கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே-2

Akila vaikundam

Moderator
Staff member
2.



ம்மா... ஆஃபிஸ் கிளம்பறேன்... என்றபடி கேசவன் லேப்டாப் பேக்குடன் வெளியே வர வாசலில் அமர்ந்திருந்த லட்சுமி கோபமாக எழுந்தார்.




அவருக்கு கோபத்தில் வார்த்தைகள் வரவில்லை அதற்கு மாறாக கண்களில் கண்ணீர் தான் வந்தது.





ஏன்டா காலையிலேயே என்னை எல்லாரும் இப்படி படுத்தறீங்க…



ஏன்மா என்னாச்சு எதுக்கு இவ்ளோ கோவப்படுறீங்க…




பின்ன என்னடா காலையில யாருக்காக நாலு மணிக்கே எந்திரிச்சு எல்லா வேலையும் நான் செய்யறேன் சொல்லு... இப்படி எல்லாரும் சாப்பிடாம வெளியே போறதுக்காகவா …



ஐயோ அம்மா எனக்கு ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு... நான் வெளியே சாப்பிட்டுக்கறேன்…

இது வழக்கம் தானே…



இருக்கட்டும்...இன்னைக்கு சாப்பிட்டுட்டு போ…




ம்மா...டைம் ஆச்சி...புரிஞ்சிக்கோங்க…



எனக்கு தெரியாது...கேசவா... சாப்பிட்டுட்டு போ...அவ்ளோ தான் சொல்லுவேன்…உன் தங்கச்சிக்கு புத்தி சொல்லலாம்னு பேச்சை ஆரம்பிச்ச உடனே சாப்பிடாம கிளம்பிப் போய்டா…




ஜானு உன் கூட சண்டை போட்டுட்டு சாப்பிடாம போயிட்டா... இப்ப நீயும் ஆபீஸ்க்கு டைம் ஆச்சினு சாப்பிடாம போனா... செஞ்சுவச்ச சாப்பாட்டை நான் ஒருத்தியா உக்காந்து சாப்பிடறது...பாடுபடற பிள்ளைகளே சாப்பிடாம போகும் போது எனக்கு எப்படி சாப்பாடு தொண்டையை விட்டு கீழ இறங்கும்…என்று சொல்லும் பொழுது கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது…



ம்ச்ப்...ம்மா... என்ன இது குழந்தை மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் கண்கலங்கி கிட்டு...இப்போ என்ன நான் சாப்பிடனும் அவ்ளோ தானே...எடுத்து வைங்க சாப்டுட்டே போறேன் என்ற படி தாயின் அருகில் வந்து அவரின் கண்ணீரை துடைத்து விட்டான்.




துடைக்கும் மகனின் கரங்களை பிடித்தவர் அந்த கைகளை பிடித்தபடி மேலும் அழ ஆரம்பித்தார்.



ம்மா...ப்ளீஸ் என்று சொல்லும் போதே கேசவனின் கரங்கள் நடுங்கத் தொடங்கியது...அத்தோடு இல்லாமல் அவனும் சற்று உணர்ச்சிவசப்பட ஆரம்பித்தான்.




உணர்ந்தவர் சட்டென அவனின் கைகளை விட்டபடி .. நீ ஆபீஸ் போ கேசவா...உனக்கு லேட் ஆகுது பாரு என்று கூறினார்.



சாப்பிட்டுட்டு போக சொன்னீங்கம்மா...எடுத்து வைங்க நான் சாப்பிட்டுட்டே போறேன் என்று கூறும் பொழுது அவனின் குரல் தழுதழுத்தது…



லேட் ஆகுதுன்னு சொன்னியேப்பா…. ஆஃபிஸ்ல உன்னை திட்ட போறாங்க…நான் பைத்தியம் போல வெளியே போற பையனை பிடிச்சி வச்சிட்டு இருக்கேன்….



இல்லம்மா…. ஆஃபிஸை நான் பாத்துகறேன்மா...நீங்க டிஃபன் எடுத்து வைங்க கை கழுவிட்டு வரேன் என்றபடி அவனது பேக்கை தோளிலிருந்து கழட்டினான்.




இதோ...இப்பேவே போறேன்டா...என்றவர் வேகமாக உள்ளே சென்றார்.



கேசவன் டைனிங் டேபிளில் வந்து அமரும் பொழுது காலை உணவை தயாராக எடுத்து வைத்திருந்தார்.



