கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-10

Akila vaikundam

Moderator
Staff member
10.

ஆபீஸ்ல.. அதும் பொண்ணுங்க வேலை செய்ற இடத்துல இந்த மாதிரி சட்டை பட்டனை கழட்டு விட்டுட்டு தண்ணி அடிக்கிறது தப்பு இல்லையா என்று கேட்டபடியே வந்தவன் பக்கவாட்டில் இருந்த சோபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான்.


என் ஆஃபிஸ் குள்ள வந்து…நான் எப்படி இருக்கணும்னு நீ எனக்கு டியூஷன் எடுக்காத..என்ற படி மதுகோப்பையை காலி செய்தான்.


ச்சே…நான் கூட உங்களை பற்றி என்னவோன்னு நினைச்சேன் இங்க வந்த பிறகு தான் தெரியுது நீங்க எப்படி பட்ட மனுஷன்னு இது போல கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவன் கிட்ட எப்படி ஒரு பொண்ணால குடும்பம் நடத்த முடியும்.


இது தெரியாம நானும் உங்ககிட்ட பேச வந்தேன் பாருங்க என்னைச் சொல்லனும்.. என்று கூறி முடிக்கும் முன்னே.


விக்கியின் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கி நிறுத்திய ஹரி…இனியோரு முறை என் குடும்ப வாழ்க்கையை பத்தி பேசினா இங்கிருந்து நீ உயிரோட போக முடியாது தெரிஞ்சிக்க..



உனக்கு ஒரு விஷயம் தெரியுமா நீ சொன்னியே ஒரு பொண்ணு அந்த ஒருத்திக்காக…நான் பார்ட்டிஸ் போனா கூட இந்த பாட்டிலை தொடாம வந்திருந்தேன்…


அப்படி பட்ட என்னை அதே ஓரு பொண்ணுதான் நேத்து ராத்திரியில இருந்து விடாமல் குடிக்க வச்சுட்டு இருக்கா.


இப்போ கூட இதை நான் விரும்பி செய்யல… நீ வந்திருக்க…இதையெல்லாம் பார்த்துட்டு போய் உன் அருமை தோழி கிட்ட சொல்லணும்..


ஏன்னா அந்த அருமை தோழிக்கு தண்ணி அடிக்கறவனை பிடிக்காது… நான் குடிக்கிறேன்னு கேட்டதும் கொஞ்சமாவது அவ வருத்தப்படணும்.


குடிக்கவே மாட்டேன்னு சத்தியம் பண்ணினவன் இன்னைக்கு குடிக்கிறானேன்னு அவ வேதனையில துடிக்கணும்.



ஒரு வருஷம் கூட முழுசா என்னோட அவ குடும்பம் நடத்தல…அதுல எத்தனை முறை சிரிச்சிருப்பா, எத்தனை முறை என்கிட்ட பேசியிருப்பான்னு கூட ஞாபகம் இல்ல.


அந்த அளவுக்கு உம்மனாம் மூஞ்சி …ஆசையா நான் பக்கத்துல போனாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டா…அவளா விரும்பியும் என் பக்கத்துல வரமாட்டா..என்று சொல்லும் பொழுது அவர்களின் அந்தரங்கங்களை தன்னுடன் பகிர்கிறானே என்ற சங்கோஜத்தில் முகத்தை இடப்பக்கமாக திருப்பினான் விக்கி.


அவனின் முகத்தை கைகளால் பிடித்து திருப்பிய ஹரி ..கேட்கவே உனக்கு ஒரு மாதிரியா இருக்கு இல்ல …அப்போ குடும்பம் நடத்தின எனக்கு எப்படி இருக்கும்…என்கிட்ட எப்பவும்
பொம்மை மாதிரி தான் உணர்ச்சி இல்லாதவ மாதிரி இருப்பா…


அவ சிரிக்க மாட்டாளா..என்னோட பேசமாட்டாளானு ஒவ்வொரு முறையும் அவ முகத்தை பார்த்து பார்த்து ஏமாந்தவனுக்கு தான் அந்த வலி என்னனு தெரியும்‌…


ஆனா நேத்து உன் பின்னாடி உட்கார்ந்துட்டு என்னமா சிரிக்கிறா.. என்னமா விளையாடுறா…



அதை ஏன் கட்டுன புருஷன் எங்கிட்ட அவ காமிக்கல..அந்த வேதனை தான் இன்னைக்கு ஆபீஸ் ரூம்ல உட்கார்ந்து இப்படி அலங்கோலமா உட்கார்ந்து குடிக்க வச்சிருக்கு.
என்று விக்கியை பின்னால் தள்ளிவிட்டவன்.



போ நேத்து உன்னோட அவளை சேர்த்து பாத்ததால கோபத்துல அவ வீட்டு ஆளுக கிட்ட கொஞ்சமா கத்திட்டேன்.. கண்டிப்பா அவளை ஏதாச்சும் சொல்லியிருப்பாங்க.



காலையில் உன்கிட்ட வந்து கண்ணை கசக்கி இருப்பா …உடனே என்னை நம்ப வைக்கறதுக்காக…நாங்க அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டு போறதுக்காக நீ வந்திருக்க…அவ்வளவுதானே நான் நம்பிட்டேன்.


உங்களுக்குள்ள ஒன்னும் இல்ல… நீங்க ரெண்டு பேரும் ஜாலியா ஒரு லாங் டிரைவ் போனீங்க… தெரியாம நான் இடைல கிராஸ் ஆயிட்டேன் போதுமா… கிளம்பு .என்றபடி மீண்டும் அவனது இடத்தில் அமர்ந்து கோப்பையை நிறைக்கத் தொடங்கினான்.


ப்ளீஸ் நீங்க குடிக்காதீங்க…இது எனக்காக சொல்லல உங்களுக்காக சொல்றேன் பட்ட பகல்ல இவ்ளோ குடிச்சீங்கன்னா உங்களால சாயங்காலம் வரைக்கும் ஆபீஸ்ஸை பார்க்க முடியாது.


திடீர்னு புது கிளையண்ட் வந்துட்டா… இந்த பழக்கம் உங்களுக்கு அந்த வாய்ப்பை குடுக்க விடாம பண்ணிடும்.


ம்ம்…வாழ்க்கையே போயிடுச்சி இனி பிஸினஸ் போனா என்ன இருந்தா என்ன…என்றபடி மீண்டும் குடிக்கும் பணியை தொடர்ந்தான்.


நீங்க சொல்லறதை பாக்கறப்போ …இப்போ இந்த குடிக்கான காரணம் நான்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு என்றவனிடம்..


ஏளனப் புன்னகையை கொடுத்தவன்…
இன்னும் நீ கிளம்பலையா என்பது போல பார்த்தும் வைத்தான்.



இதற்கு மேலும் இங்கிருந்தால் மரியாதை இல்லை என உணர்ந்தவன் வெளியே வந்தான்.


அப்பொழுது வெளியே சபரீனா கையில் இருந்த கோப்பை நெஞ்சோடு அணைத்தபடி நின்றாள்.


இவனைப் பார்த்து சினேகமாக புன்னகைத்தவள் அவனைக்கடந்து அறைக்குள் செல்ல எத்தனித்தாள்.


அதை பார்த்த விக்கி…எக்ஸ்க்யூஸ் மீ என அழைக்கவும்.


எஸ் என அவள் திரும்பி பார்த்தாள்.


சாரை பாக்க போறீஙகளா..?


ம்ம்..என தலையசைக்கவும்.


அவர் இப்போ யாரையும் பாக்கற நிலைல இல்ல என்றவனிடம்.


அவசரமா ஒரு சைன் வாங்கனும்..என இழுத்தவளிடம்.


அவர் கையெழுத்து போடற நிலையிலும் இல்ல என்று சொல்லும் பொழுதே உள்ளே சுவற்றில் மோதி பாட்டில் உடையும் சத்தம் கேட்கவும் பயந்த சபரீனாவிடம்.


சொன்னேன்ல என்பது போல பார்த்துவிட்டு வேகமாக வெளியேறினான்.

கட்டிடத்தின் தரைத் தளம் வந்து அவனது வாகனத்தை இயக்கும் வரை மனதில் அப்படியொரு போராட்டம்.


ஹரியிடம் எதையும் கேட்கவும் முடியவில்லை,பேசவும் முடியவில்லை.. அவன் காலையிலேயே கிளம்பி ஹரியை சந்திக்க வந்ததற்கான காரணம் கௌசல்யாவை விட்டு ஏன் பிரிந்தான் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான்.


ஆனால் ஹரிபிரசாத் விக்கியிடம் பேசவே மறுத்து விட்டான்.


நேற்று அவளை வாகனத்தில் அழைத்துச் சென்றதற்கான கோபத்தை மட்டுமே வெளிக்காட்டியவன் பிரிந்த வாழ்வதற்கான காரணத்தை வாய் திறந்து கூறவில்லை .


அவன் சொல்வதைப் பார்த்தால் கௌசியிடம் ஏதாவது தவறு இருக்குமோ என்று முதல் முறையாக தோன்ற ஆரம்பித்தது.


இவன் சொல்வதை பார்த்தால் நேற்று கௌசியை ரோட்டில் பாத்தவுடனே அவளது வீட்டிற்கு அழைத்து சண்டையிட்டிருக்கிறான்.


அந்த கோபத்தை தான் லட்சுமி அவனிடம் காட்டியிருக்கிறார்.
அப்படியென்றால் கௌசியிடம் நேற்று அவளது தாயார் கோபத்தை காட்டியிருப்பார் என்றே தோன்றியது.


இது எல்லாமே நியாயமான காரணங்கள் தான்.ஆனால் ரோட்டில் கணவனை கண்டதும் ஏன் கௌசி அந்த அளவு பயப்பட வேண்டும்.. அப்படியென்றால் கௌசியில் உள்ளத்தில் இருக்கும் சூது என்ன?.


அவளது மனதில் எந்த ஒரு கயமைத்தனமும் இல்லையென்றால் எதற்காக கணவனை கண்டு அந்த அளவு பதறியடிக்க வேண்டும்..இதை அறிந்தே ஆக வேண்டும்..இதையறியாமல் இனி அலுவலகம் சென்று அவளை நேருக்கு நேர் சந்திப்பது முடியாத காரியம்.
என்ற முடிவுடன் அவனது வீட்டை நோக்கி பயணித்தான்.


கௌசி யின் வீட்டிலோ தாயிடம் சண்டையிட்டு அழுது முடித்தவள் அப்படியே உறங்க விட்டாள்.


எழும் பொழுது நேரம் மாலையை தாண்டியிருந்தது.


அண்ணன்,அண்ணி என அனைவரின் பேச்சு சத்தமும் கூடத்தில் கேட்க எழுந்து வெளியே செல்ல பிடிக்க வில்லை.


அனுவின் அழுகுரல் சன்னமாக கேட்கவும்..பின்னாலே லட்சுமியின் சமாதானப்படுந்தும் முயற்சியையும் கேட்க முடிந்தது.

அதே சமயம் ஜானுவின் குரலும் கூடவே ஒலித்தது.


அத்தை நிஷாந்த் பாருங்க எவ்வளவு நேரமா உங்களை தூக்க சொல்லிட்டு காலை கட்டிட்டு இருக்கான்..பேத்தியை கவனிக்கறதுல பாதியாவது பேரனையும் கவனிக்கலாம்ல..என்று முடிக்கும் முன்.


கேசவனின் குரல் கூடவே ஒலித்தது இப்போ என்ன நிஷாந்த்தை அம்மா தூக்கணும் அவ்வளவுதானே என்று கேட்டவன்.


அம்மா அனுவை இப்படி குடுங்க நீங்க நிஷாந்த்தை தூக்கிக்கோங்க என்றபடி மருமகளை அவனிடத்தில் வாங்கினான்.


வாங்கியதுதான் தாமதம் அனு வீறு கொண்டு அழ ஆரம்பித்தாள்.


தூக்கியப் பேரனை அப்படியே விட்டுவிட்டு பேத்தியை லட்சுமி வாங்கிக் கொள்ள ஜானு இது தான் சாக்கு என்று பிடித்து விட்டாள்.

ஏன் அத்தை இப்படி பண்ணறீங்க என்று கேட்ட படியே மகனை தூக்கி சமாதான படுத்தியவள்…


நானும் பார்த்து கிட்டே இருக்கேன்..ரொம்ப ஓவரா போறீங்க… உங்க பேத்தி விட என் பையன் எந்த வகையில குறைஞ்சிட்டான்..


