கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 38

Akila vaikundam

Moderator
Staff member
38

பாதி தூரம் சென்றவன் ‌மொபைல் பர்ஸ் எதுவும் எடுக்காததை உணர்ந்து மீண்டும் அறைக்கு வர.

கௌசி மீண்டும் மேசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்ததை கவனித்து விட்டான்.

கோபத்தில் கண்கள் சிவக்க அருகில் வந்தவன் நொடியும் தாமதிக்காமல் மொபைலை பிடுங்கி என்ன அனுப்பியிருக்கிறாள் என பார்த்தான்.


மிஸ் யூ ஒரு முறையாவது என்கிட்ட சொல்லிருக்கியா..என முறைத்தவன் அவள் அனுப்பி வைத்த போட்டோ மற்றும் மேசேஜ்களை அழித்தான்.

என்ன பண்ணறீங்க..

என்ன பண்ணுவாங்க நீ பண்ணற முட்டாள்தனத்தை அழிக்கறேன்.

நீங்க இப்படி செய்யறது எனக்கு சுத்தமா பிடிக்கல..எனக்கு மொபைல் வேணாம் நீங்களே வச்சிக்கோங்க.

கௌசி பொருமையை சோதிக்காத நான் உன் கூட ஹனிமூன் வந்திருக்கேன் நீ எவனோ ஒருத்தனை மிஸ் பண்ணறேன்னு மேசேஜ் அனுப்பற.அப்போ அவன் என்னை பத்தி என்ன நினைப்பான் உன்னை பத்தி என்னை நினைப்பான் கொஞ்சமாவது யோசிச்சி பாத்தியா..
இங்க பாரு கௌசி நட்பு வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் தான்..ஆனா உன் குடும்பத்தை விட முக்கியம் கிடையாது.
இந்தா மொபைலை புடி இனி ஒருமுறை உன் கைல இருந்து இதை பிடுங்கற அளவுக்கு நடந்துக்க மாட்டேனு நம்பறேன்.. கிளம்பி வா என்றபடி அவனுடைய பர்ஸ் மற்றும் மொபைலை எடுத்துக்கொண்டு சென்றான்.

ஹனிமூன் முடித்து ஊர் வந்து சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் கௌசியின் மனம் சமாதானமாக வில்லை.


என்னதான் கணவனிடம் கோபத்தை வெளிப்படையாக காட்டா விட்டாலும் மனதிற்குள் அதை வைத்து குமைந்து கொண்டே இருந்தாள்.

திருமணமாகி இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை எப்படி நண்பனுடன் பேசாதே என்று சொல்ல முடியும் அதை சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது நான் பேசுவேன் இவரால் என்ன செய்ய முடியும் என்ற ஆங்காரம் தான் வந்தது.

கணவனைக் கடுப்பேத்த வேண்டுமென்றே புதிதாக வாட்ஸ் அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து அதில் அவளின் நட்பு வட்டம் நட்பின் நட்பு வட்டம் என அனைவரையும் சேர்த்தாள்.


கணவன் வரும்பொழுது வேண்டுமென்றே வாட்ஸ் அப் குரூப்பில் சேட் செய்ய ஆரம்பித்துவிடுவாள்.

ஹரி என்ன சொன்னாலும் அதற்கு நேர் மாறாக செய்ய வேண்டும் தனக்கு விருப்பமில்லை என்று சொல்லியும் கேட்காமல் திருமணத்தை நடத்தினான் அல்லவா அவனுக்கு அவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என்பதை காட்ட வேண்டும் அதுதான் அவளுடைய அப்போதைய மனநிலை.


ஹரிக்கு ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் கௌசியை நன்றாகவே புரிந்து கொண்டான் .




செ்யாதே என்று சொல்லும் விஷயத்தை இவள் செய்கிறாள் அப்படி என்றால் அவளை எந்த ஒரு விதத்திலும் கட்டாயப்படுத்தக் கூடாது அவளின் போக்கிலே விட்டு பிடிக்க வேண்டும் அப்பொழுதுதான் குடும்ப வாழ்க்கையில் எந்த ஒரு சறுக்கள்களும் இருக்காது என்பதை புரிந்து கொண்டான்.


கிட்டத்தட்ட முழுதாக ஒரு மாதம் கடந்த பிறகு அவனின் தொழில் முறை நட்பு வட்டங்கள் அனைவரும் சேர்ந்து அவனுக்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கௌசி இன்னைக்கு சாயங்காலம் ரெடியா இரு நாம ஒரு பார்ட்டிக்கு போகணும் ஏதாவது நகை வேணும்னா அம்மாவை கூட்டிட்டு போய் பிடிச்சதை வாங்கிக்கோ.


