13.
அண்ணனிடம் பேசி முடித்த ஜானுவிடம் கேசவன்..எதுக்காக இப்போ உன் அண்ணன் கிட்ட கம்ப்ளைன்ட் செய்யற…ஒரு சாதாரண விஷயம் இதையெல்லாம் அவர்ட்ட சொல்லிவியா..?.
எது சாதாரண விஷயம் நீங்க என்னை அடிச்சதா..?.
நீ கௌசியை பேசினது சரியா..?
அவ என்கிட்ட பேசின முறை சரியா..?
கடவுளே எதுக்கு மறுபடியும் அந்த பேச்சி…அதை விடு ஜானு..
தெரியாம கை நீட்டிட்டேன்..மன்னிச்சிடும்மா..ஏற்கனவே கௌசி புருஷனோட ஆதரவு இல்லாம கஷ்டப்படறா.. இதுல நீயும் வெளியே போ..ங்கறது போல பேசி வெச்சேன்னா அவ எங்க போவா.
கைல ஒரு பெண் குழந்தை வேற இருக்கு.. ஏதோ இன்னைக்கு அவ மூடு நல்லா இருந்தது .
அதனால நீ பேசினதை பெருசா எடுத்துக்கல சீரியஸா எடுத்துட்டு குழந்தையை தூக்கிட்டு கிளம்பினா என்ன பண்ண முடியும் சொல்லு.
போகட்டும் …எங்க போயிடுவா..அவ புருஷன் விட்டுக்கு தான போவா.. நமக்குப் போக்கிடம் இல்லாததுதால தானே இவங்க பேசுறாங்க… கஷ்டமோ,நஷ்டமோ புருஷனோட சேர்த்து இருந்துக்கலாம்னு கூட நினைச்சிருக்கலாம் உங்களால எல்லாம் போச்சு…
ஒருவேளை நீ யோசிச்ச மாதிரி இல்லாம வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன செஞ்சிருப்ப.. என்று சற்று குரலுயர்த்தி கேட்கவும்.
கோபம் கொண்டவள் சனியன் விட்டதுன்னு தலைமுழுகி இருப்பேன்.. அவளால தானே உங்களுக்கும் எனக்கு அடிக்கடி சண்டை வருது.. அவளால தானே என் அண்ணன் வாழ்க்கை நாசமா போச்சு… அவளால தானே என் பெரியம்மா, பெரியப்பாவோட நிம்மதி போச்சு… அவனால தானே இன்னிக்கு வரைக்கும் கணவன்,மனைவியா ஒரே அறைக்குள்ள இருந்தாலும் நமக்குள்ள ஒரு அந்நியோன்யம் இல்லாம போச்சு.. என்று வரிசையாக குற்றச்சாட்டை கௌசியின் மீது எடுத்து வைத்தாள்.
ஏய்.. இனியொரு முறை அவளை ஏதாவது சொன்ன…அடிச்சி பல்லை உடைச்சிடுவேன் என்றவன் அடிப்பதற்காக கை ஓங்கியிருந்தான்.
கன்னத்திற்கு மிக அருகே நடுக்கிக் கொண்டிருந்த அவனது கையைப் பார்த்தவள்..
ஏன் நிறுத்திட்டீங்க அடிங்க.. இப்போ தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தெரியாம அடிச்சிட்டேன் மன்னிச்சிடுன்னு கெஞ்சினீங்க..அப்போ அதெல்லாம் என்னை சமாதானப்படுத்தியதாக சொன்ன வார்த்தை தானா..?
உங்க மனசுல ஒரு காட்டன் குடியிருக்கிறான்…அதுல பண்புங்கறது துளி கூட இல்லை..
எதுக்காக என் அண்ணன்கிட்ட கம்பளைண்ட் செஞ்சேன்னு கேட்டீங்கள்ல.. இதோ இதற்காகத்தான்.
ஒருமுறை அடிச்சு பழகினா அந்த கை சும்மா இருக்காதுன்னு என் அம்மா சொல்லுவாங்க.
ஆம்பளைகளுக்கு எதுக்கு வேணாலும் இடம் கொடுக்கலாம்.
பொண்டாட்டி மேல கை நீட்ட மட்டும் மட்டும் இடம் கொடுக்கக் கூடாதுன்னு.. அடிக்கடி சொல்லுவாங்க..
அதனாலதான் முதல் தடவையா நீங்க கை ஓங்கின உடனே என் அண்ணன் கிட்ட சொன்னேன்…உங்க தங்கச்சியை ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு என்னை அடிச்சிங்கள்ல.
நீங்க அவரோட தங்கச்சியை கைநீட்டி அடிச்சிருக்கீங்க அதுக்கு அவருக்கு நீங்க பதில் சொல்லி தான் ஆகணும்.
கிழிச்சான்.. பொண்டாட்டியவே ஒழுங்கா பாத்துக்க தெரியாதவன் உனக்காகவா ஓடிவர போறான்.
அதுவும் சித்தப்பா பொண்ணுக்காக.. பேசாம படுத்து தூங்குற வழியை பாரு.
அண்ணன் வருவான்னு கனவு கண்டுட்டு அடி வாங்கி உடம்பை ரணமாக்கிக்காத என்று சொல்லவும் ஜானுவுக்கு வந்ததே ஆத்திரம்.
என் அண்ணன் வருவான் …வந்ததுக்கு அப்புறம் உங்களுக்கெல்லாம் இருக்கு என்றபடி அண்ணனை எதிர்பார்த்து காத்திருந்தாள்.
நள்ளிரவு வரை மனது மிகவும் அண்ணனை எதிர்பார்த்தது .ஆனால் ஹரி இரவில் செல்வது சரியிருக்காது என நினைத்து அவனது வீடு சென்று விட.
அண்ணனை எதிர்பார்த்து மணிக்கு ஒரு முறை வாசலுக்கும் அறைக்குமாக நடந்து கொண்டிருந்த ஜானுவிடம்.. நக்கலாக.
உன் அண்ணனுக்கு தங்கச்சியோட வீட்டுக்கு வர்ற பாதையும் மறந்து போயிருக்கும்…அதனால வழி மாறி வேற எங்காவது போயிருப்பாரு… கவலைப்படாதே காலையிலக்குள்ள எப்படியாவது வீட்டை கண்டுபிடித்து வந்திடுவாரு.
அதுவரைக்கும் அமைதியா படுத்து தூங்கு என்று சொல்லவும் அதுவரை இருந்த எதிர்ப்பார்ப்பு ஏமாற்றமாக மாறி அவளுக்கு பெரும் அழுகையை கொடுத்தது.
வீடே அமைதியாக உறங்கிக் கொண்டிருக்க அவளின் மனம் மட்டும் ஆர்ப்பரிக்கும் கடல் போல அமைதி இல்லாமல் தவித்தது.
தாய், தந்தையை நினைத்து அழுதாள்.
உடன் பிறந்த அண்ணனை நினைத்து அழுதாள்.
எல்லா உறவுகள் இருந்தும் தற்சமயம் தனக்கு யாரும் இல்லையே என்ற கவியிரக்கத்தில் மௌனமாக கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.
வழக்கம்போல் மறுநாள் காலை லக்ஷ்மி பரபரப்பாக சமையல் செய்து கொண்டிருக்க கௌசல்யா அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
லட்சுமியின் கை தான் காய்களை வாணலியில் வதக்கிக் கொண்டிருந்தது.
மனமெல்லாம் மருமகளைப் பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது.
இந்நேரம் எப்படி இருந்தாலும் சமையல் கட்டிற்கு இரண்டு, மூன்று முறை வந்திருப்பாள் .
அவளுக்கு காஃபி,குழந்தைக்கு பால் கணவனுக்கு டீ என ஏதாவது ஒரு காரணம் காட்டி கிச்சனில் என்ன சமைக்கிறார்கள் என்று பார்த்து விட்டு சொல்வாள்.
ஆனால் இவ்வளவு நேரம் ஆகியும் இன்னும் அறையை விட்டு வெளியே வரவில்லையே என்னவாயிருக்கும் ஒருவேளை மீண்டும் இரவு மகனும் மருமகளும் சண்டையிட்டுக் கொண்டார்களோ என்று பலவாறாக யோசித்துக் கொண்டிருந்தார்.
