கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 28

Akila vaikundam

Moderator
Staff member
‍28.

என்னமா முகம் ஏதோ போல ஆயிடுச்சி என தாயின் கலக்கமான முகத்தை பார்த்தபடி கேட்டவனிடம்.

கேசவா அம்மாவை தப்பா நினைக்கலன்னா ஓரு விஷயத்தை வெளிப்படையா சொல்லட்டா.?.

என்கிட்ட என்னமா தயக்கம் நீங்க எது சொன்னாலும் எனக்கு தப்பா தோணாது சொல்லுங்க.

நான் ரொம்ப சுயநலமா இருக்கேனா கேசவா..

ஏன் ம்மா அப்படி தோணுது.

இல்ல கேசவா உனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சி..ஆனா உன்னை விட்டுட்டு அவளை கட்டாயப்படுத்தறேன்னு உனக்கு தோணலையா..

இல்லம்மா..வீட்ல ஒரு பொண்ணு இருக்கும் போது எல்லா அம்மாக்களும் செய்யறதை தான் நீங்க செய்யறீங்க.

உனக்கும் கல்யாண ஆசைகள் இருக்கும் தானே..

ம்ம் அதே சமயம் குட்டிமாவோட கடமையும் இருக்குமா..என்று சொல்லும் போதே லட்சுமி கதறி விட்டார்.


நான் பாவி ஆகறேன்டா..என் புள்ளைகளை பத்தி புரிஞ்சிக்காம சுயநலமா இருக்கேன் என.

ம்மா.ப்ளீஸ் உங்க பயம் உங்கள இப்படி யோசிக்க வைக்குது.. இதால எனக்கு எந்த வருத்தமும் இல்லை கஷ்டமும் இல்லை அண்ணா பண்ணினது தப்பு தானே அட்லீஸ்ட் எனக்கு கல்யாணம் முடியறவரைக்குமாவது நம்மளோட இருந்திருக்கணும் அப்படி இருந்திருந்தால் உங்களுக்கு நம்பிக்கை வந்து இருக்கும் அவர் கல்யாணம் ஆனவுடனே தனியாக போகவும் உங்களுக்கு கௌசியை பத்தின கவலை வந்திடுச்சி ..


அதான் அவ மேல கொஞ்சம் ஓவரா அக்கறை எடுத்துக்குறீங்க இது தப்பு எல்லாம் கிடையாது ஆனா ஒன்னு தெரிஞ்சுக்கோங்க என்னைக்கு இருந்தாலும் நான் உங்களை விட்டுட்டு போக மாட்டேன் ஒரு வேளை என் மனைவியே உங்களை விட்டுட்டு வந்தா தான் உன்னோட வாழ்வேன்னு சொன்னா கூட என் மனைவியை கூட விடுவேன் உங்களையும் தங்கச்சியும் நான் விடமாட்டேன் .


அதுக்காக தான் பயந்துட்டு நான் கல்யாணம் வேண்டாம்னு சொல்கிறேன் என் சுயநலத்துக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையின் அழிக்க கூடாது இல்லையா அதனால பாப்பா கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.

அப்போ தான் எனக்கு நிம்மதியும் கிடைக்கும் என்று முடித்துக்கொண்டவன் வேலைக்கு செல்லத் தயார் ஆனான்.


பெருமூச்சு ஒன்றை விட்டபடியே அவரின் வேலையை தொடர லட்சுமியின் கணவனான பெருமாள் அவரை முறைத்தபடி நின்று கொண்டிருந்தார்.

கணவரை கவனித்த லட்சுமி ஆச்சரியமாக என்னங்க இந்த நேரத்தில இங்க இருக்கிறீங்க என்றபடி அருகில் வரவும் அவரை அப்படியே நில் என்பது கை நீட்டி தடுத்து நிறுத்தியவர்


எப்போயிருந்து இப்படி நீ மட்டமான என எடுத்தவுடனே வார்த்தைகளை நெருப்பில் குலைத்து அள்ளி வீசினார்.

என்னாச்சி ஏன் இப்படி பேசறீங்க என படபடப்புடன் கேட்கவும்.


உன்கிட்ட வந்து ராகவன் எப்பவாவது கல்யாணம் பண்ணி வைய்ம்மானு கேட்டானா..

இல்லங்க என பயத்தில் அவரின் முகம் வெளிறியது.

அவனுக்கு வயசு வரவும் நீயே பொண்ணு பார்த்த.. நீயா கல்யாணம் பண்ணி வச்ச .அவன் கல்யாணத்துக்கு முன்னாடி கூட நான் சொன்னேன் கேட்டியா நம்ம வசதிக்கு தகுந்த மாதிரி பொண்ணு பாருன்னு.

நீ தான் பொண்ணு பெரிய இடமா இருக்கணும்னு பார்த்த..வந்தவளுக்கு நம்ம வீடு பிடிக்கல அதனால தனி குடுத்தன் போறோம்னு ஆரம்பிச்சா அதுக்கு நீ ஒத்துக்கல கடைசில சம்மந்தி நேரடியா ராகவன்கிட்ட பேசி சரிகட்டி அவங்களோட கூப்பிட்டுக்கிட்டாங்க.

இதுல அவன் தப்பு எங்கிருந்து வந்தது..
அவன் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருக்கணும்னு தானே ஆசைப்பட்ட இப்ப அப்படித்தானே இருக்கான்.. மருமக முத குழந்தையும் பெற்றெடுத்திட்டு இப்போ ரெண்டாவது குழந்தைக்கு மாசமா இருக்கிறா. நிறைவா இருக்காங்க இல்ல அது போதுமில்ல ..பிறகு எதுக்கு சின்னவனை போட்டு குழப்பற..

உனக்கு தெரியாத ஒரு விஷயத்தை இப்போ நான் சொல்றேன் கேட்டுக்கோ பெரியவனோட கல்யாணத்துக்கு முன்னாடியே மருமக அவன் கிட்ட தெளிவா சொல்லிட்டா நான் ஒரே பொண்ணு என் அம்மா அப்பாவை விட்டுட்டு வர முடியாதுன்னு.

நம்ம புள்ள முதல்ல ஒத்துக்கல அதுக்கப்புறம் மருமக மறுபடியும் ஒரு யோசனை சொன்னா எங்க அம்மா அப்பா கிட்ட சொல்லி பெருசா ஒரு வீடு வாங்கி தரேன் அதுல நாமெல்லாம் சேர்ந்து இருக்கலாம் என்று அதுக்கும் உன் பிள்ளை ஒத்துக்கல அது என் அம்மா அப்பாவை அசிங்கப்படுத்தற மாதிரினு சொல்லிட்டான்.

அதோட இல்லாம நம்மளால பெருசா சொந்தமா ஒரு வீடு வாங்க அப்போ வசதி இல்லை அதனால இப்போதைக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு அவ கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.


இதை எல்லாத்தையுமே அவகிட்ட பேசிட்டு வந்த பிறகு என்கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னான்.
நான் தான் உனக்கு பொண்ணு பிடிச்சிருக்கானு கேட்டேன் ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னா அப்புறம் என்னடா பிரச்சனை புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ அவ கூட சேர்ந்து அவளுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை வாழுனு அவனை சம்மதிக்க வச்சதே நான் தான்.

மருமகளுக்கு நம்ம பிள்ளையை ரொம்ப பிடிச்சதால அவனுக்காக நம்ம வீட்ல கொஞ்ச நாள் வந்திருந்தா..


அவனும் மருமகளோட போராடி பாத்தான் முடிலனதும் கிளம்பிட்டான்..நீ அமைச்சி குடுத்த வாழ்க்கை இப்போ வரை சந்தோஷமா தான் இருக்கான்.

ஆனா நீ அந்தப் பிள்ளை காரணம் காட்டி இரண்டாவது பிள்ளைக்கு நியாயமா கிடைக்க வேண்டிய சந்தோஷத்தை பறிச்சிட்டு இருக்க.

நம்ம ரெண்டு பசங்களையும் கேட்டா கௌசியை பெத்துக்கிட்டோம் நமக்கு பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டு தானே பெத்துக்கிட்டோம் அப்புறம் எப்படி நம்ம பொண்ணு அவங்களோட பொறுப்பாக முடியும் ,கடமையாக முடியும் .


இவளுக்காக சின்னவன் வாழ்க்கையை நீ கெடுப்பியா நீ என்ன பண்ணுவேன்னு தெரியாது பெரியவனுக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தியோ அதே மாதிரி சின்னவனுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கற அதுக்கப்புறம் தான் நீ உன் பொண்ணை பத்தி யோசிக்கணும் அதுக்கு முன்னாடி பொண்ண மனசுல வச்சுட்டு சின்னவன் வாழ்க்கையில விளையாடிட்டு இருந்த நடக்கிறதே வேற என்று மிரட்டி விட்டு சென்றார்.

அத்தோடு இல்லாமல் கௌசியும் அண்ணனின் திருமணத்திற்காக பேச லட்சுமியின் மனம் மகனுக்கு திருமணம் செய்து விட்டு கௌசல்யாவிற்கு செய்யலாம் என மாறிற்று.

அதைக் கேசவனிடம் சொல்ல அவன் மிகப் பிடிவாதமாக தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் எனக்கூறிவிட்டான் .


இதற்கிடையில் கௌசியும் கல்லூரியில் சேர்ந்து விட படித்துக் கொண்டிருக்கும் பெண்ணை எப்படி பாதியில் நிறுத்தி திருமணம் செய்து வைப்பது என லட்சுமி புலம்பி தவிக்க ஆரம்பித்தார்.

கணவர் வேறு அடிக்கடி லட்சுமியிடம் பெண் ஜாதகம் வந்திருக்கிறதா என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்.மகன் சம்மதிக்காவிட்டால் கணவரிடம் அவரால் திட்டு வாங்க முடியாது



அதனால் அழுது உண்ணாவிரதம் இருந்து ஒருவழியாக கேசவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார் .

கேசவன் திருமணத்திற்கு முன்பு சொந்தமாக வீடு வாங்கி அதில் குடியேறிய பிறகு மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக கூறவும் கௌசியின் திருமணத்திற்காக வைத்திருந்த சேமிப்பு எல்லாவற்றையும் கேசவனிடம் கொடுத்து அவர்கள் இருப்பதற்கான வசதியான ஒரு வீட்டை தவணை முறையில் வாங்கினார்கள்.


அதன் பிறகே கேசவனின் ஜாதகத்தை திருமண தரகர்களிடம் கொடுக்க அவன் அனுமதித்தான்.

அதற்குள் கௌசல்யா அவளின் முதல் பருவ தேர்வை வெற்றிகரமாக எழுதியும் முடித்துவிட்டாள்.


இந்து சமயத்தில் தான் கேசவனின் ஜாதகம் தவறுதலாக ஜானகியின் வீட்டிற்கு சென்று விட அவனின் பின்புலம் எதுவும் தெரியாத ஜானு புகைப்படத்தை பார்த்த உடனே கேசவனை கணவனாக என்ன தொடங்கி விட்டாள்.


ஜாதகப் பொருத்தமும் நன்கு பொருந்தி விட அதன் பிறகு கேசவனை பற்றி விசாரிக்க அது ஜானவின் குடும்பத்திற்கு சற்றும் ஏற்றதாக இல்லை.


ஏனென்றால் ஜானகியின் பொறுப்பை ஹரிபிரசாத்தின் குடும்பம் ஏற்றுக்கொண்டதால் அவளை பிக்கல் பிடுங்கல் இல்லாத கோடிஸ்வர குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டிருந்தனர்.

அதனால் கேசவனின் ஜாதகத்தை அவர்கள் பெரிது படுத்த விரும்பாமல் வேறு வரன்களை பார்க்க ஆரம்பித்தனர்.

ஜானகியால் பெரியம்மா பெரியப்பாவின் வார்த்தைகளை மீறவும் முடியாமல் அண்ணனின் அன்புக்கு கட்டுப்பட்டு கேசவனை கடந்து விட தீர்மானித்தாள்.


அந்த சமயத்தில் ஜானகியின் பெற்றோர் எதார்த்தமாக மகளைப் பார்ப்பதற்காக ஹரிபிரசாத்தின் வீடு வர அப்போது அவளுக்காக பார்த்திருக்கும் வரன்களை எல்லாம் பெற்றோர்களிடம் காட்ட தங்களின் வசதிக்கு ஏற்றவாறு மணமகனை தேர்வு செய்யுமாறு இருவருமே தன்மையாக கேட்டுக் கொண்டனர்.


அது மட்டும் இன்றி இப்பொழுதுதான் அவர்களின் மகன் வெளிநாட்டில் வேலைக்குச் சேர்ந்து இருக்க அதற்கே மிகப்பெரிய தொகை செலவாகி இருக்கிறது இதில் திருமணமும் மிகவும் ஆடம்பரம் என்றால் தங்கள் வசதிக்கு முடியாது என்பதை கூறவும் ஹரிபிரசாத் அவளின் திருமணம் எங்களின் பொறுப்பு எதற்காக நீங்கள் வருந்த வேண்டும் என கேட்க அப்பொழுதுதான் ஜானகியின் பெற்றோருக்கு மகளை மறைமுகமாக அவர்கள் உரிமை கொண்டாடும் விஷயமே புரிந்தது.


இவர்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை என உணர்ந்த ஜானகியின் பெற்றோர்கள் அவளிடமே அவளின் திருமணத்தின் எதிர்பார்ப்புகளை கேட்டறிய ஆசைப்பட்டனர்.

ஜானுவோ படிப்பதற்காக மட்டுமே பெரியம்மாவின் வீட்டிற்கு வருவதாக வந்தவள் படித்து முடித்த பிறகு இவர்களின் அன்பில் கட்டுண்டு இங்கிருந்து படியே வேலைக்கும் செல்ல தொடங்கியிருந்தாள்.


என்னதான் பெரியப்பாவின் வீட்டில் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அவர்கள் இவளை மிகவும் நல்ல முறையில் நடத்தி இருந்தாலும் கூட பிறந்த வீட்டின் ஏழ்மையை நன்கு புரிந்தவள் .


அதனால் தான் ஹரிப்பசாத் எவ்வளவு எடுத்துக் கூறியும் அவர்களின் அலுவலகத்திற்கு செல்லாமல் காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆயிருந்த கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

அதனால் தாய் தந்தையர் திருமணத்தைப் பற்றி கூறவும் எதுவும் கூறாமல் உங்கள் விருப்பம் எதுவோ அதுபடியே செய்யுங்கள் என்று பொறுப்பை தாய் தந்தையிடம் ஒப்படைத்து விட்டாள்.


அவர்களும் பலவிதமான ஜாதகங்களை அவளிடம் காண்பிக்க எதுவுமே அவளுக்கு திருப்தி இல்லை என்றே கூறிக்கொண்டு வந்தாள்.


கடைசியாக என்ன என்று விசாரிக்கவும் தான் கேசவனின் ஜாதகத்தை பற்றி தாய் தந்தையிடம் கூறினாள்.


உடனே அவர்கள் என்ன ஏது என்று விசாரிக்க அப்பொழுது வரை கேசவனுக்கு பெண் தேடிக் கொண்டே இருக்க அந்த சம்பந்தமே தங்களுக்கு போதும் என பிடிவாதமாக ஜானகிக்கு அதையே பேசி முடிக்க நினைத்தனர்.


ஹரியின் குடும்பத்திற்கு துளி கூட விருப்பம் கிடையாது அவர்கள் ஜானுவிற்கு அமைத்துக் கொடுக்க நினைத்த வாழ்க்கை வேறு ஆனால் அவளின் பெற்றோர்கள் அவளுக்கு தேடி கொடுத்து இருக்கும் வாழ்க்கை வேறு இதில் இரு குடும்பங்களுக்கும் நடுவில் சிறு மனஸ்தாவும் கூட ஏற்பட்டது.


ஹரிபிரசாத்தால் ஜானகியை கேசவன் போன்றதொரு குடும்பத்திற்கு அனுப்பி வைக்க துளியும் விருப்பமில்லை.


இப்பொழுதுதான் கடனில் ஒரு வீடு வாங்கி இருக்கிறார்கள் இதற்கு இஎம்ஐ கட்டுவானா இல்லை என் தங்கையை சௌகரியமாக பார்த்துக் கொள்வானா என்று பலவிதமாக வாதாடி பார்த்தான்.


ஆனால் ஜானுவின் பெற்றோர்கள் சொந்தமாக அவனுக்காக ஒரு வீடு வாங்கி இருக்கும் பையன் கண்டிப்பாக என் மகளை நன்றாக வைத்துக் கொள்வான் என வாதிட்டு எங்களின் வசதிக்கேற்றவாறு நாங்கள் ஜானகி மனம் செய்து கொடுக்கிறோம். தயவுசெய்து நீங்கள் தலையிடாதீர்கள் என உறுதியாக பேசிவிட ஹரிபிரசாந்தின் குடும்பம் வேறு வழியின்றி ஜானு கேசவன் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும்படி ஆயிற்று.


அப்படியே ஒதுங்கிக் கொள்ளும் படியும் ஆயிற்று.


ஹரிபிரசாத்தால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை அதனால் ஜானகியின் திருமண நிச்சயத்தில் கூட கலந்து கொள்ளவில்லை.


பிறகுதான் ஜானகி ஹரியை தேடிச்சென்று முதல் முதலாக கேசவனின் புகைப்படத்தை பார்த்தவுடனே தனக்கு பிடித்து விட்டதாகவும் இவனே தனக்கு கணவனாக வந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்து விட்டதாகவும் அவனிடம் எடுத்துக் கூறவும் தங்கையின் அன்பினால் கட்டுண்டவன்.


சரி உன் விருப்பப்படி அவனையே திருமணம் செஞ்சிக்கோ ஆனா உனக்கு நம்ம ஆபீஸ்ல இருந்து ஒரு ஷேர் தரேன் அது மட்டும் இல்லாம இப்ப அவங்க குடியிருக்கிற வீட்டை சொந்தமாக வாங்கி அவனோட அம்மா அப்பாக்கு கொடுத்திடலாம்.


உனக்கும் மாப்பிள்ளைக்கும் தனியா ஒரு பங்களா வீடு வாங்கி தந்துடறேன் நீ அதுல தனிக்குடித்தனம் வந்திடு சொல்லவும் .


இல்லண்ணா அவர் என்கிட்ட தெளிவா பேசிட்டாரு எந்த காரணத்தை கொண்டும் குடும்பம் உடைய நான் காரணமா இருக்கக் கூடாதுன்னு..


அதுமட்டுமில்லாம அவருக்கு ஒரு தங்கை இருக்கா..அவ கல்யாணத்திலிருந்து எல்லாமே நான் தான் முன்னிறுத்தி நடத்தணும்னு அவர் சொல்லி இருக்காரு.


நீ பிறந்து வளர்ந்தது பணக்கார வீடா இருந்தாலும் நீ வாழ போற வீடு ஒரு சராசரி நடுத்தர குடும்பம் தான் நல்லா யோசிச்சு முடிவு எடுத்து சொன்னாரு ..

நானும் நல்லா யோசிச்சு முடிவெடுத்த பிறகு தான் வாக்கு கொடுத்தேன்.

என்னால என்னைக்குமே அந்த குடும்பம் உடையாதுன்னு அது மட்டும் இல்லாம நானும் தானே வேலைக்கு போறேன் அவரும் வேலைக்கு போறாரு நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வீட்டோட கடனை சீக்கிரமா அடைச்சுடுவோம்.


எனக்கு நீ வீடு தர வேண்டாம் கம்பெனியில் ஷேர் தர வேண்டாம் எப்பவுமே இந்த பாசம் மட்டும் எனக்கு இருந்தா போதும் அண்ணா
.


ஜனா அண்ணா மாதிரி எனக்கு என்னனு கண்டுக்காம விட்டுடாத ப்ளீஸ் என்று கண்களில் நீருடன் கூறவும் .


தங்கையின் தலையை பாசமாக வருடி விட்டவன் உன்னை மாதிரி ஒரு தங்கை ஏன் என் அம்மா வயிற்றில் பிறக்கல..நீ மட்டும் இந்த வீட்டில் பிறந்திருந்தால் நீ வாழ வேண்டிய வாழ்க்கையே வேற என்று கூறவும் .


அண்ணா பிறந்த வயிறு மட்டும் தான் வேற குடும்பமும் வீடும் ஒன்னு தானே எனக்கு ஜனா அண்ணா வேற நீ வேற இல்ல ரெண்டு பேரும் ஒன்றுதான் .


ஆனால் நீ தான் அப்பப்போ என்னை ஜனா கூட தங்கச்சியா பார்க்கற உன் தங்கச்சியா பார்க்க மாட்டேங்குற என்று சொல்லவும்.

ஏய் நான் சொன்னதுக்கு அது அர்த்தம் இல்லை நான் சொல்ல வந்த விஷயமே வேற நீ தப்பா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன் என்று பதறவும்.


புன்னகையுடன் எனக்கு எல்லாம் புரிஞ்சுது இந்த வீட்ல பிறந்து இருந்தா இந்நேரம் என் அம்மா அப்பா வாயை கட்டி போட்டுட்டு பெரிய வசதியான வீட்டுக்கு மருமகளா அனுப்பி இருப்பீங்க அதைத்தானே சொல்ல வந்தீங்க அண்ணா.


எவ்ளோ பெரிய கோடிஸ்வர மாப்பிள்ளையா இருந்தாலும் மனசுக்கு பிடிக்காதவங்களை கல்யாணம் செஞ்சுக்க முடியாது அண்ணா .

எனக்கு கேசவனை ரொம்ப பிடிச்சிருக்கு உனக்கு புரியும்னு நினைக்கிறேன் என்னை‌ தப்பா நினைக்காத என்று சொல்லவும்.


கேசவனோட போட்டோவை உன் கண்ணுல காமிச்ச அந்த கடவுளை தான் நான் குறை சொல்லணும்.


உனக்கு வந்த மாப்பிள்ளைகளோட ஜாதகத்தோட கேசவனோட ஜாதகமும் கலந்து வந்திடுச்சி.
நாங்களும் எதையும் விசாரிக்காம பிடிச்ச மாப்பிள்ளையை சொல்லுனு உன்கிட்ட அனுப்பிட்டோம் .


நீயும் கேசவனோடதை எடுத்து பார்த்துட்டு இவன் தான் கணவன்னு முடிவு செஞ்சிட்ட.


உன் வாழ்க்கை கேசவனோடனு விதி இருக்கும்போது யாரால என்ன செய்ய முடியும் என்றவன்..

அதுக்காக இந்த அண்ணன் உன்னை அப்படியே விட்ற மாட்டேன் இங்க நீ எப்படி இருந்தியோ அதே மாதிரி தான் அந்த வீட்டையும் உன்னை வாழ வைப்பேன் இது இந்த அண்ணனோட ப்ராமிஸ்.

தேங்க்ஸ் அண்ணா..உனக்கு கேசவனை பிடிச்சிருக்கு தானே எனக்கேட்கவும்.

ஓய் என்ன மாப்பிள்ளை
யை மரியாதை இல்லாம பேர் சொல்லி கூப்பிடுற உதை வாங்குவ இதையா நாங்க உனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தோம் என்று மறைமுகமாக அவனின் சம்மதத்தை தெரிவித்தான்.
 
Top