கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 36

Akila vaikundam

Moderator
Staff member
36.

மாப்பிள்ளை உபசரிப்பை கூட லட்சுமியால் சரிவர செய்யவில்லை மகளின் நிலையைப் பார்த்து.

அவளுக்குப் பிடித்தெல்லாம் செய்து கொடுத்தார் எதையும் தொடவில்லை.என்னவென்று விசாரித்தாலும் கண்ணீரை மட்டுமே பதிலாக கொடுத்தாள்.

மாலை ஆக ஆக லட்சுமிக்கு பயம் பிடிக்க தொடங்கியது மகனும் கணவனும் வேலை முடித்து வரும்பொழுது மகள் இந்த நிலையில் இருந்தால் என்னவாகும் எனக்கலங்க ஆரம்பித்தார்.

இடையில் மூன்று தடவை ஹரி அழைத்து அவள் எப்படி இருக்கிறாள் என கேட்க அது ஒன்னும் இல்ல மாப்பிள்ளை கௌசி என் கைகுள்ளேயே வளர்ந்த பொண்ணா.. அதான் என்னை பிரிஞ்சதுல கொஞ்சம் ஏங்கி போயிட்டா ..இப்போ சரியாயிட்டா நீங்க நாளைக்கு மாதிரி வந்து கூப்பிட்டுக்கோங்க என்று மருமகனுக்கு பதில் கூறிவிட்டாள் ஆனால் மகளை கிளப்பும் வழி தான் அவருக்கு தெரியவில்லை.


கடைசியாக இனி இவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என தெரிந்து கொண்ட லட்சுமி அதட்டி வழிக்கு கொண்டு வர முயற்சித்தார்.


கௌசி போதும் முதல்ல எந்திருச்சு குளிச்சிட்டு வேற புடவையை கட்டிட்டு வந்து உட்காரு இந்த பூவை எடுத்து தலையில் வச்சிக்கோ என்று ஒவ்வொன்றாக கட்டளையிட்டார்.



சோர்வாக தாயை பார்க்கவும் இப்படி எல்லாம் பார்த்து வைக்காத எனக்கு கோபம் தான் வருது. உனக்கு அங்க என்ன பிரச்சனை கௌசி எதா இருந்தாலும் சொல்லு மாப்பிள்ளை உங்ககிட்ட ரொம்ப முரட்டு தனமா நடந்து கொண்டாரா.

நீ விரும்பாத எதையாவது கட்டாயப்படுத்தினாரா சொல்லு அந்த மாதிரி இருந்தா நானே உன்னை அனுப்ப மாட்டேன் எதுக்காக இப்படி அழுது கரையற.

பொண்ண கட்டி கொடுத்து ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள நீ இப்படி வந்து அழுது கரைஞ்சா பாக்கறவங்க என்ன நினைப்பாங்க ..இல்ல பெத்தவங்க எங்களுக்கு தான் நிம்மதி இருக்குமா.?



இன்னும் கேசவன் வரல.. வந்து உன் நிலைமையை பார்த்தா வேற வினையே வேண்டாம் ஏற்கனவே அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்னோட கட்டாயத்துல தான் கல்யாணத்தை நடந்துச்சி.இப்போ நீ இப்படி உட்கார்ந்து இருந்த என்னை உயிரோடு வீட்டுக்குள்ள குழி தோண்டி புதைச்சிடுவான்.என அவளை கிளப்பியவர் அவளிடம் மெதுவாக விசாரிக்க


கணவனை விட்டுக்கொடுக்கவோ தவறாக சித்தரிக்கவோ முயற்சிக்க வில்லை.


அவர் என்ன நல்லதாம்மா பாத்துகிட்டாரு எனக்கு தான் ஏதோ பிடிக்கல ஒரு வேலை நான் படிச்சு முடிச்சிட்டு கொஞ்ச நாள் வேலைக்கு போய் இருந்தேன்னா கல்யாணம் சந்தோஷத்தை குடுத்திருக்கும்னு நினைக்கறேன்.


அப்போ உனக்கு மாப்பிள்ளையை பிடிக்காம இல்லை அவர் உன்னிடம் பேசினாலோ பக்கத்துல வந்தாலோ வெறுப்பாவும் இல்லை இல்லையா என்று வெளிப்படையாகவே கேட்டார்.



யோசித்துப் பார்த்த கௌசிக்கு ஆமாம் அப்படி எதுவும் இல்லையே நேத்து கூட அவனுடைய செயலுக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்தாளே பிறகு எப்படி தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்ல முடியும்.


இல்லை என்பது போல தலையசைக்கவும் லட்சுமிக்கு அப்பாடா என்றிருந்தது மகளுக்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைத்து விட்டோமோ என்று சிறு கலக்கத்தில் இருந்தவருக்கு இந்த பதில் நிம்மதியை கொடுக்க அடுத்து அவளுக்கு புத்தி சொல்ல ஆரம்பித்தார்.


இங்க பாரு கௌசி உன்னை யாருமே வேலைக்கு போக வேணாம்னு சொல்லல.மாப்பிள்ளை கிட்ட சொன்னா அவரே நல்ல கம்பெனியில வேலைக்கு சேர்த்துவிடுவார் அப்படி இல்லன்னா மாப்பிள்ளை கம்பெனியை கூட நீ பாத்துக்கலாம் .


அதையும் இதையும் போட்டு குழப்பிகிட்டு உன் கல்யாண வாழ்க்கையை நீயே கேள்விக்குறியாகி ஆக்கிக்காத .



ஒரு விஷயத்தை மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோ எப்போ ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏறிடுச்சோ அதுக்கப்புறம் அவளோட நெனப்பு சுவாசம் எல்லாமே புருஷனை பத்தினதா மட்டும் தான் இருக்கணும்.

நீ என் பொண்ணா இருந்துகிட்டு இப்படி நடந்துக்கலாமா .?நல்லதோ கெட்டதோ அவரோட தான் இனி பகிர்ந்துக்கனும் . அதான் உன் வீடு..அங்க தான் இருக்கனும்..இங்க வரனும்னு நினைச்சா அவரோட வந்துட்டு அவரையே கூட்டிட்டு போக சொல்லு..


எந்த காலத்திலும் இப்படி அம்மா வீட்டுக்கு வரனும்னு நினைக்காத அங்கிருந்தே உனக்கானதை. கேட்டு வாங்கி பழகு அவ்வளவு தான் அம்மா சொல்லுவேன் உனக்கு நான் நல்லது தான் செஞ்சிருக்கேன் புத்திசாலித்தனமா புருஷனோட பிழைக்கிற வழியை பாரு இப்படி கல்யாணம் முடிச்சு பிறகும் என்னை கஷ்டப்படுத்தி பாக்கணும்னு ஆசைப்படாத என்று அடுத்து வந்த இரண்டு நாட்களிலும் விதவிதமாக புத்திமதி சொல்ல ஆரம்பித்தார்.


கௌசிக்கு ஒன்று மட்டும் புரிந்தது..இனி இது தன்னுடைய வீடு அல்ல.. தான் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் ஹரியின் வீடு தான் இனி அவளின் வீடு அதைத்தான் தாய் இரண்டு நாட்களாக பதிய வைத்திருக்கிறார்.

பெண்ணை பெற்றார்கள் வளர்த்தார்கள் திருமணம் செய்து வைத்து கடமையை முடிந்தார்கள்..இனி இது விருந்தினர் வீடு தன் வீடு அல்ல என்பதை புரியவைத்து விட்டார்கள்.. அடுத்து என்ன என்று யோசித்தவளுக்கு தாயாக எப்போ போறன்னு கேக்குறதுக்கு முன்னாடி நாமளா கிளம்பிடுவோம் என்று முடிவு செய்து ஹரிக்கு அழைத்தாள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவளை அழைத்துச் செல்ல அவனும் வந்து விட்டான்.


தாயிடம் தலையசைத்து வருகிறேன் என சொல்லிக் கொண்டுவள் அண்ணா கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லிடுங்கம்மா என்றாள்.


ஹரி கூட பரவால்ல வெயிட் பண்ணி அவங்க வந்ததும் சொல்லிட்டே போகலாம் என்று தான் சொன்னான்.


ஆனால் கௌசி பிடிவாதமாக இல்லல்ல அதெல்லாம் அம்மா சொல்லிப்பாங்க நாம போகலாம் என்று லட்சுமி பார்த்து அழுத்தமாக சொல்லும்பொழுது அவள் எடுத்துக் கொண்ட உறுதிமொழி.


இனி எக்காரணம் கொண்டும் இந்த வீட்டிற்கு நான் உங்களுடைய மகளாக வரவே மாட்டேன் ஹரியின் மனைவியாக அவனுடனே வந்துவிட்டு அவனுடனே திருப்பிச் சென்று விடுவேன் என்னால் உங்களுக்கு எந்த சங்கடமும் வராது என்பதை அந்த ஒற்றைப் பார்வையில் லட்சுமிக்கு புரிய வைத்தாள்.


லட்சுமிக்கு மகளின் முடிவு சந்தோஷமே ஆசீர்வதிப்பது போல் கையை உயர்த்தி நல்லபடியா போய்ட்டு வாங்க என்பதை உணர்த்தினார்.



ஹரிக்கும் மனைவியின் திடீர் மாற்றம் மிகவும் சந்தோஷமே எதற்காக அவள் சோர்வுற்று காணப்பட்டாள் என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் தெளிவாக வருவதை பார்த்தவனுக்கு நிம்மதியே.


இவள் என்னுடைய மனைவி இதற்குப் பிறகு இது போல் தாய் வீட்டை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவளை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் நன்றாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு அவனின் வீடு அழைத்துச் சென்றான். ஆனால் இருவரின் உறுதிமொழியும் சில நாட்களில் காணாமல் போகப் போகிறது என்பது இ

ருவருக்குமே அப்பொழுது தெரியவில்லை.
 
Last edited:
Top