23
நெடுநாட்கள் எல்லாம் காலம் அவளை காத்திருக்க வைக்கவில்லை.
சரியாக இரண்டே நாளில் அலுவலகத்திற்கு வந்திருந்தான் விக்கி.
இம்முறை வேலைப்பளுவின் காரணமாக நாள் முழுவதுமே அங்கே இருக்கும் படி ஆயிற்று.
அவன் தனியாக இருக்கும் நேரம் பார்த்து அவனை சந்திப்பதற்காக சென்றாள் கௌசல்யா.
அனுமதி பெற்று இவள் உள்ளே நுழையவும் அவனும் வெகு மும்பரமாக கோப்பு ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தவன்.
வாங்க மிஸஸ் கௌசல்யா எனக் கேட்டபடி அவனது வேலையை தொடர்ந்தான்.
விக்கி இன்னும் என்மேல கோபம் போகலையா..?
கோபமா அதெல்லாம் ஒன்னுமில்லை ..
கோபம் தான் அதனால தான் என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிக்க போற..
கல்யாணமா..? அதும் நானா என அவளின் முகம் பார்த்து கேட்டவன்..
சட்டென்று நெற்றியில் விரல் வைத்து நீவி கொண்டவன்..ஓஓ .. பொண்ணு பாக்கட்டுமான்னு கட்டாயப்படுத்திட்டு இருந்த அம்மா கிட்ட உங்க இஷ்டம் என்று சொன்னதை சொல்லறீயா..அப்படினா நீ கேள்விப்பட்டது சரிதான் என்றபடியே வேலையைத் தொடர்ந்தான்.
என் மேல இருக்குற கோவத்துல அவசரப்பட்டு தப்பான பொண்ணை தேர்ந்தெடுத்திடாத விக்கி அப்புறம் வாழ்க்கை ஃபுல்லா நரகம் ஆயிடும்.
ம்ம்.. புரியுது..உன்னை மாதிரி அவசரப்பட்டு தப்பான ஆளை சூஸ் பண்ண கூடாதுன்னு சொல்லற…ரைட் என்றவன் வேலையில் கவனம் செலுத்த..அவனின் குத்தல் பேச்சால் நொடியில் நிலைகுலைந்தாள்.
விக்கி நீ ரொம்ப மாறிட்ட முன்னெல்லாம் என்னை இப்படி காயப்படுத்த மாட்ட.. என்று மனதில் தோன்றியதை வெளிப்படையாக கூறினாள்.
நீ என்னை காயப்படுத்தலையா கௌசி..? நாம குடுக்குறது தானே நமக்கு திருப்பி கிடைக்கும் ..நீ கொடுக்கிறதை தானே நானும் உனக்கு திருப்பி தர முடியும்..எப்பவுமே பொறுமையா போக நான் ஒன்னும் புத்தரோ இயேசுவோ இல்லையே.சாதாரண மனுஷன் தானே.
வேணாம் விக்கி மேற்கொண்டு எதுவும் பேசாத..நீ என்னை காயப்படுத்தனும்னு ரொம்ப கஷ்டப்பட்டு உன் இயல்பை மீறி பேசிட்டு இருக்க..என்னால நீ படற கஷ்டத்தை பாக்க முடியல..
தெரியுது இல்ல.. அப்புறம் ஏன் இன்னும் என் முன்னாடி நின்னு மேலும் கஷ்டப்படுத்தற.. முதல்ல இங்கிருந்து போ என கத்தினான்.
விக்கி சாரிடா என்று மேற்கொண்டு ஏதோ கூற வர.
சற்றென்று எழுந்தவன் கைகள் கூப்பி தயவு செய்து எதையும் நீ சொல்ல வேண்டாம்.. கேட்கிற அளவுக்கு பொறுமை என்கிட்ட இல்ல. புரிஞ்சுக்க முடியுதா இல்லையா கௌசி.
உன்கிட்ட பேசாம இருக்கவும்,முடியல பேசவும் முடியல ,உன்ன பாக்காமலும் இருக்க முடியல, பார்த்துட்டு உன் மேல இருக்கற கோபத்தை மறைக்கவும் முடியல. தயவுசெய்து உண்மையிலேயே என்னை புரிஞ்சுகிட்டா என் முன்னாடி கொஞ்ச நாளைக்கு வராது..
என் கோபம் குறைந்ததும் நானே வந்து உன்கிட்ட பேசறேன்..என்று சொல்லும் பொழுது முற்றிலும் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
யாருக்குமே பிடிக்காத பொண்ணா போய்ட்டேன்..மத்தவங்களை போல நீயும் என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டல்ல என்று சொல்லவும்.
ப்ளீஸ் கௌசி மேற்கொண்டு எதையும் பேசி என்னை மேலும் கோபப்படுத்தாதே, உன்னை யாரும் வெறுக்கல,
ஆனா அந்த நிலைமைக்கு என்னை கொண்டு வந்து விட்டுடுவியோனு எனக்கு பயமா இருக்கு.
நான் அப்படி என்ன கேட்டுட்டேன்னு என்கிட்ட சொல்லாம கொள்ளாம அந்த ஆபீஸ்ல போய் ஒளிஞ்சிகிட்டு போன் நம்பரை மாத்தின..
இதுக்கு உன்னால பதில் சொல்ல முடியும்னா என்கிட்ட இப்போ பேசு இல்லன்னா கிளம்பி போ ..இல்லல்ல உன்ன கிளம்பி போனு சொல்றதுக்கு கூட எனக்கு உரிமை இல்லைனு நினைக்கிறேன் என்று சொன்னவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
நண்பனின் இந்த புது அவதாரத்தை எப்படி கையாள்வது என தெரியாமல் குழப்பி தவித்தாள் கௌசல்யா.
இனி அவனாக கோபம் குறைந்து அவளை தேடி வரும் பொழுது அவள் பக்க நியாயத்தை பற்றி பேசிக்கொள்ளலாம் என நினைத்தாள்.
அப்படியாக அந்த வாரம் சென்று விட்டநிலையில் வார கடைசியில் அலுவலக தொலைபேசி எண்ணிற்கு அவளைக் கேட்டு ஒரு அழைப்பு வந்தது.
வரவேற்பு டேபிளின் முன்பு நிற்கும் ரேணு நேரடியாக இணைப்பை தராமல் கௌசல்யாவின் கேபினுக்கே செய்தியை சொல்ல ஒடி வந்தாள்.
ஏய் கௌசி மேம் கிட்ட இருந்து ஃபோன் வந்திருக்கு என்று சொல்லவும்.
எந்த மேம் என கேட்டபடி எழுந்தவள்..
ரேணுவின் பரபரப்பை பார்த்து ஒரு வினாடி யோசித்தவள்..யார் சாரோட அம்மாட்ட இருந்தா என கேட்டபடியே வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
ம்ம்…அப்படியும் சொல்லலாம்,இல்ல பெரிய பாஸோட வொய்ப் னும் சொல்லலாம் என்று புன்னகையுடன் கூறினாள்.
அதற்குள்ளாகவே இருவரும் ரிசப்ஷன் டேபிள் முன்பு வந்து நின்றிருந்தனர்.
என் டேபிளுக்கே கனெக்ஷன் கொடுத்திருக்கலாம்ல்ல என குரல் கேட்கா வண்ணம் வாயை அசைத்து ரேணுவிடம் கௌசல்யா கேட்க.
அவளும் சிரித்தபடி அப்படி கொடுத்திருந்தா நீ என்ன பேசுறன்னு பக்கத்துல இருந்து கேட்க முடியாது இல்ல என்று சிரித்தபடி கூறவும் தலையில் அடித்துக் கொண்டவள் சற்று நகர்ந்து செல் என்பது போல் ஜடை செய்து மிகுந்த மரியாதையுடன் ரிசிவரை எடுத்து காதில் வைத்து ஹலோ என்றாள்.
எதிர்முனையில் நிதானமாக ஆனால் அழுத்தமாக கௌசல்யா எப்படி இருக்க என்று நலம் விசாரித்தது அந்த குரல்.
நல்லாயிருக்கேன் மேம் நீங்க..என்று கேட்கவும்.
ஆன்ட்டி எப்போதிருந்து மேம் ஆனேன் கௌசல்யா என்று கேட்கவும்.
இல்ல..அது என்று திணறும் பொழுதே உணர்ச்சிவசத்தால் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்திருந்தது.
ரிலாக்ஸ் நான் சாதாரணமாக தான் கேட்டது.. உனக்கு எப்படி கூப்பிட்டா சௌகரியப்படுமோ அப்படியே கூப்பிடு..
நீ மேம்னு கூப்பிடறதால இந்த ஆன்ட்டி உனக்கு மேடம் ஆகிட போறது இல்ல.. எப்பவுமே விக்கி போல தான் நீயும் என்று சொல்லவும்.
ஆன்ட்டி என்று அழ ஆரம்பித்து விட்டாள்.
ஸ்ஸ்..சூ கண்ணை துடை எதுக்காக அழற..அழகூடாது கௌசல்யா..என்றவர்.
உன் கிட்ட கொஞ்சம் பேசணும்..ஃபோன்ல பேச முடியாது..நேர்ல தான் பேசமுடியும்.. சிரமம் இல்லனா வீடு வரைக்கும் வர முடியுமா..?
அது..வந்து..என தயங்கவும்..
ஆன்ட்டி கிட்ட என்ன
தயக்கம் கௌசல்யா எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லு
ஆன்ட்டி வீட்டுக்கு வரனும்னா வீட்ல பர்மிஷன் கேட்கணும்.. அம்மா அனுப்புவாங்களா என்னன்னு தெரியல அதான் என்று இழுக்கவும்.
புரியுது கௌசல்யா உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இதுதான் எதுவா இருந்தாலும் வெளிப்படையா உண்மையை பேசுறது சரி உன் போன் நம்பர் குடு நான் பேசுறேன்.. இப்ப கூட உன் ஃபோனுக்கு தான் ட்ரை பண்ணினேன் என்னமோ தெரியல நம்பர் ரீச் ஆகல அதான் ஆஃபீஸ் நம்பர்க்கு கூப்பிட்டேன் உனக்கு எதும் தொந்தரவு இல்லல்ல என்று கேட்கவும்.
அய்யய்யோ இல்ல ஆண்ட்டி நானே உங்களுக்கு கூப்பிடுறேன் உங்க நம்பர் என்கிட்ட இருக்கு என்று சொல்லியபடி அவளின் கைபேசியில் இருந்து அவருக்கு அழைத்தார்.
உற்சாகமாக விக்கியின் தாயாருக்கு அழைத்துப் பேசியவள் எதிர் முனையில் அவர் பேசப் பேச அதிர்ச்சியில் முகம் ஐஸ் கட்டியாய் உரைய ஆரம்பித்தது.
ஏசி ரூமிலும் வேர்த்து ஊத்த இதயம் தற்காலிக வேலை நிறுத்தம் செய்வதுபோல இயங்க மறுத்தது.
அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மனம் மறுத்தது.பதில் கூற முடியாமல்
சில வினாடிகள் கடும் அதிர்ச்சிக்கு ஆளானவள்..ஒரு வழியாக தன்னை மீட்டுக் கொண்டு..சாரி ஆன்ட்டி என்று வாய்க்குள் முனுமுனுத்தபடியே இணைப்பைத் துண்டித்தாள்.
அப்பொழுதே முடிவெடுத்தவள்.. விக்கிக்கு அழைத்தாள்.
கோபமாக விக்கி இப்போ நீ எங்கிருக்க எனக்கேட்கவும்..
அவனும் பிசினஸ் மீட்டிங்க்காக ஒரு ஹோட்டல் வந்து இருக்கேன் எதா இருந்தாலும் அப்புறமா பேசு..என்றான்.
எந்த ஹோட்டல்னு சொல்லு நான் உடனே உன்னை பாக்கணும் என்றாள்.
அவளின் கோபத்தின் அனலை எதிர் முனையில் இருந்த விக்னேஸ்வரனும் நன்றாகவே கிரகித்துக் கொண்டான்.
அவளின் மேல் தனிப்பட்ட முறையில் பல கோபதாபங்கள் இருந்தாலும் அவளின் இந்தக் கட்டளையான பேச்சுக்கு தானாகவே அவனின் உதடுகள் கட்டுப்பட்டு இருக்கும் இடத்தை அறிவித்தது.
பிறகு கௌசல்யா ஏற்கனவே நான் உன்கிட்ட சொல்லி இருக்கேன் உன் மேல இருக்கிற கோபம் எனக்கு அப்படியே தான் இருக்கு அது குறையும் பொழுது நானே உன்னை சந்திக்கிறேன்..
அது வரைக்கும் தேவையில்லாம நீ என்னை சந்தித்து என் கோபத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டாம் என்று சொல்லவும் .
நானும் அந்த முடிவோட தான் போன நிமிஷம் வரைக்கும் இருந்தேன்.. நீயா கோபம் தணிச்சு என்கிட்ட பேசுற வரைக்கும் நானா உன் முன்னாடி வந்து நிற்கவும் கூடாது பேசவும் கூடாதுன்னு.. ஆனால் இந்த நிமிஷம் கதை அப்படி இல்ல
நீ என் மேல வச்சிருக்கற கோபத்தை விட ஆயிரம் மடங்கான கோபத்தை நான் இப்போ உன் மேல வச்சிருக்கேன்.
இந்த கோபத்துக்கான விடையை நீ தெரிஞ்சுக்கிட்டே ஆகணும்.. வெயிட் பண்ணு நான் உன்னை சந்தித்தே ஆகனும் என்றபடி கோபமாக இணைப்பைத் துண்டித்தாள்.
அங்கே விக்கியின் பழைய கோபங்கள் எல்லாம் காற்றோடு காணாமல் போக புதிதாக கௌசல்யாவின் கோபத்தை நினைத்து பயம் வந்தது.
அவள் அவ்வளவு சீக்கிரமாக கோபப்படுபவள் கிடையாது இந்த அளவு கோபத்தில் பேசுகிறாள் என்றால் என்ன நடந்திருக்கும்.. இந்த திடீர் கோபத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பலவாறாக சிந்தித்தவனுக்கு நொடியில் தனது தாய் பற்றிய சந்தேகம் வந்தது.
ஒருவேளை தாயாரிடம் பேசி இருப்பாளோ என நினைத்த அடுத்த வினாடியே அன்னைக்கு அழைத்திருந்தான்.
அவரும் கௌசல்யாவுடன் பேசியதாக சொல்லவும் அவளின்
கோபத்திற்கான காரணம் பிடிபட்டது .
சுனாமி போல அடித்து வீழ்த்தும் ஆத்திரத்துடன் வருபவளை சமாளிக்க வழியின்றி காத்திருக்க ஆரம்பித்தான்.

Last edited: