14.
நன்கு உறங்கிக் கொண்டிருந்த ஹரிபிரசாத்தின் அலைபேசி ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது.
தலைவலி உயிர் போக கண்களை பிரிக்கவே மிகவும் சிரமம் கொண்டான்.
இந்த அதிகாலை வேலையில் யார் தன்னை இப்படி அழைத்து தொல்லை செய்வது என்ற கோபம் அவனுக்கு மேலோங்கி இருந்தது .
மிகவும் கடினப்பட்டு வலிக்கும் முன் நெற்றியை பிடித்துக் கொண்டே எழுந்தவன் கோபமாக அலைபேசி எடுத்துப் பார்க்க சபரீனா அழைத்திருந்தாள்.
அவளது பெயரை பார்த்ததும் சற்று சாந்தமடைந்தவன்…
எரிச்சலுடன் ஹலோ என்றான்.
எதிர் முனையில் தன்னுடைய இனிமையான குரலில் சார் நீங்க கையெழுத்து போட்டு வச்சிருந்த ஃபைல் எல்லாத்தையும் ஸ்கேன் பண்ணி மெயில் பண்ணிட்டேன் .
ஆனா முக்கியமான ஃபைல் ரெண்டுல கையெழுத்து போடாம விட்டுட்டீங்க.. பத்து மணிக்குள்ள கையெழுத்து போட்டுட்டா அதையும் அனுப்பிடலாம் சார் என்று பயத்துடனே இழுத்தாள்.
முதலாளியை நேரடியாக அலுவலகத்திற்கு உடனே வாருங்கள் என்று அழைக்கவும் முடியாது.
அதே சமயம் அவளாலும் ஹரியின் வீடு வந்து அவனது கையெழுத்தை பெற முடியாது.
அவன் வந்தால் மட்டுமே இந்த பிரச்சினை சுமூகமாக தீரும் .
ஆனால் இவள் கூறும் வார்த்தைகளை அவன் தவறாக புரிந்து கொண்டு விட்டால் காலையிலேயே மண்டகப்படி வாங்க வேண்டி வரும்.
அதனால் மிகவும் யோசித்து, வார்த்தைகளை சேகரித்து, அதை கோர்த்து, அவனை கோபப்படுத்தா வண்ணம் விஷயத்தை கூறி முடித்தாள்.
அவள் எதிர்பார்த்தது போலவே அவளின் அணுகுமுறை வெற்றியை கண்டது.
வார்த்தைகளில் எரிச்சலை காட்டிக் கொண்டிருந்தவன் இப்பொழுது சற்று கோபம் மேலோங்க.
சரி ..சரி பத்து மணி வரைக்கும் டைம் இருக்குல்ல.. அதுக்குள்ள நான் வந்துடுவேன்.
ஆமா
உன்னை யாரு இவ்வளவு சீக்கிரமா வர சொன்னது என்று கேட்கவும்.
ரொம்ப காலையில் எல்லாம் இல்ல சார் மணி ஒன்பதாச்சி..
அதான் கேட்கிறேன் ஒன்பது தானே ஆச்சு.. இனியும் அரை மணி நேரம் கழித்தே வந்திருக்கலாம்ல…
நாலு பேப்பரை ஸ்கேன் பண்ணி மெயில் அனுப்பறதுக்கு எவ்ளோ நேரம் ஆயிடப்போகுது..
நீங்க சொல்றது வாஸ்தவம் தான் சார்.. அரை மணி நேரம் கழிச்சி தான் கிளம்பறதா இருந்தேன்…
ஆனா என் அண்ணன் இந்த நேரம் தான் அவனோட ஆஃபிஸ் போவான்..
நான் அந்த வழியா தானே போறேன் உன்னை இறக்கி விட்டுட்டே போறேன் நீ ஏன் பஸ்ல இடி வாங்கிட்டு போற..ன்னு கேட்டுட்டு என்னை டிராப் பண்ணிட்டு போறாங்க அதான் சார் கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டேன்..என்றாள்.
சரி எல்லாத்தையும் ரெடி பண்ணி வைங்க.. நான் உடனே கிளம்பி வரேன்.. அப்புறம் உங்க அண்ணனுக்கு நான் ஒரு தேங்க்ஸ் சொன்னதா சொல்லிடுங்க இவ்வளவு காலையில் என் அலுவலகத்தை நம்பி அவரோட தங்கச்சியை விட்டுட்டு போறாரு இல்லையா அதுக்காக…
அடுத்ததா உங்களுக்கும் ஒரு தேங்க்ஸ்…நேத்து சாயங்காலமும் சரி..இப்போவும் சரி நம்ம கம்பெனிக்காக ரொம்பவே உழைக்கறீங்க…அதற்கான பலன் கூடிய சீக்கிரமே உங்களுக்கு கிடைக்கும் என்றபடி இணைப்பை துண்டித்தவன்.
மனதிற்குள் சபரீனாவை பாராட்டி கொண்டான்… கூடவே அவளது அண்ணனையும் பாராட்டினான்.
தங்கச்சி தான் சீக்கிரமா ஆபீஸ் போறேன்னு சொன்னாலும் கூட அதை ஆமோதித்து அலுவலகமே கொண்டு வந்து விட்டுச் செல்லும் அண்ணன் கிடைக்க நிஜமாகவே பாக்கியம் பெற்றவள் தான் என்று நினைக்கும் போது ஜானு முதல் நாள் இரவில் அழுதபடி அழைத்தது ஞாபகத்திற்கு வந்தது.
ஷிட்…எப்படி மறந்தேன்… நைட்டு அழுதுட்டே ஃபோன் பண்ணியிருக்கா..ஆனா நான் கொஞ்சம் கூட கவலைப்படாம கும்பகர்ணன் மாதிரி ஒன்பது மணி வரைக்கும் தூங்கியிருக்கேன்..என்று அவன் மீதே கோபம் கொண்டவன்
உடனடியாக அவனது அலைபேசியை எடுத்து தங்கைக்கு அழைத்தான்.
காய்ச்சலில் இருந்த ஜானு.. மாத்திரையின் வீரியத்தில் அயர்ந்து உறங்க..அலைபேசியின் சத்தம் அவளுக்கு கேட்கவில்லை.
ஒரு முறை ,இரு முறை,என முயற்சி செய்தவன்…யோசனையாக என்ன ஆச்சு ஜானுவிற்கு.. ஏன் போன் எடுக்க மாட்டேங்கறா.. என்றபடியே கேசவனுக்கு அழைத்தான்.
கேசவனோ அறைக்கு வெளியே தாயிடம் பேசிக் கொண்டிருக்க அவனது மொபைல் அறைக்குள் இருக்க அவனும் எடுத்து பேசவில்லை.
மீண்டும் ஒருமுறை முயற்சித்துப் பார்த்தவன் ..ம்கூம் இது சரி வராது ஏதோ சரியில்ல…நேர்லயே போய் என்னன்னு பாத்துட்டு வந்திடலாம் என முடிவெடுத்தவன் சற்றும் தாமதிக்காமல் அவனது வாகனத்தை எடுத்துக் கொண்டு உடனே கிளம்பி விட்டான்.
தங்கையின் வீடு அதிக தூரம் எல்லாம் இல்லை …பத்து நிமிடத்திற்கும் குறைவான தூரம் தான் .
அதுவும் தற்சமயம் அவனிற்கு இருக்கும் மனநிலையில் அதற்கு முன்னதாகவே அவர்களது வீட்டிற்கு வந்துவிட்டான்.
அப்பொழுதுதான் கேசவன் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க அருகினில் தாய் பரிமாறிக் கொண்டிருந்தார் .
உள்ளே வரும்பொழுது ஜானு… ஜானு..என அழைத்தபடியே உள்ளே வர.. இவனைக் கண்டதும் சாப்பிட உட்கார்ந்த கேசவன் எழுந்து நின்றான்.
ஹரியின் குரலை கேட்டதும் அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த கௌசிக்கு மூச்சே நின்று விட்டது.
கடவுளே அண்ணி இருக்கிற கோலத்தை பார்த்தால் என்ன ஆகப் போகுதோ என்று பயந்தபடியே வெளிவந்தவள் தாயின் பின்னால் நின்று கொண்டாள்.
கோபத்துடன் கேசவனை முறைத்த ஹரி யாரின் அனுமதியையும் பெறாமல் ஜானுவின் அறைக்கதவை நாகரிகம் கருதி தட்டிவிட்டு பதில் இல்லை என்றதும் கதவை
திறந்து உள்ளே செல்ல அங்கே கழுத்து வரை போர்த்தப்பட்டு காய்ச்சலுடன் படுத்துக் கிடந்த அவனது செல்ல தங்கையை கண்டதும் துடித்து விட்டான்.
வெளியே லட்சுமி கைகளை பிசைந்தபடி என்னடா மாப்பிள்ளை வந்திருக்காரு..வாங்கன்னு கூப்பிடறதுக்குள்ள ஜானுவை பாக்க போயிட்டாரு..அவ கோலத்தை பாத்தா வேற வினையே வேணாமேடா..
ஏற்கனவே கௌசியோட வாழ்க்கை பிரச்சினையில இருக்கு. இப்போ உன் வாழ்க்கையும் பிரச்சனையாயிடும் போல இருக்குடா ..இவ்ளோ கோபமா வந்திருக்காரு..போய் கூப்பிடலன்னா தப்பாயிடும் வாடா போய் ஒரு வார்த்தை கூப்பிட்டிடலாம் என்று நகர்ந்தவரின் கையை பிடித்து.
ம்ப்ச் இங்கேயே இருங்கம்மா…எதுவும் தப்பாகாது..எதுக்கு தேவையில்லாம பயப்படறீங்க…நாம அவரை விருந்துக்கு கூப்பிடல…ஓடிப்போய் வரவேற்க.
நம்ம கூட சண்டை போட மட்டுமே இங்க வந்திருக்காரு…அவரே வெளியே வருவாரு அது வரைக்கும் இங்கேயே நில்லுங்க என்று அவரை நிறுத்தி வைத்தான்.
கேசவனுக்கு ஹரி அறைக்குள் சென்றது சுத்தமாக பிடிக்க வில்லை..
கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாதவன்..அடுத்தவரின் பெட்ரூமிற்குள் எப்படி கூச்சமே இல்லாமல் போகிறான் வெளிய வரட்டும் சேர்ந்து வைத்து பேசிக்கலாம் என்ற படி அங்கேயே நின்றான்.
அறைக்குள் தூங்கிய தங்கையை எழுப்புவதற்காக அவளின் கன்னத்தில் தட்ட போக கேசவன் அடித்த-தற்கான தடம் தெரியவும் நிமிடத்தில் அவனது கண்கள் குளம் கட்டியது.
அவர்களது வீட்டில் இருக்கும் பொழுது அவளை எவ்வளவு செல்லமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..ஆனால் இன்று அடிவாங்கி கந்தல் துணிபோல கிடக்கிறாளே என்று வருந்தியவன்
பாசமாக தங்கையின் தலையை வருடிவிட்டபடியே ஜானு என மிக மெல்லிய குரலில் அழைத்தான்.
மாத்திரையின் வீரியத்தில் உடலும் மூளையும் செயலிழந்து இருந்தாலும் அவளின் ஆழ்மனம் அமைதி இல்லாமல் தான் தவித்துக் கொண்டிருந்தது.
அங்கே அண்ணன் வருவான் என்ற எதிர்பார்ப்பும் நிறையவே இருந்தது.
அதனால் ஹரியின் அழைப்பும் அவனது ஸ்பரிசத்தையும் உணர்ந்த ஜானு மெதுவாக கண்விழித்து விட்டாள்.
கண் முன்பு கண்களில் நீருடன் அண்ணன் அவளின் முகம் பார்த்தபடி இருக்க அவனைக் கண்டதுமே அழுகை கேவலாக வெளிவந்தது.
ண்ணா…ண்ணா..என்ற ஜானுவால் வேறு எதையுமே உச்சரிக்க முடியவில்லை.
அதன் பிறகு தான் சற்று தெளிந்தாள்… நேற்றைய இரவு முழுவதும் அண்ணன் வராதது நியாபகத்திற்கு வர கோபம் கொண்டு அவனை பார்க்காதபடி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
கடும் வேதனை கொண்டவன் ஜானு இந்த அண்ணன் மேல என்னகோபம்.
கோபப்பட நான் யாரு.. எனக்கென்ன உரிமை இருக்கு நான் ஒன்னும் உன் கூட பிறந்த தங்கை இல்லையே..
ஏன் ஜானு ஏதேதோ பேசுற..நாம பிறந்த வயிறு தான் வேற வேற ஆனா நீயும் நானும் உடன் பிறந்த அண்ணன் தங்கை தான்..
நம்மளோட பாசம் எப்படி பட்டதுன்னு தெரியாதா உனக்கு..
சமாதானப்படுத்தாத அண்ணா..உண்மையிலேயே உனக்கு என் மேல பாசம் இருந்திருந்தா .. கூட பிறந்த தங்கைன்னு நினைச்சிருந்தா நேத்து நான் அழுதுட்டு ஃபோன் பண்ணின உடனே ஓடி வந்திருப்ப..
ஆனா நீ வரவில்லையே இன்னைக்கு கூட இப்போ தானே வந்திருக்க.. இன்னைக்கு எனக்கு
ஜுரம்
இல்லன்னா நான் இந்
நேரம் ஆபீஸ் போய் இருப்பேன்.
உனக்கும் தேடி வர்ற நிலை வந்திருக்காது.
ஐயோ ஜானு நீ சின்ன பொண்ணுன்னு தெரியும் ஆனால் இந்த அளவுக்கு குழந்தைத்தனமா யோசிப்பன்னு தெரியாது மா .
நல்லா யோசிச்சு பாரு.. நைட் நேரம் எனக்கு கூப்பிடற.. அதுக்கப்புறம் மாப்பிள்ளை உன்னை சமாதானப்படுத்த கூட முயற்சி பண்ணலாம் .
அந்த சமயத்துல நான் உன்னை தேடி வந்தா பிரச்சனை பெருசாயிடுமோன்னு தான் வரல மத்தபடி வரக்கூடாதுன்னு எதுவும் இல்ல புரிஞ்சுக்கோமா .
கணவன் மனைவிக்குள்ள இருக்கிற சின்ன சின்ன சண்டைக்குள்ள வந்தா அது அவ்வளவு நல்லா இருக்காது டா என்ற ஹரியிடம்.
நீ இப்படி சொல்ற.. ஆனா அவரு நைட் என்னை எவ்வளவு கேவலமா மட்டம் தட்டினார்ன்று தெரியுமா.. உனக்கு வழி தெரியாம வேற எங்கேயாவது போயிருப்ப.. காலையில வீட்டை தேடி கண்டு பிடித்து வருவாருன்னு சொன்னாரு…அதே போல தான நீயும் வந்திருக்க.
இல்லடா…மாப்பிள்ளை விளையாட்டா பேசிருப்பாரு..அதை பெருசு படுத்தாத
இல்லண்ணா இங்க யாருமே எதார்த்தமாவோ விளையாட்டாவோ பேசுகிறது கிடையாது.
உனக்கு நான் சொன்ன புரியாதுன்னா என் இடத்துல இருந்து பார்த்தா தான் உன்னால என் வேதனையை புரிஞ்சுக்க முடியும் .
கௌசியோட நீ எப்படி குடும்பம் நடத்தினன்னு எனக்கு தெரியாது..ஆனா அவ ஒரு பிரச்சனைன்னு இங்க வந்ததுக்கு அப்புறம்… மறுபடியும் புருஷன் வீட்டுக்கு எப்போ போக போறேன்னு கேட்க கூட இங்க ஆள் கிடையாது.
அவளை உள்ளங்கைல வச்சி தாங்குறாங்க ..
அது மட்டும் கிடையாது அவளை ஒரு வார்த்தை சொன்னவுடனே அத்தை துடிச்சு போறாங்க .
அவ அண்ணன் கை ஓங்கறான்.
ஆனா எனக்காக இந்த வீட்ல பேச
யாருமே இல்லை ..என பிள்ளை இந்த மாதிரி
சூழ்நிலையில் வளரும் போது அவன் எப்படி நல்ல பிள்ளையாய் வருவான்.
அவன் காலத்துல எப்படி பெண்களை மதிப்பான்.. அவன் அப்பா, அம்மாவை அடிக்கிறாங்க. அம்மா எதுவுமே பேசல…ஏன் பாட்டியும் கேட்கல.. அத்தையும் கேட்கல…அப்படின்னா ஆம்பளைக பொம்பளைகளை அடிக்கலாம்னு நினைச்சி தான வளருவான்…
நாளைக்கே அவன் வளர்ந்து திருமணம் செஞ்சிகிட்டா கூட மனைவிவை அடிக்கலாம் தப்பில்லைன்னு தான தோணும்..என்றவளை.
கோபமாக அடக்கியவன் எதுக்கும் எதுக்கும் முடி போட்டு பேசுற .
நிஷாந்த் மூனு வயசு குழந்தை..
நேத்து நடந்ததை மட்டும் பார்த்து அவன் வளர போறது இல்லை.. நேத்து நடந்ததை மறக்கடிக்கறது போல நல்ல நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்து.
இது மாதிரியான சின்ன விஷயங்களுக்காக உன்னை நீயே போட்டு வருத்திக்காதே முதல்ல எழுந்து உட்காரு…என்றவன் காய்ச்சல் பரவாலையா என்று நெற்றி கன்னம் என தொட்டு பார்த்துவிட்டு. சாப்பிட்டியா எனக் கேட்டான்.
இல்லை என்பது போல் தலையசைக்கவும் சரி வெளிய வா சாப்பிடலாம்.. உன்னை பட்டினி போட்டுட்டு தான் உன் மணாளன் கொட்டிக்க உட்கார்ந்தாரா..என் அவனுக்குள்ளாக சொல்லிக் கொண்டவன்..
சரி எழுந்திரு…
ம்ப்ச் முடியல அண்ணா.. இப்படியே படுத்துக்கறேன் எனக்கு பசியில்லை.
எப்படி பசி இல்லாம போகும் நேத்து நைட்டும் சாப்பிடல.. காலையிலேயேயும் சாப்பிடலைன்னா எப்படி உடம்பில் சத்து இருக்கும் முதல்ல எழுந்திரு.
இல்லன்னா எனக்கு வெளியே வர ரொம்ப வெக்கமா இருக்கு .
இவர் பாட்டுக்கு என் அத்தை முன்னாடியும் கௌசல்யா முன்னாடியும் அடிச்சிட்டாரு.
இனிமேல் அவங்க என்னை எப்படி மதிப்பாங்க ..நல்ல காலத்திலேயே கௌசி என்னை மதிக்க மாட்டா…
இப்போ அவ முன்னாடியே கை நீட்டிட்டாரு…
இவ்வளவு நாள் அண்ணினு கொஞ்சம் பயந்து பேசினவ இனிமே மட்டு மரியாதை இல்லாம பேசுவா.
இப்போ தான் அவளை ஒன்னு சொன்னா திருப்பி குடுக்க அவ அண்ணன் இருக்காரே அந்த தைரியம் இருக்கும்.
அத்தையுமே இவ்வளவு நாள் ஜானு ஏதும் சொல்லிடுவாளோ பயந்து பயந்து எனக்காக அடங்கி போயிட்டு இருந்தாங்க இனிமே ஏதாவது வாய் பேசினா மகன் கிட்ட பேசிக்கலாம் இவ கிட்ட நமக்கென்ன பேச்சின்னு ரொம்ப தைரியமா என் முன்னாடி நிப்பாங்க..
என்னோட அம்மாவும் அப்பாவும் பக்கத்துல இருந்திருந்தா இந்நேரம் நான் கோவிச்சுட்டு என் பிறந்த வீட்டுக்காவது போயிருப்பேன் .
அப்போ கொஞ்சமாவது பயப்படுவாங்க…
இந்த சமயம் ஜனா அண்ணன் பக்கத்திலிருந்தா கண்டிப்பா எதுக்காக டா என் தங்கச்சியை அடிச்சன்னு அவர் சட்டையை புடிச்சிருப்பாரு…
எனக்கு தான் யாருமே இல்லையே.. அவமானத்தையும்,வேதனையையும்,மனசுக்குள்ள வச்சுக்கிட்டு புலுங்கி புலுங்கி இந்த நாலு சுவற்றுக்குள்ளேயே சாக வேண்டியது தான் .
பெத்த பையன், நாத்தனார், மாமியார்ன்னு எல்லாரும் முன்னாடியும் அடி வாங்கியாச்சு .
இனிமே இந்த வீட்டில் யாரு என்னை மதிப்பா .. அவங்களுக்கு இனி எப்போலாம் கோவம் வருதோ.. அப்போலாம் என்னை அடிக்கலாம்.. யார் வந்து கேட்க போறாங்கற தைரியம் தானா வந்துடும்..என் நாத்தானார் போல எனக்கு குடுப்பினை இல்ல…
பேச்சுக்கு பேச்சு எனக்கு யாருமே வேணாம்னு சொல்லுவா ஆனா அவளை சுத்தி எல்லாரும் இருக்கோம் .
ஆனா எனக்கு எல்லா உறவும் இருக்குன்னு சொல்லுவேன்…இப்போ தான் தெரியுது எனக்கு அப்படி யாரும் இல்லைன்னு என்று குலுங்கி குலுங்கி அழவும் அவளது பேச்சையும் கண்ணீரையும் கண்டு கோபம் கொண்டவன் நேராக வெளியே வந்து சற்றும் யோசிக்காமல் கேசவனின் சட்டையை கொத்தாக பற்றினான்.
எதுக்குடா என் தங்கச்சியை அடிச்ச..எனக் கேட்டபடி
அய்யோ என்ற கௌசியின் குரலும், மாப்பிள்ளை என்ற லட்சுமியின் குரலும் ஒரு சேர ஒலித்தது.
ம்ப்ச் சட்டைல இருந்து கையெடுங்க மாப்பிள்ளை…தங்கச்சி புருஷனா போயிட்டீங்கன்னு பொறுமையா இருக்கேன் இல்லானா இந்நேரம் நடந்திருக்கறதே வேற என்று ஹரியின் கையை தட்டி விட்டபடி கேசவன் சொல்லவும்.
ஓ என்னையே மிரட்டி பாக்குறியா.. அந்த அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா.. எல்லாரும் சேர்ந்து அவளை கொடுமை படுத்துவீங்க… நான் பாத்துட்டு பேசாம போகனும் இல்லையா…என்ன கேட்க ஆள் இல்லன்னு நினைச்சிகிட்டிங்களா தொலைச்சிடுவேன்
என்றபடி லட்சுமியின் பின்னால் இருக்கும் கௌசல்யாவை பார்த்தபடி கூறினான்.
பிறகு லட்சுமியை பார்த்து வீட்ல பெரியவங்க இருக்கீங்க.
என் தங்கையை உங்க பொண்ணு மாதிரி பாத்துப்பீங்கன்னு நினைச்சேன்..ஆனா இப்போ தான் தெரியுது பெத்த பொண்ணும் வீட்டுக்கு வந்த மருமகளும் ஒன்னு இல்ல.. வேற வேறன்னு தெளிவா புரிய வச்சிட்டீங்க.
இல்ல மாப்பிள்ளை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க…நான் என்னைக்குமே ஜானு, கௌசி ரெண்டு பேரையும் பிரிச்சு பார்த்ததே கிடையாது.. அவ்வளவு ஏன் என் மூத்த மருமக மஞ்சுவையும் நான் அப்படி பிரித்து பார்த்ததில்லை.
மூணு பேரையும் ஒரே மாதிரி என் பொண்ணுகளா தான் பாத்துட்டு இருக்கேன்..
நேத்து நடந்தது ஒரு விபத்து.. விளையாட்டு பேச்சி வினையாயிடுச்சி..
கௌசிக்கும்,ஜானுவிற்கும் சின்ன வாக்குவாதம்.. பொம்பளைக சண்டை கொஞ்ச நேரத்துல சரியா போயிடும்னு தெரியாம என் புள்ளை கை நீட்டிட்டான்…தப்புதான் …நான் அவனை கண்டிச்சிட்டேன்.
இந்த விஷயத்தை இதோட விட்டிடுங்க பெருசு படுத்த வேண்டாம்..இனி இது போல நடக்காத மாதிரி நான் பாத்துக்கிறேன்.
இனிமே பாத்துப்பீங்க நம்புறேன்.. ஆனா நேற்று நடந்ததுக்கு என்ன செஞ்சீங்க.. அதை சொல்லுங்க.
உங்க பையனை கண்டிச்சேனு சொன்னிங்களே எப்படி கண்டிச்சீங்க…
உங்க பொண்ணு என் தங்கச்சியோட வாக்குவாதம் பண்ணும் போதே ஏன் உங்க பொண்ணை அடக்கி வைக்கல …
அப்போ உங்க மனசுல என்ன இருக்கு..
பிள்ளையக் கிள்ளறது போல் கிள்ளி விட்டுட்டு தொட்டிலை ஆட்டறது போல ஆட்டுவிங்களா …
கேட்க யாரு வருவாங்கற தைரியம் தானே..
இப்போ நான் வந்து கேட்கிறேன் சொல்லுங்க..உங்க திட்டம் என்ன?.
உங்க வீட்டு இளவரசியை யாரும் ஒரு வார்த்தை சொல்ல கூடாது.. சொன்னா இதான் நிலமைன்னு மறைமுகமா மிரட்டி பாக்கறீங்களா..என்று அடிக்கடுக்காக கேள்வி கேட்கவும் பதில் சொல்ல முடியாமல் லட்சுமி திணறினார்.
அவரை விட்டுவிட்டு கௌசல்யாவை பார்த்தவன் ஏய் உன் மனசுல என்ன தாண்டி நெனச்சிட்டு இருக்க.
ஒழுங்கா புருஷனுக்கு அடங்கி குடும்பம் நடத்தவும் முடியாது.
பொறந்த வீட்ல பேசாம போடறதை சாப்பிட்டுட்டு இருக்கவும் தெரியாது.. உன் நாட்டாமை தனத்தை உன்னோட வச்சுக்கோ இன்னொரு முறை என் தங்கச்சி கிட்ட வந்த பல்ல கழட்டி விடுவேன்..என்று சொல்லவும் கௌசியின் கண்கள் கலங்கியது.
உனக்குத் தலைவலி வந்தால் மாத்திரையை போட்டுட்டு உன் காது இரண்டையும் பொத்திட்டு கூடவே ரூம் கதவையும் சாத்திட்டு படுத்து தூங்கணும்.
அதை விட்டுட்டு எதுக்கு என் தங்கச்சியோட வந்து சண்டை போடற உனக்கு தலை வலிக்குதுங்கறதுக்காக அவ பேச கூடாதா..மீறி பேசினா உன் அண்ணனை தூண்டி விட்டு அடிக்க விடுவியா..தொலச்சிடுவேன் என்று மிரட்டவும் லட்சுமியை போல் கௌசியாலும் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை.
ஜானு மிக மெதுவாக எழுந்து வெளியே வர அவளைப் பார்த்ததும் கௌசிக்கு மேலும் அவமானமாக போய்விட்டது.
நல்ல காலத்திலேயே அண்ணி அதிகமாக பேசுவாள்.. இப்பொழுது அவளுடைய அண்ணனை அழைத்து மிரட்ட…
லட்சுமியாலும் பதில் பேச முடியவில்லை..அவளாலும் பதில் பேச முடியவில்லை.
இது போதுமே அண்ணிக்கு…இனி அவளிடம் ஏதாவது வம்பு வளர்த்துக் கொண்டால் நொடிக்கு ஒரு முறை அவளின் அண்ணன் காரனை கூப்பிட்டு உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவேன் என்பதை சொல்லாமல் சொல்கிறாள்.
இந்த மனிதரும் கணவன் மனைவி பிரச்சினையில் எதற்காக தலையிட வேண்டும் என்று நாசுக்காக ஒதுங்கிக் கொள்ளாமல் தங்கையின் பேச்சைக் கேட்டு கொண்டு எப்படி கட்டிய மனைவியை அனைவரும் முன்பும் நிற்க வைத்து கேள்வி கேட்கிறார் என கழிவிரக்கத்தில் தலைக்குனிந்து நின்றாள்.
தன் முன்னாடி தாயும் தங்கையும் அவமானப்படுவதை சகித்துக் கொள்ளாத கேசவன் கோபமாக மாப்பிள்ளை உங்க எல்லை கோட்டை தாண்டறீங்க…
வேணாம் என் பொறுமையை சோதிக்காதிங்க தயவு செஞ்சு கிளம்புற வழியை பாருங்க…எல்லா வீட்டிலும் கணவன் மனைவிக்குள்ள வர்ற சாதாரண சண்டை தான் எங்களுக்குள்ள வந்தது..ஜானுவை எப்படி சமாதானப்படுத்தனும்னு எனக்கு தெரியும்.
நீங்க இடையில புகுந்து அதை பெருசு படுத்தாதீங்க… அதுவும் நாங்க எல்லாரும் பெரிய குற்றம் செஞ்சது போல நடு கூட்டத்தில் நிக்க வச்சு நீங்க பேசுறதை பாக்கும்போது கொஞ்சம் கூட பார்க்க சகிக்கல .
அட்வைஸ் பண்றதுக்கும் ஒரு தகுதி இருக்கு…அது உங்களுக்கு இல்லை…எப்போ கட்டின மனைவியை அடிச்சு வீட்டை விட்டு விரட்டினிங்களோ அப்போவே மத்தவங்களை பார்த்து கேள்வி கேட்கும் தகுதியை இழந்துட்டீங்க அதனால இங்க நின்னு நியாயம் பேசுறதுக்கு பதிலா என் தங்கச்சியை உங்களோடு அழைச்சிட்டு போய் குடும்பம் நடத்துற வழிய பாருங்க.
ஓஹோ இப்போ தான் உங்க எல்லாரோட திட்டமும் தெளிவா தெரியுது .
உன் தங்கச்சி இங்க வாழ வெட்டியா இருக்கிறதால என் தங்கச்சியை கொடுமை செய்வியா.. நல்லா இருக்கு.. நீங்க பேசுறது என்றவன்.
நேராக லட்சுமியிடம் வந்து என்னமோ தெரியாம நடந்து போச்சு இனிமே நடக்காது அப்படி இப்படின்னு ஏதேதோ கதை விட்டிங்க.. உங்க பையன் பேசியதை கேட்டீங்கல்ல.
அவர் பேசுவதை கேட்கும் போது ஏதோ தெரியாம நடந்தது போல தெரியலையே.. திட்டம் போட்டு என் தங்கச்சியை அடிச்சது போல இருக்குது.
இங்க பாருங்க மாப்பிள்ளை முடிஞ்ச விஷயத்தை பேச ஆரம்பிச்சா மாத்தி மாத்தி பேசிகிட்டே தான் இருக்கணும்.. பிரச்சனை முடிவுக்கு வராது.. தயவு செஞ்சு இப்போ இங்கிருந்து கிளம்புங்க.. எதுவா இருந்தாலும் ஒரு வாரம் கழிச்சு பேசலாம்.
ம்மா எதுக்குமா இப்படி கெஞ்சுறீங்க அப்படி என்ன ஊர்ல உலகத்துல இல்லாத அண்ணன் தங்கச்சி .
இவரு ஏன் தங்கச்சிக்கு பண்ணின கொடுமையை விடவா நான் அவர் தங்கச்சியை கொடுமை படுத்திட்டேன்… அப்படியே பண்ணியிருந்தா கூட அவ என் பொண்டாட்டி.
அவளை அடிக்கிறதுக்கும்…வேற என்ன பண்ணறதுன்னாலும் எனக்கு முழு உரிமை இருக்கு அதனால அவரை வெளிய போகச்சொல்லுங்க என்றான்.
உடனே ஜானு உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் வேகமாக கணவனின் அருகில் வந்து என்ன பேச்சு பேசுறீங்க அண்ணனை நான் தான் வர சொன்னேன் நீங்க பாட்டுக்கு வெளியே போக சொல்றீங்க என் அண்ணனை நீங்க அவமானப்படுத்துவதை என்னால ஏத்துக்க முடியாது.
ஆமா பெரிய அண்ணன் ஒழுங்கா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி கூட வச்சு வாழத் தெரியாத உத்தம அண்ணன் என்று வாய்க்குள் முனுமுனுத்தான்.
பிறகு ஜானவைப் பார்த்து.. ஏய் உனக்கு தான் உடம்பு சரியில்லைல…நீ எதுக்கு இங்க வந்து நின்னுட்டு இருக்க உள்ள போய் படுத்து ரெஸ்ட் எடு போ.. என்று விரட்டவும்..
ஹரி கோபமாக லட்சுமியிடம் பாய்ந்தான்.. பாத்தீங்களா உங்க பையன் என் தங்கையை அடிச்சதுக்கு எவ்ளோ அழகா காரணம் சொல்றாருன்னு..
அவரோட பொண்டாட்டியாம் அதனால எப்படி வேணாலும் போட்டு அடிப்பாராம்.. அதுக்கு முழு உரிமை வேற இருக்காம்.
என் முன்னாடியே என் தங்கச்சி கிட்ட இப்படி நடந்துக்கறவரு நான் இல்லாதப்போ என்னனென்ன பண்ணுவாரு…
ஆனா நீங்க எதையும் கண்டுக்காம வாயை மூடிட்டு நிக்கிறீங்க.
மாப்ளை புருஷன் பொண்டாட்டி பேசிக்கும்போது நான் எப்படி இடையில போக முடியும்.
ஓஓ…புருஷன்னா பொண்டாட்டியை எப்படி வேணாலும் போட்டு அடிக்கலாம் அவனுக்கு எல்லா உரிமையும் இருக்கு..
எப்படி வேணாலும் தரக்குறைவா பேசலாம்… பேசும்போது நீங்களும் குறுக்க போக மாட்டீங்க..ஏன்னா அது கணவன் மனைவிக்கு நடுவில் நடப்பது இல்லையா என்று பற்களை கடித்தபடி கேட்கவும்.
லட்சுமிக்கும் கேசவனுக்கும் எதுவோ புரிவது போல் இருந்தது.
கேசவன் கண்களை அங்கும் இங்கும் உருட்டியபடி ஹரி சொன்ன வார்த்தைக்கு என்ன அர்த்தம் என யோசிக்கும் போதே.
நேராக கௌசியிடம் சென்றவன் அவளின் கைபிடித்து இழுந்து அவனின் முன்பு நிறுத்தியபடி..
ஒழுங்கா புருஷன் வீட்டில் இருந்து குடும்பம் நடத்த தெரியல இங்க உட்கார்ந்து நாட்டாம பண்ணிக்கிட்டு இருக்க.
இன்னைக்கு என் தங்கச்சிக்கு முடியாம இருக்குன்னா அதுக்கு நீ மட்டும் தான் காரணம்…
ரொம்ப சுலபமா உன் அண்ணன் சொல்றான் என் பொண்டாட்டியை நான் அடிப்பேன் எனக்கு உரிமை இருக்குன்னு அதைக் கேட்கும் போது என் மனசு எவ்வளவு வலிக்கும்ன்னு உன் அண்ணன் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டாம் என்று கூறியபடியே கௌசியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.
அவனின் பலமான அடியை தாங்கிக் கொள்ள முடியாத கௌசி நிலை குலைந்து கீழே விழ.
மீண்டும் அவளை அடிப்பதற்காக தூக்கி நிறுத்த ஓடி வந்த லட்சுமி முட்டி போட்டு ஹரியின் கைகளை பிடித்துக் கொண்டு மாப்பிள்ளை என் புள்ளையை அடிக்காதீங்க..அவ அடி தாங்கமாட்டா…தயவு செஞ்சு எனக்காக அவளை விட்டுடுங்க என்று சொல்லவும்.
ஐயோ அத்தை நாங்க புருஷன் பொண்டாட்டி …நாங்க பேசிக்கிட்டு இருக்கும்போது நீங்க ஏன் இடையில வர்றீங்க என்று சொல்லவும் லட்சுமி அதிர்ச்சியில் அப்படியே அவனின் கைகளை விட்டுவிட்டு எழுந்து நிற்க.
கேசவனோ தங்கையின் கணவனை அடிக்க பாய்ந்தான்.
டேய்…எவ்வளவு திமிருடா உனக்கு என் வீட்டுக்குள்ளேயே வந்து என் தங்கச்சியையே அடிக்கிற… உன்னை உயிரோட விடறேனா பாரு என்றபடி ஹரியின் மீது பாய அவனை சுலபமாக தட்டி விட்டவன்.. விரல் நீட்டி எச்சரித்தான்.
நீதான சொன்ன என் பொண்டாட்டியை அடிப்பேன்… என்ன வேணாலும் பண்ணுவேன் எனக்கு முழு உரிமை இருக்குன்னு ..
அதே மாதிரி தான்…இந்த அடங்காபிடாரி என் பொண்டாட்டி… நான் அடிப்பேன் என்ன வேணாலும் செய்வேன் எனக்கும் முழு உரிமை இருக்கு என்று கௌசியை தூக்கி நிறுத்தியவன் மீண்டும் அவளை பின்னோக்கி தரையில் தள்ளிவிட்டு விட்டு கோபத்தில் நின்ற கேசவனை பார்த்து.
இன்னொரு முறை என் தங்கச்சி மேல கை வைக்கறதுக்கு முன்ன நல்லா யோசிச்சிக்கோ…நீ ஒன்னு குடுத்தா…உன் தங்கை என்கிட்ட இருந்து நாலு வாங்குவா…
அதோட இல்லாம தூக்கின உனக்கு கை இருக்காது…
உன் தங்கச்சிக்கு உடம்புல உயிரைத் தவிர வேற எதுவுமே இருக்காது என்று கூறியபடி அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
கேசவன் அவனுடைய முழு கோபத்தையும் ஜானுவிடம் காட்டுவதாக எண்ணி முறைக்க அவளோ தலையில் கை வைத்த படி அப்படியே அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள்.

Last edited: