கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 21

Akila vaikundam

Moderator
Staff member
21.


சில நிமிடங்கள் வேலையில் ஆழ்ந்திருந்த ஹரி ஏதோ தோன்ற தலைதூக்கிப் பார்க்கவும் எதிரினில் கால் மீது கால் போட்டபடி விக்னேஸ்வரன் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.


அவனைக் கண்டதும் பார்வையாலேயே நீ இன்னும் போகலையா என்பது போல பார்த்தான் ஹரி.


சிறு தலையசைப்புடன் விக்கி அங்கேயே இருக்கவும்.


எனக்கு வேலையிருக்கு நீ கிளம்பினா..என பாதியில் பேச்சை முடிக்கவும்.


இப்போ இங்கிருந்து போறேன் ஆனா நீங்க நினைக்கறது போல வேற எங்கேயும் போகமாட்டேன்.


கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோ நட்பு மரியாதை அப்படின்னு டயலாக் பேசினதா ஞாபகம்.


உண்மை தான் நட்புக்காக நான் எவ்வளவு தூரம் வேணாலும் போவேன் ஆனால் நட்பை விட்டுட்டு ஒரு இன்ச் கூட நகர மாட்டேன்.. அது நீங்களா இருந்தாலும் சரி..என்னை படைச்சவரா இருந்தாலும் சரி..என்றவன் மேலும் மனசாட்சி இல்லாத மனுஷங்க இருக்கறதா கேள்வி பட்டிருக்கேன்.. இன்னைக்கு தான் உங்க ரூபத்துல பாக்கறேன்.


ஏய்…


நிறுத்துடா…
என்ன அப்படி பார்க்கற..இவ்வளவு நாள் மரியாதையா பேசினானே இன்னைக்கு என்ன திடீர்னு மரியாதையை பறக்க விட்டுட்டுடான்னு தானே.. மனுஷங்களுக்கு தான் மரியாதை கொடுப்பாங்க அஞ்சு அறிவு படைத்த விலங்குகளுக்கு யாரும் மரியாதை கொடுக்க மாட்டாங்க.



பொண்டாட்டியை வயித்துல குழந்தை இருக்கும்போது விரட்டி விட்டியே இந்த நிமிஷம் வரைக்கும் அந்த குழந்தைக்காகவோ இல்ல அவளுக்காகவோ பத்து பைசா செலவு பண்ணி இருப்பியா ..


செலவை விடு அட்லீஸ்ட் கொஞ்சமாவது அவங்க மேல அக்கறை காமிச்சிருப்பியா..


கௌசல்யாவை விடு.. அந்த குழந்தை அது என்னடா பாவம் பண்ணுச்சு அதுக்கு ஏன்டா இவ்வளவு அநியாயம் பண்ற.


நியாயமா குழந்தைக்கு செய்ய வேண்டிய கடமை எதையும் நீ செய்யல கொடுக்க வேண்டிய பாசத்தையும் குடுக்கல..


கட்டின பொண்டாட்டியும் பெத்த பிள்ளையும் ஒழுங்கா பாத்துக்க தெரியாத நீ சொல்ற அவளை விட்டுட்டு போன்னு..


உன் பேச்சைக் கேட்டு நானும் போகனுமா .?


என் உயிரை கேட்டிருந்தா கூட நான் உன்கிட்ட கொடுத்திருப்பேன் ஆனா அவளை விட்டுட்டு போகணும்னு கேட்ட பாரு அதான் என்னால கொடுக்க முடியல ..


உன்னால என்ன பண்ண முடியுமா பண்ணிக்கோ போடா..என்றவன் கனவுல கூட அவளை விட்டுட்டு போவேன்னு நினைக்காத..என்றபடி அங்கிருந்து கிளம்பினான்.

பற்களை கடித்த படி அவ்வளவு நேரம் கோபத்தை அடக்கி கொண்டிருந்தவன் விக்கி வெளியேறியதும் ..சபரீனா என கத்தினான்.


பதறியபடி அவள் ஓடி வரவும் நான் சொல்ற வரைக்கும் யாரையும் என் ரூமுக்கு அனுப்பாத.

ஆனா சார் உங்களை பாக்க முக்கியமான கிளையண்ட் ரெண்டு பேரு வெயிட் பண்ணறாங்க..


அவங்களோட அப்பாயிண்ட்மெண்ட் கேன்சல் பண்ணிட்டு நாளைக்கு வர சொல்லு .


சார் அவங்க முக்கியமான கிளையண்ட் அவங்க அப்பாயின்மென்ட் கேன்சல் பண்ணினா பல லட்ச ரூபாய் நஷ்டம் ஆகும்.


அத பத்தி உனக்கு என்ன கவலை உனக்கு முத தேதி ஆனா கரெக்ட்டா சம்பளம் வருதுல்ல ..சொன்னதை செய்.. அதிக பிரசங்கித்தனம் செய்யாதே என்று முகத்தில் அடித்தபடி கூறவும்..


சாரி சார் என்று படி அங்கிருந்து நகர்ந்தாள்.


பிறகு தலைக்கோதியபடி அவனது சாய்வு நாற்காலியில் அமர்ந்தவன் அன்னார்ந்து‌ பார்த்தபடி கௌசி இன்னும் எனக்கு எவ்வளவு நஷ்டத்தை கொடுக்கப் போற… நிம்மதி இல்லாத வாழ்க்கையை எதுக்காக எனக்கு கொடுத்த ? ஏண்டி என் வாழ்க்கைக்குள்ள வந்த ..?ஏண்டி இப்படி என்னை தினம் தினம் சாகடிக்கிற என்று வாய் விட்டு சத்தமாக கேட்டவன் மௌனமாக கண்ணீர் வடிக்க ஆரம்பித்தான்.



மறுநாள் காலை கௌசல்யா பரபரப்பாக அலுவலகம் நுழைந்தாள். எதிர்பட்டவர்களுக்கு புன்னகையுடன் தலையசைத்தபடியே அவளது இருப்பிடத்திற்கு சென்றவள்..அங்க அவளது பழைய அலுவலக தோழி கோமதி அமர்ந்திருப்பதை கண்டதும் அது அவளுடைய கேபினா என வெளிவந்து ஓரு முறை சரிபார்த்தாள்.

ஏய் கௌசி…உள்ள வா.. இது உன்னோட கேபின் தான் நான் உன் சீட்ல தான் உக்காந்து இருக்கேன் என்றாள்.

குழப்பத்துடன் கோமதியை பார்த்தவள்.. நீங்க எப்படி என் கேபின்ல..


ம்ம்..என் பெர்ஃபார்மன்ஸ் சரியில்லன்னு என் இடத்துக்கு உன்னை மாத்திட்டாங்க..


ஹான்..என மேலும் குழம்பினாள்.

ஓஓ மாத்தி சொல்லிட்டேனா உன் பர்ஃபார்மன்ஸ் சரியில்லன்னு என்னை இங்க மாத்திட்டாங்க.


என்ன விளையாட்டு கோமதி..முதல்ல என் டெஸ்க்ல இருந்து எந்தரிங்க..


விளையாட்டா…அதும் உன்னோடவா..சான்சே இல்ல..இனிமே இதான் என் சீட் .


அபிஷியலி எனக்கு நியூ ஜாப்புக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் தந்திருக்காங்க.. அது மட்டும் இல்லாம மெயில் வேற பண்ணியிருக்காங்க பாக்குறீங்களா என்று மின்னஞ்சலை திறந்து காட்டவும் .


அப்போ நான் எங்க வேலை செய்றது என கேட்க .


அதை சார் கிட்ட போய் கேளுங்க..அதை விட்டுட்டு என்கிட்ட கேட்டுட்டு இருக்கீங்க என்றபடி கோமதி அவளின் வேலையை தொடர .


என்ன நெனச்சிட்டு இருக்காரு.. விக்கியோட அப்பா..நெனச்சா பிரான்ச் மாத்தி விடறாரு..என்கிட்ட சொல்லாம என் இடத்துக்கு வேற ஒருத்தரை உக்கார வைச்சிருக்கறாரு..


என்னை வேலைக்கு வச்சுக்க பிடிக்கலைன்னா அதை முகத்துக்கு நேரா சொல்ல வேண்டியது தானே.. அதை விட்டுட்டு…ச்சே…என்னைச் சொல்லனும்.. பிரான்ச் மாத்தி விடும்போதே வேலைக்கு வரமாட்டேன்னு ரிசைன் பண்ணியிருக்கணும்..அதை விட்டுட்டு வந்தேன்ல அதான் இப்படி புட் பால் மாதிரி உதைக்கறாரு..


இன்னைக்கு என்ன ஆனாலும் சரி முகத்துக்கு நேரா சொல்லிட்டு வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிடனும் இவர் விளையாட நான் பந்தா இருக்க முடியாது.


என கோபமாக திட்டியபடி ராமநாதனின் அறைக்குள் அனுமதி பெற்றபடி சென்றாள்.


ஆனால் உள்ளே சென்ற அடுத்த நொடியே அவளின் கோபம் எல்லாம் இருந்த இடம் காணாமல் போக கைகள் நடுங்க கண்கள் நொடியில் குளம் கட்டியது.


இறுகிய முகத்துடன் ராமநாதனின் இருக்கையில் விக்னேஸ்வரர் அமர்ந்திருந்தான்.


கௌசல்யாவை எதிர்பார்த்து காத்திருந்தவன் போல அவள் உள்ளே நுழையவுமே அவன் இருக்கையை விட்டு எழுந்திருந்தான்.


விக்கி நீ…


வாங்க மிஸஸ் கௌசல்யா..என்ன காலைலேயே எம் டி ரூம்க்கு வந்திருக்கீங்க..எனி ப்ராப்ளம் என கேட்
ட தோரணையே சொல்லியது கௌசல்யாவின் மீது இருக்கும் கோபத்தின் அளவை.


தொடரும்.
 
Last edited:
Top