ம்ம்..


என்ன ம்ம்.. முதல் தடவையா உன்னை வெளியே கூட்டிட்டு போறேன்..ஒரு சந்தோஷமே இல்லாம வெறும் ம்ம் மட்டும் சொல்ற என்ன பார்ட்டி எங்க போறோம் எதுவும் கேட்க மாட்டியா..


நீங்களே சொல்லிடுங்க என்று சுரத்தையே இல்லாமல் கூறவும்.



ஏன் கௌசி சிரிக்கவே மாட்டேங்குற நீ சிரிச்சா எவ்வளவு அழகா இருப்ப தெரியுமா என்று சொல்லவும் மிக கஷ்டப்பட்டு புன்னகைக்க முயற்சித்தாள்.


சரி ரொம்ப கஷ்டப்படாத.. அப்புறம் நான் பயந்திடுவேன் என்று கண்களில் சிரிப்புடன் கூறவும் எப்படி ரியாக்ட் செய்வது என தெரியாமல் பேந்த பேந்த முழித்தாள்.


மென் புன்னகையுடன் சாயங்காலம் பாக்கலாம்..என கூறியபடி வேகமாக சென்றான்.


மாலையில் அவனை டென்ஷன் படுத்தா வண்ணம் அரக்கு நிறத்தில் பச்சை பார்டர் வைத்த சாஃப்ட் சில்க் அணிந்து அதற்கு ஏற்றார் போல நகைகள் போட்டு தயாராக காத்திருந்தாள்.

சொன்ன நேரத்தை விட தாமதம் ஆகிவிட்டதே என பதறியபடி வந்தவன் மனைவியின் அலங்காரத்தை கண்டு ரசனையுடன் கண்டிப்பா இன்னைக்கு பார்ட்டிக்கு போய் தான் ஆகணுமான்னு யோசிக்க வைச்சிடுவ போல.



ஆனா பார்ட்டி நமக்காக தராங்க அதனால போய் தான் ஆகணும் பத்து நிமிஷம் வந்துடுறேன் கீழே வெயிட் பண்ணு என்றவன் சரியாக பத்து நிமிடத்தில் சாதாரணமான ஒரு ஜீன்ஸ் டீ சர்ட்டில் அவளுக்கு ஏற்ற ஜோடியாக இறங்கி வந்தான்.


கணவனின் அழகிலும் கம்பீரத்திலும் ஒரு நொடி தன்னையும் மறந்து ரசித்தாள். பிறகு அதை வெளிக்காட்டாதவாறு போகலாமா என்று கேட்டவனை பார்த்து சரி என்பது போல் தலையசைத்து மௌனமாக அவன் பின்தொடர்ந்தாள்.


பலவிதமான மனிதர்கள் பலவிதமான மதுபானங்கள் என விழா களைகட்ட தொடங்கியது.
வந்தவர்கள் அனைவருமே ஹரியிடமும் கௌசல்யாவிடமும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு பார்ட்டியில் ஐக்கியமாகினர்..

சற்று நேரத்தில் பெண்கள் சிலர் கௌசல்யாவை அவர்களுடன் அழைக்க ஹரி புன்னகையுடன் சம்மதித்தான்.

அவள் நகர்ந்த அடுத்த நொடி ஹரி மதுக்கோப்பையை கையில் எடுத்தான் இதை கவனித்த கௌசல்யா முகத்தில் அதிர்ச்சியை காட்டவும் சம வயது கொண்ட பெண் நீ அவரோடவே ஒட்டிக்கிட்டு இருந்தா எப்படி என்ஜாய் பண்ணுவார் சொல்லு அதான் உன்னை எங்களோட அழைச்சிட்டு வந்தது.

என்னைக்காவது ஒரு நாள் தான என்ஜாய் பண்ணிட்டு போகட்டும் நீ பார்ட்டிக்கு வர்றது புதுசு போல அதான் ஷாக் ஆகுற அடிக்கடி ஹரியோட பார்ட்டிக்கு வா இதெல்லாம் பழகிடும்..
அப்புறம் நீயும் எங்களை மாதிரி பெக் போட ஆரம்பச்சிடுவ என்று கூறவும் கௌசியின் முகம் அருவருப்பாக அவளை நோக்கியது.

அந்த பெண் அதை கவனிக்காதவாறு பேசிக் கொண்டே செல்ல கௌசி அங்கிருந்து மெதுவாக நகர்ந்தாள்.



அப்பொழுது வேகமாக கையில் பொக்கேவுடன் வந்த ஒருவரை கண்டதும் சற்று அதிர்ச்சியை காண்பித்த கௌசி ஹரி எங்கே என கண்களால் தேடிய படி அவன் அருகில் வேகமாக சென்றாள்.


மனைவி தன்னை நோக்கி பயந்தது போல் வரவும் சூதாரித்தவனும் வேகமாக அவளருகில் நெருங்கி வந்து என்ன என்பது போல் கேட்கவும் நான் வேதாவோட பாஸ் வர்றாரு என முனுமுனுத்தபடி வாசலை காண்பித்தாள்.


அவளின் பார்வையை தொடர்ந்தவனின் கண்களில் நொடியில் சந்தோஷம் தொற்றிக் கொண்டது எதிரில் வந்தவனும் ஆர்ப்பாட்டமாக இவர்களை நோக்கி வந்தான் இவர் எப்படி இங்க என கேள்வியோடு கணவனை பார்த்தாள்.

புன்னகையுடன் கௌசியை பார்த்தவன் ஹீ இஸ் மை பிரண்ட்.



அப்படின்னா இன்டென்ஷிப் ஆஃபர் என இழுக்கவும் அவளை பார்த்து கண்சிமிட்டியவன் உற்சாகத்துடன் நண்பனை வரவேற்றான்.


கௌசியின் முகத்தில் இருந்த புன்னகை துடைத்து எடுக்கப்பட்டது போலானது.

எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் வந்தவனை நோக்க அவனும் வேகமாக வந்து நண்பனை கட்டிக்கொண்டு கௌஷியை பார்த்து கரம் கூப்பி ஹேப்பி மேரீட் லைப் என்று கூறியபடி பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிறிய பெட்டியை எடுத்து அவளுக்கு பரிசளித்தான்.

வாங்க தயங்கவும்..கௌசி என ஹரியின் குரல் அழுத்தமாக கூப்பிடவும் பெற்றுக்கொண்டாள்.


ஹரி எப்படியோ போராடி சாதிச்சிட்ட சிஸ்டரை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக உன் கதையில என்னை வில்லனா ஆக்கிட்ட என கூறி சிரித்தவன் கௌசியை பார்த்து சாரி சிஸ்டர் நீங்க ரொம்ப நல்ல ஒர்க்கர் உங்களோட திறமை தெரிஞ்சும் அதற்கேற்றது போல வேலை குடுக்க முடியல.. உங்களை ஊக்க படுத்த முடியாத சூழ்நிலையில் இருந்தேன்.. எல்லாத்துக்கும் காரணம் இவன் தான் நீங்க என் மேல கோபப்படக்கூடாது என கூறிய படி சென்றான்.


அதன் பிறகு எப்பொழுது பார்ட்டி முடிந்தது எப்படி ஹரியுடன் வீடு வந்து சேர்ந்தாள் என்று எதுவுமே கவுசியால் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை அவள் மனம் எங்கிலும் அவளுக்கு நடந்த அநியாயம் மட்டுமே மேலோங்கி இருந்தது தன்னுடைய கனவுகள் அனைத்தும் திட்ட மிட்டு அடித்து நொறுக்கப்பட்டது என்பதை புரிந்து கொண்டவளால் ஹரியுடன் இயல்பாக ஒன்ற முடியவில்லை.


வீட்டிற்குள் வந்ததுமே அறைக்குள் புகுந்தவள் அப்படி படுக்கையறை மீது தொப்பென்று அமர்ந்தாள்.

ஹரி நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் திரும்பி வரும் வரை கௌசி அப்படியே அமர்ந்திருக்க கௌசி என அவளருகே அமரவும் கண்களால் கலக்கத்துடன் அவனையே சில வினாடிகள் பார்த்து விட்டு மீண்டும் குனிந்து கொண்டாள்.


என்னாச்சு..

ஹான்.. ஒன்றுமில்லை என்பது போல தலையசைக்கவும்.

உன் தலை தான் ஒன்னும் இல்லன்னு ஆடுது ஆனா முகம் நிறைய இருக்குன்னு சொல்லுதே என்னடா..

அது..அங்க..என முடிக்காமல்..

யோசனையுடன் எங்க என்றவன் ..ஓஓ பார்ட்டியை சொல்லறையா.

ம்ம்..என தலையசைக்கவும்.

இன்னைக்கு நீ ரொம்ப அழகாயிருந்த..இந்த புடவை,நகை,பூ என ஒவ்வொன்றாக ரசனையுடன் ஆராய்ந்தபடியே அவளின் வாசம் பிடித்தவன் மெல்ல அத்துமீறியபடி அவளுள் கலக்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே அவளைப் பற்றிய அதிர்ச்சி அடுத்து கணவனின் தொடுகை கொடுத்த அதிர்ச்சி எல்லாமும் சேர்த்து அவளின் உணர்ச்சியை மறக்கடிக்கப்பட்டது.



அவன் ஆர்வமாக அவளின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் ரசனையுடன் ஆராதிக்க,

எப்படி என்னுடைய கனவை உடைத்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாமல் தன்னிடம் இப்படி நடந்து கொள்கிறான் என்ற ஆராய்ச்சியில் அவளுக்கு என்ன நடக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது என தெரியாத அளவிற்கு மரக்கட்டையாக அவனின் செயலுக்கு துணை போய்க் கொண்டிருந்தாள்.

மதுவின்போதை மங்கையின் போதை என இரண்டு போதையாலும் உணர்ச்சி மிகுதியில் இருந்த ஹரியால் அவளின் அப்போதைய நிலையே கண்டுகொள்ள முடியவில்லை.


காரியமே கண்ணாக அவனின் தேவை முடித்து விலகும் வரை எந்த ஒரு உணர்ச்சியையும் காட்டாமல் கண்களில் நீரை மட்டும் சிந்தபடி அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவள் அவன் விலகிய அடுத்த நொடி குளியலறைக்குள் வேகமாக நுழைந்தாள்.

அப்பொழுதுதான் அவளுக்குமே தன் நிலை புரிந்தது கணவன் என்று வரும்பொழுது அவனின் குற்றங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றதா அதுவும் தனக்கு இழைத்த கொடுமையை மறந்து நானும் இவ்வளவு நேரம் அவனுடன் ஒன்று இருந்தேனே அப்படி என்றால் தான் அந்த அளவிற்கு பலவீனமான பெண்ணா என பலவாறாக யோசித்தவளுக்கு அவளின் மீது அவளுக்கே அருவருப்பு வந்தது.

அடுத்த நொடி வயிறு காலி ஆகும் அளவிற்கு வாந்தி எடுக்க ஆரம்பித்தாள்.

ஏய் என்னாச்சு என்றபடி குளியலறை கதவை ஹரி தட்டவும் தண்ணீர் வழியும் முகத்தோடு வெளிவந்தவள் நிற்க முடியாமல் அங்கேயே சரிந்து உட்கார போனாள்.

ஏய் என பதறியபடி அவளை தாங்கியவன் கட்டிலில் படுக்க வைத்தவன் வேகமாக அறையை விட்டு வெளியேறினான்.

கண்களில் கண்ணீர் பெருக அதை கட்டுப்படுத்த வழிதெரியாமல் விழிமூட முயன்றாள்.

அதற்குள்ளாக கையில் சூடாக பாலை கொண்டு வந்தவன் உடம்பு சரி இல்லன்னா சொல்றதுக்கு என்ன ஏன் கௌசி என்னை மிருகம்னு நினைச்சுட்டியா என கேட்டபடியே அவளை எழுந்து அமர வைத்தவன் பாலை குழந்தைக்கு புகழ்வது போல் குடிக்க வைத்தான்‌.

பதில் கூறாமல் அமைதியாக குடித்தவள் அப்பொழுதுதான் கவனித்தாள் அவள் புடவை நெகிழ்ந்து கிடப்பதை..வேகமாக பெட்ஷீட் எடுத்து மூடப்போக நொடியில் அவனின் முகம் கறுத்தது.

இதை விட கேவலமா என்னை நீ அவமானப் படுத்த முடியாது கௌசி என்றவன் அவள் அணிவதற்கு ஏற்றார் போல ஒரு இரவு உடையை கொடுத்து விட்டு வெளியேறினான்.

மற்றொரு அறையில் ஜன்னல் வழியே தூர வெளிச்சத்தை பார்த்தபடியே முதல் முறையாக தன் திருமண வாழ்க்கையை நினைத்து கவலை கொண்டான் அவசரப்பட்டு கௌசியை திருமணம் செய்து விட்டோமோ.? திருமணம் ஆகி இத்தனை நாட்கள் ஆகியும் கூட அவளைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே.!


எங்கு தவறு நடந்து கொண்டிருக்கிறது தவறு என்னிடத்திலா இல்லை அவளிடத்திலா..

இரண்டு
ம் அல்லாமல் எங்களை இணைத்து வைத்து இந்த திருமண பந்தத்திலா என்று யோசித்துப் பார்த்தவனுக்கு விடை கிடைத்தபாடில்லை.
 
Last edited:
Top