8.
யாரு...யாருன்னு கேக்கறேன்ல…
மணியின் ஓலி நின்றது.
பக்கத்தில் சென்றவர்...ஐ நோ..இங்க என்னை தவிர வேற யாரோ இருக்கீங்க...யாருன்னு சொல்லிடுங்க...ஏன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உடைஞ்ச பிளவர் வாஷ் ஆகட்டும் அதுக்கப்புறமா டேபிளில் இருந்த பொருட்கள் சிதறினதாகட்டும்... எதுவுமே நடக்காத மாதிரி ரூம் கிளீன் ஆனது ஆகட்டும் எல்லாமே எனக்கு சொல்லற விஷயம் மனுஷனுக்கு மீறின சக்தி இங்க இருக்கறது...அதை நானும் உணர்றேன்…
ஆனா நீ யாரா இருந்தாலும் மனித சக்தியையும் கடவுள் சக்தியையும் தாண்டி பெருசா இருக்கு முடியாது அதை ஞாபகம் வெச்சுக்கோ... நீயா வெளிய வந்திடு... உனக்கு என்ன வேணும்...என்று சத்தமாக கேட்கவும்…
ஐய்யா...என்று ஒரு பெண்ணின் மெல்லிய கதறல் சத்தம் கேட்டது…
ஸ்தம்பித்து நின்றவர்...இந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கேனே...எங்க என்று கண்களை மூடி யோசித்தார்.
இப்பொழுது அழுகையுடனே...ஐய்யா நான் தான் கலைவாணி...பிரவசம் பாத்தீங்களே….
நான் யாருக்கு பிரசவம் பாத்தேன்...அம்மாவோட நிறையா பேருக்கு பாத்திருக்கேன்...ஆனா யார் பேருமே நியாபகம் இல்லையே…
நிறையா பேருக்கு பிரசவம் பாத்திருக்கலாம்... தனிப்பட்ட முறையில யாருக்கெல்லாம் பிரசவம் பாத்திங்கன்னு யோசிச்சு பாருங்க அய்யா…
தனிப்பட்ட முறையிலனா என்று யோசித்த உடனே கலையின் நியாபகம்…
உடனே சுதாரித்து கொண்டவர்….அப்போ நீ ராகாவோட அம்மா..என்றவர்...சரி இப்போ எதுக்காக என்னை தேடி வந்திருக்க...என்று அறையை சுற்றியபடியே பேசினார்.
உங்க கடமையை நியாபக படுத்த வந்திருக்கேன்...
உளறாத... எனக்கென்ன கடமை இருக்கு அதும் உன் விஷயத்துல…
ஏன் ஐய்யா பதட்டபடறீங்க... உங்ககிட்ட இருந்து எதையும் பறிச்சிட்டு போக வரல...நியாபக படுத்ததான் முன்னாடி வந்தேன்...
அதான் ஏன் வந்த...இவ்ளோ நாள் பொறுமையா இருந்தல்ல அதே மாதிரி உன் ஆன்மாவோட ஆயுள் முடிஞ்சி போற வரைக்கும் இருக்க வேண்டியது தானே..
நீங்க என் மகளை பாத்துக்கறதை பாக்கும் போது அப்படித்தான் போகனும்னு தோணுதா...ஆனா என் கடமை முடியற வரைக்கும் என்னோட ஆத்மாவுக்கு சாந்தி இல்லனு தெரியும் போது இன்னும் எத்தனை நாள் பேயா சுத்தறது...முடியல அய்யா...என் மகளை அவ அப்பாகிட்ட அனுப்பி வைச்சி என் ஆத்மாவை சாந்தியடைய வைங்க…
முடியாது கலை...அவ என் பொண்ணு...அவ அப்பா நான் மட்டும் தான்...இப்போ ராகா அவ அப்பாவோட சந்தோஷமா தான் இருக்கறா நீ கிளம்பு... என்றவர்...அப்புறம் முக்கியமான விஷயம் என் மகளை நான் திட்டுவேன் அடிப்பேன் என்ன வேணாலும் செய்வேன் இனிமே இது போல பயமுறுத்துவது வாசல்ல நின்னு முறைச்சி பார்க்கற வேலையெல்லாம் வெச்சுகாதே.
இன்னொரு முறை என் அனுமதி இல்லாமல் வீட்டுக்குள்ள வர்றதை பார்த்தேன் நடக்கறதே வேற ...உன் பொண்ணு மேல உண்மையான அக்கறையும் பாசமும் இருந்தா அப்படியே போயிடு...
ஐய்யா மன்னிச்சுடுங்க...நீங்க அவளை திட்டினாலோ அடிச்சாலோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா கண்ணுல தண்ணி வரும் போது ஓரு தாயா என்னால தாங்க முடியல…
அந்த தாய் இத்தனை நாள் எங்க போனா...இவ்ளோ நாள் என் பொண்ணு பல முறை அழுதிருக்காளே…
இங்கயே தான் ஐய்யா இருக்கறேன்...என் பொண்ணை எப்போ உங்களோட தூக்கிட்டு வந்திங்களோ அப்போ இருந்து என் பொண்ணுக்கு துணையா அவளோடவே தான் இருக்கறேன்...அவ வேற எதுக்காவது அழுதா உங்க முன்னாடி வந்து நின்னுருப்பேன்...ஆனா அவ என்னைத் தேடி அழும்போது எப்படி நான் உங்க முன்னாடி வந்து நிக்க முடியும்…
ஓஹோ...அப்போ ஒரு வளர்ப்பு தந்தையா கூட நான் உன் பொண்ணு கிட்ட கோபத்தை காட்ட கூடாது மீறி காட்டினா...ப்ளவர்வாஷை போட்டு உடைப்ப...வாசல்ல நின்னு என்னை மிரட்டுவ அப்படித்தானே...என்றவர் குரல் வந்த திசையை பார்த்த படி கேள்வி கேட்டார்.
*****
பதில் சொல்லு...கலை…
ஐயா என்ன மன்னிச்சிடுங்க பொண்ணு அழுதுகிட்டே வெளியே போகும் போது என்னோட கோபத்தை எப்படி காண்பிக்கிறதுனு தெரியாமல் அப்படி நடந்துக்கிட்டேன்...நான் செஞ்சதை மன்னிச்சி பெரிய மனசு பண்ணி ராகாவை அவ அப்பா கிட்ட அனுப்பி விடுங்க …
முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் கலை ...மறுபடியும் மறுபடியும் அதை பத்தி பேசாத என் பொண்ணு எனக்கு மட்டும்தான் பொண்ணு அவளுக்கு வேற எந்த அப்பாவும் கிடையாது அவளை நான் வேற எங்கேயும் அனுப்பவும் முடியாது…
அதான் இன்னைக்கு உங்க வாயாலேயே அவ உங்க மக இல்லனு சொல்லிட்டீங்களே...பிறகு என்ன தயக்கம்…
அப்படி பேச வச்சதே நீ தான் நான் என்னைக்குமே என் நிதானத்தை இழந்ததில்லை...ஆனா இன்னைக்கு அளவுக்கு அதிகமா நான் கோபபட்டது... என் பொண்ணுக்கிட்ட அப்படி பேசினது எல்லாத்துக்கும் நீ தான் காரணம்...இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி நான் கோபபட்டேன்...என் பொண்ணு அதனால அழுதா... அதுக்காக முன்னாடி வத்தேன்னு கதை சொல்லற...இதை நம்ப தயாரா இல்லை...முதல்ல வெளியே போ...இனிமே என் பொண்ணு பக்கத்துல நீ வரவே கூடாது…
இல்லய்யா நீங்க அப்படி சொல்ல கூடாது...அவளை நீங்க ஓப்படைப்பீங்கனு தான் நான் போனது...ஆனா நீங்க அவள கொடுக்காம இருக்கறது சரியில்லை... இருபது வருஷமா ஒவ்வொரு நாளும் நீங்க அவருகிட்ட உண்மையை சொல்லுவீங்கன்னு காத்துகிட்டு இருந்தேன் ஆனா இத்தனை வருசத்துல ஒரு நாள் கூட நீங்க அவகிட்ட உண்மையை சொல்லவே இல்ல…
பாசம் காட்டறீங்க... பெத்த பொண்ணுக்கு மேல அன்பு காட்டறீங்க அந்த அன்பும் பாசமும்தான் என்னை உங்ககிட்ட இருந்து என்னை தள்ளி வைச்சது... ஆனா இனியும் நான் தள்ளி நின்னு வேடிக்கை பார்த்தா... என்னோட உயிர்தியாகத்திற்கும் என் அம்மாவோட உயிர்த் தியாகத்துக்கும் அர்த்தம் இல்லாம போய்டும் அதனால் தயவு செஞ்சு ராகா கிட்ட உண்மையை சொல்லி அவளோட அப்பாவோட சேர்த்து வையுங்க…
முடியவே முடியாது கலை இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்கும் அவகிட்ட உண்மையை சொல்ல போறதில்ல... காலையில என் மூலமா நீ பேசினது எல்லாத்தையும் என் பொண்ணு வந்ததும் நானே சரி செஞ்சிடுவேன் என் பொண்ணு கிட்ட எப்படி பேசினா அவ நம்புவாளோ அப்படி பேச எனக்கு தெரியும் .
அவளுக்கு ஒரே ஒரு அப்பா தான் அது நாம் மட்டும் தான் அதனால அவள அனுப்பவே முடியாது வேற ஏதாவது கேளு உனக்காக நான் செய்றேன்…
எனக்கு ராகாவை அவ அப்பாவோட சேரவிடனும் அதுமட்டும் தான் வேணும்... நீங்க என் பொண்ணு மேல வச்சிருக்கிற பாசம் என் கைய கட்டி போட்டு இருக்கு அப்படி இல்லன்னா என் பொண்ணை எப்படி கூட்டிட்டு போகணும்னு எனக்கு தெரியும் ஆனா அப்படி எல்லாம் நீங்க போக விடமாட்டீங்கனு உங்கள நம்பி கெஞ்சிக் கேட்கிறேன்….
அப்படி கூட்டிட்டு போறதுக்கு நீ வந்தா அதை எப்படி தடுத்து நிறுத்தனும்னு எனக்கும் தெரியும் உன்னால என்ன முடியுமோ அதை பண்ணிக்கோ கடைசி வரைக்கும் என் பொண்ணுக்கு என்னோட தான் இருப்பா அவ உயிருக்கு ஆபத்துனு தெரிந்தும் அவளை எமனோட குகைக்குள்ள அனுப்ப மாட்டேன்.
அவளுக்கு அரணா நான் இருப்பேன்...என்னை நம்புங்க…
நான் மனுஷங்களை நம்பியே பல வருஷம் ஆச்சி...பேயோட வாக்கை நம்ப தயாரா இல்ல... பிறந்த குழந்தைனு கூட தெரியாம ராகாவை கொலை பண்றதுக்கு அலைஞ்சானுக...அவனுக கிட்ட மறுபடியும் என்னை பொண்ணை அனுப்பனுமா...நெவர்...என் உயிரே போனாலும் ஒருத்தனோட நிழல் கூட என் பொண்ணு மேல பட விடாமாட்டேன்...என்று சுவற்றை பார்த்த படி பேசினார்.
இப்போ கூட முடியாதா ஐயா..
என்றபடி அவரின் முன்பு மண்டியிட்டபடி கண்களில் கண்ணீருடன் கலையின் வெண்புகை பிம்பம் அவரின் முன்பு தோன்றியது.
நிமிடத்திலே கால்களை பின்னிற்கு இழுத்துக் கொண்டவர் முதல்ல எந்திரி என்றார்.
இல்ல நீங்க அவளை அனுப்பறேன்னு சொல்லணும்…
முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்ல...ஒரு முறை நீ கெஞ்சின பாவம் பாத்தேன்.
என் ஹாஸ்பிட்டல் சுதா இப்படி அத்தனை பேரும் போனாங்க... இப்போ நீ மறுபடியும் என்கிட்ட கெஞ்சற... இப்போவும் நான் உனக்கு பாவம் பார்த்தா ஒட்டுமொத்தமாக என் சந்தோஷத்தை பறிச்சிட்டு போயிடுவ...முதல்ல இங்க இருந்து... என் பொண்ணை விட்டு... எங்களை விட்டு தூரமா போ...இது உன் பொண்ணு மேல சத்தியம்...இனி எங்கயுமே உன்னோட உருவத்தையோ,குரலையோ நான் கேக்கக்கூடாது...என்று கோபமாக விரட்டி விட்டார்.
ஐய்யா...என்று கதறியபடியே உருவம் மெல்ல கரைய...தீடிரென ராம் கலை போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு உதவி செய்…
சொல்லுங்க அய்யா..
என்னோட அம்மா அப்பா மனைவி குழந்தை எல்லாரும் எப்படி இருக்காங்க நீ அவங்கள பாத்தியா உனக்கு அவங்க எல்லாரும் தெரிவாங்களா... என்னோட ஒருமுறை பேச வைக்கிறியா என்று சற்று நாதழுதழுத்த படி கேட்கவும்
அவங்க எல்லாருமே புண்ணிய ஆத்மாக்கள் அய்யா...எப்பவோ கடவுளோட திருவடிக்கு போயிட்டாங்க... நான் தான் பாவி...என் கடமை முடியாததால பேயா அலையறேன்...நீங்க மனசு வச்சா எனக்கும் மோட்சம் கிடைக்கும்…
உன்னை நான் போக சொல்லிட்டேன்...முதல்ல கிளம்பு என்று கோபமாக கூறியவர் அவரின் அறைக்குள் சென்று அடைந்து கொண்டார்.
பிறகு குடும்ப புகைப்படத்தை எடுத்து பார்த்தவருக்கு கண்கள் தானாக கலங்கியது...பிறகு புகைப்படத்திற்கு அழுத்த முத்தமிட்டவர் உடனடியாகவே கேசவ்விற்கு ஃகால் செய்தார்.
கேசவ் நான் ராம் பேசறேன்…
சொல்லுடா... இன்னைக்கு நீ மௌனவிரதம் டிஸ்டர்ப் பண்ணாதன்னு சொன்ன...இப்போ நீயே கூப்பிடற..எதாவது முக்கியமான விஷயம்மா…
ம்ம்...இந்த ஊர்ல ஆவி,பேய் இதையெல்லாம் கட்டுபடுத்தறவங்க யாராவது இருக்காங்களா…
இருக்கிறாங்களாவா நம்ம லண்டன்ல நம்பர் ஒன் பிசினஸ்ஸே இந்த பேயை விரட்டறது...ஆவியை விரட்டறது தான்…
ஏகப்பட்ட பேர் இப்படிதான் பொய் சொல்லிகிட்டு திரியறானுக... ஆமா நீயேன் தீடிர்னு இது பத்தி விசாரிக்கற…
காரணமாத்தான்...இந்த ஆவியை விரட்டறவங்கள்ல ஓரளவுக்கு நேர்மையானவங்க யாராவது இருந்தா கொஞ்சம் சொல்லேன்…
ம்ம்...சொல்லிடலாம்... ஆனா உனக்கும் இந்த விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்…
டேய் மொதல்ல நான் சொன்னதை செய்..
பணம் எவ்வளவு செலவானாலும் சரி ஆனால் நம்பிக்கையானவங்களா இருக்கணும் கொஞ்ச நாளாவே என் வீட்டை சுத்தி ஏதோ துஷ்ட சக்தி இருக்கறது போல தெரியுது…அது என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யுது...ஏதேதோ சம்பந்தம் இல்லாம பேசறேன்...நடந்துக்கறேன் அதை எல்லாம் கட்டு படுத்தனும்...
நீ சொல்லறதுக்கும் ஆவிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல ராம் வொர்க்ல ஓவர் பிரஷர் ஷோ ரொம்ப மன அழுத்தத்தில இருக்கனு நினைக்கிறேன் அதனால தான் இது போல எல்லாம் நம்பிக்கை வருது ஒரு நல்ல சைகேடிஸ்ட் பாரு உனக்கு கொஞ்சம் பெட்டரா ஃபீல் ஆவ…
டேய் அப்போ என்னை பைத்தியக்காரன்னு சொல்லறியா என்று கோபம் கொண்டார்.
ஹேய் கூல்.. கூல் இப்போ என்ன ஆவி விரட்டற ஆளுக வேணும் அவ்வளவு தானே... நம்ம தமிழர்கள்ல இருந்து கேரள நம்பூதிரி வரைக்கும் இந்த லண்டன்ல செமயா கடை போட்டு இருக்காங்க உனக்கு எந்த ஸ்டேட் ஆளுக வேணும்னு கேளு இல்லையா வெள்ளைக்காரன்தான் வேணும்னாலும் சொல்லு கூட்டிட்டு வந்திடறேன்…
இப்போ வேணாம் சாயங்காலம் சொல்லறேன் கூட்டிட்டு வா…
சரிடா எனக்கு கேஸ் இருக்கு பாக்க போறேன் டேக் கேர் டா...என்றபடி கேசவ் ஃபோனை வைத்தார்.
ராம்மும் மொபைல் போனை அணைத்து பாக்கெட்டில் வைத்தவர் சுவற்றை பார்த்த படியே நீ வந்து என் பொண்ணை அனுப்பிவைனு சொன்னா நான் அனுப்பி வைக்கணுமா... உன்னை அனுப்பி வைக்கிறேன் நிரந்தரமா என் பொண்ணு கிட்ட இருந்து ...நீ இருந்தா தான அவள கூட்டிட்டு போவ... வாழ்க்கையே முடிஞ்சு போச்சு..
மீதி இருக்கற வாழ்க்கை போதையோட தயவுலனு இருந்தவனுக்கு வாழ்வதற்கான ஆசையைக் காட்டி ஒரு நம்பிக்கையை கொடுத்தவ ராகா...அவளை அங்க அனுப்பிட்டா இங்க எனக்கென்ன வேலை...அதும் அவளோட உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும்...நான் அனுப்புவேன்னு எப்படி கலை நீ நம்பலாம்... ராகா என் பொண்ணா இந்த வீட்ல இருக்கிற வரைக்கும் நீ எங்க ரெண்டு பேரையும் பிரிக்கனும்னு நினைக்க மாட்டே…
நானா விருப்பப்பட்டு அவளை அனுப்பி வைக்கனும்னு நீ ஆசைப்படற...நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் என் பொண்ணை நான் அனுப்ப மாட்டேன் உனக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா அதை இப்பவே குழிதோண்டிப் புதைச்சிடு…
வீட்டுக்கு வெளியே பேயா சுத்திட்டு இருக்குற உண்ணை ஏதாவது ஒரு மரத்துல ஆணி அடிச்சு உட்கார வைக்கறேன் என்றார்.
வீட்டுக்கு வெளியே சுற்றிக்கொண்டிருந்த கலையோ ராமின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வீட்டிற்க்குள் வராமல் ...ஐய்யா வேணாம் அப்படி மட்டும் செஞ்சிடாதீங்க….என் மகளுக்கு ஒரு ஆபத்துனா என்னால மட்டும் தான் அவளை காப்பாத்த முடியும்...என்னை அடக்கிட்டா அவளை யாராலும் காப்பாத்த முடியாது என்று கதறிக் கொண்டு இருந்தது.
ஆனால் கலையின் கதறல் இராமின் காதுகளுக்கு கேட்கவே இல்லை.