எப்போ பார்த்தாலும் அவளையே இடுப்புல தூக்கி வச்சுக்கிட்டு இருக்கீங்க..இதுவும் குழந்தை தான அவனுக்கும் பாட்டி தூக்கி வச்சிக்கனும்னு ஏக்கம் இருக்கும் தானே..


இல்ல ஜானு அனு அழுதான்னா அவளை சமாதானப்படுத்த முடியாது ஆனா நிஷாந்த் அப்படி இல்லை..சுலபமா அழுகையை நிறுத்திடலாம். அதும் இல்லாம அனு சின்ன குழந்தை தானே…என்று முடிக்கும் முன்பே.


இடைமறித்தவள் என்ன சின்ன குழந்தை.. நிஷாந்த்க்கு மூணு வயசு..அனுக்கு ரெண்டு வயசு அவ்வளவுதான் வித்தியாசம் …அதனால இனிமே என் பையனை ரொம்ப பெரியவன் மாதிரி பேசாதீங்க.


அதும் இல்லாம உங்க பேத்தி கொஞ்ச நேரம் அழுதா தேஞ்சு போயிட மாட்டா அதான் அவ அம்மா உள்ள இருக்கால்ல வந்து சமாதானப்படுத்தட்டும்.


அனுவை இப்படி குடுத்துட்டு இவனை பிடிங்க என்ற படி வலுக்கட்டாயமாக மருமகளை கையில் வாங்கியவள்…மற்றொரு கையால் நிஷாந்தை லட்சுமியின் கையில் திணித்தாள் ஜானு.



பிறகு…ச்சு..அழாம இரு.. உன் அம்மா இருக்கிறவங்க எல்லாரையும் அழ வைக்கிறது பத்தாதுன்னு உன் பங்குக்கு நீயும் ஆரம்பிக்காத…என்று குழந்தையை குலுக்கியபடி சமாதானப்படுத்த தொடங்கினாள்.


லட்சுமியின் கைக்குள் வந்த பேரன் உடனடியாக அழுகையை நிறுத்த ஜானவின் கையில் இருந்த பேத்தி அழுகையை நிறுத்தாமல் தொடர லட்சுமி பாவமாக கேசவனை பார்த்தாள்.


எதுவும் பேச வேண்டாம் என்று மகன் தலையசைக்கவும் லட்சுமி தலையசைத்து ஜானு உடன் சேர்ந்து பேத்தியிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள்.


குட்டிமா அழாதீங்க ஆயா இங்க தான் இருக்கேன்…என்று கூறுவது
அறைக்குள் தூங்கி எழுந்த கௌசியின் காதில் கேட்கவும் வேகமாக மகளை சமாதானப்படுத்தும் பொருட்டு வெளியே வந்தாள்.


ஐயோ என்ன இது…ஏன் எல்லாரும் இவ்வளவு சத்தமா பேசறீங்க…ஏற்கனவே எனக்கு தலைவலி இதுல ஆளாளுக்கு இப்படி கத்திட்டு இருக்கீங்க என்று கேட்டபடியே அனுவை இப்படி குடுங்க அண்ணி நான் சமாதானப்படுத்துகிறேன் என்றபடி வாங்கவும்.


மகாராணி உள்ள தூங்குறாங்கன்னு நாங்க எல்லாம் வாயை பொத்திக்கணுமா என்று ஜானு கௌசியை நேரடியாக வம்பு இழுத்தாள்.


உங்களை பேசவேணாம்னு சொல்லல…கத்த வேணாம்னு தான் சொல்லறேன் என்று பதில் கொடுக்கவும்.


இது என் வீடு கத்துவேன்..
மெதுவா பேசுவேன் என் இஷ்டம் விருப்பபட்டா இருங்க விருப்பம் இல்லாதவங்க கிளம்புங்க என்று சொல்லி முடிக்கும் முன்னே…


ஜானு..என லட்சுமி அதிரும் முன்னே கேசவன் அவளை கை நீட்டி கன்னத்தில் அடித்திருந்தான்.
 
Last edited:
Top