கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 32

Akila vaikundam

Moderator
Staff member
32.

வளைகாப்பு பற்றிய பேச்சு வந்த பிறகு தான் கேசவனுக்கு சிறு சந்தேகம் வந்தது ஜானகி ஒரே பெண் அதுவும் வசதியான வீட்டுப் பெண் அவளை பெரியம்மாவின் குடும்பமும் அவளின் குடும்பமும் தலையில் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் பொழுது வளைகாப்பு பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்று.


அவனுக்கு தெரியாத விஷயம் தாய் வீட்டில் ஐந்தாம் மாதமே அவளிடம் பேசி விட்டார்கள்.


ஜானகி தான் பிடிவாதமாக மறுத்துவிட்டாள் அவரின் அண்ணன் திருமணம் முடிய வேண்டுமென்றால் புகுந்த வீட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

கௌசியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித்து அதை அண்ணனுக்கு தெரிவிக்க வேண்டும் அது மட்டும் இன்றி கணவனிடமும் மாமியாரிடமும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அண்ணனைப் பற்றியும் அவனின் குடும்பத்தை பற்றியும் பெருமையாக கூற வேண்டும் அதற்கு எல்லாம் அவள் இங்கிருக்க வேண்டும் அதனால் தான் ஐந்தாம் மாதம் என்பதை ஏழாம் மாதம் என்று தள்ளிப் போட்டாள்.

ஏழாம் மாதம் என்பதை இப்போது ஒன்பதாம் மாதம் என்று தள்ளிப் போட்டிருக்கிறாள்.இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவாகவே பிரசவ நாட்கள் உள்ளது அதற்குள் அண்ணனின் திருமணத்தை உறுதி செய்ய வேண்டும்.

அவள் மனதில் உள்ளதை வெளிப்படையாக யாரிடமும் கூற முடியவில்லை அவளின் உடல் உபாதைகளை கூட தாங்கிக் கொண்டு தாயின் அரவணைப்புக்கு ஏங்கிக்கொண்டு நாட்களை கடக்கிறாள்.


தன்மீது உயிரை வைத்திருக்கும் அண்ணனுக்கு அவன் ஆசைப்பட்ட பெண்ணை மணமுடிக்க வேண்டும் அது மட்டுமே அவளுடைய ஒரே குறிக்கோள்.

ஓரளவுக்கு அதில் வெற்றியும் கண்டிருக்கிறாள் மாமியார் மனதிலும் கணவனின் மனதிலும் அண்ணனைப் பற்றிய பிம்பத்தை மிகவும் அழகாகவும் உயர்வாகவும் எண்ண வைத்திருக்கிறாள்.


என்ன இன்னும் அவர்களாக வாய் திறந்து உனது அண்ணனுக்கு எங்கள் வீட்டு பெண்ணை திருமணம் செய்து வைக்கலாமா என கேட்க வில்லை.
இவர்களாக போய் கௌசியை பெண் கேட்கவும் சய கௌரவம் இடம் கொடுக்கவில்லை அதனால் அவர்களாக வரட்டும் என ஜானு மற்றும் ஹரியின் குடும்பம் காத்துக் கொண்டிருக்கிறது.


லட்சுமியின் மனதில் நிரம்பவே ஆசை தான் ஹரிமாதிரியான பையன் மகளுக்கு மாப்பிள்ளையாக வரவேண்டும் என.ஆனால் அவர்களின் வசதி முன்பு எப்படி நம்மால் நெருங்க முடியும் என தயக்கம் காட்டினார்.

இதில் எல்லாரும் ஒன்றை மறந்துவிட்டனர் அது கௌசியின் சம்மதம்.

அவளுக்கு திருமணத்தில் விருப்பமா..?அதுவும் ஹரிபிரசாத்தை திருமணம் செய்வதில் விருப்பமா.? என்பதை யாருமே கேட்டுக் கொள்ளவில்லை.

இப்படியாக ஜனாவின் திருமண நாள் வந்தது.அண்ணணாக எல்லாவற்றையும் முன் நின்று செய்தது ஹரி மட்டுமே.

ஜானவிற்கு நிறை மாதம் என்பதால் ஓர் இடத்தில் சோர்வாக அமர்ந்து கொண்டாள் எதிலும் கலந்து கொள்ளவில்லை ஆனால் அதற்கு பதிலாக கௌசல்யாவை வேலை செய்ய வைத்தாள்.


எப்படி கௌசல்யா கேசவனின் திருமணத்தில் துருதுருவென ஓடிக்‌ கொண்டிருந்தாளோ அதே போல் தான் இதிலும் இருந்தாள்.


தாலி கட்டும் சமயத்தில் வேகமாக வந்த ஹரி கௌசியிடம்
வா வந்து மணவறைல நில்லு என் கூப்பிடவும்.


அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை நான் எதுக்கு அங்க வரனும் என தைரியமாக கேட்டு விட்டாள்.


நான் உனக்கு யாரு..

அண்ணியோட கசின்..

முகம் சுருங்க அவ்ளோ தானா என அதிர்ச்சியுடன் கேட்டான்.

ஹான்..என்றபடி மொபைலில் சிரித்தபடியே சாட் செய்து கொண்டிருந்தாள்.

இதென்ன பழக்கம் பேசிகிட்டு இருக்கும் போது மொபைலை கவனிக்கறது என்ற படி அவளின் மொபைலை கையிலிந்து பறித்தான்.

ம்ப்ச் என் ஃபோனை குடுங்க.என அவனது கையிலிருந்து பிடிங்க போக அவனோ கையை உயரத் தூக்கினான்.

அவனது ஆறடி உயத்திற்கு அவளால் எட்டி பிடிக்க முடியவில்லை.

சலித்துக்கொண்டவள் ஃபோனை குடுங்க என கெஞ்சுவது போல கையை நீட்டினாள்..

கையை கீழே இறக்கு தனது பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டவன் போன் வேணும்னா நான் சொல்றபடி கேளு கொடுக்கிறேன் என்றபடி மணவறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

வேகமாக அவனின் முன்பு சென்றவள் என்ன விளையாடறீங்களா காலைல என்னனா அண்ணி லெகங்கா போடாத புடவை கட்டு அண்ணா குடுத்து விட்டிருக்காங்கனு புடவை கட்ட வைக்கறாங்க..உங்க அம்மா என்னன்னா எங்க வீட்டு பொண்ணு வெறுங்கழுத்தா இருக்க கூடாதுன்னு கழுத்து புல்லா நகையை பூட்டி விடறாங்க..நீங்க என்னன்னா உங்க பேச்சை கேட்கனும்ங்கறீங்க எல்லாரும் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.

என்னனு புரியலை.

…..

சீக்கிரமா புரியும் என்ற படி சென்றான்.


யூ..யூ எனக் கத்தியபடி அவன் பின்னாடி சென்றாள்.

அதன் பிறகு திருமணம் முடியும் வரை அவளை எங்கும் நகர விடவில்லை.
கௌசிக்கு பிடிக்காவிட்டாலும் முறைத்துக்கொண்டே அவன் சொன்னவற்றை செய்து முடித்தாள்.

மணமக்களை வாழ்த்திய கண்கள் இவர்களின் ஜோடி பொருத்தத்தையும் பார்த்து வியந்தனர்.

மெதுவாக ஹரியின் பெற்றோரிடமும் விசாரிக்க தவறவில்லை.

எல்லாம் முடிந்து மணமக்கள் கிளம்பும் வரை அவளை அவன் நகரவிடவில்லை.
கௌசிக்கு கோபத்தில் முகம் சிவந்து கண்கள் கலங்கி ஹரியை முறைந்தபடி அமைதி காத்தாள்.

இந்தா பிடி என மொபைல் கொடுக்கவும் அதை வாங்காமல் அவனை பார்த்தவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

ஏய் உன் ஃபோன் வேணாமா..

ப்ளீஸ் பேசாம போயிடுங்க இல்ல ஏதாவது அசிங்கமா திட்டிடப்போறேன்..அண்ணியோட அண்ணன்னு மரியாதை குடுத்துட்டு இருக்கேன் என்று வார்த்தைகளை நிதானமாக உச்சரித்தாள்.

ஆச்சரியமாக நோக்கியவன்..நீ இவ்ளோ பேசுவியா அமைதின்னு நினைச்சிட்டு இருக்கேன்..ஆனா என்கிட்ட அடுத்த முறை இப்படி பேசி வைக்காத அப்புறம் நீ கஷ்டப்படுவ..

அதே தான் சொல்லறேன் அடுத்த முறை என்கிட்ட இப்படி நடந்துகிட்டா மரியாதை கெட்டு போயிடும்.. அப்புறம் என் அம்மாகிட்ட சொல்லிடுவேன் பிரச்சினை உங்களுக்கு வராது உங்க தங்கச்சிக்கு வரும் மறந்திடாதீங்க என்றவள் அவனின் கையிலிருந்த மொபைலை பிடுங்கியபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

மறுநாளே காலையிலேயே ஜானு அண்ணனுக்கு அழைத்திருந்தாள்.


அண்ணா நேத்து கௌசியோட என்ன பிரச்சினை.

ஏன் என்ன பண்ணி வச்சிருக்கா..

புடவை நகையெல்லாம் கொண்டு வந்து குடுத்துட்டா அதுமட்டுமில்லாம இனி இதுபோல குடுத்தா உங்க மனசு கஷ்டபட்டாலும் பரவால்லன்னு தொட்டு கூட பாக்க மாட்டேன்னு சொல்லிட்டு போறா.

அத்தை கிட்ட உன்னை பத்தி மரியாதை இல்லாம ஏதோ சொல்லிட்டு இருந்தா..அவ அண்ணன் கிட்ட உன் மச்சானை கொஞ்சம் நல்ல டாக்டர்கிட்ட காட்ட சொல்லு கல்யாணம் ஆகலன்னு புத்தி பேதலித்து போச்சி போலனு நக்கல் அடிச்சிட்டு போறா.

தைரியம் தான்.. எனக்கே பைத்தியகார பட்டம் கட்டறாளா என சிரித்தவன் இந்த வாரம் உன் பங்ஷன் முடிஞ்சதும் அம்மாவை விட்டு பொண்ணு கேட்க சொல்லறேன்.

அதெல்லாம் ஒன்னும் வேணாம் டெலிவரி முடியற வரை வெயிட் பண்ணு அவங்களா கேட்டு வருவாங்க.

பரவால்ல ஜானு யார் கேட்டா என்ன கல்யாணம் நடந்தா போதும் இனியும் அவளை பிரிஞ்சி இருக்க முடியும்னு தோணலை

புரியுது அண்ணா ஆனாலும் வெயிட் பண்ணு.கௌசி மனநிலையை பார்த்தா நீங்க கேட்டு வந்தா மூஞ்சில அடிச்ச மாதிரி வேணாம்னு சொல்லிடுவா அப்புறம் எல்லாருக்கும் சங்கடம் இதே நாங்களா வந்தா அவ அதிகம் பேச மாட்டா புரிஞ்சிக்க.


சரி உனக்காக வெயிட் பண்ணறேன் அதுக்கப்புறமும் அவங்க பேச்சை எடுக்கலன்னா நானே வந்து கேட்பேன் பொண்ணு தரலன்னா யோசிக்காம தூக்கிடுவேன் பாத்துக்கோ..என்று மிரட்டும் தோணியில் பேசிவிட்டு வைத்தான்.


அந்த வாரத்திலேயே மிகப்பிரமாண்டமாக ஜானுவிற்கு வளைகாப்பு நடந்தது.. இம்முறையும் கௌசிக்கு புடவை நகைகள் என அவளின் தாயார் மூலம் போட வைத்து அழகு பார்த்தான்.

விருப்பம் இல்லாவிட்டாலும் அதையெல்லாம் அணிந்தபடி வலம் வந்தாள்.ஹரி வழக்கம் போல அவளிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்

இம்முறை ஹரி கௌசியிடம் காட்டும் நெருக்கம் பார்த்து லட்சிமியிடம் இது கௌசிக்கு பாத்திருக்கற மாப்பிள்ளையா.

அய்யய்யோ இல்லங்க இது மருமகளோட அண்ணன்

அப்போ கட்டிக்கற முறைதான்
பேசி முடிச்சிடு ஜோடி பொருத்தம் அள்ளுது.. பையனுக்கு விருப்பம் போல அவன் முகத்திலேயே தெரியுது.


அதெல்லாம் பெரிய இடம்ங்க பொண்ணு குடுத்ததே பெருசு இதுல எப்படி நம்ம பொண்ணை எடுப்பாங்க.


நீயா கற்பனை பண்ணாத.. என்ன பெரிய இடம் பொல்லாத இடம் அவங்களும் மனுஷங்க தான்..தயங்காம ஒரு முறை கேட்டு பாரு இஷ்டம்னா கட்டிகிட்டும் இல்லனா விடட்டும் அதால நஷ்டம் எதுவும் இல்லையே..ஒருவேளை விருப்பம் இருந்து நாம கேட்காம தவற விட்டுட்டோம்னா நம்ம பொண்ணுக்கு கிடைக்கற நல்ல வாழ்க்கையை நாமளே கெடுக்கறது போல ஆகாதா.

தயங்காம கேட்டுப்பாரு லட்சுமி என்றபடி அவர் சென்று விட அப்பொழுது தான் இருவரையும் லட்சுமி நன்கு பார்த்தார்.

ஜோடிப்பொருத்தம் அவ்வளவு அழகாக இருந்தது அதுமட்டுமின்றி மகள் அன்று அணிந்த நகைகள் எதையும் இன்று அணியவில்லை எல்லாமே புதிது.. இப்படி ஒவ்வொரு தடவையும் புதிதாக அணிந்து அழகாக வலம் வர ஆசை வந்தது.


எப்படி ஆரம்பிப்பது யா

ர் மூலம் இதை ஹரியின் குடும்பத்தின் காதுகளுக்கு கொண்டு செல்வது என யோசிக்க ஆரம்பித்தார்.
 
Last edited:
Top