அழைக்கவும் என்ன அண்ணா என்று கேட்டபடி நின்றார் .
ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா என்று கேட்கவும்.
சொல்லுங்க அண்ணா…
உன் குழந்தைக எங்க…
அவங்க அப்பவே வீட்டுக்கு போயிட்டாங்க…
ம்ம்...சரி…
என் ரூம்ல
பிளவர் வாஸ் உடைஞ்சிடுச்சு... கொஞ்சம் கிளீன் பண்ணி விடுறியா என்று கூறவும் சரி என்பது போல் உள்ளே சென்றவர் நிமிட நேரத்திலேயே திரும்பி வந்தார்.
அதுக்குள்ள கிளீன் செஞ்சாச்சா என்று ஆச்சர்யபாக பார்த்த ராமிடம்…
அண்ணா ரூம் ரொம்ப கிளீனா இருக்கே... இனியும் எப்படி கிளீன் பண்ணுறது என்று கேட்டவர்...சற்று தயங்கியபடி வரவர உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு அண்ணா…
அனேகமா வேலையையும் வீட்டையும் ஒண்ணா சேர்த்து ரொம்ப கன்ப்யூஸ் பண்ணிக்கறீங்கன்னு நினைக்கிறேன் அதனால தான் என்ன பேசுறோம்னு தெரியாமலே பேசுறீங்க….
எல்லா விஷயத்திலும் சட்டு சட்டுனு மறந்திடறீங்க... ரோட் ஆக்சிடெண்ட்ல அண்ணி மட்டும் தான் இறந்தாங்க உங்க குழந்தை உங்களோட தான் இருக்கறா... இந்த விஷயத்தை அடிக்கடி நீங்க மறந்தடறீங்க போல அதனால தான் அண்ணி போட்டோவை பார்க்கும் போதெல்லாம் உங்களை மறந்து பேசிடறீங்க ...பாருங்க ராகா முழுசா தப்பா புரிஞ்சிகிட்டா... பிறந்தநாள் அதுமா அழவச்சி அனுப்பீட்டிங்க…
சாரி பிரியா…
காவ்யா அடிபட்டுக் கிடக்கும் பொழுது ராகாவும் ரொம்ப நேரம் அழாம இருந்தா…. அந்த சமயத்துல என் மைண்ட்ல ராகா என்னை விட்டுட்டு போயிட்டா அப்படிங்கறது மூளைல பதிஞ்சி போயிடுச்சு அதனாலதான் அடிக்கடி என்னை மறந்து அந்த வார்த்தையை உபயோகப்படுத்தறேன்…
இதை எப்படியாவது ராகாவுக்கு புரிய வையேன்... என்று பாவமாக கேட்டார்.
நீங்க கவலையை விடுங்க அண்ணா...ராகா காலேஜ் முடிஞ்சு வந்ததும் அவளை சமாதானப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னோடு நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் வர்றேன் கொஞ்சம் உடம்பை பாத்துக்கோங்க அண்ணா என்று அறிவுரை கூறிய படி பிரியா வெளியே சென்றார்.
பேசிய வார்த்தைகளை எப்பொழுதுமே அள்ள முடியாது... அதுவும் அவர் தன்னை மறந்து கூறிய உண்மையை மறுபடியும் ராகாவிடம் பொய்யென மறுத்து பேச வேண்டும் எப்படி
சாயங்காலம் மகளை எதிர்கொள்வது…என்று மனதளவில் பயந்தார்.
நிமிட நேரத்தில் தன்னுடைய நாக்கு தன்னுடைய பேச்சை கேட்காமல் அது பாட்டுக்கு ஏதேதோ பேசி விட்டதே...அதனின் எதிர்வினையை எப்படி தாங்கிக்கொள்வது என்று பலவாறாக யோசித்தவர் அறைக்குள் செல்ல ப்ரியா சொன்னது போல அறை அவ்வளவு சுத்தமாக இருந்தது…
இந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை ஆனால் அவர் லண்டன் வந்த நாளிலிருந்து இதுபோல் சில அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது... தலையில் கைவைத்தபடி அங்கிருந்த கௌச்சில் சாய்ந்து அமர அறையில் எப்போதும் இருக்கும் வெப்பத்தை விடவும் அதிகப்படியான வெப்பம் இருப்பதைப் போல் உணர்ந்தார்.
அவர் மட்டும் அந்த அறையில் இல்லை வேறு யாரோ இருக்கிறார்கள் என்பது அவருக்கு அருகில் கேட்ட மூச்சுச் சத்தம் உணர்த்தியது...யார் இவ்வளவு அருகில் அமர்ந்தபடி மூச்சி வாங்குவது என்று கண் திறந்து பார்க்க அறையில் யாருமே இல்லை…
யாரு...யாரது...என்று சத்தமாக கேட்கவும்
அறை அமைதி காத்தது…
மனதிற்குள் பயந்தவர் வேகமாக வெளியே வர அவரின் வீட்டு முகப்பில் போடப்பட்டிருந்த வாஸ்து மணி ஒலி எழுப்ப ஆரம்பித்தது…
எப்படி தானாக ஒலி எழுப்புகிறது என்று அதையே சற்று நேரம் உற்றுப் பார்க்க மெல்ல மெல்ல ஒரு புகை போன்ற உருவம் அதனின் கைக்கொண்டு மணியை ஆட்டியபடியே ராமை முறைத்துக்கொண்டு நின்றது...