கௌசல்யாவின் மனமோ தேங்காயை தூருவியபடி கூடிய விரைவில் குழந்தைக்கும் தனக்கும் வேறு ஒரு இடம் பார்த்து செல்வது நன்று.
அண்ணி வாய் வார்த்தையாக சொன்னார்களோ, இல்லை உண்மையான வார்த்தையாக வந்ததோ…
என் வீடு… என்பது போல பேசி விட்டார்கள்..
அதனால் இனிமேலும் இங்கிருப்பது நல்லதல்ல.
குழந்தைக்கு இப்பொழுது தான் இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இன்னும் சில மாதங்கள் போனால் கூட ப்ரீ கேஜில் சேர்த்து விட்டு அலுவலகம் சென்று வரலாம்.
தற்சமயம் அதற்கும் வாய்ப்பில்லை..ஹரியிடம் நேற்று நடந்ததை கூறி உதவி கேட்கலாம்.. அவன் ஏதாவது யோசனை,அல்லது தீர்வைக் கூறுவான் என நினைத்துக் கொண்டிருந்தாள்.
அதே நேரம் அறைக்குள் படுக்கையில் குறுகி படுத்திருந்த மனைவியை கண்களால் பார்த்துக் கொண்டே அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான் கேசவன்..குழந்தையும் காலை உறக்கத்தை தொடர மனைவியை எழுப்ப மனமில்லை.
இரவு வெகுநேரம் உறங்காமல் ஹரியை எதிர்பார்த்து காத்திருந்தது தெரியுமல்லவா…அதனால் இன்று அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு உறங்கட்டும் என நினைத்தான்.
பாவம் உறவினனை நம்பி கணவனிடம் முறைத்துக்கொள்கிறாள் பேதைப்பெண் என்ற படியே உறங்கும் மனைவியிடம் மானசிகமாக மன்னிப்பை கேட்டுக்கொண்டான்.
பிறகு அவளது நெற்றியில் முத்தமிடுவதற்காக அருகில் செல்ல
அவளின் வாய் எதையோ முனுமுனுத்துக் கொண்டிருந்தது.
என்ன என அறிய காதை அவளது வாயருகே கொண்டு செல்ல அவளது மூச்சிக்காற்றின் வெப்பம் கன்னத்தைச் சுட்டது.
சந்தேகத்துடன் அவளது நெற்றியில் கை வைக்க உடல் நெருப்பாக கொதித்தது.. அவளது வாயும் எதையோ எல்லாம் முணுமுணுக்கவில்லை.
உடல் சூட்டின் காரணமாக தானாக அணத்திக் கொண்டிருந்தது.
ஓஓ..ஷிட் என்று தலையில் அடித்துக் கொண்டவன்.
எப்படி இவ்ளோ நேரம் கவனிக்காம விட்டேன்.. தீடிர்னு எப்படி இவ்ளோ காய்ச்சல் வரும்.
ஒருவேளை விடிய விடிய அழுதுட்டு இருந்தாளா… அதனாலதான் தீடிர் காய்ச்சலா என்றபடி கன்னத்தில் தட்ட ம்ம்…என்றபடி வலியில் அவள் முகம் சுருங்கியது.
முந்தைய நாள் இரவில் இவன் அடித்ததற்கான தடயம் கன்னத்தில் இருக்க விரல் தடம் பூதாகரமாக தெரிந்தது.
அது மட்டும் இன்றி ஒரு பக்கமே விகாரமாக வீங்கியும் இருந்தது.
கன்னங்கள் முழுவதும் கண்ணீர் தடம் காய்ந்திருக்க முகத்தில் மிட்டாய் பிடுங்கிக் கொண்ட குழந்தையின் ஏமாற்றம் அப்பிக்கிடந்தது.
மனைவியை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக போய்விட்டது.
முந்தைய இரவில் அடித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அவளது தன்மானத்தை சீண்டுவது போல பேசியிருக்க வேண்டாமோ என்று மனதிற்குள் வருந்தினான்.
ஜானு…ஜானு என அவளது கன்னத்தில் தட்டாமல் முதுகை நிவி விட மிகக் கடினப்பட்டு கண் விழித்தாள்.
எதிரில் பதட்டமாக கணவனின் முகம் தெரியவும் சூடான அவளது கண்ணீர் மீண்டும் தலையணையை நனைத்தது.
கேசவன் பதறி விட்டான் எதற்காக ஜானு அழற…நேத்து நடந்ததுக்காக நான் ரொம்பவே வருத்தப்படறேன்…மறுபடியும் அது போல நடக்காது…நம்ம பையன் மேல சத்தியம் செய்யறேன் என்னை நம்பு..
ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படி விடிய விடிய அழுது ஏன் உன் உடம்பை நீயே கெடுத்துக்குற.
நேத்து கொஞ்சம் அதிகபடியா பேசிட்டேன் அதுக்காக உன் காலை பிடித்து மன்னிப்பு கேட்டுக்குறேன் தயவுசெய்து அந்த விஷயத்தை மனசுக்குள்ளயே வச்சு உன்னை நீயே ரணமாக்கிக்காத.
அதை தூக்கி வெளிய வீசு… முதல்ல என்று உக்காரு ஏதாவது சூடா குடி ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் என்று கூறவும்.
வேண்டாம் என்பது போல தலையசைத்தவள் மீண்டும் கண் மூடிக்கொண்டாள்.
ஆனால் அவளின் கண்ணீர் மட்டும் நின்றபாடு இல்லை .
பேசிக்கொண்டிருந்தால் சரி வராது என உணர்ந்தவன் வேகமாக சமையல் அறைக்குச் சென்று வெதுவெதுப்பான பாலை கொண்டு வந்தான்.
பிறகு அவளிடம் போராடி உட்கார வைத்து காய்ச்சல் மாத்திரையை வாயில் போட்டு விழுங்க வைத்தான்.
அதை எதிர்ப்பு காட்டாமல் விழுங்கியவள் மீதமான பாலை குடிக்க மறுத்து விட்டாள்.
மீண்டும் அவளை படுக்க வைத்து போர்வையால் போர்த்தி விட்டவன் மகனை தூக்கி தாயின் அறைக்குள் சென்று ஏற்கனவே அங்கு உறங்கிக்கொண்டிருந்த தங்கையின் மகளருகே கிடத்தினான்.
பிறகு தாயிடம் வந்து மனைவிக்கு காய்ச்சல் அடிப்பதை கூறியவன் அவள் உண்பதற்கு இலகுவாக ஏதாவது ஒரு ஆகாரத்தை உடனடியாக தயார் செய்யும் படி பணிந்து விட்டு மீண்டும் அவனது அறைக்குள் வந்தான்.
உறங்கத் தொடங்கியவளிடம் இருந்து மெல்லிய கேவல் சத்தம் வெளிவந்து கொண்டே இருந்தது…
அவளுடைய தற்போதைய அழுகைக்கு காரணம் கணவன் அடித்ததோ.. அவளின் தன்மானத்தை சீண்டிப் பார்த்ததோ கிடையாது.
அவளுக்கு என்று யாருமே இல்லையே என்ற ஏக்கம் மட்டுமே .
கணவனின் தங்கையை ஒரு வார்த்தை சொல்லியதற்காக கணவன் எந்த அளவுக்கு கோபம் கொண்டான்.
ஆனால் இன்று நாம் இப்படி முடியாமல் கிடக்கும் பொழுது கூட தாய், தந்தை,உடன் பிறந்த அண்ணன் என்று யாருமே தனக்கு ஆறுதலுக்காக அருகில் இல்லையே..
அண்ணன் அருகில் தான் இருக்கிறான் அவன் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வான்…எதுவாக இருந்தாலும்,எந்த நேரம் என்று பாராமல் அவனை உதவிக்கு அழைத்துக் கொள் என்று தாய் தந்தை அறிவுரை கூறிவிட்டு பறந்து விட்டனர்.
அவளும் அப்படித்தான் நினைத்தாள்… நேற்றைய இரவு தான் ஹரி உடன்பிறந்த அண்ணன் அல்ல உறவின் முறையில் மட்டுமே அண்ணன் என்று புரிந்தது.. இப்பொழுது அந்த ஏமாற்றம்…
மட்டுமே மேலோங்கி இருந்தது.
தன்னுடைய தாயும் தந்தையும் அருகில் இருந்தால் கௌசியை போல் அங்கு சென்றிருக்கலாம்…அப்படி இல்லையா
அவ்வப்போது சென்று அவர்களை பார்த்ததோடு இல்லாமல் ஆறுதலாவது தேடிக் கொண்டிருக்கலாம் அதற்கும் வழியில்லாமல் போய்விட்டதே என்ற வருத்தம்
அவளது மனதில் ஓட்டிக்கொண்டது அதன் வெளிப்பாடு தான் கண்ணீராக வெளியே வந்து கொண்டிருந்தது.
மருமகளுக்கு முடியவில்லை என மகன் பாலை எடுத்துச் செல்லவுமே லட்சுமிக்கு மனம் கேட்க வில்லை..
கௌசி கொஞ்சம் அடுப்ப பாத்துக்கோ நான் போய் ஜானுவை பாத்துட்டு வரேன்.
இருங்கம்மா நானும் வர்றேன் என்றபடி
இருவரும் அடுப்பு வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காய்ச்சலில் கிடப்பவளை பார்ப்பதற்காக அறைக்குள் வந்திருக்க யார் வந்தால் எனக்கென்ன என்பது போல் மிக சாந்தமான முகத்துடன் கண் மூடி படுத்திருந்தாள் ஜானு.
என்னாச்சி..
என்று மருமகளை கண்களால் ஆராய்ந்த லட்சுமி…கோபமாக மகனைப் பார்த்து
பாரு முகமெல்லாம் எப்படி வீங்கி கிடக்குதுன்னு… கைத்தடம் எப்படி தெரியுது…பாவம் எப்படி தான் வலி தாங்கினாளோ…பைத்தியக்காரா…இனியொரு முறை கைநீட்டி பாரு…நானே உன் கையை உடைக்கறேன்.. என்று கூறினார்.
உடனே கௌசல்யாவும் அவளின் பங்குக்கு அண்ணா இனிமே நானும் அண்ணியும் பேசும் போது தயவு செஞ்சு நீ குறுக்க வராத…நீ பாட்டுக்கு கோவத்துல அடிச்சிட்ட…இப்போ பாரு எப்படி முடியாம கிடக்கறாங்க… பார்க்கவே மனசு கஷ்டமா இருக்கு என்றாள்.
சரி ரெண்டு பேரும் முதல்ல வெளிய வாங்க என தங்கையையும் தாயையும் அறைக்கு வெளியே அழைத்து வந்தவன் கதவை சாத்திவிட்டு..
எது பேசறதா இருந்தாலும் சாயங்காலம் பேசிக்கலாம்..
அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க, மாத்திரை குடுத்திருக்கறேன்.. நல்லா தூங்கட்டும்… எழும்பினதும் சாப்பிடுவதற்கு ஏதாவது குடுங்க .
சாப்பிட மாட்டேனா எனக்கு ஃபோன் பண்ணுங்க.. காய்ச்சல் விடலன்னாலும் உடனே எனக்கு கூப்பிடுங்க.
ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு..அதனால நான் போயே ஆகனும்.
தீடிர்னு எப்படி இந்தளவு முடியாம போச்சி கேசவா…நல்லாத்தான இருந்தா… நேத்து நடு சாமத்துல சத்தம் கேக்குதேன்னு எழுந்து பார்த்தப்போ.. முன் பக்க கதவை சாத்திட்டு லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டு போறதை பாத்தேன்… அப்போ கூட காய்ச்சல் இருந்தது போல தெரியலையே என்றவரிடம்.
ஆமாமா.. நல்லாதான் இருந்தா… நேத்து நைட்டு நடந்த பிரச்சனையை உடனே அவங்க அண்ணனுக்கு போன் பண்ணி சொன்னா.
அண்ணன் வருவான்னு எதிர்பார்த்திருப்பா போல…ஆனா மெச்சின அண்ணன் வரல.
நான் வேற வாய வச்சிட்டு சும்மா இருக்காம நக்கலா பேசி வச்சுட்டேன்.
அதனால விடிய விடிய அழுது இப்படி இழுத்து வச்சிகிட்டு இருக்கா என்று சொல்லவும்.
கௌசல்யா அதிர்ச்சியாகி என்ன அவருக்கு போன் பண்ணினாங்களா என்று கண்களை விவரித்து படி கேட்கவும்.
ஆமா பாசக்கார அண்ணன் உடனே ஓடி வந்து பாத்துட்டான் பாரு என நக்கலாக சொல்லவும்.
ஐயோ அண்ணா உனக்கு அவரை பத்தி தெரியாது.
கண்டிப்பா அண்ணிக்காக வருவாரு இவங்கன்னா அவருக்கு உயிர் தெரியுமா என்று சொல்லவும்.
ம்ம்..பார்த்தேன் ..பார்த்தேன் அவனுடைய பாசத்தை.
இவ ஃபோன் பண்ணி பேசும் போது கூட லைட்டா எனக்கும் கேட்டுச்சி..பெருசா எல்லாம் அலட்டிக்கல.
புருஷன் பொண்டாட்டி சண்டை காலைக் குள்ள சமாதானம் ஆகிடுவாங்கன்னு நைட் வராம விட்டுப்பாரு..ஆனா அழுத்தகாரர் கண்டிப்பா
வராம இருக்க மாட்டார்.. வந்தார்னா அவரை பேஸ் பண்ண தயாரா இரு என்று எச்சரிக்கை செய்தாள் அவனின் தங்கை.
வரும்போது பாத்துக்கலாம்.. அப்படி வந்தா தானே உன் பிரச்சினையை பத்தியும் எங்களால பேச முடியும்.
அவனை மாதிரி பொண்டாட்டியை அடிச்சு வீட்டை விட்டு துரத்திடலையே… வீட்டுக்குள்ள தான் இன்னும் அவன் தங்கச்சியை வச்சிருக்கேன் என்று கேசவன் சொல்லவும் .
என்னடா பேச்சு இது ஒரு பிரச்சனையை முடிப்பேன்னு பாத்தா பெருசா கொண்டு போறீயே டா என லட்சுமி வேதனை பட்டார்.
சரி அம்மா…அப்புறமா ஒரு ஒரமா உக்கார்ந்து புலம்புங்க…இப்போ எனக்கு பயங்கரமா தலை வலிக்குது…அதனால ஓரு டீ போட்டு குடுத்துட்டு அப்படியே டிஃபன் எடுத்து வைங்க…
நைட் நான் சாப்பிடல ஞாபகம் இருக்குல்ல என்று சொல்லவும்.
ஆமாண்டா… தெரியும்…கூப்பிடாம விட்டதுக்கு என்னை மன்னிச்சிடு…
நீங்க வேற வெளியே சண்டை போட்டுட்டு போனதால மறுபடியும் உங்களை கூப்பிடு பயம்.
ஒருவேளை நீங்க உள்ள போனதும் உடனே சமாதானம் ஆகியிருந்தா..!
அதை ஏன் நான் கெடுக்கணும்னு நினைச்சேன்.
இப்படி சாப்பிடாம ரூம்குள்ள போய் சண்டை போடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா கதவை தட்டி ரெண்டு பேரையும் வெளிய இழுத்து விட்டிருப்பேன் என்று கூறியபடி அவர் உள்ளே செல்ல.
கௌசல்யாவின் மனமோ கணவனை வருகையை எதிர்பார்த்து பீதி கொண்டது.
எப்படி இருந்தாலும் அலுவலகம் செல்வதற்கு முன்பு கண்டிப்பாக தங்கையை பார்ப்பதற்கு வந்தே தீருவான்.
அதுவும் ஜானு இந்த கோலத்தில் இருப்பதை பார்த்தால் என்னென்ன செய்வானோ அதை நினைத்த உடனே அடிவயிற்றில் பயப்பந்து ஒன்று உருண்டது.

Last edited: