20 .
ஹரியின் சிரிப்பு சத்தமே விக்கியின் காதுக்குள் கேட்டுக் கொண்டிருக்க ..
அதற்கு த் தீர்வை தேடும் வழியாக கௌசியிடம் விஷயத்தை வாங்கிவிடும் நோக்கில் வெளிவந்தான்.
ஆனால் கௌசியோ உடல்நிலையை காரணம் காட்டி அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
விக்கிக்கு எதுவோ புரிவது போல் இருந்தது கௌசி தற்சமயம் தன்னிடம் இருந்து தப்பிப்பதற்காகவே பர்மிஷன் போட்டு வீட்டிற்கு சென்றிருப்பதாக நினைத்தான்.
சரி எப்படி இருந்தாலும் நாளை இந்த அலுவலகம் வந்து தானே ஆக வேண்டும் என்னதான் மற்றொரு கிளைக்கு மாற்றி இருந்தாலும் உடனடியாக அங்கே செல்லப் போவதில்லை.
குறைந்தது ஒரு வாரமாவது இந்த அலுவலகத்தில் இருக்கும் வேலைகளை முடித்துக் கொடுத்து விட்டுத்தானே செல்வாள் அப்பொழுது கேட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தான்.
ஆனால் மறுநாள் கௌசல்யா அலுவலகம் வரவில்லை காலையிலிருந்து தோழியை எதிர்பார்த்து காத்திருந்தவன் அவளின் விடுப்புக்கான காரணம் என்னவென்று அறிய முற்பட்டான்.
உடல்நலம் சரியில்லை என மின்னஞ்சல் அனுப்பி விட்டிருந்தவள் அதன் பிறகு வேறு எதையும் தெரிவிக்க வில்லை.
அவளுடைய அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்த பொழுது அணைத்து வைத்திருப்பதாக கணினி வழி செய்தி வந்தது.
இதன் நடுவே தந்தை அவனுக்கு முக்கியமான வேலை ஒன்றை கொடுத்து வெளியூருக்கு அனுப்பி வைக்க ஒரு வாரம் முழு கவனமும் அதில் ஈடுபடத் தொடங்கியது.
இடையில் தாய் தந்தை கௌசல்யாவின் பிரச்சனை எல்லாமும் காணாமல் போயிற்று.
சரியாகப் பத்தாம் நாள் ஹரி போன் செய்து இரண்டு வாரம்னு பேச்சிக்கு தான் சொன்னேன் ஆனா அதை இவ்வளவு சீரியஸா ஃபாலோ பண்ணுவேன்னு எனக்கு தெரியாம போயிடுச்சு என்று சொல்லவும் தான் கௌசல்யாவின் பிரச்சனையே ஞாபகத்திற்கு வந்தது.
அவளிடம் கேட்க வேண்டுமே அவளது குடும்ப பிரச்சனைக்கு நானா காரணம் என்று..என நினைத்தவன் அத்தனையையும் போட்டு விட்டு கௌசியை சந்திக்க அலுவலகம் ஓடிவந்தான்.
அன்று சென்ற கௌசி இன்று வரை வேலைக்கு வரவில்லை என்று கூறவும் அவளை பற்றிய கவலை மேலும் அதிகரித்தது.
இப்படியாக அவளுக்கு காத்துக் கொண்டிருக்க தந்தையின் வாயிலாக அவனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
காலை வேளையில் உணவருந்திக் கொண்டிருக்கும் பொழுது என்னடா என்னமோ உன் பிரண்டு ஆபீஸ் மாத்தி விட்டா வேலைக்கு வரமாட்டா அப்படி இப்படின்னு பெருசா ஏதேதோ பேசின..
அவ என்னன்னா இங்க இருக்கிற பெண்டிங் ஒர்க்கை கூட புது ஆஃபீஸ்ல வச்சு பண்ணி கொடுக்கிறேன் எப்போ அங்க வந்து ஜாயின் பண்ணறதுன்னு கேட்டு எனக்கு மெயில் பண்ணிட்டு ரெண்டே நாள்ல அங்க வந்து சேர்ந்துட்டா என்ன விஷயம்..என கேட்டு விட்டுச் சென்றார்.
அவன் கேட்ட விஷயத்தை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை கண்டிப்பாக கௌசல்யா தன்னிச்சையாக இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருக்க மாட்டாள்.
எப்படி இது சாத்தியம்.. புது அலுவலகத்திற்கு செல்வதை பற்றி இந்த அலுவலகத்தில் கூட யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறாள் என்றால் என்ன அர்த்தம் .
தந்தையிடம் பேசவே தயங்குபவள் தந்தைக்கு மெயில் அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறாள்.
அப்படி என்றால் என்னை பார்த்து பயப்படுகிறாளா..
நான் அவளுடைய அந்தரங்கத்தை பற்றி கேட்டதால் இப்படி ஒரு முடிவை எடுத்தாளா..?
என் கௌசல்யா என்னைபார்த்து பயப்படுகிறாளா..?
கூடாது அவள் விரும்பாத எதையும் நான் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
எனக்கு பயந்து அவள் கஷ்டப்பட வேண்டாம் .
வழக்கம் போல பழைய அலுவலகத்திற்கே வரட்டும் என்று முடிவு எடுத்தவன் தந்தையின் முன்பு சென்று நின்றான்.
கௌசல்யாவை பழைய அலுவலகத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்கும் கொண்டான்.
யோசனையுடனே அவனைப் பார்த்தவர் அவ விருப்பப்பட்டா தாராளமா மாறிக்கலாம் .
அவ வரமாட்டா வேலையை விட்டு போயிடுவான்னு நெனச்சேன்..அதனால தான் அலுவலகம் மாத்தினேன்.
ஆனா அவ இவ்வளவு சிரமத்துக்கு நடுவுலயும் அங்க வரும்போது ஒரு நண்பரோட மனைவியை,என மகனோட தோழியை கஷ்டப்படுத்த எனக்கு விருப்பம் இல்லை .
உன் பிரண்டு கிட்ட சொல்லிடு அவ விருப்பப்பட்டா பழைய ஆபீஸ்ல பழைய வேலையில அப்படியே கண்டினியூ பண்ணலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
தந்தை கூறியதை உடனடியாக தோழிக்குத் தெரியப்படுத்த வேண்டி கௌசல்யாவுக்கு அழைக்க அந்த நம்பர் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்தது.
ச்சே…என மொபைலை தூக்கி எறிய போனவன் சற்று நிதானப்படுத்தி அவனது புத்தம் புதிய மொபைலைப் பார்த்தான்.
பிறகு…ம்ப்ச் என சலித்த படி ஹரிக்கு அழைத்தாள்.
ஹலோ மிஸ்டர் ஹரி நான் விக்னேஷ்வரன் பேசறேன்.. என்றதும் எதிர் முனையில் கனத்த மவுனம் நிலவியது.
ஹலோ மிஸ்டர் ஹரி லைன்ல இருக்கீங்களா நான் பேசறது கேக்குதா என இவன் கேட்கவும் எதிர் முனையில் சிறு செறுமலுடன் நான் இப்போ ஆபீஸ்ல இருக்கேன் நீ ஃப்ரீயா இருந்தா ஆபீஸ் வா எதா இருந்தாலும் ஆபீஸ்ல பேசிக்கலாம் என்றபடி இணைப்பை துண்டித்தான்.
குழப்பத்துடன் விக்கி நேராக ஹரியின் அலுவலகத்திற்குச் சென்றான்.
இவனை எதிர்பார்த்து காத்திருந்தது போலவே அங்கே ஹரியும் அலுவலக வாயிலேயே காத்திருந்து இவனை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்.
சுற்றி வளைக்காமல் நேரடியாகவே ஹரிபிரசாத் விஷயத்திற்கு வந்தான் இப்போ நீ தோத்து போயிட்ட உனக்கான தண்டனை என்னன்னு கேட்கிறதுக்காக வந்திருக்க ரைட் என்று சொல்லவும்.
சின்ன திருத்தம் நானா வரல நீங்க தான் வரச்சொன்னீங்க..
எஸ் எஸ் ஐ ரிமெம்பர் தட் ..என்றவன்.. நான் இங்கே வர சொல்லலனா போன்ல அதான சொல்லியிருப்ப என கேட்கவும்.
வினாடிக்கும் குறைவான நேரத்தில் ஆச்சரியத்தைக் காட்டிய விக்கி ம்ம் என ஓத்துக் கொண்டான்.
நீ போன்ல தோத்துப் போயிட்டான்னு சொல்லும் போது உன் முகம் அவமானத்துல சிறுத்து எப்படி இருக்குங்குறத என்னால பாக்க முடியாதுல்ல…
ஆனா இப்ப நீ தோத்துப் போயிட்ட.. என் முன்னாடி தலை குனிஞ்சு உட்கார்ந்திருக்க…இந்த சந்தோஷத்தை போன் குடுக்காது இத பாக்கணும் அதுக்காக தான் உன்னை நேரில் வர சொன்னேன்.. என்றான்.
பார்த்தாச்சு இல்ல திருப்தி தானே என்றவன்..
ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியல என்னை விட கொஞ்சமே கொஞ்ச நாள் அவளோடு இருந்தாலும் இவ்ளோ நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க அப்படிப்பட்டவளை பிரிந்து இருக்கறது தான் வேதனையா இருக்கு.
காரணம் அவ சொல்ல வேணாம் நீங்க சொல்லுங்க எதுக்காக பிரிஞ்சீங்க..
அவளை பத்தி இந்த அளவுக்கு தெரிஞ்சு வச்சுக்கிட்ட ஒரு மனுஷன் எப்படி அவ இல்லாம பிரிஞ்சு வாழ முடியுது ப்ளீஸ் எனக்காக சொல்லுங்க..
அவ சொல்ல விரும்பாத விஷயத்தை நான் உன்கிட்ட சொன்னா அது என் மனைவிக்கு நான் செய்யற துரோகம்..
அவளை நான் உன்கிட்ட விட்டுக் கொடுப்பதற்கு சமம்.. என் மனைவி எதுக்காகவும் யார்கிட்டயும் கீழிறங்கி போறதுல எனக்கு விருப்பம் கிடையாது..
நானா எப்பவும் இதை உன்கிட்ட சொல்ல மாட்டேன்.. எப்போ உன் தோழி சொல்றாளோ அப்போ தெரிஞ்சுக்கோ அவ சொல்லலனா கடைசி வரைக்கும் தெரிஞ்சுக்காத..
ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ அவளா சொல்ற வரைக்கும் என்னைக்குமே எங்களோட பிரிவுக்கான காரணம் யாருக்குமே தெரியாது இப்ப மட்டும் இல்ல எப்பவுமே தான் அதான் எங்க திருமண உறவிற்கு நான் கொடுக்கிற மரியாதை..
சரி இப்போ உனக்கு கொடுக்கக் கூடிய தண்டனையை பத்தி நாம பேசுவோமா..
உங்களை என்னால புரிஞ்சுக்கவே முடியல ஹரி கௌசல்யாவையும் தான் எனிவே நான் தோத்து போயிட்டேன்.. இப்போ என்ன செய்யணும் சொல்லுங்க.
என்ன சொன்னாலும் செய்வியா இல்ல.. புருஷன் பொண்டாட்டி சண்டைக்குள்ள நான் எதுக்காக வரணும்.. நீங்க சேருங்க சேராம போங்க அதை பத்தி எனக்கு என்ன நான் ஏன் உன் பேச்சை கேக்கணும்னு கிளம்பி போயிடுவியா என்றான்.
நீங்க எங்களோட நட்பை புரிந்து கொண்டது இவ்வளவுதானா மிஸ்டர் விக்கி.
ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கோங்க இனி எப்போவும் உங்க ரெண்டு பேரோட பிரச்சினை எனக்கு தேவையே கிடையாது.
எப்போ கௌசல்யா என்கிட்ட சொல்ல கூடாதுன்னு மறைச்சாளோ அதுக்கப்புறம் அவளே வந்து என்கிட்ட சொன்னா கூட நான் தெரிஞ்சுக்க மாட்டேன்.
இது எங்க நட்புக்கு நான் கொடுக்கிற மரியாதை .
என் தோழி என்கிட்ட மட்டும் இல்ல உங்க கிட்ட கூட கீழ இறங்கி போறதை நான் விரும்பல..
நீங்க கொடுக்கறதா சொன்ன பனிஷ்மென்ட்ல இருந்து நான் பின் வாங்கினா என் தோழியை அவமானப்படுத்துவதற்கு சமம் .
எங்கள் நட்பை அசிங்கபடுத்தினதா அர்த்தம்.
சோ என்ன பண்ணனும்.. என் உயிர் வேண்டுமா …இல்ல என் சொத்து வேணுமா எதுவா இருந்தாலும் தாராளமா இப்பவே இங்கேயே முடிச்சிக்கலாம் என்று நிமிராக உரைத்தான்.
சொத்து யாருக்கு வேணும் நான் நினைச்சா ஆறே மாசத்துல உன்கிட்ட இருக்கிறத விட பல மடங்கு சம்பாதித்து காட்டுவேன் அந்த திறமை என்கிட்ட இருக்கு .
அப்புறம் உன் உயிர் அதை எடுக்கணும்னா உன்கிட்ட பர்மிஷன் வாங்கணும் என்கிற அவசியம் எனக்கு இல்லை…
வேற என்ன என்கிட்ட எதிர்பாக்கறீங்க..
பெருசாலாம் ஒன்னும் இல்ல..
என் பொண்டாட்டிய விட்டு ரொம்ப தூரமா போ.. சாகுற வரைக்கும் அவளோட கண்ணுல நீ படவே கூடாது.
ஒருவேளை நாளைக்கு நானே மனசு மாறி உன்னை பாக்கணும்னு நெனச்சா கூட பார்க்க முடியாத தூரத்துக்கு போ..
உன் நட்பை மதிச்சா உன் தோழியை நேசிச்சா இதை செய் இல்லன்னா நீ எப்பவும் போல நார்மலா உன்னோட லைஃப்பை என்ஜாய் பண்ணு..
இனி எப்பவும் நான் உன்னோட லைஃப்குள்ள வரமாட்டேன் முக்கியமா உன் தோழியோட வாழ்க்கைக்குள்ள அண்டர்ஸ்டாண்ட்…என்றவன்.
யூ கோ நவ் என்றபடி கையில் ஓரு ஃபைலை எடுத்து புரட்டத்துவங்கினான்.

Last edited: