3.
வேர்க்க விறுவிறுக்க வேகமாக அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள் கௌசல்யா…அவளின் அலுவலகம் ஆறு அடுக்கு மாடிகளைக் கொண்டது…இவளது அலுவலகம் நான்காவது தளம்…அதனால் எப்பொழும் லிஃப்ட் தான் வருவது ..இன்றோ அதுவும் சோதனை செய்தது.. அவ்வளவு கூட்டம்..அதனால் படியேறி வந்த களைப்பு வேறு…
அவள் பஸ்சில் பயணம் செய்து பல வருடங்கள் ஆகி விட்டது... பள்ளிக்கு செல்லும் பொழுது தந்தை அல்லது பெரிய அண்ணன் கொண்டு விடுவார்...கல்லூரி முதலாம் ஆண்டு முடியும் வரை இளைய அண்ணன் கல்லூரிக்கு அழைத்துச் செல்வார்...அந்த சமயத்தில் மட்டும் அவ்வப்போது தோழிகளுடன் பஸ் பயணம் மேற்கொண்டது…. அதன் பிறகு இரண்டாம் ஆண்டு முதல் கல்லூரிக்கு இருசக்கர வாகனத்தில் தான் சவாரி…
திருமணம் ஆன பிறகு கணவன் ஹரிபிரசாத்தின் காரில் தான் எங்கு வேண்டுமானாலும் செல்வது….தனியாக என்றால் கால் டாக்சி... பஸ் பயணம் என்று யோசித்தால் எங்காவது நெடுந்தூரப் பயணம் குடும்பத்தாருடன் சென்று இருப்பாள்....அவ்வளவு தான்... டவுன் பஸ் பயணம் மேற்கொள்ளவது என்பது இன்று தான்....இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவேயில்லை..காலையில் வீட்டிலிருந்து புறப்படும் போது இருந்த புத்துணர்வு இப்பொழுது சுத்தமாக இல்லை…
சோர்வாக அவளது இருக்கைக்கு வந்தவள் முதல் வேலையாக தலைக்கு மேல் சுற்றிய மின்விசிறியின் வேகத்தை அதிகப்படுத்தி விட்டு கண்மூடி தலையை தூக்கியபடி இருக்கையில் சாய்ந்தாள்.
சிறிது நேரம் அப்படியே இருந்து அவளை முற்றிலும் ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
பிறகு சாதாரணமாக கண் விழிக்க எதிரினில் அவளது நண்பனும்,அலுவலக முதலாளியுமான விக்னேஷ்வரன் அமர்ந்திருந்தான்…
காலையில் தாயிடம் கூறிய அதே விக்கி தான்...கௌசியை விட ஒர் ஆண்டுகள் மூத்தவன்...கல்லூரித்தோழன்...முழுதாக ஐந்து ஆண்டுகள் இருவரும் ஒன்றாக பயின்றவர்கள்... அதுவும் ஒரே பாடப்பிரிவை எடுத்துப் படித்தனர் …இருவர் படித்த பள்ளிகளும் வெவ்வேறு…
இவர்களுடன் படித்த தோழர் தோழிகள் அனைவருமே தொழில்முறை கல்வியைக் கற்பதற்காக சென்றுவிட இவர்கள் இருவர் மட்டும்தான் கலை அறிவியல் எடுத்திருந்தனர்.. அதுவும் தொழில்நுட்பம் சார்ந்தது…
முதல் நாள் கல்லூரியில் சந்தித்ததுமே பரஸ்பரம் அறிமுகமாகி கொண்டனர்...பிறகு உடன் படித்தவர்களை பற்றி விக்கி கௌசியிடம் விசாரிக்க .
எல்லோருமே தொழில்முறைக் கல்வியை கற்பதற்காக வெவ்வெறு கல்லூரிக்கு சென்றுவிட்டார்கள்… என்று கவலையாக கூற…
ஏய் கைகுடு…சேம்…என் ஃப்ரெண்ட்ஸ்ஸூம் இப்படித்தான் என்று சொல்லவும் ஒரே போல சிரித்துக் கொண்டனர்...
இருவருக்குமே பொதுவாக ஒரே சித்தனை இருந்தது...அதனால் உடனே நண்பர்களாக ஆகிவிட்டனர்.
கலை அறிவியலில் இளநிலையும், முதுகலையையும் படித்து முடித்தவுடன் விக்னேஷ்வரன் அவனது தந்தை ஆரம்பித்து வைத்திருந்த ஐடி கம்பெனியை நிர்வகிக்கத் சென்றுவிட்டான். இவளை பெற்றோர்கள் பார்த்த அண்ணியின் சொந்தக்காரனான ஹரி பிரசாத்திற்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்...
ஆனாலும் இவர்களின் நட்பு அன்று முதல் இன்றுவரை என்றுமே கெடவில்லை…
திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் தாய் வீடு வந்தவள் அனு பிறந்தவுடன் வேலை தேடத் தொடங்கினாள்...கௌசி வேலை தேடுகிறாள் என தெரிந்ததுமே விக்கி அவனது அலுவலகத்திற்கு ஆள் தேவைப்படுகிறது என அவளை அழைத்துக் கொண்டான்.
எந்த வேலைக்கும் செல்லாத கௌசி விக்கியின் அலுவலகம் எனத் தெரியவும் தைரியமாக வேலைக்கு வர ஓத்துக்கொண்டாள்.
தெரிந்தவன் என்பதால் கௌசியின் அண்ணன்களும் பயமின்றி அவளை அனுப்பி வைக்கின்றனர்….
தன் முன்னால் விக்கி அமர்ந்திருப்பதை கண்டவள் வேகமாக சாரி சார் என எழப்போனாள்.
ஏய் கௌசி ஜஸ்ட் ரிலாக்ஸ்...எதுக்கு இவ்ளோ பதட்டம்... ஆஃபிஸ் டைம் இன்னும் ஆரம்பிக்கல... ஆஃபிஸ் டைம்ல தான் நான் உன் பாஸ்...இப்போ உன் ஃபிரண்ட் என்றவன் என்னாச்சி உன் வண்டிக்கு...நடந்து வர்றதை பார்த்தேன்...என்று கேட்கவும்.
ம்ச்ப்...வண்டிக்கு என்னாச்சின்னு தெரில... ஸ்டார்ட் ஆகல... அதான் பஸ்ல வந்தேன்…என்று சலிப்புடன் கூறினாள்... அதற்குள் அலுவலக மணி அடிக்கவும் கைக்கடிகாரத்தை பார்த்தவன்
ஒகே டைம் ஆச்சு வேலையை பாக்கலாம் ப்ரேக்ல வர்றேன்...என்று விக்கி நகர்ந்து செல்ல…. டேபிளின் முன்பு நன்றாக அமர்ந்த கௌசி கணினியை உயிர்ப்பித்தாள்.
சரியாக ப்ரேக்கிற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக கௌசியை அவளது கேபினுக்கு அழைத்தான்.
சார் என்றபடி உள்ளே நுழையவும் இடைவேளைக்கான மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
அப்பொழுது அலுவலகப் பணியாளர் காபி மட்டும் பலகாரத்தை கொண்டு வந்து கௌசியின் முன்பு வைத்தார்.
குழப்பமாக விக்கியை பார்க்கவும் நீ காலையில சாப்பிடல தானே முதல்ல எடுத்து சாப்பிடு என்று உரிமையாக எடுத்து அவளது கைகளில் தினித்தான்…
நான் சாப்பிட்டு தான் வந்தேன் சார்…அதுமில்லாம இப்போ சாப்பிடற மூட் இல்ல ப்ளீஸ் என கூறியபடி எழுந்தாள்.
கௌசி முதல்ல உட்காரு …உட்கார சொன்னேன் என்று மிரட்டும் தொனியில் சொன்னவன் முதல்ல பிரேக் டைம்ல, லஞ்ச் டைம்ல , ஆபீஸ் டைம் தாண்டியதும் இந்த சார் போடறதை நிறுத்து… ஆபீஸ் டைம்ஸ் மட்டும் தான் உனக்கு சார் மத்த டைம் எல்லாம் உன் ஃப்ரெண்ட் புரியுதா என்றவன்.
இப்போ உன் ஃப்ரெண்டா சொல்றேன் ஒழுங்கா இதை எடுத்து சாப்பிடு…இல்ல உன் பாஸா உனக்கு ஆஃப் டே லீவ் குடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவேன்…என் ஆஃபிஸ்ல யாரும் பசியோட வேலை செய்யக் கூடாது என கண்டிப்புடன் கூறினான்.
சொன்னதை செய்பவன் நண்பன் என்பது தெரிந்ததால் வேறு வழியில்லாமல் மெதுவடைகளை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
அவள் சாப்பிடும் வரை எதுவும் பேசாதவன் மெதுவாக எதுக்காக கௌசி அடிக்கடி சாப்பிடாம ஆஃபிஸ் வர்ற… அப்படி என்னதான் உன் வீட்டில் பிரச்சனை போய்கிட்டு இருக்கு என்று நிஜமான அக்கறையுடன் கேட்டான்.
உடனே கண்கலங்கியவள்…எதும் கேக்காத விக்கி அழுதுடுவேன்…
வழக்கம்போல உன் அம்மாவோட சண்டையா…ஆமா அப்படி என்ன சண்டை போட்டுப்பீங்க…எனக்கு புரியவே மாட்டேங்குது…ஒருவேளை பெண்கள் ஒருத்தருக்கு மேல வீட்ல இருந்தாலே சண்டை வந்திடுமோ என நிஜமாகவே தெரிந்து கொள்ள கேட்டான்.
சும்மா பொண்ணுகள கிண்டல் பண்ணாத விக்கி…நான் கேபின் போறேன் என்றபடி எழுந்தாள்.
ஏய் கௌசி சண்டை பத்தி கேக்கல…உக்காரு…
டைம் ஆச்சி சார்…லன்ஞ் அவர்ல பாக்கலாம்..
உஃப்ப்…இந்த பொண்ணுகளே எப்பவும் காம்ளீகேட் தான் போல…என்று வாய்க்குள் முனுமுனுத்தவன் வேலையைத் தொடர்ந்தான்.
மதிய உணவுவேளையில் ஸ்விகியில் ஆர்டர் செய்த தயிர் சாதத்தை கௌசி உணவு மேஜையில் தனிமையில் அமர்ந்தாள்…
அவளே விரும்பி மற்றவர்களுடன் அமர நினைத்தாலும் யாரும் அவளை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
முதலாளியிடம் விசுவாசமாக இருப்பவள்.. விளையாட்டாக ஏதாவது சொன்னாலும் கூட அதை அவனிடம் சொல்லி வேலைக்கு உலை வைத்து விடுவாள் என்று அவர்களாகவே புறம் பேசி அவளை ஒதுக்கி வைத்தனர்.
அவளுடன் சேர்ந்து வேலை பார்ப்பவர்கள் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து பேர்… அதில் பெண்கள் வெறும் எட்டுபேர் தான் மீதி அத்தனை பேரும் ஆண்கள் தான் ….ஆனால் புரளி பேசுவது என்றால் மட்டும் பெண்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவார்கள் ஆண்கள்……
ஒரு சிலர் அவளுக்கும் விக்னேஸ்வரனுக்கு ஏதோ சம்திங் சம்திங் என்று பேசுவார்கள்.
ஒரு சிலருக்கு விக்னேஷ்வரன் அவளது உறவினர் என்பார்கள்..
ஒரு சிலரோ இரண்டுமே கிடையாது கௌசி நம்மைப் போல் சாதாரண ஊழியர் தான் என்பார்கள் ஆனால் யாருக்குமே தெரியாது விக்கியும்,கௌசியும் கல்லூரி கால நண்பர்கள் என்று…
ப்ளாஸ்டிக் டப்பாவில் நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த சாதத்தை பிளாஸ்டிக் ஸ்பூனில் எடுத்து ஊறுகாயுடன் வாயில் வைத்தவளுக்கு முழுங்க முடியவில்லை…காலையில் தாயுடன் நடந்த சம்பாஷனை கண்முன்னே வந்தது…
எந்த பேச்சை எடுத்தாலும் நான் வீட்டில் இருப்பதிலேயே வந்து முடிகிறது…அனு மட்டும் இல்லையென்றால் எப்பொழுதோ தாய் வீட்டை விட்டு வெளியே வந்திருப்பாள்… ஏதாவது ஒரு ஹாஸ்டல் பார்த்தும் தங்கி இருப்பாள் என்ன செய்வது..
மற்றவர்களை நம்பி
பெண் குழந்தையை விடமுடியாது…தாய் இருப்பதால் அனுவைபற்றி பயமில்லாமல் வேலை பார்க்க முடிகிறது…
ஆனால் வீட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் பொழுது நெடுநாள் அந்த வீட்டில் இருக்க முடியாது என்றே தோன்றியது…அண்ணி வேறு எப்பொழுது பார்த்தாலும் கௌசியிடமே வம்பு வளர்ப்பது போல் தோன்றியது.
கௌசியை நேரடியாக சொல்ல முடியாவிட்டால் உடனே லட்சுமியிடம் பாய்ந்து விடுகிறாள்…இந்த அண்ணன் கண்டும் காணாமல் இருக்கிறானே தவிர மனைவியை தட்டி வைப்பதில்லை…
ஏதேதோ நினைத்துக் கொண்டே பாதி சாதத்தை முடித்திருந்தாள்…அவள் மனநிலைக்கு சுற்றி இருக்கும் சக ஊழியர்களின் பேச்சு சத்தம் எரிச்சலை கொடுத்தது…
அவர்களது அலுவலகத்தில் சாப்பிடும் அறை மிகச்சிறியது தான் அதனால் இரு குழுக்களாக பிரிந்து உணவு இடைவெளைக்கு வருவார்கள்…மொத்தமே மூன்று டேபிள்கள் தான்.. டேபிளுக்கு நான்கு பேர்வரை அமர்ந்து சாப்பிடுவது போல இருக்கும்…ஆனால் இவளுக்கு மட்டும் ஒரு டேபிளை கொடுத்துவிட்டு பாக்கி இரண்டு டேபிள்களிலும் ஆறு பேராக அமர்ந்திருந்தார்கள்
இவள் கடைசி டேபிளில் மற்றவர்களுக்கு முதுகை காண்பித்து உட்கார்ந்திருக்க திடீரென முதுகு பின்புறம் கேட்டுக் கொண்டிருந்த சத்தங்கள் தேய ஆரம்பித்தது…
என்ன என்று இவள் திரும்பிப் பார்க்க சக ஊழியர்கள் டிஃபன் பாக்ஸை பார்த்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
என்னவாயிற்று இவர்களுக்கு என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டவள் திரும்பி பார்த்து அமர இப்பொழுது அவளை போலவே மற்றோரு தயிர்சாத டப்பாவுடன் எதிரில் விக்னேஸ்வரன் அமர்ந்திருந்தான்.
மிக மெல்லிய குரலில் உன் வேலைதானா எல்லாரோட வால்யூமையும் குறைச்சது…
ம்ம்…உள்ள வரவும் அப்படியே சைலண்ட் ஆயிட்டாங்க…நான் என்ன செய்யறது…
பின்ன எப்போ பார்த்தாலும் எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா யார் உன்னை பார்த்து சிரிப்பாங்க அதான் எல்லாரும் வாய மூடிக்கிட்டாங்க…என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் சொன்னாள்.
சரி நான் தான் எரிஞ்சு விழறேன் நீ தான் எல்லார்கிட்டயும் நல்லா பேசுற ஆளாச்சே… உன்னை ஏன் தனியா உக்கார வச்சிருக்காங்க…
ம்ம்…வேண்டுதல்…சரி இதென்ன புதுசா கடைல வாங்கி சாப்பிடற…வீட்ல இருந்து தானே வரும்…என்னாச்சு…என்றவளிடம் அவளைப் போலவே வேண்டுதல் என்றான்.
ம்ச்ப்…உங்கிட்ட பேச முடியாது என்றபடி வேகமாக எழுந்தாள்.
ஏய் விளையாட்டுக்கு தான் சொன்னேன் உக்காரு என அவளின் கையை எட்டிப்பிடிக்க பின்னால் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இவர்களை பார்த்து ஆஆ என வாய் திறந்தார்கள்.
நொடியில் அவர்களின் பார்வையை உணர்ந்தவள்…அவமானமும் கோபமும் ஒன்று சேர பற்களை கடித்தபடி கையை விடு விக்கி …என அவள் இழுக்கும் முன்னே கையை விட்டிருந்தவன்…
சாரி….சாரி…யூ கேரி ஆன்…என்று அவளிடமும் ஒரு முறையும்… வேலை செய்பவர்களின் ஒரு முறையும் சொல்லியபடி எழுந்து வேகமாக சென்றுவிட்டான்.

Last edited: