கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 22

Akila vaikundam

Moderator
Staff member
22.


அது வந்து என திணறவும்..


ஓஓஓ உங்க சீட்ல மிஸ் கோமதி உக்காந்திருக்காங்களா..?எனக்கேட்டவன் டேபிளின் மீது இருந்த ஒரு கவரினை அவளது கையில் கொடுத்தான்.


வாங்க மறுத்தபடி நிற்கவும்..இது உங்க சஸ்பென்ட் ஆர்டரோ டிஸ்மிஸ் ஆர்டரோ இல்லிங்க அதனாவ தைரியமா வாங்கி பிரிச்சிப்பாருங்க..என்றவன்.


ஒருவேளை இது உங்க வேலை போவதற்கான ஆர்டரா இருந்தா கூட நீங்க சந்தோஷம்தானே படணும். அதை சொல்ல தானே இவ்ளோ வேகமா வந்தீங்க இப்போ என்ன தயங்குறீங்க எனக் கேட்கவும் நண்பன் தன்னுடைய மனதை அறிந்து கொண்டானே என்று ஆச்சரியத்தில் விழி விரிய பார்த்தாள்.


ப்ளீஸ் என்றபடி அவன் நீட்டவும் தயங்காமல் வாங்கிக்கொண்டவள்..அதை அப்படியே வைத்திருக்கவும்.


என்னன்னு பிரிச்சு பாருங்க மிஸஸ் கௌசல்யா..என்றான்.


நீ.…


ஹான்..


சாரி நீங்க எது செய்தாலும் என் நல்லதுக்கு தான் செய்வீங்க..அதனால பிரிச்சி பார்க்கவேண்டிய அவசியம் வராது.


ம்ம்..உங்க நம்பிக்கைக்கு நன்றி..ஆனா இதை செயல்ல காமிச்சிருந்தா எனக்கு உண்மையான சந்தோஷம் கிடைச்சிருக்கும்.. வெறும் வார்த்தையா கூட இனி மேல் பெரிய வார்த்தைகளை உபயோகிக்காதீங்க..


விக்கி…


பேசாத கௌசல்யா உன்னை நான் என்ன செஞ்சிட்டேன்னு இப்படி வந்து ஓளிஞ்சிருக்க..உன் பர்சனல் பத்தி கேட்டேன்..தப்பு தான் சாரி… அதை சொல்ல பிடிக்கலைன்னா நீ என்ன செஞ்சு இருக்கணும் ..?


விக்கி என் பர்சனல் கேக்காத..நான் ஷேர் பண்ண மாட்டேன்னு சொல்லியிருந்தா உன்ன கட்டாயப்படுத்தி இருப்பேனா..


ஆனா நீ வாயே திறக்கல..அதோட இல்லாம ‌சொல்லிக்காம கொள்ளிக்காம இங்க வந்து ஒளிஞ்சிகிட்ட..உன் ஃபோன் நம்பரை வேற மாத்திட்ட… ஆஃபிஸ்ல எதிர் பார்த்து நீ வராததால ஃபோன் பண்ணி சலிச்சிட்டேன்..


இங்க வந்ததையாவது என்கிட்ட சொல்லிருக்கலாம்..அப்படி என்ன பயம் என்னை பார்த்து..உனக்கு விருப்பமில்லாததை மறுபடியும் கேட்டிடுவேன்ங்கற பயமா..என்னை புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா.


என் அப்பா சொல்லி தான் எனக்கே தெரியுது..நீ இங்க வேலைக்கு வர்றது.

அந்தளவுக்கு தான் நம்மளோட நட்பு இருந்திருக்கு..ரைட் கௌசி இனியும் உன் முன்னாடி நின்னு உன்னை கஷ்டபடுத்த விரும்பல..

நான் கோபத்தில் ஏதாவது பேசி அது உன்னை காயப்படுத்தி நம்முடைய நட்பு நம்ம முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சு போறதை என்னால பாக்க முடியாது..இனி உனக்கா தோணும் போது என்னோட பேசினா போதும்..


அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் நீ நினைக்கிற மாதிரி என் அப்பா ரொம்ப கெட்டவர் இல்லை .


சொல்லப்போனால் இப்போ உனக்கான இடம் மாற்றத்தை கூட அப்பா தான் கொடுத்து இருக்காங்க..சோ இனியாவது ஓடி ஓளியாம உன் வேலையை செய்.. கண்டிப்பா நீ இருக்கற இடத்துல நான் இருக்க மாட்டேன் என்ற படி அங்கிருந்து சென்றான்.


அவன் பின்னாலே விக்கி சாரி என்னை மன்னிச்சிடு இனி உன்கிட்ட சொல்லாம எதும் செய்ய மாட்டேன்..ப்ளீஸ் என்றபடி அவன் பின்னே சென்றாள்.

அவளை கண்டுகொள்ளாமல் அவனது காரை இயக்கவும்..


வேகமாக சென்று அவனது கைகளை பிடித்தவள் என்னை அடிக்க வேணாலும் செய் விக்கி இப்படி கோபமா போகாத என்னால தாங்க முடியாது.


உன் மேல இருக்கிற கோபத்துக்கு அடிக்க தான் தோணுது…ஆனா பாழாப்போன மனசு இடம் தரல..


ஒரு வார்த்தை சொல்லிட்டு ஆபீஸ் மாறி இருக்கலாம்ல என்னை உயிரோடு சாவடிச்சிட்ட.. என்னால இதை தாங்க முடியல..சாரி உன்னை காயப்படுத்தறது என்னோட இன்டென்ஷன் இல்ல..புரிய வைக்கறது தான்..இனி இப்படி பண்ணாதடா என்றவன்.. நான் கிளம்பறேன் என்றபடி வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.


கண்களில் கண்ணீருடனே அலுவலகத்திற்குள் சென்றவள் அவளது கைப்பையை எடுத்தபடி வெளியேறினாள்.


மறுநாள் வழக்கம் போல பழைய அலுவலகத்திற்குச் செல்ல அங்கேயோ நிர்வாகத்தை வேலை செய்யும் ஒருவரின் வசம் ஓப்படைக்கப்பட்டிருந்தது.

என்னவென்று உடன் பணி புரிபவர்களிடம் விசாரிக்க விக்கி புது அலுவலக திறப்பிற்காக இடம் பார்க்க சென்றிருப்பது தெரிந்தது.


அவன் இதுவரை இப்படி சொல்லாமல் எந்த ஓரு வேலையையும் செய்ததில்லை..முதல் முறையாக கௌசியிடம் கூறாமல் செய்கிறான்.


அதுவும் அலுவலகத்தில் ஓரு மீட்டிங் அரென்ஞ் செய்து அனைவரிடமும் இதை பற்றி கூறிவிட்டு அவர்களிடத்தில் சிறப்பாக பணியாற்றிய ஒருவரை தேர்ந்தெடுத்து நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைத்து விட்டு சென்றிருக்கிறான்.


ஆனால் கௌசியிடம் இதை பற்றி வாய் திறக்கவில்லை.


முதல்முறையாக நண்பன் தன்னை புறக்கணிக்கிறான் என்பதை உணர்ந்தாள்.


ஆனால் அவள் செய்த தவறு நினைவிற்கு வரவில்லை.


முதல் முதலில் நண்பனை இவள் தான் புறக்கணித்தாள்.


அவனிடம் காரணம் எதுவுமே கூறாமல் அலுவலகம் மாறி வந்ததோடு மட்டுமில்லாமல் அவளுடைய அலைபேசி எண்ணையும் மாற்றி இருக்கிறாள்.


இது எதுவுமே பெரிதாக தெரியாமல் நண்பன் அவளிடம் கூறாமல் சென்றிருக்கிறான் என்பது மட்டும் பெரியதாக தெரிந்தது.


யாருக்குமே தன்னைப் பிடிக்கவில்லை என்று அவளுக்கு அவளாகவே நினைத்துக் கொண்டு மௌனமாக வேலையை தொடர ஆரம்பிப்பாள்.


சில நாட்களிலேயே அனைவருக்கும் தனித்தனியாக ஸ்வீட் பாக்ஸும் ஒரு கவரும் கொடுக்கப்பட புதிதாக அலுவலகம் ஓபன் ஆகி இருக்கிறது என்று மற்றவர்களைப் போல் அவளுக்கும் தெரிவிக்கப்பட்டது.


மனதளவில் மிகவும் உடைந்தாள்.
அவர்களின் அலுவலக கிளை ஆரம்பித்ததால் அல்ல.


நண்பனைக் கண்டு அதிக நாட்கள் ஆகிவிட்டது அதற்காக.


எப்பொழுதாவது அலுவலகம் வருகிறான் ஆனால் இவளை திரும்பி கூட பார்ப்பதில்லை.


நேரடியாக வந்து கணக்கு வழக்குகளை பார்த்து விட்டு செல்கிறான்.


இல்லை என்றால் தந்தையுடன் வருகிறான்.


இவளால் அவனை நெருங்கவே முடியவில்லை .


எத்தனையோ கஷ்டங்கள் வேலை விஷயத்தில் இருந்தாலும் அதையெல்லாம் சகித்துக் கொள்வது விக்கி காக தான் இப்பொழுது அவனே இங்கு வராத பொழுது எப்படி வேலையை தொடர்வது என கவலைக் கொண்டாள்.


இப்படியாக சில நாட்கள் கடக்க மீண்டும் எல்லோருக்கும் ஸ்வீட் பாக்ஸும் கவரும் கொடுத்ததோடு இல்லாமல் அனைவருக்கும் அரைநாள் விடுப்பும் கொடுக்கப்பட ஊழியர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்கள் கௌசல்யாவை தவிர .


அவளுக்கு அதற்கான காரணம் என்னவென்று தெரிய வேண்டும்.. என்னவாக இருக்கும் என யோசிக்கும் பொழுதே அனைவருக்கும் அதற்கான காரணம் சொல்லப்பட்டது விக்கி திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறான் என்ற விஷயம் ஊழியர்களுக்கு தெருவிக்கப் பட்டது.


திருமணத்திற்கு சம்மதித்ததற்கே இத்தனை ஆர்ப்பாட்டம் என்றால் திருமணம் நிச்சயம் ஆகி விட்டால் அனைவருக்கும் இன்னுமே பரிசுப் பொருட்களும் ஊதிய உயர்வும் கிடைக்கும் என மேலும் மகிழ்ச்சியில் பேசிக்கொண்டார்கள்.


கௌசல்யாவால் மட்டும் அந்த மகிழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை.

நண்பன் தன்னை ஒதுக்கி வைக்கிறான் என்று தான் நினைத்திருந்தாள்.


இப்பொழுதே ஒரேடியாக விட்டு செல்கிறானோ என்று வருத்தம் கொண்டாள்.


தன் மீது இருக்கும் கோபத்தில் அவசரக் கதியில் தீர விசாரிக்காது ஏதாவது ஒரு பெண்ணுக்கு சம்மதம் கூறிவிடுவானோ என்ற கவலை மேலும் அதிகரித்தது.


இதற்கு மேலும் அவனுடன் கண்ணாமூச்சி விளையாட்டை
தொடர அவள் விரும்பவில்லை .


அவனை சந்திக்க முடிவெடுத்தவள் அதன் பிறகு அதற்கான நேர்த்தை ஒதுக்கி வைத்து காத்திருக்க ஆரம்பித்தாள்.
 
Last edited:
Top