மல்லிப்பூ இட்டியும் பொதினா சட்டினியும் ஒரு தட்டில் எடுத்து வைத்திருந்தவர் லன்ச் பேக்கையும் அதனருகில் வைத்திருந்தார்.




இட்லியைப் பிய்த்து வாயில் வைத்தவன் லஞ்ச் பேக்கை பார்த்து ம்மா... இது என்ன என்று கேட்டான்.




உடனே அவர் எலுமிச்சைபழ சாதமும் உருளை வறுவலும் வெச்சிருக்கேன் மத்தியானம் சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும் மறக்காம எடுத்துட்டு போ என்றார்.



பொதுவாக கேசவன் மதிய உணவை அதிகமாக எடுத்துச் சென்றது கிடையாது அவனுடைய வேலை அப்படி... ஏதாவது ஒரு ஓட்டலிலோ...அல்லது மெஸ்ஸில் தான் உண்ணுவது இன்று தாய் மதிய உணவை கட்டி வைத்திருக்கவும் அவரை சங்கட படுத்த வேண்டாம் என நினைத்தவன் பதில் பேசாமல் வேகமாக தட்டில் இருந்த இட்லிகளை உள்ளே தள்ளினான்.




பொறுமையா சாப்பிடு கேசவா...என்று அறிவுறுத்திய படி லட்சுமி சட்னியை எடுத்து அவனது தட்டில் வைத்தார்.




ம்மா...போதும்

.. வேஸ்ட் பண்ண வேணாம்...என்றபடி எழப் போனான்…



டேய் இது எப்படி உனக்கு போதும்...பேருக்கு சாப்பிடாம ஓழுங்கா சாப்பிடு என மீண்டும் அமர வைத்து இரு இட்லிகளை தட்டில் வைத்தார்.




ம்மா...என்று சலித்தபடியே அமர்ந்த கேசவன்...தாயாரை பார்த்து நீங்களும் சாப்பிடல தானே...உக்காருங்க என்று அழைத்தான்.




நீ சாப்பிட்டுட்டு கிளம்பு கேசவா நான் சாப்பிடுறதுக்கு இன்னும் ரொம்ப நேரம் இருக்கு…. இரண்டு குட்டிகளும் வெளியே விளையாடிக்கிட்டு இருக்காங்க அவங்களை குளிக்க வச்சி ஊட்டி முடிச்சதுக்கு அப்புறம் தான் நான் சாப்பிடுவேன் என்று கூறவும்.





லேட் பண்ணாம நேரத்துக்கு சாப்பிடுங்க அம்மா சரியா சாப்பிடாம ஏதையாவது இழுத்து வெச்சுக்காதீங்க என்று கூறியபடியே தட்டை காலி செய்தவன் கைகழுவிவிட்டு தாயார் மதியத்திற்கு எடுத்து வைத்திருந்த லஞ்ச் பேக்கை கையில் தூக்கியவன் வினாடி நேரம் நின்று லட்சுமியை திரும்பிப் பார்த்து.



அம்மா உங்ககிட்ட ஒரு சின்ன ரெக்வெஸ்ட் எனக்காக செய்வீங்களா என்றான்.



என்ன அது என்று அவனின் முகத்தை பார்த்து கேட்டார்.



இனிமே எப்பவும் என் முன்னாடி கண்கலங்காதீங்க... அதை என்னால தாங்கிக்க முடியல ….நீங்க அண்ணனோட இருந்து…. அவன் உங்களை சரியா கவனிக்காம போய்டுவானோனு பயந்து தான் என் சக்திக்கும் மீறி லோன் போட்டு இவ்வளவு பெரிய வீட்டை வாங்கி உங்களையும் அப்பாவை கூடவே வச்சுகிட்டேன்…. அப்படி இருந்தும் நீங்க சந்தோஷமா இல்லனு தெரியும் போது

என் மனசு ரொம்ப கஷ்டமாகுது…என்றவன் அவரின் கைகளை பிடித்துக் கொண்டு



ம்மா ப்ளீஸ் உங்களுக்கு என்ன குறை இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க நான் கண்டிப்பா சரி செய்வேன் மனசுல வெச்சுக்கிட்டு கஷ்டப் படாதீங்க என்று கூறவும் தாயின் கண்கள் மீண்டும் கலங்கியது.




இது தானே வேணாம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று இவன் சலித்துக்கொண்டவன்...

அவரின் கண்ணீரைத் துடைக்க கரங்களைப் பிடித்துக் கொண்டவர் இதுக்கு பேரு ஆனந்தக் கண்ணீர் பா….




என் கஷ்டத்தை புரிஞ்சிக்கவும் எனக்கு ஒரு பையன் இருக்கான்னு நினைக்கும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா….




ம்மா...இப்போ மட்டும் இல்ல எப்பவுமே உங்க கஷ்டம் என்னனு எனக்கு தெரியும்... எங்களை படிக்க வெச்சு இந்த ஒரு நிலைமைக்கு கொண்டு வர நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிங்கனு எனக்குத் தெரியாதா சொல்லுங்க…



கேசவா உங்களை வளர்த்தும் போது கூட இப்படி என் மனசு தவிச்சது இல்ல... அப்போல்லாம் என் மனசுல தோன்ற ஒரே ஒரு விஷயம் என் பிள்ளைகளுக்கு மூனு வேளையும் நல்ல சாப்பாடு கொடுக்கணும்... போட்டுக்க கிழியாத துணிமணிகள் கொடுக்கணும்... படிக்க வைக்கனும் இது மட்டும்தான் இருந்தது..

ஆனா இப்போ தினம்தினம் என் பொம்பளை புள்ளையை பத்தின கவலை மட்டும் தான் இருக்கு….



தவம் வாங்கி பெத்தது போல காத்திருந்து அவளை பெத்துகிட்டேன்…

உன் அப்பா கூட நீ பிறந்ததும் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிக்கோ நமக்கு இந்த இரண்டு குழந்தைகள் போகுதுன்னு சொன்னாங்க நான் தான் பிடிவாதமா இல்ல இல்ல எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும்…என்னை புரிஞ்சி கிட்டு எனக்கு துணையா வீட்ல இருப்பானு சொல்லி அவளை பெத்துகிட்டேன்…



ஆனா எனக்கு கடைசி வரைக்கும் அவ துணையாவே இருந்திடுவாளோன்னு பயமா இருக்குடா …



சீரும் சிறப்புமாக கல்யாணம் செஞ்சு வச்சோம்... ஆனா இப்படி போன ஒரு வருஷத்தை சுவத்துல அடிச்ச பந்து போல நம்ம கிட்டயே திரும்பி வருவான்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கல..




உனக்கு நல்ல மனச அதனால தான் அம்மா அப்பாவை பார்த்துக்கறதோட இல்லாம உன் தங்கச்சியையும் கூட வச்சு பாத்துக்கற…. நீயும் பெரியவனை மாதிரி கணக்கு பார்த்திருந்தா அவ நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரு…என்றவருக்கு இப்பொழுது மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது...



ம்மா...என்றவனுக்கு லெட்சுமியின் கண்ணீரை கண்டதும் அவனது கண்களும் கலங்க ஆரம்பித்தது ‌...பெரும் பாடுபட்டு அதை மறைத்தவன்...தாயாரை சமாதானப்படுத்தும் விதமாக அம்மா என் தங்கச்சியை நான் பாத்துக்காம வேறு யார் பார்த்துப்பா….இன்னொரு விஷயத்தை நீங்க மறந்துட்டீங்க ம்மா... இன்னைக்கு கௌசி கஷ்டப்படறான்னா அதுக்கு நானும் ஒரு காரணம் தான்…




அவளா ஒன்னும் இந்த வாழ்க்கையை தேடிக்கல... நாம தான் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து

கல்யாணத்தை பண்ணி வச்சோம்...இப்போ அந்த வாழ்க்கை அவளுக்கு சரியா அமையல... அதனால ஆறுதலுக்காக நம்மகிட்ட வந்து இருக்கா... சீக்கிரமா சரியாகும் அதையே நினைத்து உங்க உடம்மை கெடுத்துக்காதிங்க…




புரியுது கேசவா... அதனால தான் இந்த நிமிஷம் வரைக்கும் அவளை நான் ஒரு வார்த்தை கூட கடிஞ்சி பேசினது கிடையாது... ஆனாலும் உன்னை கஷ்டப்படுத்தறோமேன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையா இருக்கு…



*****



எனக்கு புரியுது கேசவா...எல்லா சுமையையும் உன் தலையிலேயே தூக்கி வைக்கறேன்னு...அவ கல்யாணம்,பிரசவம்னு நீ ஒருத்தன் தான் பாத்துகிட்ட...பெரியவன் கிட்ட சொல்லறதை விட அதிகமா உன்கிட்ட தான் புலம்பி தள்ளறேன்...என்ன செய்ய அம்மா கஷ்டத்தை நீ தான் காது குடுத்து கேக்கற...அதுக்காக கோபபடாதடா...எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் போதும் கேசவா...எப்படியாவது கௌசி வாழ்க்கையை சரிசெஞ்சி குடுத்துடு…




ஏனோ ஜானுவுக்கும் கௌசிக்கும் ஒத்துப் போறதே கிடையாது... ஜானு அவ புருஷனோட சொந்தம்ங்கறதால அவ புருஷனோட சேர்த்து ஜானகியையும் வெறுக்கறா…




என்னை பேசவே விடறதில்லை…. உன் ஒருத்தன் கிட்ட மட்டும் தான் கொஞ்சம் அமைதியா போறது போல தெரியுது அதனால அவ நல்ல புத்தியா இருக்கும் போது கொஞ்சம் அவட்ட பேசு கேசவா…

என்று கூறவும்….ஆழ மூச்சை இழுத்து விட்டவன்...



கண்டிப்பா என்னால முடிஞ்சதை நான் சீக்கிரமா செய்யறேன்,.ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு விஷயத்தை சொல்லுங்க …


எதனால கௌசி மாப்பிள்ளையோட சண்டை போட்டுட்டு இங்க வந்தா …




அந்த விஷயத்தை நாகரீகம் கருதி இத்தனை நாள் நானும் கேட்கல,அவளும் என் கிட்ட சொன்னது இல்ல ஆனா மாப்பிள்ளையை அடிக்கடி நான் வெளியே பார்க்க தான் செய்றேன் எதுவுமே நடக்காத மாதிரி என்கிட்ட பேச தான் செய்றாரு அனுவை பற்றி விசாரிக்கிறார் வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடும் போது கண்டிப்பா என் மகளுக்காக வர்றேன்னு சொல்றாரே தவிர இது வரைக்கும் வர மாட்டேங்கறாரு…



குழந்தை பிறந்தப்போ ஆஸ்பத்திரில வந்து பார்த்துவிட்டு போனதோடு சரி இந்த நிமிஷம் வரைக்கும் கௌசி யையும் குழந்தையையும் பார்க்க வந்தது இல்லை இதுக்கு அவர் வெளியூரா இருந்தா கூட பரவால்ல ஒரே ஊர்ல நான்கு கிலோ மீட்டர் தள்ளிதான் இருக்கிறாரு...




நீ மாப்பிள்ளை கிட்ட இது பத்தி கேக்கலையா...கேசவா…நான் கேக்கலாம்னு ஃபோன் பண்ணும் போதெல்லாம் அப்படியே பேச்சை மாத்திடறாரு...நேர்ல கூட போய் பாத்துட்டேன்…

எதுவுமே நடக்காத மாதிரி பேசி அனுப்பிட்டாரு….அனுவை பாத்தாலாவது மனசு மாறுவாருன்னு ஓரு முறை தூக்கிட்டு போனேன்...யாரோ குழந்தை போல தூக்கி வச்சிக்கறதோட சரி…. இப்போ வரைக்கும் குழந்தைக்கு என்ன செய்யறீங்க... ஏதுன்னு ஒரு வார்த்தை கேட்டதில்லை….நானும் சொன்னதில்லை…. என்ன மனுஷனோ...அவர் நடந்துக்கறதை பாத்தா எனக்கே கௌசியை அங்க அனுப்ப பயமா இருக்கு... எத்தனையோ தடவை உன் அப்பா மூலமாகவும் மஞ்சு மூலமாகவும் அவங்க அம்மா அப்பாவோட ஒரு பொதுவான இடத்தில் உட்கார்ந்து என்ன ஏதுன்னு பேசலாம்னு சொல்லியாச்சு இந்த நிமிஷம் வரைக்கும் வரவே மாட்டேங்குறாங்க... இதையெல்லாம் பாக்கும் போது என் பொண்ணை நினைச்சி அதிகமா கவலை தான் வருது... என்றார்.




ஆனா என்கிட்ட இப்படி நடந்துக்கறது இல்லம்மா….எங்க பாத்தாலும் காரை நிறுத்தி மச்சான் எப்படி இருக்கீங்க...வேலை எப்படி போகுது...வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு அக்கறையா விசாரிக்கறாரு…. லாஸ்ட் டைம் பேசும் போது நேரடியாவே கேட்டேன்..




மாப்பிள்ளை உங்களுக்கும் என் தங்கச்சிக்கும் என்ன பிரச்சனைனு சொல்லுங்க நான் சரி செய்யறேன்னு... ஆனா அதுக்கு அவரு கோவமா...என்னை ஏன் கேக்கறீங்க….உங்க தங்கச்சி கிட்ட போய் கேளுங்க.. எங்களுக்குள்ள என்ன பிரச்சனைனு சண்டைக்கு வந்திட்டாரு…




அவ கிட்ட என்னால ஒரு கட்டத்துக்கு மேல பேச முடியல என்ன இருந்தாலும் அவ என் தங்கச்சி இல்லையா... அவ எங்க வீட்டுக்கு வந்த சமயத்துல என்னன்னு விசாரிச்சேன்..


அப்போ சரியா பதில் சொல்லல….இப்போ கொஞ்ச நாள் முன்ன கேட்டதுக்கு ஏன் நான் இங்க இருக்கறது உனக்கு கஷ்டமா இருக்கா…? இருந்தா சொல்லிடு நான் எங்காவது போயிடறேன்னு பேச ஆரம்பிச்சிடறா….அதுக்கு பயந்துட்டு நான் வாயே திறக்கறதில்லை... எதுக்காக அவளை வீட்டிலிருந்து அனுப்பி வச்சீங்க... அவ என்ன தப்பு செஞ்சான்னு சொல்லுங்க... ஒருவேளை வெளியே சொல்ல முடியாத அளவுக்கு அவ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா எனக்காக அவளை மன்னிச்சிடுங்க... என் தங்கச்சிக்காக இல்லனாலும் உங்க பொண்ணு அனுவுக்காகவாவது வந்து என் தங்கச்சியும் குழந்தையும் அழைச்சிட்டு போங்கன்னு கேட்டேன்... அதுக்கு மாப்பிள்ளை சொல்லறாரு...




நான் ஒன்னும் அவளை வீட்டை விட்டு அனுப்பல…. அவளா தான் உங்க வீட்டுக்கு வந்தா…அதனாலே அவளையே வரச்சொல்லுங்க...எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல...ஆனா நான் வந்து கூப்பிடுவேன்னு கனவு காணாதீங்கன்னு சொல்லீட்டாரு… அதுக்கு அப்புறம் மாப்பிள்ளை கிட்ட நானும் கௌசி பத்தி பேசுறதை சுத்தமா விட்டுட்டேன்... எங்காவது பார்த்தா பொதுவாகப் பேசிக்கறதோட சரி பர்சனல் எதையும் நாங்க பேசுகிறதில்லை... என்றவன் லட்சுமியின் முகத்தை பார்த்து



ம்மா கண்டிப்பா உங்க கிட்ட சொல்லி இருப்பா...எதனால வீட்டை விட்டு வந்தான்னு….அதை என்கிட்ட சொல்லுங்க ம்மா…அவங்களுக்குள்ள என்ன பிரச்சினை... எனக்கேட்டான்.





பெருசா எதுவும் சொன்னதில்லை கேசவா ஆனால் தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்படறாருன்னு என்கிட்ட ஒரு தடவை சொல்லி அழுதா... குடிகாரன் கூட வேணாலும் குடும்பம் நடத்தலாம் சந்தேகப்பேயோட எப்படி குடும்பம் நடத்த முடியும் அதான் வந்துட்டேன்...இதுக்குமேல என்கிட்ட எதும் கேக்காதீங்க….என்னை அவரோட சேர்த்து வாழ்வும் சொல்லாதீங்கனு சொல்லிட்டா….இங்க வந்த அன்னைக்கு கூட அவங்க ரெண்டு பேர்க்குள்ள ஏதோ சண்டை போல... ரெண்டு பேருக்கும் நடந்த வாக்கு வாதத்துல மாப்பிள்ளை நம்ம பொண்ணை கை நீட்டி அடிச்சாராம் அதான் கோவிச்சிகிட்டு இங்க வந்திருக்கா….



என்ன மாப்பிள்ளை கௌசியை சந்தேகப்பட்டாரா…?ஆள பாத்தா அப்படி தெரியலையே... அதும்மில்லாம கௌசியை கைநீட்டி அடிச்சாரா...ஏன்மா இதையெல்லாம் இத்தனை நாளா என்கிட்ட சொல்லல… சொல்லிருந்தா இதுக்கு எப்பவோ முடிவு கட்டிருப்பேன்ல...



இல்லடா கேசவா...அவ சண்டை போட்டுட்டு இங்க வந்தப்போவே மாப்பிள்ளை கௌசியை அடிச்ச விஷயம் தெரியும் ஆனா இது எல்லா குடும்பத்திலேயும் எதாவது ஒரு சந்தர்பத்துல கணவன் மனைவிக்குள்ள நடக்கிற சாதாரண விஷயம் தான்... ஏதாவது கோபத்துல இவ மேல கைநீட்டிருப்பாரு..அதை ஏன் பெருசு படுத்தனும்னு விட்டுட்டேன்…ஆனா அது தப்புன்னு இப்போ புரியுது... ஆரம்பத்திலேயே இதை எல்லாமே பேசித் தீர்த்திருக்கனும்..




இப்போ கொஞ்ச நாளைக்கு முன்னாடி கௌசிகிட்ட அவ எதிர்காலத்தை பத்தி பேசும் போது கடைசி வரை இப்படியே இருந்துக்கறேன் என்னை தொல்லை செய்யாதீங்கன்னு சண்டைக்கு வர்றா...அவ கத்தறதுக்கு பயந்து நானும் வாய முடிக்கிட்டு மனசுக்குள்ளயே அழுது புலம்பறேன்...நிம்மதியே போச்சி... அவளுக்கு கல்யாணம் ஆகற வரை பொண்ணுக்கு சீக்கிரமா கல்யாணம் ஆகனும்னு கடவுளை வேண்டினேன்...இப்போ அவ வாழ்க்கை சரியா அமையனும்னு வேண்டறேன்…




ம்மா...இவ்ளோ நாள் நானும் கொஞ்சம் சுயநலமா இருந்துட்டேன்…. தங்கச்சி வாழ்க்கையை அவ பாத்துப்பான்னு...இப்பவாவது எனக்கு புரிய வச்சீங்களே...அதுவே போதும் கூடிய சீக்கிரமா அவளுக்கும், மாப்பிள்ளைக்கும் இருக்கிற பிரச்சினை என்னனு முழுசா தெரிஞ்சுக்கிட்டு சரி செய்ய பார்க்கிறேன்... அப்படி இல்லையா கண்டிப்பாக கௌசிக்கு வேறு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கறேன்…




நீங்க அதையே மனசுல வச்சுக்கிட்டு கவலைப்பட்டு சரியாச் சாப்பிடாம உடம்பை கெடுத்துக்காதீங்க... எனக்கு நீங்க ரொம்ப ரொம்ப முக்கியம்... அதே சமயம் கௌசி இங்கே இருக்கிறதால நீங்க ஜானு கிட்ட அடங்கிப் போகனும்ங்கற அவசியமும் கிடையாது…என்றவன்.



எனக்கு ஆஃபிஸ்க்கு லேட் ஆயிடுச்சு...இப்போ கிளம்பறேன் மீதி சாயங்காலம் பேசிக்கலாம்...கவலை படாதீங்க கண்டிப்பா கௌசி வாழ்க்கையை சரி செய்வேன்...நம்புங்க என்ற படி அவனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.



இளைய மகன் தெருமுனைக் தாண்டும் வரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த லட்சுமியின் மனதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பாரம் குறைந்தது போல தோன்றியது.





ஏனோ மனது ஒருவித சந்தோஷத்தை அனுபவித்தது... மகளின் வாழ்க்கையை கண்டிப்பாக இளையமகன் சரி செய்வான் என்ற நம்பிக்கையில் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றார்.
 
Last edited:

Chitra Balaji

Well-known member
Kowsi ku enna பிரச்சனை ஏன் அங்க இருந்து வந்தா.... கேசவன் enna panna poraano... Avanga அம்மா தாம் romba வருத்தம் padraanga
 

Akila vaikundam

Moderator
Staff member
Kowsi ku enna பிரச்சனை ஏன் அங்க இருந்து வந்தா.... கேசவன் enna panna poraano... Avanga அம்மா தாம் romba வருத்தம் padraanga
பொண்ணுங்களுக்கு என்னனாலும் அம்மாக்கு கஷ்டம் தான சித்து... அதைதான் லட்சுமி மூலமா சொல்ல வந்தேன்... நன்றி சித்து மா
 
Top