கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-12

Akila vaikundam

Moderator
Staff member
12.


அளவுக்கதிகமான போதையில் மயங்கிச் சரிந்த ஹரி விழிக்கும் போது அலுவலகம் மிக அமைதியாக இருந்தது.

தள்ளாடிய படி கை கடிகாரத்தில் மணியை பார்த்தவன் இரவு ஏழை காட்டவும் நெற்றியில் கை வைத்து தேய்த்த படி எழுந்து நின்றான்.


அறையில் எப்பொழுதும் எரியும் மின்விளக்கு அதன் பணியை செய்து கொண்டிருக்க அப்பொழுதான் கவனித்தான்.


தரை முழுவதும் பாட்டில் துகள்கள் சிதறி கிடக்க நொறுக்கு தீனி அதன் மீதி அழகிய கோலம் போட்டிருந்தது..ஆங்காங்கே குளிர்பானம் கீழே கொட்டி காய ஆரம்பித்திருந்தது.


ஷிட்..என கால்களை தரையில் உதைத்து அவன் மீது அவனுக்கு இருந்த கோபத்தை காட்ட தரையில் இருந்த பிங்கான் சில் அரைபட்டது.


விக்கியை கடுப்பேத்துவதற்காக மது அருந்தியவன்..அதற்கு நொடியே மதுவிற்கு அடிமையாகி போனதை எண்ணி வெக்கினான்.


அப்படியே எழுந்து வெளியே வர அலுவலகத்தில் ஒருவரையும் காணோம் பணி முடிந்து சென்றிருந்தனர்.


அதைப் பார்த்ததும் அப்பாடா..இந்த கோலத்துல ஸ்டேஃப்ஸ் யாரும் நம்மளை பாக்கல என்ற தைரியத்துடன் நடக்க அப்பொழுது வரவேற்பறையின் டேபிளின் மீது தலை சாய்ந்திருந்த சபரீனா சத்தம் கேட்டு வேகமாக எழுந்தாள்.


அவளைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்தவன் வேகமாக சட்டை பட்டன்களை சரிபார்த்தான்.


பிறகு அவள் நெருங்கி வருவதற்குள் கைப்பகுதியில் மடித்து விட்டிருந்த சட்டையை வேகமாக கீழ் இறங்கி தலையை இரு கைகளாலும் சரிபடுத்தினான்.


அதற்குள் சபரீனா நெருங்கி விட கோபமாக ஏன் இன்னும் போகாம இருக்கீங்க.. என்று எரிந்து விழுந்தான்.


அவனின் தோற்றத்தை கண்டு விட்டாளே என்ற அவமானம் கோபமாக மாறி அவளிடம் பேச வைத்தது.


அவனை விழி உயர்த்தி பார்க்காமலே…சார் காலைல ரூம் உள்ள போனீங்க இப்போ தான் வெளிய வர்றீங்க…உங்களை பாக்க இன்னைக்கு ரெண்டு புது க்ளையன்ட் வந்தாங்க..நீங்க பாத்து ஒகே பண்ணற ஃபைல் எல்லாம் உங்க டேபிள்ல இருக்கு அதை சொல்லத்தான் வெயிட் பண்ணறேன்.


இதை காலைல சொன்னா பத்தாதா…


இல்ல சார் ஃபைல் எல்லாமே ரொம்ப முக்கியமானது..காலைல பத்து மணிக்குள்ள அனுப்பலன்னா டீல் கேன்ஷல் ஆக வாய்ப்பிருக்கு.


சரி நீங்க கிளம்புங்க நான் செக் பண்ணிட்டு ஆஃபிஸ் க்ளோஸ் பண்ணிக்கறேன்.


இல்ல சார் என்று தயங்கியவள்..நீங்க பாத்ததும் அதை மெயில் பண்ணனும் அதான் என்று இழுக்கவும்.


நான் பாத்துக்கறேன்னு சொல்லிட்டேன்ல கிளம்புங்க..கால் டாக்சியில வீட்டுக்கு போங்க…நாளைக்கு அந்த பணத்தை கேஷியர் கிட்ட வாங்கிக்கோங்க.. பஸ், ஆட்டோ வேணாம் என்றவன்..அதுக்கு முன்னாடி உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணிடுங்க..லேட் ஆகும்னு..


சரி என தலையசைத்தவளிடம்.


கால் டாக்ஸி ஏறினதும் எனக்கு ஒரு மேசேஜ் போடுங்க…அப்புறம் வீட்டுக்கு போனதும் மெசேஸ் பண்ணிடுங்க..என்று தலைகோதிக் கொண்டவன்…


கடைசியாக சற்று தயங்கி சாரி…அண்ட் தேங்க்ஸ் என்றான்.


எதற்கு என்பது போல சபரீனா பார்க்க ஆஃபிஸ்ல என் நிலைமை தெரிஞ்சும் என்னை நம்பி இவ்ளோ நேரம் காத்திருந்து கம்பெனியோட நலன்ல அக்கறை காட்டினதுக்கு..தேங்க்ஸ்.


பெண்கள் வேலை செய்யறாங்கன்னு தெரிஞ்சும் ஆஃபிஸ்ல இவ்ளோ அநாகரிகமா நடந்துகிட்டதுக்கு சாரி..


இட்ஸ் ஓகே சார் இட்ஸ் மை டியூட்டி..


யாரும் என்னை பாக்கலல்ல..நீங்களும் அந்த ரூம் பக்கம்.


ந்நோ..சார்.. நீங்க பிஸியா இருக்கறீங்கன்னு யாரையும் அந்த பக்கம் வர விடல நானும் வரல..என்றவள்.


சார் கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க காலைல வத்தவரு நம்மளை விட பெரிய கம்பெனியோட முதலாளி ஆனா நீங்க அவரை நடத்தின விதம் சரியில்லையே..!.


இந்த ஆஃபிஸ்க்கு நான் வந்ததில இருந்து நீங்க கோபப்பட்டு பாத்ததே இல்ல ஆனா இன்னைக்கு உங்க நடவடிக்கை எல்லாமே வித்யாசமா இருந்ததே என்று கேட்டு முடிக்கும் முன்னே.


கிராஸ் யுவர் லிமிட் சபரீனா… ஆபீஸ்காக இவ்ளோ நேரம் காத்திருக்கறீர்களேன்னு உங்க கிட்ட கொஞ்சம் ஃப்ரீயா பேசின உடனே அட்வான்டேஜ் எடுத்துக்க பாக்குறீங்களா.


முதல்ல இங்கிருந்து போங்க.. இனிமே எப்போவும் இவ்ளோ நேரம் ஆஃபிஸ்ல காத்திருக்க வேண்டாம்..


நான் எப்படி இருந்தாலும் வழக்கமான டைமுக்கு வேலை முடிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கலாம் என்று கத்தவும் அவனுடைய தீடிர் கோபத்திற்கு பயந்தவள் அங்கிருந்து வேகமாக ஓடினாள்.


விக்கியை நினைத்தவுடன் தானாகவே கௌசியும் வந்து ஓட்டிக்கொண்டாள்.


இருந்த மனநிலை நொடியில் மாற..தலையில் கை வைத்து அங்கேயே சற்று நேரம் அமர்ந்தான்.


அலுவலக செக்யூரிட்டி வந்து எட்டிப் பார்க்கும் வரை சுய உணர்வு இல்லாதவன் போல அமர்ந்திருந்தன்…அவர் வந்து சார் என்று அழைக்கவும் தன்னிலை அடைந்தான்.


ஹான்…என்ன ராமையா..


ஆஃபீஸ் பூட்டனும் சார்…


கொஞ்சம் வேலை இருக்கு…முடிச்சிட்டு சொல்லறேன்..என்றவனிடம் தவையசைத்து விட்டு நகர..


ராமையா..


என்ன சார்..


சபரீனா போயிட்டாங்களா..?


இப்போதான் சார் கால் டாக்சில போனாங்க..


ம்ம் சரி நீங்க போங்க என்றபடி அவனது அறைக்குள் சென்றவன் மடமடவென வேலைகளை செய்ய ஆரம்பித்தான்.


அப்பொழுது அவனது அலைபேசியில் ஜானுவின் அழைப்பு வரவும் நேரம் பார்த்தவன்..


இவளுக்கு வேற வேலை இல்ல.. தினமும் ஏதாவது காரணம் வச்சி என்னோட பேசிடனும் என்று சலித்துக் கொண்ட படி…

ஹலோ..என மேம்போக்காக உச்சரித்தான்.


அண்ணா…என்ற கலங்கிய குரல் ஜானுவிடம் இருந்து வரவும் நிமிர்ந்து அமர்ந்தவன்..
ஏய் என்னாச்சி..வாய்ஸ் ஏன் ஓரு மாதிரி இருக்கு என்று கேட்கவும்.


எதிர் முனையில் இருந்த ஜானு குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


என்னாச்சி…சொல்லிட்டு அழு ஜானு என்று பதறவும்.


என்ன சொல்லறது…வேலைக்கு போயிட்டு அப்போ தான் வீட்டுக்குள்ள வந்தேன் சும்மா அத்தையோட பேசிட்டு இருந்தேன்…என் வாய்ஸ் தான் உனக்கு தெரியும்ல கொஞ்சம் பெருசு…அதுக்கு அவ..
அவ…அதான் உன் பொண்டாட்டி…ஏன் கத்தறீங்கன்னு சண்டை போட்டா…


பேச்சிக்கு தான் சொன்னேன்.. அப்படி தான் பேசிவேன் இஷ்டம் இருந்தா இருன்னு விளையாட்டா சொல்லி முடிக்கறதுக்குள்ள அவர் என்னை எல்லார் முன்னாடியும் அடிச்சிட்டாரு…


அவளுக்கு ஒரு அண்ணன் பக்கத்துல இருக்கிறதால தான் தங்கச்சியை ஒரு வார்த்தை சொல்றதுக்கு முன்னாடி என்னை அடிக்கிறார் எனக்கும் ஒரு அண்ணன் பக்கத்துல இருந்திருந்தா என்னை இப்படி யாராவது அடிப்பாங்களா..?


மாப்பிள்ளை அடிச்சாரா…ஆமா அவங்க அம்மா என்ன பண்ணிட்டு இருந்தாங்க..


என்ன செய்வாங்க…புள்ள அடிக்கறதை மகளோட சேர்ந்து வேடிக்கை பார்த்தாங்க..



நீ அடி வாங்கறதை வேடிக்கை பார்த்தார்களா..
என கடுங்கோபம் கொண்டவன்…சரி அழாத நான் கேசவனை கூப்பிட்டு என்னன்னு விசாரிக்கறேன்…நீ உடனே அமெரிக்கால இருக்கற சித்தி,சித்தப்பாவை டிஸ்டர்ப் பண்ணாத.
ரொம்ப வருத்தப்படுவாங்க.


ம்ம்…


என்ன சத்தத்தையே காணோம்.


இல்ல உன்கிட்ட சொன்னது போல என் அண்ணன் ஜனாகிட்ட சொல்லிருந்தா இன்னேரம் பதறியடித்து ஓடிவந்திருப்பான்.



ஆனா நீ…ரொம்ப கூலா விசாரிக்கறேன்னு சொல்லற.. உன்னை நம்பி என்னை உங்ககிட்ட ஒப்படைச்சிட்டு போன் என் அம்மாப்பாவை சொல்லனும்.


எதாவதுன்னா பெரியம்மா பெரியப்பாகிட்ட கேட்டுக்கோ…
கூப்பிடுற தூரத்தில் உன் அண்ணனும் இருக்கான்.. ஒரு ஃபோன் பண்ணினா என்னன்னு ஓடி வந்து பாத்துக்க போறான்னு சொல்லிட்டு அவங்க சந்தோஷமா அண்ணனோட செட்டில் ஆயிட்டாங்க…ஆனா இங்க நான் அனாதை போல அடிவாங்கிட்டு எங்க போறதுன்னு தெரியாம நிக்கறேன்…நீ ஃபோன் வை நான் பெரியம்மாகிட்ட பேசிக்கறேன்.


ஏய் இப்போ எதுக்காக அம்மாக்கு கூப்பிடற…ஏற்கனவே அவங்களுக்கு என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னு கவலை…இதுல நீயும் கூப்பிட்டு அடிவாங்கினதை சொன்னா அவ்வளவுதான் முழுசா உடைந்து போயிடுவாங்க..


பின்ன என்னை என்ன பண்ண சொல்ற..எனக்கு இப்போ உன்னை பாக்கனும் அண்ணா..
உன் தோள்ல சாய்ந்து அழனும்…என்னால தான உன் வாழ்க்கை இப்படி ஆச்சி அதுக்கு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கனும்..
உனக்கு நான் பண்ணின பாவம் தான் இப்படி கொஞ்ச கொஞ்சமா அனுபவிக்கறேன்.


ஐய்யோ ஜானு அழுகையை நிறுத்தும்மா.. ஆஃபிஸ்ல தலைக்கு மேலே வேலை இருக்கு.. நான் இதை பாக்கறதா உன்னை பாக்கறதா..மொதல்ல மாப்பிள்ளை கிட்ட ஃபோன் குடு நான் என்னன்னு விசாரிக்கறேன்.


என்ன இன்னும் நீ ஆஃபிஸ்லயா இருக்க.. வீட்டுக்கு போலயா..


இல்ல இங்க வேலை கொஞ்சம் பென்டிங் இருக்கு..முடிக்கலன்னா பெரிய அளவுல லாஸ் ஆகும்.


நீ மாப்பிள்ளை கிட்டயோ இல்லனா அத்தைகிட்டையோ ஃபோனை குடுத்துட்டு சாப்பிட்டுட்டு தூங்கு நான் என்னன்னு விசாரிச்சுட்டு காலையில உன்னை வந்து பார்க்கிறேன்..என்றவனிடம்.


வேலை இருந்தா அதை பார் இது ஒன்றும் உனக்கு முக்கியம் இல்லை… ஏற்கனவே உன் வாழ்க்கையை தான் நஷ்ட படுத்திட்டேன்..இப்போ தொழிலையும் நஷ்டப்படுத்த விரும்பல வேலையை முடிச்சிட்டு நீ வீட்டுக்கு கிளப்பு என்றபடி மொபைலை வைத்தாள்.


ம்ப்ச்…என்று மொபைலை டேபிளில் போட்டவனுக்கு அதன்பிறகு சுத்தமாக வேலை ஓடவில்லை.


ஜானுவின் அழுத குரல் ஒரு பக்கம் வேதனையை கொடுக்க.. கணவன் அடித்து விட்டான் என்று செய்தி மற்றொரு பக்கம் கோபத்தை கொடுத்தது.


கேசவனை அடிக்க விட்டு அம்மாவும் பொண்ணும் வேடிக்கை பார்த்தார்களா.. எவ்வளவு தைரியம் காலையில வந்து வைச்சிக்கறேன் என்று பற்களை கடித்தான்.


ஜானுவின் தாயும் ஹரியும் தாயும் உடன் பிறந்த அக்கா தங்கைகள் .


அதே போல் ஹரியின் தந்தையும் ஜானுவின் தந்தையும் உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் .


ஒரே வீட்டிற்கு இரு பெண்களுமே மருமகளாக சென்றனர்.


ஆரம்பத்தில் ஒரே வீட்டில் தான் இருந்தார்கள்..மாமனார்,மாமியார் இருமகன்கள், மருமகள்கள் என கூட்டுக் குடும்பமாக மிக சந்தோஷமாக வாழ்ந்தும் வந்தார்கள்.


ஹரியின் தாய் தந்தைக்கு அவன் ஒற்றை பிள்ளையாய் இருக்க.. ஜானுவின் தாய்க்கு ஒரு மகன் ஒரு மகள் என இரு குழந்தைகள்.


மகனுக்கு ஜனாதனன் மகளுக்கு ஜானகி என பெயர் சூட்டி ஒன்றாகவே அந்த வீட்டில் எல்லோரும் வாழ்ந்து வந்தார்கள்.


சிறிது காலத்திலே மாமனார் மாமியார் அடுத்தடுத்த தவறி விட சொத்துக்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது…ஆனால் குடும்பம் பிரியவில்லை..


ஹரியின் தந்தையோடு ஒப்பிடும் பொழுது ஜானுவின் தந்தைக்கு அந்த அளவிற்கு சுறுசுறுப்பு பத்தாது.. சம்பாதிக்கும் திறமையும் பத்தாது.


ஹரியின் தந்தை சொத்துக்களை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் பல தொழில்களை பெருக்கி சொத்துக்கள் வாங்கி குவிக்க…


நேர் மாறாக ஜானுவின் தந்தையோ சரியான முதலீடு இல்லாமல் அனைத்தையும் இழந்து கொண்டு இருந்தார்.


ஆனால் குழந்தைகள் மூவருமே யாருடைய குழந்தைகள் யார் என்று தெரியாத அளவிற்கு மிக ஒற்றுமையாக ஒரே பள்ளியில் படித்து ஒரே காரில் சென்று வந்து கொண்டிருந்தனர்.


கணவனின் முட்டாள் தனத்தால் அனைத்து சொத்துக்களையும் இழந்த தங்கையின் குடும்பம் அக்காவின் குடும்பத்தை நம்பியிருக்க வேண்டியிருந்தது.


அந்த சமயத்தில் ஹரியின் தந்தை அவரின் தொழிலை விரிவு படுத்த நகரத்தின் பக்கம் பார்வையை திருப்பி இருந்தார்.


நகரத்திற்கும் அவர்களின் வாழ்விடத்திற்கும் தொலைவு அதிகம் என்பதால் வாரமொறு முறை வீடு சென்று வந்தார்.


தொழிலை கவனிக்க வந்தவர் கடுமையான காய்ச்சலில் விழ அவரைப் பார்த்துக் கொள்வதற்காக ஹரியின் தாயார் நகரத்திற்கு பயணமானார்.


கணவன் உடல்நலம் தேறவும் அவரை தனியாக விட்டுச் செல்ல மனமின்றி மிகவும் தயங்கியபடி தங்கையிடம் அனுமதி கேட்டார்.


கணவனின் தொழில் நகரத்தில் என்றாகி விட்டது.. வேலை விஷயமாக அலைவதால் சரியான சாப்பாடு, தூக்கம் இல்லாமல் அவரின் உடல்நலம் கேட்டுக் கொண்டிருக்கிறது .


அதனால் நான் அவருடன் செல்கிறேன்.
நீ இங்கு இருக்கும் வீடு மற்றும் சொத்துக்களை பார்த்துக் கொள் என்று சொல்லவும் தங்கையோ சந்தோஷமாக சகோதரியின் குடும்பத்தை வழி அனுப்பி வைத்தார்.


ஆனால் ஹரியின் குடும்பம் தங்கையின் குடும்பத்தைக் கூட பிரிந்து இருக்க தயாராக இருந்தனர்.


ஆனால் ஜானுவை பிரிந்திருக்க அவர்களால் முடியவில்லை.


ஜானுவை தத்து பெண்ணாக எனக்கே கொடுத்துவிடு என்று மூத்த சகோதரி எவ்வளவோ கெஞ்சி பார்த்தார்..ஆனால் ஜானுவின் தாயார் கொடுக்க மறுத்து விட்டார் .


அதன் பிறகு மூத்த சகோதரியின் வாழ்விடம் நகரத்திலும் இளைய சகோதரியின் வாழ்விடம் நகரத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த சிற்றூரிலும் இருந்தது.


ஜனாதனன் படித்து ஒரு ஐடி கம்பெனியில் வேலை சேர்ந்து அப்படியே அமெரிக்கா சென்று விட இங்கே ஜானுவின் பொறுப்பை முற்றிலும் ஹரி ஏற்றுக் கொண்டான்.


ஜானு கல்லூரி காலத்தை ஹரியின் வீட்டில் தான் கழித்தாள்.


அவளை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதும்..வருவதும் ஹரியின் கடமையாயிற்று.


அதனால் ஜானுவிற்கு சொந்த அண்ணனான ஜனார்த்தனனை விட ஹரியை மிகவும் பிடிக்கும் ஜனாதனனை கூட அண்ணன் என்று வாய் நிறைய அழைக்க மாட்டாள்.


ஆனால் ஹரியை வாய்க்கு வாய் அண்ணன் என்று தான் அழைப்பாள்.


படிப்பு முடிந்த உடனடியாக ஜானு ஒரு வேலையில் சேர்ந்து கொள்ள வீட்டில் உள்ளவர்கள் அவளுக்கு மிக தீவிரமாக வரன் தேடினர் .


அப்பொழுது கேசவனின் ஜாதகம் எதார்த்தமாக அவர்கள் கைக்கு வர ஹரிக்கு கேசவனின் குடும்பத்தில் ஜானுவை கொடுக்க மனமே இல்லை.


கேசவனின் குடும்பம் நடுத்தர வர்க்கம் ஆனால் மஞ்சு ஹரியின் வீட்டில் சுகபோகத்துடன் வாழ்ந்தவள் எப்படி அவளால் இருக்க முடியும் என்று நிறையவே யோசித்தான்.


ஆனால் ஜானுவின் பெற்றோர்களோ எங்கள் வசதிக்கு ஏற்ற குடும்பம் கேசவனுடையது தான் அதனால் அவனுக்கே அவளை மணமுடித்துக் கொடுக்கலாம் என பிடிவாதமாக மணம் முடித்துக் கொடுத்தனர்.


அதன் பிறகு ஜானுவின் பிரசவம் வரை இங்கிருந்தவர்கள்… மகனுக்கும் மணமுடித்து விட்டு அவனுடனே செட்டில் ஆகி விட்டனர்.


ஜானுவின் தாய் தந்தையருக்கு அவர்களை விட ஹரியின் பெற்றோர்கள் மீது அப்படி ஒரு நம்பிக்கை .


மகளை எக்காரணம் கொண்டும் விட்டு விட மாட்டார்கள்… ஜனார்த்தனன் கூட ஜானுவின் விஷயத்தில் அக்கறை கொள்ள மாட்டான்..ஆனால் ஹரி அப்படியல்ல தங்கைக்காக உயிரையே கொடுப்பான்..தங்கை மட்டும் சளைத்தவளல்ல…பாசத்தில் அண்ணனை மிஞ்சி விடுவாள்.


ஜானுவின் திருமணத்தன்று தான் ஹரி முதல் முதலாக கௌஷியை பார்த்தது ஏனோ அவளை பார்த்ததும் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.


கௌசி அப்பொழுது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் அவனால் உடனடியாக கல்யாணப் பேச்சு எடுக்க முடியவில்லை.


இதை அறிந்த ஜானு உடனே அண்ணனுக்காக கணவனின் தங்கையை பெண் கேட்டு கணவனிடமும் மாமியாரிடம் போராடி மணமும் செய்து வைத்து விட்டாள்..
அதன்பிறகு நடந்ததெல்லாம் விதியின் விளையாட்டு…


அப்படியொரு பாசமிகு தங்கையை கணவன் அடித்து கொடுமை செய்கிறான் என்று கேட்ட பிறகு எப்படி அவனால் வேலையை கவனிக்க முடியும்.


உடனே ஜானுவை பார்க்க வேண்டும் போல் இருந்தது அவள் வேறு தோளில் சாய்ந்து அழவேண்டும் என்று கதறி இருக்கிறாள்.


அப்படிப்பட்டவளை எப்படி பார்க்காமல் இருப்பது.. என கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்க ஒன்பதை தாண்டியிருந்தது… வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் ஜானுவின் வீட்டிற்கும் செல்ல பிடிக்காமல் வெகு நேரம் அமர்ந்திருந்தான்.


பிறகு மொபைல் போனை எடுத்தான்.. அதில் சபரீனா வீட்டுக்கு சென்று விட்டதாக சில நிமிடங்களுக்கு முன்பு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை வாசித்து விட்டு அதற்கு கீழே காலையில் வெகு சீக்கிரமாக வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடித்து அனுப்ப வேண்டிய மெயில்களை சரி பார்த்து அனுப்பிவிடு என்று பதில் மெசேஜ் அனுப்பி விட்டு ராமையாவிடம் அலுவலகத்தை பூட்டிக்கொள்ளுங்கள் என்று பணிந்து விட்டு கீழே வந்தான்.


மதுவின் போதை வேறு மிச்சம் இருப்பது போலவே தோன்றியது…இப்படியே ஜானு வின் வீட்டிற்கு போனால் தங்கையின் மீது இருக்கும் மரியாதையை அவனே கெடுத்தது போல் ஆகிவிடும்.


தலைவலி வேறு அவனை யோசிக்க விடவில்லை..

என்ன செய்வது என ஒரு மணிநேரம் வரை காருக்குள் இருந்தே யோசித்தவன் எதுவாக இருந்தாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து அவனது வீட்டை நோக்கி வாகனத்தை திருப்பினான்.
 
Last edited:
Top