கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

விட்டு விடு வெண்மேகமே 39

Akila vaikundam

Moderator
Staff member
39.


எவ்வளவு நேரம் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தான் என்று தெரியவில்லை கீழ் அறையில் இருந்து மிக மெல்லிய சத்தமாக மணி கடிகாரத்தில் இரண்டு என அடித்துக் காட்ட நினைவுக்கு வந்தவன் கௌசி என்ன செய்து கொண்டிருக்கிறாளோ என பயந்தபடி அறைக்குள் நுழைந்தான் அவ்ளோ பாதுகாப்பு இல்லாத குழந்தையை போல ஆடைகளை கூட சரி செய்து கொள்ளாமல் அப்படியே உறங்கி இருந்தாள்.


முகம் முழுவதும் கண்ணீர் கறைகள் கைகள் இரண்டையும் நெஞ்சோடு அழுத்தி பிடித்துக் கொண்டு கால்களை குறுக்கியபடி அவள் உறங்கும் தோரணையே பார்க்கும் பொழுது ஹரியின் மனதில் சொல்லமுடியாத வலி தோன்றியது.


பெட்ஷீட் எடுத்து அவளுக்கு நன்றாக போர்த்திவிட்டவன் சில விநாடிகள் அவளை பார்த்து விட்டு அவனும் அந்த போர்வைக்குள் புகுந்து கொண்டான்.


கௌசி கண்விழிக்கையில் அறையெங்கும் அடர் இருள் மட்டுமே..கண்களை கசக்கிய படியே எழுத்தவள் இன்னுமா விடியல என தனக்குள் கேட்டபடி நன்றாக எழுந்து அமர்ந்தாள்.


பிறகுதான் நன்றாக அறையை கவனித்தாள். ஜன்னல் திரைச்சீலைகள் இழுத்து விடப்பட்டிருந்தது.


அவளின் உறக்கம் களையக் கூடாது என்பதற்காக ஹரி செய்தது என புரியவும் முகம் ஒரு வினாடி கனிந்தது..அடுத்த வினாடியே இறுக ஆரம்பித்தது.


இதுக்கெல்லாம் குறைச்சல் இல்ல என தனக்குள் முணுமுணுத்தவள் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.


அறையை விட்டு வெளியே வந்தவளுக்கு சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் போல இருந்தது.


மேல இருந்து இறங்கியவள் என்ன வீடு இவ்ளோ நிசப்தமா இருக்கு என யோசித்தபடியே கிச்சனுக்குள் செல்ல சமையல் செய்யும் பெண்மணி சாப்பிடறீங்களாம்மா..எடுத்து வைக்கட்டுமா எனக்கேட்டார்.



இலக்கா எனக்கு ஒரு காஃபி மட்டும் கிடைக்குமா எனக்கேட்டபடி வீட்டை சுற்றிலும் நோட்டமிட்டாள்.



மணி பத்தைத் தாண்டி விட்டது கணவன் அலுவலகத்திற்கு சென்று இருப்பான் அவனது பெற்றோர்களின் சத்தத்தை காணவில்லையே அதை எப்படி வீட்டில் வேலை செய்யும் பெண்மணிடம் கேட்பது என சற்று தயங்கிய படியே அவர் கொடுத்த காஃபி கோப்பையை கையில் வாங்கிக்கொண்டு மிடறு அருந்தியவாறே வீட்டில் எல்லாரும் சாப்டாச்சா நான் ரொம்ப லேட் இல்லையா என சிரிக்க முயன்று தோற்றுப் போய் கேட்டாள்.



இன்னைக்கு காலையிலேயே உங்க சொந்தக்காரங்க யாருக்கோ ரொம்ப முடியலன்னு சாரோட அம்மாவும் அப்பாவும் கிளம்பிட்டாங்க அவங்கள கூட்டிட்டு சார் போயிருக்காங்க அதனால யாரும் சாப்பிடலம்மா நீங்க ஒருத்தர் தான் சாப்பிட்டீங்கன்னா எடுத்து வைச்சிட்டு நானும் கிளம்பிடுவேன் என்று சொல்லவும் என்ன மாதிரியான மனநிலையை உணர்ந்தால் என்பதை அவளாலேயே யூகிக்க முடியவில்லை.


கண நேரத்தில் ஏதோ ஒரு பாரம் மனதில் ஏறிக்கொண்டது.



நேற்று நடந்த நிகழ்வுக்குகளில் இருந்தே இன்னும் அவளால் வெளிவர முடியவில்லை அதற்குள் காலையில் கணவனின் புறக்கணிப்பு அவளை தன்னிலை இழக்க வைத்தது.



தன்னை எழுப்பி ஒரு வார்த்தை சொல்லிவிட்டு சென்றால்தான் என்னவாம் என நினைக்கும் பொழுதே கண்கலங்க ஆரம்பித்துவிட்டது இதை வேலை செய்யும் பெண்மணி முன்பு காண்பிக்க பிடிக்காமல் கப்பை சமையல் மேடையிலேயே வைத்துவிட்டு வேகமாக அவளின் அறைக்குள் வந்து விட்டாள்




தாயிடம் பேசலாம் என தோன்றவே அலைபேசியை கையில் எடுத்தாள்.

சரியான ஹரியின் அழைப்பு ஏற்கவா வேண்டாமா என யோசிக்க யோசிக்கவே மொபைல் அடித்து ஓய்ந்தது.


உணர்ச்சியை காட்டாமல் அலைபேசியை கீழே வைக்க போக அது மீண்டும் அடிக்க ஆரம்பித்தது.



மீண்டும் அவனே..இம்முறை ஆழ மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டவளின் விரல்கள் தானாகவே அழைப்பை ஏற்றது.


கௌசி..


***


கௌசி பேசறது கேக்குதா..


ம்ம்..


சாரி..


***


கௌசி…


**”


கேக்குதா..


**”


கோபமா.. உன்கிட்ட சொல்லாம ஊருக்கு கிளம்பினதுக்கு..


***


அதான் சாரி கேக்கறேன்ல அக்செப்ட் பண்ணிக்கோடா ப்ளீஸ்..இங்க அப்பாவோட சித்தப்பா இறந்துட்டாங்க.

உனக்கே தெரியும் ஜானுவோட அம்மா அப்பா இங்கில்ல..சின்ன தாத்தாக்கு குழந்தைக கிடையாது.அப்பாதான் எல்லாமே பாத்துக்கனும் பேரன் முறைல நானும் அதான் கிளம்பிட்டோம்..நீ கேட்கலாம் அப்போ நான் உன் குடும்பம் இல்லையானு நைட் உனக்கு முடியலல்ல அதான் வேணாம்னு சொன்னேன்.அப்பாவும் தாத்தா மேல இருந்த பிரியத்துல உடனே கிளம்பிட்டாங்க..நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எழுப்பி சொல்ல மனசு வரல..புரிஞ்சிக்கோடா என கிட்டத்தட்ட கெஞ்சியது அவனது குரல்.


அவளின் கோபமே வேறு அதை வெளிப்படையாக சொல்லக்கூடாத நிலை.



கௌசி ஏதாவது பேசு என அவனின் குரல் மீண்டும் தவிப்பாக ஓலிப்பதை உணர்ந்தவள்.. கோபம் எல்லாம் இல்லை என மெல்ல முணுமுணுத்தாள்.


அவனின் நிம்மதி பெருமூச்சு இவளை அடைந்தது.பிறகு கௌசி இப்போ நீ ஒகே தான..


ம்ம்..


சரி உன்னால முடியும்னா இன்னும் கொஞ்ச நேரத்துல உன் அம்மா வீட்ல இருந்து எல்லாரும் இங்க வருவாங்க நீயும் கூட வாயேன்.. கட்டாயம் இல்ல ஆனா நீ வந்தா நல்லாயிருக்கும்..எங்க கிராமத்துல யாரும் உன்னை பாத்ததில்ல நீ வந்தேனா எல்லாரும் பார்த்த மாதிரியும் ஆச்சு அதே சமயம் காரியத்துல கலந்த மாதிரியும் ஆச்சு உன்னை பிக்கப் பண்ணிக்க சொல்லவா என்று தவிப்பாக கேட்டான்.


இல்ல நா வரல.. ரொம்ப டயர்டா இருக்கு என பேச்சை கத்தரித்தாள்.


இதை ஏன் முதல்லேயே சொல்லல..சமையல் செய்யறவங்க வேற போயிருப்பாங்களே..சாயங்காலம் தான் மேல் வேலை செய்யறவங்க வருவாங்க அது வரை நீ எப்படி தனியா இருப்ப உடம்பு வேற சரியில்லை என அவனுக்குள்ளாகவே கேள்வி கேட்டுக்கொண்டவன் சரி பிரச்சினை இல்ல‌ நான் ஜானுவை அங்க வரச் சொல்லறேன் உங்க அம்மாப்பா காரியத்துக்கு வந்து தான் ஆகணும் வரலன்னா சம்பந்தி வீட்ல வரலையானு கேள்வி வரும் ஜானு வரலன்னா கூட குழந்தை இருக்கு அதனால வரலன்னு சொல்லிக்கலாம்..என சொல்லிக் கொண்டிருக்கும்போதே



ஐயோ உங்களுக்கு புரியுதா இல்லையா நான் தனியா இருக்கனும் லீவ் மீ அலோன் ப்ளீஸ்.


யாரும் எனக்கு துணைக்கு வேண்டாம்.

நான் ஓன்னும் குழந்தை இல்ல..ஐ ஆம் நாட் அ சைல்ட் ஓகே..டோன்ட் டிரீட் லுக் அ சைல்ட் ப்ளீஸ்.


ஓகே ஓகே..நோ டென்ஷன் டேக் அ ரெஸ்ட் என கூறியபடி வைத்தவன் அவளின் தீடிர் கத்தலில் தவித்துப்போனான்.


அங்கிருந்து நகர முடியா சூழல்.. அவளருகில் இருந்து ஆறுதல் கூற முடியா நிலை.. எப்பொழுது காரியம் முடியும் என நேரத்தை நெட்டித்தள்ள ஆரம்பித்தான்.



ஹரியிடம் பேசி விட்டு மொபைல் போனை பெட்டில் தூக்கி வீசியவள் கோபமாக சமையலறைக்குள் சென்று சாப்பிட என்ன இருக்கிறது என ஆராய்ந்தாள்.



ம்கூம் இட்லி இதை தவிர இந்த அம்மாவுக்கு வேற ஒன்னும் செய்யத் தெரியாது ஆனா ஊரிலேயே இவங்க தான் பெரிய குக்குன்னு நினைப்பு.

இன்னைக்கு அம்மா வீட்டுக்கும் போக முடியாது.. பேசவும் முடியாது..ச்சே என்ன லைஃப்..


ஐடி கம்பெனில வேலை, கைநிறையா சம்பளம்,சொந்த கார், ஃப்ளாட் இப்படி எத்தனை கனவு எல்லாத்தையும் கல்யாணம் என்கிற பேருல குழிதோண்டி புதைச்சிட்டு இன்னைக்கு அக்கறை இருக்கற மாதிரி வேஷம் போடறாங்க..என கண்கள் குளம் கட்ட வெறும் இட்லியை அப்படியே கடித்து முழுங்க ஆரம்பித்தாள்.



வெறும் இட்லியை அழுதபடியே உண்டாலும் பசி அடங்க ஆரம்பித்ததுமே மனதில் சிறு நிம்மதியும் அமைதியும் உண்டாயிற்று.




சாயங்காலம் வரை என்ன செய்யலாம் என யோசித்த படியே டிவியை ஓட விட்டு சற்று நேரம் கவனத்தை அதில் திருப்ப முயற்சித்தாள்.



சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டின் காலின் பெல் சத்தம் கேட்க யாரா இருக்கும் என யோசிக்க படியே கதவைத் திறந்தாள் அவள் கல்லூரி தோழிகள் வேதாவும் ,நிவேதாவும் சர்ப்ரைஸ் என கத்தியபடி ஓடி வந்து அவளை கட்டி அணைத்துக் கொண்டனர்.




அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் நிஜமாவே சர்ப்ரைஸ் தான் என்ன திடீர்னு வீட்டுக்கு வந்திருக்கீங்க ஆஃபிஸ் போகலையா என தோழிகளைக் கண்ட ஆச்சரியத்தில் கண்களை விரித்து கேட்டாள்.



யார் சொன்னது நாங்க ஆபீஸ் வேலையா தான் வந்திருக்கோம் என கூறிய வேதா நேராக சமையலறைக்கு சென்று என்ன இருக்கிறது என பார்த்தாள்.


பின்னாடியே வந்த கௌசி தட்டில் இருவருக்கும் இட்லியை எடுத்து வைத்தபடி சரோஜா அம்மா சமைச்சது இட்லி வித் பொதினா சட்னி டெஸ்ட் பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.



ம்ம் என சுவைத்து சாப்பிட்டவள் கௌசி நிஜமா சொல்றேன் உன்னை மாதிரி ஒரு ஹஸ்பண்ட் சரோஜாம்மா மாதிரி ஒரு குக் கிடைச்சாங்கனு வை இந்த நிமிஷமே எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு கண்ணை‌ முடிகிட்டு கல்யாணம் பண்ணிக்குவேன் என்று சொல்லவும்..



ஆஹான் அப்படியா…சரி நிவேதா பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்க சொல்லிடலாமா..


சொல்லலாமே.. மாப்பிள்ளை மிஸ்டர் ஹரிகிருஷ்ணன் மாதிரி பாக்க சொல்லிடுங்க என அவளைப்போலவே ராகம் போட்டாள்.



சற்றென்று முகம் கறுத்தவள் அவளது தட்டில் மேலும் ஓரு இட்லியை வைத்து விட்டு கார சட்னி போட்டுக்கோ என வைத்தாள்.


நிவேதாவை முறைத்துப் பார்த்த வேதா கௌசியின் அருகில் வந்து சாரிடி அவ‌ ஓரு லூசுன்னு தெரியாதா படிக்கிற காலத்துலயே இப்படித்தான் ஏதாவது உளறி வைப்பா நீ சீரியஸா எடுத்துக்காத என்றபடி நிவேதாவிடம் என்ன பேசறோம்னு யோசிச்சி பேச மாட்டியா என கடிந்து கொள்ளவும் நீவேதாவின் முகம் சோம்பிவிட்டது.



கவனித்த கௌசி.. ம்ப்ச் விடு வேதா அவ தப்பா என்ன சொன்னா.. ஃப்ரண்ட் மாதிரி லைஃப் வேணும்னு சொல்லறா அப்படி தான நீ சாப்பிடு..ஆனா நான் உன்னை மாதிரி சிங்கிள் லைஃப் இல்லையேன்னு கவலை படறேன் என மனதிற்குள் கூறிக்கொண்டாள்.



தோழியின் அனுசரணையான பேச்சில் உள்ளம் நெகிழ்ந்தவள் வேதாவைப் பார்த்து வெவ்வவ்வவ்வ என அழகு காட்டியபடி தட்டில் இருந்த மீதி இட்லிகளை காலி செய்ய ஆரம்பித்தாள்.


உன்னைத் திருத்தவே முடியாது என குறைபட்டவளிடம்.



உங்க சண்டையை‌ அப்புறமா வச்சுக்கோங்க திடீர்னு என்னை பாக்கணும்னு எப்படி உங்களுக்கு தோணுச்சு டூடே ஐயாம் வெரி லோன்லி தெரியுமா.. நீங்க வந்து அப்படி ஒரு ஃபீல் இல்லாத மாதிரி ஆக்கிட்டீங்க.. தேங்க்யூ சோ மச்.. மதியம் என்ன சமைக்கட்டும்..இல்ல சரோஜாம்மா சமைச்சி வச்சிருக்கறதே போதுமா என அவர்களை மாலை வரை தன்னுடனே வைத்துக்கொள்ளும் திட்டத்தை மறைமுகமாக வெளிக்காட்டினாள்.


அடியே கௌசி நீ பிளான் போட்டாலும் போடலனாலும் இன்னைக்கு அஞ்சு மணி வரைக்கும் எங்களோட டேரா இங்கதான் அதனால என்ன சமைக்கட்டும் ஏது சமைக்கட்டும்னு இப்பவே நாங்க எவ்ளோ நேரம் இருப்போங்கற ஆராய்ச்சியை விட்டுட்டு ரிலாக்ஸா இரு என்றபடி விட்டை பார்வையால் சுற்றிவந்தாள்.



ரசனைகாரர் உன் ஹப்பி என்றவள் முதல் முறையா வீட்டுக்கு வந்திருக்கோம் வீட்டை சுத்தி காண்பிக்கிற பழக்கம் எல்லாம் உனக்கு இல்லையா.



அய்யோ நான் ஒரு முட்டாள் நீங்க வந்த சந்தோஷத்துல என்ன பண்றதுன்னு தெரியல காஃபி டீ ஏதாவது..



அதான் டிஃபன்னே சாப்டாச்சு அப்புறம் என்ன காபி டீ..


சரி திடீர்னு உங்களுக்கு எப்படி என்னை பாக்கணும்னு தோணுச்சு என மீண்டும் ஆச்சரியமாக கேட்டாள்..பிறகு எதிர்பார்ப்போடு ஏதாவது விசேஷமா உனக்கு இல்லை நிவேதாக்கு கல்யாணம் அந்த மாதிரி ..


உன் ஆர்வத்தை அடக்கு.. இப்போ தான் நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கோம் இன்னும் எங்களுக்கு நிறைய கனவு இருக்கு என்றவள்.நீ ஒரு விஷயத்தை மறந்துட்ட நானும் நிவேதாவும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்கிறோம் ஞாபகம் இருக்குல்ல.



ஆமா ஞாபகம் இருக்கு.




அந்த ஆபீஸோட முதலாளி யாருங்க மேடம்..



அது.. என இழுத்தவளுக்கு முந்தைய நாள் பார்ட்டியில் ஆர்பாட்டமாக உள் நுழைந்தவனின் நியாபகம் வரவும் பேச தோண்றாமல் தோழியையே பார்த்தாள்.



அவர் உன் ஹஸ்பண்ட்டோட க்ளோஸ் ஃபிரண்ட்… மிஸ்டர் ஹரிதான் என் பாஸூக்கு போன் பண்ணி என் பொண்டாட்டி வீட்ல தனியா இருக்கா அதனால அவ ரெண்டு ஃபிரண்ட்களுக்கும் உடனே லீவு குடுத்து அனுப்பி வைன்னு உத்தரவு போட்டிருக்காரு.



இவரும் உடனே சம்பளத்தோட லீவும் கொடுத்து ரெண்டு பேரும் உடனே உங்க தோழியை பார்க்க கிளம்புங்க இன்னைக்கு உங்களுக்கு அங்க தான் வேலைன்னு அனுப்பி வச்சிட்டாரு.



சம்பளமும் குடுத்து ஃப்ரெண்டு கூட இருன்னு சொன்னா யாருக்கு தான் கசக்கும் அதுதான் உடனே ஓடி வந்துட்டோம் என்று இருவரும் ஹைஃபை கொடுத்துக் கொண்டு கூறவும்.


கணவனின் அக்கறையில் சிறு நெகிழ்வு மனதிற்குள் தோண்றி மறைந்தது.



அதன் பிறகு மூவரும் கதை பேச சரியாக ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆன்லைன் உணவுகள் வகைவகையாக அவர்களை தேடி வந்து கொண்டே இருந்தது எல்லாம் ஹரியின் ஏற்பாடு.



ஒரு கட்டத்திற்கு மேல் வேதாவும் நிவேதாவும் கௌசியிடம் ஏய் ப்ளீஸ் உன் ஹப்பிக்கு கொஞ்சம் போன் பண்ணி சொல்லு இனிமே வயித்துல இடம் இல்ல இப்படி சாப்பிட்டா நாளைக்கு நாங்க ஆபீஸ்க்கு உருண்டு தான் போகனும்.. இனி எங்களால முடியாது என புலம்ப ஆரம்பித்தனர்.



சரியாக ஐந்து மணி ஆகவும் ஹரி வந்து விட்டான்.. வேதாவிடமும் நிவேதாவிடமும் நலம் விசாரித்துவிட்டு நன்றியும் தெரிவித்து அவன் வந்த காரிலேயே அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தான்.



தோழிகளை பார்த்த மனநிலையில் இருந்ததால் முந்தைய நிகழ்வுகள் அனைத்தும் கௌசியிடம் இருந்து காணாமல் போயிற்று.


அவனை ஆச்சரியமாக பார்த்தவள் காரியம் அதுக்குள்ள முடிஞ்சிருச்சா..


தாத்தாவோட பாடி எடுத்ததுமே நான் நம்ம கிராமத்து வீட்டிலேயே குளிச்சிட்டு கால் டாக்ஸி புடிச்சி உடனே கிளம்பி வந்துட்டேன்..

அப்பா அம்மா வர நாளாகும் உன் அம்மா அப்பாவும் மூணாவது நாள் காரியம் முடித்து தான் வருவாங்க ஜானு மாப்பிள்ளை எல்லாரும் அங்க தான் இருக்காங்க நீ இங்க தனியா இருக்க இல்லையா அதான் மனசே கேட்கல உடனே ஓடி வந்துட்டேன்..அங்கேயும் நம்மளோட வீடு ரொம்ப பெருசு இங்க விட அங்க வசதிகள் அதிகமா இருக்கும்..


உன் அம்மா அப்பா வரதுக்கு வசதியா நம்மளோட காரை அங்கேயே விட்டுட்டு வந்திருக்கேன் அப்பா டிரைவர் போட்டு பத்திரமா அவங்களை கொண்டு வந்து சேத்திடுவாங்க ..நீ அவங்களை நினைச்சி கவலை படாத..என பெற்றோர்கள் பற்றிய கவலையையும் போக்கினான் ‌



பொறுமையாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவள்.. தேங்க்ஸ்.. தேங்க்ஸ் ஃபார் எவ்ரி திங்.. என நன்றியை வார்த்தையில் கூறியபடி புன்னகையுடன் சமையலறைக்குள் புகுந்தாள்.



ஹரி இறக்கைகள் இல்லாமல் வானத்தில் பறக்க ஆரம்பித்ததான்.


திருமணமானதில் இருந்து முதல் முறையாக அவளது வாயிலிருந்து அன்பான வார்த்தைகளை கேட்டிருக்கிறான்.




இது போதாதா ஒரு ஆண் மகனுக்கு உலகையே வென்று விட்ட சந்தோஷம்..



டேய் ஹரி கலக்கிட்ட டா என்று அவனுக்கு அவனாகவே பாராட்டிக்கொண்டு ஆடை மாற்ற படுக்கையறைக்குள் நுழைந்தான்.
 
Last edited:
Top