கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 37

Akila vaikundam

Moderator
Staff member
37.

வீட்டிற்கு அழைத்து வந்தவன் அவளிடம் எதையும் கேட்கவும் இல்லை நெருங்கவும் இல்லை.

அவனுக்குள்ளாகவே குழம்பி தவிக்க ஆரம்பித்தான் காதலை புரியவைக்க முயற்சித்து அவளை காயப்படுத்தி விட்டோமோ என மனதிற்குள் நிம்மதி இல்லாமல் தவிக்க ஆரம்பித்தான்.


நேருக்கு நேராக நின்று பேசவே தயங்கினான்.அதையே தான் கௌசியும் செய்தாள்.

அண்ணனுக்கும் அண்ணிக்கும் நடுவில் ஏதோ ஒன்று சரியில்லை என்று சரியாக கனித்த ஜானு உடனடியாக அவர்கள் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்தாள்.


முதலில் தயங்கிய ஹரியிடம் அண்ணா நீ அண்ணியை புரிஞ்சுகிட்ட அளவிற்கு அவங்க உன்னை புரிஞ்சுக்கல அதனால்தான் உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ ஒன்னு மிஸ் ஆகற மாதிரி எங்க எல்லாருக்கும் தெரியுது .


எங்களுக்கு தெரியுது விஷயம் மத்தவங்களுக்கு தெரியறதுக்கு முன்னாடி நாம இதை சரி செய்யணும்.


அதுக்கு என்ன பண்ணனும் அண்ணி உன்னை புரிஞ்சுக்கணும் இத்தனை பேருக்கு நடுவுல எப்படி அது நடக்கும் அதனால தான் இந்த ஏற்பாடு..

சமத்தா அண்ணியை கூட்டிட்டு போயிட்டு வருவியாம்..
குளுகுளு குலுமணாலிக்கு டிக்கெட் போட்டிருக்கு.. போ…ஊரை நல்லா சுத்திபாருங்க. ஹோட்டல்ல கூட ஹனிமூன் சூட் தான் போட்டிருக்கேன் என்ஜாய் பண்ணிட்டு வா.

நீ இருக்கியே ஜானு.. எதையுமே என்னை கேட்டு செய்ய மாட்டியா ஆபீஸ்ல வேலை தலைக்கு மேல இருக்கு அடுத்த வாரத்தில் சித்தி சித்தப்பா யுஎஸ் போறாங்க இப்போ போய் இந்த வேலை பண்ணி வச்சிருக்க எல்லாத்தையும் கேன்சல் பண்ணு மெதுவா பாத்துக்கலாம்.


ம்கூம் முடியவே முடியாது.
ஆபீஸ் வேலைய பெரியப்பா பாத்துக்குவாங்க அம்மா ஊருக்கு போறதை நான் பாத்துப்பேன் நீ முதல்ல கிளம்பு பிரதர்..

ம்ம்..என மனமே இல்லாமல் தான் கௌசியை மணாலி அழைத்துச்சென்றது.

அங்கு போன பிறகு தான் புரிந்தது ஜானு அவனது வாழ்க்கைக்காக எவ்வளவு யோசித்திருக்கிறாள் என்று.


எங்கு திரும்பினாலும் வெள்ளை வெளேர் என பனியால் பொருத்தப்பட்ட மலைகள் கௌசியை வெகுவாக கவர்ந்தது.மிகவும் ஆர்வமுடன் எல்லா இடங்களையும் கண்டு ரசித்தாள்.அவள் ரசித்தவற்றை ஹரிக்கும் காண்பித்து சந்தோஷம் கொண்டாள்.. அவனுடன் இருக்கும் ஒவ்வொரு வினாடியும் அவனை ஒட்டிக் கொண்டே திரிந்தாள்.
இதனால் ஹரியின் மனதில் இருந்து சங்கடங்கள் அனைத்தும் துடைத்து வீசப்பட்டது.


ஒவ்வொரு இரவிலும் குளிரின் தாக்கத்தில் தானாகவே கௌசி ஹரியின் அண்மையை நாடினாள்.. அவளின் நெருக்கம் ஹரியிடம் இருந்த தயக்கத்தை உடைத்து அவளுடன் ஒன்று சேர உதவியது.

இயல்பாகப் பேசினாள்,விளையாடினாள், அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை அவளுக்கும் பிடித்ததாக மாற்றினாள்..இப்படியாக ஒருவருக்குள் மற்றொருவர் அவர்களை அறியாமல் உள் நுழைந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தனர்.

பதினைந்து நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை இன்னும் இரண்டு நாட்களில் ஊர் செல்ல வேண்டும் இருவருக்குமே அங்கிருந்து கிளம்ப மனதே இல்லை ஆனாலும் வந்துதானே ஆக வேண்டும்.

கௌசி கிளம்பிட்டியா ஷாப்பிங் போகனும்னு சொன்னியே இப்போ போனா தான் சரியாயிருக்கும்..கிளம்பு என்றபடி உள்ளே வர கௌசியோ அறைக்குள் சுற்றி சுற்றி செல்ஃபி எடுத்த வண்ணம் இருந்தாள்.


ஏய் செல்ஃபி எடுக்க உனக்கு வேற இடமே கிடைக்கலையா ரூம் தான் கிடைச்சுதா என செல்லமாக கொஞ்சியபடி அவளின் பின்புறமாக வந்து கழுத்தில் சாய்ந்த படி எடுந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் நொடியில் மாறியது.


கௌசி என்ன செய்ற என்று படி அவள் கையில் இருந்த மொபைலை பறித்தான்.


போனை இப்படி கையில் இருந்து பிடுங்காதீங்கன்னு எத்தனை முறை சொல்லறது எதுக்காக இப்படி பண்றீங்க முதல்ல ஃபோனை குடுங்க என்று அவன் கையில் இருந்து பிடுங்க போக கோபமாக அவளை முறைத்தவன்.


யாருக்கு ஃபோட்டோஸ் அனுப்பிட்டு இருந்த எனக்கேட்டான்.

…..


கேட்கிறேன் இல்ல சொல்லு கௌசி ..


விக்கிக்கு.


அறிவில்ல உனக்கு.

…..

நாம ஹனிமூன் வந்திருக்கோம் உனக்கு செல்ஃபி எடுத்து போடணும்னு தோணினா பகல் ஃபுல்லா ஊர் சுத்தினோமே அதை போட்டோ எடுத்து போட வேண்டியது தானே.
அந்த பெட்டை பாரு கலைந்து கிடக்கு.. மூலைல நைட் கழட்டி போட்ட டிரஸ் கிடக்குது..உன் தலை ஈரம் காயலை.. இப்படி அப்பட்டமா நீ ஹனிமூன் கொண்டாடறதை இனியொருத்தன் பாக்கனுமா..

இங்க பாருங்க என் விக்கி தப்பாலாம் யோசிக்க மாட்டான்.
என்ன ரெண்டு வாரமா உன்னை காண்டாக்ட் பண்ண முடியலையேன்னு மேசேஜ் போட்டிருந்தான்.. நான் மணாலி வந்திருக்கேன் அதான் பிஸின்னு சொன்னேன்..கதை விடாத நீயாவது மணாலி போறதாவதுன்னு கலாய்ச்சான்.


நிஜமாவே நான் மணாலிக்கு தான் ஹனிமூன் வந்திருக்கேன்னு சொன்னதுக்கு நம்ப மாட்டேன்னு சொன்னான்.


அதான் நான் தங்கி இருக்கிற ஹனிமூன் சூட் பாரு.
ஹோட்டல் பாரு..
இப்போ நம்பறியான்னு போட்டோ எடுத்து அனுப்பினேன்.



நான் அனுப்பின ரெண்டாவது போட்டோவை பாத்ததுமே ஓகே ஓகே நம்பறேன் .. என்ஜாய் யூவர் லைஃப்..நீ இனிமே போட்டோ அனுப்பாதன்னு ஆஃப்லைன் போயிட்டான் அது தெரியாம நீங்க திட்டறீங்க.


அவனுக்கு கொஞ்சமா மூளை இருக்கு அதான் ஆஃப்லைன் போயிட்டான்.
அவன் வேணாம்னு சொன்ன பிறகும் போட்டோ அனுப்பிட்டு இருக்கு பாரு உன்ன சொல்லணும்.



இன்னைக்கு சொல்றது தான் கௌசி .. எப்பவுமே நம்மளோட பர்சனல் ஸ்பேஸை அவனுக்கு தராத.. நான் உன்னோட இருக்கிற நேரம் எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தம் இனியொரு முறை நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல ஃபோனோ இல்ல உன் ஃப்ரண்ட்டோ வந்ததுன்னா ரெண்டுமே இருக்காது ஞாபகம் வச்சிக்க..

பத்து நிமிஷம் தான் டைம் நான் கீழ போயிட்டு மேல வர்றதுக்குள்ள நீ ரெடியா இருக்கணும் .


மறுபடியும் ஏதாவது கிறுக்குத்தனமா பண்ணி வச்ச தொலைச்சிடுவேன் என்று கூறியபடி செல்ல கண்களில் நீருடன் அவன் சென்றதும்

மொபைல் போனை எடுத்தவள் விக்கி ஐ ஆம் ரியலி மிஸ் யூ டா என மேசேஜ் அனுப்பினாள்.
 
Last edited:
Top